Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 10 மார்ச், 2022

Devotion to St. Antony (day 23) in Tamil

 இருபத்துமூன்றாம் நாள்


பதுவா பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சிகள் 


சர்வேசுரன் அந்தோனியாருக்கு அளித்தருளின தேவ வரப்பிரசாதமும், ஆத்துமங்களை மனந்திருப்புகிற வல்லமையும் பதுவா பட்டணத்தில்தான் விசேஷமான விதமாய் விளங்கிற்று.


அப்பட்டணத்தில் 1228-ம் வருஷம் பெப்ரவரி மாதம் 9-ந் தேதி விபூதித் திருநாளன்று தபசுகாலப் பிரசங்கங்களை அந்தோனியார் ஆரம்பித்தார். பிரிவினைக்காரர் நிறைந்திருந்த அவ்விடத்தில் அவர்களை இரக்ஷிப்பதற்காக அந்தோனியார் வெகு ஆவலுடன் தேடித் தம்மாலான பிரயாசப்பட்டு அவர்களெல்லோரையும் நல்வழியிற் சேர்க்கவேண்டுமென்கிற கவலைகொண்டு பிரசங்கிக்கவே, முதற் பிரசங்கத்தைக் கேட்டபோதே அநேகர் அவர் போதனைகளையும் நாவன்மையையும் கண்டு அதிசயித்துத் திரள் திரளாய் அவருடைய பிரசங்கத்தைக் கேட்க வரத் தொடங்கினார்கள்.


அவர் பிரசங்கம் பண்ணும்போதோ அவ்வளவுபெரிய சனக்கும்பலில் யாதொரு முறைப்பாடோ, பரிகாசமான வார்த்தையோ, சிரிப்போ, அல்லது வேறெவ்விதமான சத்தமோ கேட்கப்படாமல் எல்லோரும் வெகு அமரிக்கையாயிருந்தார்கள். புத்தியில்லாத சிறு குழந்தைகள் முதலாய் அழுதாவது சந்தடி செய்தாவது அமரிக்கையை கெடுக்காமல் பெரியவர்களைப் போலவே இருந்தார்கள்.


ஆனதால் அநேகானேக ஆச்சரியமான பிரயோசன முண்டாகித் திரளான பேர் மனந்திரும்பினார்கள். பகையினால் நெடுங்காலம் பிரிந்திருந்தவர்கள் சமாதானத்தில் ஒன்றித்தார்கள். அறியாய வட்டி வாங்கினவர்கள் தாங்கள் அக்கிரமமாய்ச் சம்பாதித்த பொருட்களை உத்தரித்தார்கள். கடன் பட்டிருந்தவர்கள் தாங்கள் வாங்கின கடன்களைத் திரும்பக் கொடுத்துவிட்டார்கள். சிறையிலிருந்தவர்கள் அநேகர் விடுதலை செய்யப்பட்டார்கள். சகல வழக்குகளிலும் அந்தோனியாரை மத்தியஸ்தராகத் தெரிந்துகொண்டார்கள்..


அவருடைய பெயர் எவ்வளவு தூரம் பிரபல்வியமான தென்றால், அடுத்த விடங்களில் வழிப்பறிசெய்து கொள்ளையடித்து வந்த திருடர் முதலாய் அவருடைய பிரசங்கத்தை கேட்டுத் தங்களுடைய திருட்டுத் தொழிலை விட்டார்கள். ஒரு நாள் பன்னிரண்டு திருடர், சேர்ந்து கொள்ளையடித்தவர்கள், அர்ச்சியசிஷ்டவருடைய பிரசங்கத்தைக் கேட்க வந்தார்கள். அவர்களில் ஒருவன் வெகு காலத்துக்குப் பிறகு 1292-ம் ஆண்டில் தன்னுடைய முதிய வயதில் பிரான்சீஸ்கு சபைச் சந்நியாசியார் ஒருவரிடத்தில் சொன்னதாவது: *காட்டில் நாங்கள் பன்னிரண்டு பேர் வழிப்போக்கரைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அர்ச். அந்தோனியார் செய்துவந்த நன்மைகளையும் அற்புதங்களையும் பற்றிக் கேள்விப்பட்டு, ஒருநாள் வேஷமாற்றிக்கொண்டு அவர் செய்த பிரசங்கத்தைக் கேட்கப் போனோம். அவர் செய்த உருக்கமான பிரசங்கத்தைக் கேட்டு எங்களுடைய மனதில் திகிலும் வெட்கமுமுண்டாகி அவருடைய பிரசங்கம் முடிந்தபோதே எங்களுடைய அக்கிரமச் செயல்களுக்காக நாங்கள் மிகவும் மனஸ்தாபப் பட்டழுது ஒருவனுக்குப்பின் னொருவனாய் அவரிடத்தில் பாவசங்கீர்த்தனம் பண்ணினோம். திரும்பவும் நாங்கள்21ஆம் நான்


கொள்ளையடிக்காதபடிக்கும் எங்கள் அனியாயனை விட்டுவிடும் படிக்கும் அந்தோனியார் கட்டளையிட்டு அவர் கட்டலையிட்ட பிரகாரஞ் செய்கிறவர்கள் இரசூலினியம் அடைவார்களென்றும் கட்டளையிழி நடத்தவர்களோ நித்திய தரகாக்கினைக்கு உள்ளாவார்களென்றும் அறிவித்தார். சிவர் இட்டாக்கியமாய் அவருடைய கட்டளையை மீறி அவலான மரண மடைந்தார்கள். வேறுசிலர் சமாதானத்தில் மரித்தார்கள். எங்களுடைய பாவங்களுக்கு அபராதமாகப் பன்விரண்டுவிசை அப்போஸ்தலர்களுடைய கல்லறையைச் சந்திக்க வேண்டுமென்று அர்ச்சியகிஷ்டவர் கட்டளை பிட்டிருந்தார். இதோ இன்றையத்தினம் நான் பன்னிரண்டாம் முறை கல்லறையைச் சந்திக்கிறேன் என்று திரளான கண்ணீர் சொரிந்து சொன்னான்,


ஒருநாள் பிரசங்கம் கேட்டிருந்தவர்களில் ஒருவன் அந்தோனியாரிடம் வந்து அழுது புலம்பித் தேம்பித் தேம்பித் தன்பாவங்களைச் சொல்லும் போது, அவன் தன் பாவங்களையெல்லாம் ஒரு கடுதாசியில் எழுதச் சொல்லி, அதை அவர் வாசிக்க வாசிக்க, கடுதாசி வெற்றுக் கடுதாசி யானதைக் கண்டு அதிசயித்துத் தன் பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டனவென்று உறுதியாய் எண்ணினான்.


பாவசங்கீர்த்தனத்தை நாம் சரியாய்ச் செய்வதினால நமக்குண்டாகும் நன்மையை நாம் நன்றாய் யோசித்துக் கண்டுணாரக்கடவோம். ஐயோ. நமக்குள்ளாக எத்தனையோ பேர், தம்முடைய ஆத்துமத்தைச் சரியாய்ச் சோதிக்காமலும். மனஸ்தாபமில்லாமலும், பிரதிக்கினையில்லாமலும் சரியாய் வெளிப்படுத்தாமலும், கள்ளப் பாவசங்கீர்த்தனம் பண்ணித் தேவத் துரோகம் கட்டிக்கொள்ளுகிறோம். அதற்கு விரோதமாய் நல்ல பாவசங்கீர்த்தனத்தால் நமது ஆத்துமங்களைக் கழுவி சேசுநாதருடைய திரு இரத்தப் பலன்களை அடையப் பிரயாசைப்படக்கடவோம்


செபம்


எஸ்பாஞா தேசத்தின் ஆச்சரியத்துக்குரிய ஜெயவீரரே, அவிசுவாசிகளின் பயங்கரமே, இத்தாலியாவின் தீபமே, பதுவா பட்டணத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷமே, சர்வேசுரன் எங்களுக்குக் கொடுத்திருக்கும் சீவியகாலத்தை நாங்கள் உத்தம விதமாய்ப் பிரயோகித்துத் தபசின் நல்ல கனிகளை நாங்கள் பெறுவிக்கும் வரம் எங்களுக்கு அடைந்தருள தயை செய்யும். ஆமென்.


நற்கிரியை: நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது. 

மனவல்லயச் செபம்: பாவிகளுக்கு அடைக்கலமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக