பிதாப்பிதாவான அர்ச்.சூசையப்பரின் வல்லமை:
சங்.பினே சுவாமியார்
மாபெரும் பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பர், எவ்வளவு வல்லமை மிகுந்தவராக விளங்குகின்றார் என்றால், பரலோக பூலோக இராஜ்ஜியங்களை ஆண்டு நடத்தி வரும் இரண்டு மாபெரும் வல்லமை மிக்க அதிபதிகளான திவ்யசேசுநாதர், தேவ மாதா ஆகிய இருவருக்கும், கட்டளையிடுபவராக, திகழ்வதைக் காணும் யாவரும், அவர் கொண் டிருக்கும் மகத்துவமிக்க வல்லமையைக் குறித்து, வியந்து போற்றி, ஆர்ப்பரிக்கின்றனர். கல்வியில் தேர்ச்சி பெற்றமாபெரும் வேதசாஸ்திரியான ஜெர்சன் என்பவர், அர்ச்.சூசையப் பரைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவரை, செல்வாக்கு மிகுந்த பாதுகாவலர் என்றும், சர்வ வல்லமை மிக்க பாதுகாவலர், என்றும் அழைக்கிறார். ஏனெனில், அர்ச். சூசையப்பர், உலக இரட்சகரான திவ்ய சேசுநாதரின் வளர்ப்பு தந்தையாகவும், பாதுகாவலராகவும், தேவமாதா வின் பத்தாவாகவும், பாதுகாவலராகவும் திகழ்கின்றார். இத்தகைய உன்னதமான உயர்ந்த பட்டங்களுடையவருக்கு, எது தான் மறுக்கப்படும்? மோட்சத்திலும், உலகத்திலும், அவர் ஆசிக்கும் சகல காரியங்களும் ஆச்சரியமிக்க விதமாக நிறைவேற்றப்படுகின்றனவே!
திவ்ய சேசுநாதர், தமது பரலோக பிதாவிடம் எதையெல்லாம் கேட்பாரோ, அவற் றையெல்லாம், பரலோக பிதா அளிப்பதற்கு திருவுளம் கொள்கிறார். தமது திவ்ய குமாரனி டம், தேவமாதா எதையெல்லாம் கேட்பார்களோ, அதையெல்லாம், அவர், அளிப்பதற்கு திருவுளம் கொள்கிறார்; அர்ச். சூசையப்பர், தம் பரிசுத்த பத்தினியிடம் எதையெல்லாம் கேட் பாரோ, அவற்றையெல்லாம், தருவதற்கு, தேவமாதா மனதாயிருப்பார்கள். ஆகவே, திவ்ய சேசுநாதர் மூலமாக, தேவமாதா, சர்வ வல்லமையுடன் திகழ்கின்றார்கள் என்கிற உண்மை யைப் பின்பற்றி, தேவமாதா மூலமாக, அர்ச்.சூசையப்பர், சர்வ வல்லமையுள்ளவர் என்று பிரகடனம் செய்யலாம் அல்லவா! ஓ! அர்ச்.சூசையப்பரை பரிந்துரையாளராகக் கொண் டிருப்பது, நமக்கு எவ்வளவு நன்மை பயக்கக்கூடியதாயிருக்கும்! ஏனெனில், இந்த உலகத் தில், எதுவும், அவருக்குக் கூடாத காரியம் அல்ல!
மற்ற எல்லா அர்ச்சிஷ்டவர்களும், திவ்ய சேசுநாதரிடமும், தேவமாதாவிடமும், தங் கள் விண்ணப்பங்களுக்காக மன்றாடி ஜெபிக்கின்றனர். ஆனால், அர்ச்.சூசையப்பரோ, தம் திவ்ய குமாரனிடமும், தம் திவ்ய பத்தினியான தேவமாதாவிடமும், தம் விண்ணப்பங்களை, கட்டளைகளாகக் கொடுக்கின்றார். மாபெரும் பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பர் கொண்டி ருக்கும் மகத்துவமிக்க இவ்வல்லமையைப் பற்றி, துணிவுடன் ஓரிஜன் என்பவர் வெளிப் படுத்திய இந்தக் கருத்தையே, திருச்சபையின் அநேக வேதபாரகர்கள், ஏற்றுக்கொண்டிருக் கின்றனர். அர்ச். சூசையப்பர், தந்தையைப்போல் பேசுகின்றார்; ஒரு தந்தை, தன் மகனிடம், தன்விருப்பத்தை, நிறைவேற்றும்படி வேண்டுவதற்குப் பதிலாக, கட்டளையாகக் கொடுக்கி றார். சகல அர்ச்சிஷ்டவர்களும், தங்களுடைய மணி மகுடங்களை, திவ்ய செம்மறியானவ ரின் திருப்பாதத்தண்டையில் சமர்ப்பித்து,தங்கள் மன்றாட்டுகளுக்காக ஜெபித்து வேண்டிக் கொள்கின்றனர். பிதாப்பிதாவாகிய அர்ச்.சூசையப்பர், தம் திவ்ய குமாரனிடம், கட்டளையி டுவதுபோல், மிகுந்த தாழ்ச்சியுடன் மன்றாடுகின்றார்; அல்லது, பரிசுத்தத் திருக்குடும்பத்தின் தலைவரின் தாழ்ச்சி எவ்வளவுக்கு அதிகமாயிருந்ததென்றால், அவரால், தமது திவ்ய குமார னும் ஆண்டவருமான திவ்ய சேசுநாதருக்குக் கட்டளையிடுவதற்குக் கூடாமற்போயிற்று; அதே சமயம், நமதாண்டவரின் அளவில்லா நன்மைத்தனம் எவ்வளவிற்கு, பரிசுத்த நீதிமா னாக திகழ்ந்த தம் தந்தையான அர்ச். சூசையப்பரின் தாழ்ச்சியினால், கவர்ந்திழுக்கப்பட்ட தென்றால், அவருடைய ஜெபங்கள் எல்லாவற்றையும், தந்தைக்குரிய கட்டளைகளாக ஏற்க வும்,அந்தவிண்ணப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி, அருளவும் திருவுளம் கொள் ளும்படி, நமதாண்டவரைத் தூண்டியது.
ஓ! மிகுந்த பாக்கியம் பெற்ற பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பரே! தேவரீர் மாத்தி ரமே, சகல மனிதருக்குள், விசேஷ உறவுகளுடன் விளங்குகின்றீர்! எவ்வளவோ அந்நியோந் நிய நெருக்கத்துடன், அகில உலகத்தின் இரட்சகருடனும், அவருடைய மகா பரிசுத்த மாதா வுடனும், தேவரீர் ஐக்கியமாக ஜீவிக்கின்றீர்! அர்ச்.கன்னிமாமரியின் திவ்ய குமாரன், உமக்குக் கீழ்ப்படிகின்றார்; உமது திவ்ய பத்தினியாகிய சர்வேசுரனுடைய பரிசுத்த தேவ மாதா,உமக்குக் கீழ்ப்படியவும், உமக்குப் பணிவிடைபுரிந்து, மகிமை செலுத்தவும் கூடிய உன்னதமான வகையில் தேவரீர் பாக்கியம் பெற்றிருக்கிறீர்! அவர்கள் இருவருக்கும் கட்மையை, தேவரீர் பெற்றிருக்கிறீர். அப்படியென்றால், உம்மிடம் அடைக்கல மாக, உதவிகேட்டு வரும் அடியோர்களின் விண்ணப்பங்களை, திவ்ய சேசுநாதரிடமும், தேவமாதாவிடமும், தேவரீர் தயங்காமல், ஜெபித்துப் பெற்றுத் தருவிரல்லவோ!
புதுமை
பல வருடங்களுக்கு முன் ஒரு மேற்கத்திய நாட்டிலிருந்த ஒரு கன்னியர் மடத்தில் மேரி ஆஞ்சலா என்ற நவ கன்னியாஸ்திரி இருந்தாள்.ஒரு நாள், அவளுடைய தாய் வியாதியில் விழுந்து, மரணப் படுக்கையில் பேரா பத்தில் இருப்பதாக, அவளுக்குச் செய்தி வந்தது.தாய்க்கு உதவி செய்யக் கூடிய மக்கள் யாரும் இல்லை. இந்த இளம் துறவி மட்டும், தன் தாய்க்கு நோயில் உதவி புரியக் கூடியவள். இவள் இன்னும், சபையில் வார்த்தைப்பாடு கொடுக்கவில்லை. வீட்டுக்குப்போய்,தாய்க்குத் துணையாயிருப்பது தன் கடமை என்று, மேரி ஆஞ்சலா நினைத்தாள். மடத்தின் சிரேஷ்ட தாயாரிடம் தன் எண்ணத்தைத் தெரிவித்தாள். வீட்டிற்குப்போக வேண்டும் என்ற அந்த நினைவு, சர்வேசுரனிடமிருந்தே வந்ததா, என்பதை,மடத்தின் தாயாரே தீர்மானிக்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டாள். சிரேஷ்ட தாயார், மேரியிடம், நீ நவசந்நியாசத்தில் சும்மா இரு. உன் தாய்க்கு உதவி செய்ய வேண்டும் என்று உனக்கு ஆசையாயிருக்கிறது. அந்த ஆசையை உன் தாயின் உடல் நலனுக்காக, சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடு, நம் சபைப் பாதுகாவலரான அர்ச். சூசையப்பரிடம் போ. அவரிடம் உன் இந்த அவசர தேவைக்காக, உருக்கமாக வேண்டிக்கொள். அவர் நிச்சயம் உனக்கு இந்த காரியத்தில் தவறாமல் உதவி செய்து, உன் தாயாரைப் பாதுகாப்பார், என்று அறிவுரை கூறினார்கள்.
அவளும், உடனே, அர்ச்.சூசையப்பரின் அடைக்கலத்தை நாடிச் சென்றாள். தன்
இருதயத்தை உலுக்கி வாட்டிக்கொண்டிருந்த, அந்த சஞ்சலத்தைப் பற்றிக் கூறி, தன் மன் றாட்டை, அர்ச்.சூசையப்பரின் திருப்பாதத்தண்டையில் சமர்ப்பித்தாள். பின், அன்று இரவு நிம்மதியாக நித்திரைக்குச் சென்றாள்.நித்திரையின்போது, ஒரு கனவு கண்டாள். அவள், தன் தாயின் வீட்டிற்குப் போயிருந்தாள்.இரவு நேரம், நோயாளிக்குக் காவலாயிருந்த பெண் தூங்கி விட்டாள். நோயாளிக்கோ, வேலைக்காரப் பெண்ணை எழுப்புவதற்குப்பலமில்லை. அசையவும் சக்தியற்றுக் கிடந்தாள். தாய் இறக்கும் தறுவாயிலிருந்தாள், என்று கண்டதும், மேரி ஆஞ்சலா மிகவும் பயந்தாள்; தாய்க்கு ஏதாவது செய் என்று யாரோ தன்னை தூண்டுவ தை, உணர்ந்த மேரி ஆஞ்சலா,உடனே,அருகிலிருந்த மருந்து புட்டியை எடுத்தாள்; அதன் மேல் எழுதியிருந்ததை வாசித்து அறிந்து கொண்டவளாக, அதன்படி, சிறிது மருந்தை, நோயாளியின் வாயில் ஊற்றி, விழுங்கும்படி செய்தாள். உடனே, நோயாளி, நோயின் உக் கிரமம் நீங்கியவளாக, அமைதியான நித்திரையில் ஆழ்ந்தாள்.உயிராபத்தும் நீங்கியதாக, மகள் உணர்ந்தாள்.
மறுநாட்காலையில், ஏதாவது கடிதம் வரும் என்று ஆஞ்சலா ஆவலுடன் காத்திருந் தாள். அதற்கு அடுத்த நாள் கடிதம் வந்தது. அம்மாவின் உயிருக்கு ஆபத்தில்லை, சுகமாகி வருகிறார்கள், என்று எழுதியிருந்தது. உடனே, ஆஞ்சலா, அர்ச். சூசையப்பர் பீடத்திற்குச் சென்று,முழு இருதயத்துடன் நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்தினாள்.சில மாதங்களுக்குப் பின்,தாய் தன் மகளைப்பார்ப்பதற்காக, மடத்திற்கு வந்தாள்.தான் கண்ட கனவை, அம்மா விடமும், வேறு யாரிடமும், ஆஞ்சலா அது வரை தெரிவிக்காமலிருந்தாள். தாயுடன் பேசிக் கொண்டிருந்தபோது, தாய், அவளைப் பார்த்து, மேரி, நீ
தான் என் உயிரைக் காப்பாற்றிய வள், என்று தெரிவித்தாள். மகள் ஆச்சரியத்துடன், தாயை நோக்கினாள். அப்போது, தாய், நடந்ததை பின்வரும் விவரத்துடன் தெரிவித்தாள்:
நான் வியாதியாயிருக்கையில், இத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து குடிக்க வேண்டும்; அதைச் சரியாய்க் குடித்து வந்தால் தான், நான் உயிர் பிழைப்பேன் என்று மருத் துவர் கூறியிருந்தார்.இரவில் குறிக்கப்பட்ட நேரங்களில் மருந்து ஊற்றிக் கொடுப்பதற்காக, நியமிக்கப்பட்டிருந்த வேலைக்காரி, அன்று ஒருநாள் இரவில் தூங்கி விட்டாள்; என்னால், அசையமுடியவில்லை. வேலைக்காரியை கூப்பிட்டு எழுப்பவும் பலமில்லை. அந்த நேரத்தில் மருந்து, குடிக்காவிடில் இறந்துபோய்விடுவேன் என்று எனக்குத் தெரியும். அப்போது, நீ உன் கன்னியாஸ்திரி உடையில், அறைக்குள் நுழைந்து, நேரே மேஜைக்குப் போய், மருந் தை ஊற்றி எனக்குக் கொடுத்தாய். உடனே, எனக்கு சுகமான நித்திரை வந்தது.நீண்ட நேரத் திற்குப் பிறகு, புதிய பலத்துடன் நித்திரையிலிருந்து எழுந்தேன். அதிலிருந்து, எனக்குச் சுகம் உண்டாகி, கடைசியில், பூரண சுகம் பெற்றேன்.
தாயும் மகளும் ஒருவரையொருவர் உற்றுப் பார்த்தனர் .ஆஞ்சலா, தன் தாயிடம், அப்போது நடந்த சகல நிகழ்வுகள் பற்றி, ஒன்று விடாமல் விவரித்தாள்.தாயின் வியாதியைக் குணப்படுத்தியது, அர்ச்.சூசையப்பர் தான், என்று, மேரி ஆஞ்சலா, தன் தாயிடம் அறிவித் தாள். இருவருமாக அர்ச்.சூசையப்பரின் பீடத்தின் முன் சென்று நன்றியறிந்த ஜெபத்தை ஜெபித்தனர். புதுமையாக, நவகன்னியாஸ்திரிக்கும், அவள் தாய்க்கும் உதவி செய்த அர்ச். சூசையப்பருக்கு நன்றியறிதலாக, அவருடைய புதிய சுரூபம் ஒன்று, மடத்தின் கன்னியர் கள், அடிக்கடி சந்தித்து ஜெபிப்பதற்கு வசதியான ஒரு இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. + Deo
Gratias!
புதுமை
ஒரு காலத்தில், அர்ச். நோர்பேர்த்தூஸ் உண்டுபண்ணின சபையிலே ஹெர்மன் என்ற ஓர் சந்நியாசியார் இருந்தார். அவர் சிறுவயது முதல், பிதாப் பிதாவாகிய அர்ச். சூசையப்பர் பேரிலே மிகவும் பக்தியாயிருந்ததுமல்லாமல், அர்ச். நோர்பேர்த்தூஸுடைய சபையிலே சேர்ந்தவுடன்,அர்ச். சூசையப்பரின் சுகிர்த புண்ணியங்களைக்கண்டுபாவிப்பதில் இடைவிடா மல் ஈடுபட்டிருந்தார். அர்ச்.சூசையப்பர் மீது கொண்டிருந்த இந்த விசேஷ பக்தி முயற்சியி னாலும், அர்ச்.சூசையப்பரின் விசேஷ உதவியினாலும், அவர் விரைவிலேயே உத்தம சந்நியா சியானார். மற்ற சந்நியாசிகளுக்கு, துறவறத்தின் தெளிந்த கண்ணாடி போல் உத்தம நன் மாதிரிகையுடன் ஜீவித்தார்.
பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பர், தமது பரிசுத்த பத்தினியாகிய தேவமாதா வை
சிநேகித்து வணங்கி வந்தாரென்கிறதினாலே, இந்த உத்தம சந்நியாசி, அது ரைக் கண்டுபாவிக்க வேண்டுமென்று, தேவமாதாவை அத்தியந்த பக்திபற்றுதலுடன் சேவித் துக் கொண்டிருந்தார். அந்த பக்திக்குப் பலனாக, மோட்ச இராக்கினியோவெனில், அவரைத் தமது பிரியமுள்ள மகனைப்போல், பேணித் தாபரித்து,அவருக்கு எவ்வித உபகாரசகாயங்களை யும் கட்டளையிடுவார்கள். ஒரு சமயம், தேவமாதா, தம்மை ஒரு காட்சியில் காண்பித்து, சந்நியாசியிடம், நீ, நம்முடைய பரிசுத்த பத்தாவாகிய சூசையப்பர் மீது பக்தியாயிருக்கிற தே, நமக்கு சந்தோஷம். இனிமேல், இந்த பக்திக்குக் குறிப்பாக உன் பெயருடன், சூசை என்கிற நாமத்தையும் சேர்த்துக்கொள், என்று கூறினார்கள்.
காட்சியில், தேவமாதா கூறிய அறிவுரையின்படி, முத்திப்பேறு பெற்ற ஹெர்மன் என்ற சந்நியாசியார், அதற்குப் பிற்பாடு தம்மை ஹெர்மன் சூசை என்று அழைக்கும்படிச் செய்தார். அப்படியே, தாம் எழுதுகிற நிருபங்களில் கையொப்பம் இடுவார். வேறு ஒரு சமயத்தில், தேவமாதா, திவ்ய குழந்தை சேசுநாதரைத் தம் கரங்களில் ஏந்தியபடி, அவருக் குக் காட்சி கொடுத்தார்கள். தேவ பாலனை, ஹெர்மனின் கரங்களில் இறக்கி விட்டார்கள். அப்போது, முத்.ஹெர்மன் ஜோசப் (சூசை), திவ்ய குழந்தையைத் தனது இருதயத்துடன் அரவணைத்தபடி,முத்தமிட்டார்; தேவபாலனுடன் இனிமையாய்ப் பேசி, உரையாடி, சொல்லிலடங்காத பேரின்பத்தை அடைந்தார்.காட்சி மறைந்தது.
நாளுக்கு நாள், அர்ச்.ஹெர்மன் ஜோசப் புண்ணிய நெறியில் அதிகரித்து வந்தார். சேசு மரி சூசை என்கிற திவ்விய குடும்பத்திற்குச் செலுத்தும் விசேஷ வணக்க ஆராதனையை முக்கியப்படுத்தவும், எங்கும் பரவச் செய்யவும் உழைத்தார். நாளடைவில், தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் அவருக்கு அருளிச் செய்த சகல நன்மையைப் பற்றி எழுத வேண்டுமெ னில், அது கூடாத காரியமாயிருக்கும். அவ்வளவு அபரிமிதமான நன்மைகளை, அடைந்திருந் தார். கடைசியில், ஹெர்மன் மரிப்பதற்கு முன், திவ்ய சேசுநாதரும், தேவமாதாவும், அவரி டத்திலே எழுந்தருளி வந்து.அவரைத் தேற்றி, அவர் மோட்ச பேரின்பத்தைச் சுகிக்கும்படிச் செய்தனர். அப்போது, ஹெர்மன் சூசை, தமது இருதயத்தில் தேவசிநேகத்தின் மிகுதியைப் பொறுக்க முடியாதவராக, தமது ஆத்துமத்தை, திவ்ய சேசுநாதருடையவும், தேவமாதாவு டையவும் திருக்கரங்களில் ஒப்புக்கொடுத்து இன்பமாய் மரித்து மோட்சத்திற்குப் போனார்.
கிறீஸ்துவர்களே! மாபெரும் பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பரின் சுகிர்த புண்ணி யங்களைக் கண்டுபாவிப்பதால், எவ்வித ஞான நன்மைகள், வருகின்றன என்பதை அறிந்து, அவரைப் பின்செல்வீர்களாக