இருபத்து நான்காம் நாள்
அர்ச். அந்தோனியாரும் எஸ்ஸெலினோ (Ezzelino) என்னும் கொடுங்கோலனும்
பதுவா பட்டணத்தார் அர்ச். அந்தோனியாருக்கு வெகு மரியாதையும் வணக்கமும் செய்தார்கள். ஆனால் தாழ்ச்சி நிறைந்த அந்தோனியார் அவர்கள் அப்படித் தம்மை மேன்மைப்படுத்துவதால் மனவருத்தப்படுவார். அந்த நகரத்து மேற்றிராணியாரும் உயர்ந்த குருப்பிரசாதிகளுமே அவருக்கு மரியாதை செய்வதிலும், அவருடைய பிரசங்கங்களைக் கவனத்தோடு கேட்பதிலும் மற்றச் சனங்களுக்கு மாதிரியாயிருந்தார்கள். சனங்கள் அவரை வாழ்த்திப் புகழுவார்கள். அச்சமயங்களில் எங்கேயாவது போய் ஒளிந்துகொள்ளத் தேடுவார். அப்படி ஒரு நாள் இவர் ஒளிந்துகொள்ளும்படியாய் சன சந்தடியில்லாத வழியாய்ப் போகும்போது, ஒரு பெண்பிள்ளை கடின வியாதியாயிருந்த தன் குழந்தையைக் கரங்களில் ஏந்திக் கொண்டு அவருக்கு எதிரிலோடித் தன் குழந்தையைச் சௌக்கியப்படுத்த வேண்டுமென்று அழுது மன்றாடினாள். தாழ்ச்சியினால் அர்ச்சியசிஷ்டவர் அவள் மன்றாட்டை செய்யாமலிருந்ததால், """""பாரிசவாய்வுள்ள தன் குழந்தையின்மேல் சிலுவை அடையாளமாவது அவருடைய கையால் வரையவேண்டுமென்று அவள் வெகு அழுகைப் பிரலாபத்தோடு கெஞ்சினாள், அந்தோனியார் தாழ்ச்சியினால் நடுங்கி வியாதிக்காரக் குழைந்தையின்மேல் சிலுவை அடையாளம் போடவே குழந்தை முழு சௌக்கிய மானதைக் கண்ட தாய் சர்வேசுரனுக்கும் அந்தோனியாருக்கும் நன்றியறிந்த தோத்திரங்கள் செலுத்தினாள்.
அவ்விடத்தில்தான் அநேகர் கேட்டுக் கொண்டதின் பேரில் 'ஞாயிற்றுக்கிழமைப் பிரசங்கங்கள்" என்று பெயர் கொண்ட பிரசங்கப் புத்தகமொன்று எழுதினார். அந்நகர் வாசிகளுடைய விசுவாசப் பற்றுதலையும் அவர்களுடைய நல்ல மனதையுங் கண்டு அவர்கள் மட்டில் அன்பு வைத்து அவர்களைத் தம்மாலான மட்டும் பாதுகாத்து வந்தார். 2-ம் பிரேதெரிக் (Frederic II) என்பவனுடைய மருமகன் எஸ்ஸெலினோ என்பவன் வெறோனா (Verona) பட்டணத்தையும் அடுத்த நகரங்களையுந் தன் கொடுங்கோன்மைக்கு உள்ளாக்கி, எங்கே பார்த்தாலும் கொள்ளையடித்து, ஆண் என்றும் பெண் என்றும், பிள்ளையென்றும் பாராமல் எல்லோரையும் பிடித்துச் சித்திரவதை செய்து சொல்லிடங்காத அநியாய அக்கிரமங்களை நடத்தி வந்தான். பதுவா நகர்வாசிகள் அந்தக் கொடிய வேதனைகளில் தாங்கள் அகப்படாதபடித் தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று அந்தோனியாரை மன்றாட, அர்ச்சியசிஷ்டவர், தனியே, செபங்களும் தபசுமே அவருக்குத் துணையாயிருக்க, வேறு ஆயுதமொன்று மன்னியில் வெறொனா பட்டனஞ்சென்று கொடுங்கோலனைப் பார்க்கவேண்டுமென்று கேட்டார் அவனுக்கு முன்பாகக் கொண்டுபோய் விடப்பட்டபோது, தைரியமாய் அவனை நோக்கி 'கொடிய நிஷ்டூரனே, கடவுளின் சத்துராதியே, வெறிகொண்ட நாயே, கிறிஸ்துவர்களுடைய மாசற்ற இரத்தத்தை எத்தனை காலம் சிந்தப்போகிறாய் கடவுள் உனக்கு நியமித்திருக்கும் ஆக்கினைகளுக்கு நீ தப்பித்துக் கொள்ளப் போவதில்லையென்று நீ நிச்சயமாய் அறிந்திரு. உன் அக்கிரமங்களுக்குத் தகுந்த ஆக்கினையாகத் தான் இருக்கும்" என்று சொன்னார்.
உடனே அவனைச் சுற்றிலுமிருந்த அவனுடைய சேவகர் அர்ச்சியசிஷ்டவரைத் துண்டு துண்டாய் வெட்ட அவன் தங்களுக்குக் கட்டளையிடுவான் என்று எண்ணி கத்திகளைத் தங்கள் கையிலேந்தித் தயாராய் நின்றார்கள். கொடுங்கோலன் பயந்து நடுங்கி அர்ச்சியசிஷ்டவர் பாதத்தில் விழுந்து தன் அக்கிரமங்களை ஏற்றுக்கொண்டு இனிமேல் அப்படிச் செய்வதில்லையென்று வார்த்தைப்பாடு கொடுத்தான் அந்தோனியார் பதுவா நகரத்திற்குத் திரும்பிப் போனார். எஸ்ஸெலினோ என்பவனோ தன்னைச் சுற்றிலுமிருந்தவர்கள் தன்னை இழிவாய் எண்ணுவதை அறிந்து அவர்களைப் பார்த்து: "நீங்கள் ஆச்சரியப்பட்டு என்பேரில் கோபங்கொண்டு என்னை நிந்திக்கவேண்டாம். ஏனெனில் அந்தோனியார் பேசினபோது அவருடைய முகத்தினின்று புறப்பட்ட பிரகாசம் என்னிடத்தில் எவ்வளவு பயங்கரம் உண்டாக்கினதென்றால் அப்போதே நரக பாதாளத்தில் தள்ளப்படுவதாக நினைத்தேன்' என்றான். பிறகு கொடுங்கோலன் சில வெகுமதிகளைத் தன் தூதர் மூலம் கொடுத்தனுப்பிச் சொன்னதாவது: அந்தோனியார். அவைகளை ஏற்றுக் கொண்டால், உடனே அவரைக் கொன்று விடுங்கள், ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவருக்குத் தீங்கு செய்யாமல் திரும்பி வந்துவிடுங்கள் என்று சொல்லி அனுப்பினான் அந்தோனியார் அவர்களைக் கண்ட மத்திரத்தில் அவர்களைக் கடித்து அனுப்பிவிட்டார். நடத்த சங்கதியை அறித்த கொடுங்கோலன் பெருமூச்செறிந்து *அந்தோனியார் சர்வேசுரனுடைய மனிதர் அவர் என்ளைப் பற்றி என்ன சொல்லுகிறதானாலும் சொல்லட்டும் என்றான். இக்காலத்திலும் வேத விரோதிகள் அநேகர், இத்தேசத்தில் நம்முடைய வேதத்தைப் பழித்து, இகழ்ந்து நம்மை நித்திக்கிறவர்கள் அநேகர் ஆயினும் நமது வேதத்தில் நாம் உறுதியாயிருந்து நமக்கு வரப்பட்ட நிந்தை அவமான நஷ்டங்களைத் தைரியய்ச் சகிக்கக்கடவோம்.
செபம்
மகா மகிமை பொருந்திய அர்ச் அந்தோனியாரே, உமது செயத்தினாலும் போதனையினாலும், அநேக ஆயிரம் பிரிவினைக்காரரை மனந்திருப்பினீரே, நாங்கள் முழுதும் மனம் திரும்பி சர்வேசுரனுக்கு எங்களை என்றென்றைக்கும் கையளிக்கும்படிக்குக் கிருயை செய்தருளும் ஆமென்.
நற்கிரியை - பதிதருக்காக வேண்டிக்கொள்ளுகிறது.
மனவல்லயச் செயம்: பதிதருடைய சம்மட்டியான அர்ச். அந்தோனியாரே. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக