Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 28 ஆகஸ்ட், 2021

மாசில்லா கன்னியே பாடலின் வரலாறு:

 



1884-ல் Vade mecum என்ற French மொழி இசைக்கோர்ப்பில், Regnam Marie என்ற பாடல் வெளியிடப்பட்டது. அதுதான் மாசில்லா கன்னியே பாடலின் முதல் tune. பின் அதுவே உடனடியாக Latin மொழியில் Ave Maris Stella என்று ஏறக்குறைய 21 ராகங்களில் வெளிவந்தது. 
 
பின் 1918-ல் இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, Immaculate Mary என்ற பாடலாக வெளியிடப்பட்டது. பின் 1923-ல் திரு. மனுவேல் கோஸ்தா என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு யாத்ரிகட்கு பாதை காட்டும் தாரகையே என்ற பாடலாயிற்று. இந்த பாடலின் இறுதி கண்ணிதான் மாசில்லா கன்னியே. 
 
பின் 1927 - ல் இலங்கையில் தமிழ் மாற்றம் செய்யப்பட்டு மாசில்லா கன்னியே என்று ஆரம்பித்து புதிய பாடலாக வெளிவந்தது. (தமிழ், ஆங்கில மற்றும் லத்தீன் ஒலிப்பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேளுங்கள்) நன்றி.
 

 
 
 
 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக