Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 11 ஜனவரி, 2025

January 11 - Martyrdom of Pope St. Hyginus

ஜனவரி 11ம்‌ தேதி 

வேதசாட்சியான அர்ச்‌.ஹைஜீனுஸ்‌ பாப்‌பரசர்‌

 இவர்‌, ஏத்தென்ஸில்‌ பிறந்தார்‌; அர்ச்‌ டெலஸ்‌ஃபோரஸ்‌ பாப்பரசர்‌ வேதசாட்சியாகக்‌ கொல்லப்பட்ட பிறகு, கி.பி.139ம்‌ வருடம்‌, இவர்‌ பாப்பரசரானார்‌; நான்கு வருட காலம்‌ பாப்பரசராக ஆட்சிசெய்தார்‌. இச்சமயம்‌, திருச்சபை,சக்கரவர்த்தி அன்டோனினுஸ்‌ பயஸின்‌ ஆட்சிகாலத்தில்‌, ஒரு வித அமைதியானதும்‌ மட்டுமிதமானதுமான காலத்தை அனுபவித்தது.  இருப்பினும்‌,பலஅஞ்ஞான மாஜிஸ்டிரேட்களின்‌ அட்டூழியத்தினால்‌, அநேக கிறீஸ்துவர்கள்‌ கொடூரமாக வேதசாட்சிகளாக, இக்காலத்தில்‌ கொல்லப்‌ பட்டனர்‌. சக்கரவர்த்தி இத்தகைய கொடூர தண்டனைகளை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும்‌ அனுமதியளிக்காமலிருந்தார்‌. உரோமை சாம்ராஜ்ஜியத்தைச்‌ சேர்ந்த ஆசியா, ஏத்தென்ஸ்‌, தெசலோனிக்கா,லரிஸ்ஸேயா ஆகிய பிராந்தியங்களின்‌ கவர்‌னர்களிடமிருந்து, இத்தகைய கொடூர கொலைகளைப்‌ பற்றி அறியவந்தபோது, சக்கரவர்த்தி அன்டோனினுஸ்‌, கிறீஸ்துவர்களுக்கு ஆதரவாகவும்‌, இவ்வாறு கிறீஸ்துவர்களைக்‌ கொல்வதை அனுமதிக்க முடியாது என்றும்‌, அந்த கவர்னர்களுக்குக்‌ கடிதம்‌ எழுதினார்‌, என்று, அர்ச்‌.ஐஸ்டின்‌ குறிப்பிடுகிறார்‌.

 ஆனால்‌, சர்வேசுரனுடைய திருச்சபையின்‌ சமாதானத்தைச்‌ சீர்‌ குலைக்கும்படியாக, பசாசு வேறு வழிகளைக்‌ தேர்ந்தெடுத்தான்‌. ஆட்டுத்தோலைப் போர்த்திய ஓநாயாக, செர்டோ என்பவன்‌, சிரியாவிலிருந்து உரோமாபுரிக்கு கி.பி.140ம்‌ வருடம்‌ வந்தான்‌. இவன்‌ , இரு கடவுள்கள்‌ இருக்கின்றனர்‌ என்றும்‌, பழைய ஏற்பாட்டின்‌ கடவுள்‌, கண்டிப்பானவர்‌, என்றும்‌, புதிய ஏற்பாட்டின்‌ கடவுள்‌ நல்லவர்‌ என்றும்,‌ இரக்கமுள்ளவர்‌ என்றும்‌, பதிதத்‌ தப்பறைகளை பரப்பி வந்தான்‌. இதைப்‌ பின்பற்றிய மார்சியோன்‌ என்ற கூட்டமும்‌ ,பின்னர்‌ பெருகியது. 

வேத சத்தியங்களை விசுவசிக்கிற கிறீஸ்துவர்களிடையே இம்மாபெரும்‌ பதிதம்‌ என்கிற விஷத்தைப்‌ பரப்பிய இக்கொடியமிருகத்தை, அரக்கனை,பரிசுத்த மேய்ப்புக்‌ கண்காணிப்பின்‌ அலுவலில்‌ விழிப்பாயிருந்த பாப்பரசர்‌ கண்டுபிடித்து, திருச்சபை விலக்கம்‌ செய்தார்‌. 

பாப்பரசர்‌, ஹைஜீனுஸ்‌, கி.பி.142ம்‌ வருடம்‌ வேதசாட்சியாகக்‌ கொல்லப்பட்டார்‌.

 அர்ச்‌.ஹைஜீனுஸ்‌ பாப்பரசரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!


Martyrdom of Pope St. Hyginus
Feast Day: January 11

Pope St. Hyginus, born in Athens, ascended to the papacy in 139 AD, following the martyrdom of St. Telesphorus. His pontificate lasted four years and occurred during a relatively peaceful time under Emperor Antoninus Pius. Although the emperor opposed persecution of Christians, some still suffered at the hands of hostile pagans and local magistrates. Notably, Antoninus Pius intervened on behalf of Christians when unjust actions were brought to his attention by governors in regions such as Asia, Athens, Thessalonica, and Larissea. This protection is recorded in the writings of St. Justin Martyr.

Despite external peace, internal challenges arose for the Church. Cerdo, a heretic from Syria, arrived in Rome around 140 AD and propagated false doctrines. He claimed the existence of two gods: a harsh, just god of the Old Testament, and a merciful, benevolent god of the New Testament, who sent Christ to free humanity from the tyranny of the former. Cerdo also denied the true humanity and virgin birth of Christ, asserting that Christ’s human nature was merely an illusion.

Pope St. Hyginus, with unwavering vigilance, exposed these heresies and excommunicated Cerdo to safeguard the integrity of the faith.

Pope St. Hyginus suffered martyrdom in 142 AD, remaining a steadfast witness to Christ until the end.

"Blessed are they who are persecuted for righteousness’ sake: for theirs is the kingdom of heaven." (Matthew 5:10)


வெள்ளி, 10 ஜனவரி, 2025

January 10 - Pope St. Agatho: The Wonderworker of the Sixth Century

 ஜனவரி 10ம் தேதி 

அர்ச்‌. ஆகத்தோ பாப்பரசர்‌  

இவர்‌, சிசிலியில்‌, 6ம்‌ நூற்றாண்டின்‌ இறுதியில்‌ பிறந்தார்‌. பின்னர்‌, இத்தாலி, பாலர்மோவிலுள்ள அர்ச்‌.ஹெர்ம்ஸ்‌ மடத்தில்‌ ஆசீர்வாதப்பர்‌ சபைத்‌ துறவியானார்‌. தபசிலும்‌, நிர்வாகத் திறமையிலும்‌ சிறந்து விளங்கினார்‌. 

கி.பி.678ம்‌ வருடம்‌, இவர்‌ 100 வயதைக்‌ கடந்த நிலையில்‌, பாப்பரசரானார்‌; பாப்பரசர்‌, டோனுஸ்‌ இறந்தபிறகு, இவர்‌ பாப்பரசரானார்‌. 

இவர்‌ பாப்பரசரான சிறிது காலத்திலேயே, யார்க்‌ நகர அதிமேற்றிராணியாரான அர்ச்‌.விலிஃப்ரெட்‌ உரோமாபுரிக்கு வந்தார்‌; இவரை, கான்டர்பரியின்‌ தியோடோர்‌, அநீதியாக, பதவி விலகச்‌ செய்திருந்தார்‌. அர்ச்‌. ஆகத்தோ பாப்பரசர்‌, உடனடியாக மேற்றிறாணியார்களின்‌ கூட்டத்கை லாத்தரன் தேவாலயத்தில்‌ கூட்டினார்‌. யார்க் நகர மேற்றிராணியாரின்‌ விவகாரத்‌தை ஆய்ந்தறிந்த பிறகு, அர்ச்‌.விலிஃப்ரெட்டை, மறுபடியும்‌  யார்க்‌ நகர மேற்றிராணியார்‌ பதவியில்‌, பாப்பரசர்‌ அமர்த்தினார்‌. இவருடைய ஆட்சிகாலத்தில்‌, 6வது அகில உலக கிறீஸ்துவப்‌  பொது சங்கம்‌ 680-681 வருடங்களில்‌ நடைபெற்றது. ஆண்டவருக்கு ஒரு சுபாவம்‌ மட்டுமே உண்டு என்கிற பதிதத்‌ தப்பறையை பரப்பிவந்த மோனோதெலைட்‌ என்ற பதிதத்தப்பறையை இச்சங்கம்‌ அடக்கி ஓடுக்கியது; இந்க பதிதர்கள்‌, அந்நாள்‌ மட்‌டும்‌ வெகு காலமாக, திருச்சபையை இரு பிரிவுகளாகப்‌ பிரித்து வைத்திருந்தனர்‌.  

இந்த சங்கம்‌, பாப்பரசர்‌ டோனுஸ்‌ காலத்தில்‌ துவங்கியது.  4ம்‌ கான்ஸ்டன்டைன்‌ சக்கரவர்த்தி, திருச்சபையிலிருந்த இப்‌ பிரிவினையை நீக்கி சமாதானத்தை ஏற்படுத்த ஆசித்தார்‌. இக்‌காரியத்தின்‌ மட்டில்‌, அதாவது, பிரிவினைக்குக்‌ காரணமான இப்பதிதத்தப்பறையின்‌ மட்டில்‌ ஒரு கருத்தரங்கை, வேத பாரகர்களின்‌ உதவியுடன்‌ நிகழ்த்த வேண்டும்‌, என்று, சக்கரவர்த்தி பாப்பரசர்‌ டோனுஸூக்கு ஒரு கடிதம்‌ எழுதினார்‌; கடிதம்‌ பாப்பரசருக்கு வந்தபோது, பாப்பரசர்‌ டோனுஸ்,‌ இறந்து போனார்‌.  

அவருக்குப்‌ பிறகு வந்த அர்ச்‌.ஆகத்தோ பாப்பரசர்‌, சமாதானம்‌ என்கிற ஒலிவ கிளையுடன்‌ வந்த சக்கரவர்த்தி அளித்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல்‌, அதைப்‌ பயன்படுத்தினார்‌. பொதுவான கத்தோலிக்கப்‌ பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்‌ படியாக, மேற்கத்திய திருச்சபையின்‌ மேற்றிராணிமார்கள்‌ எல்லோரும்‌ சங்கத்தைக்‌ கூட்டும்படியாகக்‌ கட்டளையிட்டார்‌. அதே சமயம்‌, கிழக்கத்திய திருச்சபையின்‌ மேற்றிராணிமார்‌களைச்‌ சந்திக்கும்படியாக, ஒரு பெரிய குழுவை ஏற்படுத்தி, கான்ஸ்டான்டிநோபிளுக்கு அனுப்பி வைத்தார்‌. 

 இந்த சங்கக்தின்‌ தீர்மானத்திற்கான ஆணைகள்‌, பாப்பரசரின்‌ ஒப்புதலின்‌ கையொப்பத்திற்காக உரோமாபுரியை வந்து சேர்ந்தபோது, அர்ச்‌.ஆகத்தோ பாப்பரசர்‌ 681ம்‌ வருடம்‌, ஜனவரி 10ம்‌ தேதியன்று, இறந்தார்‌. இவர்‌, உரோமாபுரியிலுள்ள அர்ச்‌.  இராயப்பா்‌ பசிலிக்கா பேராலயத்தில்‌ அடக்கம்‌ செய்யப்‌ பட்டார்‌. இவர்‌, இனிமையாகப்‌ பேசும்‌ பண்புடையவராகவும்‌, தேவசிநேகத்திலும்‌ பிறர்சிநேகத்திலும்‌ உயர்ந்த நிலையை அடைந்தவராகவும்‌ தன்னிகரற்றவிதமாக சிறந்து விளங்கினார்‌. அநேக புதுமைகள்‌ நிகழ்த்தியதால்‌, புதுமை நிகழ்த்துபவர்‌, என்கிற பெயரைப்‌ பெற்றிருந்தார்‌. இங்கிலாந்திலும்‌, உரோமை ரீதியிலான திருவழிபாட்டுப்‌ பாடல்களை, மறுபடியும்‌, அறிமுகம்‌ செய்வதற்காக, இவர்‌, இசை நிபுணர்களை அனுப்பினார்‌. 

அர்ச்‌ ஆகத்தோவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!


Pope St. Agatho: The Wonderworker of the Sixth Century

Feast Day: January 10

Pope St. Agatho, born in Sicily at the close of the sixth century, was a Benedictine monk at St. Hermes in Palermo. Known for his holiness and wisdom, Agatho ascended the papal throne in 678 at an advanced age, succeeding Pope Donus. Despite being over 100 years old, his papacy was marked by significant events that left a lasting legacy in the Church.

Defender of Justice: The Case of St. Wilfred

Shortly after becoming Pope, Agatho was approached by St. Wilfred, Archbishop of York, who had been unjustly removed from his position by Theodore of Canterbury. Seeking justice, Wilfred turned to the Holy See. Pope Agatho convened a synod in the Lateran to investigate the matter, resulting in the restoration of St. Wilfred to his rightful position.

Champion of Orthodoxy: The Sixth Ecumenical Council

The most defining moment of Agatho’s pontificate was the Sixth Ecumenical Council (680–681), which addressed the Monothelite heresy—a theological dispute about Christ's wills that had divided the Eastern and Western Churches.

Emperor Constantine IV, eager to heal the schism, initiated correspondence with Rome, proposing a council. Although the emperor's letter arrived after Pope Donus had passed, Agatho embraced the opportunity for reconciliation. He organized regional councils across the West to affirm the Church's teaching and dispatched a delegation to the council in Constantinople.

The council successfully condemned Monothelitism, reaffirming the orthodox doctrine of Christ’s two wills—human and divine. Tragically, Agatho did not live to see the decrees officially approved in Rome, as he passed away on January 10, 681. He was buried in St. Peter’s Basilica.

The Wonderworker and Patron of Music

Pope St. Agatho was renowned for his kindness and charity, earning him the title Thaumaturgus or "Wonderworker" due to the many miracles attributed to him. He also played a significant role in preserving and promoting sacred music by sending skilled choir-masters to England to restore the Roman chant.

Legacy

Pope St. Agatho’s dedication to justice, unity, and tradition exemplifies the virtues of a true shepherd. His life and works continue to inspire the faithful, and he is honored on his feast day, January 10.


Let us remember this remarkable pontiff for his unwavering faith, profound wisdom, and enduring legacy.

January 9 - Feast of Saint Adrian of Canterbury

 ஜனவரி 9ம்‌ தேதி 

கான்டர்பரி மடாதிபதியான அர்ச்‌.ஆதிரியான்‌ 

 இவர்‌, வட ஆப்ரிக்காவில்‌, லிபியா சிரேனைக்காவில்‌ பிறந்தார்‌. சிறுவயதிலேயே, மடத்தில்‌ சேர்ந்து ஒரு துறவியாக தீர்‌மானித்தார்‌. அதன்படி, துறவியாகி, மடாதிபதியானார்‌; நேப்பிள்ஸ்‌ வளைகுடாவிலுள்ள நிசிடா என்ற தீவில்‌ ஹிரிடானும்‌ என்ற இடத்திலிருந்த மடத்தின்‌ மடாதிபதியானார்‌; இங்கிருந்த போது தான்‌, 2ம்‌ கான்ஸ்டன்ஸ்‌ சக்கரவர்த்திக்கும்‌, விடாலியன்‌ பாப்பரசருக்கும்‌, இவர்‌ அறிமுகமானார்‌. 

இவர்‌ பாப்பரசருடைய மிக முக்கிய ஆலோசகராயிருந்தார்‌.    மூன்று வருடங்களுக்குப்‌ பின்‌, கான்டா்பரியின்‌ அதிமேற்றிராணியார்‌ பதவி இவருக்கு அளிக்கப்பட்டது. பாப்பரசர்‌, இவருக்கு அளித்த இப்பதவியை வேண்டாமென்று மறுத்து விட்டார்‌. இவரை, இங்கிலாந்திற்கு சென்ற தியோடோருடன்‌, ஒரு நம்பிக்கைக்குரிய ஆலோசகராக, பாப்பரசர்‌, அனுப்பி வைத்தார்‌. இவர்‌ தியோடோருடன்‌, உரோமையை விட்டு, 668ம்‌ வருடம்‌ இங்கிலாந்தை நோக்கி பயணத்தைத்‌ துவக்கினர்‌; ஆனால்‌, இவரை மட்டும்‌, பிரான்ஸ்‌ நாட்டு மேயரான எப்ரோய்ன்‌, பிரான்சிலேயே தடுத்து நிறுத்தினான்‌. ஆங்கிலேயே அரசர்களுடன்‌,  கிழக்கத்திய சக்கரவர்த்தியான 2ம்‌ கான்ஸ்டன்ஸூடன்‌ இரகசிய ஒப்பந்தம்‌ செய்வதற்காகவே, இவர்‌ அனுப்பப்பட்டிருக்கிறார்‌, என்று பிரான்ஸ்‌ நாட்டு அரண்மனையின்‌ மேயர்‌, சந்தேகித்தான்‌. 2 வருடங்களுக்குப்‌ பிறகு, அவனுடைய சந்தேகம்‌ நீங்கியதால்‌, ஆதிரியானை இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பி வைத்தான்‌.  

இவர்‌, இங்கிலாந்தை அடைந்தவுடன்‌, கான்டா்பரி அதிமேற்றிராணியாரான தியோடோர்‌, இவரை, கான்டர்பரியிலிருந்த அர்ச்‌. இராயப்பர்‌ மடத்தின்‌ மடாதிபதியாக நியமித்தார்‌. இந்த மடம்‌ முதலில்‌ இங்கிலாந்தின்‌ அப்போஸ்தலரான அர்ச்‌. அகுஸ்தீனாரினால்‌ ஸ்தாபிக்கப்பட்டிருந்தது; பின்னர்‌, இது அர்ச்‌. ஆஸ்டின்‌ மடம்‌ என்று அழைக்கப்பட்டது.

 இவர்‌, கான்டர்பரியில்‌, துறவற மடங்களுக்கான பள்ளிக்‌  கூடத்தை ஸ்தாபித்தார்‌; இங்கு அநேக எதிர்கால மேற்றிராணி மார்களும்‌, மடாதிபதிகளும்‌ கல்வி கற்றனர்‌;கிரேக்கம்‌, இலத்தீன்‌, வேதாகமம்‌, வேத இயல்‌, உரோம சட்டம்‌, கணிதம்‌ ஆகியவை கற்பிக்கப்பட்டன. இக்கல்விக்கூடம்‌ திரளான மாணவர்களை தன்பால்‌ ஈர்த்து, செழித்தோங்கியது. அர்ச்‌. ஆதிரியான்‌, கி.பி.710ம்‌ வருடம்‌, 9ம்‌ தேதியன்று, இங்கிலாந்திலுள்ள கென்ட்‌ என்ற இடத்தில்‌ மரித்தார்‌. பல நூற்றாண்டுகளுக்குப்‌ பிறகு, இவருடைய பரிசுத்த சரீரம்‌ அழி யாமலிருப்பது கண்டறியப்பட்டது.

அர்ச்‌.ஆதிரியானே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 


January 9
Feast of Saint Adrian of Canterbury

Saint Adrian was born in Cyrenaica, an area in present-day Libya, and chose a monastic life early on. Over time, he became the Abbot of Hiridanum, a monastery situated on the Isle of Nisida in the Bay of Naples. His reputation for wisdom and leadership brought him into contact with Emperor Constans II and later Pope Vitalian.

The Pope, recognizing Adrian’s talents, invited him to serve as the Archbishop of Canterbury in 668. Adrian declined this honor but agreed to accompany Archbishop Theodore to England as an advisor.

Their journey was delayed when Adrian was detained in France by Ebroin, the Mayor of the Palace, who suspected him of being on a covert mission for Emperor Constans II. After two years, Adrian was exonerated and allowed to continue to England.

In England, Adrian was appointed Abbot of St. Peter’s Monastery in Canterbury, which had been established by Saint Augustine of Canterbury. Under his guidance, the monastery became a center of learning, offering education in theology, scripture, Latin, Greek, Roman law, and arithmetic to many future leaders of the Church.

Saint Adrian died on January 9, 710, in Canterbury. Centuries later, his body was reportedly found incorrupt, a sign of his extraordinary sanctity.

புதன், 8 ஜனவரி, 2025

January 8 - Feast of St. Apollinaris Claudius

 ஜனவரி8 ம் தேதி 

மேற்றிராணியாரும்‌,வேதபாரகருமான அர்ச்‌. அப்போலினாரிஸ்‌ கிளாடியுஸ்‌ 

இவர்‌, ஃபிரிஜியாவிலுள்ள ஹியரபோலிஸ்‌ நகரத்தின்‌ மேற்றிராணியாராயிருந்தார்‌. 2ம்‌ நூற்றாண்டின்‌ மிகச்‌ சிறந்த மேற்றிராணிமார்களுள்‌ ஒருவராகவும்‌, தன்னிகறற்ற மகா பரிசுத்த மேற்றிராணியாராகவும்‌ திகழ்ந்தார்‌. 

இவருடைய காலத்தில்‌ வாழ்ந்த பதிதர்களிடம்‌ தர்க்கம்‌ செய்து அவர்களுடைய தப்பறை எவ்வாறு அஞ்ஞானிகளுடைய மூட நம்பிக்கைகளிலிருந்து தோன்றியது என்பதைதெளிவுற நிரூபிப்பார்‌. அநேக பதிதர்களை சத்திய வேதத்திற்குத்‌ திரும்ப கூட்டி வருவார்‌, இவர்‌, யூதர்களுக்கு எதிராக இரண்டு புத்தகங்களையும்‌, அஞ்ஞானிகளுக்கு எதிராக ஐந்து புத்தகங்களையும்‌, சத்தியத்தைப்‌ பற்றி இரண்டு புத்தகங்களையும்‌ எழுதினார்‌. மேலும்‌, கத்தோலிக்க வேத விசுவாசத்தினுடைய சத்தியங்கள்‌ பற்றி ஆணித்தரமாக எழுதினார்‌.கி.பி.177ம்‌ வருடம்‌, உரோமைச்‌ சக்கரவர்த்தியான மார்குஸ்‌ அவுரேலியுஸுக்கு நேரடியாக துணிவுடன்‌கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்பது ஓவ்வொருவருடையவும்‌ கடமை என்பதைப்‌ பற்றி, அதன்‌ வேத விளக்கங்கள்‌ அடங்கியதும்‌, கத்தோலிக்க வேதத்திற்கு ஆதரவான வாதங்கள்‌ அடங்கியதுமான ஒரு நேர்த்தியான புத்தகத்தை எழுதி அனுப்பி வைத்தார்‌. இந்த நூல்‌, அக்காலத்தில்‌, அஞ்ஞானிகளால்‌, கத்தோலிக்க வேதத்திற்கு எதிராக சூழ்ச்சி நிறைந்த கட்டுக்கதைகளையும்‌, பொய்‌ வதந்திகளையும்‌, தப்பறையான விஷயங்களையும்‌ பரப்பி வந்ததைச்‌ சுட்டிக்‌ காட்டி, அவற்றிற்கெல்லாம்‌ சரியான விளக்கத்தை அளித்திருந்தது. 

மேலும்‌, அர்ச்‌ அப்போலினாரிஸ்‌, சக்கரவர்த்தி அவுரேலியுஸிடம்‌, அவருடைய படைகளில்‌ 12ம்‌ படையணியான இடி முழக்கத்தின்‌ படை என்கிற ஒரு படையணி இருப்பதைப்‌ பற்றியும்‌ ஜெர்மனியைச்‌ சேர்ந்த குவாடி என்ற காட்டுமிரான்டி இனத்தவர்கள்‌ தொடுத்த போரின்போது, இந்த இடிமுழக்கத்தின்‌ படையணியைச்‌ சேர்ந்த கத்தோலிக்க படை வீரர்கள்‌ முழங்காலிலிருந்து, ஆண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்து நாதர்‌ சுவாமியிடம்‌ மன்றாடியதினாலேயே, திடீரென்று மாபெரும்‌ இடி மழை பெய்தது! அதனால், காட்டுமிரான்டிகள்‌ கலைந்து ஓடியதாலேயே, அப்போரில்‌, அவருக்கு வெற்றி கிடைத்தது, என்பதையும்‌, ஞாபகப்படுத்தினார்‌. இதன்‌ காரணமாக சக்கரவர்த்தி, கிறீஸ்துவர்களை உபத்திரவப்படுத்துவதை, ஒரு சிறிது காலத்திற்கு மட்டுப்படுத்தினான்‌. 

கி.பி.180ம்‌ வருடம்‌, அர்ச்‌ அப்போலினாரிஸ்‌ பாக்கியமாய்‌ மரித்தார்‌.                 

 அர்ச்‌. அப்போலினாரிஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!


January 8
Feast of St. Apollinaris Claudius

St. Apollinaris was the Bishop of Hierapolis in Phrygia and one of the most distinguished prelates of the Catholic Church in the 2nd century.

Renowned for his debates against heretics, he demonstrated how their errors were often borrowed from pagan beliefs. He authored two books against the Jews, five against the pagans, and two on the topic of "Truth."

In 177 AD, St. Apollinaris courageously defended the Catholic faith by addressing an eloquent Apologia to the Roman Emperor Marcus Aurelius. This work refuted misconceptions and false stories spread by pagans about the Catholic faith. It also reminded the emperor of his experience with the "Thundering Legion," whose prayers had brought victory over the Quadi, a Germanic tribe.

St. Apollinaris died in 180 AD, leaving a legacy of faith and intellectual rigor.


The Thundering Legion

During an expedition against the Quadi in 174 AD, Emperor Marcus Aurelius and his army found themselves in a dire situation, suffering from extreme thirst and on the brink of defeat. Members of the Twelfth Legion, which included many Christians, prayed fervently to Jesus Christ for help.

Their prayers were answered with a sudden thunderstorm that provided the army with water and terrified their enemies, scattering them. With renewed strength, the Roman army achieved victory.

In recognition, the emperor gave the Twelfth Legion the title Fulminata ("Thundering Legion") and temporarily eased the persecution of Christians.

January 7 - Feast of St. Lucian of Antioch

ஜனவரி7ம்‌ தேதி 

வேதசாட்சியான‌ அர்ச்‌.அந்தியோக்கு லூசியான்‌ 

இவர்‌, கி.பி.240ம்‌ வருடம்‌ பிறந்தார்‌. சிரியாவில்‌ சமோசட்டா என்ற இடத்தில்‌ பிறந்தார்‌. 12 வயதில்‌, பெற்றோரை இழந்து, அநாதையானார்‌. தன்‌ உடைமைகளான ஆஸ்திகளை ஏழைகளுக்குக்‌ கொடுத்து விட்டு, ஞான வழிகாட்டியான அர்ச்‌. மக்காரியுஸின்‌, சீடராகும்படி எடெஸ்ஸா நகரத்திற்கு சென்றார்‌. இங்கு, அர்ச்‌.மக்காரியுஸிடம்‌, பரிசுத்த வேதாகமத்தைப்‌ பற்றி தெளிவுறக்‌ கற்றறிந்தார்‌; தியான ஜீவியத்தை ஜீவிப்பதற்கான வழிமுறையையும்‌ கற்றறிந்தார்‌. அஞ்ஞானிகள்‌ மற்றும்‌ யூதர்களிடையே, ஆர்வத்துடனும்‌, பக்திபற்றுதலுடனும்‌, கிறீஸ்துவ வேதத்தைப்‌ பரப்பி வந்தார்‌. இதன்‌ காரணமாக பின்னர்‌, இவருக்குக்‌ குருப்பட்டம்‌ அளிக்கப்பட்டது. அந்தியோக்கியாவில்‌, இவர்‌ ஒரு பள்ளிக்கூடம்‌ துவங்கினார்‌. அநேக மாணவர்கள்‌ சேர்ந்தனர்‌. பரிசுத்த வேதாகமத்தை எவ்வாறு புரிந்து கொள்ளவேண்டுமென்றும்‌, புண்ணியம்‌ நிறைந்த கிறீஸ்துவ உத்தம ஜீவியம்‌ எவ்வாறு ஜிவிப்பதென்றும்‌ கற்பித்தார்‌. ஆசிரியத்‌ தொழிலில்‌ முழுவதும்‌ ஈடுபட்டிருந்தார்‌. தியோக்ளேஷியனின்‌ கொடுங்கோல்‌ ஆட்சியின்‌ காலத்தில்‌ இவரைப் பிடித்துச்‌ சென்றனர்‌. சிறையில்‌ அடைக்கப்பட்டார்‌. நிக்கோமேதேயா விலுள்ள சிறைக்கு அனுப்பப்பட்டார்‌. அங்கே, 9 வருட காலமாக, இவர்‌ சக கிறீஸ்துவ கைதிகளை உற்சாகப்படுத்தி வந்தார்‌ . கிறீஸ்துவ வேத விசுவாசத்தில்‌ உறுதியாயிருக்கும்படியாகவும்‌, கொடூரமான உபத்திரவங் களைப்‌ பற்றியும்‌ மரணத்தைப்‌ பற்றியும்‌ பயப்படாமலிருக்கவும்‌ அவர்களுக்கு அறிவுறுத்தி, உற்சாகப்படுத்தி வந்தார்‌. 

இவர்‌ கொடுமைப்படுத்தப்பட்டார்‌; உரோமைய அஞ்ஞான விக்கிரகங்களுக்குப்‌ படைக்கப்பட்ட இறைச்சியை, இவர்‌ உண்ண மறுத்ததால்‌, உணவு இல்லாமல்‌ பசியால்‌ வாடும்படி விடப்பட்டார்‌; 312ம்‌ வருடம்‌, ஜனவரி 7ம்‌ தேதி இவர்‌ வேதசாட்சியாகக்‌ கொல்லப்பட்டார்‌; பித்தினியாவிலுள்ள டிரெப்பானும்‌ என்கிற இடத்தில்‌ இவருடைய பரிசுத்த சரீரம்‌ அடக்கம்‌ செய்யப்பட்டது. மகா கான்ஸ்டன்டைன்‌ பேரரசர்‌ துரிதமாக இந்த இடத்தை மாபெரும்‌ நகரமாக உருவாக்‌கினார்‌; அதற்கு ஹெலனோபோலிஸ்‌ என்ற தன்‌ தாயாரின்‌ பெயரை வைத்தார்‌. அர்ச்‌. கிறிசோஸ்தம்‌ அருளப்பரின்‌ எழுத்துக்களிலிருந்து, மிக குறுகிய காலத்திலேயே,  அர்ச்‌.லூசியானின்‌ திருநாள்‌ அந்தியோக்கியாவில்‌ ஜனவரி 7ம்‌ தேதி கொண்டாடப்பட்டது, என்பதை அறிகிறோம்‌.

 வேதசாட்சியான அர்ச்‌.லூசியானே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 


January 7
Feast of St. Lucian of Antioch

St. Lucian was born in 240 AD in Samosata, Syria (modern-day Samsat, Turkey). Orphaned at the age of 12, he distributed his inheritance to the poor and traveled to Edessa, where he studied Holy Scripture and the ascetic life under the guidance of the confessor Macarius.

Lucian's devotion and zeal for spreading Christianity among Jews and pagans led to his ordination. In Antioch, he established a school where he taught the proper understanding of Holy Scripture and virtuous living, attracting many students.

During the persecution under Emperor Diocletian, St. Lucian was arrested and imprisoned in Nicomedia. For nine years, he encouraged fellow Christians in prison to remain steadfast in their faith, despite the threat of torture and death.

He was eventually tortured and starved to death for refusing to eat meat sacrificed to Roman idols. St. Lucian was martyred on January 7, 312 AD. His body was buried in Drepanum, Bithynia, a city later named Helenopolis by Emperor Constantine the Great in honor of his mother, St. Helena.

The feast of St. Lucian was celebrated in Antioch immediately after his martyrdom, as recorded by St. John Chrysostom.

The Diocletian persecution was severe, sparing neither the young nor the old. Among its victims were two boys who refused to eat food sacrificed to Roman idols; they were martyred by being thrown into a boiling bath, where they gave their souls to God.

செவ்வாய், 7 ஜனவரி, 2025

Feast of the Holy Name of Jesus

 Feast of the Holy Name of Jesus

The feast of today may have a variable date: it takes the place of Sunday when the latter falls before Epiphany, as is the case this year. In the past, it was set on the second Sunday after Epiphany.

The Old Covenant surrounded the Name of God with deep awe: this Name was as formidable as it was holy, and the honor of uttering it did not belong to all the children of Israel.

But when the fullness of time came, when the mystery of love was about to be revealed, the Name of Jesus descended first from heaven, as a foretaste of the presence of the Lord who was to bear it. The Archangel said to Mary, "You will give Him the Name of Jesus"; for Jesus means Savior. How sweet that Name will be to the man who was lost!

If, at this divine Name, every knee must bend in heaven, on earth, and in hell, is there a heart that does not stir with love upon hearing it spoken? But let Saint Bernard tell us of the power and sweetness of this blessed Name. Here is how he expresses himself, on this subject, in his 15th Sermon on the Song of Songs:

“The Name of the Bridegroom is light, food, and medicine. It enlightens when it is proclaimed; it nourishes when one thinks of it privately; and when one calls upon it in tribulation, it brings comfort and anointing. Let us now consider each of these qualities.

“From where do you think this great and sudden light of the Faith has spread throughout the world, if not from the preaching of the Name of Jesus? Is it not by the light of this blessed Name that God has called us into His marvelous light? By which, being enlightened, and seeing in this light another light, we see Saint Paul rightly say, ‘You were once darkness, but now you are light in the Lord.’

“Now, the Name of Jesus is not only light; it is also food. Do you not find yourselves comforted every time you call this sweet Name to your heart? What in the world nourishes the spirit of him who thinks upon it as this does? What, in the same way, restores the weakened senses, gives energy to the virtues, makes good morals bloom, and sustains honest and chaste affections? All the food of the soul is dry, unless it is moistened by this oil; it is tasteless, unless it is seasoned with this salt.

“When you write to me, your account has no flavor for me unless I read the Name of Jesus in it. When you argue or confer with me, it has no interest for me unless I hear the Name of Jesus resounding in it. Jesus is honey to my mouth, melody to my ear, jubilation to my heart; and still a healing medicine.

“Is one of you sad? Let Jesus come into his heart; let Him pass from there to his mouth, and immediately, at the coming of this divine Name which is true light, every cloud will vanish, serenity will return. Does someone fall into sin; and even, in despair, rush toward death? If he invokes the Name of Jesus, will he not immediately begin to breathe again and live?

“Who ever remained in the hardness of heart, as so many others do, or in lethargy, rancor, or the languor of boredom? Who, by chance, having the fountain of tears dry, has not suddenly felt it flow more abundantly and more sweetly as soon as Jesus has been invoked?

“O my soul! you have an excellent antidote, hidden like in a vessel, in this Name of Jesus! Jesus is a salutary Name and a remedy that will never fail for any disease. Let it always be in your heart, always at your hand: so that all your feelings and actions may be directed toward Jesus.”

(Source: Dom Guéranger – FSSPX.News) Illustrations: Flickr / Fr Lawrence Lew, O.P. (CC BY-NC-ND 2.0)


Source: https://fsspx.be/fr/news/fete-du-saint-nom-jesus-28523

January 6 - The Epiphany

 ஜனவரி 6ம்‌ தேதி 

மூன்று இராஜாக்கள்‌ திருநாள்‌ 


கிழக்கத்திய நாடுகளின்‌ அரசர்களான கஸ்பார்‌, பல்த்தசார்‌, மெல்கியோர்‌ ஆகியோருக்கு நமதாண்டவரின்‌ திவ்ய பிறப்பு. ஒரு அதிசய நட்சகத்திரத்தினால்‌ அறிவிக்கப்பட்டதால்‌, இம்‌ மூன்று அரசர்களும்‌, தேவபாலனாகிய திவ்ய சேசுவை ஆராதிக்‌கும்படியாக, பெத்லகேமுக்கு வந்தார்கள்‌. இவ்விதமாக, யாக்‌கோபிலிருந்து ஒரு நட்சத்திரம்‌ உதிக்கும்‌, என்கிற தீர்க்கதரிசனமானது நிறைவேறியது. 

இம்மூன்று ஞானிகளான அரசர்கள்‌, யூதர்களிடமிருந்து பிறக்கவிருக்கிற இரட்சகரும்‌ அரசருமானவரைப்‌ பற்றியே, இந்த அதிசய நட்சத்திரம்‌ அறிவிக்கிறது, என்று கண்டுணர்ந்தனர்‌. ஆகவே தான்‌, இம்மூன்று அரசர்களும்‌, பொன்‌ தூபம்‌, மீறை ஆகியவற்றை பிறக்கவிருக்கிற இராஜாதி இராஜாவான தேவ பாலனுக்குக்‌ காணிக்கையாக ஓப்புக்கொடுப்பதற்குக்‌ கொண்டு வந்தனர்‌. 

பொன்‌: திவ்ய சேசுநாதார்‌ அரசர்க்கெல்லாம்‌ அரசர்‌ என்பதைக்‌ குறிக்கிறது. 

தூபம்‌ - திவ்ய சேசுநாதர்‌, சர்வேசுரனாயிருக்கிறார்‌ என்பதைக்‌ குறிக்கிறது. 

மீறை- திவ்ய சேசுநாதர்‌, மனுக்குலத்தை இரட்சிக்கும்படியாக  சிலுவையில்‌ மரிக்கப்போவதையும்‌, அவரை அடக்கம்‌ செய்‌ யப்போவதையும்‌ குறிக்கிறது. 

ஆண்டவர்‌ தம்மை முதலில்‌, இம்மூன்று இராஜாக்களுக்கு வெளிப்படுத்தினார்‌. 

இரண்டாம்‌ தடவையாக ஆண்டவர்‌, தம்மை வெளிப்படுத்தியதை, இந்த திருநாளுக்குப்‌ பின்‌ எட்டாவது நாளன்று, அதாவது ஜனவரி 13ம்‌ தேதியன்று, ஆண்டவருடைய ஞானஸ்நானத்தை, திருச்சபை கொண்டாடுகிறது. ஆண்டவருடைய ஞானஸ்நானத்தின்போது, தமது தேவத்துவத்தை, உலகத்திற்கு  வெளிப்படுத்தினார்‌: யோர்தான்‌ ஆற்றங்கரையில்‌, அர்ச்‌.ஸ்நாபக அருளப்பரிடம்‌ ஆண்டவர்‌ ஞானஸ்நானம்‌ பெற்றபோது, ஒருபுறாவின்‌ வடிவில்‌ திவ்ய இஸ்பரீத்துசாந்துவானவர்‌, ஆண்டவர்‌ மேல்‌ இறங்கவும்‌, நீரே! நமது நேச குமாரன்‌! உமது பேரில்‌ நாம்‌ பூண பிரியமாயிருக்கிறோம்‌! என்று பரலோகத்திலிருந்து ஒரு குரலொலி கேட்கப்பட்டபோது,  ஆண்டவர்‌ தமது தேவத்துவத்தை உலகத்திற்கு பகிரங்கமாக வெளிப்படுத்தினார்‌.  மூன்றாவது தடவை ஆண்டவர்‌ தம்மையே உலகத்திற்கு  வெளிப்படுத்தியதை, திருச்சபை, கானாவூர்‌ கலியாணத்தின்‌ போது, ஆண்டவர்‌ தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றி, முதல்‌ புதுமையை செய்த திருநாளில்‌ கொண்டாடுகிறது; இப்புதுமையைக்‌ கண்டதால்‌, ஆண்டவருடைய சீடர்கள்‌, அவருடைய தேவத்துவத்தை விசுவசித்தனர்‌.


திங்கள், 6 ஜனவரி, 2025

January 5 - ST. SIMEON STYLITES

 ஜனவரி 5ம்‌ தேதி 

 அர்ச். தூண்‌ சிமியோன்‌ 

சிமியோன்‌, சிரியா நாட்டின்‌ துறவி, தூண்‌ தபோதனர்‌ என்று அழைக்கப்பட்டார்‌; இவர்‌ பெரிய தூண்‌ சிமியோன்‌ என்று அழைக்கப்பட்டார்‌; ஏனெனில்‌, 6ம்‌ நூற்றாண்டில்‌ மற்றொரு தூண்‌ சிமியோன்‌ துறவியும்‌ ஜீவித்து வந்தார்‌.

 இவர்‌, ஒரு ஆட்டிடையரின்‌ மகனாகப்‌ பிறந்தார்‌; சிஸ்‌ என்ற நகரில்‌ இவர்‌ 390ம்‌ வருடம்‌ பிறந்தார்‌; இது உரோமைப்‌ பேரரசின்‌ சிலிசியா என்ற பிராந்தியத்திலுள்ள நகரம்‌; இப்போது, இந்நகரம்‌ துருக்கியைச்‌ சேர்ந்த கோசான்‌ என்ற நகரமாக இருக்கிறது. 

இவர்‌, 13வது வயதில்‌,நமதாண்டவருடைய மலைப்பிரசங்கங்களை வாசித்தபிறகு, கிறீஸ்துவ வேதத்தின்‌ மேல்‌ ஆர்வம்‌ கொள்ளத் துவக்கினார்‌; 16 வயதை அடைவதற்குள்‌, இவர்‌ ஒரு துறவற மடத்தில்‌ சேர்ந்தார்‌.

 இவர்‌ தபசை எவ்வளவு கடுமையாக அனுசரித்தாரென்றால்‌, அது மற்ற சக துறவியரால், அதிகப்‌ பட்சமான தபசாக உணரப்பட்டது; மற்ற துறவியருடன்‌ சேர்ந்து துறவற ஜீவியத்தை ஜீவிப்பதற்கு,இவர்‌ ஏற்புடையவர்‌ அல்ல என்று கருதினர்‌. எனவே, மடத்தை விட்டு வெளியேறும்படி இவரிடம்‌ கேட்டுக்கொண்டனர்‌.  எனவே,இவர்‌ ஒரு குடிசையில்‌, தன்னையே அடைத்துக்‌ கொண்டு,ஒன்றரை வருட காலம்‌ ஜிவித்தார்‌; அந்த தபசுகாலம்‌ முழுவதும்‌, இவர்‌ எதையும்‌ உண்ணாமலும்‌ குடியாமலும்‌ தபசு  செய்தார்‌. இவர்‌ அக்குடிசையை விட்டு வெளியேறிய போது,  அக்காலத்தில்‌ இவர்‌ செய்த அக்கடுமையான தபசே ஒரு புதுமையாகக்‌ கருதப்படுகிறது.  இவருடைய அர்ச்சிஷ்டதனத்தைக்‌ கேள்வியுற்று, இவரிடம்‌ ஞான ஆலோசனையைக்‌ கேட்பதற்கும்‌, இவருடைய ஜெப உதவியைக்‌ கேட்பதற்கும்‌ திரளான கூட்டம்‌ வந்தது; நோயாளிகள்‌ அநேகர்‌ புதுமையாகக்‌ குணமடைந்தனர்‌;இம்மக்கள்‌ கூட்டத்தினர்,‌ நாளுக்கு நாள்‌ அதிகரித்து வந்ததினால்‌, இவர்‌ தனது தபசு முயற்சிகளுக்கும்‌, ஜெபத்திற்கும்‌ நேரம்‌ பற்றாமல்‌ போனதினால்‌, சிரியாவின்‌ வடமேற்குப்‌ பகுதியிலுள்ள அலெப்போ என்ற இடத்தில்‌ அழிந்துபோயிருந்த இடிபாடுகளுக்கிடையே ஒரு கற்தூண்‌ இருப்பதைக்‌ கண்டார்‌;அதன்‌ மீது ஒரு சிறு மேடையை அமைத்து, அதிலேயே தன்‌ எஞ்சிய வாழ்‌ நாட்களைக்‌ கழிக்கத்‌ தீர்மானித்தார்‌. 

உலகத்தில்‌ எங்கு சென்றாலும்‌ தன்னைப்‌ பின்தொடர்ந்து  வந்த மக்கள்‌ கூட்டத்திடம்‌ தப்பிப்பதற்காகவே, உயரமான ஒரு தூணில்‌ ஜீவிக்கலானார்‌. வனாந்தரத்தில்‌, ஜீவித்த வயதான தபோதனர்கள்‌, இதைப்‌ பற்றிக்‌ கேள்விப்பட்டபோது, இவர்‌ ஞான தியான ஜீவியத்திற்காக, இவ்விதமாக ஒரு தூணில், ஜீவிப்‌பதைப்‌ பற்றி ஆச்சரியப்பட்டனர்‌; இவருடைய உச்சக்‌ கட்ட தபசும்‌ பரித்தியாகமும்‌ உண்மையிலேயே தாழ்ச்சி என்ற புண்ணியத்தின்‌ அஸ்திவாரத்தில்‌ ஏற்பட்டிருக்கின்றனவா? என்பதைப்‌ பரிசோதிக்கும்படியாக, கீழ்ப்படிதலின்‌ பேரில்‌, உடனே தூணிலிருந்து கீழே இறங்கி வரும்படி கூற வேண்டுமென்று இம்முதிய தபோதனர்கள்‌ தீர்மானித்தனர்‌; அவர்‌ அவ்வாறு கீழே உடனே வராவிட்டால்‌, அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட வேண்டும்‌ என்று முடிவு செய்தனர்‌; அதன்‌ படியே அவரை நோக்கி, கீழ்ப்படிதலின்‌ பேரில்‌ கீழே இறங்கி வரவேண்டும்‌ என்று உரத்தக்குரலில்‌ கூறினர்‌. இந்த பரிசோதனையின்போது, அர்ச்‌. சிமியோன்‌, முழுமையான கீழ்ப்படிதலையும்‌, தாழ்ச்சியையும்‌ காண்பித்தார்‌; முதிய துறவிகள்‌, இவரைத்‌ தூணிலேயே விட்டுச்‌ சென்றனர்‌.

 துவக்கத்தில்‌, இந்த தூண்‌ 9 அடிக்கு சிறிது அதிகமாக இருந்தது. ஆனால்‌, இவருக்குப்‌ பிறகு இதில்‌ வசித்த தூண்‌ தபோதனர்கள்‌, இதன்‌ உயரத்தைக்‌ கூட்டிக்‌ கொண்டே சென்றனர்‌; இறுதியாக, இதன்‌ உயரம்‌ 50 அடியைக்‌ தொட்டது. இதன்‌ மேலிருந்த கைப்பிடிச்சுவருடன்‌ கூடிய மேடை ஒரு சதுர மீட்டர்‌ பரப்பளவைக்‌ கொண்டிருந்தது. இவர்‌ தூணின்‌ உச்சியில்‌ சாகும்வரை ஜீவித்தார்‌; சூரியனுடைய உக்கிரமமான வெயிலுக்கும்‌, குளிருக்கும்‌, மழைக்கும்‌ காற்றுக்கும்‌, எவ்வித பாதுகாப்புமில்லாமல்‌ நேரடியாக தன்னையே முழுவதுமாகக்‌ கையளித்தபடி மாபெரும்‌ தபசு செய்தார்‌; இரவு பகல்‌ முழுவதும்‌, முழங்காலிலிருந்து ஆண்டவருடைய மகா பரிசுத்தத்‌ திருநாமத்தை ஸ்துதித்தபடி,அல்லது நின்றுகொண்டு, அல்லது உட்கார்ந்துகொண்டு தியானித்தபடி இருப்பார்‌. கீழே விழாமலிருப்பதற்காக, உச்சியில்‌ நான்குபக்கமும்‌ கம்பி கட்டப்பட்டிருந்தது; கீழே மக்களுடன்‌ தொடர்பு கொள்வதற்காகவும்‌, சீடர்களிடமிருந்து, உணவை வாங்குவதற்கும்‌, ஒரு ஏணி இருந்தது.அருகிலிருந்த கிராமத்தைச்‌ சேர்ந்த சிறுவர்கள்‌, தூணில்‌ ஏறி, அர்ச்சிஷ்டவருக்கு, சில ரொட்டிகளையும்‌, ஆட்டுப்பாலையும்‌ கொடுப்பார்கள்‌. 

இறுதியில்‌,இந்த தூண்‌ திருயாத்திரை ஸ்தலமாக மாறியது. இவரைச்‌ சந்திக்க வந்த மக்கள்‌, ஞான ஆலோசனையையும்‌, வியாதியிலிருந்து சுகத்தையும்‌, கொடுங்கோலர்களிடமிருந்து, எளியோர்கள்‌ விடுவிக்கப்படும்படியான பரிந்துரையையும்‌, ஜெபத்திலும்‌, வேத சத்தியத்திலும்‌, ஒளியையும்‌ பெறும்படியாகவே இவரிடம்‌ வந்தனர்‌.  அர்ச்‌. சிமியோன்‌, அநேக மனிதர்களை மனந்திருப்பினார்‌. கிழக்கத்திய உரோமைப்‌ பகுதியின்‌ சக்கரவர்த்தியான முதலாவது லியோவை, கிறீஸ்துநாதருடைய சுபாவத்தைப்‌ பற்றிய 5ம்‌ நூற்றாண்டின்‌ சர்ச்சையைத்‌ தீர்ப்பதில்‌, சால்சடொனியன்‌ குழுவினருக்கு ஆதரவாக இருக்கும்படிச்‌ செய்தார்‌.  இவர்‌, கி.பி.459ம்‌ வருடம்‌ பாக்கியமாய்‌ மரித்தார்‌. 

அர்ச்‌. தூண்‌ சிமியோனே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!   

January 4 - ST. GREGORY OF LANGRES

 ஜனவரி 4 தேதி 

அர்ச்‌. லாங்கிரஸ்‌ கிரகோரியார்‌ 

இவருடைய பேரனுடைய பேரனான அர்ச்‌. தூர்ஸ் நகர கிரகோரியாரின்‌ எழுத்துக்கள்‌ மூலம்‌, இவரைப்‌ பற்றி நாம்‌ அறிந்திருக்கிறோம்‌. இவர்‌, பிரான்ஸ்‌ நாட்டிலுள்ள அவுட்டன்‌ நகரத்தின்‌ நிர்வாகியும்‌ பிரபுவுமாயிருந்தார்‌. இவருடைய நிர்வாகத் திறமையும்‌ ஆட்சியும்‌, அந்நகர மக்களால்‌ பெரிதும்‌ மதிக்கப்பட்டும்‌ பாராட்டவும் பட்டது. 40 வருட காலம்‌ இந்நகரத்தை இவர்‌ ஆண்டபிறகு, இவருடைய மனைவி மரித்தாள்‌.உடனே இவர்‌ தனது பதவியை இராஜினாமா செய்தார்‌; உலகத்தைத்‌ துறந்து, துறவற மடத்தில்‌ சேர்ந்தார்‌. இவர்‌ தன்னிகரற்ற விதமாக புண்ணியத்தில்‌ சிறந்து விளங்கியதால்‌, லாங்கிரஸ்‌ நகரத்தினுடைய மேற்றிராணியாராக அபிஷேகம்‌ செய்யப்பட்டார்‌.  உலகத்தின் மத்தியில்‌, சகலத்தையும்‌ துறந்து ஏகாந்தத்தில்‌ ஜீவிக்கும்‌ தபோதனரைப்‌ போல்‌ ஜீவித்தார்‌.அதே சமயம்‌, போற்றுதற்குரிய விமரிசையுடனும்‌, ஆன்ம ஈடேற்ற ஆவலுடனும்‌, உத்தம ஞான மேய்ப்பராக அடுத்த 33 வருடங்கள்‌‌,தன்‌  ஞான மந்தையைப்‌ போஷிப்பதில்‌ அயராமல்‌ உழைத்தார்‌.  

மேலும்‌, தனது மகா ஆழ்ந்த தாழ்ச்சியாலும்‌, இடைவிடா ஜெபத்தி னாலும்‌, அசாதாரணமான தபசினாலும்‌, சுத்த போசனத்தினாலும்‌, இவர்‌ தனது ஞான மேய்ப்பின்‌ அலுவல்களை அர்ச்சித்துப்‌ பரிசுத்தப்படுத்தினார்‌. எண்ண முடியாத அஞ்‌ஞானிகளை இவர்‌ மனந்திருப்பினார்‌; ஒழுங்கீனமாக ஜீவித்த அநேக உலக நேசர்களான கிறீஸ்துவர்களையும்‌, இவர்‌ மனந்திருப்பினார்‌. கி.பி.539ம்‌ வருடத்‌ துவக்கத்தில்‌, மூன்று இராஜாக்‌கள்‌ திருநாளுக்கு சில நாட்களுக்குப் பிறகு, இவர்‌ பாக்கியமாய்‌ மரித்தார்‌.

  அர்ச்‌.பெனிக்னுஸ்‌ மீது இவர்‌ கொண்டிருந்த பக்தியின்‌ காரணமாக, அவருடைய கல்லறையின்‌ அருகிலேயே இவரும்‌, இவருடைய மகனும்‌ புண்ணியவாளருமான டெட்ரிகஸ்‌ என்‌பவரால்‌ நல்லடக்கம்‌ செய்யப் பட்டார்‌; டெட்ரிகஸ்‌, இவருக்குப்பின்‌, மேற்றிராணியா னார்‌. 

அர்ச்‌.லாங்கிரஸ்‌ கிரகோரியாரே! எங்களுக்காக வேண்டிக்‌ கொள்ளும்‌!  

January 6- Feast of Holy name of Jesus

 ஜனவரி 5ம்‌ தேதி 

நமதாண்டவரின்‌ மகா பரிசுத்தத்‌ திருநாமத்தின்‌ திருநாள்‌


 சேசு என்கிற நமதாண்டவரின்‌ மகா பரிசுத்தத்‌ திருநாமத்திற்கு இரட்சகர்‌ என்று அர்த்தம்‌. 

13ம்‌ இன்னசன்ட்‌ பாப்பரசரால்‌, 1721ம்‌ வருடம்‌, டிசம்பர்‌ 20ம்‌ தேதியன்று, இந்த திருநாள்‌ திருச்சபையின்‌ தேவ வழிபாட்டினுடைய காலண்டரில்‌ சேர்க்கப்பட்டது. அர்ச்‌. பத்தாம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, இந்த திருநாளை, ஜனவரி 2ம்‌ தேதியிலிருந்து 5ம்‌ தேதிக்குள்‌ வரும்‌ ஞாயிற்றுக்‌கிழமை அன்று, கொண்டாடவும்‌, ஞாயிற்றுக்கிழமை இந்த நாட்களுக்குள்‌ வராவிடில்‌, 2ம்‌ தேதியே கொண்டாடவும்‌ கட்டளையிட்டார்‌. ஆண்டவருடைய மகா பரிசுத்தத்‌ திருநாமம்‌, மகா வல்ல மையுள்ளது; ஏனெனில்‌, அது திவ்ய சுதனாகிய சர்வேசுரனுடைய மகா பரிசுத்தத்‌ திருநாமமாக இருக்கிறது. தம்முடைய மகா பரிசுத்தத்‌ திருநாமத்தினாலே நாம்‌ ஜெபிக்க வேண்டும்‌ என்று, நமதுஆண்டவர்தாமே நமக்களித்த கட்டளைக்குக்‌ கீழ்ப்‌படிந்து, நாம்‌ அந்த மகா பரிசுத்தத்‌ திரு நாமத்தை மகிமைப்‌ படுத்துகிறோம்‌. மேலும்‌, நம்‌ திவ்ய இரட்சகர்‌ மூலமாக நாம்‌ பெற்றுக்கொள்கிற சகல தேவ ஆசீர்வாதங்களையும்‌, ஆண்டவருடைய மகா பரிசுத்தத்‌ திருநாமம்‌, நமக்கு ஞாபகப்படுத்துகிறது.  

எனவே தான்‌, அர்ச்‌.சின்னப்பர்‌, “சேசுவின்‌ நாமத்திற்குப்‌ பரமண்டலத்தாரும்‌, பூமண்டலத்தாரும்‌, பாதாளத்தாருமாகிய சகலரும்‌ முழந்தாட்படியிடவேண்டும்!”‌ (பிலிப்‌ 2:10) என்று பிலிப்பியருக்கு எழுதிய நிரூபத்தில்‌ கூறுகின்றார்‌.  

ஆண்டவருடைய மகா பரிசுத்தத்‌ திருநாமத்தின்‌ மீதான பக்திமுயற்சியை அனுசரிப்பதன்‌ மூலம்‌, ஆண்டவருடைய திரு நாமத்தை வீணாக உச்சரிக்கிற பாவங்களுக்கும்‌, தேவதூஷணமாகிற பாவங்களுக்கும்‌ பரிகாரம்‌ செய்கிறோம்‌. இன்று, விசேஷமாக நாம்‌ நம்‌ நேச இரட்கருடைய மகா பரிசுத்தத்‌ திருநாமத்திற்கு எதிராக மனுக்குலத்தினர்‌, கட்டிக்கொள்கிற தேவ தூஷணப்‌ பாவங்களுக்கு நிந்தைப்‌ பரிகாரம்‌ செய்வதற்கான  சில விசேஷ பக்தி முயற்சிகளையும்‌, ஜெபங்களையும்‌, ஆண்டவரின்‌ மகா பரிசுத்தத்‌ திருநாமத்திற்குத்‌ தோத்திர மகிமையாக ஜெபிக்க வேண்டும்‌. 

ஆண்டவரின்‌ மகா பரிசுத்தத்‌ திருநாமத்தின்‌ பிரார்த்தனையை ஜெபித்தால்‌, ஏழு வருட பலனை திருச்சபை அளிக்கிறது. இம்மகா உன்னத பக்திமுயற்சியை அர்ச்‌. சியன்னா பெர்நர்தீன்‌ மற்றும்‌, அர்ச்‌.கபிஸ்திரான்‌ அருளப்பர்‌ ஆகியோர்‌ பரப்பியுள்ளனர்‌. இவர்கள்‌ இருவரும்‌ இத்தாலியின்‌ குழப்பம்‌ நிறைந்த நகரங்களுக்கு வேத போதக அலுவலில்‌ ஈடுபட்டபோது, மேலே படத்தில்‌ காண்பிக்கப்பட்டிருக்கிறபடி, நமதாண்டவரின்‌ மகா பரிசுத்தத்‌ திருநாமத்தின்‌ ஒரு அடையாள முத்திரை வரையப்பட்ட ஒரு மரப்பலகையை அவர்கள்‌ சென்ற இடங்களுக்கெல்லாம்‌ பக்திபற்றுதலுடன்‌ எடுத்துச்‌ சென்றனர்‌. சென்ற இடங்களிலெல்லாம்‌ ஆண்டவருடைய மகா பரிசுத்தத்‌ திருநாமத்தின்‌ இந்த அடையாள முத்திரையைக்‌ கொண்டு, அநேக வியாதியஸ்தர்களைக்‌ குணப்படுத்தினா்‌; அநேக புதுமைகளை நிகழ்த்தினர்‌. அர்ச்‌.சியன்னா பெர்னர்தீன்‌ பயன்படுத்திய இப்பரிசுத்த மரப்பலகை, உரோமாபுரியின்‌ ஆரா சேலியிலுள்ள தேவ மாதாவின்‌ தேவாலயத்தில்‌ ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

 “நீங்கள்‌ வியாதியினாலும்‌, துன்பத்தினாலும்‌, உபத்திரவப்படும்‌ போது, அல்லது பயத்தினால்‌ பீடிக்கப்பட்டிருக்கும்போது, அல்‌லது பசாசினாலோ, அல்லது மனிதர்களாலோ தாக்கப்படும்‌ போது, “சேசு” என்கிற ஆண்டவருடைய மகா பரிசுத்தத்‌ திரு நாமத்தை வணங்கி, ஆராதித்து, உச்சரித்து, வேண்டி மன்றாடுங்கள்‌”!- அர்ச்‌.லாரன்ஸ்‌ ஐஸ்டீனியன்‌ 

நாம்‌ இரட்சணியம்‌ அடையவேண்டியதற்கு வானத்தின்‌ கீழ்‌ (அவருடைய நாமமல்லாது) வேறே நாமம்‌ மனுஷருக்குக்‌ கொடுக்கப்படவில்லை!” (அப்‌.நட 4:12)     

ஆண்டவருடைய மகா பரிசுத்தத்‌ திருநாமம்‌,எப்போதும்‌ எல்லோராலும்‌, நித்திய காலக்திற்குமாக ஸ்துதிக்கப்‌ படக்கடவது!  



Feast  of  Holy name of Jesus 

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

January - 3 - ST. GENEVIEVE அர்ச்‌. ஜெனவியேவ்‌

 ஜனவரி 03ம்‌ தேதி  

அர்ச்‌. ஜெனவியேவ்‌ 

அர்ச்‌.ஜெனவியேவ்‌, கி.பி.422ம்‌ வருடம்‌ பாரீஸ்‌ நகருக்கருகிலுள்ள நான்டெரே என்ற இடத்தில்‌ பிறந்தாள்‌. இவள்‌ 7 வயதானபோது, அர்ச்‌. ஆக்சரே ஜெர்மேயின்‌, பெலாஜியுஸ்‌ பதிதத் தப்பறையை எதிர்த்து, அதை அழிக்கும்படியாக தனது தாய்‌ நாடான பிரான்சிலும்‌, இங்கிலாந்திலும்‌ பிரசங்கிக்கும்படியாக பல நகரங்களுக்குச்சென்ற போது, வழியில்‌, இவளுடைய கிராமத்திற்கும்‌ வந்தார்‌. அச்சமயம்‌, பரிசுத்த மேற்றிராணியாரான அர்ச்‌. ஜெர்மேயினைக்‌ காணும் படியாக, ஊர்‌ மக்கள்‌ கூடியிருந்தபோது, கூட்டத்தின்‌ நடுவில்‌, ஜெனவியேவ்‌ நின்றிருந்தாள்‌; அவளைத்‌ தனியாகக்‌ கூப்பிட்டு, அர்ச்‌.ஜெர்மேயின்‌, அவள்‌ எதிர்காலத்தில்‌ பெரிய அர்ச்சிஷ்டவளாவாள்‌, என்று தீர்க்கதரிசனமாகக்‌ கூறினார்‌; அவளுடைய விருப்பத்தின்படி, பரிசுத்த மேற்றிராணியார்‌, அவளை,சகல கூட்டத்தினருடனும்‌  தேவாலயத்திற்கு நடத்திச்‌ சென்று, அவளுடைய கன்னிமையை சர்வேசுரனுக்கு அர்ப்பணித்து ஒப்புக்கொடுத்தார்‌.  

கி.பி.451ம்‌ வருடம்‌, அட்டிலா என்ற கொள்ளையன்‌, கொள்ளைக்‌ கூட்டத்தினருடன்‌, பாரீஸ்‌ நகரத்திற்குள்‌ நுழைய திட்டமிட்டிருந்தான்‌. மக்கள்‌ அந்நகரத்தை விட்டு வெளியேற ஆயத்தமாயிருந்தபோது, “அவர்களுடைய நகரத்தைக் கொள்ளையிட வருகிற அட்டிலா என்பவன்‌ அந்நகரத்திற்கு தேவ சாபத்தின்‌ தண்டனையாக இருக்கிறான்!”‌ என்று கூறிய ஜெனவியேவ்‌, இத்தண்டனையிலிருந்து தப்பிக்கவும்‌, பரலோக உதவியை நிச்சயிக்கவும்‌, நகர மக்கள்‌ எல்லோரையும்‌, ஜெபத்திலும்‌, உபவாசத்திலும்‌ ஈடுபடும்படிச்‌ செய்தாள்‌. அர்ச்‌.ஜெனவியேவின்‌ தூண்‌டுதலின்படி பாரீஸ் நகர மக்கள்‌ செய்த ஜெப தப மன்றாட்டுகளுக்கு பரலோகம்‌ செவிசாய்த்தது! காட்டுமிராண்டியான அட்டிலாவின்‌ கொள்ளைக்‌ கூட்டம்‌, பாரீஸ்‌ நகரத்தைத்‌ தொடாமலே, ஆர்லியன்ஸ்‌ நகரத்திற்குச்‌ சென்றது.  

சில வருடங்களுக்குப்‌ பிறகு,மெரோவிக்‌ பாரீஸ்‌ நகரத்தை  ஆக்ரமித்தான்‌; இவனையும்‌, இவனுக்குப்‌ பின்‌ வந்த சில்டெ ரிக்‌,குளோவிஸ்‌ ஆகியவர்களிடம்‌, ஜெனவியேவ்‌ வேண்டி மன்றாடி,பாரீஸ்நகர மக்களை, அவர்கள் ‌இரக்கத்துடன்‌ நடத்தும்படிச்‌ செய்தாள்‌. 

