Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

அர்ச். பிளெய்ஸ் (St. Blaise)

அர்ச். பிளெய்ஸ் ✠ (St. Blaise)



*வேதசாட்சி, பரிசுத்த உதவியாளர் : (Hieromartyr, Holy Helper)

*பிறப்பு : தெரியவில்லை
செபஸ்டீ, வரலாற்று ஆர்மேனியா (Sebastea, historical Armenia)

*இறப்பு : கி.பி. 316


*பாதுகாவல் :
விலங்குகள், கட்டிடப் பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், தொண்டை, கல் வெட்டும் தொழிலாளர், செதுக்கும் பணி செய்பவர்கள், கம்பளி தொழிலாளர்கள், குழந்தைகள், "மராட்டி" (Maratea), "இத்தாலி" (Italy), "சிசிலி" (Sicily), "டாலமஷியா" (Dalmatia), "டப்ரோவ்னிக்" (Dubrovnik), "சியுடாட் டெல் எஸ்ட்" (Ciudad del Este), "பராகுவே" (Paraguay), "காம்பானரியோ" (Campanério), "மேடிரா" (Madeira), "ரூபியரா" (Rubiera).

அர்ச். பிளெய்ஸ், ஒரு மருத்துவரும், பண்டைய "வரலாற்று ஆர்மேனியாவின்" (Historical Armenia) "செபஸ்டீ" (Sebastea) எனுமிடத்தின் ஆயருமாவார். இது, தற்கால "மத்திய துருக்கி" (Central Turkey) நாட்டிலுள்ள "சிவாஸ்" (Sivas) எனுமிடமாகும்.

நம்மிடமிருக்கும் அவரைப்பற்றிய முதல் குறிப்பு, 5ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 6ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உள்ள ஒரு மருத்துவர், "அடியஸ் அமிடெனஸ்" (Atius Amidenus) மருத்துவ எழுத்துக்களின் கையெழுத்துப் பிரதிகளில் உள்ளது; தொண்டையில் சிக்கியிருக்கும் பொருட்களை நீக்கி சிகிச்சையளிப்பதில் அவரது உதவி அங்கு இருந்திருக்கிறது. அர்ச் பிளெய்ஸ், வேதசாட்சி என்ற மகத்துவம் பெற்ற இடம், "செபஸ்டீ" (Sebastea) என்று அறிவித்தது, இத்தாலியின் பெரும் வர்த்தகரும், ஆராய்ச்சியாளரும், மற்றும் எழுத்தாளருமான "மார்க்கோ போலோ" (Marco Polo) ஆவார். இத்திருத்தலம் "சிட்டாடல்" மலைக்கு (Citadel Mount) அருகில் இருப்பதாக 1253ம் ஆண்டு அறிவித்தவர், பிளெமிஷ் பிரான்சிஸ்கன் மிஷனரியும், மற்றும் ஆராய்ச்சியாளருமான (Flemish Franciscan missionary and explorer) வில்லியம் (William of Rubruck) ஆவார். இருப்பினும், அது தற்போது இல்லை.

தாம் பிறந்த ஆர்மேனியாவின் செபஸ்டீ நகரில், தமது இளமையில் தத்துவம் கற்ற இவர், ஒரு மருத்துவராக பணியாற்றினார். உடல் வியாதிகளை குணமாக்கிய அர்ச். பிளெய்ஸ், ஒரு ஆன்மாக்களின் மருத்துவர் ஆவார். அனைத்து பகுதிகளிலிருந்தும், உடல் மற்றும் ஆவிக்குரிய நோய்களை குணப்படுத்துவதற்காக மக்கள் அவரிடம் திரண்டனர். தாமாக தம்மைத் தேடி வந்த விலங்குகளைக்கூட அவர் குணப்படுத்தியதாகவும், பின்னாளில், அவர் அவைகளால் உதவி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், தமது தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற இவர், ஒரு குகைக்கு சென்று செப வாழ்வில் ஈடுபட்டார். "செபஸ்டீ" ஆயராக, பிளெய்ஸ், தமது மக்களுக்கு தமது வாய் வார்த்தைகளை முன்னுதாரணமாக அறிவுறுத்தினார். கடவுளுடைய ஊழியரான பிளெய்ஸின் மகத்தான நற்பண்புகளும், பரிசுத்த தன்மைகளும் அவருடைய பல அற்புதங்களால் உறுதிப்படுத்தப்பட்டன.

(Acta Sanctorum) எனும் புனிதர்களின் சரித்திர பதிவு நூலின்படி, இவர் அடித்து துன்புறுத்தப்பட்டும், கூரிய இரும்பினாலான முனைகள் கொண்ட சீப்பு போன்ற ஆயுதத்தால் (Iron comb) சித்திரவதை செய்யப்பட்டும், இறுதியில் தலை வெட்டப்பட்டும், மறைசாட்சியாக படுகொலை செய்யப்பட்டார்.

316ம் ஆண்டு, "கப்படோசியாவின்" ஆளுநரான (Governor of Cappadocia) "அக்ரிகோலா" (Agricola) என்பவரும், "லெஸ்ஸர் ஆர்மேனியா" (Lesser Armenia) என்றும், "ஆர்மேனியா மைனர்" (Armenia Minor) என்றும் அழைக்கப்படும் அதிகாரியும் இணைந்து, "ரோமப்பேரரசர்" (Emperor of the Roman Empire) "லிசினியஸ்" (Licinius) என்பவரின் உத்தரவின்படி, கிறிஸ்தவர்களை துன்புறுத்தத் தொடங்கினர். பிளெய்ஸ் பிடிபட்டார். விசாரணை மற்றும் கடுமையான வாதங்களின் பின்னர், அவர் சிறையில் தள்ளப்பட்டார். பின்னர் அவர் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டு, சிறைச்சாலைக்கு அவரை கொண்டு செல்லும் வழியில், தமது ஒரே குழந்தையின் தொண்டையில் மீன் முள் சிக்கியதால் துயருற்ற தாய் ஒருவர், இவரது காலடியில் வந்து விழுந்தாள். தமது குழந்தையை குணமாக்க வேண்டி அவரது பரிந்துரையை வலியுறுத்தினாள். நின்று, அவளுடைய துயரத்தைத் தொட்டு, அவர் குழந்தைக்காக செபித்தார்.; குழந்தை குணப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, தொண்டை காயங்கள் மற்றும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக பிளேஸ் அழைக்கப்படுகிறார்.

கவர்னரின் வேட்டைக்காரர்கள் அவரை திரும்ப செபஸ்டீ கொண்டு செல்லும் வழியில், ஒரு ஏழைப் பெண்ணை சந்தித்தனர். அந்த பெண்ணுடைய ஒரே பன்றியை ஒரு ஓநாய் பிடித்ததாக அழுதாள். பிளெய்ஸின் கட்டளையின்பேரில், ஓநாய் பன்றியை உயிருடனும் காயப்படுத்தாமலும் விட்டுச் சென்றது.

இவரது நினைவுத் திருநாளானது, "இலத்தீன்" (Latin Church) திருச்சபைகளில் ஃபெப்ரவரி மாதம் மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது.


St. Blaise


Little is known about St. Blaise, a 4th-century bishop who died a martyr. He was forced to flee due to religious persecution. While hiding in a cave, legend has it that he was discovered by a group of hunters, who found him surrounded by wild animals he had tamed. The hunters dragged him off to prison. On the way, he encountered a mother with a young son who had a bone stuck in his throat. Blaise commanded the bone be dislodged, and the child coughed up the bone.

St. Blaise's feast day is celebrated with the Blessing of the Throats with the following prayer:

Through the intercession of St. Blaise, bishop and martyr, may God deliver you from ailments of the throat and from every other evil. In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen.


St. Blaise is also venerated as one of the "Fourteen Holy Helpers," a group of saints invoked as early as the 12th century in Germany and who are honored on Aug. 8: St. Denis of Paris (headache and rabies), St. Erasmus or Elmo (colic and cramp), St. Blaise (throat ailments), St. Barbara (lightning, fire, explosion and sudden and unprepared death), St. Margaret (possession and pregnancy), St. Catherine of Alexandria (philosophers and students, and wheelwrights), St. George (protector of soldiers), Sts. Achatius and Eustace (hunters), St. Pantaleon (tuberculosis), St. Giles (epilepsy, insanity, and sterility), St. Cyriac (demonic possession), St. Vitus (epilepsy), and St. Christopher (travelers). The German Dominicans promoted this veneraion, particularly at the Church of St. Blaise in Regensburg (c. 1320).

சனி, 3 பிப்ரவரி, 2024

அர்ச்.அருளானந்தர் -St. John de Britto (Feb. 4)

பிப்ரவரி 04ம் தேதி
ஸ்துதியரும் வேதசாட்சியுமான அர்ச்.அருளானந்தர் திருநாள்.


அர்ச். அருளானந்தர் என்று அழைக்கப்படுகிற, அர்ச்.ஜான் டி பிரிட்டோ, 1647ம் வருடம், மார்ச் 1ம் தேதியன்று, போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில், அரச குடும்பத்தைச் சேர்ந்த உயர் குலத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சால்வடோர் டி பெரைரா, பிரேசிலில் போர்த்துக்கல் அரசருடைய பிரதிநிதியாக பொறுப்பேற்றிருந்தபோது, மரித்தார். அருளானந்தர்,1662ம் வருடம் சேசு சபையில் சேர்ந்தார். உலகப் புகழ் பெற்ற கோயிம்பரா பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்து விட்டு, இவர், தென்னிந்தியாவிலுள்ள மதுரையை 1673ம் வருடம், அடைந்தார்;

 இது, சேசு சபையினருடைய வேதபோதக அலுவலுக்கான மண்டலத்தைச் சேர்ந்தது. மற வர்கள் நிறைந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்தபகுதியில், இவர் கத்தோலிக்க வேதத்தைப் போதித்தார். அரசன் இவரை 1684ம் வருடம் கைது செய்து, சிறையில் வைத்தான். பின்னர், நாட்டை விட்டு, இவரை வெளியேற்றினான். இவர் மறுபடியும் 1687ம் வருடம், லிஸ்பனுக்குத் திரும்பினார். இவருடைய நண்பரும் அரசருமான 2ம் பேத்ரோ, இவரைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள பெரிதும் ஆசித்தார்; இவருக்கு வேதபோதக அலுவல்களுக்கான நிதித் துறையின் அதிபராக பொறுப்பை அளித்தார்.ஆனால், 1690ம் வருடம்,இவர் தன்னுடன் 24 புதிய வேதபோதகக் குருக்களுடன், அதே மறவ இராஜ்ஜியத்திற்குத் திரும்பி வந்தார். தமிழ் மொழியைக் கற்று அதில் தேர்ச்சியடைந்தார்; தமிழிலேயே ஞான உபதேசத்தைக் கற்றுக்கொடுத்தார். அநேக மறவர்களை கத்தோலிக்கர்களாக மனந்திருப்பினார்; மறவ நாட்டில், இவ்விதமாக இவர் மேற்கொண்ட வேதபோதக அலுவலில் அமோக வெற்றியடைந்தார்.

 மறவ இளவரசனான தடியத்தேவனை மனந்திருப்பினார்; இவனுக்கு பல மனைவிகள் இருந்தனர். முதல் மனைவியைமட்டும் வைத்துக் கொண்டு மற்ற பெண்களை விலக்க வேண்டும் என்கிற அர்ச்சிஷ்டவரின் அறிவுறுத்தலுக் கேற்ப அவனும் அதே போல் செய்தான். அவ்வாறு விலக்கப்பட்ட ஒரு பெண், அண்டை நாட்டின் அரசனான சேதுபதியின் சகோதரரின் மகளான தால், அந்த அரசன், கிறீஸ்துவர்களை உபாதிக்கலானான். அர்ச். அருளானந்தரும், அவருடைய சக குருக்களும், கைது செய்யப்பட்டு, இராமநாதபுரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கு, பிராமணர்கள், அர்ச். அருளானந்தரைக் கொல்ல வேண்டும் என்ற ஆலோசனையை அரசனுக்குக் கூறினர். அர்ச்.அருளானந்தரை தண்ணீர் தொட்டியில் அமிழ்த்தியும், இந்துக் கோவிலுக்குள் அடைத்து வைத்தும், கரடு முரடாயிருக்கிற பாதைகளில், குதிரையில் கட்டி இழுக்கப்பட்டும், சித்ரவதைச் செய்தனர்.

 1693ம் வருடம், பிப்ரவரி 4ம் தேதி, அவ்வருடத்தின் தபசுக்காலத்தின் முதல்நாளான சாம்பல் புதன் கிழமையன்று, அர்ச். அருளானந்தரை, ஓரியூர் மணலிற்கு இட்டுச் சென்றனர். இவருடைய தலையை வெட்டுவதற்கு, மிகக் கூர்மையான ஒருவாளுடன், ஒரு கொலைஞன், தயாராயிருந்தான். அர்ச். அருளானந்தர், அவனுக்கு சமாதானம் கூறி வாழ்த்தினார்; பின் மணலில் முழங்காலிலிருந்து, தன் தலையைக் குனிந்தபடி, கொலைஞனுக்குத் தன் கழுத்தைக் காண்பித்தார்.


திரளாகக் கூடியிருந்த மக்கள் முன்பாக, அர்ச். அருளானந்தர், நமதாண்டவருக்காக தலை வெட்டப்பட்டு, தன் இரத்தத்தைச் சிந்தி, வேதசாட்சிய முடியைப் பெற்றுக் கொண்டார். ஒருவர் தலை வெட்டப்படும்போது, அந்த நபர் முன்பக்கமாகத் தரையில் விழுவார்; ஆனால், அர்ச். அருளானந்தர், தலைவெட்டப்பட்டபோது, பின்பக்கமாக விழுந்தார்; இவருடைய வீரத்துவத்தை, சர்வேசுரன் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதை, இதன் மூலம வெளிப்படுத்துகிறார்.

கோலியாத் முன் பக்கமாக தரையில் விழுந்தான்; அது வெட்கத்திற்குரிய காரியம் என்பதைக் காண்பிக்கிறது. அர்ச்சிஷ்டவருடைய கைகால்களை வெட்டி, அவருடைய சரீரம் மட்டும், ஒரு கம்பில் ஊடுருவக்குத்தப்பட்டுத் தொங்க விடப்பட்டிருந்தது. அதிலிருந்து வடிந்த இரத்தம், மணிலில் பட்டு, அந்த பிரதேசம் முழுவதுமுள்ள மணல் எல்லாம் சிவப்பாக மாறியது. இந்த புதுமையை இன்றும் கூட, ஓரியூரில் நாம் காணலாம்; இந்த அற்புத செந்நிற மண்ணை, வீடுகளுக்கு பக்திபற்றுதலுடன், அருளிக்கத்தைப்போல் பாவித்து பயன்படுத்தியவர்களுக்கு அநேக புதுமைகள் நிகழ்ந்துவருகின்றன.

இதனாலேயே இவர், அற்புத செந்நிற மண்ணின் அர்ச்சிஷ்டவர் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய சரீரத்தை, கிறீஸ்துவர்கள், இரகசியமாக, வணக்கத்துடன் எடுத்துப் பத்திரமாக, சேசு சபைகுருக்கள் மூலமாக, போர்த்துக்கல் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அர்ச். அருளானந்தரான அர்ச். ஜான் டி பிரிட்டோவின் உத்தம பக்தியுள்ள கத்தோலிக்க தாயார், தன் பிரிய மகன், ஆண்டவருக்காக வேதசாட்சியாக தமிழ் மறவர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார் என்பதைக்கேட்டு, துக்கப்படுவதற்குப் பதிலாக, ஒரு பெரிய வேதசாட்சியும், அர்ச்சிஷ்டவருமான தாய் என்பதைக் குறித்து பெருமையடைந்தார்கள். லிஸ்பனுக்கு வந்த தன் மகனுடைய சரீரத்தை வாங்க வந்தபோது, கறுப்பு உடை அணியாமல், திருமண உடை அணிந்து வந்து, ஆடம்பரமாக வாங்கினார்கள்.

 அர்ச். அருளானந்தரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

அற்புத சீலி ஆனந்த வேலி - Tamil Catholic Songs Lyrics

அற்புத சீலி ஆனந்த வேலி

தாய் மனோகரி குணாகரி கிருபாகரி
 தாய் தயாபரி தயா நிதி நல் மாமரி

1. அற்புத சீலி ஆனந்த வேலி
    நற்கதி தாராயம்மா
    தற்பரன் தாயே அன்னாளின் சேயே
    ஆள்வா யென்னாளுமம்மா

2. தாவீது தந்த தாய் மரி எந்தன்
    தாயகம் நீரே யம்மா
    பாவிகள் தம்பம் பக்தியின் பிம்பம்
    பாதம் தொழுதோம் அம்மா

3. ஜென்மத்தின் தோஷம் இல்லா விசேஷம்
    கொண்டவர் நீரே யம்மா
    கன்ம வினைகள் என் மனம் கொள்ளா
     காப்பதும் கடனே அம்மா.


Our Lady Songs Lyrics 

சதா சகாய தாயே - Tamil Catholic Songs Lyrics

சதா சகாய தாயே



சதா சகாய தாயே
சகல மைந்தர்க்குமே
இதய உணர்ச்சி ததும்பும்
உமையே தினம் நினைந்தாலே

1. உதய தாரகை இருளில்
நீயென உலகம் கூறிடுமே
பதமும் அடைந்தோம் பாவமும்
களைவாய் பரம நாயகியே

பயமும் கவலை நீர்
பதும அன்னையும் நீ
நயமும் பெருகும் சுனையும்
நீயென நிதம் புகழுவோம் - சதா சகாய தாயே

2. புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே
 புனித மாமரியே
 சுதனும் உனையே தாயென
அளித்தார் சிலுவை அடியிலே  - பயமும் கவலை

நித்திய ஸ்துதிக்குரிய - Tamil Catholic Song Lyrics

நித்திய ஸ்துதிக்குரிய



1. நித்திய ஸ்துதிக்குரிய
பரிசுத்த நற்கருணைக்கே
 பக்தியாய் ஆராதனை
 எத்திசையும் புரிவோம்

2. அல்பகலாகத் தேவா
அடைபட்டிருப்பது ஏன்?
அடியோர் கவலை தீர்த்து
ஆறுத லீந்திடவே

3. அன்பின் அவதாரமே
இன்ப எம் சோதரமே
துன்புறும் இந்நேரமே
வந்தோ முந்தன் பதமே

 4. ஜீவிய அப்பமாக
தேவனே இங்கெழுந்தீர்
பாவிஎம் மீது கொண்ட
பாசத்திற்கீடு முண்டோ

5. தாழ்ச்சிக்கொரு முடியாய்
ஆட்சியிதில் புரிய
மீட்சிபுரி அப்பத்தை
மேதினியோர்க் கீந்தீரே

 6. வானோரதிசயமே
ஈனோரெம் போஜனமே
ஞானோர்கள் முப்பலமே
ஞாலத்திற்கோர் தீபமே

அன்புருவாய் - Tamil Catholic Songs Lyrics

அன்புருவாய்

1. அன்புருவாய் எம் நடுவில்
ஆசையுடன் வந்துதித்தீர் இந்தப் பொன்னொளியுள் வீற்றிருக்கும்
பூபதியே நமஸ்காரம்

 2. பரலோக உந்நதத்தில்
பாக்கியமாய் வாழ்பவர்
நீர்நரலோக வாசிகளுள்
நலமேது தேடி வந்தீர்?

3. நித்திய பிதாவினண்டை
நிரந்தரம் நீர் வீற்றிருக்க
சுத்தமில்லா பூவுலகை
சுதந்திரமாய்க் கொண்டதேனோ?

 4. விண்ணுலக தூதர்களின் விளக்கொளியே பாக்கியமே
மண்ணுலக வாசிகளுள்
வந்த தென்ன வானரசே.

5. வானமதில் மேலவர்கள்
வாழ்த்தி யென்றும் போற்றுகின்ற
ஞானமே எம் மத்தியை
 நீர் நாடினதே ஆச்சரியம்

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

அர்ச். நொலாஸ்கி ராயப்பர் திருநாள். St. PETER NOLASQUE.

சனவரி மாதம் 31-ந் தேதி. 
அர்ச். நொலாஸ்கி ராயப்பர் 
St. PETER NOLASQUE (1189-1256)
துதியர்



அர்ச். நொலாஸ்கிராயப்பர் பிரான்ஸ் இராச்சியத்திலே உத்தம குலத்தவரான தாய் தகப்பனிடமிருந்து பிறந்தார். அவர்  குழந்தையாயிருக்கையில் அவரிடத்தில் சில அதிசயமான காரியங்கள் சம்பவித்தன. அவையாவன: தேன் ஈக்கள் கூட்டமாய்ப் பறந்து அந்தக் குழந்தையின் அருகில் வந்து அதின் வலது கையிலே மொய்த்துத் தேன் இராட்டை உண்டாக்கிற்று. அந்தக் குழந்தையை யாதொரு பதிதன் பட்சத்தினாலே கையில் ஏந்திக்கொள்ளுஞ் சமயத்திலே அது முகத்தைத் திருப்பிக்கொண்டு தன் சிறு கையினாலே அவனைத் தள்ளும். ஆனால் சத்திய திருச்சபைக்குட்பட்ட யாதொரு குரு அந்தக் குழந்தையைக் கையிலே ஏந்தினால் அது சந்தோஷமாய்ப் போகும். இந்த ஆச்சரியமான காரியங்களைக் கண்டவர்கள் பிற்காலத்தில் அவருக்கு வரப்போகிற அர்ச்சியசிஷ்டதனத்தின் அடையாளம் இப்போதுதானே காணப்படுகிறது என்பார்கள். சிறு வயது துவக்கி அவர் வெகு விருப்பத்தோடே தரித்திரர்களுக்குத் தருமஞ் செய்துகொண்டு வந்தார். எப்போதும் விரத்தராயிருக்க வார்த்தைப்பாடு செய்து கற்போடே மற்றச் சகல புண்ணியங்களையும் அநுசரித்துவந்தார்.

 அவருக்கு வாலிப வயது நடக்கிறபோது அவருடைய தாய் தகப்பன் இறந்து போனார்கள், அவர் இருந்த நாட்டிலே அல்பிழென் சேஸென்கிற பதிதர் மிகவும் பலத்ததினாலேயும் அர்ச். கொலாஸ்கி ராயப்பர் அந்தப் பதிதர்மேலே வெகு அருவருப்பாயிருந்ததினாலேயும் அந்தப் பதிதர் இருந்த சீமையைவிட்டு அப்புறம்போக மனதாயிருந்து தமது உடமையெல்லாம் விற்றுப்போட்டுத் தாம் எஸ்பானியா ராச்சியத்திலுள்ள செறாத்தென்கிற மலையிலுள்ள தேவமாதாவின் கோவிலுக்குப் பயணமாய்ப் போனார். அப்படிக்கொத்த பயணம் பசாசுக்குப் பொருந்தா ததினாலே பசாசுகள் மனுஷரூபமாய் அவருக்குக் தரிசனையாகி, வழியிலிருக்கிற கள்ளர் உன்னைப் பிடித்து உன் தட்டுமுட்டைப் பறித்துக்கொண்டு  உன்னைக் கொன்று போடுவார்கள், ஆகையால் நீ அப்புறம் போகாதே, என்று சொல்லிப் பயம் வருவிக்கப் பிரயாசப்பட்டன. அதற்கு அர்ச். நொலாஸ்கிராயப்பர், அந்தப் பொல்லாப்பிலே நின்று சேசுநாதர் என்னை இரட்சிப்பாரென்றார். அந்த வார்த்தை கேட்டவுடனே பசாசுகள் அக்ஷணத்திலே பொறுக்கக் கூடாத நாற்றம் வீசிக் காணாமற்போயின.

அவர் முன்சொல்லப்பட்ட கோவிலைச் சேர்ந்து அதை மகா பத்தியோடே சேவித்த பிற்பாடு பர்செலோனென்கிற பட்டணத்துக்குப் போனார். அதிலே துலுக்கர் கையிலே அகப்பட்ட அநேக கிறீஸ்துவர்கள் துலுக்கர் பண்ணின நிஷ்டூரத்தினாலே கிறீஸ்துநாதருடைய திருவேதத்தை விட்டுத் துலுக்கர் மதத்தில் உட்படக் கிட்டின தறுவாயாயிருக்கிறதை அவர் கண்டு அவர்கள் ஆத்துமத்தையுஞ் சரீரத்தையும் இரட்சிக்கத்தக்கதாக அவர்களை மீட்கத் தமது கையிலிருந்த பணமெல்லாஞ் செலவழித்தார். மேலும் மற்றப் பேரை மீட்கத் தமக்கு வகையில்லையென்று கண்டு அவர்களை மீட்கிறதற்கு ஆச்சரியமான உபாயம் நினைத்தார். அதாவது: தாம் விலைபட்டு அந்தப் பணத்தைக்கொண்டு அவர்களை மீட்கிறதற்காகிலும், அல்லது அவர்களை விடுவித்து அவர்களுக்குப் பதிலாய் அந்த விலங்கிலே தாம் இருக்கிறதற்கென்கிலும் ஆசையாய் இருந்தார். அவர் கொண்ட அப்படிக் கொத்த நல்ல மனதின்பேரிலே சர்வேசுரன் தமக்குண்டான பிரியத்தைக் காண்பிப்பதற்காக புதுமை பண்ணினார்.

அதெப்படியென்றால் அர்ச். இராயப்பர் ஒரு இராத்திரி தியானத்தில் இருக்கிறபோது மோட்ச விராக்கினி அவருக்குத் தரிசனையாகி, வேதங் கேளாதவர்களிடத்தில் அடிமையாயிருக்கிற கிறீஸ்துவர்களை மீட்கிறதை நோக்கமாகக் கொண்டு ஒரு சபை நம்மைக் குறித்து நீ உண்டாக்கினால் அந்தப் புண்ணியம் நமது திருக்குமாரனுக்கும் நமக்கும் வெகு பிரியமாயிருக்கு மென்று சொல்லி மறைந்தாள். அவர் அதைக் கேட்டுத் தேவமாதாவின் உதவியால் உடனே அந்தச் சபையை உண்டாக்கினார். அப்படிக்கொத்த சபையில் உட்பட்டவர்கள் கிறீஸ்துவர்களிடத்திலே பிச்சை வாங்கி அந்தப் பணமெல்லாம் முன் சொல்லப்பட்ட அடிமைகளை மீட்கிறதிலே செலவழிப்பதுமல்லாமல், பணமில்லாத சமயத்திலே மேற்சொல்லிய அடிமைகளை மீட்க வேண்டிய அவசரமிருந்தால் தாங்கள் அடைமானமாயிருந்து அவர்களை விடுவிக்க வார்த்தைப்பாடு கொடுப்பார்கள்.
அர்ச் இராயப்பர் உண்டாக்கின அப்படிக் கொத்த சபையைக்கொண்டு திருச்சபைக்கு வந்த நன்மை இவ்வளவு என்று வரையறுக்கமுடியாது. இதல்லாமல் அவர் வரு காரியங்களைத் தீர்க்க வருங் தரிசிபோலே அநேகம்விசை வெளிப்படுத்துவார். தேவமாதாவுங் காவலான சம்மனசும் அநேகம்விசை தமக்குத் தரிசனையாவதினால் அவர் வெகு சந்தோஷத்தை அடைவார். துலுக்கருடைய அடிமைத்தனத்தில் இருந்தவர்களை மீட்கவும், மீட்கக் கூடாதவர்களை விசாரித்து ஞான உபதேசஞ் சொல்லி விசுவாசத்திலே தேற்றவும் மிகுந்த பிரயாசைப்பட்டார். அதற்கு வெகு பயணமுஞ் செய்தார். அதினிமித்தம் தாமுஞ் சிறைப்பட்டு விலங்கில் இருந்தார். அவருடைய புண்ணியங்களைப் பார்த்த அநேகந் துலுக்கரும் மனந்திரும்பிக் கிறீஸ்துவர்களானார்கள். அவர் மரணகாலம் வருமட்டுஞ் சகல புண்ணியங்களின் நெறியில் மகா சுறுசுறுப்போடே நடந்தபிற்பாடு, தமக்குச் சாவு கிட்டியிருக்கிறதென்று புதுமையாக அறிந்து, தாம் உண்டாக்கின சபையில் உட்பட்டவர்களை அழைப்பித்து அடிமைகளை மீட்கிற வேலையிலே அவர்கள் சுறுசுறுப்பாயிருக்கப் புத்திசொல்லிக் கர்த்தர் பிறந்த ஆயிரத்திருதூற்றைம்பத்தாறாம் வருஷத்தில் மரணத்தை அடைந்தார்.

கிறீஸ்துவர்களே! அர்ச். இராயப்பர் பிறசிநேக மென்கிற புண்ணிய பாதையிலே எவ்வளவோ சுறுசுறுப்போடே நடந்தாரென்று கேட்டீர்களே. அந்தப்பிரகாரமாய் நீங்கள் புறத்தியாரை வாயினாலே மாத்திரமல்ல, சுகிர்த கிரியையினாலேயுஞ் சிநேகிக்க வேண்டும். புறத்தியாரிடத்திலே ஆண்டவருடைய சாயல் இருக்கிறதென்று நீ நினைத்தால் புறத்தியார் உனக்கு உறவின் முறையாசல்லா திருந்தாலும் நீச சாதியானாலும் அநேகங் குறையுள்ளவர்களாயிருந்தாலுந் தரித்திரர்களாய் உனக்கு உதவாதவர்களா யிருந்தாலும் அவர்களைச் சிநேகிக்கவேண்டும். உன் வீட்டுக்கு வந்த துரையின் பிரதிநிதியிடத்திலே குறையிருந்தாலுந் துரையுடைய பிரதிநிதியென்கிற பதவி முகாந்தரமாக அவனுக்கு ஆசாரக் குறைபண்ணாமல் சங்கை பண்ணு வாயே. அந்தப்பிரகாரமாய் மனுஷரிடத்திலே ஆண்டவருடைய சாயலிருக்கிற முகாந்தரமாக அவர்களைச் சிநேகிக்க வேண்டும். யாதொருவன்  நல்ல வேலை செய்கிற முகாந்தரமாகவும் உனக்கு அவன் உதவுகிற முகாந்தரமாகவு மாத்திரம் அவனைச் சிநேகித்தால் மாடு குதிரை நாய் முதலான மிருகங்களைச் சிநேகிப்பது போல் மனுஷரைச் சிநேகிக்கிறாய். இதற்கு அர்த்தமேதென்றால் நாய் வேட்டைக்கும் மாடு உழவுக்கும் குதிரை சுமை எடுப்பதற்கும் உதவுகிறதால் அவைகள் பேரிலே பட்சமாயிருப்பா யல்லோ?

 அவ்வாறே மனிதரைச் சிநேகித்தால் மனி தன் பேரிலே வைத்த சிநேகத்துக்கும் மிருகத்தின் பேரிலே வைத்த நேசத்துக்கும் வேற்றுமையில்லை. இது தகுமோ? ஆகையால் பிறர் ஆண்டவர் சாயலாய் உண்டாக்கப்பட்டதினாலேயும் அவர்களை சிநேகிக்க கடவுள் கட்டளையிட்டபடியினாலேயும் விசேஷமாய் அவர்களைச் சிநேகிக்க வேண்டும்.

ஆனால் சுவிசேஷகராகிய அர்ச். அருளப்பர் சொன்னபடியே வாயினாலே மாத்திரம் புறத்தியாரைச் சிநேகியாமல் கிரியையினாலே சிநேகிக்க வேண்டும். இதற்கு அர்த்தமேதென்றால் முன் சொன்னபடியே துருக்கியரிடம் அகப்பட்டு அடிமைகளான கிறீஸ்துவர்களை மீட்க அர்ச். இராயப்பர் பிரயாசைப்பட்டது போலே பிறருடைய ஆத்துமத்துக்குஞ் சரீரத்துக்கும் வந்த இக்கட்டுக் கஸ்திகளை நீக்கவும் அவர்களுக்கு நன்மை உபகாரஞ் செய்யவும் பிரயாசைப் படவேண்டும். அதுவே பிறரைக் கிரிகையினாலே சிநேகிக்கிற வகையாகும். இதல்லாமல் பிறருக்கு வந்த அடிமைத்தனம் நீங்கிப்போக அர்ச். இராயப்பர் பிரயாசைப்பட்டாரென்று சொன்னோம். நீ செய்த பாவத்தினால் உன் ஆத்துமத்துக்கு வந்த அடிமைத்தனம் நீங்கிப்போகப் பிரயாசைப்படாமல் இருக்கலாமோ. எந்த நிஷ்டூரமுள்ள எசமானையும்விட பசாசு அதிக நிஷ்டூரமுள்ளதாயிருக்கின்றது. நீ சாவான பாவங் கட்டிக்கொணடிருந்தால் பசாசின் அடிமையாய்ப் போனாயே. முன் சொல்லப்பட்ட அடிமைத்தனத்தைப் பார்க்க உன் அடிமைத்தனம் அதிக கெடுதியாயிருக்கும். ஆனால் இந்த அடிமைத்தனம் சில பேர்களுக்குத் தோன்றாதிருக்கிறதை ஓர் உவமையைக் கொண்டு வெளிப்படுத்துவோம். இலாகிரி மயக்கத்திலே கிடக்கிறவனுடைய காலிலே விலங்கு போட்டால் மயக்கந் தெளியுமட்டும் அது அவனுக்குத் தோன்றாது. அவன் தெளிந்து விழித்தபிறகு தோன்றும். பாவ மயக்கத்தில் அகப்பட்டவர்களுக்குப் பாவத்தின் அடிமைத்தனம நன்றாய்த் தோன்றாதிருந்தாலும் அந்த மயக்கம் நீங்கின பிறகு சீவனோடே இருக்கிற போதாகிலுஞ் சொத பிறகென்கிலும் நன்றாய்த் தெரியப்படும்.

மரணத்துக்குப் பிறகு மாத்திரந் தோன்றினால் அது மாறாமல் நித்திய கேடாயிருக்கும். ஆகையால் சாவான பாவத்தின் வழியாக நீங்கள் பசாசின் அடிமைத்தனத்தில் அகப்படாதபடிக்கு எச்சரிக்கையா யிருக்கவேண்டும். அதிலே அகப்பட்டால் நல்ல பாவசங்கீர்த்தனத்தின் வழியாகப் பாவத்தின் அடிமைத் தனந் தள்ளியொழிக்க வேண்டும். இத்தகைய நல்ல மனது உங்களுக்கு உண்டாக அர்ச். இராயப்பரைக் குறித்து 3 கர். 3 மங், வேண்டிக்கொண்டு அவர்பேரில் பக்தியுள்ள உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒப்புக்கொடுங்கள்.

St. Peter Nolasco is the founder of the order of Our Lady of Ransom (Mercedarians, or Nolascans), a religious institute originally designed to ransom Christian captives from the Moors.

St. Peter Nolasco was canonized by Pope Urban VIII in 1628.

தேவதிரவிய அனுமானங்கள் III - அவஸ்தைப்பூசுதல் (Extremeunction) (தொடர்ச்சி)

Extreme Unction (Part 1)


அவஸ்தைப்பூசுதல்
தேவதிரவிய அனுமானங்கள்  

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி. 1941

அவஸ்தைப்பூசுதலுக்கு ஆரம்பமாகக் 1. குருவானவர் மூன்று ஜெபங்கள் சொல்கிறார். அவையாவன :-

பிரார்த்திக்கக்கடவோம்

ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதரே எங்கள் தாழ்மையான பிரவேசத்தால், இந்த வீட்டிலுள்ள நித்திய பாக்கியமும், தேவ செழிப்பும் களங்கமற்ற சந்தோஷமும் பலனுள்ள சிநேகமும், நீடித்த சுகமும் பிரவேசிப்பதாக: இந்த இடத்திலிருந்து பசாசுகளின் உறவு அகன்று போவதாக: சமாதானத்தில் சம்மனசுகள் வந்து கூடுவார்களாக: சகலவித தீய விரோதமும் இவ்விட்டினின்று அகலுவதாக. பரிசுத்தரும் இரக்கமுள்ளவருமாய்ச் சதாகாலத்துக்கும் பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் நிலைத்திருக்கிற ஆண்டவரே, எங்கள் பேரில் உமது பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தி, எங்கள் வார்த்தையை ஆசீர்வதித்து, எங்கள் தாழ்மையான பிரவேசத்தை அர்ச்சித்தருளும். ஆமென்.

நமதாண்டவராகிய சேசு கிறிஸ்துநாதர் இந்த வீட்டை யும் இதில் வசிக்கிறவர்கள் எல்லோரையும் ஆசீர்வதித்து அவர்களுக்குக் காவலாக பரிசுத்த சம்மனசைக் கட்டளையிட்டு, தமது பிரமாணத்தின் அதிசயங்களை அவர்கள் உணரும் வண்ணம் தமக்குப் பணிவிடை புரியச்செய்து, அவர்களிட மிருந்து அந்தகார வல்லமைகளை அப்புறப்படுத்தி, சகலவித பயத்தினின்றும் கலக்கத்தினின்றும் அவர்களை விடுவித்து, அவர்களை இவ்வீட்டில் சுகமாய்க் காப்பாற்றும்படி மன்றாடுவோமாக.

பிரார்த்திக்கக்கடவோம்

பரிசுத்த ஆண்டவரே, சர்வ வல்லபரான பிதாவே, நித்திய சர்வேசுரா. எங்கள் மன்றாட்டுக்கிரங்கி, இந்த வீட்டில் வசிக்கிறவர்கள் எல்லோரையும் காப்பாற்றிப் போஷித்து, பாதுகாத்து ஆதரித்து உதவிபுரிவதற்காகப் பரமண்டலத்தி லிருந்து உமது பரிசுத்த சம்மனசை அனுப்பியருளும். ஆமென்.

2. இந்த ஜெபங்களின் முடிவில், பாவசங்கீர்த்தன மந்திரம் சொல்லப்படும்: வியாதியற்றவரே இதைச் சொல்ல லாம்; அநேக சமயங்களில் இது இயலாததால், அங்கு இருப்ப வர்கள் இதைத் தமிழில் சொல்வது தகுதியானது. குருவானவர், வியாதியஸ்தர்மேல் ஆண்டவர் கிருபைக்கூர்ந்து, அவனது பாவங்களை மன்னித்தருள்வாராக என்று சொல்லி, அவனை ஆசீர்வதித்து, அவஸ்தைப்பூசுதலுக்கு ஆயத்த ஜெபமாகப் பின்வருவதைச் சொல்கிறார்:

"பிதாவுடையவும் சுதனுடையவும்  * இஸ்பிரித்து சாந்துவுடையவும் நாமத்தினாலே, நமது கரங்களை வைப்பதினாலும், மகிமைக்குரிய பரிசுத்த கன்னிமரியம்மாளாகிய தேவதாயின் மன்றாட்டினாலும், அவளுடைய பரிசுத்த பத்தாவாகிய சூசையப்பர், சகல பரிசுத்த தூதர், அதிதூநர், பிதாப் பிதாக்கள், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர், வேதசாட்சிகள், ஸ்துதியர். கன்னியர், சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய மன்றாட்டினாலும், பசாசின் சகலவித வல்லமையும் உன்னை விட்டு அகன்று போவதாக. ஆமென்." 

(* அடையாளமிட்ட வார்த்தைகளை உச்சரிக்கையில் குருவானவர் மும்முறை வியாதியஸ்தர் பேரில் சிலுவை அடையாளம் வரைகிறார்.).

3. இதன்பின்னரே, அவஸ்தைப்பூசுதலுக்கு அவசியமான சடங்கு நடக்கிறது. குருவானவர் அர்ச்சியசிஷ்ட எண்ணெயில் தமது பெருவிரலைத் தோய்த்து, வியாதியஸ்தன் கண்கள், காதுகள், நாசிகள், உதடுகள், உள்ளங்கை, பாதங்களில் பூசுகிறார். அவ்விதம் பூசுகையில், “ஆண்டவர் இந்தப் பரிசுத்த தைலத்தாலும் அவரது அதிமிக நேசத்துக்குசிய இரக்கத்தாலும், (பார்வையால், கேள்வியால், மோப்பத்தால், உணவு - பேச்சால், ஸ்பரிசத்தால், தடையால்) கட்டிக்கொண்ட பாவங்களை மன்னிப்பாராக" என்று அந்தந்த அவயவத்துக்குத் தகுந்ததைச் சொல்லிக்கொண்டு பூசுகிறார். கூடுமானால் வியாதியுற்றவர் அல்லது அவனுக்குக் கேட்கும்படி அங்கிருப்பவர்களில் ஒருவர் இந்த மன்றாட்டுகளைச் சொல்வது நலம். அவையாவன: ஆண்டவரே. பார்வையால் நான் சுட்டிக் கொண்ட பாவங்களை மன்னித்தருளும்: கேள்வியால்..... மற்றதும் இப்படியே. பாதத்தில் தைலம் பூசுவது சங்கடமா யிருக்கும் பட்சத்தில், அதை விட்டுவிடலாம். ஓர் குருவானவருக்கு அவஸ்தை கொடுப்பதானால் உள்ளங்கையில் பூசாமல், கைக்கு வெளிப்புறத்தில் தைலம் பூசுவார்கள்; இதற்குக் காரணம், அவர் குருப்பட்டம் பெற்ற சமயத்தில் உள்ளங் கைகள் ஏற்கனவே அர்ச்சிக்கப்பட்டதினாலேயே.

குறிப்பு : காதிலும், உள்ளங்கையிலும், பாதங்களிலும் அர்ச்சியசிஷ்ட எண்ணெய் பூசுவதற்கு தடையில்லாவண்ணம், அங்குள்ளோரில் ஒருவர் உதவி புரியவேண்டும்.

4. தைலம் பூசி முடிந்த பிறகு, குருவானவர், "சுவாமி கிருபையாயிரும், கிறீஸ்துவே கிருபையாயிரும்” என்று மன்றாடி, பரலோக மந்திரமும் பின்வரும் சிறிய மன்றாட்டுகளையும் சொல்கிறார்: என் தேவனே, உம்மிடம் நம்பிக்கையா யிருக்கிற உமது அடியானை (அல்லது அடியாளை) இரட்சியும். ஆண்டவரே, உமது பரிசுத்த ஸ்தலத்திலிருந்து அவனுக்கு உதவிசெய்து, சீயோனிலிருந்து அவனை (அவளை) காப்பாற்றும், ஆண்டவரே, சத்துராதியின் சமூகத்தில் அவனுக்குத் தேவரீர் தைசியக் கோபுரமாயிரும். சத்துரசதி அவனுக்கு விரோதமாய் யாதொன்றும் செய்ய இயலாமலும், அக்கிரமத்தின் புத்திரன் அவனுக்குத் தீங்கு செய்ய சக்தி யில்லாமலும் போவானாக! ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் அபய சத்தம் உமது சந்நிதி மட்டும் வரக் கடவது.”

குறிப்பு : இந்த ஜெபங்களில், வியாதியுற்றவருக்கு மாத்திரமல்ல. வீட்டிலுள்ள சகலருக்கும் தேவையான வரங்களை மன்றாடுவதால், எல்லோரும் இவைகளிலுள்ள கருத்தோடு ஒன்றித்து மன்றாடுவார் களாக.

5. பின்னர் மூன்று ஜெபங்கள் சொல்லப்படுகின்றன

அவையாவன:-

பிரார்த்திக்கக்கடவோம்

"உங்களில் யாதொருவன் வியாதியாயிருக்கிறானோ. அவன் சபையின் குருக்களை வரவழைப்பானாக, அவர்கள் ஆண்டவருடைய நாமத்தினாலே அவனைத் தைலத்தால் பூசி, அவனுக்காக செபிப்பார்கள்: அப்போது விசுவாசமுள்ள செபம் வியாதிக்காரனை இரட்சிக்கும். ஆண்டவரும் அவனுடைய வருத்தத்தை இலகுவாக்குவார். அன்றியும் அவன் பாவங்களோ டிருந்தால், அவைகள் அவனுக்கு மன்னிக்கப்படும்" என்று உமது அப்போஸ்தலராகிய இயாகப்பர் வழியாய் திருவுளம்பற்றியிருக்கிற தேவனாகிய ஆண்டவரே, எங்கள் திவ்விய இரட்சகரே, இஸ்பிரித்துசாந்துவின் அருளால் இந்த வியாதிக்காரனுடைய (வியாதிக்காரியுடைய) நோயைக் குணப்படுத்தி, அவனது காயங்களை சொஸ்தப்படுத்திப் பாவங்களை மன்னித்து, ஆத்தும சரீர வாதனையெல்லாம் அவனைவிட்டு அகற்றி, உள்ளும் புறம்பும் அவனுக்குப் பூரண சௌக்கியத்தை தயவாய்த் தந்து, இவ்வண்ணம் அவன் உமது இரக்கத்தின் உதவியால் மீண்டும் சுகமடைந்து தனது பழைய அலுவல்களை செய்யும்படி உம்மை மன்றாடுகிறோம். பிதாவோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலமும் சிவியருமாய் இராச்சிய பரிபாலகரு மாயிருக்கிற சர்வேசுரா. ஆமென்.

பிரார்த்திக்கக்கடவோம்

ஆண்டவரே, சரீர பலவீனத்தால் நொந்து கிடக்கிற உமது அடியானை(ளை)க் கண்ணோக்கி, நீர் சிருஷ்டித்த ஆத்துமத்தைப் பலப்படுத்தி, உமது தண்டனை களால் அவன் சீரடைந்து உமது அளிழ்தத்தால் இரட்சிக்கப்பட்டதாக உணரும் படி செய்தருள உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவ ராகிய சேசு கிறீஸ்துநாதர் பேரால் தந்தருளும். ஆமென்.

பிரார்த்திக்கக்கடவோம்

பரிசுத்த ஆண்டவரே, சர்வ வல்லபமுள்ள பிதாவே. நித்திய சர்வேசுரா, உமது ஆசீர்வாதத்தின் பலனை வியாதியுற்ற சரீரத்திற்கு அளிப்பதினால், அனந்த தயையுடன் உமது கை- வேலையைக் காப்பாற்றுகிறீரே, உமது நாமத்தை மன்றாடுகிற எங்கள் அருகே தயவாய் அண்டி வந்து, உமது அடியானை வியாதி யினின்று குணப்படுத்தி சௌக்கியத்தைத் தந்து, உமது வலது கரத்தால் அவனை தூக்கி எடுத்து, உமது சத்துவத்தால் அவனைப் பலப்படுத்தி, உமது வல்லமையால் அவனைக் காப்பாற்றி, விரும்பத்தக்க சகலவித செழிப்புடன் அவனை "உமது பரிசுத்த திருச்சபைக்கு மீண்டும் கொடுத்தருளும்." இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய சேசு கிறீஸ்து நாதர் பேரால் தந்தருளும். ஆமென்.

அவஸ்தைப்பூசுதல் இத்தோடு முடிவு பெறுகிறது. இதற்குப்பின்னர், அப்போஸ் தலிக்க ஆசீர்வாதம் கொடுப்பது வழக்கம். இதற்குப் பரிபூரண பலம் உண்டு. இதை அடைய வியாதியுற்றவர் கூடுமானால் வாயினால், அல்லது உள்ளத்தில் “சேசுவே என்னை இரட்சியும்" என்று சொல்லவேண்டும்

புதன், 31 ஜனவரி, 2024

லூர்து மாமலை - Tamil Catholic Song Lyrics

 லூர்து மாமலை

1. லூர்து மாமலையோரம் மசபியேல்
கெபியில் தோன்றிய தாய்
பாரில் வதியும் மைந்தர் பார்த்திட
வானலோகம் நீத்த தாய்

ஆவே ஆவே கீதம் தானுமே தேவாதி
தேவன் அன்னையர்க்கே
நாவால் போற்றுவோம் பாவால்
வாழ்த்துவோம் ஜீவ தாரகை மாதல்லோ

2. ஜென்ம தோஷம் ஏதுமில்லா
ஜெனித்த கன்னி மாமரியே
செல்வி சிறுமி பெர்னதெத்தை
ஜெபிக்க சொன்ன ஜெபமாலை - ஆவே ஆவே

3. பூவோர் தேடிடும் அன்பு ஆதிக்கம்மாறா
தென்றும் ஓங்கிடவே
சீராய் ஜெபமும் தீரா தபமும்
கோருவீர் என்றோதினார்  -  ஆவே ஆவே



அழகின் முழுமையே தாயே - Tamil Catholic songs Lyrics

 அழகின் முழுமையே தாயே

பல்லவி

அழகின் முழுமையே தாயே
அலகையின் தலை மிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே
அமலனை எமக்களித்தாயே

சரணங்கள்

1. இருளே சூழ்ந்திடும்போதே
உதய தாரகை போலே
அருளே நிறைந்த மாமரியே
அருள்வழி காட்டிடுவாயே

2. அன்பும் அறமும் செய்வோம்
அன்னை உனைப் பின் செல்வோம்
உன்னைத் துணையாய்க் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்





வாழ்வை அளிக்கும் - Tamil Catholic Songs lyrics

 வாழ்வை அளிக்கும்


வாழ்வை அளிக்கும் வல்லவா
தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே
எழுந்து வாருமே

சரணங்கள்

1. ஏனோ இந்தப் பாசமே
ஏழை என்னிடமே
எண்ணில்லாத பாவமே
புரிந்த பாவிமேல்

2. உலகம் யாவும் வெறுமையே
உனை யான் பெறும்போது
உறவு என்று இல்லையே - உன்
உறவு வந்ததால்

3. எந்த மன்னர் உன்னைப்போல்
பொங்கும் அன்பினால்
வந்து எமது நடுவிலே
தங்கி மகிழுவார்

4. அன்பு ஒன்றைக் கேட்கின்றாய்
அதையே தருகின்றேன்
இதயத் தன்பு யாவுமே
இனிதே தருகின்றேன்

வானோர் போஜனமே - Tamil Catholic song lyrics

 

தேவநற்கருணை ஆத்துமத்தின் போஜனம்

1. வானோர் போஜனமே மாமரியாயின்
மகனாய் உதித்தோனே - உம்மை
வாழ்த்தி நாம் ஸ்துதித்து போற்றிடுவோமே
வானுலகாள்வோனே.

2. பூங்காவில் வைத்த தீங்கனி போலே
பொழிலுயிர் தருவோனே - நாங்கள்
தீங்கு சூழ்ந்திடும் பேய் ஆங்காரம் நின்று
நீங்கிட அருள்வாயே.

3. ஜீவியம் அளித்து பாவிகள் மோட்சம்
சேர்ந்திடச் செய் அமுதே - எம்மைத்
தேற்றியே நித்தம் காத்து ரட்சிப்பாய்
திவ்விய போஜனமே

4. மக்களைத் தேற்ற மிக்குறும் அன்பால்
வானில் நின்றே வருவாய் எம்மை
வானில் சேர்த்திடவே பானமாயுமது
மேனி ரத்தம் அளிப்பாய்.

5. தந்தை தன் மக்கள் நொந்திடா அருகில்
வந்திருப்பது போலே -நீயும் இந்தப்
பூவுலகில் சொந்தம் பாராட்டி
சந்நதமே இருப்பாய்.

6. கன்னியின் வயிற்றில் உன்னரும் வகையாய்
கனியென உதித்தோனே - எம்மைக் காத்து
ஆண்டிடுவாய் பார்த்துத் தேற்றிடுவாய்
கன்னியர் போஜனமே.





தேவ திரு அமுது - Tamil Catholic Songs Lyrics

 தேவ திரு அமுது


1. விண்ணோர் வீடும் போதாதே என்னே உமது தயை
     மண்ணோர் உயர்ந்திடவே மறைந்தாய் அப்பாதில் 

தேவ திரு அமுதே ஜீவன் தரு கனியே
பாவ வினையகற்றும் பரம போஜனமே!

2. அன்னை தந்தை எவர்தானும் உம்மை போலுண்டோ
     தன்னைப் பலியாக்கும் பெலிக்கான் ஆனீரே

3. என்பால் கொண்ட அன்பதுவே அரசே நீருமது
     என்பும் தசை யாவும் ஈந்தீர் ஆண்டவரே

4. நீவிர் என்னுள் எழுந்தருள ஏழை தகுதியல்லேன்
    சொல்வீர் ஓர் வார்த்தை நானே சுகம் பெறுவேன்

5. பூவில் வருந்தி சுமை சுமப்போர் அருகில் வாருமென்று
    கூவி அழைத்திடுமோர் ஆண்டவர் குரல் கேண்மின்



அர்ச். மர்த்தீனம்மாள் - St. MARTINA

சனவரி மாதம் 30-ந் தேதி. க. வே.
அர்ச். மர்த்தீனம்மாள் திருநாள்.
St. MARTINA

ரோமாபுரியில் உயர்ந்த வங்கிஷபதிகளிடத்தினின்று அர்ச். மர்த்தீனம்மாள் பிறந்தாள். அந்தம்மாள் சிறு வயதாயிருக்கையிலே தாய்தகப்பன் இறந்து போனதினாலே அவர்களுடைய ஆஸ்திகளுக்கெல்லாம் அவள் உடையவளானாள். அவளுக்குத் திரவிய மிகுதியும் வயது கொஞ்சமுமாயிருந்தாலும் அவள் ஞான நன்மைகளாகிற புண்ணியங்களை அடைய ஆஸ்திகள் எல்லாவற்றையும் விற்றுப் பிச்சைக்காரருக்குக் கொடுத்தாள். பிறகு அந்த நாட்டு இராயனாகிய அலேக்சாந்தரென்கிறவன் கிறீஸ்துவர்களுக்கு விரோதமாய் வேதகலாபத்தை எழுப்பி அர்ச். மர்த்தீனம்மாள் பொய்யான தேவர்களைக் கும்பிட கட்டளையிடுமிடத்தில் அவள் அப்படிக்கொத்த தோஷத்தை நான் ஒருக்காலுஞ் செய்யமாட்டேன் என்றாள். ஆதலால் அந்த இராயனுடைய கட்டளைப்படி யே அப்பொல்லொனென்னும் பொய்த் தேவனை அவள் ஆராதிக்கும்பொருட்டு அவளை அவன் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். ஆனால் அவள் சிலுவை வரைந்து சேசுநாதரை வேண்டிக்கொண்ட மாத்திரத்தில் பூமி அதிரவே அந்தப் பேய்க் கோவிலில் ஓர் பங்கு இடிந்ததினாலும் அந்தப் பொய்த் தேவனுடைய விக்கிரகந் துண்டு துண்டாய் உடைந்து விழுந்ததினாலும் அவனுடைய பூசாரிகளும் மற்றனேக பிற மதத்தினரும்  கொல்லப்பட்டார்கள். இரண்டு முறை அவளை நிஷ்டூரமாய் அடித்தார்கள்.

 அதன் பிறகு இருப்புச் சீப்பினாலே அவளுடைய தோத்தின் மாமிச மெல்லாம் பீறி வகிர்ந்து அவளுடைய காயங்களுக்குள்ளே கொதித்திருந்த எண்ணெய்யையும் நெய்யையும் ஊற்றினார்கள். அந்தம்மாள் அந்த நிஷ்டூர கொடுமைகளால் மிகவும் வாதைப்பட்டிருந்தாலும் பசாசைக் கும்பிடாத படிக்கு அந்த வேதனைகளைப் பொறுமையோடே அநுபவித்தாள். அதற்குப் பிறகு சிங்கம் புலி முதலான துஷ்ட மிருசங்கள் அடைக்கப்பட்டிருக்கிற வாடியிலே அவளைத் தூக்கிப்போட்டார்கள். ஆனால் அந்த மிருகங்கள் புதுமையாக அவளைத் தொடவில்லை. ஓர் துஷ்ட சிங்கம் அவளுடைய பாதத்திலே படிந்து ஓர் நாய்க்குட்டியைப்போல அவளுடைய காயங்களை நக்கினது. ஆனால் அதை மறுபடி அதின் கெபியிலே கூட்டிக்கொண்டு போகிறபோது இராயனுடைய பந்துக்களில் ஒருவனைக் கொன்று போட்டது.

பின்னும் அவளை நெருப்பிலே தள்ளினாலும் நெருப்பும் புதுமையாக அவளைச் சுடவில்லை. இப்படிக்கொத்த ஆச்சரியமான புதுமைகளைக் கண்டவர்களில் அநேகர் இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய ஞானப்பிரகாசத்தைக் கொண்டு கிறீஸ்துவர்கள் வேதம் மெய்யான
வேதமென்று சொல்லிச் சர்வேசுரனுடைய வேதத்துக்காகத் தலைகொடுத்து வேதசாட்சிகளானார்கள்.

அர்ச், மர்த்தீனம்மாளின் வேண்டுதல் பலத்தினாலே பூமி நடுங்கிற்று. ஆகாசத்திலேயிருந்து மகா சத்தத்தோடே நெருப்பு சுட்டிகட்டியாய் கட்டிக் விழுந்து பசாசின் கோவில்களும் இடிந்து அதிலிருந்த பேய்ச் சுரூபங்களும்   இடிந்து  வானத்தினின்று பெய்த நெருப்பினால் எரிந்து நொறுங்கிப் போயிற்று. அந்தம்மாள் சரீரத் திலுள்ள காயங்கள் வழியாக மிகுதியான இரத்தத்தோடே பாலுங் கூடப் புறப்பட்டது. அவளுடைய சரீரத்தில் நின்று மிகுந்த பிரகாசமும் நல்ல வாசனையும் வீசப்பட்டது. அவள் பூமியைவிட்டு உயரப் பத்திராசனத்திலிருந்து மோட்சவாசிகளோடே கூடத் தேவதோத்திரம் பண்ணுவதாகக் காணப்பட்டாள். இத்தனை ஆச்சரியமான காரியங்களெல்லாம் அந்த இராயன் கண்டு அல்லது கேட்டிருந்தாலும் அவளை விட்டுவிடாமல் தலையை வெட்டச்சொன்னான்.

தலையை வெட்டினவுடனே ரோமாபுரியெல்லாங் கிடுகிடென நடுங்கினதுமல்லாமல் மர்த்தீனென்கிறவளே மோட்சத்திற்கு வாவென்கிற சத்தமும் ஆகாசத்திலே கேட்கப்பட்டது. இந்த அற்புதங்களெல்லாம் கண்டவர்களுக்குள்ளே அநேகம் பேர் சர்வேசுரனுடைய வேதத்தை விசுவசித்துப் பற்றிக்கொண்டார்கள்.
கிறீஸ்துவர்களே! வழி தப்பி நடக்கிறவன் சூரியன் உதயமான பிறகு நல்ல பாதையைக் கண்டு அதை அநுசரிக்கிறாப்போலே ஞானச் சூரியனாய் விளங்கின இந்தம்மாள் சரித்திரத்தைக் கேட்ட நீங்கள் அந்தம்மாள் நடந்த  புண்ணிய வழியை ஆவலாய்க் கண்டு அநுசரிக்கவேண்டும். அதெப்படியென்றால் அர்ச். மர்த்தீனம்மாள் தம்முடைய ஆஸ்தியைப் பிச்சைக்காரருக்குக் கொடுக்கிறபோது தன் ஆசையெல்லாம் அழியாத நன்மையின் பேரிலே வைத்தகேயல்லாமல் அழிந்துபோகிற நன்மையின் பேரிலே வைக்கவில்லை யென்று காண்பித்தாள். அவ்வாறே நீங்கள் பூலோக நன்மைகளை அபேட்சியாமல் பிச்சை முதலான புண்ணியங்களின் பேரிலே தாற்பரியம் வைக்கவேண்டும். சிலபேர் திரவியத்தைக் கனமாகவும் பிச்சை முதலான புண்ணியங்களை அற்பமாகவும் எண்ணுகிறார்களென்று அறிந்திருக்கிறோம். இவர்கள் மோசம் போகிறதை ஒரு உவமையினாலே வெளியாக்குவோம். மொனோமொத் தப்பாவென்கிற இராச்சியத்தார்களுக்குள்ளே சிலர் தங்கள் நாட்டிலுண்டான திரளான பொன்னைச் சட்டைபண்ணாமல் ஒரு சாயச்சேலைத் துண்டு வாங்க வெகு பொன் கொடுப்பார்கள். இதை நீங்கள் கேட் கிறபோது சேலைத் துண்டு கொஞ்ச நாளிலே கிழிந்துபோம். பொன் வெகு காலம் இருக்குமென்று நினைத்து அவர்களைப் பைத்தியக்காரனென்று  சொல்லுவீர்கள், அப்படியே பொன் முதலான உலக நன்மைகளும் அழிந்து போகிறதல்லாதே சாகிறபோது அவைகளில் அற்பமாகிலுங் கொண்டு போகக் கூடாது. பிச்சை முதலான புண்ணியங்களோவெனில் அழிந்து போகாமல் மனிதன் சாகிறபோது கூடவரும். ஆதலால் உலக நன்மைகளைக் கனமாகவும் பிச்சை முதலிய புண்ணியங்களை அற்பமாகவும் எண்ணுகிறவர்கள் பைத்தியர்தானே. அவர்களைப் பிடித்த பைத்தியம் அவர்களுக்கு இப்போது தோன்றாதிருந்தாலுஞ் சாகிற சமயத்திலே பெரிதாய்த் தோன்றும். ஆனால் மரணத்துக்குப் பின்பு மாத்திரந் தெளிவது தீராத கஸ்தி வேதனை கொடுப்ப தொழியப் பிரயோசனமாயிராது. பின்னையும் அர்ச். மர்த்தீனம்மாளிடத்திலே சம்பவித்த புதுமைகளைப் பிறமதத்தினர் கண்டு சேசுநாதருடைய வேதம் மெய்யான வேதமென்று நிச்சயித்துப் பேய் ஆராதனையை விட்டுச் சத்திய வேதத்துக்கு உட்பட்டார்களென்று கேட்டீர்களே; அந்த அம்மாளிடத்திலே சம்பவித்த இத்தனை புதுமைகளைக்கேட்டு நீங்கள் அவள் அநுசரித்த வேதமே மெய்யான வேதமென்று உறுதியாய் நம்பி அதிலே நீங்கள் தேவகிருபையாற் சேர்ந்திருக்கிறதின் பேரிலே மிகுந்த சந்தோஷப்பட்டு அதைப் பத்தியோடே அநுசரிக்க வேண்டும். அந்தம்மாள் பெண்பிள்ளை யாயிருந்தாலும் பொய்யான தேவனாகிய பசாசைக் கும்பிடாதபடிக்கு மிகுந்த பிரியத்தோடே வெகு கொடூரமான வேதனைகளை அநுபவித்தாள்.

இப்படியிருக்க நீங்கள் கொஞ்ச அடிகளுக்கஞ்சி அல்லது கொஞ்ச இலாபத்தை விரும்பிப் பசாசுக்கு ஊழியஞ் செய்யலாமோ? உங்களைத் துண்டு துண்டாய் வெட்டினாலும் அர்ச். மர்த்தீனம்மாளைப் போலே வேதத்தில் தைரியமாயிருக்க வேண்டும். சர்வேசுரன் தம்முடைய வேதத்துக்காக மர்த்தீனம்மாள் உயிரைக் கொடுத்ததைப்பற்றி அவளுக்கு ஞான சந்தோஷ இன்பத்தைக் கொடுத்து அவள் முகாந்தரமாக மிகுந்த நன்மைகளைப் பண்ணி அவளை வெகு மகிமைப்படுத்திப் பரலோகத்தில் அவளுக்கு அளவில்லாத பாக்கியத்தைத் தந்தருளினார். சில சேவகர் தங்கள் இராசாவுக்காகச் சண்டையிலே காயம்பட்டாலுஞ் செத்தாலும் அநேகம் விசை இராசா அவர்களுக்கு வெகுமானம் பண்ணாதிருப்பது மன்றி, இன்னான் இன்னான் தனக்காகக் காயம்பட்டான், செத்தானென்று முதலாய் அறியாதிருப்பான். இத்தகைய குறை ஆண்டவரிடத்தில் வராது. தமக்காக வாதை உபத்திரியப்படு கிறவர்களுக்குந் தமது தோத்திரத்துக்காகப் பிரயாசைப்படுகிறவர்களுக்குஞ் சர்வேசுரன் உதாரமாய் வெகு பலனைக் கொடுப்பாரென்கிறதினாலே அப்படிக்கொத்த நல்ல சுவாமிக்கு நீங்கள் பிரமாணிக்கத்துட னே நல்ல ஊழியஞ் செய்து அவருக்குப் பிரியப்படப் பிரயாசைப்பட வேண்டும்.

St. Martina Life History

The daughter of an ex-consul and orphaned at an early age, she was described as a noble and beautiful virgin. She so openly testified to her Christian faith that she could not escape the persecutions under Severus Alexander. Arrested and commanded to return to idolatry, she refused, whereupon she was subjected to various tortures and was finally beheaded.

These tortures according to her vita include being scourged. She was condemned to be devoured by wild beasts in the amphitheater but was miraculously untouched by them. She was then thrown onto a burning pyre, from which she also escaped unhurt, and was finally beheaded. Her hagiography asserts that some of her executioners also converted to Christianity and were themselves beheaded.




செவ்வாய், 30 ஜனவரி, 2024

உக்கிரமான மனிதர் மற்றும் வெதுவெதுப்பான மனிதர்

 

ஆர்வமுள்ள மனிதர் மற்றும் வெதுவெதுப்பான மனிதர்

ஜனவரி 29, 2024
ஆதாரம்: fsspx.asia 
உக்கிரமான மனிதர் மற்றும் வெதுவெதுப்பான மனிதர்

கீழே உள்ள பரிசீலனைகள் துறவறத்தில் உள்ளோருக்கு  எழுதப் பட்டுள்ளன, ஆனால் சில தழுவல்களுடன், எந்த கிறிஸ்தவருக்கும் பொருந்தும். அவை உண்மையில், மந்தமான தன்மையின் அறிகுறிகள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அறிகுறிகள், ஏனென்றால், பெரும்பாலும், நம்மை அறியாமலேயே நாம் பாதிக்க படுகிறோம்.

ஆர்வமுள்ள மனிதன் சிறிய விஷயங்களில் கூட தனது நடவடிக்கை(விதி)களை கவனிக்கிறான்; சர்வேசுரனை  அதிருப்தி அடையச் செய்யும்  என்ற சிறிதளவு பயம் அவரை எல்லாவற்றிற்கும் கட்டாயப்படுத்த போதுமானது. மாறாக, ஒரு மந்தமான மனிதன் அடிக்கடி தனது விதியை மீறுகிறான், பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகளை தன்னால் முடிந்தவரை வழங்குகிறான், செபம், படிப்பு அல்லது ஆன்மீக வாசிப்பை விரும்புவதில்லை; அவர் மனித தீர்ப்புகளுக்கு மிகவும் உணர்ச்சி வசம் படக்கூடியவர் மற்றும் எண்ணற்ற அற்ப விஷயங்களில் தனது நேரத்தை வீணடிக்கிறார்.

ஒரு ஆர்வமுள்ள மனிதன் பொதுவாக தனது கடமையில் மகிழ்ச்சி அடைகிறான். சில சமயங்களில் அவர் சிரமங்களை எதிர் கொண்டால், அவர் சோர்வடைவதில்லை; அவரது ஆன்மாவில் பரவும் அபிஷேகத்தின் மூலம் அவரது உற்சாகம் கஷ்டங்களை மகிழ்ச்சியாக மாற்றுகிறது. செபம், துறவுகள் மற்றும் பக்தி நடைமுறைகளை கட்டாய வேலைகளில் சேர்க்க இது அவரை வழிநடத்துகிறது. இவை அனைத்தையும் அவர் தனது மேலதிகாரியின் அனுமதியுடன் செய்கிறார். எனவே, அவர் எப்பொழுதும் மனநிறைவுடன் இருப்பதோடு, பிரச்சனையை ஏற்படுத்தக் கூடியவர்களிடம் கூட மென்மையான மற்றும் கருணையுள்ள நடத்தைகளை மட்டுமே வெளிப்படுத்துகிறார்.

மாறாக, ஒரு மந்தமான மனிதன் தனது கடமைகளை தாங்க முடியாத சுமையாக கருதுகிறான். அவர் இனிமையை உணராமலும் தகுதிக்கு தகுதியற்றவராகவும் அனைத்து கசப்புகளையும் தாங்குகிறார். இதன் விளைவாக, அவர் எப்போதும் தனக்கு ஒரு சுமையாக இருக்கிறார், அதை வெளியில் தெரியப்படுத்தாமல் இருக்க முடியாது.

ஒரு ஆர்வமுள்ள மனிதன் மனசாட்சியின் ஒரு சிறந்த தூய்மையைப் பேணுகிறான், மேலும் அற்ப தவறுகளைச் செய்வதைத் தவிர்க்கிறான், அவதூறானவை கூட. தீமைக்கு இட்டுச் செல்லும் மற்றும் பரிசுத்ததணத்திலிருந்து அவரைத் திசைதிருப்பக்கூடிய சிறிய சந்தர்ப்பங்களிலிருந்து அவர் விலகிச் செல்கிறார். மறுபுறம், ஒரு மந்தமான மனிதன் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க தன்னால் முடிந்ததை  முடியாது; அதற்காக எந்த முயற்சியும் செய்ய மறுக்கிறார். அவர் தொடர்ந்து அற்பத் தவறுகளைச் செய்கிறார், சில சமயங்களில் அவை மிகவும் கணிசமானவை, அவர் சாவான  பாவத்தின் நிலையில் இல்லையா என்று ஒருவர் ஆச்சரியப்படுகிறார்.

ஒரு ஆர்வமுள்ள மனிதன்,  எவ்வளவு பரிசுத்ததணத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், எப்போதும் பரிசுத்ததணத்தில் முன்னேற வேலை செய்கிறான். அர்ச். அகஸ்டின் பரிந்துரைத்தபடி, : “எப்போதும் சேர், எப்போதும் நடக்கவும், எப்போதும் தொடரவும்; அசையாமல் நிற்காதே, பின்வாங்காதே, விலகாதே; நிற்பவன் தொடரவில்லை; அவர் தொடராது  பின்னே செல்கிறார்; அவர் கலகம் என்று விலகுகிறார்; தன் வழியை விட்டு விலகுகிறவனை விட, தன் வழியிலே கண்டிப்புடன் செல்கிறவன் நன்றாகப் போகிறான்." (அப்போஸ்தலர்களின் வார்த்தைகள் பற்றிய பிரசங்கம்). இதற்கு நேர்மாறாக, ஒரு மந்தமான மனிதன் சிறந்து விளங்க கவலைப் படுவதில்லை. அவர் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில்லை, அவற்றைக் கவனிக்கவில்லை என்று பாசாங்கு செய்கிறார். அவரது நிலை மரணத்திற்கு அருகில் உள்ளது, அவர் எதற்கும் அஞ்சவில்லை, அதனால் அவர் கண்மூடித்தனமாக இருக்கிறார்: "Vicina mort labes, torpor animarum: ஆன்மாவின் வேதனை மரணத்திற்கு ஒத்த அழிவாகும்."

ஒரு ஆர்வமுள்ள மனிதன் பிறருக்கு உதாரணமாக  மாறுகிறான்; அவரது உதாரணத்தின் மூலமும், அனைத்து பயிற்சிகளிலும் புனித மரபுகளையும் துல்லியத்தையும் பராமரிக்கிறார். அவருடைய இருப்பு மற்றவர்களை தங்கள் கடமையில் வைத்திருக்கும். மாறாக, ஒரு மந்தமான மனிதன் ஒழுங்கை அழிப்பான். விதியின் புள்ளிகள், நடைமுறைக்கு வந்தவுடன், அபூர்வமாக  மட்டுமே கடைபிடிக்கப்படுகின்றன, புனித பழக்கவழக்கங்கள் படிப்படியாக மறைந்துவிடும், துஷ்பிரயோகங்கள் ஊடுருவி, ஒழுக்கம் மற்றும் நல்ல ஒழுங்கு மந்தமாகிறது. அவர் தன்னுடன் அலட்சியமாக நடந்துகொள்பவர்களை இழுத்துச் செல்கிறார், நீண்ட காலத்திற்கு, ஒரு முழு குடும்பத்தையும் கெடுக்கும் திறன் கொண்டவர், குறிப்பாக அவர் தனது வயதால் பாராட்டப்படக்கூடியவராக இருந்தால் அல்லது அவர் செல்வாக்கு, திறமை அல்லது மனித தகுதியுடையவராக இருந்தால். துரதிர்ஷ்டவசமான மனிதன் குழந்தைகள் மற்றும் சாதாரண விசுவாசிகளை மட்டுமல்ல, சலுகை பெற்ற ஆன்மாக்களையும்-உலகின் இரட்சிப்பாக இருக்க வேண்டிய ஆன்மாக்களை அவதூறு செய்கிறான். இது ஒரு பயமுறுத்தும் பொறுப்பு அல்லவா?

Prayer

I ask you, O my God, for the grace never to be among the lukewarm souls but among the fervent ones. If I do not yet have the fervor I should possess or even that which I had in the early years of my conversion, having relaxed due to my weakness and inconstancy, I will apply myself even more to pray to strengthen one, to establish the other, and to implore all Your Saints to intercede with You so that I do not fall into spiritual lethargy.

Père Hyacinthe-Marie Cormier O.P.

தந்தை ஹயசின்தே-மேரி கோர்மியர் OP