Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

August 2 - St. Alphonsu Ligouri

 

ஆகஸ்டு 2ம்தேதி

திவ்ய இரட்சகர்சபையின்ஸ்தாபகரும்‌,ஸ்துதியரும்‌, மேற்றிராணியாரும்‌, வேதபாரகருமான அர்ச்‌. மரிய அல்ஃபோன்ஸ்லிகோரியார்திருநாள்

 

 அர்ச்‌. அல்ஃபோன்ஸ்‌, இத்தாலியிலுள்ள நேப்பிள்ஸில்பிறந்தார்‌. நேப்பிள்ஸ்நாட்டின்கப்பற்படையின்தலைவருடைய எட்டுப்பிள்ளைகளில்மூத்த மகனாக, 1696ம்வருடம், இவர்பிறந்தார்‌. இவர்குழந்தையாக இருந்தபோது, சேசுசபையைச் சேர்ந்த அர்ச்‌. பிரான்சிஸ்ஜிரோலாமா, இவரை ஆசிர்வதித்தார்‌; இவர்‌ 90 வயது வரை உயிர்வாழ்ந்து, ஒரு மேற்றிராணியார்ஆவார்என்றும்‌, திருச்சபைக்கு அதிக நன்மை செய்வார்என்றும்தீர்க்கதரிசனமாகக்கூறினார்‌. இவர்மிகவும்பலவீனராயிருந்ததால்‌, இராணுவத்தில்இவரால்சேரக்கூடாமல்போனது. ஆகவே, இவரை ஒரு சட்டவல்லுனராக்க வேண்டும்என்று, இவருடைய தந்தை, இவரை சட்டக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்‌. இவர்தனது அபூர்வமான அறிவுத்திறனால்‌, நேப்பிள்ஸ்பல்கலைக் கழகத்தில்‌, 16 வயதிலேயே சமூக  சட்டக்கல்வியிலும்‌, வேதஇயல்கல்வியிலும்நிபுணத்துவம்பெற்று (டாக்டா்‌ ) முனைவர்பட்டம்பெற்றார்‌. 27வது வயதில்‌, நேப்பிள்ஸ்நாட்டிலேயே, இவர்மிகச்சிறந்த வழக்கறிஞரானார்‌. தினமும்‌, தவறாமல்திவ்ய பலிபூசை கண்ட பிறகே, இவர்தனது அன்றாட அலுவலை துவக்குவார்‌; ஒவ்வொரு முறை, இவர்நீதிமன்றத்திற்குச்செல்வதற்கு முன்பாக, தவறாமல்‌, முதலில்‌, திவ்ய பலிபூசையை பக்திபற்றுதலுடன்காண்பார்‌; அதன்பிறகே நீதிமன்றத்திற்குச்செல்வார்‌. ஒருநாள்‌, இவர்‌, தன்நண்பருக்கு பின்வருமாறு ஒரு கடிதம்எழுதினார்‌:  என்நண்பரே! நம்முடைய வக்கீல்தொழில்‌, அதிக கஷ்டங்களாலும்‌, ஆபத்துக்களாலும்நிறைந்தி ருக்கிறது; நாம்நிர்ப்பாக்கியமான ஜீவியம்‌, ஜீவிக்கிறோம்‌; நித்தியத்திற்குமாக நிர்ப்பாக்கியமாக இறந்துபோகக்கூடிய ஆபத்தும்நமக்கு இருக்கிறது!”  ஒருசமயம்‌, இவர்வெற்றியடைந்த ஒரு நீதிமன்ற வழக்கில்‌ , இவருக்குத்தெரியாமல்‌, இவர்ஒரு பொய்சொல்ல நேர்ந்ததைக்குறித்து,  பெரிதும்வருந்தினார்‌; இதன்பின்‌, நேப்பிள்ஸில்மிகப்பெரிய சட்ட வல்லுனராக இருந்த அர்ச்‌. அல்ஃபோன்ஸ்‌ , தன்‌ 27வது வயதில்‌, தன்னை வஞ்சித்த இந்த வக்கீல்தொழிலையும்‌, உலகத்தையும்துறந்து விட்டார்‌; 1723ம்வருடம்‌, இவர்அர்ச்‌. பிலிப்நேரியாரின்ஜெபக்கூட துறவற சபையில்சேர்ந்தார்‌; 1726ம்வருடம்‌, டிசம்பர்‌ 21ம்தேதியன்று தனது 30வது வயதில்‌, குருப்பட்டம்பெற்றார்‌. வீடு இல்லாத ஏழைகளிடையே, இளைஞர்களிடையே, வியாதியஸ்தர்களிடையே, அவர்களுடைய ஆத்தும சரீர நன்மைகளுக்காக, உழைத்தார்‌; இவர்‌, நிகழ்த்திய எளிய தெளிவான பிரசங்கங்கள் மூலமாகவும்‌,  கனிவுமிக்க இரக்கத்துடனும்‌, ஞானத்துடனும்பாவசங்கீர்த்தனம்கேட்பதன்மூலமாகவும்‌, நேப்பிள்ஸ்நாட்டின்மக்களிடையே மிகவும்பிரபலமடைந்தார்‌. பாவத்தின்மட்டிலான மிக அற்பக்காரியங்கள்பேரிலும்‌, இவர்குற்ற உணர்வுடன்வருத்தமுற்றிருந்தார்‌; அர்ச். அல்ஃபோன்ஸ்‌, மன உறுத்தல்களால்அவதியுற்றார்‌. ஆனால்‌, இவர்எழுதிய நூல்களில்‌, “மன உறுத்தல்கள், மனந்திரும்புகிறவர்களின்துவக்க காலத்தில்மிக பயனுள்ளவையாக இருக்கின்றன! என்றும், அவை ஆத்துமத்தைத்தூய்மைப்படுத்துகின்றன! என்றும்‌, அதே சமயம்‌, அவை, ஆத்துமத்தை மிகவும்கவனமுள்ளதாகவும்‌, விழிப்புள்ளகாகவும்‌, மாற்றிவிடுகின்றன! என்றும்எழுதியுள்ளார்‌. 1732ம்வருடம்‌, மகா பரிசுத்த திவ்ய இரட்சகர்சபை என்கிற ஒரு துறவற சபையை, அர்ச்‌.அல்ஃபோன்ஸ்மரிய லிகோரியார்ஸ்தாபித்தார்‌. அட்ட தரித்திரத்திலும்‌, கடின தபசிலும்இத்துறவியர்ஜீவிக்கலாயினர்‌; 1752ம்வருடம்முதல்‌, ஞான நூல்களை எழுதுவதில்தன்னையே அர்ப்பணித்தார்‌; எவ்வளவுக்கு அதிக தேவசிநேகத்துடனும்‌, ஜெப தப ஒறுத்தல்களுடனும்‌, இந்த உன்னதமான ஞான நூல்களை எழுதினார்என்றால்‌, அதை வாசிக்கிறவர்களின்இருதயத்தில்புதுமையாக தேவசிநேக அக்கினி தூண்டப்படுவதை, எல்லா காலங்களிலும்விசுவாசிகள்கண்டுணர்கின்றனர்‌! அதனால்ஏராளமான ஞான நன்மைகளை அடைகின்றனர்‌! மேற்கூரை இல்லாத மடங்களில்அர்ச்‌. அல்ஃபோன்ஸ்இப்புத்தகங்களை எழுதும்போது, பனிப்பொழிவு, இவர்மேல்நேரடியாக விழுந்ததால்‌, தாங்கமுடியாக குளிரினால்‌, இவருடைய விரல்கள்மரத்துப்போகும்‌! அச்சமயத்தில்‌, உஷ்ணப்படுத்து வதற்காக அறையில்வைத்திருந்த அடுப்பில்கையை அடிக்கடி வைத்தபடி, எழுதுவதில்தொடர்ந்து ஈடுபட்டார்‌; அதனாலேயே தான்‌, இவருடைய எல்லா புத்தகங்களும்‌, இக்காலத்தில் நாம்வாசிக்கும்போதுகூட, நம்இருதயத்தில்தேவசிநேக நெருப்பு மூட்டப்படுகிறதை, உணர்கிறோம்‌!

அர்ச்‌. அல்ஃபோன்ஸ்மரிய லிகோரியார்‌, தன்ஜீவிய காலத்தில்‌ 111 புத்தகங்களும், பலபிரபந்த நூல்களும்எழுதியுள்ளார்‌; இவை 60 மொழிகளில்‌, 4000 பதிப்புகளாக பிரசுரமாயிருக்கின்றன, என்பது, குறிப்பிடத்தக்கது! மகா பரிசுத்த தேவநற்கருணையைப்பற்றியும்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்மகிமைகள்பற்றியும்‌, ஆண்டவரின்பரிசுத்தப்பாடுகள்பற்றியும்‌, ஆண்டவருடைய ஜீவிய சரித்திரத்தைப்பற்றியும்‌, நன்மரண ஆயத்தம்பற்றியும்‌, இன்னும்அதிக புத்தகங்களை எழுதியுள்ளார்‌; இக்காலத்தில்இணையதளத்தில்‌, இலவசமாகக்கிடைக்கிற பாரம்பரிய கத்தோலிக்க புத்தகங்களில்‌, இவரின்எல்லா புத்தகங்களும்ஏறக்குறைய நமக்குக் கிடைக்கும்படியாக இருப்பதே, இக்காலத்திலும்எக்காலத்திலும்நமக்கு அருளப்படுகிற தேவபரா மரிப்பின்அரிய அடையாளமாக இருக்கிறது! இவர்‌ 1762ம் வருடம்‌, அர்ச்‌.  ஆகத்தா மேற்றிராசனத்தின் மேற்றிராணியாராக அபிஷேகம்செய்யப்பட்டார்‌. இம்மேற்றிராசனத்தில்‌ 13 வருட காலம்‌, ஆன்ம ஈடேற்ற அலுவலில்‌, அயராமல்உழைத்தார்‌; குருமடங்களையும்‌, துறவற மடங்களையும்சீரமைத்தார்‌; கேட்பவர்இருதயங்களில்தேவ சிநேகத்தை மூட்டிய இவரின்ஞானதியானப்பிரசங்கங்களால்‌, அநேக வெதுவெதுப்பு கிறீஸ்துவர்கள்‌, உத்தம கிறீஸ்துவர்களாக மாறினர்‌; விசுவாசத்தை மறுதலித்திருந்தவர்கள்‌, மனந்திரும்பி, மறுபடியும்சத்திய திருச்சபையில்சேர்ந்தனர்‌; அர்ச்‌.அல்ஃபோன்ஸ்‌, தனது 91வது வயதில்‌, 1787ம்வருடம்‌, ஆகஸ்டு 1ம்தேதியன்று, மத்தியானம்‌ 12 மணிக்கு திரிகால ஜெபத்திற்காக தேவாலய மணி அடிக்கத்துவக்கிய போது, பாக்கியமாய்மரித்தார்‌. 1839ம்வருடம்‌, இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்அளிக்கப்பட்டது; 1871ம்வருடம்இவருக்கு வேதபாரகர்பட்டம்அளிக்கப்பட்டது. 1950ம்வருடம்‌, பாவசங்கீர்த்தனம்கேட்கிற ஆன்ம குருக்களுக்கும்‌, நல்லொழுக்க வேத இயல்அறிஞர்களுக்கும்‌ , பாதுகாவலர்என்று அறிவிக்கப்பட்டார்‌.

 கனியை விரும்புகிற எவனும்கட்டாயமாக அதனுடைய மரத்தினிடம்செல்ல வேண்டும்‌; நமதாண்டவரான திவ்ய சேசு கிறீஸ்து  நாதரை ஆசிக்கிற எவனும்கட்டாயமாக அவருடைய மகா பரிசுத்த  மாதாவிடம்செல்ல வேண்டும்‌! மகா பரிசுத்த தேவ மாதாவை யாரெல்லாம்கண்டடைகின்றனரோ, அவர்களெல்லாம்‌, மிகவும்நிச்சயமாக, நமதாண்டவரான திவ்ய சேசுநாதர் சுவாமியைக்கண்டடைந்து கொள்வார்கள்!”  

அர்ச்‌.அல்ஃபோன்ஸ்மரிய லிகோரியார்‌. 

அர்ச்‌.அல்ஃபோன்ஸ்மரிய லிகோரியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!




Books by St. ALphonsus 

Visits to Jesus and Mary : excerpted from visits to - Link the most blessed Sacrament and the Blessed Virgin Mary  


The Glorious of Mary - Link


The practice of the love of Jesus Christ - Link




If you want any book from Archeive.org about St. Alphonsus Liguori 
I can download it for you. 
Contact me on Email (lourdhurobin@gmail.com) or Telegram or https://t.me/Lourdhurobin

August is the Month of Immaculate Heart of Mary - Aug. 2

 

ஆகஸ்டு 02ம் நாள்

அப்போஸ்தலரான அர்ச்.சின்னப்பர் கூறுவதற்கேற்ப  நமதாண்டவர், தமது ஞான சரீரமாகிய திருச்சபைக்கு தலையாகவும், நாம் அதன் உறுப்புகளாகவும் இருக்கிறோம். அப்படியென்றால், நாம் கட்டாயமாக, ஆண்டவருடைய இஸ்பிரீத்துவினால், உயிரூட்டப்பட வேண்டும்; அவருடைய ஏவுதல்களை நாம் நிச்சயமாகப் பின்பற்றி ஜீவிக்க வேண்டும்; ஆண்டவர் நடந்து சென்ற பாதையைப் பின்பற்றி நடக்க வேண்டும்! ஆண்டவர் இப்பூமியில் ஜீவித்தபோது அனுசரித்த சகல புண்ணியங்களையும், நாமும் அனுசரிக்க வேண்டும்! மகா பரிசுத்த தேவமாதாவின் மீது நாம் கொண்டிருக்கிற பக்தி, நமதாண்டவர் தாமே, தமது மகா பரிசுத்த மாதாவின் மீது கொண்டிருந்த பக்தியின் தொடர்ச்சியாகக் கட்டாயமாக  இருக்க வேண்டும், என்பதை இதிலிருந்து, நாம் கண்டுணரவேண்டும். பூமியிலிருந்த போது, ஆண்டவர் தமது மகா பரிசுத்த மாதாவின் பேரில் கொண்டிருந்ததும், இன்னும் கொண்டிருக்கிறதுமான மேரை மரியாதை யினுடையவும், கையளித்தலினுடை யவும், பற்றுதலினுடையவும் உணர்வுகளால் நாமும் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும் 

மகா பரிசுத்த மரியாயின் மதுரமான இருதயமே! என் இரட்சணியமாயிரும்!

மகா பரிசுத்த மரியாயின் மாசற்ற இருதயமே! வாழ்க! 



August is the Month of Immaculate Heart of Mary - August 1

 


ஆகஸ்டு 1ம் நாள்


 

போற்றுதற்குரிய மகா பரிசுத்த தேவமாதாவின் மாசற்ற திரு இருதயத்தின் மீதான பக்தியினுடைய மையப்பொருள்

 

மகா பரிசுத்த தேவமாதாவின் போற்றுதற்குரிய மாசற்ற திரு இருதயம்அர்ச்.யூட்ஸ் அருளப்பர்

மகா பரிசுத்த தேவமாதாவின் மாசற்ற திரு இருதயம், போற்றுதற்குரிய மாசற்ற திரு இருதயம் என்று அழைக்கப் படுவதற்கான காரணங்கள்: சர்வேசுரனுடைய ஏகக் குமாரனும், நமதாண்டவருமான திவ்ய சேசுகிறீஸ்து நாதருமானவர் தாமே, சகல சிருஷ்டிகளிலிருந்து, தன்னிகரற்றவர்களும், ஒப்பிடப்படமுடியாதவர்களுமான மகா பரிசுத்த திவ்ய கன்னிமாமரியைத் தம்முடைய பரிசுத்தத் தாயாராகத் தேர்ந்தெடுத்து, அவர்களாலேயே, தாம் போஷிக்கப்படவும், ஆண்டு நடத்தப்படவும், வேண்டுமென்று, தயவுடன் திருவுளம் கொண்டார்! மேலும், ஆண்டவர் தமது மகா பரிசுத்த மாதாவை, நம்முடைய  திவ்ய இராக்கினியாகவும், நமது தாயாராகவும், நம் எல்லா தேவைகளிலும், நம் நிச்சயமான அடைக்கல தஞ்ச ஸ்தல மாகவும் இருக்கும்படியாகவும், நமக்கு அளித்திருக்கிறார்! ஆகவே தான், நமதாண்டவர். தாம் தமது மகா பரிசுத்த மாதாவை மகிமைப்படுத்துவதைப் போலவும், சிநேகிப்ப தைப் போலவும், நாமும், நம் மகா பரிசுத்த தேவமாதாவை மகிமைப் படுத்தவும், சிநேகிக்கவும் வேண்டுமென்று ஆசிக்கின்றார்!

மகா பரிசுத்த மரியாயின் மதுரமான இருதயமே! என் இரட்சணியமாயிரும்!

மகா பரிசுத்த மரியாயின் மாசற்ற இருதயமே! வாழ்க!  


August the Month of Immaculate Heart of Mary - August 1



Download - Catholic Books

புதன், 10 ஜூலை, 2024

வேத சாட்சிகளான ஏழு பரிசுத்த சகோதரர்களின் திருநாள்


 ஜுலை 🔟ம் தேதி

வேத சாட்சிகளான ஏழு பரிசுத்த சகோதரர்களின் திருநாள்

ஜனுவாரியுஸ், ஃபெலிக்ஸ்,ஃபிலிப், சில்வன், அலெக்சாண்டர், விடாலிஸ்,மார்டியாலிஸ் என்கிற ஏழு பரிசுத்த சகோதரர்களின் தாயார் அர்ச்.ஃபெலிசிடாஸ், ஒரு பக்தியுள்ள பணக்கார கிறீஸ்துவ விதவையாயிருந்தாள். இவள் தேவசிநேகத்திற்கடுத்த பிறர்சிநேக அலுவல்களில் மிக தீவிரமாக ஈடுபட்டு அநேக ஏழைகளையும் நோயாளிகளையும் பராமரித்து பணிவிடை புரிந்து வந்தாள்; இவள் தன்னுடைய இந்த மிகச்சிறந்த பிறர்சிநேக அலுவல்களால் அநேக அஞ்ஞானிகளை மனந்திருப்பி கத்தோலிக்க வேதத்தில் சேர்த்தாள்.
இதைக் கண்டு பொறாமைகொண்ட அஞ்ஞான உரோமைப் பூசாரிகள், உரோமை சக்கரவர்த்தியான மார்குஸ் அவுரேலியுஸிடம், அர்ச்.ஃபெலிசிடாஸைப் பற்றி முறையிட்டனர்: இப்பெண்மணி, உரோமையர்களில் அநேகரை கிறீஸ்துவர்களாக்கியதால், உரோமைக் கடவுள்கள் உரோமாபுரியின் மீது கோபமாயிருக்கின்றன; ஆகவே, ஃபெலிசிடாசும் அவளுடைய குடும்பத்தினரும்,  இக்கடவுள்களின் கோபத்தை அமர்த்த பகிரங்கமாக  உரோமைக் கடவுள்களுக்கு பலி செலுத்தவேண்டும்!  அதற்காக அக்குடும்பத்தை நிர்ப்பந்திக்க வேண்டும்! என்று கூறினர். 
உடனே சக்கரவர்த்தி, உரோமை ஆளுநனான புப்ளியுசிடம், இக்காரியத்தை உடனே கவனிக்கும்படி கட்டளையிட்டான். உயர்குல பெண்மணியான அர்ச்.ஃபெலிசிடாசிடம் இந்த ஆளுநன் உயர்ந்த மதிப்பு கொண்டிருந்தான். சக்கரவர்த்தியின் இந்த கட்டளையைப் பற்றி அவளுக்கு எடுத்துக்கூறி, எப்படியாவது, உரோமை விக்கிரகங்களுக்கு பலிசெலுத்தி விட்டு தப்பித்துக்கொள்ளம்படி ஆலோசனை கூறினான். ஆனால், அர்ச்.ஃபெலிசிடாஸ், சிறிதளவும் அஞ்சாமல்,  “நானும் என் மகன்களும் எங்கள் சத்திய வேதத்தின் விசுவாசத்தை ஒருபோதும் புறக்கணிக்கமாட்டோம்; கைவிடமாட்டோம்; அதில் உறுதியாக இருப்போம்! எங்கள் ஆண்டவர் திவ்ய சேசுகிறீஸ்துநாதர்சுவாமிக்காகக் கொல்லப்பட்டு இறந்தால், என் மகன்கள் , நித்திய மோட்சப் பேரின்ப பாக்கியத்தை அடைவார்கள்; நித்திய ஜீவியத்தை ஜீவிப்பார்கள். ஆனால், அவர்கள் ஒருவேளை பசாசுகளான உங்கள் தெய்வங்களுக்குப் பலிசெலுத்துவார்களேயாகில், நித்திய நரகத்தின் கதியையே அவர்கள் அடைவார்கள்” என்று ஸ்திரமான குரலில் கூறினாள். இருப்பினும் , மனம் மாறுவதற்கு, புப்ளியுஸ், ஒரு நாள் அவகாசம் கொடுத்தான். அடுத்த நாள் மார்ஸ் விக்கிரகத்தின் கோவிலுக்குச் சென்று, நீதிபதியின் ஆசனத்தில் அமர்ந்தான்; ஃபெலிசிடாசும் , அவளுடைய ஏழு குமாரர்களும், வரவழைக்கப்பட்டனர். அஞ்ஞான விக்கிரகங்களை வழிபடும்படி அவர்களுக்குக் கூறினான்.
அர்ச்.ஃபெலிசிடாஸ், தன் ஏழு மகன்களிடம், “என் பிரிய மகன்களே! அந்த கொடுங்கோலனை நோக்கிப் பார்க்காதீர்கள்!  ஆனால், உங்கள் கண்களை பரலோகத்தை நோக்கி உயர்த்துங்கள்! இதோ! அங்கேயிருக்கிற உங்கள் சர்வேசுரனும் இரட்சகருமான  திவ்ய சேசுகிறீஸ்துநாதர் சுவாமியை நோக்கிப் பாருங்கள்! “ என்று கூறினாள். அரச கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் அதை மீறவும் தன் முன்பாகவே, தன் மகன்களுக்கு, ஃபெலிசிடாஸ் கூறுவதைக் கேட்டதும், புப்ளியுஸ் சீறிப்பாய்ந்தான்; உடனே ஃபெலிசிடாஸை தடிகளால் கொடூரமாக் காட்டமிரான்டித்தனமாக அடிக்கும்படி கட்டளையிட்டான்; பின்னர் அவளுடைய மகன்களில் ஒவ்வொருவராக கூப்பிட்டான்; அஞ்ஞான விக்கிரகங்களுக்கு பலி செலுத்த நயமாகப் பேசி அவர்களை சம்மதிக்க பெருமுயற்சி செய்தான்; ஆனால், ஏழு சகோதரர்களும், சத்திய கத்தோலிக்க வேத விசுவாசத்தில் ஸ்திரமாக நின்றனர்: பரிசுத்த தைரியத்துடன் ஏக பரிசுத்த அப்போஸ்தலிக்க கத்தோலிக்க விசுவாசத்தை பகிரங்கமாக உச்சாரணம் செய்தனர்! இத்தகைய தன்னிகரற்ற உன்னதமான வீரத்துவத்தை இதுவரை பார்த்திராத புப்ளியுஸ் மாபெரும் திகைப்பில் ஆழ்ந்தான். நடந்தவற்றையெல்லாம், அவன் சக்கரவர்த்தியிடம் தெரிவித்தான். கொடுங்கோலனான சக்கரவர்த்தி, ஃபெலிசிடாஸையும் அவளுடைய மகன்கள் எல்லோரையும் கொன்று போட கட்டளையிட்டான்.
அர்ச்.ஜனுவாரியுஸ், இரும்புகுண்டுகளாலான சாட்டைகளால் இறந்துபோகும் வரை அடிக்கப்பட்டார்;ஃபெலிக்ஸ் மற்றும் ஃபிலிப் ஆகிய இருவரும் தடிகளால் அடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்; சில்வானுஸ், உயரமான இடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டுக் கொல்லப்பட்டார். அலெக்சாண்டர், விடாலிஸ், மார்டியாலிஸ் ஆகிய மூவரும், வாளால் தலை வெட்டிக் கொல்லப்பட்டார்கள். இவ்விதமாக, ஏழு சகோதரர்களும் வேதசாட்சி முடியைப் பெற்றுக் கொண்டனர். அர்ச்.ஃபெலிசிடாஸ், சிறையில் அடைக்கப்பட்டு, 4 மாத காலம் சகல கொடிய உபாதைகளையும் அனுபவித்தபிறகு, 164ம் வருடம் தலைவெட்டிக் கொல்லப்பட்டாள். வேதசாட்சி முடியைப் பெற்று தன் குமாரர்களுடன் நித்தியப் பேரின்ப பாக்கியத்தை அடைந்தாள்.

வேதசாட்சிகளான ஏழு பரிசுத்த சகோதரர்களே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

ஞாயிறு, 7 ஜூலை, 2024

June 6 - வேதசாட்சியான அர்ச். தாமஸ் மூர் (St. Thomas Moore)

ஜுலை 0️⃣6️⃣ம் தேதி

வேதசாட்சியான அர்ச். தாமஸ் மூர்



இவர் 1478ம் வருடம், பிப்ரவரி 7ம் தேதியன்று, லண்டன் மில்க் தெருவில் பிறந்தார். இவருடைய தந்தை சர் ஜான் மூர். இவர் மிக திறமையான வக்கீலாகவும் பின்னர் நீதிபதியாகவும் இருந்தார். தாமஸ், அக்காலத்தில் லண்டனிலிருந்த மிகச் சிறந்த பள்ளிக்கூடங்களில் ஒன்றான அர்ச்.அந்தோணியார் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றார்; 1490ம் வருடத்திலிருந்து, இவர், 1492ம் வருடம் வரை கான்டர்பரி அதிமேற்றிராணியாரும், இங்கிலாந்தின் சான்சலருமான வந்.ஜான் மோர்டன் ஆண்டகையின் இல்லத்தின் உள்அலுவல்களைக் கவனிக்கிற அலுவலராகப் பணிபுரிந்தார். பின், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி படித்துவிட்டு, லண்டனில் வக்கீலாக வேலை பார்த்தார்; இதுவே, இவரை இவருடைய 26வது வயதில், பாராளுமன்றத்திற்குக் கொண்டு போய் விட்டது.

1516ம் வருடம், இவர், “கற்பனை உலகம்” என்ற அர்த்தத்தில் “உடோபியா” என்கிற உலகப் புகழ் பெற்ற புத்தகத்தை எழுதினார்;  இது, இங்கிலாந்து அரசனான 8ம் ஹென்றியை மிகவும் கவர்ந்தது. அரசன்,  இவரை அரண்மனையில், பல்வேறு உயர்பதவியில் அமர்த்தினான்; இறுதியில், 1529ம் வருடம், 8ம் ஹென்றி அரசன் இவரை இங்கிலாந்தின் சான்சலராக நியமித்தான்.

1530ம் வருடம் எட்டாம் ஹென்றியின் முதல் மனைவியான ஆரகன் நாட்டின் கத்தரீனுடனான திருமணத்தை இரத்து செய்ய அனுமதிக்கும்படி பாப்பரசரிடம் விண்ணப்பம் கோரி எழுதப்பட்ட கடிதத்தில் இவர் கையெழுத்திட மறுத்தார்; இந்த கடிதத்தை இங்கிலாந்திலுள்ள திருச்சபை அதிகாரிகளும் நாட்டின் உயர்அதிகாரிகளும் எழுதியிருந்தனர். பாப்பரசர் மற்றும் இங்கிலாந்து அரசன் இருவருடைய அதிகாரங்களுக்கிடையே எது உயர்ந்த அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது என்பதின்பேரிலான முரண்பாடான கருத்து உச்சக்கட்டத்தை அடைந்தபோது,தாமஸ், அர்ச்.இராயப்பரின் ஸ்தானத்தில், அவருடைய வழியில் வந்த திருச்சபையின் தலைவரான அர்ச்.பாப்பானவருக்கு ஆதரவாக இருந்தார்; பாப்பரசரே, இங்கிலாந்து நாட்டு அரசனை விட அதிக அதிகாரத்தைக் கொண்டவர் என்பதின் பேரில் உறுதியான தீர்மானத்துடன் தாமஸ் இருந்தார்.

1531ம் வருடம், 8ம் ஹென்றி, தாமஸை தனிமைப்படுத்தி தனியாக வைத்தான்; பின்னர், பாப்பரசருக்கு ஆதரவளித்த எல்லா மூத்த திருச்சபை அதிகாரிகளையும், அகற்றினான்; மேலும், பாப்பரசருக்கு இங்கிலாந்தின் மீது எந்த அதிகாரமும் இல்லை என்ற தனது தப்பறையான நிலைப்பாட்டை, உறுதிப்படுத்தும்படியாக, 8ம் ஹென்றி, இங்கிலாந்து திருச்சபை அதிகாரிகள் உரோமையிலிருக்கும் பாப்பரசருக்கு எந்த விண்ணப்பத்தையும் அனுப்பக்கூடாது என்பதன் பேரிலான ஒரு தடைச் சட்டத்தை , இயற்றினான்.

1534ம் வருடம், பாப்பரசர் அரசர்கள் மீது அதிகாரம் கொண்டிருக்கிறவர் என்கிற திருச்சபையின் போதனையில் உறுதியாக இருந்த தாமசும், இவருடைய நண்பரும் மேற்றிராணியாருமான அர்ச்.ஜான் ஃபிஷரும்,  இங்கிலாந்தில் திருச்சபைக்குத்  தலைவராக தன்னையே பிரகடனம் செய்த அரசன் 8ம் ஹென்றியின் தலைமை அதிகாரத்தை ஏற்க மறுத்தனர்; மேலும் பகிரங்கமாக அரசனுடைய முதல் மனைவி கத்தரீனுடனான திருமணம் இரத்தானதை இருவரும், ஏற்க  மறுத்தனர். ஆகையால் இருவரும் கைது செய்யப்பட்டு,லண்டன் கோபுரத்தில் அடைக்கப்பட்டனர்!

15 மாதங்களுக்குப் பிறகு, அர்ச்.ஜான் ஃபிஷர் மேற்றிராணியார் வேதசாட்சியாகக் கொல்லப்பட்ட 9 நாட்களுக்குப் பிறகு, அர்ச்.தாமஸ் மூர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு, தேசத் துரோகி என்று தீர்ப்பிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. அர்ச்.தாமஸ் முர்,  தனக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நிரூபித்தார்! பின் நீதிமன்றத்தில், “உங்கள் கருத்திற்கு சாதகமாக ஒரு மேற்றிராணியார் இருந்தால், என் கருத்திற்கு சாதகமாக நூற்றுக்கணக்கான அர்ச்சிஷ்டவர்கள்  இருக்கின்றனர்! உங்களுக்கு சாதகமாக ஒரு பாராளுமன்றம் இருந்தால்,  ஆயிரம் வருட காலமாக திருச்சபையில் நிகழ்ந்த எல்லா பொதுச்சங்கங்களும் எனக்கு ஆதரவாக இருக்கின்றன” என்று எல்லோர் முன்பாகவும் அர்ச்.தாமஸ் மூர் கூறினார்.  பின்னர் தூக்கு மேடையில்,  இவருடைய தலையை வெட்டிக் கொல்லப் படுவதற்கு முன்னதாக, தன் மரண தண்டனையைக் காண வந்த மக்களிடம், ‘நான் அரசனுடைய நல்ல ஊழியனாயிருந்தேன்! ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, முதலில் சர்வேசுரனுடைய நல்ல ஊழியனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

அர்ச்.தாமஸ் மூர் 1535ம் வருடம் ஜுலை 6ம் தேதி  தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். லண்டன் கோபுரத்தில், அர்ச்.இராயப்பர் சிற்றாலயத்தில் ஒரு அடையாளம் குறிக்கப்படாத கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். தேச துரோகிகள் கொல்லப்படும்போது, இங்கிலாந்தில் கொல்லப்பட்டவர்களின் தலைகளை லண்டன் பாலத்தில் ஒரு கோலின் மேல் குத்திக் காட்சிக்கு வைத்திருப்பது வழக்கம். அந்த வழக்கத்தின்படி, ஒரு மாத காலம் அர்ச்.தாமஸ் மூரின் தலை லண்டன் பாலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர்,அது, தேம்ஸ் நதியில் எறியப்படுவதற்கு முன்னதாக, அர்ச்.தாமஸ் மூரின் மகள், மார்கிரட் ரூபர், அர்ச்சிஷ்டவரின் பரிசுத்த தலையை மீட்டு, பத்திரமாக பூஜிதமாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தாள்.  இப்போது, கான்டர்பரியிலுள்ள அர்ச்.டன்ஸ்டன் தேவாலயத்திலுள்ள ரோபர் பாதுகாப்புப் பெட்டகத்தில் அர்ச்.தாமஸ் மூரின் பரிசுத்தத் தலை பாதுகாக்கப்பட்டு வருகிறது! அர்ச்.தாமஸ் மூர் ஜீவிய காலத்தில்  அணிந்திருந்த மயிர்ச்சட்டை, தெற்கு பிரன்ட் அருகிலுள்ள சியோன் துறவற மடத்தில் பாதுகாக்கப்படுகிறது.

13ம் சிங்கராயர் பாப்பரசர் 1886ம் வருடம் டிசம்பர் 29ம் தேதி இவருக்கு முத்திப்பேறு பட்டம் அளித்தார்; 11ம் பத்திநாதர் 1935ம் வருடம் 19ம் தேதியன்று இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டமளித்தார்.


அர்ச். தாமஸ் மூரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹

 

சனி, 6 ஜூலை, 2024

The Catholic's ready answer

APES AND MEN

The Ape-Theory.-Man bears so striking a resemblance to the ape that we are forced to conclude that he is descended from the ape.

THE ANSWER. 

In the first place, why argue from resemblance to descent? Or, if you argue at all, why not conclude that the ape is a degenerate man? Both arguments would be unsound, but the one would be as good as the other. What interest can you have in thus degrading man by bringing him down to the level of the apei Better argue thus: So striking is the contrast between man and ape that man could not possibly have been evolved from the ape. 

The contrast consists chiefly in this, that man has a soul endowed with reason and free will, which the ape has not. This is abundantly proved by the fact that man, by means of thought and reflection, advances from one invention or discovery to another, whilst the ape, in common with other brute animals, follows his instincts and behaves today precisely as his ancestors did thousands of years ago. He has not learned to build houses, to cook his food, or to do anything characteristic of man in the most rudimentary degree of civilization. The ape's power of mimicry is a superficial attribute which furnishes no proof of reason or thought.

Even in bodily structure the contrast is so obvious, at least to the anatomist, that no basis for the evolutionary theory can be found in that quarter. This is especially evident in the size of the brain, as also in the way in which the skull is joined to the spinal column-a circumstance that determines whether the animal is to have the erect posture of a man or the stooping posture of a beast. "The testimony of comparative anatomy," says Bumüller, "is decidedly against the theory of man's descent from the ape." Man or Ape, p. 59.

Moreover, if such descent were a fact we should find Mo some intermediate forms between the mere ape and the fully developed man. We should have found long before to-day what is popularly known as the missing link; but the missing link has nowhere been discovered, either in fossil remains or in living forms of animal life. The earth has been ransacked, but not a trace has come to light of the much sought for ape-man. Occasionally supposed discoveries have created a flutter in the scientific world, but they have invariably proved to be mares' nests. And yet if Darwin's theory of infinitesimal variations covering enormous periods of time were correct numerous specimens of intermediate forms should have been discovered.

The distinguished scientist Virchow, who certainly can not be accused of undue bias in the matter, bears the following testimony to the actual state of science on the subject:

"If we make a study of the fossil man of the quaternary period, who came nearest to our historical ancestors in the course of descent-or, better, of ascent we find at every turn that he is a man like ourselves. Ten years ago, when a skull was found in a peat-bog, among lake-dwellings, or in some ancient cave, it was thought to furnish indications of a wild and half-developed state of human existence. Men thought they scented the atmosphere of apedom. But since then a gradual change has been wrought in our estimate of such remains. The old troglodytes, lake-dwellers, and peat men have turned out to be a very respectable set of human beings. Their heads are of such a size that many a living man to-day would feel proud if he had one as large. We must candidly acknowledge that we possess no fossil types of imperfectly developed men. Nay, if we bring together all human fossils of which we have any knowledge and compare them with human beings of the present day, we can assert without any hesitation that among living men there is, proportionately, a much larger number of individuals of an inferior type than among the fossil remains thus far discovered. Whether the greatest geniuses of the quaternary age have been lucky enough to have been preserved to our day, I dare not conjecture.... But I must say that no skull of ape or ape-man which could have had a human possessor (or, as we take him to mean, could have been in any half-sense human) has ever yet been found. We cannot teach, nor can we regard as one of the results of scientific research, the doctrine that man is descended from the ape or from any other animal." The

Liberty of Science, p. 30f. In the Congress of Anthropologists held in Vienna in 1889 he adds the following to the words just quoted:

"We have sought in vain the missing links that are supposed to connect man with the ape. The primeval man, the genuine proanthropos, has not yet been found. Anthropologists cannot regard the proanthropos as a legitimate subject for discussion. They may see him in their dreams, but in their waking moments they must acknowledge him to be nowhere in sight. At Innsbruck in 1869 scientists in the fever-heat of discussion believed they could trace the evolution of the ape into the man; to-day we are unable to trace the derivation of one race of men from another. At the present hour we can say that the fossil men discovered stand as far removed from the ape as ourselves. Each living race is distinctively human, and no race has yet been discovered which can be designated as apish or half-apish... It can be clearly shown that in the course of five thousand years no appreciable change of type has taken place." Dr. Bumüller sums up the results of his study of the question in the following statements, every one of which rests upon solid demonstration:

"On no recognized principle of classification can man be associated with the ape; for, to say nothing of his gifts of understanding and speech, he stands quite alone by reason of the vastly superior development of the brain portion of his nervous system, and hence can lay claim to an independent position in the animal kingdom. Neither is his descent from the ape attested by science, for as yet no connecting link has been discovered, either in the higher walks of apedom or in the lower walks of humanity. Even the possibility of a connecting link is disproved by the tendency of apes and half-apes, in the course of their higher development in anatomical structure, to diverge more and more from the human type, and by the testimony of paleontology (the science dealing with remains of extinct species of animals preserved in the earth). Such is the present state of scientific investigation; and its results are in harmony with the view which the human understanding, lay and professional, has ever entertained when not under the tyranny of theori of theories that happen ppen to be the fashion of the hour." Man or Ape, p. 91. Munich, 1900. Dr. Zittel, an acknowledged leader in this branch of science, enumerates in his "Outlines of Paleontology" the most important discoveries made of human remains and makes the following comment: "Such material as this throws no light upon the question of race and descent. All the human bones of determinable age that have come down to us from the European Diluvium, as well as all the skulls discovered in caves, are identified by their size, shape, and capacity as belonging to the homo sapiens [man], and are fine specimens of their kind. They do not by any means fill up the gap between man and the ape."

Dr. Ranke, another eminent paleontologist, speaks with evident sarcasm, and in reference to certain scientific pretensions, of "the famous, or perhaps better, the notorious" relics discovered in the Neanderthal.

Science, after its many wanderings, is coming back to what Holy Writ has told us in words few and simple: "And the Lord God formed man of the slime of the earth, and breathed into his face the breath of life; and man became a living soul" (Gen. ii. 7). "And God created man to His own image" (Gen. i. 27).


வெள்ளி, 5 ஜூலை, 2024

மிலான் நகர அப்போஸ்தலரும் ஸ்துதியருமான அர்ச். அந்தோணி மேரி சக்கரியா - July 5 St. Anthony Mary Zacharia


 
ஜுலை 5ம் தேதி

மிலான் நகர அப்போஸ்தலரும் ஸ்துதியருமான அர்ச்.அந்தோணி மேரி சக்கரியா 

lஅர்ச்.அந்தோணி மேரி சக்கரியா  இத்தாலியில் கிரமோனா நகரில் ஓர் உயர்ந்த குடும்பத்தில் 1502ம் வருடம் பிறந்தார்; அதே நாளில், கிரமோனா கதீட்ரலில் ஞானஸ்நானம் பெற்றார்; இவருக்கு 2 வயதானபோது, இவருடைய தந்தை இறந்தார்; இவரை  வளர்ப்பதும்; இவருக்குக் கல்வி கற்பிப்பதும் இவருடைய தாயாரின் பொறுப்பில் இருந்தது; சிறிய வயதிலிருந்தே, இவருடைய தாயார், ஏழைகள் மேலும் துன்புறுகிறவர்கள் மேலும் இரக்கமுள்ளவராக இவரை வளர்த்தார்கள்; இவரை ஏழைகளுக்கு தாராளமாகத் தர்மம் செய்கிறவராக உருவாக்கினார்கள்.
கதீட்ரலை ஒட்டியிருந்த பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றார்; பேவியா நகர பல்கலைகழகத்தில் தத்துவ இயலைப் பயின்றார்; 1520ம் வருடம், பதுவா நகர பல்கலைக்கழகத்தில், மருத்துவப் படிப்பைத் துவக்கினார்; 22வது வயதில், மருத்துவப் பட்டம் பெற்று, மருத்துவரானார்; கிரமோனாவில் மூன்று வருட காலம் மருத்துவராக பணியாற்றினார். 
1527ம் வருடம், குருப்பட்டத்திற்காகப் படித்தார்; 1529ம் வருடம் பிப்ரவரி மாதம் குருப்பட்டம் பெற்றார்; நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும்  பணிவிடை செய்யும் விதமாக, மருத்துவ மனைகளிலும், நிறுவனங்களிலும், உள்ள  தேவசிநேகத்திற்கடுத்த பிறர்சிநேக அலுவல்களில், இவர் தன்னையே அர்ப்பணித்தார்; குவாஸ்டல்லாவைச் சேர்ந்த லுடோவிகா டொரெல்லி என்ற சீமாட்டியின் ஞான ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டார்; இந்த சீமாட்டியைப் பின்பற்றி, மிலான் நகருக்குச் சென்றார்.
மிலான் நகரில், நித்திய ஞானத்தின் செபக்கூடம் என்கிற துறவற குருக்கள் சபையின் உறுப்பினரானார். இந்த துறவற சபையின் உறுப்பினர்களான சங்.ஃபெராரி மற்றும் சங்.மோர்கியா ஆகிய இரு குருக்களுடன் சேர்ந்து, இவர் அர்ச்.சின்னப்பர் குருக்கள் சபை என்கிற மேற்றிராசன குருக்களுக்கான ஒரு துறவற சபையை ஸ்தாபித்தார்; இச்சபை, பொதுவாக பர்னபைட்ஸ் என்று அழைக்கப்பட்டது; பின்னர், அர்ச்.சின்னப்பருடைய சம்மனசுக்குரிய கன்னியாஸ்திரிகளுக்கான துறவற சபையையும், திருமணமான பொதுநிலையினருக்கான  அர்ச்.சின்னப்பர்  சபையையும் ஸ்தாபித்தார்.

இவர் வாழ்ந்த காலத்தில் வட இத்தாலி, போரினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளை நோயினாலும்,  அலைக்கழிக்கப்பட்டு, வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தது. புராட்டஸ்டன்டு பதிதர்கள், கத்தோலிக்க வேதத்தைத் துவேஷித்து, கத்தோலிக்க வேத விசுவாசத்தின் மீது வெறுப்பை, வட இத்தாலியப் பகுதியில் பரப்பி வந்தனர்; இந்த உபாதனைகள் எல்லாம் இப்பகுதியை மிகுந்த  துயரமான நிலைமைக்குக் கொண்டு போயிருந்தன! இதுவே, இவருடைய துறவற சபையின் சேவையை இப்பகுதியில் ஆற்றும்படி மிக வல்லமையுள்ள விதமாக விண்ணப்பிக்கக் காரணமாயிற்று! அர்ச்.அந்தோணி மேரி சக்கரியா, ஐந்து உறுப்பினர்களுடன்  துவக்கியிருந்த பர்னபைட்ஸ் துறவற சபைக்கு, 7ம் கிளமென்ட் பாப்பரசர் 1533ம் வருடம் திருச்சபையின் அதிகாரபூர்வ ஒப்புதலை அளித்தார்.
வின்சென்சா என்ற நகரில், தேவாலயங்களில், மகா பரிசுத்த தேவநற்கருணைக்கு நிந்தைப் பரிகாரமாக 40 மணி நேர தொடர் ஆராதனையை பொதுமக்கள் மத்தியில் பிரபல்யமடையச் செய்தார்; உன்னதமானவிதமாக, பகிரங்கமாக மகா பரிசுத்த தேவநற்கருணை ஆடம்பரமாக ஸ்தாபிக்கப்பட்டு, 40 மணி நேரம்  இடைவிடாமல் விசுவாசிகளால் ஆராதிக்கப்படும் பழக்கத்தை, இப்பகுதியிலுள்ள தேவாலயங்களில் பரப்பினார்; நமதாண்டவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை  நன்றியறிந்த ஸ்தோத்திரத்துடன் ஞாபகப்படுத்தி சிறிய தேவசிநேக மற்றும் தேவ ஆராதனை முயற்சியை விசுவாசிகள் அனுசரிக்கும் விதமாக தேவாலயங்களில், மத்தியானம் 3 மணிக்கு மணி அடிக்கும் பழக்கத்தையும் துவக்கி வைத்தார்.
1539ம் வருடம், வேதபோதக அப்போஸ்தல அலுவலுக்காக  குவாஸ்டல்லாவிற்கு  சென்றபோது, இவருக்கு காய்ச்சல் வந்தது; அத்துடன் இவர் இடைவிடாமல் அனுசரித்து வந்த கடினமான தபசும் பரித்தியாகங்களும், இவரை மிகவும் பலவீனமடையச் செய்தன! 1539ம் வருடம் ஜுலை 5ம் தேதியன்று, இவர், 36வது வயதில், பாக்கியமாய் மரித்தார். இவருக்குக் குருப்பட்டம் அளித்த வந்.லூக்கா டி சேரியேட் ஆண்டகை இவருடைய அடக்கச் சடங்கை தலைமையேற்று நடத்தினார்.
அர்ச்.சின்னப்பருடைய சம்மனசுகள் என்ற கன்னியர் மடத்தில் இவருடைய பரிசுத்த சரீரம் அடக்கம் செய்யப்பட்டது; இவர் மரித்து 27 வருடம் கழித்து, புதுமையாக அழியாமலிருக்கிறதைக் கண்டறிந்தனர்!  இவருக்கு, 1849ம் வருடம் முத்.9ம் பத்திநாதர் பாப்பரசரால் முத்திப்பேறு பட்டமளிக்கப்பட்டது. இவருக்கு,13ம் சிங்கராயர் பாப்பரசரால், ஆடம்பரமாக உரோமையில், மே 15ம் தேதி, 1897ம் வருடம் அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது.
இவருடைய அர்ச்.சின்னப்பரின் குருக்கள் துறவற சபையின் தலைமையகமாக, மிலான் நகரிலுள்ள அர்ச்.பர்னபாஸ் தேவாலயம் அளிக்கப்பட்டிருந்தது, என்பது தான், இவருடைய துறவற சபை பர்னபைட்ஸ் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம்.

ஸ்துதியரான அர்ச்.அந்தோணி மேரி சக்கரியாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