அர்ச்‌.ஜெனவியேவின்‌ ஜீவியம்‌ முழுவதும்‌ மாபெரும்‌ தபசும்‌, இடைவிடாத ஜெபமும்‌ , தேவசிநேகத்திற்கடுத்த பிறர்சிநேக அலுவல்களும்‌ நிறைந்திருந்தது! கி.பி.512ம்‌ வருடம்‌, இவள்‌ பாக்கியமாய்‌ மரித்தாள்‌; முதலாம்‌ குளோவிஸ்‌ அரசனுடைய கல்லறைக்கு அருகில்‌ புகைக்கப்பட்டாள்‌.

 இவள்‌ பாரீஸ்‌ நகரத்தின்‌ பாதுகாவலியாக வணங்கப்படுகிறாள்‌;கண்‌ நோய்க்கும்‌, காய்ச்சலுக்கும்‌ இவளிடம்‌ வேண்டிக்‌ கொண்டால்‌, அந்த நோய்கள்‌ புதுமையாகக்‌ குணமடையும்‌. 

கி.பி.1129ம்‌ வருடம்‌, மால்‌டெஸ்‌ ஆர்டென்ட்ஸ்‌ என்ற ஒருகொடிய கொள்ளை நோய்‌ பாரீஸ்‌ நகரைத்‌ தாக்கியபோது, 14000 பேர்‌ மாண்டனர்‌; அர்ச்‌.ஜெனவியேவின்‌ பரிசுத்த அருளிக்கங்கள்‌, பக்தி பற்றுதலுடன்‌ பாரீஸ்நகரம்‌ முழுவதும்‌ சுற்றுப்‌ பிரகாரமாக எடுத்துச்‌ செல்லப்பட்டவுடன்‌, இந்த கொள்ளை நோய்‌, புதுமையாக நின்றுபோனது; நகரத்தை விட்டு அகன்று போனது! 

கி.பி. 1130ம்‌ வருடம்‌, 2ம்‌ இன்னசன்ட்‌ பாப்பரசர்‌, எதிர்‌ பாப்பரசரான அனக்ளீடஸுக்கு எதிராக பிரான்ஸ்‌ அரசனிடம்‌ உதவி கேட்கும்படியாக, பாரீஸ்‌ நகரத்திற்கு வந்தபோது, அர்ச்‌.ஜெனவியேவின்‌ இப்புதுமையைப்‌ பற்றி தானே நேரில்‌ ஆய்வுசெய்து பார்த்தார்‌. அதில்‌ பெரிதும்‌, திருப்தியடைந்தவராக, நவம்பர்‌ 26ம்‌ தேதி , அர்ச்‌.ஜெனவியேவின்‌ திருநாளைக்‌  கொண்டாடும்படி கட்டளையிட்டார்‌.  1793ம்‌ வருடம்‌, நாசகார பிரஞ்சுப்‌ புரட்‌சிக்காரர்கள்‌, அர்ச்‌.  ஜெனவியேவின்‌ பரிசுத்த அருளிக்கங்களை அழித்துப்போட்டனர்‌.  

அர்ச்‌.ஜெனவியேவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 

January 2 - ST. DEFENDENTE (அர்ச். டெஃபென்டன்ட்)

 ஜனவரி 02

வேதசாட்சியான அர்ச். டெஃபென்டன்ட்

இவர்  ஒரு துணிவுமிக்க உரோமானிய படை வீரர். இவர் தீபன் பிராந்தியத்தின் உரோமானிய இராணுவ சேனையைச் சேர்ந்த கிறீஸ்துவ வேதசாட்சிகளில் ஒருவராயிருந்தார்; அர்ச்.மோரிஸியோ என்கிற இன்னொரு வேதசாட்சி, இவர்களையெல்லாம் கொலைக்களத்திற்கு உற்சாகமூட்டி வழி நடத்திச் சென்றார். தீபன் உரோம இராணுவ சேனை , முதலில் எகிப்து தேசத்தில்  முகாமிட்டிருந்தது! அதன் படைவீரர்களின் அசாதாரண வீரத்துவம் வாய்ந்த துணிச்சலினால் மிகவும் பிரபலமடைந்திருந்தனர். மேலும், இந்த சேனையின் பெரும்பாண்மையான வீரர்கள் ஞானஸ்நானம் பெற்று,  கத்தோலிக்க வேதத்தை பிரமாணிக்கத்துடன் அனுசரித்து வந்தனர்.

இந்த தீபன் உரோம படைவீரர்களின் சேனை, எகிப்தின் தீபன் பிராந்தியத்திலிருந்து வெளியேறி, உரோமை சாம்ராஜ்ஜியத்தின்  வடக்கு எல்லைப் பகுதியில் சக்கரவர்த்திக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த  பகோடே என்கிற இனத்தவர்களை அடக்குவதில், சக்கரவர்த்தியான மாக்ஸ்மியனுக்கு (250-310)  உதவும்படியாக, பிரான்ஸ் நாட்டின் கால் பிராந்தியத்திற்கு வர வேண்டும் என்று, உரோமை தலைமையகத்திலிருந்து கட்டளை வந்தது.

மார்சேல்ஸ் பிரதேசத்தில் ஓடுகிற ரோன் நதியின் கரையில் உரோமை இராணுவ சேனை முகாமிட்டு, போருக்காகக் காத்திருந்தனர்; அங்கே அஞ்ஞான தேவதைகளுக்கு ஒரு ஆரவாரமான பலி செலுத்தப்பட்டது; ஆனால், இராணுவ சேனையிலுள்ள கத்தோலிக்க வீரர்கள் இந்த அஞ்ஞான சடங்கில் பங்கேற்கவில்லை! 

இதைக் கேள்விப்பட்டு சீற்றமடைந்த மாக்ஸ்மியன், கிறீஸ்துவ வீரர்களை அடக்க முற்பட்டான்;  அவர்களை சாட்டையால் அடிப்பிக்கச் செய்து, அஞ்ஞான தேவதையை வழிபட மறுத்த பத்து கிறீஸ்துவ வீரர்களுக்கு ஒரு வீரர் என்கிற விகிதத்தில் கிறீஸ்து வீரர்களை தலைவெட்டிக் கொன்று போட்டான்; இவ்விதமாக, அர்ச்.டெஃபென்டன்ட் கிபி 286ம் வருடம் தலைவெட்டிக் கொல்லப்பட்டார்; பாக்கியமான வேதசாட்சிய கிரீடத்தைப் பெற்றுக் கொண்டார்!

கிபி 380ம் வருடம் வந்.தியோடோர் ஆண்டகை, மார்டிக்னியின் மேற்றிராணியாராக இருந்தபோது, அர்ச்.டெஃபென்டென்ட் மற்றும் அவருடைய சக வேதசாட்சிகளின் கல்லறை கண்டெடுக்கப்பட்டது! இந்த அர்ச்சிஷ்டவர்களுக்கு தோத்திரமாக தியோடோர் ஆண்டகை , ஒரு தேவாலயத்தைக் கட்டினார்.

சிவாஸ்ஸோ, காசாலே மொன்ஃபெராட்டோ, மெஸ்ஸியா, நோவாரா, லோடி என்கிற வட இத்தாலிய நகரங்களுக்கு,  அர்ச்.டெஃபென்டென்ட் பாதுகாவலராயிருக்கிறார்! உரோமானிய படை வீரருடைய உடையில் சித்தரிக்கப்பட்டிருக்கிற இந்த அர்ச்சிஷ்டவரிடம் ஓநாய்கள் மற்றும் நெருப்பினால் ஏற்படும் ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி, வேண்டிக் கொள்வது, பலனுள்ள பக்திமுயற்சியாக அனுசரிக்கப்படுகிறது!

தீபன் இராணுவ சேனை (இது, அகாவுனும் வேதசாட்சிகளுடைய சேனை என்றும் அழைக்கப்படுகிறது!) முழு இராணுவ சேனையாக 6666 படை வீரர்களைக் கொண்ட மிகப் பெரிய சேனையாகத் திகழ்ந்தது!. இவர்கள் அனைவரும் கொண்டிருந்த தளராத கத்தோலிக்க வேத விசுவாசத்திற்காக, கிபி286ம் வருடம், செப்டம்பர் 22ம் தேதியன்று வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். இவர்களுடைய பரிசுத்த சரீரங்களின் அருளிக்கங்கள், ஸ்விட்சர்லாந்திலுள்ள செயிண்ட் மோரிஸ் ந வாலெய்ஸ் என்கிற மடத்தின் தேவாலயத்தில் பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன


வியாழன், 2 ஜனவரி, 2025

January 1 - FEAST OF CRCUMCISION OF OUR LORD


நமதாண்டவரின் விருத்த சேதனத்தின் திருநாள்

         விருத்த சேதனம் என்பது, பழைய ஏற்பாட்டின் நியாயப் பிரமாணத்தினுடைய ஒரு தேவ திரவிய அனுமானமாக இருந்தது! மேலும், அது, அபிரகாமின் சந்ததியார்களுக்கான முதல்  சட்ட பூர்வமான அனுசரிப்பு முறையாக சர்வேசுரன் தாமே நியமனம் செய்திருந்த விதிமுறையாகத் திகழ்ந்தது! இது, தேவ ஊழியத்தின் துவக்க நிலையினுடைய ஒரு தேவ திரவிய அனுமானமாகவும், சர்வேசுரன் தாமே வெளிப்படுத்தி, வழிநடத்துவதை விசுவசித்து, அதன்படி நடக்கவும் தேவையான ஒரு வாக்குத்தத்தமாகவும், அதற்கான உறுதிபாட்டின் செயல்பாடாகவும்  திகழ்ந்தது! நமதாண்டவரின் மரணம் வரைக்கும், விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்கிற பழைய ஏற்பாட்டின் நியாயப் பிரமாணம் செயல்பாட்டில் இருந்தது! சர்வேசுரனுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படியவும், சகல நீதியின் விதிமுறைகளை நிறைவேற்றவும், அதற்கு தன்னையே கையளிக்கவும் வேண்டும் என்று மனுக்குலத்திற்குக் கற்பிப்பதற்காகவே, இவ்விதமாக  பழைய ஏற்பாட்டின் நியாயப் பிரமாணத்தின் கீழ்  நமதாண்டவர்  பிறந்தார்! பழைய ஏற்பாட்டின் நியாயப் பிரமாணத்தின் கீழ் இருக்கிறவர்களை இரட்சிப்பதற்காகவும், அதன் அடிமைத்தனத்தினின்று அவர்களை விடுவிப்பதற்காகவும், முந்தின ஊழியக்கார நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களுக்கு  சுயாதீனத்தை அளிக்கும்படியாகவும், புதிய ஏற்பாட்டின் விருத்த சேதனமாக, கிறீஸ்துநாதர் தாமே ஸ்தாபித்த  ஞானஸ்நானத்தின் மூலம் அவர்களை சர்வேசுரனுடைய  சுவீகார புத்திரர்களாக மாற்றும்படியாகவும், பழைய ஏற்பாட்டின் நியாயப் பிரமாணத்தின் கீழ் நமதாண்டவருக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டது! (கலா 4:5)

