Ordinary Jurisdiction and (Extraordinary) Supplied Jurisdiction.
சாதாரண அதிகாரம், அசாதாரண அதிகாரம்.
விசுவாச மறுதலிப்பும் பதித தப்பறைகளும் அவசங்கைகளும் பரவி வரும் இந்த காலத்தில் கத்தோலிக்கர்கள், குருக்கள் மற்றும் மேற்றிராணிமார்களின் சாதாரண மற்றும் அசாதாரண அதிகாரம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
திருச்சட்டங்களிலும் இது பற்றிய பகுதிகள் உண்டு. In Canon Law.
சாதாரண அதிகாரம்:
பாப்பானவர் ஒரு மேற்றிராணியாருக்கு ஒரு மேற்றிராசனத்தைக் கொடுத்து பரிபாலிக்கச் சொல்கிறார். ஒரு மேற்றிராணியார் குருக்களை பங்குகளை பரிபாலிக்கச் சொல்கிறார்.
இது சாதாரண அதிகாரம். Ordinary Jurisdiction. சாதாரண காலங்களில் இது மட்டுமே போதுமானதாக இருந்தது. உதாரணமாக இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முற்பட்ட காலத்தில்.
விசுவாச மறுதலிப்பும், தப்பறைகளும் அவசங்கைகளும் பரவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் நல்ல குருக்கள் மற்றும் மேற்றிராணிமார்களைத் தேடிச்சென்று திவ்ய பலி பூசை மற்றும் தேவதிரவிய அனுமானங்களைப் பெற்று க் கொள்ளும் நிலைக்கு உலகில் ஏராளமான கத்தோலிக்கர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக இந்த அசாதாரண அதிகாரம் பெரிய அளவில் உலகில் இன்று பயன் பாட்டில் உள்ளது.
இந்த அசாதாரண அதிகாரம் (Supplied Jurisdiction )எங்கிருந்து வருகிறது?
கிறிஸ்துவின் ஞான சரீரமாகிய கத்தோலிக்க திருச்சபையிலிருந்து நேரடியாக பெறப்படுகிறது.
சாதாரண அதிகாரம் எங்கிருந்து வருகிறது?
கத்தோலிக்க படி நிலை அதாவது (Catholic Hierarchy) வழியாக வருகிறது.
கிறிஸ்துவின் ஞான சரீரமும் இந்த Hierarchy யும் ஒன்றல்ல. முந்தையது என்றும் மாறாதது. ஆண்டவருக்கு பிரமாணிக்கம் தவறாதது. பிந்தையது மாறக்கூடியது. பிரமாணிக்கமும் தவரக் கூடியது.
மேலும், சாதாரண அதிகாரத்திற்கு எல்கைகள் உண்டு. குறிப்பிட்ட மேற்றிராசனம் அல்லது பங்கு.
அசாதாரண அதிகாரத்திற்கு எல்கைகள் கிடையாது. உலகில் எங்கும் இந்த அதிகாரம் செல்லுபடியாகும்.
மரியாயே வாழ்க!
====================
The Ordinary and Extraordinary Supplied Jurisdiction.
Catholics should know about the Ordinary Jurisdiction and the Supplied (Extraordinary) Jurisdiction of the Clergy in the present times of Apostasy, Heresy and Sacrileges prevalent in the Catholic World.
There are passages in the Canon Law about these matters.
Ordinary Jurisdiction:
Pope asks Bishops to look after designated Dioceses. Bishops ask Priests to look after the Parishes.
This Ordinary Jurisdiction was sufficient in the normal times before the second Vatican Council, for example.
Today a large number of Catholics in the world are pushed to seek the Holy Mass and Sacraments from Priests and Bishops who have only the Supplied Jurisdiction. Due to the Apostasy, Heresy and Sacrileges that are prevalent.
Thus the Extraordinary Supplied Jurisdiction is in use on a large scale all over the world today.
Where does this Supplied Jurisdiction come from?
Ths comes from the Mystical Body of Christ which is the Holy Catholic Church.
Where does the Ordinary Jurisdiction come from?
It comes from the Catholic Hierarchy of Pope, Bishops and Priests.
The Mystical Body of Christ and this Hierarchy are not one and the same. The former never changes and is ever faithful to Our Lord. The latter is subject to change and may also become unfaithful to its Master and Judge.
One more difference: The Ordinary Jurisdiction has specified territories. For example a Bishop's territory is his Diocese. A Priest's territory is his Parish.
The Extraordinary and Supplied Jurisdiction has no territories. It can be exercised by a Priest or a Bishop anywhere in the world.
Ave Maria!