Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 12 நவம்பர், 2017

St. Gertrude, November 15-ம் தேதி


                                   
                அர்ச்.ஜெர்த்ருத்தம்மாள், கன்னிகை  (கி.பி.1292)

 சிறந்த கோத்திரத்தாரும் அர்ச்.மெக்டில்டெஸம்மாளின் சகோதரியுமான
ஜெர்த்ருத் ஐந்து வயதில் ஒரு கன்னியர் மடத்திற்கு அனுப்பப்பட்டு, ஞானப் படிப்பையும் உலகப் படிப்பையும் கற்று வந்தாள்.  30-ம் வயதில் அந்த மடத்தின் அதிசிரேஷ்ட தாயாராக தெரிந்துகொள்ளப்பட்டாள்.  கர்த்தருடைய திருப்பாடுகளைக் குறித்தும் தேவநற்கருணையைக் குறித்தும் அவள் தியானிக்கும்போது அவள் கண்களினின்று  கண்ணீர் தாரை தாரையாக வடியும்.  அநேக முறை அவள் ஜெப நேரத்தில் பரவசமாவாள்.  மேலும் இப்புண்ணியவதி நமது கர்த்தரை தரிசிக்கப் பாக்கியம் பெற்று, மோட்ச பேரின்பத்தை அனுபவித்தாள்.  தாழ்ச்சி, கீழ்ப்படிதல், இடைவிடா ஜெபம், ஒருசந்திää சுத்த போசனம் முதலியவைகளை அனுசரித்து, நாளுக்கு நாள் புண்ணிய வாழ்வில் உயர்ந்தாள்.  இவ்வளவு புண்ணியவதியாயிருந்தும் தன்னைத் தாழ்த்தி ஒன்றுக்கும் உதவாதவளென்று எண்ணி, மற்றவர்களுக்கு நீச ஊழியங்களை ஆசையுடன் செய்து வருவாள்.  மற்றக் கன்னியாஸ்திரீகள் சிரேஷ்ட தாயாரின் புண்ணியங்களைக் கண்டு அதிசயித்து, அவளுடைய நன்மாதிரியைப் பின்பற்ற பிரயாசைப்படுவார்கள்.  ஜெர்த்ருத் தேவதாயார் பேரில் அதிக பக்தி வைத்து வந்தாள்.  உத்தரிக்கிற ஆத்துமாக்கள் மட்டில் இவளுக்கிருந்த இரக்கத்தால், தன் ஜெபங்களை அந்த ஆத்துமங்களுக்காக ஒப்புக்கொடுப்பாள்.  ஜெர்த்ருத்தம்மாளின் சிறந்த புண்ணியங்களினிமித்தம் புதுமை வரம் பெற்றிருந்தாள்.  இந்தப் புண்ணியவதி மோட்ச பாக்கியத்தின் மட்டில் அதிக ஏக்கம் கொண்டு யாதொரு சரீர நோவுமின்றி சாகக் கிடக்கையில் நமது கர்த்தரும் அவருடைய திருத்தாயாரும் அவளுக்குத் தோன்றி அவள் ஆத்துமத்தை மோட்சத்திற்குக் கூட்டிக்கொண்டு போனார்கள்.  


யோசனை
 கர்த்தர் மட்டில் உள்ள தேவ சிநேகத்தால் அர்ச்.ஜெர்த்ருத்தம்மாளுக்கு உண்டான பெரும் பாக்கியத்தை நாமறிந்து நம்மால் முடியும் மட்டும் சர்வேசுவரனை சிநேகிப்போமாக.        

சனி, 11 நவம்பர், 2017

St.Josephat, B.M. நவம்பர் 14-ம் தேதி


உயர்ந்த கோத்திரத்தாரும் பக்தியுள்ளவர்களுமான தாய் தந்தையரிடத்தினின்று ஜோசெபாத் பிறந்தார்.  கர்த்தருடைய திருப்பாடுகளைப் பற்றி அவருடைய தாயார் பேசினதைக் கேட்ட ஜோசெபாத் திருப்பாடுகளின் மட்டில் இரக்கமும் பக்தியுங்கொண்டார்.  இவர் ஒரு சன்னியாச மடத்தில் வளர்ந்து புண்ணிய வழியில் சுறுசுறுப்பாய் இருந்தார்.    இவர் துறவியான பின் தர்ம வழியில் அதிகரித்து வெறுங் காலால் நடந்து எப்போதும் சுத்த போசனம் அருந்தி மயிர்ச் சட்டை தரித்து கடுந் தவம் புரிவார்.  இவருடைய அதிசயத்திற்குரிய புண்ணியங்களினிமித்தம் அந்த மடத்திலுள்ளவர்களுக்குள் இவர் வயதில் சிறுவராயினும், அதிமேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார்.  இவ்வுன்னத பட்டம் பெற்ற பின் புண்ணிய வழியில் முன்னிலும் உத்தமமாய் ஒழுகி, பிரசங்கத்தாலும் புத்தகங்களாலும் அநேக பதிதரை சத்திய சபையில் சேர்த்துக்கொண்டு, பாவிகளை மனந்திருப்பி பிரிவினையிலிருந்த கிரேக்க சபையை சத்திய திருச்சபையுடன் ஒன்றித்திருக்கும்படி சர்வ முயற்சியும் செய்து வந்தார்.  அநேக கோயில்களைக் கட்டி அலங்கரித்துத் துறவற மடங்களை ஏற்படுத்தி திருச்சபை செழித்தோங்கும்படி பிரயாசைப்பட்டு வந்தார்.  பிரிவினைக்காரரான சில தேவ துரோகிகள், இவர் விசாரணைக்கு வெளியூர்களுக்குப் போய் தங்கியிருந்த வீட்டில் பிரவேசித்துத் தங்களுக்கு  எதிர்ப்பட்டவர்களை அடித்து காயப்படுத்தும் தருவாயில், இப்பரிசுத்த மேற்றிராணியார்  அவர்களிடம் ஓடிப்போய்: இதோ, என்னை உங்கள் எண்ணப்படி செய்யலாம் என்ற மாத்திரத்தில் அந்த துஷ்டர் அவர் மேல் பாய்ந்து அவரை வெட்டிக் கொலை செய்து அவர் சரீரத்தை ஆற்றில் எறிந்தார்கள்.  ஆனால் அது பிரகாசத்துடன் மிதப்பதைக் கண்ட கிறீஸ்தவர்கள் அதைப் பக்தியாய் எடுத்து பத்திரப்படுத்தினார்கள்.  அதனால் அநேக புதுமைகள் நடந்தேறின. 



யோசனை

                நமது ஞான மேய்ப்பர்களுக்கு நாம் அமைந்து கீழ்ப்படிந்து, ஒருபோதும் அவர்களுக்கு பங்கம் வருவிக்காமலும் தீங்கு செய்யாமலும் இருப்போமாக.        

St.Stanislas, நவம்பர் 13-ம் தேதி



                    அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், துதியர் 

                                                       (கி.பி.1567)

                இவர் பக்தியுள்ள தாய் தந்தையரிடத்தினின்று பிறந்து, புண்ணிய வழியில் கவனத்துடன் வளர்க்கப்பட்டார்.  இதனால் அவர் சிறு வயதிலேயே ஒரு அர்ச்சியசிஷ்டவரைப் போலக் காணப்பட்டார்.  கல்விப் பயிற்சி பெறும்படி தன் சகோதரனுடன் ஒரு பட்டணத்திற்கு அனுப்பப்பட்டார்.  அவ்விடத்தில் ஸ்தனிஸ்லாஸ்  புண்ணியத்தில் அதிகரித்து வந்தார். 
நாள்தோறும் திவ்விய பூசை காண்பார்.  வாரந்தோறும் தேவநற்கருணை உட்கொள்வார்.  கல்விச்சாலைக்குச் செல்வதற்கு முன்னும் பின்னும் தேவநற்கருணை சந்திப்பார்.  கெட்ட தோழருடன் சேர மாட்டார்.  யாதொருவன் தகாத வார்த்தைப் பேசக் கேட்டால், ஸ்தனிஸ்லாஸ் அவ்விடத்தை விட்டு அகன்று போவார்.  இரவு வேளையில் விழித்து ஜெபஞ் செய்வார்.  முள்ளொட்டியாணம் முதலிய தபயத்தனங்களை உபயோகிப்பார். உலக புத்தியுள்ள இவருடைய தமயன் ஸ்தனிஸ்லாஸ் தன்னைப் போல ஆடல் பாடலுக்கு வராமலும் கெட்ட சிநேகிதருடன் சகவாசம் செய்யாமலும் இருப்பதைப் பற்றிப் பல முறை அவரைத் திட்டி அடித்து உபாதித்தும், அவர் அவைகளை எல்லாம் பொறுமையுடன்  அனுபவிப்பார்.  அவர் கடிய வியாதியாய் விழுந்தபோது தேவநற்கருணை வாங்க ஆசித்தும் அவர் இருந்த பதித வீட்டுக்காரன் அவ்விடத்திற்குக் குருவானவர் வரச் சம்மதிக்கவில்லை.  அப்போது அவர் விசுவாசத்துடன் வேண்டிக் கொண்டபோது இரு சம்மனசுகள் அவருக்கு தேவநற்கருணை கொண்டு வந்து கொடுத்தார்கள்.  தேவமாதா ஸ்தனிஸ்லாஸ{க்குத் தோன்றி சேசு சபையில் சேரும்படி அறிவித்ததின் பேரில், ஸ்தனிஸ்லாஸ் உரோமைக்குச் சென்று மேற்கூறிய சபையில் சேர்ந்தார்.  அவர் நவ சன்னியாசியாயிருந்த ஒன்பதரை மாதங்களுக்குள் சகல புண்ணியங்களையும் உத்தமமாக அனுசரித்து இவர் விரும்பியபடி மோட்ச இராக்கினி மாதா திருவிழாவன்று மரித்து மோட்ச ஆனந்தத்திற்குள்ளானார். 

யோசனை
                கல்விச்சாலைகளில் கற்கும் வாலிபர் அர்ச்.ஸ்தனிஸ்லாஸின் மாதிரிகையைப் பின்பற்றக் கடவார்களாக.

St. Martin, நவம்பர்  12


அர்ச்.மார்ட்டின், பாப்பாண்டவர், வேதசாட்சி

                                                       (கி.பி.655)

                மார்ட்டினுடைய சிறந்த புண்ணியத்தையும் கல்வியையும் பார்த்து அர்ச்.இராயப்பருடைய சிம்மாசனத்திற்கு நியமிக்கப்பட்டார்.  கான்ஸ்டாண்டிநோபிளில் ஒரு புது பதித மதம் முளைத்து அதில் அநேகர் சேர்ந்ததுடன் அந்நகரின் மேற்றிராணியாரான பவுல் என்பவரும் அதற்கு ஆதரவாக இருந்ததை மார்ட்டின் பாப்பாண்டவர் அறிந்து, ஸ்தானாதிபதிகளை அவ்விடத்திற்கு அனுப்பி, காரியத்தை ஒழுங்குபடுத்தும்படிச் செய்தார்.  பதிதனான மேற்றிராணியார் அந்த ஸ்தானாதிபதிகளை பரதேசத்திற்கு அனுப்பி விட்டார்.  இதற்குப் பின் அர்ச்.பாப்பாண்டவர் அநேக மேற்றிராணிமாரை திருச்;சங்கமாகக் கூட்டி பவுல் மேற்றிராணியார் பேரிலும் அந்த பதித மதத்தைச் சேர்ந்தவர்கள் பேரிலும் திருச்சபை சாபம் போட்டார். பதித மதத்தானான கன்ஸ்தான்ஸ் இராயன் சினங்கொண்டு, தன் மந்திரிகளில் ஒருவனை உரோமைக்கு அனுப்பி பாப்பாண்டவரைக் கொல்லும்படி கட்டளையிட்டான்.  திவ்விய பூசை செய்யும் பாப்பாண்டவரைக் கொல்லும்படி மேற்கூறிய மந்திரியின் சேவகன் அவரை அணுகியபோது புதுமையாக அவன் குருடனானான்.  கொடுங்கோலனான இராயனுடைய கட்டளைப்படி ஒரு படைத்தலைவன் பெரும் படையுடன் உரோமைக்குச் சென்று கபடமாய் பாப்பாண்டவரைச் சிறைப்படுத்தி, இராயனிடன் கூட்டிக்கொண்டு வந்தான்.  இராயன் அவரைப் பலவாறாய் உபாதித்து அவரைக் கொலை செய்ய முயற்சித்தபோது, பதித மேற்றிராணியார் கடின வியாதியாய் விழுந்து இறந்தார்.  தனக்கும் மற்ற பதிதருக்கும் போட்ட சாபத்தை எடுக்கும்படி இராயன் மார்ட்டின் பாப்பாண்டவருக்கு கட்டளையிட்டு, அவரை உபாதித்தபோதிலும் அவர் அதற்குச் சம்மதியாததால் அவரை பரதேசத்திற்கு அனுப்பினான்.  அவர் பரதேசத்தில் சொல்ல முடியாத வாதைகளை அனுபவித்து வேதத்திற்காக தமது உயிரைக் கொடுத்தார். 



யோசனை
                நாம் எந்த காரணத்தைக் கொண்டும் இதர மதத்தாருடைய தேவாரதனையில் பங்கு பெறக் கூடாது.

St.Martin of Tours, B. நவம்பர் 11


மிகவும் கீர்த்தி பெற்ற மார்ட்டின் என்பவர் பிரான்ஸ் தேசத்திற்குச் சிறந்த ஆபரணமாய் ஜொலித்தார்.  அஞ்ஞானியான இவர் கல்விப் பயிற்சி பெறும்போது, சத்திய வேதத்தையறிந்து ஞானோபதேசங் கற்கையில், அவர் தகப்பனார் அவரைப் படையில் சேர்த்துக்கொண்டார்.  ஒரு நாள் மார்ட்டின் மற்றச் சேவகருடன் பயணம் போகையில், குளிரால் நடுங்கும் ஒரு ஏழை, சேசுநாதர் பெயரால் தருமங் கேட்டான்.  தமது கையில் ஒன்றுமில்;லாததினால் தமது மேற்போர்வையைக் கழற்றி இரண்டாகக் கிழித்து பாதியை அவனுக்குக் கொடுத்தார்.  அன்றிரவு சேசுநாதர் மேற்கூரிய போர்வையை போர்த்தியவராய் அநேக சம்மனுசுக்களுடன் அவருக்குத் தோன்றி ~~இது மார்ட்டின் எனக்குக்கொடுத்த போர்வை|| என்றார்.  இதற்குப் பின் மார்ட்டின் பட்டாளத்தை விட்டு விலகி, ஞானஸ்நானம் பெற்று, அர்ச்.இலாரி என்பவருக்கு சீஷனாகி, வேத சாஸ்திரங்களைக் கற்று, குருப்பட்டம் பெற்று, ஒரு சன்னியாச மடத்தைக் கட்டி, 400 சன்னியாசிகளுடன் ஜெபதபத்தால் சர்வேசுவரனுக்கு ஊழியஞ் செய்து வந்தார்.  இவருடைய புண்ணியங்களினிமித்தம் இவருக்கு மேற்றிராணியார் பட்டங் கொடுக்கப்பட்டது.  மார்ட்டின் சில சன்னியாசிமாருடன் ஊரூராய்ப் போய் வேதம் போதித்தார்.  இவர் புதுமை வரம் பெற்று இறந்தவர்களுக்கு உயிரும் குருடருக்குப் பார்வையும் கொடுத்து பசாசை விரட்டியதைக் கண்ட கணக்கில்லாத அஞ்ஞானிகள் ஞானதீட்சை பெற்றார்கள்.  இவர் அவர் நாட்டிலுள்ள பேய்க் கோவில்களை இடித்து, சோலைகளை அழித்து, சத்திய வேதக் கோவில்களைக் கட்டினார்.  இவரால் செய்யப்பட்ட புதுமைகளுக்குக் கணக்கில்லை.  இவருடைய விடாமுயற்சியாலும் ஜெபதபத்தாலும் அநேக அஞ்ஞான நாடுகளை கிறீஸ்துவ நாடுகளாக்கி, தமது ஞானப் பிரசங்கத்தால் அவர்களை சத்திய வேதத்தில் உறுதிப்படுத்தி, பிரான்ஸ் தேசத்தின் அப்போஸ்தலரென்றும் பெயர் பெற்று அர்ச்சியசிஷ்டவராய்க் காலஞ்சென்றார். 




யோசனை


                நாம் தர்மம் புரியும்போது முகத்தாட்சண்யத்தையும் வீண் பெருமையையும் பாராமல் சர்வேசுவரனைக் குறித்து அதைச் செய்ய வேண்டும்.