காவலான சம்மனசுகளின் திருநாள்.
LES SS. ANGES GARDIENS.
அவரவருடைய ஆத்தும சரீரத்துக்குப் பொல் லாப்பு வராதபடிக்கு அவரவருக்குக் காவலாக ஆண்டவர் ஒவ்வொரு சம்மனசைக் கட்டளையிட்டாரென்று சத்தியவேதம் நமக்குப் படிப்பிக்கின்றது. ஆதலால் அதன்பேரில் கொஞ்சமாவது சந்தேகப் பட இடமில்லை. அரூபியாயிருக்கிற அப்படிக்கொத்த சம்மனசு இஷ்டப்பிரசாதத்தோடு படைக்கப்பட்டுச் சுபாவ நன்மைகளினாலேயும் ஞான நன்மைகளினாலேயும் நிறையப்பட்டு மோக்ஷமடைந்து சர்வேசுரனுடைய தூதராய் இருக்கிறதாமே.
சகாயம் பண்ணுகிறவனுடைய மகிமைக்குத் தக்கது அந்தச் சகாயம் முக்கியமாய் எண்ணப்படுமல்லவோ? ஒரு இராசாவானவன் ஒரு புஷ்பமாத்திரங் கொடுத்தால் அது கொஞ்ச வஸ்துவாயிருந்தாலும் இராசாவினுடைய மகிமை முகாந்தரமாக அதைக் கனமாயெண்ணுவார்கள். இராசாக்களுடைய மகிமையைப் பார்க்கக் காவலான சம்மனசுக்கு அதிக மகிமை இருக்கிறதென்கிறதற்குச் சந்தேகமில்லை. ஆதலால் அவருடைய மகிமை முகாந்தரமாக மண்ணால் உண்டாக்கப்பட்ட மனுஷன் அவர் கையில் அற்ப சகாயமடைந்தாலும் அதைக் கனமாயெண்ண வேண்டும். ஆனால் காவலான சம்மனசுகள் மனுஷருக்கு உபகாரமாக எண்ணப்படாத சகாயங்களையும் வெகு பெரிதான காரியங்களையும் பண்ணுகிறார்களென்கிறதினால் அவைகளை எம் மாத்திரங் கனமாய் எண்ணவேண்டும். அப்படிக்கொத்த சகாயங்களெல்லாம் இன்னின்னதென்று வெளிப்படுத்த நம்மால் கூடாததினால் அவைகளைச் சொல்லிக் காண்பிக்கிறபோது உலோகத்திலுள்ள இராச்சியங்களெல்லாம் அடக்கமான சித்திரத்தில் எழுதுகிற சாஸ்திரிகள் பண்ணுகிற உபாயம் பண்ணுவோம்.
அதாவது: அவர்கள் மதுரை இராச்சியத்தை எழுதுகிறபோது தலையான பட்டணமாகிற மதுரையை மாத்திரம் எழுதுவார்களேயல்லாமல் அந்த இராச்சியத் திலிருக்கிற பட்டணங்களையும் ஊர்களையும் எழுதவில்லை. தஞ்சாவூர், ஆற்காடு, மைசூர் முதலிய இராச்சியங்களை எழுதுகிறபோதும் அப்படித்தானே எழுதுவார்கள். ஒரு பெரிய இராசாவுக்கு நீ மஞ்சணீர் குடித்த பிள்ளையாயிருக்கும்படி யாதொருவன் பிரயாசப்பட்டுச் செய்தால் அது உனக்குப் பாரமான சகாயமல்லவோ? இராசாக்களுக்கு இராசாவாகிற சர்வேசுரனுக்கு ஞானஸ்நானத்தின் வழியாக நீ சுவீகாரப் பிள்ளையாய்ப் இருக்கிறாய். ஞானஸ்நானம் பெறுகிறதற்கு முன்னே நீ சாகும்பொருட்டுப் பசாசு அநேகம்விசை வெகு உபாயம் பண்ணிற்று, அந்த விக்கினமெல்லாந் தள்ளி நீ ஞானஸ்நானம் பெற்றது காவலாயிருக்கிற சம்மனசின் சகாயமல்லவோ? ஞானஸ்நானம் பெறாதவன் ஞானஸ்தானம் பெறத்தக்கதாகக் காவலான சம்மனசு அவனுக்கு அடிக்கடி நல்ல புத்தி வருத்துவிக்கிறார். நீயும் வேறே ஒருவனும் பயணம்போகிறபோது கஷ்டததினாலேயும் வியாதியினாலேயும் பாம்பினாலேயும் நீ சாகாதபடி உன்னைக் காப்பாற்றினதும் அவருடைய உபகாரமல்லவோ? தண்ணீர் நிறைந்திருக்கிற பாழுங்கிணற்றில் நீ விழுகிற சமயத்தில் உன்னோடு கூடவந்தவன் உன்னைக் கைதூக்கினால் அது சனமான உபகாரந்தானே.
சாவானபாவங் கட்டிக்கொள்ளச் சமயம் வந்த போது காவலான சம்மனசின் ஒத்தாசையினால் நீ அந்தப் பாவக்குழியில் விழாதிருந்தாயே, அதைவிட இது பெரிய உபகாரமல்லவோ? இதுவும் இத்தனை விசையென்று கணக்கில்லை. கள்ளர் உன் உடைமை யெல்லாங் களவாடுகிற சமயத்தில் ஒருவனுடைய உதவியினால் அது தப்பினால் அவன் செய்தது பெரிய உபகாரமாயிருக்கும். ஞானஸ்நானத்தின் வழியாக நீ அடைந்த இஷ்டப்பிரசாதமும் அதைக் கொண்டு அடைந்த புண்ணியப்பேறுகளும் விலைமதியாத மாணிக்கமாயிருக்கிறதென்பது நிச்சயம். அதைப் பறிக்கத்தக்கதாக உலகம் பசாசு சரீரம் அநேகம் விசை பிரயாசைப்பட்டது. அந்த இஷ்டப்பிரசாதத்தை நீ இழந்து போகாதிருந்தது காவலான சம்மனசின் அநுக்கிரகமல்லவோ? இப்படிக்கொத்த அநுக்கிரகத்தை நீ அவர் கையில் கைக்கொண்டது ஒரு விசை மாத்திரமல்லவே, அநேகம்விசை அடைந்தாய்.
சிலபேர்கள் காவலான சம்மனசின் புத்தி கேளாமல் சாவானபாவத்தின் குழிக்குள்ளே விழுந்தபிற்பாடு அந்தக் குழியைவிட்டு எழுந்திருந்து ஆத்தும சுத்திகரம் பண்ணக் காவலான சம்மனசு உதவியாயிருந்தார். இது கொஞ்சமான உதவியோ? வியாதி யுள்ள உன்னை வயித்தியன்கிட்டக் கொண்டுபோகவாகிலும் வயித்தியனை உன் கிட்ட அழைப்பிக்கவென்கிலும் முயற்சி பண்ணினவன் உனக்குக் கனமான சகாயஞ் செய்கிறான். உன்னாத்துமம் பாவமாகிற வியாதியோடு இருக்கிறபோது அதைத் தீர்க்க நீ ஞான வயித்தியராகிற குருக்களிடத்துக்குப் போகவாகிலும் குருக்களை நீ இருக்கிறவிடத்துக்கு வரவென்கிலும் அநேகம்விசை கிருபை பண்ணினவர் காவலான சம்மனசல்லவோ? உன்னுடைய குற்றத்தைப் பற்றி உன்னைப் பிடிக்கச் சேவகர் தேடுகிறபோது யாதொருவனுடைய உதவியினால் நீ அவர்கள் கையில் அகப்படாதபடிக்குத் தப்பினால் அவன் பண்ணின சகாயத்தைக் கனமாய் எண்ணியிருப்பாயே, நீ சாவான பாவத்தோடு இருக்கிறபோது அசுப்பிலே சேத்தால் தப்பாமல் உன்னாத்துமந் தங்கள் கையில் அகப்பட்டு நரகத்திற்கு கொண்டு போகப்படுமென்று பசாசுகள் நினைத்திருந்தாற்போல் நீ சாகும்படியாகப் பசாசுகள் அநேகஞ் சமயம் வரப்பண்ணிற்று, அதையெல்லாங் காவலான சம்மனசு விலக்கினார். இதுவும் ஒருவிசை மாத்திரமல்லவே.
எத்தனை க்ஷணம் நீ சாவான பாவத்தோடிருந்தாயோ அத்தனை விசையும் அந்தப் பொல்லாப்பு வராதபடிக்குக் காவலான சம்மனசு விலக்கினார். உன் குற்றத்தினாலே நீ இழந்துபோன ஊர், மானியம், சம்பளம், பொருள் முதலிய ஆஸ்தியெல்லாந் திரும்புகிறதற்கு யாதொருவன் உதவிசெய்தால் அவனை நன்றாய்க் கொண்டாடுவாயே. உன்னிடததிலுள்ள சாவான பாவத்தினால் நீ இழந்துபோன இஷ்டப்பிரசாத முதலான நன்மைகளெல்லாந் திரும்பி வருகிறதற்குக் காவலான சம்மனசுதானே வழிபண்ணுகிறார். பஞ்சத்தில் உனக்குச் சாப்பாடு விசாரித்தவனை உன்னைக் காப்பாற்றின பிதாவென்று கூப்பிடுவாயே. உன்னாத்துமத்திற்கு ஞானப்போசனமாகிற புத்திகளைக் காவலான சம்மனசு தினந்தினம் உனக்குச் சொல்லியும் போதிவித்தும் வருகிறதல்லவோ? சண்டையில் சேவகன்பேரில் மழை சொரிகிறாப்போல் வருகிற அம்புகளையுங் குண்டுகளையும் அவன் கிட்ட இருக்கிறவன் தடுத்து விலக்கினால் அவன் அந்தச் சேவகனைக் காப்பாற்றினவனல்லோ? அம்புகள்போலவுங் குண்டுகள் போலவும் பசாசுகள் அடிக்கடி விடுகிற பொல்லாத விசாரங்கள் முதலிய சோதனைகள் உன் ஆத்துமத்தில் தையாதபடிக்குக் காவலான சம்மனசு ஒத்தாசை பண்ணுகிறாரல்லவோ?
நீ செபதபம் பண்ணவும் மற்ற அந்தந்தப் புண்ணியங்களைப் பண்ணவும் அவர் உன்னைக் கிளப்பி ஏவுகிறதுமல்லாமல் உன்னுடைய புண்ணியங்கள் எல்லாமும் ஆண்டவரைக் குறித்து நீ வைத்த சகல அடியுமுதலாய் எண்ணிக்கைப் பார்த்துச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிறார். உன்னுடைய சரீரத்துக்கு அவர் பண்ணுகிற சகாயங்களைப் பார்க்கவேண்டுமானால் இப்போது சொல்லப் போகிறதைக் கேள். தாயானவள் தன்னுடைய மகள் சரீரத்துக்குப் பண்ணுகிற சகாயத்தைப் பார்க்க வேறொருவரும் அதிகஞ் செய்யமாட்டார்கள். ஆயினும் அதைப் பார்க்கக் காவலான சம்மனசு உன் சரீரத்து க்கு அதிக உபகாரங்களைப் பண்ணினார். விசேஷமாய் நீ குழந்தையாய் இருக்கிறபோது பாம்பு முதலான விஷ ஜந்துகள், நாய், நரி, பூனை, நெருப்பு, தண்ணீர், கிணறு, சூரிக்கத்தி முதலியவற்றால் எத்தனை ஆபத்து உனக்கு வந்திருக்கும். உயரத்திலிருந்து கீழே விழுகிறதும், கல்லெறி இது முதலானவைகள் வழியாகச் சாவு, காயம் வரக்கிட்டின தறுவாயும் அநேகம்விசை உனக்கு வந்தது. அந்தச் சமயத்தில் நீ தனித்திருந்து அவைகளைத் தள்ள உள்ள புத்தியும் பெலனும் பற்றாதிருக்கையில் காவலான சம்மனசல்லவோ உன்னைத் தப்புவித்தது.
பஞ்சத்தில் தாய் மார்கள் பிள்ளைகளை விற்றுப்போடுகிறதானாலும் விட்டுவிட்டு அப்பாலே போகிறதென்கிலும் அநேகம் விசை சம்பவித்தது. ஆனால் காவலான சம்மனசால் அப்படிக்கொத்த குறை வராது, தாயானவள் பிள்ளைகளைச் சில வருஷங் காப்பாற்றின பிற்பாடு அவைகளைவிட்டுப் பிரிந்துபோவாள். ஆனால் காவலான சம்மனசு ஒருகாலும் உன்னைவிட்டுப் பிரிகிறதில்லை. சில தாய்மார்கள் தாங்கள் சொன்னபடி பிள்ளைகள் கேட்கவில்லையென்று கண்டு அவர்களைக் கைவிடுவார்கள் காவலான சம்மனசின் சொற்படி நீ கேளாதிருந்தாலும் அவர் உன்னைக் கைவிடுகிறதில்லை.
ஆகையால் தாய்மாரைப் பார்க்கக் காவலான சம்மனசு உன் சரீரத்துக்கு அதிக சகாயம்பண்ணுகிறார். உன் நம்பிக்கையுள்ள ஊழியக்காரன் எப்போதும் எங்கும் உன்னிடத்தில் காத்திருந்தாலும் அவன் நித்திரை போகிறபோதும் சாப்பிடுகிறபோதும் வெவ்வேறே அவசரமான காரியம் அவன் செய்கிற போதும் அவன் உன்கிட்டக் காத்திருக்கவில்லை. காவலான சம்மனசோவெனில் இடைவிடாமல் உன்னைக் காத்திருக்கிறார். : நித்திரைபோகிறபோது உன்னை அறியாமல் உன்கிட்டவந்த பாம்பு முதலான துஷ்ட ஜெந்துக்கள் உன்னைக் கடியாதபடிக்கு விலக்குகிறது காவலான சம்மனசல்லவோ? உனக்கு வந்த துக்கமான வேளையிலும் அவதிநேரத்திலும் உன்னுடைய சிநேகிதர் உன்னை விட்டுவிட்டாலுங் காவலான சம்மனசு அந்தச் சமயங்களில் ஆறுதலாயிருப்பார். நீ போகிற பயணத்தில் காட்டில் உன்னைத் துடர்ந்த புலி கடியாத படிக்கு ஒருவன் அதைத் துரத்தினால் அது கனமான சகாயமென்பாய். நரகப் புலியாகிற பசாசு இரவும் பகலும் எப்போதும் உன்னைச் சுற்றித்திரிந்து உன் குடியைக் கெடுக்கத் தேடுகையில் அந்தப் பொல்லாப்பில் நின்று காவலான சம்மனசு உன்னைக் காப்பாற்றினார். இன்று வரைக்கும் உன்னாத்துமத்துக்குஞ்சரீரத்துக்குங் காவலான சம்மனசு செய்த புதுமை கணக்கிலடங்குமோ?
ஆயினும் நீ நூறு வருஷத்துக்கு மேலே பூலோகத்திலிருந்தாலும் அவர் உனக்குச் செய்து கொண்டுவந்த உபகாரங்கள் நீ சாகிறசமயத்தில் காணப்படும். நம்பிக்கையுள்ள சேவகன் சண்டையில் தன் எசமானைக் கைவிட்டதினால் சிலவிசை சத்துருக்கள் கையில் அகப்படுவான், சீ சாகிறபோது பசாசுகளோடு செய்யப்போகிற கனமான யுத்தத் தில் காவலான சம்மனசு உன்னைக் கைவிடாமல் வே நே சம்மனசுகளையும் அழைப்பித்து உனக்குத் தோர்வை வராதபடிக்குச் சுறுசுறுப்போடு உதவியாயிருப்பார்.
நீ வேண்டுமென்று கெட்டால் கெடுவாயொழிய அவர் உதவிக் குறையினால் உனக்குக் கேடு வரமாட்டாது. மீளவும் உன்னுடைய தலையை வெட்ட அரண்மனையில் ஆலோசனை நடக்கிற போது அந்த ஆக்கினை வராதபடிக்கு ஒருவன் உனக்காகப் பேசினால் அது கனமான சகாயந்தானே. தனித்தீர்வையில் சுவாமி உனக்கு அகோரமான தீர்வையிடாமல் நல்ல தீர்வையிடத்தக்கதாக உன்னுடைய நற்கிரியை புண்ணியங்களெல்லாம் காவலான சம்மனசு ஆண்டவர் சந்நிதியில் காண்பித்துச் சர்வேசுரனை உனக்காக வேண்டிக்கொள்ளுவார். நீ செத்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் போனால் அந்த நெருப்பிற்தானே காவலான சம்மனசு வழியாக உனக்கு ஆறுதல் வரும். கடன்முகாந்தரமாக நீ விலங்கில் கிடக்கிறபோது அந்தக் கடன் தீர்க்க வகையில்லாத நீ சுற்றித்திரிந்து யாசகம் பண்ணக் கூடாததை ஒருவன் கண்டு அவன் தானே அங்கங்கே போய் யாசகம் பண்ணி அந்தப் பணத்தைக் கொடுத்துக் கடனைத் தீர்த்து உன்னை விலங்கைவிட்டு விடுவித்தால் அதுவுங் கனமான உபகாரந் தானே. அந்தப்பிரகாரமாய் நீ உத்தரிக்கிறஸ்தலத்திற் போனால் அக்கினிவிலங்கு போடப்பட்ட நீ கிறீஸ்து வர்கள் செய்கிற புண்ணியங்கள் வழியாய் உன் உத்தரிப்புக்கடனைத் தீர்க்க நீ சுபாவமாய்ப் பூலோகத்துக்கு வரக்கூடாதிருக்கும். ஆண்டவர் உத்தாரத்தின்படி யே உனக்குக் காவலான சம்மனசு உலோகத்திற் போய் அந்தந்த மனுஷர் உன்னை நினைக்கப்பண்ணி உன்னாத்துமத்தைக் குறித்து அவர்கள் புண்ணியம் பண்ணப் புத்திசொல்லுவார்.
உன்னை இராசபட்டத்திலே வைக்கக் கூட்டிக்கொண்டு போகிறவன்பேரில் உனக்குப் பூரண சந்தோஷம் வருமே. நீ உத்தரிக்கிறஸ்தலத்தில் உத்தரித்து முடிந்த பிற்பாடு மோக்ஷத்தில் உன்னைக் கொண்டுப் போகிறவர் காவலான சம்மனசு அல்லவோ? ஆகையால் நட்சத்திரங்களை எண்ணக்கூடாதென்கிறாப்போல் - காவலான சம்மனசு செய்கிற சகாயங்களை எண்ணக் கூடாது. இப்போது சொல்லப்பட்டதெல்லாங் கேட்டவனே, அப்படி சம்மனசு உன்னைக் காத்திருக்கத்தக்கதாகக் கட்டளையிட்ட ஆண்டவரை நீ முந்தமுந்தத் தோத்திரம் பண்ண வேண்டும். இதல்லாமல் சங்கை, பத்தி, நம்பிக்கை இந்த மூன்றையும் உன் காவலான சம்மனசுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர் மகா மகிமையுள்ள வராயிருக்கிறதினால் அவருக்கு வெகு சங்கை பண்ணவேண்டும்.
நீ குருவானவரைச் சங்கித்தால் அவர் முன்பாகப் பாவமுள்ள தூர் கிரியைச் செய்யமாட்டாயே? அப்படியிருக்கக் குருவின் முன்பாகச் செய்யலாகாத பாவங்களைக் காவலான சம்மனசின் முன்பாகச் செய்யலாமோ? ஆகையால் அவர் எப்போதும் உன்னோடேயிருக்கிறதினால் அவருக்குப் பண்ணவேண்டிய சங்கை முகாந்தரமாக ஒருக்காலும் பாவஞ் செய்யாதிருக்க வேண்டும். இதன்றியே அவர் உனக்கு எண்ணப்படாத சகாயங்களைப் பண்ணினதினால் அவர்பேரில் வெகு பத்திவைக்க வேண்டியிருக்கின்றது. யாதொரு துரை உனக்குக் கொஞ்சம் பட்சங் காண்பித்தால் உன்னுடைய மனதை அவனுக்கு ஒப்புக்கொடுத்து அவனை மறவாதிருக்கையில் காவலான சம்மனசை மறந்துபோகலாமோ?
அவருக்கு நன்றியறியாதத்தனங் காண்பிக்கலாமோ? ஆகையால் உனக்காக மன்றாடுகிற அந்தந்த அர்ச்சியசிஷ்டர்கள் பேரில் நீ வைத்த பத்தியைப்பார்க்கக் காவலான சம்மனசின் பேரில் அதிக பத்திவைக்கவேண்டும். பின்னையும் அவர் மிகுந்த வல்லமை சத்தியுடையவராகவுந் தயையுள்ளவராகவும் விசுவாசப் பிரமாணிக்கமுள்ளவராகவும் இருக்கிறதினாலே உன்னுடைய நம்பிக்கையைக் குறையற அவர்பேரில் வைக்கிறது நியாயந்தான். உன்னுடைய ஆத்துமத்துக்குஞ் சரீரத்துக்கும் எத்தனை பெரிய அவதிவந்தாலும் அதைத் தள்ளுகிறதற்கு அவர் பலமுள்ளவர்தானே . நீ எத்தனை பாவியாயிருந்தாலும் உன்பேரில் அவர் தயையாயிருப்பார். அவர் உனக்கு ஆண்டவரால் குறிக்கப்பட்டதினால் உன்னைக் கை விடார்,
ஆகையால் உன் ஆத்துமத்துக்குஞ் சரீரத்துக்கும் ஆபத்து வருகிற சமயத்தில் எனக்குக் காவலாயிருக்கிற சம்மனசே, இதோ எனக்குக் கேடுவருகிறாப் போலிருக்கிறது, என்னை இரட்சியுமென்று மகா விசுவாசத்தோடு சொல்லவேண்டும். ஆனால் உன் பாவங்களினால் உன் காவலான சம்மனசின் உபகாரங்களுக்குத் தடைவைக்காமல் உன் சுகிர்த நடக்கையாலும் பத்தியுள்ள மன்றாட்டினாலும் அவருடைய உதவி சகாயங்களுக்குப் பாத்திரவானாகக் கடவாய். தினந்தினங் காலமே விழித்தபிற்பாடு அவரைப் பார்த்து வேண்டிக்கொள்ளத் தக்கதாவது:
எனக்குக் காவலாயிருக்கிற சம்மனசானவரே! இந்த இராத்திரியில் என்னாத்துமத்துக்குஞ் சரீரத்துக்குந் தேவரீர் செய்த உபகாரங்களை நான் நன்றி யறிகிறேன். இன்றைக்குத் தேவரீர் என்னாத்துமத்தையுஞ் சரீரத்தையுஞ் காக்க உம்மை மன்றாடுகிறேன். ஆமென்சேசு
இராக்காலத்தில் நித்திரை போகுமுன்னே அவரைப்பார்த்து வேண்டிக்கொள்ளத் தக்கதாவது:
எனக்குக் காவலாயிருக்கிற சம்மனசானவரே ! இன்றைக்குத் தேவரீர் என்னாத்துமத்துக்குஞ் சரீரத்துக்குஞ் செய்த உபகாரங்களை நான் நன்றியறிகிறேன். இந்தவிராத்திரி தேவரீர் என்னாத்துமத்தையுஞ் சரீரத்தையுங் காப்பாற்றத் தக்கதாக உம்மை மன்றாடுகிறேன். ஆமென்சேசு.
விவரம். காவலான சம்மனசின்பேரில் விசேஷ தோத்திரமறிய ஆசையுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைப் புதுமைகளை வாசிக்கவேண்டுமென்று அறியக்கடவீர்களாக.
to Buy Tamil Christian Books (Catholic) Click here
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக