அர்ச் பெனடிக்ட் மூர் (1526-1589)
அர்ச். பெனடிக்ட் நீக்ரோ அடிமைப் பெற்றோர்க்குப் பிறந்தவர். அவர் பிறந்த சில காலத்திற்குள் அவரது பெற்றோர் ஆப்பிரிக்காவிலிருந்து சிசிலி தேசத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கிறிஸ்தவ மதத்திற்கு மனந்திரும்பினர். அவர்களது முன்மாதிரிகையான ஜீவியத்தாலும் கடமைகளை பிரமாணிக்கமாக செய்வதாலும் எஜமானர்களிடம் நன் மதிப்பைப் பெற்றனர். இதனால் பெனடிக்ட் தமது 18-வது வயதில் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கே வேலை செய்து வந்த அவர் தமது எளிய வருவாயையும் ஏழை, எளியவர் களுக்கு வழங்கினார். அவருடைய பிறப்பு பற்றி பலராலும் கேலி செய்யப்பட்டாலும் அதை மிக பொறுமையோடு ஏற்றுக்கொண்டதால் “புனித கறுப்பர்'' என்று அழைக்கப்பட்டார்.
தமது 21-வது வயதில் எஞ்சிய உடமைகளை யெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு சான் பிராடிலோ என்னுமிடத்தில் உள்ள மடத்தில் சேர்ந்தார். மடத்தில் தமக்கு ஒதுக்கப்பட்ட சமையல் வேலையை மிகவும் மகிழ்ச்சியோடு செய்து வந்தார். ஆனால் அம் மடத்தின் தலைவர் இறந்ததும் பெனடிக்ட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நவ சந்நியாசிகளை நடத்துபவராக (Novice Master) ஏற்படுத்தப்பட்டார். படிப்பறிவில்லாத இவர், தேவ அருளால் வேதாகமத்தையும், வேத சாஸ் திரத்தையும் விளக்கிக்கூறும் ஆற்றல் பெற்றிருந்தார். அவரது புனிதத் தன்மை சிசிலி நாடெங்கும் பல்வேறு மக்களை அவரண்டையில் ஈர்த்தது. தாழ்ச்சியையே விரும்பும் பெனடிக்ட் தமது இறுதிக் காலத்தில் சமையல் வேலையை செய்யவே பெரிதும் விரும்பினார். தமது 63-வது வயதில் முன்னறிவித்தபடியே பாக்கியமான ம ர ண மடைந்தார். அவரது தூய. உடல் மடத்தின் ஆலய சாக்ரீஸ்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அழியாத சரீரம்!
அவர் இறந்த உடனே அவரது புனிதம் பற்றிய செய்தி உலகின் பல பாகங்களிலும் பரவி யது. அவருக்கு அர்ச் பட்டம் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் இறந்த மூன்று அண்டுகளுக்குப் பின் 1592, மே. 7-ம் நாளில் அவருடைய கல்லறைத் திறக்கப்பட் டது. அப்போது சரீரம் எந்தவிதமான அழிவும் இன்றி புதுமையாக பாதுகாக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சரீரம் முழுமையாக இருந்தது. சரீரம் அழகிய பெட்டியில் வைத்து திரும்பவும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
1611ல் ஸ்பெயின் தேசத்து மன்னனான 3-ம் பிலிப் என்பவர் அந்த ஆலயத்தை பெரிதாகக் கட்டினார். அங்கு அவரது அழியாத சரீரம் அழகிய வேலைப்பாடமைந்த பெட்டியில் மிகுந்த பக்தி வணக்கத்துடன் வைக்கப்பட்டது . இன்று வரை விசுவாசிகளின் வணக்கத்திற்காக சரீரம் அங்கு உள்ளது.
1743-ல் 14-ம் பெனடிக்ட் பாப்பரசரால் அவருக்கு முத்தி பேறு பட்டம் வழங்கப்பட்டது,
கி.பி. 1807ல் 7-ம் பத்திநாதர் பாப்புவால் அர்ச். பட்டம் வழங்கப்பட்டார். அர்ச். பெனடிக்ட்
வட அமெரிக்காவில் நீக்ரோ வேத போதகப் பணித்தளத்தின் பாது காவலாக
அறிவிக்கப் பட்டுள்ளார்.
கி.பி. 1807ல் 7-ம் பத்திநாதர் பாப்புவால் அர்ச். பட்டம் வழங்கப்பட்டார். அர்ச். பெனடிக்ட்
வட அமெரிக்காவில் நீக்ரோ வேத போதகப் பணித்தளத்தின் பாது காவலாக
அறிவிக்கப் பட்டுள்ளார்.
அர்ச் பெனடிக்ட் மூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக