மரித்த விசுவாசிகளுக்காக ஜெபிப்பதும், ஒறுத்தல் பரித் தியாகங்கள் செய்து ஒப்புக்கொடுப்பதும், அனைத்திற்கும் மேலாக திவ்ய பலிபூசை செய்விப்பதும் கிறீஸ்தவ வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறது. உத்தரிக்கிற ஆன்மாக்களின் மீதான பக்தி, விசுவாசிகளின் இருதயங்களில் இஸ்பிரீத்து சாந்துவானவரால் தூண்டப்படுகிற பிறர்சிநேக பக்தியாக இருக்கிறது.
உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களின் மீதான நம்முடைய பக்தி உத்தமமானதாக இருக்க வேண்டுமானால், அது ஒரு தெய்வ பய உணர்வாலும், தேவ நம்பிக்கை உணர்வாலும் உயிரூட்டப் பட வேண்டும். ஒரு புறத்தில் சர்வேசுரனுடைய கடுங்கோபமும் அவருடைய நீதியும் நமக்கு மிகுந்த நலம் பயக்கும் தேவ பயத்தை நம்மில் தூண்ட வேண்டும்; மறு புறத்தில், அவருடைய அளவற்ற இரக்கம் மட்டற்றதாகிய ஒரு தேவ நம்பிக்கையை நமக்குத் தர வேண்டும்.
சூரியன் ஒளியாயிருப்பதை விட எவ்வளவோ அதிகமாக சர்வேசுரன் தம்மிலே பரிசுத்த தனமாக இருக்கிறார். பாவத்தின் நிழல் கூட அவர் திருமுன் ஒரு கணமும் நிற்க முடியாது. " அக்கிர மத்தின் மீது தங்க முடியாதபடி உம் கண்கள் மாசற்றவையாக இருக்கின்றன" என்று தாவீது கூறுகிறார். கடவுள் பக்திச்சுவாலகர்களிடம் கூட குற்றம் கண்டுபிடிக்கிறார் என்றால், அற்ப மனிதர்களாகிய நாம் எந்த அளவுக்குக் கடவுளின் திருமுன் அஞ்சி நடுங்க வேண்டும்!
ஆகவே, சிருஷ்டிகளில் அக்கிரமம் தன்னை வெளிப்படுத்தும் போதெல்லாம், கடவுளின் அளவற்ற பரிசுத்ததனம் அதற்குப் பரிகாரத்தை எதிர்பார்க்கிறது. இந்தப் பரிகாரமானது, தேவ நீதியின் முழுக் கடுமையோடு செய்யப்படும் போது, அது பயங்கரமானதாக இருக்கிறது. இந்தக் காரணத்தால் தான் பரிசுத்த வேதாகமம், ''அவருடைய திருநாமம் பரிசுத்தமும் பயங்கரமும் உள்ளது" என்கிறது (அபாக். 1:13). அதாவது, சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்டதனம் அளவற்ற தாக இருப்பதால், அவருடைய நீதி பயங்கரமுள்ளதாக இருக்கிறது.
இந்த பயங்கரமுள்ள தேவ நீதி மிக அற்பமான பாவங்களையும் கூட மிக அகோரமான துன்பங்களைக் கொண்டு தண்டிக்கிறது. காரணம் என்னவெனில், நம் கண்களில் இலகுவான வையாகவும், இலேசானவையாகவும் தோன்றுகிற பாவங்கள், கடவுளின் அளவற்ற பரிசுத்த தனத்தின் முன்பாக மிகவும் அருவருப்புக்குரியவையாகத் தோன்றுகின்றன என்பதுதான். இதனால் தான் இந்த தெய்வீகப் பரிசுத்ததனத்தை நெருங்கிச் செல்லச் செல்ல, அர்ச்சியசிஷ்ட வர்கள் தெய்வீகப் பேரொளியில் தங்கள் அற்பப் பாவங்களையும் மிகக் கனமான பாவங்களாக உணர்ந்தார்கள். பெரும் புனிதர்களும் கூட, அதாவது, அற்பப் பாவங்களையும் கூட மிகுந்த விழிப்புணர்வோடு விலக்கி, மிகப் பரிசுத்தமாக வாழ்ந்த புனிதர்களும் கூட, தங்களுடைய ஒரு சில அற்பமான பாவங்களைக் கண்டு, உலகிலுள்ள சகல பாவிகளிலும் அதிக மோசமான பாவிகளாகத் தங்களைக் கருதினர். அந்த அற்பப் பாவங்களையும் அருவருத்து அவற்றை விலக்குவதற்காக ஒவ்வொரு கணமும் அவர்கள் போராடினார்கள்.
ஆம்! பாவம் அளவற்றதாகிய பரிசுத்ததனத்தை நோகச் செய்வதால், மிக அற்பமான பாவமும் கூட கடவுளுக்கு முன் மிகப் பிரமாண்டமானதாக ஆகிறது. ஆகவே அது மிக கடுமை யான பரிகாரத்தை எதிர்பார்க்கிறது. இதன் மூலம் உத்தரிக்கிற ஆன்மாக்கள் உட்பட்டிருக்கிற மகா கொடிய வேதனையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வேதனை நம்மை ஒரு பரிசுத்த பயத்தில் ஆழ்த்துகிறது.
உங்கள் மனமாகிய "அறைக்குள் " நுழைந்து, மரித்த உங்கள் தாய் தந்தை சகோதர சகோதரிகள் உறவினர் / நண்பர்கள் / பகைவர்களின் அழுகுரலைக் கூர்ந்து கவனியுங்கள். வாழும்போது, உங்களை எவ்வளவோ பிரியத்தோடு நேசித்தவர்கள் இப்போது படும் துன்பத்தை உணருங்கள். அவர்கள் மீது பரிதாபப்படுங்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே எந்த உதவியும் செய்ய முடியாது. நீங்கள்தான் உங்கள் ஜெபத்தாலும், நற்செயல்களாலும் அவர்களுக்கு உதவ முடியும்.
அதே சமயத்தில் இந்த நவம்பர் மாதம் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிற உத்தரிப்பின் வேதனையையும் சொல்லி நம்மை எச்சரிக்கிறது. மறுவுலகில் இந்த உத்தரிப்பு அகோரமானது தான் எனினும், இவ்வுலகில் எவ்வளவோ எளிதாக நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும் வழிமுறைகளைக் கடவுள் தம் திருச்சபையின் வழியாக நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறார்:
1. பாவங்களை, குறிப்பாக சாவான பாவங்களையும், முடிந்த வரை அற்பப் பாவங்களையும் விலக்க முயல வேண்டும். அடிக்கடி பாவசங்கீர்த்தனம், திவ்ய நன்மை என்னும் தேவத் திரவிய அனுமானங்களைப் பெறுவது பாவங்களை விலக்க நமக்குப் பெரும் உதவியாயிருக்கும்.
2. ஜெபம், குறிப்பாக ஜெபமாலை பக்தி, உத்தரிய பக்தி ஆகியவை உத்தரிக்கிற நெருப் புக்கு எதிராக நமக்குத் தரப்பட்டுள்ள ஆயுதங்களாகும்.
3. பாவப் பரிகாரம் திருச்சபை வழங்கும் ஞானப் பலன்களால் எளிதாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, "திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உமது அர்ச்சியசிஷ்ட சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்" என்ற மனவல்லய ஜெபம் ஒரு முறை பக்தியோடு சொல்லப்படும்போது அது பத்து வருடப் பலனைப் பெற்றுத் தருகிறது; அதாவது, பத்து வருடங்கள் கடும் தபசு செய்வதால் வரும் பலனை இந்தச் சிறு மன வல்லய ஜெபம் நமக்குத் தருகிறது. திவ்ய நன்மை உட்கொண்டபின் " மகா மதுரம் பொருந்திய நல்ல சேசுவே...'' என்ற ஜெபம் சொல்லி, சேசுவின் திருக்காயங்களுக்குத் தோத்திரமாகவும், பாப்பரசரின் கருத்துகளுக்காகவும் வேண்டிக்கொள் ளும்போது, நாம் ஒரு பரிபூரண பலனைப் பெற்றுக்கொள்கிறோம். அதாவது, நாம் தேவ இஷ்டப்பிரசாத நிலையிலிருந்து இதைச் செய்யும் போது, நம் பாவங்களுக்கான அநித்திய தண்டனையிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுகிறோம். ஆகவே, ஒன்றில் உத்தரிக்கிற நெருப்பின் மூலம் பாவப் பரிகாரம், அல்லது இவ்வுலகில் பரிகாரம் செய்வதன் மூலம் உத்தரிக்கிற ஸ்தலத்தை முழுமையாகத் தவிர்ப்பது, இரண்டும் நம் கையில் தான் உள்ளது.வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2 முதல் 9-ம் தேதி வரை எட்டு நாட்கள் தேவ இஷ்டப்பிர சாத (சாவான பாவமில்லாத) நிலையில் இருந்து, பூசை கண்டு, நன்மை வாங்கி, பாப்பரசரின் சுகிர்த கருத்துகளுக்காகவும், உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகவும் ஒப்புக்கொடுப்பதன் மூலம் ஒரு பரிபூரண பலனை நாம் பெற்று, அதை ஓர் ஆன்மாவுக்கு ஒப்புக்கொடுத்து, அந்த ஆன்மாவை உத்தரிக்கிற ஸ்தலத் திலிருந்து விடுவிக்கலாம். பாப்பரசர் இந்த நவம்பர் மாதம் முழுவதும் இந்தப் பரிபூரணப் பலனை வழங்கி யிருப்பதால், அதை இம்மாதம் முழுவதும் பயன்படுத்தி, உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு உதவலாம்.