மகா பரிசுத்த தேவபாலனுக்கு விருத்த சேதனம்  செய்யப்பட்ட போது, அவருக்கு “சேசு” என்கிற மகா பரிசுத்த நாமம் சூட்டப்பட்டது! “இரட்சகர்” என்கிற அர்த்தமுள்ள இம்மகா பரிசுத்த நாமத்தைப் பிறக்க விருக்கிற தேவபாலனுக்கு சூட்ட வேண்டும் என்று அர்ச்.கபிரியேல் சம்மனசானவர் தாமே,  மங்கள வார்த்தைத் திருநிகழ்வன்று, மகா பரிசுத்த தேவமாதாவிடம், அறிவித்திருந்தார். இம்மகா பரிசுத்த நாமம், எவ்வளவு உன்னதமான அழகு வாய்ந்ததாகவும், எவ்வளவு மகிமை மிக்கதாகவும் திகழ்கின்றதென்றால், மகா பரிசுத்த திவ்ய குழந்தை சேசு, இத்திருநாமத்திற்கான அர்த்தத்தை ஒவ்வொரு மணித்துளி நேரமும் நிறைவேற்றுவதற்கு ஆசித்துக் கொண்டிருக்கிறார்! மகா பரிசுத்த தேவ பாலன்,  தமது விருத்த சேதனத்தின் சடங்கு நிறைவேற்றப்பட்ட அந்த மணித்துளி நேரத்தில் கூட, நமக்காக தமது திவ்ய திரு இரத்தத்தைச் சிந்தியதன் மூலமாக, தம்மையே நம்முடைய திவ்ய இரட்சகராகக் காண்பித்தார்!  ஏனெனில், அவர் சிந்திய திவ்ய திரு இரத்தத்தில், ஒரு துளி இரத்தமே, பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து அகில உலகத்தையும் மீட்டு இரட்சிப்பதற்குப் போதுமானதாகவும், அதற்கு மேலானதாகவும் இருக்கிறது!

சிந்தனை: இப்புதிய வருடத்திற்கான சந்தர்ப்பத்தில்,இந்த திருநாளுக்கான மாபெரும் தேவ இரகசிய திருநிகழ்வு,  உலகத்திலும் மனித இருதயங்களிலும் தேவ ஊழியத்திற்கான பக்தி பற்றுதலும் தயாளமுள்ள தாராள குணமும் அதிகரிக்கும்படியாக  நிகழ்த்திய ஆச்சரியத்திற்குரியதும் உன்னதமானதுமான புதுப்பித்தலின் மூலமாக நாம் பயனடைவோமாக!  இந்த புதிய வருடம் பக்தி பற்றுதலுள்ளதும் ஞான ஜீவியத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறதுமான வருடமாக இருப்பதாக! இப்போது முடிவடைந்த முந்தின வருடத்தைப் போலவே, இந்த வருடமும் விரைவில் முடிந்து விடும்!  அது முடிவடைவதை நாம் காண்பதற்கு சர்வேசுரன் அனுமதிப்பாரானால்,  எவ்வளவு பாக்கிய சந்தோஷத்துடன், நாம் பரிசுத்தமான விதமாக இந்த வருட காலத்தை செலவிடுவோம்!


January 1 - FEAST OF CRCUMCISION OF OUR LORD


Life History of Saints in Tamil - Jan 1 வேதசாட்சியான அர்ச்‌. ஆல்மாகியுஸ்‌

ஜனவரி 1ம்‌ தேதி ‌ 

வேதசாட்சியான அர்ச்‌. ஆல்மாகியுஸ்‌       

கி.பி. 313ம்‌ வருடம்‌ மகா கான்ஸ்டன்டைன்‌ சட்டப்படி கிறீஸ்துவ வேதத்தை அங்கீகரித்து, ஏற்றுக் கொண்டு, அதற்கான அரச ஆணையை பிரகடனம்‌ செய்த பிறகு,காட்டு மிருகங்களிடம்‌, கிறீஸ்துவர்களை தள்ளிவிட்டு, உரோமையர்கள்‌ விளையாடும்‌ கொடூர விளையாட்டு நிறுத்தப்பட்டது. இருப்பினும்‌, ஆங்காங்கே, சில அஞ்ஞானிகளால்‌ ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில்‌, கிறீஸ்துவர்களை உபாதிக்கும்‌ அதே கொடூர விளையாட்டுகளைத் தொடர்ந்து‌ நடத்தி வந்தனர்! கிறீஸ்துவர்களை மிருகங்களுக்கு இரையாக போடும்‌ இக்கொடூர விளையாட்டு, மறுபடியும்‌ வேத விசுவாசத்தை இழந்தவனும்‌ வேத விரோதியுமான ஜூலியன்‌ ஆட்சிகாலத்தில்‌, அதிகார பூர்வமாக நாடெங்கிலும்‌ நடைபெறலாயிற்று. இச்சமயம்‌, கிளாடியேட்‌டர்ஸ்‌ என்ற யெரில்‌, தனிச்‌ சண்டையில்‌, கிறீஸ்துவர்கள்‌ இறக்கி விடப்பட்டனர்‌; மைதானத்தில்‌, கிறீஸ்துவர்கள்‌, இறக்கும்‌ வரை சண்டையிடும்‌ கொடூர விளையாட்டு நடைபெறலாயிற்று. 

அடுத்து வந்த ஹொனோரியுஸ்‌ சக்கரவர்த்தி, கி.பி.395ம்‌ வருடம்‌ முதல்‌, கி.பி.423ம்‌ வருடம்‌ வரை ஆட்சி செய்தார்‌; கத்தோலிக்கரான இவருடைய ஆட்‌சிகாலத்தில்‌, கிறீஸ்துவ வேதம்‌ நன்றாக வளர்ந்த போதிலும்‌, முந்தின அஞ்ஞானிகளுடைய ஆட்சியின்‌ காலத்திலிருந்த படியே, இரத்தவெறி கொண்ட கிளாடியேட்டர்ஸின்‌ கொடிய விளையாட்டு, இன்னும்‌ நிறுத்தப்படாமல்‌, விடப்பட்டிருந்தது. 

இருப்பினும்‌, கி.பி.404ம்‌ வருடம்‌, உரோமை சாம்ராஜ்ஜியத்தின்‌ கிழக்குப்‌ பகுதியிலிருந்து அர்ச்‌.ஆல்மாகியுஸ்‌,உரோமாபுரிக்கு வந்தார்‌. இவர்‌ ஒரு துறவி.ஐனவரி 1ம்‌ தேதியன்று, கிளாடியேட்டர்ஸின்‌ வீர விளையாட்டு எப்படி இருக்கிறது? என்று அந்த விளையாட்டு நடை பெற்ற ஸ்டேடியத்திற்கு, இவர்‌ சென்று பார்த்தார்‌. அங்கு, இரண்டு கிளாடியேட்டர்ஸ்‌ உயிர்போகும்‌ வரை இரத்தக்களரியாக சண்டை போட்டுக்கொண்டிருந்ததைப்‌ பார்த்து, மனமுருகியபடி, இவர்‌ மைதானத்திற்குள்‌ சென்று, இருவரையும்‌ பிரித்து விட முயற்சித்தார்‌; மேலும்‌, அவர்‌, “இன்று, நமதாண்டவர்‌ பிறந்த 8ம்‌ நாள்‌.விக்கரகங்களை வழிபடுவதை நிறுத்துங்கள்‌! அசுத்த பலிசெலுத்தும்‌ அஞ்ஞான சடங்குகளிலிருந்து விலகியிருங்கள்‌. கொலை செய்யக்கூடாது! என்று சர்வேசுரன்‌ நமக்குக்‌ கட்டளையிட்டிருக்கிறாரல்லவா? குறிப்பாக இந்தக்காட்டுமிரான்டி மக்கள்‌ கூட்டத்தினரை மகிழ்விப்பதற்காகக்‌ கொலை செய்வதையும்‌ சண்டைபோடுவதையும்‌ விலக்கி விடுங்கள்‌!” என்று கூக்குரலிட்டுக்‌ கூறினார்‌. 

இதைக்‌ கண்ட ஸ்டேடியத்தின்‌ பார்வையாளர்கூட்டம்‌, கோப வெறிகொண்டது. அவர்களுடைய விளையாட்டில்‌ தலையிடுகிற இத்‌துறவி யார்‌? என்று கூச்சலிட்டபடி, அவர்‌ அருகில்‌ வந்த மூர்க்கர்களுடைய கூட்டம்‌, அவர்‌ மீதுகற்களை எரிந்து, அவரைக் கொன்று போட்டது! மனிதன்‌ மனிதனைக்‌ கொல்லக்‌ கூடாது! என்று கூறி, மனித கொலையைத்‌ தடுக்க வந்த அர்ச்‌. ஆல்மாகியுஸ்‌, அந்த மூர்க்கர்களால்‌ இறுதியில்‌ கொல்லப்பட்டார்‌.  

இறுதியில்‌, அர்ச்‌.அல்மாகியுஸ்‌, அவரை உபாதித்துக்‌ கொன்றவர்கள்‌ மேலும்‌, அவர்களுடைய தீமையின்‌ மேலும்‌ வெற்றி கொண்டார்‌. ஏனெனில்‌, இந்த துயர செய்தியைப்‌ பற்றி அறிந்த ஹொனோரியுஸ்‌ சக்கரவர்த்தி, அர்ச்சிஷ்டவரின்‌ அறிவுரையை நாட்டு மக்கள்‌ ஏற்று ஜீவிக்க வேண்டும்!‌ என்று கட்டளையிட்டார்‌; அர்ச்‌. ஆல்மாகியுஸ்‌ ஒரு கிறீஸ்துவ வேதசாட்சி என்று சக்கரவர்த்தி கூறி, அர்ச்சிஷ்டவரை மகிமைப்படுத்தினார்‌; 404ம்‌ வருடம்‌, இனி ஒருபோதும்‌ கிளாடியேட்‌டர்ஸ்‌ சண்டை விளையாட்டு ‌ அனுமதிக்கப்படாது என்கிற நித்திய சட்டத்தையும்‌ பிரகடனம்‌ செய்தார்‌. 

வேதசாட்சியான அர்ச்‌.ஆல்மாகியுஸ்‌! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 



Life History of Saints in Tamil - Jan 1

சனி, 21 டிசம்பர், 2024

VLT - காலிமனை வரி கடிதம் எப்படி எழுதுவது ?

 






How to write a Covering letter for Vacant Land Tax – Letter (Municipal Corporation)

From

                ABC
                23, North Street,
                Palayamkottai,
                Tirunelveli – 627002

                Mobile No.: 9876543210

 

To

                Assistant Superindent,

                Palayamkottai Corporation,

                Palayamkottai

 

Subject: Regarding Vacant Land Tax

 

Respected Sir,

               

                I have owned a Land in Tirunelveli District, Palayamkottai Ward 5, Panayankulam Village, Ward BD, Block 001, TS No. 90/3 (Survey No.: 112/1). It’s a Patta land. I have decide to build house in my land. Kindly do necessary things to provide me the Vacant Land Tax.

Thank you.

 

Your faithfully

Date:

Place: