Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 24 ஜனவரி, 2024

தேவதிரவிய அனுமானங்கள் III - Extreme Unction (Part 1)

 அவஸ்தைப்பூசுதல்


 நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி. 1941

ற்ற தேவதிரவிய அநுமானங்களைப் போலவே, அவஸ்தை  பூசுதலும் நமது திவ்விய இரட்சகரால் ஏற்படுத்தப்பட்டது தான்; ஆனால், சுவிசேஷங்களில் அதைப் பற்றி விபரம் ஒன்றுமில்லை என்பது உண்மை. ஆயினும், அர்ச். இயாகப்பருடைய நிருபத்தில் இது தெளிவாய் கூறப்பட்டிருக்கிறது. அவர் சொல்வதாவது: "உங்களில் யாதொருவன் வியாதியாயிருக் கிறானோ. அவன் சபையின் குருக்கனை வரவழைப்பானாக, அவர்கள் ஆண்டவரு டைய நாமத்தினாலே, அவனைத் தைலத்தால் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணுவார்கள். அப்போது விசுவாசமுள்ள ஜெபம் வியாதிக்காரனை இரட்சிக்கும். ஆண்டவரும் அவனுடைய வருத்தத்தை இலகுவாக்குவார் அன்றியும் அவன் பாவங்களோ டிருந்தால் அவைகள் அவனுக்கு மன்னிக்கப்படும்" (இயாக. 3:14-15).

குருவானவரை அழைத்தல்

1. வியாதிக்காரன் வைத்தியரால் கைவிடப்படும் வரையில் காத்திராதே. இன்னும், பேச்சு மூச்சின்றிக் கிடக்கு வரையில் காத்திருப்பது பெருந்தவறு.

2. வியாதிக்காரன் புத்தித் தெளிவோடு இருக்கும் போதே குருவானவரை அழைக்கும்படி அவனது உறவினர்கள் முயற்சிக்க வேண்டும்.

3. குருவானவரை அழைப்புதற்கு. சிறு பிள்ளைகளையாவது, வீரம் சொல்லத் தெரியாதவர்களையாவது அனுப்ப கூடாது. வியாதிக்காரனுடைய இருப்பிடம், வியாதியின் தன்மை. இவைகளைப்பற்றிய விபரங்களும், திவ்விய நற்கருணை உட்கொள்ளக்கூடுமா, அன்னபானம் உள்ளே செல்கிறதா, வாத்தி அல்லது இடைவிடாத இருமல் உண்டா என்னும் கேள்விகளுக்குச் சரியான பதிலும் சொல்லத் தெரிந்த்த ஆளை அனுப்பவேண்டும்.

4. குருவானவரை அழைப்பதில் தாமதிக்கக் கூடாது என்பது சரி, ஆனால், அநாவசியமாய் அல்லது காத்திருக்கக் கூடியபோது, இராத்திரியில் அழைப்பது சரியன்று.


திவ்விய நற்கருணை கொடுப்பது

1. குருவானவரை அழைக்குமுன், பின் வருங் காரியங்களைக் கவனித்துத் திட்ட மிட்டுக் கொள்ள வேண்டும்.

(1) ஒரு சிறு மேசையும், அதன்மேல் ஓர் வெள்ளைத் துணியும் விரித்து வைக்கவும்.

(2) மேசையின்மேல், ஒரு பாடுபட்ட சுரூபமும், இரண்டு மெழுகுவர்த்திகளும் (மந்திரித்தவைகள்) ஓர் சிறு பாத்திரத்தில் தண்ணிரும் இருக்கவேண்டும். இந்தத் தண்ணிர் குருவானவர் நற்கருணை கொடுத்தபின், தமது விரல் நுனியில் ஓட்டிலிருக்கக்கூடிய நற்கருணை துகள்களைக் கழுவி, வியாதி யுற்றவருக்குக் கொடுப்பதற்காக; ஆகையால். இந்தத் தண்ணீர் அடங்கிய பாத்திரம் வெகு சிறிதாயிருக்க வேண்டும்.  

(3) குருவானவர் கடைசியில் தமது கரங்களைக் கழுவிக் துடைப்பதற்காக வேறொரு பாத்திரத்தில் தண்ணீரும், ஒரு துவாலையும் வைத்திருப்பது நல்லது.

(4) வியாதியுற்றிருப்பவரின் முகம், சுரங்கள், பாதங்களை கழுவிச் சுத்தமாய் வைத்துக்கொள்ள வேண்டும்

2. மேற்கூறியவைகளைத் தயாராக வைத்துக்கொண்டு. குருவானவருண ய வருகையை எதிப்பார்த்திருக்கவும்.

3. குருவானவர் வருகிறாரென்று அறிந்தவுடன், எதிர் கொண்டுபோய். அவரை அறைக்குள் அழைத்துச் செல்லவும்.

4. அவர் பிரவேசித்ததும், அங்குள்ள அனைவரும். திவ்விய நற்கருணைக்கு ஆராதனையாக முழத்தாளிலிருக்க வேண்டும்.

5. குருவானவரை அழைத்தாயிற்று. கடமை முடித்து போயிற்று என்றாற்போல், அவர் வந்ததும் வீட்டிலுள்ளவர்கள் வழக்கம் போல் தங்கள் வேவைகளைக் கவனித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பது திவ்விய நற்கருணைக்கு அவசங்கையும், அநாச்சாரமும், தகுதியற்ற செயலுமாகும்.

6. வியாதியுற்றவர் அருகிலிருந்து, சமயத்திற்கு ஏற்ற உதவிபுரிந்து, அவருக்காக வேண்டிக்கொள்வதே தகுதியானது.

7. குருவானவர் வீட்டிற்குள் பிரவேசிக்கையில், "இந்த வீட்டிற்கும் இதில் வசிக்கிறவர்களெல்லோருக்கும் சமாதானம் உண்டாவதாக" என்று சொல்கிறார். உடனே. "ஆண்டவரே, என்னை ஈசோப் என்கிற புல்லினால் தெளிப்பீர், நானும் சுத்தமாவேன் : என்னைக் கழுவுவீர், நானும் பணிக்கட்டி யிலூம்  வெண்மையாவேன்" என்னும் சங்கீத வசனங்கனைக் கூறிக்கொண்டு, வியாதியுற்றவர் மேலும், அறையையும், அங்கு இருக்கிற மற்றவர்கள் மேலும் தீர்த்தத்தைத் தெளிப்பார்.

8. பிறகு, வியாதியற்றவர் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டியிருந்தால். அவர் அதை செய்துமுடிக்கிறவரையில், மற்றவர்கள் அறையைவிட்டு அகன்றுபோய், பாவமன்னிப்பு அளித்தபின்னர், திரும்பிவந்து முழத்தாளிலிருப்பார்கள்.

9. அப்போது, இலத்தீனில் அல்லது தமிழில் பாவசங்தீர்த்தன மந்திரம் சொல்லவேண்டும். அதற்குப்பின் திவ்விய நற்கருணை கொடுக்கப்படும்.

10. திவ்விய நற்கருணை கொடுப்பதற்காக மாத்திரம் குருவானவர் வந்திருந்தால், அவர் வீட்டிலிருந்து திரும்பிப் போகுமுன், திவ்விய நற்கருணைச் சிமிளைக்கொண்டு ஆசீர்வதிக்கிறாராவென்று கவனிக்கவும்: அவ்விதம் செய்வாராகில், இன்னும் திவ்விய நற்கருணை அவரது கரங்களில் இருக்கிறதென்று அறித்து. அவர் போகும்வரையில் அதற்கு ஆராதனை செய்யவும்.

11. இல்லாவிடில், வியாதியுற்றவர் அருகிலிருந்து. அவரது உள்ளத்தில் இப்போது வீற்றிருக்கும் ஆண்டவருக்கு அவர் நன்றி செலுத்துவதற்கு உதவிபுரியுமாறு, திவ்விய நற்கருணை உட்கொண்டபின் சொல்லத்தகும் முயற்சிகளை வாசிப்பாயாக.

திவ்விய நற்கருணை (அவஸ்தை நன்மை) கொடுத்த பின், இந்தத் தேவதிரவிய அநுமானமாகிய அவஸ்தைபூசுதல் கொடுப்பது வழக்கம்; வியாதியுற்றவர் திவ்விய நற்கருணை கொள்ளக்கூடாதாகில் முத்தின 7-வது பிரிவில் கூறியுள்ள பிரகாரம் செய்தானவுடன், அவஸ்தைபூகதல் கொடுக்கப்படும்.

அவஸ்தைப்பூசுதல் யாருக்கு கொடுக்கக் கூடாது?

1. ஞானஸ்தானம் பெறாதவர்களுக்கும்:

2. திருச்சபைக்குப் புறம்பாயிருக்கிறவர்களுக்கும்; உதாரணமாக: பதிதர், பிரிவினைக்காரர், திருச்சபையால் சபிக்கப்பட்டவர்கள் முதலியவர்கள்,

3. புத்திவிபரம் அறியாத குழத்தைகளுக்கும்;

4. பிறந்த நாள் துவக்கி எப்போதும் பைத்தியம் பிடித்து இருப்பவர்களுக்கும்:

5. தங்கள் பாவங்களுக்குக் கஸ்தியும், மனஸ்தாபமும் இல்லாதவர்களுக்கும்: இப்படியே புறத்தியாருடைய சொத்துக்காவது, நல்ல பேருக்காவது வருவித்த நஷ்டத்துக்கும் பரிகாரம் செய்யக் கூடுமாயிருத்தும். அதைச் செய்ய மனது இல்லாதவர்களும், பகை வர்மமாயிருந்து, தங்கள் எதிராளிகளோடு சமாதானமாய்ப் போக சம்மதியாதவர்களும்.

6 பாவ அந்தஸ்தில் பகிரங்கமாய் ஜீவிப்பவர்களுக்கும்; உதாரணமாக: திருச்சபைக் கலியாணம் பண்ணாமல் தனக்கு மனைவியாக ஏற்றுக்கொண்ட வைப்பாட்டியை அகற்றிப் புறம்பாக்க மனமில்லாதவர்கள்.

மேற்கூறப்பட்டவர்களுக்கு அவஸ்தை பூசுதல் கொடுக்கக் கூடாது. இது திருச்சபைக் கட்டளை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக