Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 26 அக்டோபர், 2021

மகா பரிசுத்த தேவ நற்கருணைத்திருநாளன்று மனந்திரும்பிய அஞ்ஞானியாக இருந்த விஞ்ஞானி

 மகா பரிசுத்த தேவ நற்கருணைத்திருநாளன்று மனந்திரும்பிய அஞ்ஞானியாக இருந்த விஞ்ஞானி

பல வருடங்களுக்கு முன், லண்டனில், ரிச்சர்டு என்ற 30 வயதுடைய ஒரு இளம் விஞ்ஞானி வாழ்ந்து வந்தான். அவன், கத்தோலிக்க வேதத்தை முற்றிலுமாக வெறுத்து வந்தான்; சத்திய கத்தோ லிக்க வேதத்திற்கும், திருச்சபைக்கும் எதிராக அநேக புத்தகங்கள் எழுதியும், பேசியும் வந்தான். கத் தோலிக்க வேதத்தை அனுசரித்து வந்த அயர்லாந்து நாட்டைப் பற்றியும், அந்நாட்டின் கத்தோலிக்க

குருக்கள் பற்றியும், அங்கு வாழ்ந்த பாமரர்களான கத்தோலிக்கர்கள் பற்றியும், அவதூறாகவும், ஏளன மாகவும் எழுதி வந்தான். கடவுள் என்று ஒருவர் இல்லை, என்று அவன் கூறி வந்தான். ஒரு நாள், திடீ ரென்று, அவனுக்கு மூச்சு விடுவதற்கு மிகக் கஷ்ட மாயிருந்தது. உடனே, மருத்துவரிடம் சென்றான். அவனுடைய இருதயத்தையும், நுரையீரலையும் மருத் துவர் பரிசோதித்தார்.

பரிசோதனைக்குப் பிறகு, உன் இடது சுவாசப்பை

யில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு நீ நன்கு ஓய்வெடுக்க வேண்டும். ஓய்வெடுக்காவிட்டால், இரு மாதங்களுக்குள், இறந்து போய் விடுவாய்! எச்சரிக்கையாயிரு , என்று கூறினார். அதைக் கேட்டதும், திடுக்கிட்ட ரிச்சர்டு, டாக்டர், நான் நீங்கள் சொன்னபடி, ஓய்வெடுத்தால், எவ்வளவு காலம் உயிருடனிருப்பேன்? என்று கேட்டான். ஒன்று, அல்லது இரண்டு வருடங்கள் உயிருடன் வாழலாம், என்று, மருத்துவர் பதிலளித்தார். இதைக் கேட் டதும் , ரிச்சர்டின் முகம் வெளுத்துப்போனது. அவன், மருத்துவரிடம், டாக்டர், என்னால், இதை நம்ப முடியவில்லை! எனக்கு இன்னும் 30 வயது கூட ஆகவில்லையே! பயனற்ற மனிதர்கள் பலர் உயிருடன் இருக்கின்றனரே! நான், ஏன் இந்த வயதில் சாக வேண்டும்? என்று கேட்டான். அதற்கு, மருத்துவர், அவனிடம் , ரிச்சர்டு! இந்தத் துயரச் செய்தியை அறிவிப்பது எனக்கே மிகக் கஷ்டமாக இருக்கிறது! உனக்கு, ஒரு ஆலோசனையை நான் கூறுவேன். அயர்லாந்திற்குச் செல். அங்கு நல்ல சுத்தமான காற்று கிடைக்கும். அமைதியும், இளைப்பாற்றியும் கிடைக்கும், என்று கூறினார்.

ரிச்சர்டு , விதி எனக்கு இரக்கமின்றி துரோகம் செய்திருக்கிறது, என்று கூறிக்கொண்டு, தன் வீட்டிற்குத் திரும்பினான். சமீப காலத்தில், அவன் உடல் நலமில்லாமலிருந்தான்; கடின உழைப்புடன் கூடிய விஞ்ஞான ஆராய்ச்சியில், ஓய்வில்லாமல், தொடர்ந்து அதிக நாட்கள் ஈடுபட்டிருந்தான். தன் ஆராய்ச்சியில் உயர்ந்த பட்டங்கள் பெற்றிருந்தான்; பலரிடமிருந்தும், பாராட்டுக்கள் கிடைத்தன! ஆனால், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, தன்னை விஞ்ஞானத்தில் வளர்த்த இந்த லண்டன் நகரமே , தன்னை எங்கேயோவது ஓடி ஒளிந்துகொள்! என்று கூறுவது போல் , ரிச்சர்டுக்குத் தோன்றியது! தான் இறந்த பிறகு, தான் விஞ்ஞானத்தில் பெற்ற பட்டங்கள், சாதித்த சாதனைகள் எல்லாம் எங்கே போகும்? என்று ஆழ்ந்து சிந்தித்தான்; தன் நண்பர்களும், தன்னைப் பாராட்டிய கல்வியாளர்களும், பகுத்தறிவாளர்களும், சகல மனிதர்களும், தனது இறப்பிற்குப் பிறகு, தன்னை மறந்து விடுவார்களே, என்று சிந்தித்தபோது, அவனுடைய உள்ளத்தில், ஒரு திட்டம் உதித்தது. தன்னுடைய வீழ்ச்சியை, உலகம் அறிந்துகொள்ளக்கூடாது. அதற்கேற்ற ஒதுக்குப்புறமான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்கிற திட்டம் தான், அது. அப்போது, அயர்லாந்து நாட்டிற்குச் செல்ல வேண்டும், என்று கூறிய மருத்துவரின் ஆலோசனை, அவனுடைய மனதில் உதித்தது.

புராட்டஸ்டன்டு பதித் தப்பறையைப் பின்பற்றுகிற நாடாகிய இங்கிலாந்தினுடைய தலை நகர் லண்டனில் இயங்கி வந்த ஒரு பதித பத்திரிகையில், வேத விசுவாசமில்லாத அஞ்ஞானியாக இருந்த இளம் விஞ்ஞானி ரிச்சர்டு , அயர்லாந்து நாட்டைப் பற்றிக் கடுமையாகத் தாக்கி எழுதியிருந் தான். அயர்லாந்து நாடு, கத்தோலிக்கக் குருக்கள் மலிந்த நாடு. விஞ்ஞானத்தில் வளர்ச்சியடையாத பின்தங்கிய நாடு தான் அயர்லாந்து, என்று எழுதியிருந்தான். ஆனால், இப்போது, அந்த நாட்டிற்கே செல்லும்படியாயிற்றே, என்று முதலில் சிறிது தயங்கினான். விஞ்ஞானத்தில் பிரபலமாயிருந்த சகல நாடுகளிலிருந்தும் ஒதுக்குப்புறமாயிருந்த அயர்லாந்து நாட்டிற்குச் செல்வதன் மூலம், அகில உலக விஞ்ஞானிகளிடமிருந்து, தனது வீழ்ச்சியை, அதாவது, தனது இறப்பை மறைத்துக் கொள்ளலாம், என்பதால், அயர்லாந்திற்கே செல்ல தீர்மானித்தான்.

இறுதியில் அயர்லாந்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று வசித்து வந்தான். அந்த கிராமம் மிக அழகாகக் காட்சியளித்தது. அன்று வியாழக்கிழமை. அந்த கிராமம் இன்னும் கூடுதல் அழகு டன் காட்சியளித்தது. நகரின் முக்கியமான பாதையை நோக்கி அவன் நடந்து கொண்டிருந்தான். இருபுறமும், வயல்வெளிகளும், ரோஜா மலர்களும் கண்குளிரக்காட்சியளித்தன. முக்கியமான பாதை யின் அருகில் சென்றபோது, மக்கள் கூட்டம், கூட்டமாக எங்கோ விரைந்து செல்வதைக் கண்டான். அவர்கள் சிறந்த ஆடை அணிந்திருந்தனர். சிறுமிகளும், பெண்களும் முக்காடு அணிந்திருந்தனர்; சிறுமிகள், மலர்களைக் கரங்களில் ஏந்திச் சென்றனர். ஒரு முதியவர், நொண்டியபடியே, அந்த பக்கம்

வந்தார். அவரிடம், ரிச்சர்டு, இன்றைக்கு , இந்த ஊரில் என்ன விசேஷம்? என்று, கேட்டான். அவர், அவனிடம், நீ என்ன இந்த ஊருக்குப் புதிதா? இன்று, என்ன திருநாள் என்று, இந்த ஊரிலிருக்கும் சிறு குழந்தைகள் கூட சொல்லுமே! இன்று, தேவ நற் கருணைத் திருநாள் ! கத்தோலிக்கத்திருச்சபை கொண் டாடும் திருநாட்களிலெல்லாம் மிகப் பெரிய திரு நாள் , இது தான்! இந்நகரின் முக்கியமான தெரு வழி யாக, தேவ நற்கருணை சுற்றுப்பிரகாரம் நிகழும், என்று பதிலளித்தார். சுற்றுப்பிரகாரமா, அப்படியென் றால் என்ன? என்று ரிச்சர்டு கேட்டான். அதற்கு அம் முதியவர், அவனிடம், திவ்ய நற்கருணையில் திரு ஆத்துமத்துடனும், திருச்சரீரத்துடனும், தேவ சுபாவத்துடனும், மனித சுபாவத்துடனும் எழுந்தருளியுள்ள சேசுகிறீஸ்துநாதருக்குத் தோத்திரமாக சுற்றுப்பிர கார பவனி நடக்கும். அப்ப வடிவில் ஆண்டவர் எழுந்தருளியிருக்கும் திவ்ய நற்கருணையை, ஒரு பொற்கதிர்பாத்திரத்தினுள் வைத்து ஸ்தாபிப்பார்கள்; குருவானவர், அல்லது மேற்றிராணியார், அக் கதிர்பாத்திரத்தை மிகுந்த சங்கை மேரையாக எடுத்து, தேவாலயத்திலிருந்து கிளம்பி, நகரத் தெருக்க ளில் பீடப்பரிசாரகர் புடை சூழ, நடந்து வருவார்; விசுவாசிகள் ஜெபமாலை ஜெபித்தபடி, அல்லது தேவ தோத்திரப் பாடல்கள் பாடியபடி, பக்தி பற்றுதலுடன் பின்தொடர்ந்து வருவார்கள். வழியில் வருபவர்கள் எல்லோரும், சுற்றுப்பிரகாரமாக வரும் தங்களுடைய திவ்ய கர்த்தரை, அந்தந்த இடங்க ளிலேயே முழங்காலிலிருந்து, பணிந்து ஆராதிப்பார்கள். இறுதியில், சுற்றுப்பிரகாரப் பவனி, தேவா லயத்தில் வந்து முடிவடையும், அதன் பின், தேவாலயத்தில் பிரசங்கமும், தேவநற்கருணை ஆசீர்வா தமும் நடைபெறும். அங்கே தான் நான் போகிறேன். நீயும், வரலாம்,

முதியவர் பேசியதை அவ்வளவு நேரமும், அலட்சியமாகக் கேட்டுக் கொண்டிருந்த ரிச்சர்டு, அவரிடம், உங்கள் முதிர்வயதில், நொண்டியபடி, கஷ்டப்பட்டுக்கொண்டு, இப்படி கட்டாயமாகப் போக வேண்டுமா? வீட்டில் இருக்கக் கூடாதா? என்று கேட்டான். அதற்கு அந்த நல்ல முதியவர், அவனிடம், நம் எல்லோரையும் சிருஷ்டித்த சர்வேசுரன், ஆடம்பரமாக சுற்றுப்பிரகார பவனி வரும் போது, நான் எப்படி வீட்டில் தங்கியிருக்க முடியும்? நானும் சென்று, நம்மைச் சந்திக்க வரும் திவ்ய கர்த்தரைத் தோத்தரித்து வணங்கி ஆராதிக்க வேண்டுமல்லவா? பாலஸ்தீனத்தில், ஆண்டவர் நடந்து சென்றபோது, ஜெருசலேம் நகர மக்கள், ஆர்ப்பரித்து அவரை ஸ்துதித்தார்களல்லவா? இப்போது, அதே போல், நம் ஊரின் தெருக்களிலும், அதே கடவுள் நம்மைச் சந்திக்க வருகின்றார்; நானும், அவரை ஆராதிப்பதற்குச் செல்கிறேன், என்று பதிலளித்தார். அதற்கு, ரிச்சர்டு , அவரிடம், அந்த சிறு அப்பத்தில், கடவுள் உண்மையாக இருக்கிறார் என்று , நீங்கள் நம்புகிறீர்களா? என்று கேட்டான். இதைக் கேட்டதும், முதியவர், அதிர்ச்சியடைந்தார்; பிறகு, அவனிடம், நீ , ஒரு புராட்டஸ்டன்டு பதித மதத்தைச் சேர்ந்தவனா? என்று கேட்டார். அதற்கு, அவன், கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, என்று கூறினான். அதற்கு, அவர், கடவுளிடம் உனக்கு நம்பிக்கை இல்லையா? அப்படியென்றால், உனக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். அதற்கு, அவன், நான் ஒரு விஞ்ஞானி. கடவுள் இருக்கிறார், என்பதைப்பற்றி உங்களுக்கு சந்தேகமே கிடையாதா? என்று கேட்டான். முதியவர், அவனிடம், என்ன? நீ , ஒரு விஞ்ஞானியா? உண்மையில், ஒரு விஞ்ஞானி, கடவுளை அறியாத அஞ்ஞானியாக இருக்க முடியாது. அப்படியென்றால், உண்மையில், நீ ஒரு விஞ்ஞானியாக இருக்க முடியாது. இந்த உலகைப் பார்க்கும் ஒரு சாமானிய பாமர மனிதனாலேயே இப்பரந்த பிரபஞ்சத்திற்கு அதன் காரண கர்த்தவாகிய சர்வேசுரன் ஒருவர் இருக்கிறார், என்பதை மிக எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடுமாயிருக்கும் போது, அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஒரு விஞ்ஞானியால், இந்த உண்மையை எப்படிப் புரிந்து கொள்ள முடியாமல் போனது? அப்படியென்றால், அஞ் ஞானிகளால், கடவுள் இருப்பதை நம்ப முடியாததற்குக் காரணம், அவர்களுடைய ஆங்காரம் தான்; அது தான், அவர்களுடைய அறிவை இருட்டடிப்புச்செய்து, சர்வேசுரனிடமிருந்து, அவர்களைப் பிரித்து விடுகிறது, என்று, சிறு ஞான உபதேசத்தைக் கற்பித்தார்.

ரிச்சர்டு , அவரிடம், அந்த சிறு அப்பத்தில், கடவுள் இருக்கிறார், என்று நம்புகிறீர்களா? என்று மறுபடியும், கேட்டான். அதற்கு, நான் இந்த அழகிய உலகத்தை நோக்கிப் பார்க்கிறேன். கடவுளைத் தவிர, வேறு யார் இதை உண்டாக்கியிருக்க முடியும்? கடவுள் எல்லாம் வல்லவர். அந்த சிறு அப்பத்தினுள் தம்மை மறைத்து வைப்பது, அவருக்குக் கடினமல்ல, என்று கூறினார். அயர்லாந்து, பாமர மக்கள் நிறைந்த நாடு என்று மிக ஏளனமாக, முற்காலத்தில், லண்டன் நகரப் பத்திரிகையில் தான் எழுதியிருந்ததை ரிச்சர்டு, நினைவு கூர்ந்தான். ஆனால், அது எவ்வளவு தவறு! உண்மையில், இந்நாட்டு மக்கள், ஞானமுள்ளவர்களாக இருக்கின்றனர், என்பதை, அவன் உணரத்துவக்கினான். அச்சமயம், ஒரு மேட்டிலிருந்து ரிச்சர்டு, மக்கள் கூட்டத்தைப் பார்த்தான்; செல்வந்தர்களும், ஏழைகளும், இளைஞர்களும், முதியவர்களும் அடக்க ஒடுக்கமாக நடந்து செல்வதைக் கண்டான்; பக்தியுடன் நடந்து சென்ற அவர்களின் பார்வையில், வேத விசுவா சத்தைக்கண்டான்; அவர்கள் இருதயம், பரலோகசந்தோஷத்தினால், நிறைந்திருந்தது! ஆண்டவர் சுற்றுப் பிரகாரமாக வரும்பாதையில், சிறுவர்களும், சிறுமியர்களும், ரோஜா மலர்களைத் தூவிக் கொண்டே சென்றனர். இனிய பாடல்கள் பாடியபடி சென்றனர். நான்கு பேர் தூக்கிச் சென்ற ஒரு குடையின் நிழலில், குருவானவர், பொற்கதிர்பாத்திரத்தை பக்தி பற்றுதலுடன் ஏந்தியபடி, நடந்து சென்றார்.

ரிச்சர்டு நின்று கொண்டிருந்த மேட்டுப் பகுதியை சுற்றுப்பிரகார பவனி , அணுகிக் கொண்டிருந்தது. அருகில் வர வர, குருவானவர் கரத்திலிருந்த பொற்பாத்திரத்தினுள்ளிருந்த திவ்ய அப்பத்தை ரிச்சர்டு , நோக்கிப் பார்த்தான். குருட்டாட்டம், விக்கிரக ஆராதனை என்று கத்தோலிக்கர்களின் பக்தி முயற்சிகள் பற்றி லண்டன் பத்திரிகைகளில் அவன் எழுதிய கட்டுரைகள், ரிச்சர்டுக்கு ஞாபகத்திற்கு வந்தன. விஞ்ஞானமே கடவுள், என்று அதில் அவன் எழுதியிருந்தான்; எவ்வளவு பெரிய தப்பறையை எழுதிவிட்டேன்! அதுவும் கடவுளுக்கு எதிராக எழுதிவிட்டேன், என்று சிந்திக்கலானான். ஏனெனில், இப்போது, சாவு, அவன் கண்முன் நின்றது. உலகப்புகழ் பெற்ற , மிகச் சிறந்த விஞ்ஞானியான லூயி பாஸ்டர் எழுதிய வாக்கியங்கள் பற்றி சிந்தித்தான்; அவை உண்மையிலேயே, இந்த அயர்லாந்து நாட்டின் முதியவர், இவ்வளவு நேரம் தனக்குக் கூறிய ஞான உபதேசத்தைப் போலவே இருப்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தான் : பிரிட்டனி நாட்டு , ஏழைக் குடியானவன் சர்வேசுரனிடம் கொண்டிருக்கும் விசுவாசம் என்னிடமும் இன்னும் உறுதியாக இருக்கிறது என்பது பற்றி நான் மகிழ்கிறேன். விஞ் ஞானத்தில் நான் வளர்ச்சி அடைய அடைய , என் விசுவாசமும் இன்னும் கூடுதல் உறுதி பெறும் என்று நம்புகிறேன். பிரிட்டனி நாட்டு ஏழைக்குடியானவனின் மனைவியின் விசுவாசத்தைப் போல், என் விசுவாசமும் உறுதி பெறும் என்பது நிச்சயம், என்று லூயி பாஸ்டர் எழுதியிருந்தார். இவ்வளவு காலமாக, உலகில் தன்னைச் சுற்றியிருந்த சகல பொருட்களும், சர்வேசுரன் இருக்கிறார், என்று உணர்த்திய மாபெரும் சத்தியத்தை ஏற்காமல், அஞ்ஞானியாக வாழ்ந்ததைப் பற்றி, ரிச்சர்டு வெட்கப்பட்டான்;

கடவுள் இல்லை என்று கூறியதுடன், சர்வேசுரனை முழுமையாக அறிந்து, சிநேகித்து, சேவித்து, பரலோக சமாதானத்துடன் அமைதியாக வாழ்ந்து வரும் கத்தோலிக்கர்களுடைய அயர்லாந்து நாட்டைப் பற்றி ஏளனமாகப் பேசினேன். ஆனால், என் மேல் அளவில்லாத சிநேகமுள்ள திவ்ய கர்த்தர், தயாளம் நிறைந்த தமது பராமரிப்பினால், வேத விசுவாசம் என்கிற உன்னத கொடையை நான் பெற்றுக்கொள்ளும்படி, என்னை, அதே அயர்லாந்து நாட்டிற்கு வரும்படிச் செய்திருக்கிறார்; இந்த உண்மையான விஞ்ஞானியான லூயி பாஸ்டரிடம் இருந்த வேத விசுவாசம், எனக்கும் வேண்டும், என்று முதன் முதலாக சிந்திக்க ஆரம்பித்தான். தேவ வரப்பிரசாத ஏவுதலுக்குச் செவிசாய்த்தான்.

அயர்லாந்து நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில், மக்கள் அனுபவித்து வந்த அமைதியையும், பரலோக சந்தோஷத்தையும், ரிச்சர்டு நேரடியாகப் பார்த்தான். உண்மையி லேயே சர்வேசுரனை விசுவசிப்பவர்களுக்கு, சர்வேசுரன் தாமே அளிக்கும் பரலோகக் கொடைகள் என்பதையும், மேலும் தம் பரலோகக் கொடைகளை தம்மைச் சந்திக்க வருபவர்க்கெல்லாம் வழங்குவதற்காகவும், அதே சர்வே சுரன், அங்கே வந்து கொண்டிருக்கிறார், என்பதையும், ரிச்சர்டு கண்டுணர்ந்தான். இப்பொழுது, குரு அவனுக்கு சமீபத்தில் வந்தார். மோட்சமே, தனக்காகக் கீழே பூலோ கத்திற்கு இறங்கிவந்தது போல், அவனுக்குத் தோன்றியது. பரலோகவாசிகளே, தங்கள் சர்வேசுரனை, ஆடம்பரமா கவும், மிகுந்த பக்தி பற்றுதலுடனும், சுற்றுப்பிரகாரமாகக் கொண்டு வருவதுபோல், அவ்வளவு ஒழுங்குக் கிரம் மும், பரலோக சந்தோஷத்தின் நறுமணமும், அந்த கிராமம் முழுவதும் எங்கும் வியாபித்துப் பரவியிருந்ததை ரிச்சர்டு உணர்ந்தான்; உடனே, பொற்கதிர்பாத்திரத்தினுள்ளிருந்த மகா பரிசுத்த தேவநற்கருணையை உற்று நோக்கியபடி, ரிச்சர்டு, என் தேவனே! நான் உம்மை விசுவசிக்கிறேன்! என்று உரக்கக் கூறினான்; அந்த இடத் திலேயே முழங்காலிலிருந்து, தாழ்ந்து பணிந்து, தன் மேல் அளவில்லாத சிநேகத்துடன், தன்னை பூலோக மோட்ச மாகத் திகழும் இந்த அயர்லாந்தின் கிராமத்திற்கு வர வழைத்த, திவ்யகர்த்தரை ஆராதித்தான். பிறகு, ஆண்டவருக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துவதற்காக, சுற்றுப்பிரகாரத்துடன் சேர்ந்து, தேவாலயத்திற்குச் சென்றான்; தேவநற்கருணை ஆசீர்வாதத்திற்குப் பிறகு,

நீண்ட நேரம், ஆங்காரத்தினால், இவ்வளவு காலம் ஆண்டவரை விட்டுப் பிரிந்து நீசப்பாவியாக வாழ்ந்ததற்காக, மனஸ்தாபப்பட்டான்; அஞ்ஞானிகளைப் போலவே, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் புராட்டஸ்டன்டு , லூத்தரன் பதித சபையினரும், உண்மையான சர்வேசுரனை அறியாமல், ஆங்காரத்தினால், மனிதர்கள் உருவாக்கிய பதித சபைகளில் சேர்ந்து, முழுமையும் தப்பறையான மதத்தில் வாழ்கின்றனர், என்பதையும் , ரிச்சர்டு உணர்ந்தான் பதித மார்க்கத்திலிருந்து, தன்னைத் தப்புவித்து, சர்வேசுரன் தாமே ஸ்தாபித்த சத்திய திருச்சபையில் தம்மை சேர்த்துக்கொண்ட ஆண்டவருடன், சல்லாபித்த படி, தேவசிநேக முயற்சிகள் செய்து கொண்டு, தேவாலயத்திலேயே தங்கியிருந்தான். Deo Gratias! |

சனி, 23 அக்டோபர், 2021

Fatima In the Light of the History by Coasta Brochado

 PREFACE BY MANOEL CARDOZO 




THE story of Fatima has been told many times in many tongues, but here is a new approach to an old subject that everybody, particularly those who pray to Mary under her latest title, will want to read. This unusual book, which Dr. Boehrer's lucid translation now makes available to a wider public, must surely be considered not only as a means of deepening our understanding of Fatima but also as a significant contribution to the literature of the Marian Year.

 What the author has to say he says in terms of Portugal and of Portuguese history. Our Lady, after all (possibly because of the great devotion to her that has always characterized the Portuguese, as Mr. Brochado points out) chose to appear in Portugal. She might have again appeared in France, as she did at Lourdes and at La Salette, but this time she revealed herself in Portugal. Since our Lady could not have appeared at Fatima unless she wanted to, we may suppose that she wanted Portugal to serve as an example of something of worldwide significance and application. That is why Mr. Brochado's book, though it deals with the Portuguese implications of Fatima, must necessarily have much more than local interest. Our Lady may well be using Portugal as an example to the rest of the world, and if this is in fact what she is doing, the Portuguese experience is of universal value. 

What went wrong in Portugal that made the country seem to need a miraculous intervention in 1917 to save its faith? The answer to this question can be fully appreciated by reading Mr. Brochado's book. With broad strokes of the pen, the author has outlined the introduction of Christianity in Portugal, its development during the Middle Ages, its missionary apostolate at the time of the Renaissance and later, the antireligious movement of the eighteenth century, the Masonic-Liberal offensive of the nineteenth and early twentieth centuries, and finally the more immediate disasters that preceded the apparitions at Fatima. The past two hundred years of a Christian history of almost two millennia do not make a pretty picture, but we may be sure that what happened in Portugal has happened elsewhere. 

Mr. Brochado suggests that our Lady saved the Church in Portugal, and that only through her may we explain its recovery. The facts of history, as he has pieced them together, seem to point in that direction, although no man can pretend to know the super-natural explanation for this historically palpable phenomenon. 

What we can say and what he does say, and this without qualms, is that Fatima has strengthened the faith of Portugal beyond the dreams of those who, only a few years ago, were witnesses to our Lady's presence. Fortunately for us, our Lady did not appear for the exclusive benefit of the Portuguese (though they were favored above all others ). In helping the Portuguese, through a practical application of the message of Fatima, she has indicated a means by which we may be helped, too. 

MANOEL CARDOZO 


Download it Here - Fatima in the Light of History









Download SODALITY OF OUR LADY - By FATHER ELDER MULLAN, S.J.

SODALITY OF OUR LADY


HINTS AND HELPS FOR THOSE IN CHARGE

BY
FATHER ELDER MULLAN, S.J.
AUTHOR AND COMPILER OF
“THE BOOK OF THE CHILDREN OF mary





THE sole aim of this little book is to be useful. The plan is as follows: —The General Statutes, which are given first, are the basis of the whole. The remainder of the book comprises twenty-eight chapters in five parts. 

  1. The first part presents general information and aids. This includes an outline of the Church Law on these bodies, and directions for applying it in their establishment. 
  2. The second part considers the Sodality already in existence, and, after describing the character of the body, proposes general ways of maintaining its successful action. 
  3. The third part deals with the spiritual life of the members and with matters that touch its various occasions and manifestations. Here belong the exercises of piety, individual and collective, and the works of zeal. 
  4. The fourth part has to do with the less frequent Sodality events, treating them in the order of their frequency. Some hints are added as to members no longer active. 
  5. The fifth part consists of a chapter of personal suggestions for the one in charge of the Sodality.
 As to the sources. The General Statutes are a careful translation from the official document. The Points from Church Law have been drawn from Beringer's invaluable work on Indulgences, and from various works on Canon Law. The practical suggestions, which form the main part of the book, are largely the result of repeated experiments made by many directors, sub-directors, and directresses. 

The hints and helps cannot, of course, all be turned to use everywhere. Many things that are possible in one Sodality cannot be done in another. The circumstances have always to be measured. But when one looks about and considers, one often finds much possible and even easy which had been thought so difficult as to be out of the question. Besides, it is very often true that where there is a will there is a way. It will be understood that this little book is meant for sub-directors and directresses as well as priest-directors. The last of these titles has oftenest been used for convenience. 

The good will to lead their Sodalists on to what is best and highest is abundant in Sodality directors, sub-directors, and directresses. It was the hope of somehow stimulating this good will and giving it new objects to work on that led the author, or rather compiler, to put this book together. 

    ELDER MULLAN, S. J. 
      WOODSTOCK COLLEGE. 









        Life History of Fr. Damien in Tamil

         Download the Life History of Fr. Damien in Tamil. 



        வெள்ளி, 8 அக்டோபர், 2021

        Download - HIDDEN GOD - HOW DO WE KNOW THAT GOD EXISTS ?

         

        Fernand Van Steenberghen
        PROFESSOR AT THE UNIVERSITY OF LOUVAIN




        HOW DO WE KNOW
        THAT GOD EXISTS ?

        Vere tu es Deus absconditus,
        Deus Israel Salvator!
        (Isaias, XLV, 15)

        TRANSLATED BY
        THEODORE CROWLEY, O.F.M.

        READER IN SCHOLASTIC PHILOSOPHY AT
        THE queen’s UNIVERSITY, BELFAST



        PUBLICATIONS
        UNIVERSITAIRES  DE LOUVAIN
        2, PLACE CARDINAL MERCIER
        LOUVAIN



        B. HERDER BOOK CO.

        314 NORTH JEFFERSON
        SAINT LOUIS
        MISSOURI 63103
        1966




        ----------------------------Sample pages---------------------------





























        வியாழன், 7 அக்டோபர், 2021

        Three Greatest Prayer - by St. Thomas Aquinas

         Download Book - Three Greatest Prayer







        The three greatest prayers

        by St. Thomas Aquinas 1225?-1274


        Publication date 1956

        Topics                     : Lord's prayer, Ave Maria, Apostles' Creed

        Publisher London  : Burns, Oates and Washbourne, Newman ; Westminster

        Digitizing sponsor Kahle/Austin Foundation


        Language English

        89 pages


        THE THREE GREATEST PRAYERS


        Commentaries on the Our Father, the
        Hail Mary and the Apostles’ Creed


        by
        ST. THOMAS AQUINAS


        Translated, by
        LAURENCE SHAPCOTE, O.P.


        With an Introduction by
        THOMAS GILBY, O.P.

        Publishers:
        BURNS OATES & WASHBOURNE LTD



        Sample Pages of the Book







        வெள்ளி, 1 அக்டோபர், 2021

        Knight of the Immaculata - No. 26 (Part 1)



        பூமியில் நமது வாழ்க்கை குறுகியது - இவ்வாறு பல புனிதர்கள் கூறினார்கள். இப்போதுதான் நித்திய ஜீவனுக்கான தகுதியை நாம் சேகரிக்க முடியும். இறந்த பிறகு அது சாத்தியமாகாது. பூமியில் வாழும் நாம் ஒரு கத்தோலிக்க போராளி. நம் பாவங்கள், பலவீனங்கள், எல்லா வகையான தீமைகளுக்கும் எதிராக நாம் போராட வேண்டும்; நமது இரட்சிப்புக்காக நாம் போராட வேண்டும். இதை எப்படிச் செய்வது சிறந்தது?

        மரியாவின் மாசற்ற இருதயம் மற்றும் ஜெபமாலை ஜெபிப்பதன் மூலம்

        இம்மாக்குலடாவின் நைட் வெளியீடு, அன்பான மாவீரர்களே, ஜெபமாலை மாதமான அக்டோபரில் உங்களை அடைகிறது. இந்த ஆண்டு அக்டோபர் சிறப்பு, ஏனென்றால் ஜெபமாலையின் புகழ்பெற்ற வெற்றிகளில் ஒன்றான 450 வது ஆண்டு விழாவை நாங்கள் கொண்டாடுகிறோம்: லெபாண்டோ போர். தயவுசெய்து இந்த இதழில் உள்ள உரையை மிகவும் கவனமாகப் படியுங்கள் - பக்கங்கள் 9-18. நீங்கள் ஜெபமாலை சக்தியைக் கற்றுக்கொள்வீர்கள். அது எவ்வளவு பெரிய ஆயுதம் என்று தந்தை மாக்சிமிலியன் மற்றும் பல துறவிகள் எழுதியுள்ளனர். ஜெபமாலை சக்தி பற்றி நம்மில் பலர் உறுதியாகிவிட்டோம். ஒவ்வொரு நாளும் ஜெபமாலை ஜெபிக்க நான் உங்களை அன்புடன் ஊக்குவிக்கிறேன். நீங்கள் முழு ஜெபமாலை அல்லது ஐம்பத்து மூன்று மணி  ஜெபிக்க முடியாவிட்டால், தயவுசெய்து குறைந்தது ஒரு பத்து மணியாவது ஜெபியுங்கள், ஆனால் மேரியின் உதவியின் மீது நம்பிக்கையுடன் மற்றும் மிகுந்த ஆர்வத்துடன், அவளுடைய மகிமையை புகழ்ந்து பேசுங்கள். இது மிகவும் முக்கியம்! தயவுசெய்து, அக்டோபரில் உங்கள் ஜெபமாலை பிரார்த்தனையை நிறுத்தாதீர்கள். தயவுசெய்து, நவம்பர் மாதமும் உங்கள் ஜெபத்தைத் தொடரவும். நவம்பர் என்பது உத்தரிக்கிற ஸ்தலத்தில்  உள்ள புனித ஆத்மாக்களின் மாதம்.


        பூமியிலும், பரலோகத்திலும் உள்ள நமது வாழ்க்கைக்கு இடையில் உத்தரிக்கிற ஸ்தலம் உள்ளது. இது கத்தோலிக்க திருச்சபையின் துன்பம். இவர்கள் ஏற்கனவே இறந்தவர்கள் மற்றும் கடவுளின் தண்டனையை உத்தரிக்கிற ஸ்தலத்தில் அனுபவித்து வருகிறார்கள். இந்த வழியில் அவர்கள் தங்கள் குறைபாடுகள் மற்றும் குறைபாடுகளிலிருந்து தங்களை சுத்தம் செய்கிறார்கள். ஆன்மா சுத்திகரிக்கப்படும் வரை கடவுளைக் காண மோட்சத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடவுளின் தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு கறைகளிலிருந்தும் ஆன்மா சுத்திகரிக்கப்படுவது அவசியம். உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்கு நம் ஜெபம் தேவை, குறிப்பாக ஜெபமாலை பிரார்த்தனை. அவர்களுக்கு திவ்விய பலி பூசை தேவை.

        அனைத்து ஆன்மாக்கள் தினமும் (நவம்பர் 2 ஆம் தேதி) மற்றும் ஆண்டின் இறுதியில், நம்முடைய அன்புக்குரியவர்களின் மரணம் மட்டுமல்ல, நம்முடைய சொந்த மரணமும் கூட, கடைசி நான்கு விஷயங்களைப் பற்றி நினைவூட்டுகிறது. கடைசி நான்கு விஷயங்கள்: 

        1. மரணம்
        2. தீர்ப்பு
        3. நரகம் மற்றும் 
        4. மோட்சம் 

        மரணம் என்பது ஆன்மாவை உடலிலிருந்து பிரிப்பது. ஆன்மா, அழியாத நிலையில், இறப்பதில்லை, ஆனால் மனிதனின் மரணத்திற்குப் பிறகு அவர் கடவுளின் தீர்ப்பில் நிற்கிறார்; உடல் பூமியில் இருக்கும்போது, ​​சிதைந்து மண்ணாக மாறும்.

        தீர்ப்பு: ஒரு நபர் இறந்த உடனேயே, அவருடைய ஆன்மா கர்த்தராகிய இயேசுவினால் தீர்மானிக்கப்படுகிறது. தீர்ப்பளிக்கப்பட்ட ஆன்மா சுத்திகரிப்பு, சொர்க்கம் அல்லது நரகத்திற்குச் செல்லும்.

        நரகம் நித்திய வேதனையின் ஒரு இடம், இந்த உலகத்தை விட்டு ஒரு பெரிய பாவத்தோடு கூட இந்த உலகத்தை விட்டு வெளியேறியவர்களின் ஆன்மா உள்ளே நுழைகிறது.

        மோட்சம் என்பது தூதர்களுக்கும், மனிதர்களுக்கும் உன்னதமான மகிழ்ச்சியின் இடம்.

        கடைசி விஷயங்களை நினைவுகூரும் அதே வேளையில், பூமியில் ஏற்கனவே பாவமில்லாமல் வாழவும், நமது பலவீனங்களை வெல்லவும், நம் தீமைகளை எதிர்த்துப் போராடவும், பூமியில் ஏற்கனவே நம்மைத் தூய்மைப்படுத்த விரும்பும் கடவுளின் தீர்ப்புகளுக்கு அடிபணியவும் முயற்சிப்போம். பூமியில் நிறைவேற்றப்பட்ட சுத்திகரிப்பு தகுதியுடையது, அதாவது நம்மில் பிறர் சிநேகம் மற்றும் தர்மத்தை அதிகரிப்பதன் மூலம் பெரும் நன்மையைக் கொண்டுள்ளது, இதனால் நித்தியம் முழுவதும் கடவுளை அதிகமாக நேசிக்க அனுமதிக்கிறது. அதேசமயம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஒருவர் பிறர் சிநேகத்தில் வளராமல் அவதிப்படுகிறார். அதனால்தான் நாம் வாழ்நாளில் சுத்திகரிக்கப்பட வேண்டும்.

        நாங்கள் புனிதர்களாக மாற விரும்புகிறோம், ஆனால் எளிதான வழியில், முயற்சி இல்லாமல், சோர்வு அல்லது வன்முறை இல்லாமல்; நாம் நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்க விரும்புகிறோம், ஆனால் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மட்டுமே, அது பெரிய தியாகத்தை கேட்காதபோது அல்லது போசன பிரியத்திற்கு எதிராக அதிகமாக செல்ல வேண்டும். அதனால் சுய தியாகம், அல்லது சுய-அன்பின் மனக்கசப்புகளைத் தணித்தல், நம் கருத்தை மேலோங்கச் செய்வதற்கான முயற்சியைத் துறத்தல், நம்மை நாமே சமர்ப்பிப்பது மற்றும் சாந்தமாக ஒப்புக் கொள்வது போன்ற நல்ல செயல்களை எதிர்கொள்ளும்போது அது நிகழ்கிறது. எங்களை எதிர்க்கும் ஒருவருக்கு, அடிக்கடி - எப்போதுமே இல்லையென்றால் - நாம் இவ்வளவு தூரம் செல்வது தேவையற்றது என்று நினைத்து மறுக்கிறோம்.

        ஆயினும்நமது பரிசுத்ததனம் நாம் செய்ய தயங்குகிற செயல்களையே சார்ந்து உள்ளது. அவை இல்லாமல் நாம் எப்போதுமே ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வோம், நாம் எப்பொழுதும் அதே நிலையில் இருப்போம்.

        நமது சோம்பல், சோம்பல், கோழைத்தனம் ஆகியவற்றை சமாளிக்க இன்று நாம் கவுரவிக்கும் புனிதர்களிடம் மன்றாடுவோம்; கடினமான புனித வழியில் நமக்கு முன்னால் சென்றவர்களைப் பின்தொடரும் வலிமையை எங்களுக்குக் கிடைக்கும்படி கேட்டுக்கொள்வோம். "இது போன்றவர்கள் புனிதத்தை அடைந்திருந்தால், என்னால் ஏன் முடியாது?" (செயின்ட் அகஸ்டின்). கடவுள் புனிதர்களுக்கு அளித்த அருளை நமக்கு வழங்குகிறார்!

        திரு. கார்ல் ஸ்டெலின்


        Our life in the earth is short — so said many saints. And only now can we gather merit for eternal life. After death it will not be possible. Living on earth we are a Church militant. We must fight against our sins, our weaknesses, against all kinds of evil; we must fight for our salvation. How best to do this?

        With Mary Immaculate through the prayer of the Rosary.

        This issue of Knight of the Immaculata reaches you, dear Knights, in October, the month of the Rosary. In this year, October is special, because we celebrate the 450th Anniversary of one of the famous victories of the Rosary: the Lepanto battle. Please read very carefully the text in this issue of Knight — pages 918. You will learn the power of the Rosary. Father Maximilian and many other saints have written about how great a weapon it is. Many of us have become convinced of the power of the Rosary. I warmly encourage you to pray the Rosary every day. If you cannot pray the whole Rosary or the five decades, please pray at least one decade, but with faith in Mary's help and with great fervour, praising her glory. This is very important! Please, don’t stop your rosary prayer in October. Please, continue your prayer in November. November is the month of the holy souls in purgatory.

        Between our life on earth, and in Heaven, is lies purgatory. It is the Church suffering. These are people who have already died and are serving God's sentence in purgatory. In this way they cleanse themselves of their shortcomings and imperfections. The soul is not admitted to Heaven to see the Lord God until it is purified. It is necessary for the soul to be purified of every blemish before being admitted to the vision of God. Souls in purgatory need our prayer, especially the prayer of the Rosary. They need Holy Mass.

        All Souls' Day (the 2nd of November) and end of the year also makes us mindful not only of the death of our dear ones but also of our own, with regard to the four last things. The four last things are: death, judgment, hell and Heaven. Death is the separation of the soul from the body. The soul, being immortal, does not die, but immediately after man's death he stands at the judgement of God; while the body remains on earth, decays and turns to dust.

        Judgment: Immediately after a person dies, his soul is judged by the Lord Jesus. The judged soul will go either to purgatory, Heaven or hell.

        Hell is a place of eternal torment, where the souls of those who have left this world with even one grave sin enter.

        Heaven is the place of supreme happiness for angels and humans.

        While remembering the last things, let us try already here on earth to live without sin, to overcome our weaknesses, to fight our vices and to submit to the judgments of God, who wants to purify us already here on earth. Purification accomplished on earth has the great advantage of being meritorious, that is, of increasing grace and charity in us, thus permitting us to love God more for all eternity; whereas in purgatory, one suffers without growing in charity. That is why we should desire to be purified during life.

        We want to become saints, but in the easiest way possible, without effort, without fatigue or violence to ourselves; we should like to practice virtue, but only to a certain point, only when it does not ask for great sacrifice, or go too much against the grain. And so it happens that when faced with acts of virtue which exact greater self renunciation, or the acceptance of difficult and repugnant things, such as quelling the resentments of self-love, renouncing an attempt to make our opinion prevail, submitting ourselves and meekly condescending to one who is opposed to us, very often — if not always — we refuse, thinking it unnecessary to go to such lengths.

        Yet our progress in holiness depends precisely upon these acts which we hesitate to make; without them we shall always lead a mediocre life, we shall always remain on the same level, if indeed we do not lose ground. Let us beg the saints whom we honour today to help us overcome our laziness, our lassitude, our cowardice; let us ask those who have gone before us in the arduous way of sanctity to obtain for us the strength to follow them. "If such as these have attained to sanctity, why not I?" (St. Augustine). God offers us the grace which He gave to the saints!

        Fr. Karl Stehlin

        Warsaw, on the 12th of September, 2021

        Feast of the Most Holy Name of Mary


        Please Download the Issue Here : Knight of the Immaculata No. 26

        Knight of the Immaculata - No. 26

         

        அன்புள்ள மாவீரர்களே,



        நாளை மற்றொரு மாதாவின்  மாதம், ஜெபமாலை மாதம் தொடங்குகிறது. இந்த ஆண்டு ஒரு சிறப்பு அக்டோபர் ஆகும், ஐரோப்பாவில் உள்ள பல விசுவாசிகளின் ஜெபமாலை தீவிர ஜெபத்திற்கு நன்றி, பிரம்மாண்டமான துருக்கிய இஸ்லாமிய இராணுவத்திற்கு எதிராக சிறிய கத்தோலிக்க இராணுவத்தால் வென்ற லெபாண்டோ போரின் 450 வது ஆண்டு விழாவை நாங்கள் கொண்டாடுகிறோம்.

        மரியாயின் மாசற்ற இருதயம் அவர்களின் தீவிர கோரிக்கைகளை நிறைவேற்றி ஐரோப்பாவை புறமத வெள்ளம் மற்றும் கிறிஸ்தவர்களின் துன்புறுத்தலில் இருந்து காப்பாற்றியது.

         இன்று நாமும் நம்பிக்கைக்காக நிற்க வேண்டும்!

        ஆகையால், நான் உங்களை மனதார வேண்டிக்கொள்கிறேன்: உண்மையான கத்தோலிக்க நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காக, நித்திய அழிவின் ஆபத்தில் உள்ள பல ஆத்மாக்களின் இரட்சிப்புக்காக, மேரியின் மாசற்ற இதயத்தின் ஆட்சிக்காக ஒவ்வொரு நாளும் ஜெபமாலை ஜெபியுங்கள்.

        எனது குருத்துவஆசீர்வாதத்துடன்

        திரு. கார்ல் ஸ்டெலின்



        Dear Knights,
        Tomorrow begins another Marian month, the month of the Rosary. This year is a special October, as we celebrate the 450th anniversary of the victorious Battle of Lepanto which was won by the small Catholic army against the gigantic Turkish Islamic army thanks to the fervent prayer of the Rosary by many faithful in Europe.
         
        The Immaculata granted their fervent requests and saved Europe from the flood of paganism and persecution of Christians.
         

        Today we too must stand up for the faith!

         

        Therefore, I earnestly beg you: pray the Rosary every day for the restoration of the true Catholic Faith, for the salvation of so many souls in danger of eternal damnation, for the reign of the Immaculate Heart of Mary.

         
        With my priestly blessings
        Fr. Karl Stehlin


        Please download Here: Knight of the Immaculata - No. 26



        செவ்வாய், 21 செப்டம்பர், 2021

        Gregorian Chant - Kryie VI


        Gregorian Chant first came to exist in the 9th and 10th centuries in Western and Central Europe, and were named after the Pope St. Gregory the Great (540-604 A.D). These chants are performed A Capella, without musical support, and sung in Latin. Latin had been the language in use throughout the Roman Catholic Church almost since its foundation. When the Second Vatican Council introduced the use of native language in the Mass instead of Latin, in 1962, the tradition of Gregorian Chants started to decline. Today, Gregorian Chants are rarely sung during offices anymore, but can be heard in some retired monasteries. The sound created by the Monks performing Gregorian Chants, transports you to a time long gone. These chants had such long tradition — more than ten centuries — because they probably touch deep in one's very soul and spirituality, and brought a marvellous sense of inner peace. Music knows neither area, time nor language. If you wish, allow yourself to escape your busy life for a while, and re-connect with yourself. Close your eyes, and let the ancient sounds of Monks carry you away.

        சனி, 11 செப்டம்பர், 2021

        இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைப் பற்றிய ஒரு குறிப்பு. - A Note on the Second Vatican Council.

         A Note on the Second Vatican Council.


        இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைப் பற்றிய ஒரு குறிப்பு. 




        1962 முதல் 1965 வரை இந்த சங்கம் நடைபெற்றது.  ஆரம்பம் நன்றாகவேஇருந்தது. சங்கத்திற்கான அடிப்படை ஆவணங்கள் (Preparatory Texts) கத்தோலிக்க விசுவாசத்திற்கு ஏற்றபடியே தயார் செய்யப் பட்டிருந்தன. 

        அந்தோ! இந்த ஆவணங்கள் விரைவாக  ஓரங்கட்டப்பட்டன. முற்றும் புதிய ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன.  (இதன் பின்னணி என்ன, யார் இதற்கு காரணம் என்ற விபரங்கள் இணையதளத்தில் உள்ளன ) கூறப்பட்ட காரணம்: உலகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரியங்களைத் தான் இந்த சங்கம் முன் வைக்க வேண்டும். 

        பதித சபைகளை சேர்ந்த ஏழு பேர் இந்த சங்கத்தில் பார்வையாளர்களாய் இருந்தனர். சங்கத்தின் நடவடிக்கைகளில் நேரடியாக இவர்கள் கலந்து கொள்ளாவிட்டாலும், உணவு மற்றும் இடைப்பட்ட நேரங்களில் நடந்த உரையாடல்களின் வழியாக   இவர்களால் ஏற்ப்பட்ட பாதிப்பு மிக அதிகம்.

        இந்த சங்கத்தில் பங்கேற்ற ஒரு அதிமேற்றிராணியார் கூறியது: பெரிய அளவில் மூளை சலவை (Brainwashing) இந்த சங்கத்தின் போது நடைபெற்றது. 

        தொடரும்...

        மரியாயே வாழ்க!


        =================


        Second Vatican Council was in session between 1962 and 1965. The beginning was indeed good. All the Preparatory Texts had been prepared in accordance with the Holy Catholic Faith. 

        Alas! Soon these Texts were discorded and replaced by brand new Texts. (See the internet for the background to this and names of persons responsible). Reason given for this takeover: The outcome of the Council should be acceptable to the world.

        7 leaders from the Protestant sects had been invited as observers to the second Vatican Council. Though they didn't directly participate in the deliberations of the Council, they had much impact by way of conversations during the breaks between the sessions. 

        An Archbishop who participated in this Council said: There was much Brainwashing going on during this Council. 


        To continue...


        Ave Maria!

        புதன், 8 செப்டம்பர், 2021

        மகா பரிசுத்த தேவமாதாவின் பிறப்பு. - Nativity of the Blessed Virgin Mary.


        Nativity of the Blessed Virgin  Mary. 


        Happy Feast!


        மகா பரிசுத்த தேவமாதாவின் பிறப்பு. 



        புண்ணிய ஆன்மாக்கள் பலர் இந்த நாளுக்காக காத்திருந்தனர். சிலரே அதை கண்டு கொண்டனர். 

        மோட்சம் அக்களிக்கின்றது.  உலகில் நல்ல மனதுடைய மனிதர்களின் நல்  மகிழ்ச்சி. உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆன்மாக்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இந்த தெய்வீகக் குழந்தையை உற்று நோக்கிய வண்ணம் உள்ளனர். 

        நரகத்தில் எல்லாம் எதிர் மறை. 

        நமது இரட்சகரைப் பெற்றெடுத்த இந்த சிறு குழந்தை இன்று உலகில் பரவி வரும் சாத்தானிய சக்திகளுக்கு மிகவும் பயங்கரம்!


        மரியாயே வாழ்க!


        ================



        Many Holy Souls were waiting to see this Day. Only a few lived to see it with their eyes. 

        Heaven and all people of good will on Earth rejoice today. 

        Souls waiting in the Purgatory keep looking at this Little Baby with much expectation of their deliverance. 

        Alas! Everything is just the opposite in Hell. 

        This Baby grew up and gave birth to God the Incarnate and Our Saviour. 

        She is also a Destroyer! A Destroyer of all Evils let loose on the Earth in our end  times. 


        Ave Maria!