Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

தேவதிரவிய அனுமானங்கள் III - அவஸ்தைப்பூசுதல் (Extremeunction) (தொடர்ச்சி)

Extreme Unction (Part 1)


அவஸ்தைப்பூசுதல்
தேவதிரவிய அனுமானங்கள்  

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி. 1941

அவஸ்தைப்பூசுதலுக்கு ஆரம்பமாகக் 1. குருவானவர் மூன்று ஜெபங்கள் சொல்கிறார். அவையாவன :-

பிரார்த்திக்கக்கடவோம்

ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதரே எங்கள் தாழ்மையான பிரவேசத்தால், இந்த வீட்டிலுள்ள நித்திய பாக்கியமும், தேவ செழிப்பும் களங்கமற்ற சந்தோஷமும் பலனுள்ள சிநேகமும், நீடித்த சுகமும் பிரவேசிப்பதாக: இந்த இடத்திலிருந்து பசாசுகளின் உறவு அகன்று போவதாக: சமாதானத்தில் சம்மனசுகள் வந்து கூடுவார்களாக: சகலவித தீய விரோதமும் இவ்விட்டினின்று அகலுவதாக. பரிசுத்தரும் இரக்கமுள்ளவருமாய்ச் சதாகாலத்துக்கும் பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் நிலைத்திருக்கிற ஆண்டவரே, எங்கள் பேரில் உமது பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தி, எங்கள் வார்த்தையை ஆசீர்வதித்து, எங்கள் தாழ்மையான பிரவேசத்தை அர்ச்சித்தருளும். ஆமென்.

நமதாண்டவராகிய சேசு கிறிஸ்துநாதர் இந்த வீட்டை யும் இதில் வசிக்கிறவர்கள் எல்லோரையும் ஆசீர்வதித்து அவர்களுக்குக் காவலாக பரிசுத்த சம்மனசைக் கட்டளையிட்டு, தமது பிரமாணத்தின் அதிசயங்களை அவர்கள் உணரும் வண்ணம் தமக்குப் பணிவிடை புரியச்செய்து, அவர்களிட மிருந்து அந்தகார வல்லமைகளை அப்புறப்படுத்தி, சகலவித பயத்தினின்றும் கலக்கத்தினின்றும் அவர்களை விடுவித்து, அவர்களை இவ்வீட்டில் சுகமாய்க் காப்பாற்றும்படி மன்றாடுவோமாக.

பிரார்த்திக்கக்கடவோம்

பரிசுத்த ஆண்டவரே, சர்வ வல்லபரான பிதாவே, நித்திய சர்வேசுரா. எங்கள் மன்றாட்டுக்கிரங்கி, இந்த வீட்டில் வசிக்கிறவர்கள் எல்லோரையும் காப்பாற்றிப் போஷித்து, பாதுகாத்து ஆதரித்து உதவிபுரிவதற்காகப் பரமண்டலத்தி லிருந்து உமது பரிசுத்த சம்மனசை அனுப்பியருளும். ஆமென்.

2. இந்த ஜெபங்களின் முடிவில், பாவசங்கீர்த்தன மந்திரம் சொல்லப்படும்: வியாதியற்றவரே இதைச் சொல்ல லாம்; அநேக சமயங்களில் இது இயலாததால், அங்கு இருப்ப வர்கள் இதைத் தமிழில் சொல்வது தகுதியானது. குருவானவர், வியாதியஸ்தர்மேல் ஆண்டவர் கிருபைக்கூர்ந்து, அவனது பாவங்களை மன்னித்தருள்வாராக என்று சொல்லி, அவனை ஆசீர்வதித்து, அவஸ்தைப்பூசுதலுக்கு ஆயத்த ஜெபமாகப் பின்வருவதைச் சொல்கிறார்:

"பிதாவுடையவும் சுதனுடையவும்  * இஸ்பிரித்து சாந்துவுடையவும் நாமத்தினாலே, நமது கரங்களை வைப்பதினாலும், மகிமைக்குரிய பரிசுத்த கன்னிமரியம்மாளாகிய தேவதாயின் மன்றாட்டினாலும், அவளுடைய பரிசுத்த பத்தாவாகிய சூசையப்பர், சகல பரிசுத்த தூதர், அதிதூநர், பிதாப் பிதாக்கள், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர், வேதசாட்சிகள், ஸ்துதியர். கன்னியர், சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய மன்றாட்டினாலும், பசாசின் சகலவித வல்லமையும் உன்னை விட்டு அகன்று போவதாக. ஆமென்." 

(* அடையாளமிட்ட வார்த்தைகளை உச்சரிக்கையில் குருவானவர் மும்முறை வியாதியஸ்தர் பேரில் சிலுவை அடையாளம் வரைகிறார்.).

3. இதன்பின்னரே, அவஸ்தைப்பூசுதலுக்கு அவசியமான சடங்கு நடக்கிறது. குருவானவர் அர்ச்சியசிஷ்ட எண்ணெயில் தமது பெருவிரலைத் தோய்த்து, வியாதியஸ்தன் கண்கள், காதுகள், நாசிகள், உதடுகள், உள்ளங்கை, பாதங்களில் பூசுகிறார். அவ்விதம் பூசுகையில், “ஆண்டவர் இந்தப் பரிசுத்த தைலத்தாலும் அவரது அதிமிக நேசத்துக்குசிய இரக்கத்தாலும், (பார்வையால், கேள்வியால், மோப்பத்தால், உணவு - பேச்சால், ஸ்பரிசத்தால், தடையால்) கட்டிக்கொண்ட பாவங்களை மன்னிப்பாராக" என்று அந்தந்த அவயவத்துக்குத் தகுந்ததைச் சொல்லிக்கொண்டு பூசுகிறார். கூடுமானால் வியாதியுற்றவர் அல்லது அவனுக்குக் கேட்கும்படி அங்கிருப்பவர்களில் ஒருவர் இந்த மன்றாட்டுகளைச் சொல்வது நலம். அவையாவன: ஆண்டவரே. பார்வையால் நான் சுட்டிக் கொண்ட பாவங்களை மன்னித்தருளும்: கேள்வியால்..... மற்றதும் இப்படியே. பாதத்தில் தைலம் பூசுவது சங்கடமா யிருக்கும் பட்சத்தில், அதை விட்டுவிடலாம். ஓர் குருவானவருக்கு அவஸ்தை கொடுப்பதானால் உள்ளங்கையில் பூசாமல், கைக்கு வெளிப்புறத்தில் தைலம் பூசுவார்கள்; இதற்குக் காரணம், அவர் குருப்பட்டம் பெற்ற சமயத்தில் உள்ளங் கைகள் ஏற்கனவே அர்ச்சிக்கப்பட்டதினாலேயே.

குறிப்பு : காதிலும், உள்ளங்கையிலும், பாதங்களிலும் அர்ச்சியசிஷ்ட எண்ணெய் பூசுவதற்கு தடையில்லாவண்ணம், அங்குள்ளோரில் ஒருவர் உதவி புரியவேண்டும்.

4. தைலம் பூசி முடிந்த பிறகு, குருவானவர், "சுவாமி கிருபையாயிரும், கிறீஸ்துவே கிருபையாயிரும்” என்று மன்றாடி, பரலோக மந்திரமும் பின்வரும் சிறிய மன்றாட்டுகளையும் சொல்கிறார்: என் தேவனே, உம்மிடம் நம்பிக்கையா யிருக்கிற உமது அடியானை (அல்லது அடியாளை) இரட்சியும். ஆண்டவரே, உமது பரிசுத்த ஸ்தலத்திலிருந்து அவனுக்கு உதவிசெய்து, சீயோனிலிருந்து அவனை (அவளை) காப்பாற்றும், ஆண்டவரே, சத்துராதியின் சமூகத்தில் அவனுக்குத் தேவரீர் தைசியக் கோபுரமாயிரும். சத்துரசதி அவனுக்கு விரோதமாய் யாதொன்றும் செய்ய இயலாமலும், அக்கிரமத்தின் புத்திரன் அவனுக்குத் தீங்கு செய்ய சக்தி யில்லாமலும் போவானாக! ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் அபய சத்தம் உமது சந்நிதி மட்டும் வரக் கடவது.”

குறிப்பு : இந்த ஜெபங்களில், வியாதியுற்றவருக்கு மாத்திரமல்ல. வீட்டிலுள்ள சகலருக்கும் தேவையான வரங்களை மன்றாடுவதால், எல்லோரும் இவைகளிலுள்ள கருத்தோடு ஒன்றித்து மன்றாடுவார் களாக.

5. பின்னர் மூன்று ஜெபங்கள் சொல்லப்படுகின்றன

அவையாவன:-

பிரார்த்திக்கக்கடவோம்

"உங்களில் யாதொருவன் வியாதியாயிருக்கிறானோ. அவன் சபையின் குருக்களை வரவழைப்பானாக, அவர்கள் ஆண்டவருடைய நாமத்தினாலே அவனைத் தைலத்தால் பூசி, அவனுக்காக செபிப்பார்கள்: அப்போது விசுவாசமுள்ள செபம் வியாதிக்காரனை இரட்சிக்கும். ஆண்டவரும் அவனுடைய வருத்தத்தை இலகுவாக்குவார். அன்றியும் அவன் பாவங்களோ டிருந்தால், அவைகள் அவனுக்கு மன்னிக்கப்படும்" என்று உமது அப்போஸ்தலராகிய இயாகப்பர் வழியாய் திருவுளம்பற்றியிருக்கிற தேவனாகிய ஆண்டவரே, எங்கள் திவ்விய இரட்சகரே, இஸ்பிரித்துசாந்துவின் அருளால் இந்த வியாதிக்காரனுடைய (வியாதிக்காரியுடைய) நோயைக் குணப்படுத்தி, அவனது காயங்களை சொஸ்தப்படுத்திப் பாவங்களை மன்னித்து, ஆத்தும சரீர வாதனையெல்லாம் அவனைவிட்டு அகற்றி, உள்ளும் புறம்பும் அவனுக்குப் பூரண சௌக்கியத்தை தயவாய்த் தந்து, இவ்வண்ணம் அவன் உமது இரக்கத்தின் உதவியால் மீண்டும் சுகமடைந்து தனது பழைய அலுவல்களை செய்யும்படி உம்மை மன்றாடுகிறோம். பிதாவோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலமும் சிவியருமாய் இராச்சிய பரிபாலகரு மாயிருக்கிற சர்வேசுரா. ஆமென்.

பிரார்த்திக்கக்கடவோம்

ஆண்டவரே, சரீர பலவீனத்தால் நொந்து கிடக்கிற உமது அடியானை(ளை)க் கண்ணோக்கி, நீர் சிருஷ்டித்த ஆத்துமத்தைப் பலப்படுத்தி, உமது தண்டனை களால் அவன் சீரடைந்து உமது அளிழ்தத்தால் இரட்சிக்கப்பட்டதாக உணரும் படி செய்தருள உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவ ராகிய சேசு கிறீஸ்துநாதர் பேரால் தந்தருளும். ஆமென்.

பிரார்த்திக்கக்கடவோம்

பரிசுத்த ஆண்டவரே, சர்வ வல்லபமுள்ள பிதாவே. நித்திய சர்வேசுரா, உமது ஆசீர்வாதத்தின் பலனை வியாதியுற்ற சரீரத்திற்கு அளிப்பதினால், அனந்த தயையுடன் உமது கை- வேலையைக் காப்பாற்றுகிறீரே, உமது நாமத்தை மன்றாடுகிற எங்கள் அருகே தயவாய் அண்டி வந்து, உமது அடியானை வியாதி யினின்று குணப்படுத்தி சௌக்கியத்தைத் தந்து, உமது வலது கரத்தால் அவனை தூக்கி எடுத்து, உமது சத்துவத்தால் அவனைப் பலப்படுத்தி, உமது வல்லமையால் அவனைக் காப்பாற்றி, விரும்பத்தக்க சகலவித செழிப்புடன் அவனை "உமது பரிசுத்த திருச்சபைக்கு மீண்டும் கொடுத்தருளும்." இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய சேசு கிறீஸ்து நாதர் பேரால் தந்தருளும். ஆமென்.

அவஸ்தைப்பூசுதல் இத்தோடு முடிவு பெறுகிறது. இதற்குப்பின்னர், அப்போஸ் தலிக்க ஆசீர்வாதம் கொடுப்பது வழக்கம். இதற்குப் பரிபூரண பலம் உண்டு. இதை அடைய வியாதியுற்றவர் கூடுமானால் வாயினால், அல்லது உள்ளத்தில் “சேசுவே என்னை இரட்சியும்" என்று சொல்லவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக