Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
ஞாயிறு, 5 மே, 2024
அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 27 - அர்ச். ஐந்தாம் பத்திநாதர் St. Pius V
சனி, 4 மே, 2024
அறிந்துகொள்வோம் பாத்திமா செய்தியை!
அறிந்துகொள்வோம்
பாத்திமா செய்தியை!
1917, ஜூலை 13 அன்று நிகழ்ந்த தனது மூன்றாம் காட்சியில், நம் திவ்ய அன்னை ஆத்துமங் களுடையவும், உலகத்தினுடையவும், திருச்சபையினுடைய வும் எதிர்காலங்களைத் தன்னுள் அடக்கிய மூன்று பிரிவுகளைக் கொண்ட ஒரு மாபெரும் இரகசியத்தைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினார்கள். இந்த இரகசியம் எடுத்த எடுப்பிலேயே மாதாவைப் பற்றிய ஆதி வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்து கிறது: “உனக்கும், ஸ்திரீக்கும், உன் வித்துக்கும், அவள் வித்துக் கும் பகையை உண்டாக்குவோம்..." என்ற இந்த தேவ வாக்குறுதி யின்படி, பாத்திமா இரகசியத்தின் முதல் பிரிவில், ஆத்துமங் களை நரகத்திற்கு இழுத்துச் செல்லத் துடிக்கும் பசாசுக்கு எதிராக, ஸ்திரீயாகிய மாமரியின் மாசற்ற இருதயம் கடவுளால் முன்னிறுத்தப்படுகிறது! “பரிதாபத்திற்குரிய ஆத்துமங்கள் செல்லும் நரகத்தை இப்போது கண்டீர்கள். அவர்களைக் காப்பாற்ற, உலகில் என் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்தக் கடவுள் விரும்புகிறார்!"
தேவ
அன்னையின் இந்த வாக்கியத்தில் அவர்களே சாத் தானுக்கு எதிராக ஆதி. 3:15ல் முன் குறிக்கப்பட்ட
ஸ்திரீ என்ற உண்மை முழு வீச்சில் வெளிப்படுத்தப்படுவதைக் காணுங்கள். இங்கே இரு படையணிகள்
இருக்கின்றன. ஒன்றின் தளகர்த்த ராக, தன் திருக்குமாரனின் சிலுவைக் கொடியைத் தாங்கி
நிற்கிற மாதா இருக்கிறார்கள். அவர் களுக்கு எதிராக, பசாசின் நரக சேனை நிற்கிறது. இவை
இரண்டில் ஒன்றை இன்றே, இப்போதே நாம் தேர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் பாத்திமா நமக்குத்
தருகிற முதலாவதும், மிக முக்கிய மானதுமான செய்தி! ஏனெனில் நம் நித்திய ஜீவியம் அல்லது
நித்திய தண்டனை இதில்தான் அடங்கி யிருக்கிறது! தேவ மாதாவையும், அவர்கள் பாத்திமாவில்
நமக்கு விடுத்த வேண்டுகோள்களையும் புறக்கணிக்கிற யாரும் பரலோக பாக்கியத்தை ஒருபோதும்
பெற்றுக்கொள்வது மிகவும் அரிது.
இனி,
எந்த மனநிலையோடு மாமரியின் வேண்டுகோள்களுக்கு நாம் செவிகொடுக்க வேண்டும். என்பது பற்றி
நாம் பார்ப்போம்: முதலாவதாக, நாம் மாதாவின் அன்புப் பிள்ளைகள். பாவ வாழ்வு வாழ்ந்து,
நரகத்திற்குச் செல்லும் ஆபத்தில் இருக்கும் தனது எண்ணற்ற பிள்ளைகளைக் கண்டு நம் மாதாவின்
மாசற்ற திரு இருதயம் இரத்தம் வடிக்கிறது. அவர்களை அந்த நித்திய அக்கினி யிலிருந்து
எப்படியாவது காப்பாற்ற அது துடிக்கிறது! அதற்காக திவ்ய கன்னிகை தன் பிள்ளை களாகிய நம்மிடம்
திரும்பி. தன்னோடு சேர்ந்து ஜெப, தவ, பரிகார முயற்சிகளைச் செய்து, இந்தப் பரிதாபத்திற்குரிய
பாவிகளின் ஆத்துமங்களை இரட்சிப்பதில் தனக்கு உதவுகிற "சிறிய இரட்சகர் களாக” இருக்கும்படி நம்மிடம் கேட்கிறார்கள். எனவே, நம் சொந்த “அம்மா”வோடு சேர்ந்து, ஆன்ம இரட்சணியப் பணியில் ஈடுபடுகிறோம் என்ற
உணர்வு நம்மில் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த உணர்வு இன்றிச் செய்யப்படும் பரிகாரம்
எதுவும் பெரிய அளவில் பயன் தராது.
இரண்டாவதாக,
பாத்திமா தவ முயற்சிகளைச் செய்யும்போது, சேசுவின் திரு இருதயமும், மரியாயின் மாசற்ற
இருதயமுமாகிய இரு இருதயங்களுக்கும் எதிரான பாவங்களுக்கு நாம் பரிகாரம் செய்கிறோம் என்பதை
நாம் சிந்திக்க வேண்டும். இந்த இரு இருதயங்களும் ஒன்றாகவே துடிக்கின்றன. இவை இரண்டு
இருதயங்கள் அல்ல, ஒரே இருதயம்தான் என்னும் அளவுக்கு தேவ அன்பின் ஒரே தசை நார்களால்
இணைக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் பாவ முட்கள் மரியாயின்
மாசற்ற இருதயத்தைக் குத்தித் துளைக்கும்போதெல்லாம் சேசுநாதர் பரிதவிப்போடு நம்மிடம் திரும்பி, “நன்றியற்ற மனிதர்களின் பாவ முட்களால் ஒவ்வொரு
கணமும் துளைக்கப்படுகிற உங்கள் மிகப் பரிசுத்த மாதாவின் இருதயத்தின்மீது இரக்கம் கொள்ளுங்கள். ஒரு பரிகாரச் செயலின்
மூலம் அவற்றை அகற்றுபவர்கள் யாருமில்லை" என்கிறார் (1925, டிசம்பர் 10, போந்தவேத்ரா காட்சி). அதே பாவங்களால் தன்
திருக்குமாரன் அனுபவிக்கும் வேதனையைக் காண்கிற தேவ மாதாவும் நம்மிடம்
திரும்பி, ஆழ்ந்த துக்கத்தோடு, "நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் திருத்திக் கொண்டு, உங்கள் பாவங்களுக்காகக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்... ஏற்கெனவே மிகவும் நொந்து போயிருக்கிற ஆண்டவராகிய நம் சர்வேசுரனை இதற்கு
மேலும் நோகச் செய்யாதீர்கள்" என்கிறார்கள் (13.10.1917 கடைசிக் காட்சி).
ஆகவே,
சேசு, மரியாயின் திரு இருதயங்களை நேசித்து,
அவற்றுக்கு ஆறுதல் அளிப்பதுதான் நம் முதல் சனி
பரிகார பக்தியின் நோக்கமாக இருக்க வேண்டும். இதனாலேயே, "ஓ சேசுவே, உமது
அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்புவதற்காகவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராகக் கட்டிக் கொள்ளப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இதைச் செய்கிறேன்" என்று அடிக்கடி ஜெபிக்கும்படி மாதா கற்பித்தார்கள். இப்படி
நாம் தரும் ஆறுதல், மிக ஏராளமான ஆத்துமங்களை
நரக நெருப்பிலிருந்து காப்பாற்றும் வல்லமை மிக்க ஆயுதமாக இந்தத் திரு இருதயங்களால் பயன்படுத்தப்படுகிறது
என்பதை நாம் உணர வேண்டும்.
இதன் மூலம், எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய நித்தியப் பேரின்பமும் உறுதிப்படுத்தப்படுகிறது! பாத்திமா செய்திகளின் அடிப்படையில் தவம் செய்யும் விதம்
கடவுளுக்கும்,
சேசுவின் திரு இருதயத்திற்கும், மரியாயின்
மாசற்ற இருதயத்திற்கும், நம் தவ முயற்சிகளாலும்,
பரித்தியாகங்களாலும் பரிகாரம் செய்து, அவர்களை நேசிக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.
பாவங்கள் கடவுளுக்கு எதிராகச் செய்யப்படுகின்றன. தேவ கட்டளைகள் கடவுளை
நேசிப்பதே நம் கடமையென அறிவிக்கின்றன.
அவற்றை மீறும்போது, நாம் அவரை நோகச்
செய் கிறோம்; நம்மை நேசிக்கும் தந்தையை நிந்திக்கிறோம். மேலும் கடவுளின் அன்பின் பிரதிபலிப் பாக இருக்கும் சேசுவின்
திரு இருதயம் பாதிக்கப்படுகிறது, மாசற்றதனத்தாலும், இரத்த உறவாலும், இரட்சணியத்தின் ஒத்துழைப்பாலும் அந்தத் திவ்ய இருதயத்துடன் ஒன்றாக இருக்கிற மரியாயின் மாசற்ற இருதயமும் பாவத்தாலும், தான் புறக்கணிக்கப்படுவதாலும் மிகவும் பாதிக்கப்படுகிறது.
சேசுவின் திரு இருதயத்தின் அன்பை
பாவம் நோகச் செய்கிறது. அதேபோல் மாதாவுக்கு நம்மீதுள்ள தாயன்பையும் வேதனைப்படுத்துகிறது. மாதாவின் வேதனை சேசுவின் துயரம் தருகிறது.
பாத்திமா
குழந்தைகள் தவ வாழ்வுக்கு படிப்படியாக,
ஆனால் தீவிரமாகத் தயாரிக்கப்பட்டார்கள். தூதரின் இரண்டாம் காட்சியில், “செபங்களையும் பரித்தியாகங்களையும் உன்னதருக்கு ஒப்புக்கொடுங்கள்"
என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. சம்மனசானவர் நம் அனைவரையும் நோக்கி: “நீங்கள் செய்யும்
யாவற்றையும் ஒறுத்தல் முயற்சி ஆக்குங்கள். கடவுளை நோகச் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும் அவற்றை ஒப்புக்கொடுங்கள். யாவற்றிற்கும் மேலாக, நமது ஆண்டவர் உங்களுக்கு
அனுப்பும் துன்பங்களை அமைந்த மனதுடன் ஏற்றுத் தாங்கிக் கொள்ளுங்கள்" என்றார்.
ஆகவே,
நமக்கு நடக்கும் அனைத்தும் தவமுயற்சியாக மாற்றப்பட முடியும். நாம் மகிழ்ந் தாலும்,
துன்புற்றாலும் அது தவமாக்கப்பட முடியும்.
இவை இரண்டையும், “உன்னதருக்குப் பாவப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படியாகவும்” ஒப்புக்கொடுப்பதில்தான்
அவை பலன் தருகின்றன. அப்படி
ஒப்புக்கொடுக்காவிட்டால்
அவை வீணாகின்றன. இவ்வாறு வீணாகும் இன்ப, துன்பங்களுக்குக் கணக்கேயில்லை. பரிசுத்த பாத்திமா மாதா, தாயுள்ளத்துடன் இப்படி நம் வாழ்வு வீணாகப்
போகாமல், நம்முடைய இன்ப, துன்பமாகிய அனைத்தையும், பாவப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படியாகவும் சேகரித்துப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.
மேலும்
துன்பத்தைப் பாவப் பரிகாரமாக ஏற்று ஒப்புக்கொடுக்கும்போது அதன் கடுமை குறைந்து
விடுகிறது. இன்பத்தைப் பாவப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கும்போது, அது மட்டுத் திட்டம்
அடைந்து விடுகிறது. ஆயினும் நாம் ஏற்றுக்கொள்ளும் துன்பமே
அதிகப் பலன் தருகிறது. மாதா
தன் முதல் காட்சியில், “கடவுளை மனநோகச் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும், அவர் உங்களுக்கு அனுப்பவிருக்கும்
துன்பங்களை ஏற்று, அவருக்கு ஒப்புக்கொடுக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்கள். மூன்றாம் காட்சியில், "பாவிகளுக்காக உங்களைப் பலியாக்குங்கள்" என்றார்கள். நான்காம் காட்சியில், “பாவிகளுக் காக ஒறுத்தல் முயற்சிகளைச்
செய்யுங்கள். ஏனெனில் தங்களுக்காக செபிக்கவும் ஒறுத்தல் செய்யவும் யாருமில்லாததால், அநேக ஆன்மாக்கள் நரகத்திற்குச்
செல்கிறார்கள்" என்றார்கள்.
கடவுள்
நமக்கு அனுப்பும் துன்பங்களை அமைந்த மனதோடு ஏற்பது மட்டும் போதாது. நாமும் பரித்தியாக, ஒறுத்தல் முயற்சிகளைத் தேடிச் செய்ய வேண்டும் என்ற உண்மையை மாதா
வின் இவ்வார்த்தைகளிலிருந்து அக்குழந்தைகள் புரிந்துகொண்டு, தவ முயற்சிகள் செய்தார்கள்.
அவர்கள் தங்கள் மதிய உணவை ஏழைகளுக்குத்
தந்துவிட்டு, காட்டில் அகப்பட்ட இலை, தழை, கிழங்கு,
காய்களைத் தின்றார்கள். கசந்த காய்களைத் தேடித் தின்று, அதனால் அதிக பரித்தியாகம் செய்தார்கள்.
தாகத்தைத் தாங்கிக்கொண்டார்கள். தலைவலி ஏற்படுத்தும் அரோசிகமான சத்தங் களைப் பொறுத்துக்கொண்டார்கள். வீட்டிலும் வெளியிலும் தவறாக நடத்தப்பட்டபோது தாங்கள் பட்ட வேதனைகள் உட்பட
இவை அனைத்தையும் பாவப் பரிகாரமாக அவர்கள் ஒப்புக் கொடுத்தார்கள். ஜசிந்தா, மருத்துவமனையில், தனது இரு விலா
எலும்புகள், மயக்க மருந்தின்றி வெட்டி எடுக்கப்பட்ட வேதனையை எவ்வளவு ஆன்ம தாகத்துடன் அமைதியாக
தாங்கிக்கொண் டாள் என்பதை நாம்
அறிய வேண்டும்.
ஆகவே, தவம் செய்வதில் பாத்திமா குழந்தைகளை நாம் பின்பற்றுவோம். இரத்தம் சிந்தும் அளவுக்குக் கசையடிகளையும், வனவாசத்தையும் மாதா நம்மிடம் கேட்கவில்லை. மாறாக, தொடர்ந்து ஐந்து மாதங்களின் முதல் சனிக்கிழமைகளில் (1) பாவசங்கீர்த்தனம் செய்து, (2) பரிகார திவ்ய நன்மை உட்கொண்டு. (3) 53 மணி ஜெபமாலை ஜெபித்து, (4) கால் மணி நேரம் ஜெபமாலைத் தேவ இரகசியங்களைத் தியானித்தபடி, தன்னுடன் தங்கியிருந்து, இவ்வாறு தனது மாசற்ற இருதயத்திற்கு எதிராகச் செய்யப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்வதாகிய முதல் சனி பக்தியையும், நம் சொந்த சிறு சிறு பரித்தியாகங்களையும்தான் கேட்கிறார்கள். சேசுவுக் காகவும், சேசுவுடனும், மாதாவுக்காகவும், மாதாவுடனும், பாவிகளின் இரட்சணியத்திற்காக தவம், பரித்தியாகம், ஒறுத்தல் இவைகளைச் செய்யும்போது, மாதா இவற்றைப் பயன்படுத்தி, ஆத்துமங்களை நரகத்திலிருந்தும், உலகத்தைத் தப்பறை, போர்கள், இயற்கை அழிவுகள், கொள்ளை நோய்கள், பஞ்சம், பட்டினியிலிருந்தும், திருச்சபையைத் தப்பறைகளிலிருந்தும், விசுவாச மறுதலிப்பிலிருந்தும் பாதுகாப்பார்கள். இதைச் செய்வோம் என்றால், "இறுதியில் மரியாயின் மாசற்ற இருதயம் வெற்றிபெறும்"போது, அந்த வெற்றியில் நாமும் பங்கு பெறுவோம்.
மரியாயே வாழ்க!
நாமும் அர்ச்சியசிஷ்டவர்கள் ஆகலாம்! - We too become a saint!!!
நாமும்
அர்ச்சியசிஷ்டவர்கள் ஆகலாம்!.
அர்ச்சியசிஷ்டவன்
ஆக முதலாவதும், மிக எளிதும், நிச்சயமுமான வழி கடவுளை நேசிப்பதாகும். நாம் கடவுளின்
நேசத்தை முழுமையாக அறிய வேண்டும். கடவுளை நேசிப்பது தான் நம் வாழ்வின் மாபெரும் அலுவலாகவும்,
நம் ஒரே ஒரு அலுவலாகவும் இருக்கிறது.
ஒரே
ஒரு சிறு தேவசிநேகச் செயலின் மதிப்பு விலை மதிக் கப்படாதது. ஒரு தேவ சிநேகச் செயல்
மற்ற புண்ணியங்களின் ஓராயிரம் செயல்களைவிட அதிக மதிப்புள்ளது. நித்திய வெகுமானத் தைப்
பெற்றுத் தரக்கூடிய ஒரு நேசச் செயலை எந்த ஒரு சாதா ரணக் கிறீஸ்தவனும் ஒரே கணத்தில்
செய்துவிட முடியும் என்று ஆண்டவர் பெனிஞ்ஞா கொன்ஸோலாத்தாவிடம் கூறினார். நாம் எந்தக்
கஷ்டமுமின்றி தினமும் எண்ணற்ற நேசச் செயல் களைச் செய்ய முடியும். மேலும், ஓராயிரம்
பயங்கர தேவ தூஷணங்கள் தரும் வேதனையை விட ஒரே ஒரு நேசச் செயல் தமக்கு அதிக மகிமையையும்,
இன்பத்தையும் தருவதாகவும் அவர் அவளிடம் கூறினார். இது தவிர, தேவசிநேகம் நம் பாவங் களை
அகற்றுகிறது. ஒரு சுருக்கமான தேவசிநேக ஜெபம் நல்ல கள்ளனுக்கு அன்றே கிறீஸ்து நாதரோடு
பரகதியில் இருக்கும் வாக்குறுதியைப் பெற்றுத் தந்தது.
ஆனால்,
தேவசிநேகமின்றி வேறு நோக்கத்திற்காக நாம் செய்யும் எந்தக் காரியமும் மதிப் பற்றதாக
இருக்கிறது. நாம் பல வருடங்கள் கடுமையாக உழைக்கலாம், அதனால் மனிதர்களிட மிருந்து பெரும்
புகழ்ச்சியையும், மரியாதை வணக்கத்தையும் பெறலாம், ஆனால் அது தேவ அன்பிற்காகச் செய்யப்படவில்லை
என்றால், அது மதிப்பற்றதாகவே இருக்கும்.
கடவுளை
நேசிப்பது மிக எளிது, ஏனெனில் தம்மை நேசிக்கவும், நம் முழு இருதயங் களோடும், ஆன்மாக்களோடும்
தம்மை நேசிக்கவுமே அவர் நம்மைப் படைத்தார். அளவற்ற சகல நன்மைச் சுரூபியும், இனியவரும்,
நம்மைக் கனிவோடும் பாசத்தோடும் நேசிப்பவரும், அனை வரிலும் அதிகப் பிரியமும், அதிக நேசமும்
கொண்ட நம் தந்தையும், அனைவரிலும் மிகச் சிறந்த, மிக உண்மையான நண்பருமான கடவுளை நேசிப்பது
அதிக எளிதான காரியம். அவரை நேசிக்க நமக்குத் தேவைப்படுவதெல்லாம் அவரது நன்மைத்தனத்தைப்
புரிந்துகொள்வது மட்டுமே.
நம்
முழு இருதயத்தோடும், ஆத்துமத்தோடும், பலத்தோடும், மனதோடும் சர்வேசுரனை நேசிப்பது, முதலாவது
தேவ கட்டளையும், நம் பரிசுத்த வேதத்தின் சாரமுமாக இருக்கிறது. பரிபூரண இரக்கமும், ஞானமுமுள்ள
சர்வேசுரன் கடினமானதும், மிகச் சிரமமானதுமான ஒன்றைத் தம் பரிசுத்த வேதத்தின் முதல்
நிபந்தனையாக ஒருபோதும் ஆக்கியிருக்க மாட்டார்.
தங்களால்
கடவுளை நேசிக்க இயலாதென்று கூறும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நேசச் செயலைச்
செய்து, “என் தேவனே, நான் உம்மை நேசிக்கிறேன்" என்று சொல்லும்போது, தேவசிநேகத்தை
அவர்கள் தங்கள் இருதயங்களில் உணர்வதில்லை. அவர்களுடைய வார்த் தைகள் உள்ளே வெறுமையாக
ஒலிக்கின்றன.
இதற்கு
நான்கு காரணங்கள் இருக்கின்றன:
(1)
அவர்கள் கடவுளை நேசிப்பதற்கு அவரது உதவியை அவரிடம் கேட்பதில்லை.
(2)
கடவுள் யார் என்பதையும், அவருடைய மட்டற்ற நன்மைத் தனத்தையும், அவருடைய இனிமையையும், இரக்கத்தையும், நேசத்தையும் அவர்கள் உணர்வதில்லை.
(3) அவர் தங்களை
எவ்வளவு அதிகமாக நேசிக்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.
(4) அவர் தங்களுக்காகச்
செய்துள்ள எதையும் அவர்கள் அறிவதில்லை.
உணர்ச்சிபூர்வமான
ஓர் அன்பைப் பற்றியல்ல, கடவுள் எவ்வளவு நல்லவரும் இனியவருமாயிருக்கிறார் என்பது பற்றிய தெளிந்த அறிவிலிருந்து எழும் திடமான தேவசிநேகத்தைப் பற்றியே நாம் பேசுகிறோம். தேவசிநேகத்தைச்
சம்பாதித்துக்கொள்ளும் வழிகள்:
(1) ஜெபம்.
கடவுளின்
மீது உண்மையான, உருக்கமான நேசத்தை நமக்குத் தருமாறு, ஒவ்வொரு நாளும், நாம் சொல்லும் ஒவ்வொரு ஜெபத்திலும் அவரிடம் மன்றாடுவோமாக. இதற்காகவே நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயலையும்
ஒப்புக்கொடுப்போமாக. நம் காலை, மாலை
ஜெபங்களிலும், நம் ஜெபமாலையிலும், திவ்ய
பலிபூசையிலும், நாம் உட்கொள்ளும் திவ்ய
நன்மைகளிலும், தேவசிநேக வரமே நமது மிகுந்த ஏக்கமுள்ள
மன்றாட்டாக இருக்கட்டும். இதைத் தனிப்பட்ட விருப்பமாகவும், கருத்தாகவும் கொண்டிராத எந்த ஜெபத்தையும் நாம்
ஒருபோதும் சொல்லாதிருப்போமாக.
நம்
ஆண்டவர் தமது நேசத்தைப் போல
வேறெதையும் அவர் நமக்கு மிகுந்த
விருப்பத் தோடும், தாராளத்தோடும் தருவதில்லை. நம் விருப்பத்திற்கும் அதிகமாகவே இந்த
மாபெரும் வரப்பிரசாதத்தை நமக்குத் தர அவர் விரும்புகிறார்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் இடை விடாமல் அதை
மன்றாடிக் கேட்பது மட்டுமே. இதைச் செய்வோம் என்றால், நம் இருதயங்கள் எவ்வளவுதான்
குளிர்ந்து போயிருந்தாலும், அவை அவருடைய நேசத்தில்
படிப்படியாக வளரும், தங்கள் முழு பலத்தோடும் அவை
அவரை நேசிக்கும், தேவ சிநேகத்தால் நிரம்பி
வழியும். அவை தேவசிநேகம் என்ற
வார்த்தையின் பரிபூரணப் பொருளில் அவரை நேசிக்கும்.
(2) கடவுளை நேசிக்க,
நாம் அவரை அறிய வேண்டும்.
அவர்
அளவற்ற இனிமையும், இரக்கமும், அன்பும் உள்ள கடவுள், நம்மைத்
தூக்கியெடுத்து, நம் ஆன்மாக்களிலிருந்து பாவக் கறைகளைக்
கழுவிப் போக்க விரும்பும் கடவுள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும்
மேலாக, கடவுளை நாம் அனைவரிலும் அதிக
அன்புள்ள தந்தையாக வும், அனைவரிலும் அதிகப் பிரியமுள்ள நண்பராகவும் காண வேண்டும். அவரில்
நாம் மட்டற்ற நம்பிக்கை கொள்ள வேண்டும், நம் பிரச்சினைகள் அனைத்திலும்
அவரிடமே செல்ல வேண்டும், நம் எல்லாத் தேவைகளிலும்
அவருடைய உதவியை நாம் நாட வேண்டும்.
நாம் ஊழியர்களாக அன்றி, அவருடைய பிரியமுள்ள குழந்தைகளாக அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும். நாம் கடவுளை ஆராதிக்கிறோம்.
ஆயினும் நேச அக்கினிச் சுவாலைகளால்
பற்றியெரியும் பரலோக சம்மனசுக்களின் ஆராதனையைப் போல நம் ஆராதனை
அன்பின் ஆராதனையாக இருப் பதில்லை. அவர்கள் சர்வேசுரனை அவர் இருக்கிறபடியே காண்கிறார்கள்,
அப்படி அவரைக் காண்பது சந்தோஷம், மகிழ்ச்சி ஆகியவற்றின் பெருங்கடலால் அவர்களை நிரப்புகிறது.
தேவதூதர்களும்,
அர்ச்சியசிஷ்டவர்களும் பரலோகத்தில் தரிசிக்கிற கடவுளை ஒரே ஒரு கணம்
நாம் பார்த்தாலும் நம் ஆத்துமங்கள் எத்தகைய
பேரின்பத்தால் ஆக்கிரமிக்கப்படும் என்றால், அவை நம் சரீரங்களிலிருந்து
தங்களைப் பிய்த்தகற்றிக்கொண்டு அவரை நோக்கிப் பறந்தோடும்.
பரலோகவாசிகளைப் போலவே நாமும் விரைவில் அவரைக் காண்போம், ஆனால் தற்போதைக்கு நாம் நம் விசுவாசத்தைப்
பயன்படுத்துவோம், அதை அனுபவித்து மகிழ்வோம்,
இவ்வாறு பரலோகப் பேரின்பத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம். மரியாயே வாழ்க!
(An Easy Way to Become A Saint என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)
குழந்தை சூசை தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. - Presentation of St. Joseph in Temple
குழந்தை
சூசை தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
(கன்னிகையான மரிய செசீலியா பெய்ஜுக்கு
வெளிப்படுத்தப்பட்ட அர்ச். சூசையப்பரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.)
தாய்மாரின்
சுத்திகரம் தொடர்பாக மோயீசனின் திருச்சட்டம் நியமித்த காலம் நிறைவுற்ற போது, சூசையின்
பெற்றோர் அவரோடு ஜெருசலேமுக்குப் புறப்பட்டார்கள். சூசையின் தாய் தன் சுத்திகரத்திற்காகவும்,
தன் மகனைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து, சட்டப்படி காணிக்கை தந்து அவரை மீட்டுக்கொள்ளவும்
ஆலயத்திற்குச் சென்றாள். அவர்கள் கடவுள் இப்பேர்ப்பட்ட ஒரு குழந்தை யைத் தந்ததற்காகத்
தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் அடை யாளமாக, வழக்கத்தை விட மிக அதிகமான நற்கொடைகளை
ஆலயத்திற்குக் கொண்டு வந்திருந்தார்கள்.
இந்தப்
பயணம் முழுவதும் சூசையப்பரின் முக பாவனை அவரது அசாதாரணமான மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும்
வெளிப்படுத்துவதாக இருந்தது. இது அவரது பெற்றோர் இருவருக்கும் மிகுந்த ஆறுதல் தந்தது.
அவரது ஆத்துமத்தில் வரப்பிரசாதம் எப்படித் தன்னை பொழிந்து கொண்டிருந்தது என்பதை அவர்கள்
உணர்ந்தார்கள். இந்த இளம் வயதிலேயே அது இவ்வளவு அதிகமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது
என்றால், அவருக்கு அதிக வயதாகும்போது, இன்னும் எவ்வளவு அதிகமான வரப்பிரசாத வெளிப்பாட்டை
அவரிடம் எதிர் பார்க்க முடியும்! இது அவருடைய பெற்றோருக்கு, தங்களில் கடவுளின் மீது
இன்னும் அதிக
மான
அன்பையும், நன்றியறிதலையும் தூண்டிக் கொள்வதற்கான ஓர் உந்துதலாக இருந்தது.
தனது
சுத்திகரச் சடங்கின்போது, சூசையின் தாய் தன் மகன் பெற்ற தேவ கொடைகளைப் பற்றி அதிகமான
ஞான உணர்த்துதல்களைப் பெற்றுக்கொண்டாள். யூத குரு சூசையைத் தம் கரங் களில் ஏந்தி, கடவுளுக்கு
ஒப்புக்கொடுத்தபோது, ஓர் அசாதாரணமான சந்தோஷ உணர்வையும், ஞான ஆறுதலையும் அனுபவித்தார்.
அவர் தம் உள்ளரங்கத்தில் ஒளிர்விக்கப்பட்டு, இந்தக் குழந்தை கடவுளின் கண்களில் எவ்வளவு
பிரியத்திற்குரியவராக இருந்தார் என்பதை அறிந்துகொண்டார். சூசையின் கண்கள் திறந்திருந்தன,
அவை பரலோகத்தை நோக்கி உயர்த்தப்பட்டிருந்தன.
அவர்
முழு இருதயத்தோடு தம்மையே கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுப்பதன் மூலம் குருவின்
ஒப்புக்கொடுத்தலோடு தம்மை இணைத்துக்கொண்டார். இந்த முழு ஆடம்பரச் சடங்கின்போதும், அவர்
முழுமையாகக் கடவுளுக்குள் பொதிந்துகொள்ளப்பட்டார். கடவுள் அவரில் தேவ வரப்பிரசாத வாழ்வை
அதிகரித்த அதே சமயத்தில் அவருக்கு ஒரு சிறப்பான ஞான வெளிச்சத்தையும் தந்தருளினார்.
அதன் மூலம், தமது முழுமையான அர்ப்பண நேரத்தில் கடவுள் மிக தாராளமான முறையில் தமக்குத்
தந்தருளிய கொடை எவ்வளவு உயர்ந்ததும் பக்திக்குரியதுமானதாயிருந்தது என்பதை அவர் உய்த்துணர்ந்தார்.
ஆகவே அவர் மீண்டும் பக்தியுருக்கத்தோடு கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.
அவரது
பெற்றோர் வழக்கமான காணிக்கையைச் செலுத்தி, அவரை மீட்டுக்கொண்டார்கள். குரு குழந்தையைத்
தாயிடம் திருப்பித் தந்தபோது, அவள் நல்ல கவனத்தோடு அவரை வளர்த்து வர வேண்டுமென்றும்,
அவர் மீது தனி கவனம் செலுத்தி வர வேண்டும் என்றும் அவளுக்கு அறிவுறுத்தினார். ஏனெனில்
இந்தக் குழந்தை தனிப்பட்ட முறையில் கடவுளுக்குப் பிரியமான வராக இருப்பார் என்பதும்,
பெரிய காரியங்களுக்காகக் கடவுள் அவரை நியமித்திருக்கிறார் என்பதும் அவருக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது;
மேலும், இக்குழந்தை தமது அசாதாரணமான குணநலன்களின் காரணமாக, ஒரு நாள், தம்மோடு தொடர்பு
கொள்ளவிருந்த அனைவருக்கும் மிகுந்த ஆறுதலின் காரணமாக இருப்பார் என்பதையும் அந்தக் குரு
கண்டுணர்ந்தார்.
இதெல்லாம்
உண்மைதான் என்பதைப் பிற்காலம் நிரூபித்தது. உண்மையில், சூசையப்பர் வாழ்வில் தம்மோடு
தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் தம்மீது அன்பும், பக்தியும் உள்ளவர்களாக
இருக்கவிருக்கும் அனைவருக்கும் கூட மிகுந்த ஆறுதலைக் கொண்டு வந்தார். இறப்பவர்களின்
பாதுகாவலராக இருக்கும்படி கடவுள் அவரை நியமம் செய்திருந்த தால், அவர் ஒருநாள், மரணத்திற்கு
எதிரான போராட்டத்தில் அவர்களுக்கும் பயனுள்ள முறை யில் ஆறுதலும், பலமும் வருவிப்பவராக
இருப்பார்.
குழந்தை
தங்களிடம் திருப்பித் தரப்பட்டவுடன், பெற்றோர், தங்கள் இருதயங்கள் ஆழமாகத் தொடப்பட்டதாலும்,
மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டதாலும், கண்ணீர் சிந்தியபடி, கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்.
அவர்கள் சூசையை ஒரு பொக்கிஷமாக, தெய்வீகமான விதத்தில் தங்களுக்குத் தந்தருளப்பட்ட ஒரு
கொடையாகச் சுமந்துகொண்டு வீடு திரும்பினார்கள். சின்ன சூசை வீடு திரும்பும் பயணத்தில்,
கடவுளில் முழுமையாகப் பொதியப்பட்டவராக, மிகவும் அமைதியாக இருந்தார். தேவசிநேக வளர்ச்சியில்
மிகுந்த முன்னேற்றம் காண தமக்கு உதவிய வரப்பிரசாதங்களுக்காக அவர் கடவுளுக்கு நன்றி
செலுத்தினார். தாம் மிகவும் நேசித்த சகல புண்ணியங் களையும் அனுசரிப்பது அவருக்கு (வயதின்
காரணமாக) சாத்தியமற்றதாக இருந்தபோதிலும், அவற்றிற்காக ஆசை கொள்வதில் தம்மைப் பயிற்றுவிக்க
அவர் கடுமையாக முயன்றார். போதிய முதிர்ச்சி அடையும் வரையில் அவர் இப்படிச் செய்து வந்தார்.
அதற்குப் பிறகு, அவர் அவற்றை மிகுந்த உத்தமமான முறையில் அனுசரித்து வந்தார்.