Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 4 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 4-ம் தேதி*

*ஜனவரி மாதம் 4-ம் தேதி*

*St. Titus, B.*
*அர்ச். தீத்துஸ் - ஆயர்*. 
அஞ்ஞானியாயிருந்த இவர் அர்ச்.சின்னப்பரால் ஞானஸ்நானம் பெற்று அவருக்கு சீஷனாகி அவர் வேதம் போதிக்கச் சென்ற ஊர்களுக்கெல்லாம் அவருடனே சென்றார். பிறகு இவர் விசுவாசிகளை விசாரித்து வரும்படி அர்ச். சின்னப்பரால் பல ஊர்களுக்கு அனுப்பப்பட்டார். வேதத்தில் தத்தளித்து துர்மாதிரிகையாய் வாழ்ந்த கொரிந்தியரை திருத்தும் பொருட்டு தீத்துஸ்  அவர்களிடம் அனுப்பப்பட்டபோது, அவர் அவர்களுக்கு அன்போடு புத்திமதி சொல்லி அவர்களை நல்வழிக்கு கொண்டுவந்தார். இந்த நல்ல செய்தியைக் கேள்விப்பட்ட அர்ச். சின்னப்பர் சந்தோஷத்தால் பூரித்து ஆறுதல் அடைந்தார்.  தீத்துஸ் அர்ச். சின்னப்பரின் உத்தரவின்படி ஆங்காங்கு தர்மம் எடுத்து ஜெருசலேமிலுள்ள ஏழைகளுக்கு அனுப்பிவந்தார். சில காலத்துக்குப்பின் அர்ச். சின்னப்பர் தீத்துசுக்கு ஆயர் பட்டம் கொடுத்து கிரேத் என்னும் தீவில் வேதம் போதிக்கும்படி அனுப்பினார். ஆயர்களின் மேலான கடமைகளைக் குறித்தும், விசுவாசிகளை நடத்திச்செல்ல வேண்டிய ஒழுங்கு திட்டங்களைக் குறித்தும் ஒரு நிருபத்தை அர்ச். சின்னப்பர் எழுதி இவருக்கு அனுப்பினார். தம் குருவும் ஆசிரியருமான அர்ச். சின்னப்பர் போதனைக்குத் தீத்துஸ் இணங்கி புண்ணிய வழியில் நடந்து, மிக்க ஊக்கத்துடன் வேதம் போதித்து, நல்ல மரணமடைந்து, மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டார். 

*யோசனை*

நாம் செய்யும் தவறுகளை அறியும் நமது ஞானப் போதகர்கள், நமக்கு அறிவுரை கூறும்போது, நமது தவறுகளை விட்டொழித்து அவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்.

வெள்ளி, 3 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 3-ம் தேதி


*St. Genovieve, V.*
*அர்ச். ஜெனோவியேவ் அம்மாள் - கன்னிகை*

*(கி.பி. 422).* 


அர்ச். ஜெனோவியேவ் அம்மாள் 422-ம் வருஷம் பிரான்சு தேசத்தில் பிறந்தாள். அவள் ஏழு வயதில் தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தாள். தன் 15-ம் வயதில் கன்னியர் உடுப்பு தரித்துக்கொண்டாள்.  நாளுக்கு நாள் புண்ணியத்தில் வளர்ந்து 50 வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சிறிது ரொட்டியும், பருப்பும் அருந்திவந்தாள்.  மயிர் ஒட்டியாணம் தரித்துக் கடுமையாக தவம் புரிவாள். மிகவும் பக்தி உருக்கத்துடன் இடைவிடாமல் ஜெபத் தியானம் செய்வாள். பிறர் சிநேகத்தை மனதில் கொண்டு பெரிய பட்டணங்களுக்குப் பயணமாய் போய் அநேக புதுமைகளைச் செய்து, தீர்க்கதரிசனங்களைக் கூறி, எல்லோராலும் வெகுவாய் மதிக்கப்பட்டாள். இந்தப் புண்ணியவதியின் மீது காய்மகாரம் கொண்டவர்கள் இவளைப் பலவிதத்திலும் துன்பப்படுத்தினபோதிலும், இந்த அர்ச்சியசிஷ்டவள் சற்றும் கலங்காமல் தன் நம்பிக்கையை ஆண்டவர் மீது வைத்து, ஜெப தபத்தால தன் பகைவர்களை வென்றாள். அச்சமயம் அத்தில்லா என்னும் கொடுங்கோலன் பாரிஸ் நகரைக் கொள்ளையடிக்க வந்தபோது அவள் உரைத்த தீர்க்கதரிசனத்தின்படி அந்தப் பெரும் பொல்லாப்பு நீங்கியது. ஜெனோவியேவ் அம்மாள் தன் 89-ம் வயதில் அர்ச்சியசிஷ்டவளாக மரித்தாள்.

*யோசனை*

நாமும் இந்த அர்ச்சியசிஷ்டவளைக் கண்டுபாவித்து, துன்ப துரிதத்தாலும் பொல்லாதவர்களுடைய தூற்றுதலாலும் மனம் சோர்ந்துபோகாமலும் உலக உதவியை விரும்பாமலும் ஜெபத்தால் தேவ உதவியை மன்றாடுவோமாக.

வியாழன், 2 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 2-ம் தேதி

*ஜனவரி மாதம் 2-ம் தேதி*
*St.Macarius, A.*
*அர்ச்.மக்காரியுஸ் - மடாதிபதி*
*(கி.பி.394)*

அலெக்சாந்திரியா என்னும் பட்டணத்தில் பிறந்து, பழம் வியாபாரம் செய்து வந்த மக்காரியுஸ் உலக வாழ்வில் கசப்புற்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்ய தீர்மாணித்து, நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று அவ்விடத்தில் கடும் ஜெப தபங்களை நடத்தி வந்தார். அவருக்கு சீஷர்களான அநேகர் அக்காட்டில் சிறு குடிசைகளில் வசித்து, தங்கள் சிரேஷ்டரான மக்காரியுஸின் தர்ம செயல்களைப் பின்பற்றி, புண்ணியவாளராய் வாழ்ந்தார்கள்.

மக்காரியுஸ் இடைவிடாமல் ஜெபம் செய்வார். கூடைகளை முடைவார்.  கனி, கிழங்கு, கீரை முதலியவற்றை ஒரு நாளைக்கு ஒரு தடைவ மாத்திரம் புசிப்பார். பல முறை இரவில் நித்திரை செய்யாமல் சங்கீதங்களைப் பாடி ஜெபிப்பார். ஒருநாள் இவருக்கு அனுப்பப்பட்ட ஒரு திராட்சைக் குழையைப் புசிக்காமல் தமது சன்னியாசிகளுக்கு அனுப்பினார். அவர்களும் அதை புசிக்காமல் மக்காரியுசுக்கு அனுப்பி விட்டார்கள். அவரும் தமது சன்னியாசிகள் மட்டசனம் என்னும் புண்ணியத்தைக் கண்டிப்பாய் அனுசரிப்பதை அறிந்து சந்தோஷமடைந்தார். வனவாசிகளுக்குள் ஒருவர் தான் முடைந்த பாய் கூடைகளை விற்றதினால் வந்த பணத்தை தம்மிடம் வைத்துக்கொண்டு இறந்ததினால், அப்பணத்தை அவருடைய பிரேதக் குழியில் அவரோடு போட்டுப் புதைக்கும்படி அர்ச்.மக்காரியுஸ் கட்டளையிட்டார். இவர் இவ்வளவு கடின தவம் செய்துவந்தும், இவருக்குப் பல சோதனைகளுண்டாக, அவைகளை ஜெபத்தால் ஜெயித்தார். ஆரிய பதிதர் வயோதிகரான அர்ச்.மக்காரியுஸை பல விதத்தில் துன்பப்படுத்தினார்கள். இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து கி.பி.394-ம் வருடம் மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டார்.

*யோசனை*

நாமும் இந்தப் பரிசுத்த வனவாசிகளைப் பின்பற்றி போசனப்பிரியத்துக்கு இடம் கொடாமல், மட்டசனமென்னும் புண்ணியத்தை கடைபிடிப்போமாக.

ஜனவரி மாதம் 1-ம் தேதி* *The Circumcision of Our Lord*. *விருத்தசேதனத் திருநாள்

*LIVES OF SAINTS*
*அர்ச்சியசிஷ்டவர்களின் சரித்திரம்*

ஒவ்வொரு தேதியிலும் வாசிக்க வேண்டிய அந்தந்த  அர்ச்சியசிஷ்டவரின் சரித்திரம் சுருக்கமாய் கொடுக்கப்பட்டிருப்பதின் காரணம் யாதெனில், பலர் தங்களுக்கு வாசிக்கப் போதுமான நேரமில்லையென்று சொல்லி அதை வாசியாமல் விட்டுவிடக்கூடாதென்பதற்காகவே.  நாலைந்து நிமிடங்கூட கிடைக்கப் பெறாமற் போகிறவர்கள் யாருமிரார். மேலும் அந்தந்த தேதியில் குறிக்கப்பட்டிருக்கின்ற யோசனையை விசுவாசிகள் தங்கள் மனதில் வைத்து, அதை அந்தந்த நாளில் அப்போதைக்கப்போது சிந்திப்பார்களேயானால், பெரிதும் ஞானப்பிரயோசனமடைவார்கள்.

*ஜனவரி மாதம் 1-ம் தேதி*
*The Circumcision of Our Lord*
*விருத்தசேதனத் திருநாள்*
  
*திவ்விய பாலகனுக்கு விருத்தசேதன சடங்கு*
*நிறைவேற்றப்படுகிறது.*

விருத்தசேதனமானது அபிரகாமுடைய சந்ததியை மற்ற ஜனங்களினின்று பிரித்துக் காட்டும் அடையாளச் சடங்கு.  மோசஸ் பத்துக் கற்பனையைப் பெறுவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே விருத்தசேதனச் சடங்கு சர்வேசுவரனால் ஏற்படுத்தப்பட்டது.  இதை யூதர்கள் வெகு கண்டிப்பாய் அநுசரித்து வந்தார்கள்.  இச் சடங்கை நிறைவேற்றும் போது குழந்தையின் சரீரத்தில் கொஞ்சம் சதை அறுக்கப்படும்.  நமது திவ்விய
கர்த்தர் இச் சடங்கை அநுசரிக்க கடமைப்படாவிடினும் தாம் எடுத்த சரீரம் மெய்யான மனித சரீரமென்று காட்டி, சகலரும் தேவ கட்டளைக்கு அமைந்து நடக்க வேண்டுமென்று நமக்கு படிப்பிக்கும் பொருட்டு, அவர் தமது மாசற்ற சரீரத்தில் காயப்பட்டு இரத்தம் சிந்த சித்தமானார்.  நாமும் நமதாண்டவருடைய திவ்விய மாதிரியைக் கண்டுபாவித்து, வேத கற்பனையையும், திருச்சபைக் கட்டளையையும் பக்தியோடு அநுசரிப்போமாக.  மேலும் நமது இருதயத்தில் கிளம்பும் ஆசாபாசங்களையும், ஒழுங்கற்ற நாட்டங்களை ஒறுத்தலாகிய கத்தியால் அறுத்துக் காயப்படுத்தி, ஞானவிதமாக இரத்தம் சிந்தப் பழக வேண்டும்.  கண், காது, வாய் முதலிய ஐம்புலன்களை அடக்கி ஒறுப்பவன் பாவத்திற்கு உடன்பட மாட்டான். ஆகையால் இந்த ஒறுத்தல் முயற்சியை ஜெபத்தால் அடைவோமாக.

இந்தப் புது வருடத் துவக்கத்தில் நமது பழைய பாவ நடத்தையை விட்டொழித்து, துர்ப் பழக்கங்களை மாற்றிவிட்டு, புது வாழ்க்கை வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக்கடவோம்.

*யோசனை*

நாம் இந்தப் புதுவருடத்தில் எந்தெந்தப் பாவத்தை விட்டொழித்து, எந்தெந்தப் புண்ணியத்தைச் செய்ய தீர்மாணித்தோமோ, அதை இன்றே செய்ய முயற்சிப்போமாக.

செவ்வாய், 24 டிசம்பர், 2019

அர்ச், அந்தோனியார் வணக்கமாதம் பதிமூன்றாம் நாள்



அர்ச். அந்தோனியார் பூர்ஜ் பட்டணத்திலிருந்த காலத்தில் அவ்விடத்தில் பேர்போன அவிசுவாசியொருவனிருந்தாள். அவனுடைய பெயர் கய்யார். (Guyard) அவன் கத்தோலிக்கருடைய விசுவாச சத்தியங்களெல்லாம் மறுத்து அநேகருக்குத் தூர்மாதிரிகை காட்டிவந்தான். ஒருநாள் அந்தோனியாருடன் வேத சத்தியங்களைக் குறித்து வெகுநேரம் தர்க்கமாடன்பிறகு தன் தப்பறைகளைக் கொஞ்சம் கண்டுபிடித்தான். ஆனாலும் தேவநற்கருணையில் சேசுநாதர் சுவாமி மெய்யாகவே எழுந்தருளியிருப்பதைப் பற்றி அவன் சந்தேகமுள்ளவனாய், ஒருதாள் அர்ச்சியசிஷ்டவரை நோக்கி அவன் சொன்னதாவது: நீர் ஏதாவது ஒரு பிரசித்தமான அடையாளத்தைக் கொண்டு நீர் போதிப்பதெல்லாம் உண்மைதானென்று ருசுப்படுத்தினால் நானும் என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் உம்முடைய வேதத்தை அனுசரிக்க ஏற்றுக்கொள்ளுகிறோம். என்னிடம் ஒரு கோவேறு கழுதையிருக்கின்றது. மூன்றுநாள் வரைக்கும் நான் அதற்குத் தீனி ஒன்றும் வைக்காமல் சகல சனங்களுக்கும் முன்பாக விஸ்தாரமான ஸ்தலத்துக்கு அதையோட்டிவந்து, கொள்ளை அதற்கு முன்பாக வைக்கிறேன். அதே சமயத்கில் சேசுநாதருடைய சரீரமென்று நீர் 'சொல்லுகிற தேவ நற்கருணையைக் கொண்டுவந்து அதற்குக் காண்பியும். அந்த மிருகம் கொள்ளைச் சட்டைசெய்யாமல் தன் கால்களை மடித்துத் தேவநற்கருணைக்கு முன்பாகச் வணக்கம் செய்தால் நான் உடனே கத்தோலிக்கு வேதத்திற்கு சேருகிறேன் என்றான். |

Redmi Note 4 Cover
பக்தி விசுவாசம் நிறைந்த அர்ச்சியசிஷ்டவர் அதற்குச் சம்மதித்துப் போய் அந்த மூன்று நாளும் செபத்திலும், தவத்திலும் செலவழித்தார். குறிக்கப்பட்ட நேரத்தில் ஏற்கனவே திரளான பிரிவினைக்காரரும் மற்றவர்களும் கூடியிருந்த ஸ்தலத்துக்குத் தேவ நற்கருணை வைத்திருந்த கதிர்ப்பாத்திரத்தை எடுத்து வந்தார். அதே தருணத்தில் பட்டினியால் மெலிந்து இளைத்துப்போயிருந்த கோவேறு கழுதைக்கு முன்பாகக் கொள் இருந்த தொட்டியைக் சுய்யாரென்பவன் வைத்தான். அந்தோனியார் கழுதையைப் பார்த்து: நான் அபாத்திரனானாலும் என் கையிலிருக்கிற உன் சிருஷ்டிகருடைய நாமத்தால், புத்தியில்லாத மிருகமே. நான் உனக்குக் கட்டளையிடுகிற தென்னவென்றால், எங்கள் பீடங்களின் மேற் பலியிடப்படும் திவ்விய செம்மறியாட்டுக் குட்டிக்குச் சிருஷ்டிப்புக்கள் யாவும் கீழ்ப்பட்டிருக்கின்றன
வென்று அவிசுவாசிகள் கண்டுபிடிக்கத்தக்கதாக, நீ அவருக்கு முன்பாக உடனே வந்து வணக்கம் பண்ணக்கடவாய் என்றார். அந்த க்ஷணத்திலே தானே கோவேறு கழுதை கொள்ளைத் தொடாமல் தேவதற்கருணைக்கு முன்பாக வந்து தன் கால்களை மடித்து வணக்கம் செய்கிற பாவனையாக இருந்தது. கய்யாரும் அவனைச் சேர்ந்தவர்களும் தங்கள் அபத்த மார்க்கத்தை மிட்டு வேறு அநேகரோடு மனந் திரும்பினார்கள். இந்தப் புதுமை நடந்த போதுதான் "பிரிவினைக்காரருடைய சம்மட்டி' என்கிற மகிமையான பெயர் அந்தோனியாருக்கு ஏற்பட்டதென்று அநேக சொல்லு கிறார்கள். இந்தப் புதுமை நடந்த விடத்திலே சேம் பியேர் லெ கய்யார் (St.Pierre Is Guyard) என்ற கோயில் கட்டப் பட்டிருக்கிறது. திரளான பாவிகளை, பிரிவினைக்காரரை மனந்திருப்ப அர்ச், அந்தோனியார் முன் சொன்ன பிரகாரம் அநேகாநேகம் புதுமைகளைச் செய்து வந்தார்.
அர்ச். அந்தோனியார் பிரகங்கம் செய்வதற்குமுன், தன்னைத்தானே தாழ்த்துவார். வேண்டிக்கொள்ளுவார், தன் சரீரத்தை ஒறுத்துக் கடினமாய்த் தண்டிப்பார். பிறகு ஆண்டவருடைய பேரால் பிரசங்கம் செய்வார். மோசேஸ் என்பவர் சர்வேசுரனுடைய பலத்தால் தமது கோலைக் கொண்டு கற்பாறையில் அடிக்கவே, நீருற்றுண்டானதுபோல, அர்ச். அந்தோனியாரும் ஆண்டவருடைய வல்லமையைக் கொண்டு பிரிவிளைக்காரரை மளந்திருப்ப அநேகமான ஆச்சரியங்களைச் செய்து வந்தார். பூர்ஜ் நகரத்தில் நடந்த புதுமையைக்கொண்டு தேவநற்கருணையின் மட்டில் அந்தோனியாருக்குண்டான பக்தி விசுவாச நம்பிக்கை எவ்வளவென்று நாம் அறிந்து கொள்ளலாம். நம் இருதயத்திலும் அவர் அந்தப் பக்தி எழும்பும்படி அவரை நோக்கி மன்றாடக்கடவோம்.

செபம்
மகா வணக்கத்துக்குரிய அர்ச், அந்தோனியாரே, பிரிவினைக்காருடைய அவிசுவாசத்தைப் போக்க, தேவ நற்கருணையில் சேசுநாதசுவாமி மெய்யாகவே எழுந்தருளி யிருக்கிறதை ஒரு மிருகத்தைக் கொண்டு அதை வணங்கச் செய்து ருசுப்படுத்தின நீர், உயிருள்ள விசுவாசத்தோடு அந்தத் திவ்விய நற்கருணையை நாங்கள் ஆராதிக்கக் கிருபை அடைந்தருளும். - ஆமென் .

நற்கிரியை: திவ்விய நற்கருணையைச் சந்திக்கிறது.
மனவல்லயச் செபம்: தேவ சிநேகத்தால் பற்றி எரிந்த அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செவ்வாய், 26 நவம்பர், 2019

ஆண்டவர் உங்களை அன்பு செய்கிறார்.

ஆண்டவர்  உங்களை அன்பு செய்கிறார்.

சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய  ஏக சுதனைத் தந்து, அவர்மேல் விசுவாசமாயிருக்கிற எவனும் கெட்டுப்     போகாமல் நித்திய ஜீவனை அடையும் படி அருளியிருக்கிறார். (1 அரு. 4:9;  உரோ. 5:8.)
உலகத்துக்கு ஆக்கினைத் தீர்வையிடும்படி சர்வேசுரன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், உலகம் அவராலே இரட்சிக்கப்படு வதற்காகவே அவரை அனுப்பினார்.

நாம் அனைவரும் நமது கெட்ட சிந்தனைகளாலும் செயல்களாலும் பாவம் செய்கிறோம். அந்த பாவங்கள் நம்மை ஆண்டவரிடம் இருந்து பிரித்து விடுகிறது.

 நம்முடைய பாவங்களுக்காக மரிக்க சர்வேசுரன் தமது ஒரே மகனை இந்த உலகத்திற்கு அனுப்பினார்.

சேசுநாதர் பரிசுத்த தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆள். அவர் பாவமில்லாத வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் நம்முடைய பாவங்களை கழுவ அவர் ;சிலுவை மரத்தில் மரித்தார். "நாம் இன்னும் பாவிகளாயிருக்கும்போதே, குறிக்கப்பட்ட காலத் தில் நமக்காகக் கிறீஸ்துநாதர் மரித்த தினாலே சர்வேசுரன் நமதுபேரில் வைத்திருக்கிற அன்பை விளங்கப் பண்ணுகிறார்." (Rom.5:8)
 சேசுநாதர் மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து, நாற்பதாம் நாள் பரலோகத்துக்கு ஆரோபணமாகி பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது  பக்கத்தில் இருக்கிறார். அவர்களே நமக்கு நித்திய ஜீவனை தருபவர்கள். 

 சேசுநாதர் திருவுளம் பற்றினத்தாவது :  "வழியும், சத்தியமும், ஜீவனும் நானே. என் வழியாய் அல்லாதே பிதாவினிடத்தில் சேருகிறவன் ஒருவனுமில்லை"( Jn . 14 : 6)

சேசுநாதர் சுவாமி நம்மை எல்லாம் அழைக்கிறார். நாம் அவரது அழைப்பை ஏற்று என்றும் அவரது பிள்ளைகளாக இருக்க வேண்டும்
  
யாரார் அவரை ஏற்றுக்கொண்டு, அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களானார்களோ, அவர்கள் தேவ புத்திரராகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார். (Jn . 1: 12)





சனி, 26 அக்டோபர், 2019

அர்ச் பிலோமினா ஒரு அற்புதமான புனிதர்


அர்ச். பிலோமினா 1961 இல் கத்தோலிக்க காலெண்டரிலிருந்து நீக்கப்பட்டார், அது
 அவருக்குபிடிக்கவில்லை. அவள் உண்மையிலேயே இருக்கிறாள் என்பதையும், 
அவளுடைய எந்த சக்தியையும் அவள் இழக்கவில்லை என்பதையும் நாம் தெரிந்து
 கொள்ள வேண்டும் என்று அவள் விரும்புகிறாள், 
அவள் ஒரு "அற்புதங்கள் செய்கிறவர்" என்று அறியப்பட்டாள்.
அர்ச். பத்தாம் பத்திநாதர் சபை பிலோமினாவின் சக்தியையும் பாதுகாப்பையும் அனுபவித்து 
வருகிறது, நாங்கள் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், அதனால்தான்
ஆகஸ்ட் 11 அன்று அவருக்காக ஒரு சிறப்பு விழாவை ஏற்பாடு செய்தோம். உண்மையில்,
அர்ச். பிலோமினா எங்கள் தேவாலயத்தை நிரப்பியதால் நன்றியுள்ளவர்களாக 
இருக்க எங்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன, 
அர்ச். பிலோமினா எங்கள் ஆலயத்தை எவ்வாறு மக்களால் நிரப்பினார்? எங்கள் 
தேவாலயத்தில் அவளிடம் ஜெபிக்க வருபவர்களுக்கு அல்லது எங்கள் ஊழியத்தின் மூலம்
அவளுக்கு  உதவி செய்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு கோரிக்கைகள் வழங்குவதில்.
அர்ச். பிலோமினா பெற்ற சமீபத்திய உதவிகளில் ஒன்று இங்கே:
ஆகஸ்ட் 7 புதன்கிழமை, சகோதரரும் (Br பிரான்சிஸ்) நானும் வெலிசரா மருத்துவமனையில்
ஒரு நோயாளியை ஆசீர்வதிக்கச் சென்றோம் (கடுமையான வழக்குகள்).
அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பாக்டீரியா வந்தது, அது அவரது உடலில்
மூன்று காயங்களை ஏற்படுத்தி நுரையீரலை பாதித்தது.

நாங்கள் அவரைச் சந்தித்தபோது அவருக்கு எப்படி சிகிச்சையளிக்க வேண்டும்
 என்று தெரியாமல் மருத்துவர்கள் இருந்தார்கள். அவர் ஏற்கனவே கடந்த இரண்டு 
மாதங்களாக மருத்துவமனையில் இருந்தார். அவரைச் சந்தித்தபோது, ​​பெரிய மற்றும்
ஆழமான காயங்களைக் கண்டோம். நுரையீரலில் இருந்து திரவத்தை சேகரிக்கும் விலா
எலும்புகளுக்கு இடையில் ஒரு குழாய் இருந்தது, 
நான் அவரை ஆசீர்வதித்து புனித பிலோமினாவின் எண்ணெயால் அபிஷேகம் செய்தேன்.
 
 சில நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை, நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்
 போவதாக என்னிடம் சொல்ல தொலைபேசி ஒலித்தது. அவர் எப்படி விரைவாக
 குணமடைய முடியும் என்பதை மருத்துவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அன்புள்ள புனித பிலோமினா ஒருபோதும் நம்மை ஆச்சரியப்படுத்துவதில்லை.
எல்லா புனிதர்களும் (செயிண்ட் ஜான் மேரி வியானி, பாட்ரே பியோ…)
 மற்றும் பாப்பரசர்கள்  (Pius VII, Leo XII, Gregory XVI, Pius IX, Leo XIII, St. PIus X, Benedict XV 
 மற்றும் Pius XI) அவளுக்கு மிகுந்த பக்தி. கொண்டிருந்தனர்.
 நாம் அவளை நம்பலாம் என்று எங்களுக்குத் தெரியும்!
 
Father Fabrice Loschi
FSSPX 
 
 
https://fsspx.asia/en/news-events/news/saint-philomena-incredible-saint-49986 


புதன், 9 அக்டோபர், 2019

St. Therese quotes in Tamil



நம் இயேசு எவ்வளவு நல்லவர்! 
எவ்வளவு அன்பும், கனிவும் உள்ளவர்! 
அவரது திரு இருதயத்தைத் தொடுவது
எவ்வளவு எளிதானது!








செவ்வாய், 24 செப்டம்பர், 2019

Are SSPX priests sedevacantists?


Society of St. Pius X Is Not Sedevacantist
 




















No they are not, because sedevacantists believe there is no valid pope. The Society of St. Pius X (SSPX) recognizes the validity of all legitimate popes, including Pope John II, under whom its founder, Archbishop Marcel Lefebvre,  and the four bishops he unlawfully ordained were excommunicated in 1988. In 2009, Pope Benedict XVI lifted those excommunications, though Archbishop Lefebvre had died in the interim. The SSPX has not yet been fully reconciled to the Catholic Church, including because of some doctrinal issues. For more on the SSPX, please see this Catholic Answers Magazine article.

திங்கள், 16 செப்டம்பர், 2019

Tamil Catholic Name for Boys (Baptismal name)









  St. Abel  - ஏபல்
 St. Abraham - ஆப்ரகாம், ஆபிரகாம்
  St. Adrian  - அட்ரியன்
St. Agilbert  - அகில்பெர்ட்
St. Aidan  - ஐடென்
Bl. Alan - ஆலன்
 St. Alban - ஆல்பன் , அல்பன்
St. Alexander - அலிக்ஸ், அலெக்ஸ், அலெக்சாண்டர்
St. Alfred the Great - அல்பிரேட்



ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

Download Tamil Catholic Audio Book

Download Tamil Catholic audio book called Porumai (பொறுமை ).
Its a very useful. Now a days we can't find any catholic books. So Here you can find all the catholic books.

https://drive.google.com/drive/folders/1-cgPWnH1AKaH7aW63r1HEEkhr1FcqZyl


வியாழன், 22 ஆகஸ்ட், 2019

சிலுவை அடையாளம்


நாம் வழக்கமாக ஜெபிக்க ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் சிலுவை அடையாளம் வரைகிறோம்.  

திருச்சபையில் நாம் எந்த ஒரு செயலை செய்யும் முன்னும், அல்லது முடிந்த போதும் சிலுவை அடையாளம் இல்லாமல் இருக்காது.

நாம் நம்முடைய விசுவாசத்தை வெளிக்காட்ட உள்ள பொதுவான வழி சிலுவை அடையாளம் தான்.

சிலுவை அடையாளம் நம்முடைய இரட்சணியத்தின் அடையாளம்.
எனவே நாம் அதனை மெதுவாகவும் மிகுந்த மரியாதையுடனும் வரைய வேண்டும்.

நாம் எப்பொழுது எல்லாம் சிலுவை அடையாளம் வரையலாம்?

  • நாம் காலையில் படுக்கையில் இருந்து எழும் போது 
  • நாம் இரவில் தூங்க செல்லும் முன் 
  • ஜெபிப்பதற்கு முன்னும் பின்னும் 
  • ஒரு வேலையை தொடங்குவற்கு முன்னும், வேலை முடிந்த பிறகும்.
  • எப்பொழுது எல்லாம் பாவ சோதனையில் விழுகிறோமோ அப்பொழுது எல்லாம் 
  • ஆபத்தில் இருக்கும் போது எல்லாம்.
  • பூசையின் பொது, ஆசிர்வாதத்தின் போது குருவானவர் நம்மை ஆசிர்வதிக்கும் போது நாம் சிலுவை அடையாளம் வரையவேண்டும் .
  • நாம் வாகனத்தில் பயணம் செய்யும் முன்பாக சிலுவை அடையாளம் வரைந்து நமது பயணத்தை தொடங்கலாம்.