Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 26 ஜனவரி, 2024

அர்ச். ரெமிஜியார் திருநாள் St. Remigius (Oct. 1)


அக்டோபர் மீ முதல் தேதி
அர்ச். ரெமிஜியார் திருநாள். St. REMI.

பிராஞ்சிராச்சியத்திலே உயர்ந்த வமிசமும் ஆஸ்தியும், மிகுந்த பிராயமுமுள்ள தாய் தகப்பனிடத்திலே அர்ச். ரெமிஜியார் பிறந்தார். அவர் வளர்ந்து நல்ல குணமாய் இருந்ததினாலேயும் அநேகம் புண்ணியங்களை அடைந்ததினாலேயும் அவரை அறிந்தவர்கள் அவர்பேரிலே பட்சமாயிருந்து அவரோடே கூடச் சஞ்சரிக்கிறதற்கு ஆசையாய் இருந்தார்கள். அவருக்கு இருபத்திரண்டு வயது நடக்கிறபோது அவரிட த்தில் விளங்கின அதிசயமான அர்ச்சியசிஷ்டத்தனமுஞ் சாஸ்திரங்களு முகாந்தரமாக றென்ஸ் என்கிற பட்டணத்தார் அந்தப் பட்டணத்துக்கு அவரை மேற்றிராணியாராகக் கேட்டித் துணிந்தார்கள். ஒரு வரை ஏற்படுத்த வந்திருந்த மேற்றிராணிமார்களும் அதற்குடன்பட்டுப் பிராயக்குறையினாலே இருந்த விக்கினத்தை விசேஷ உத்தரவினாலே நீக்கினார்கள். ரெமிஜியார் அந்தப் பட்டத்துக்கு வேண்டிய சாமர்த்தியமும் வயதூந் தம்மிடத்தில் இல்லையென்று சொல்லி அதற்குச் சம்மதிக்கமாட்டேனென்று இருக்கையிலே அந்தப் பட்டத்துக்கு அவர் பாத்திரந்தானென்கிற அடையாளமாகப் புதுமையாகப் பரமண்டலத்திலிருந்து பிரகாசமிறங்கி அவர் தலைமேலே நிற்கிறதை எல்லாருங்கண்டு அந்தப் பட்டத்திலே அவரை வைத்தார்கள். அந்தப் பட்டத்தைப்பற்றி அர்ச். ரெமிஜியார் என்கிறவர் தாம் தமது விசரரணைச் சனங்களுக்கு ஞானத்தகப்பனாராய் இருக்கிறோமென்று நினைத்து அவர்களுடைய ஆத்துமத்தையுஞ் சரீரத்தையும் பட்சமுள்ள தகப்பன்போலே குறையில்லாமல் விசாரித்து வந்தார்.

சர்வேசுரன் தமது விசாரணைக்கு ஒப்பித்த ஆத்துமாக்களின் இரட்சணியத்துக்கு அவர் அத்தியந்த சாக்கிரதையோடே மிகவும் பிரயாசைப்பட்டார். அடிக்கடி வேத வசனங்களைத் தியானித்துத் தேவ வாக்கியத்தைப் பிரசங்கித்து வருவார். அதனால் திரளான பாவிகளும் பதிதர்களும் அக்கியானிகளும் மனந்திரும்புவார்கள். அவரிடத்தில் விளங்கின அர்ச்சியசிஷ்டத்தனமும் அவர் செய்த பத்தியுள்ள செபங்களுந் தேவ வரத்தால் பண்ணின பற்பல புதுமைகளும் அவருடைய தாழ்ச்சி சாந்த குண முதலிய புண்ணியங்களும் மனுஷர்களைச் சத்திய வேதத்துக்குத் தேவ ஊழியத்துக்கும் உட்படுத்த மிகவும் உதவியாயிற்று. ஆகையால் அவர் பிராஞ்சுக்காரர்களுடைய அப்போஸ்தலராவதற்கு பாத்திரமானார். ஏறக்குறைய 50 வருஷந் துவக்கிக் கலியா தேசம் உரோமை இராயர்களுக்குக் கீழ்ப்பட்டிருந்தது, மாவர்களின் ஆளுகையில் அதிலே கிறீஸ்துவே தம் விஸ்தாரமாய்ப் பாம்பியும் விளங்கியுமிருந்தது.

அப்படியிருக்க பிரெஞ்சுக்காரர் வடகீழ்த்திசையினின்று புறப்பட்டு வந்து அத்தேசத்தில் ஒரு பெரும் பங்கு தங்கள் வசமாக்கிக்கொண்டு அத்தேசத்தார்களோடே கலந்திருந்தார்கள். அக்காலத்தில் அவர்களை ஆண்டிருந்த க்ளோவீஸ் என்கிற இராசா தன் சனங்களோடே இன்னம் அக்கியானியாய் இருந்ததால் க்ளோத்தீல்தென்னும் பத்தியுள்ள கிறீஸ்துவளை விவாகஞ்செய்து அவளுடைய நல்ல புத்தியைக் கேட்டுச் சத்தியவேதக் கோவில்களின்பேரிலும் மேற்றிராணியார்களின் பேரிலும் விசேஷமாய் அர்ச். ரெமிஜியார் பேரிலுந் தயவாயிருந்தான். அப்படியிருக்க ஜெர்மனி தேசத்தினின்று ஓர் பெரும்படை பிராஞ்சு இராச்சியத்தின் மீது போர் தொடுத்ததினால் க்ளோவீஸ் இராசா தன் சேனைகளோடே அவர்களை எதிர்க்கப் போய்ச் சண்டை தொடுத்தான். அதிலே அவன் பாரிசமாயிருந்த ஓர் சிற்றரசன் காயம்பட்டதினால் அவனுடைய சேனை கலங்கி பயந்தோடவே இராசாவின் படையும் பயப்படத்துடங்கிற்று.

அப்போது க்ளோவீஸ் என்கிற இராசா கண்ணீர் நிறைந்த நேத் நிரத்தோடே வானத்தை நோக்கிக் க்ளோத்தீல் தென்பவளால் சுயஞ்சீவியரான கடவுளின் சுதனாக நிச்சயிக்கப்பட்டிருக்கிற சேசுகிறீஸ்துவே உம்மை நம்பிக் கேட்கிறவர்களுக்குச் செயங்கொடுக்கிறவராகச் சொல்லப்பட்டிருக்கிறீரே, உமது உதவியை கேட்கிறேன் ; நான் உமது உதவியை இரந்து கேட்கிறேன். என் சத்துருக்களை வென்று செபசீலனாகும்படிச் செய்வீராகில் உம்மில் விசுவாச நம்பிக்கை வைத்து உமதுபேரால் ஞானஸ்நானம் பெறுவேன்; என் தேவர்களை வியர்த்தமாய் மன்றாடி 
வேனென்றான். இந்த மன்றாட்டைச் சொன்ன மாத்திரத்தில் தெய்வச் செயலால் செயமானது பிசாஞ்சுக்காரருடைய பாரிசமாய்த் திரும்பிற்று.

இராசா தான் கொடுத்த வார்த்தைப்பாட்டின் படி கிறீஸ்துவனாகத் தீர்மானித்து காதறவுத்தார்களுக்குப் புத்திசொல்லி அவர்களையும் அதற்கு உடன்படுத்தினான். அர்ச். ரெமிஜியார் அநேகங் குருக்களோடே கூட அவர்களுக்குச் சத்திய வேதத்தைப் போதித்து ஞானஸ்நானத்துக்கு அவர்களை ஆயத்தப்படுத்தினார். அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கப்போகிற சமயத்தில் அவர்களுக்கு உத்தம பிரசங்கஞ் செய்கிறபோது அவருடைய முகம் அதிசயமான பிரகாசத்தால் விளங்கவே இனி பிராஞ்சு இராசாக்களுக்கிருக்கும் மகிமை வல்லமையைத் தீர்க்கத்தரிசனமாய் அறிவித்தார்.
 இராசாவோடே அவருடைய சகோதரிகள் இருவரும் மூவாயிரம் பிரபுக்கள் முதலிய துரைகளுந் திரளான இராணுவத்தாரும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அர்ச். ரெமிஜியார் இராசாவுக்கு ஞானஸ்நானங் கொடுக்கப்போகிற நேரத்தில் அவனை நோக்கிக் கர்வமுள்ள சிக்காம்பர் சனத்தானே தலை குனிந்து சாந்தகுணத்தைப் பற்றிக்கொள். நீ வணங்கினதைச் சுட்டெரித்து முந்திச் சுட்டெரித்ததை வணங்கென்றார். அச்சமயத்தில் அர்ச். தைலங் கொண்டுவரவிருந்த தேவ ஊழியன் சன நெருக்கத்தைப்பற்றி சேரக்கூடாமற் போனதினால் அர்ச்சியசிஷ்டவர் வானத்தை நோக்கி மன்றாடினார். உடனே அதிசயமான வெண்மையுள்ள ஓர் புறாவானது வானத்தினின்றுவந்து தன் மூக்கினால் கவ்வியிருந்த தெய்வ தைலம் நிறைந்த ஓர்குப்பியை அர்ச். ரெமிஜியார் கையிற்
கொடுத்தது. அத்தைலம் இராசாவின் ஞானஸ்நானத்துக்கும் அவருக்குப் பண்ணின இராச பட்டாபிஷேகத்துக்கும் உதவினது. பின்னும் அந்நாள் வரைக்கும் பிராஞ்சு இராசாக்களின் பட்டாபிஷேகத்துக்கு அனவே வழங்கிவந்தது. ஞானஸ்தானம் பெற்ற பின்பு க்னோவீஸ் இராசா அர்ச், ரெமிஜியாரை மிகவும் வணங்கி அவருக்குங் கோவில்களுக்கும் அநேக மானிய முதலான நன்மை உதவிகளைக் செய்து வந்தார். பின்னையும் அர்ச். ரெமிஜியார் பட்ட பிரயாசத்தினாலும் அவர் செய்த அற்புதங்களினாலுங் காட்டின உத்தம புண்ணிய மாதிரிகைகளினாலுஞ் சத்தியவேதஞ் சீக்கிரத்தில் பிராஞ்சுக்காரர்களுக்குள்ளே பரம்பிற்று. தாங்களும் அர்ச்சியசிஷ்டர்கள் ளான அவருடைய சீஷர்களில் அநேகர் அவர்களைச் சத்தியவேதத்துக்குட்படுத்த அவருக்கு மிகவும் உதவியாய் இருந்தார்கள். அவர்களிற் சிலரை அவர் சில பட்டணங்களில் மேற்றிராணிமார்களாக ஏற்படுத்தினார்.

அவர் இருந்த பட்டணத்தில் ஒரு சமயத்தில் பற்றின நெருப்பினால் வெகு சேதமாகிறதை அறிந்து அங்கே போய் அந்த அக்கினிமேலே அர்ச்சியசிஷ்ட சிலுவையை வரைந்தார். அப்போது அந்த நெருப்பெல்லாம் உருண்டையாய்ச் சேர்ந்து அப்புறம் போகிறதை அவர் கண்டு பிறகேபோனார். மறுபடியும் அது அப்பாலே போயிற்று. பின்னும் அவர் அதைத் துரத்துகிறாப்போலே கூடவே போ னதினாலே அது பட்டணத்துக்குப் புறத்தியிலே போயிற்று. இதுவுந்தவிர வரப்போகிற பஞ்சத்தை அவர் ஆண்டவரால் அறியப்பட்டு அந்தப் பஞ்சத்தில் பிச்சைக்காரர் பிழைக்கத்தக்கதாக வெகு தானியங்களை விலைக்கு வாங்கிப் பத்திரமாய்க் கட்டிவைத்தார் சிலபேர்கள் அதைக்கண்டு அவர் இனிமேல் அதை விற்று ஆதாய்மெடுக்கிற முகாந்தரமாகத் தானியம் வாங்கிக் கட்டுகிறாரென்று நினைத்து அவர்பேரில் புறணியாகிற வெகு புறணி பேசிக்கொண்டார்கள்.

அந்தப் பாவமுகாந்தரமாகச் சர்வேசுரன் அவர்களுக்கு ஆக்கினையாகக் கனமான வியாதியைக் கொடுத்ததுமல்லாமல் அவர்களுடைய பிள்ளைகளும் பேரன்மாரும் அந்த வியாதியோடு பிறந்தார்கள். அர்ச். ரெமிஜியார் தொண்ணூற்றாறு பிராயம் வரைக்குஞ் சுறுசுறுப்போடு புண்ணியங்களைச் செய்து கடைசியாய் மோக்ஷத்தில் அளவில்லாத பலனை அடையத் தக்கதாகக் காலம்பண்ணினார்.

கிறீஸ்துவர்களே! இராசாவானவன் சர்க்கரை அளிக்கிற சமயத்தில் அநேகம் பேர்கள் அதை ஆசையோடு வாங் குவார்கள். அதைவிட அர்ச். ரெமிஜியாரிடத்திலுண்டான ஞானச் சர்க்கரையாகிற புண்ணியங்களை நீங்கள் ஆசையோடு கைக்கொள்ளவேண்டும். அவரிடத்தில் நல்ல குணமிருந்ததினாலே அநேகம் பேர்கள் அவர்பேரிலே பட்சம்வைத்து அவரிடத்தில் சஞ்சரிக்கத் தேடிக்கொள்ளுவார்களென்று கேட்டீர்களே. தாமரைப்புஷ்பத்திலிருக்கிற தேனைக் குடிக்க அன்னமானது காத்திருக்கிறாப்போல் தேன்போலேயிருக்கிற நல்ல குணமுகாந்தரமாக அதையுடையவனிடத் தில் அநேகம்பேர் காத்திருப்பார்கள். பிரேதத்தைக் கண்டவர்களோவெனில் தூரமாய்ப் போகிறாப்போல் ஆகாத குணமுள்ளவர்களைக் கண்டவர்கள் ஓடிப்போவார்கள். ஆகையால் நீங்கள் நற்குணத்தால் வருகிற நன்மையைக் கைக்கொண்டு துர்க்குணத்தால் விளைகிற பொல்லாப்பைத் தள்ளத்தக்கதாக ஆகாதகுணத்தை மாற்றிவிட்டு அர்ச். ரெமி ஜியாரைப்போலே நல்ல குணத்தை அடையவேண்டும். பின்னையும் இந்த அர்ச்சியசிஷ்டர் முன் சொல்லப்பட்ட இராசாவிடத்திற்போய்ச் சத்தியவேதத்தைப் போதித்து அவனுக்குப் புத்திசொல்லுமிடத்தில் அவன் இதற்கு இடங்கொடுத்து நல்ல ஆயத்தத்தோடு ஞானஸ்நானம் பெற்றதினால் தேவகிருபையடைந்து பலத்த இராச்சியத்துக்கு அஸ்திவாரமானான். இக்காலத்தில் அக்கியானிகளுக்கு விசேஷமாய் மகிமை பெருமை பெற்றவர்களுக்கு மெய்யான சர்வேசுரனுடைய வேதங் கேட்கக் குருவானவர் புத்திசொல்லுமிடத்தில் சிலர் சொல்லுகிறதாவது: எங்கள் கிட்டின உறவின்முரையார் தேவர்களைக் கும்பிடவேண்டுமென்று சொன்ன புத்தியை நாங்கள் தள்ளித் தூர தேசத்தாராயிருக்கிற நீர் சொல்லூகிற புத்தியை நாங்கள் கேட்போமோ வென்பார்கள். அதற்கு காஞ்சொல்லுகிற மறுவுத்தாரமாவது: நீங்கள் வியாதியாயிருக்கிறபோது உங்களுடைய கிட்டின உறவின் முறையார் வழியாக அடையக்கூடாத ஆரோக்கியத்தைத் தூரத்திலிருந்துவந்த நல்ல வயித்தியனிடத்தில் ஆசையோடு தேடி அடைவீர்களே.

அந்தப்பிரகாரமாய் உங்களுடைய ஆத்தமங்களுக்குள்ள அக்கியான மென்கிற வியாதி சத்தியவேதக் குருவாகிற ஞான வயித்தியன் வழியாய் நீங்கிப் போவதேயல்லாமல் உங்களுடைய உறவின்முறையாராகிற அக்கியானிகளாலே நீங்காது, மேலும் நீங்கள் சாகும் போது உங்கள் உறவின்முறையார் உங்களுக்கு மோட்சங் கொடுப்பார்களோ? அவர்களால் ஆகாது. மெய்யான சர்வேசுரன் அதைத் தம்மைச் சேவித்தவர்களுக்குக் கொடுப்பார். ஆகையால் மோட்சத்தையடைய அகத்தியமாய் அவரைச் சேவிக்கவேண்டும். பின்னேயும் அர்ச். ரெமிஜியார் பேரில் புறணிசொன்னவர்களுக்கு ஆண்டவர் கட்டளையிட்ட ஆக்கினையாகக் கனமான வியாதி வந்ததென்று கேட்டீர்களே. நீங்கள் உங்கள் ஆத்துமத்துக்குஞ் சரீரத்துக்கும் ஆக்கினை வராதபடிக்குப் புரணியாகிற பாவத்துக்குப் பயந்து விலகவேண்டும். அர்ச். ரெமிஜியாரென்கிறவர் தானியத்தைத் தரும கருத்தோடு வாங்கிக் கட்டினாலுந் துர்க்குண முள்ளவர்கள் அவர்பேரில் புறணி பேசினார்கள். அப்படி பொல்லாதவர்கள் மற்றவர்கள் தங்கள் குணத்தை அநுசரிக்கிறதாக நினைப்பார்கள்.

கள்ளன், ஒருவன் எங்கேயாவது போகிறதைக் கண்டு அவன் களவுக்குப் போகிறானென்று 
நினைப்பான். மோகபாவத்தில் பழகினவன், ஒருவன் ஒரு வீட்டுக்குப் போகிறதைக்கண்டு மோகபாவத்தைக் கட்டிக் கொள்ள அவன் அங்கே போகிறானென்று நினைப்பான். நீங்கள் அந்தந்தப் பாவத்தில் பழகாகிருந்தால் அவரவர் செய்கிற பாவமில்லாத கிரியைகளை நீங்கள் காண்கிறபோது அவர்கள் அவைகளைத் தரும கருத்தோடு செய்கிறார்களென்று உங்களுடைய நல்ல மனதில் நினைப்பதேயல்லாமல் பாவமுள்ள கருத்தோடு செய்கிறார்களென்று நினைக்கமாட்டீர்களென்று அறியக்கடவீர்களாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக