ஏழாம் நாள்
அர்ச். அந்தோனியாருடைய பிரசங்கம்
1222-ம் வருஷம் மார்ச்சு மாதத்தில் மோந்த்தே பாவோலோ மடத்துச் சந்நியாசிகளும் அந்தோனியாரும் வேறு சில பிரசங்கி சகோதரர் (Frores
Pruheur} எனப்பட்டவர்களோடு போர்லி {Fort) பட்டணம் போக நேரிட்டது. அவ்விடத்து மேற்றிராணியாரால் சிலர் பட்டம் தரிக்கப்பட வேண்டியிருந்தது. பட்டம் கொடுக்கும் தினத்தில் மோந்த்தே பாவோலோ மடத்துச் சிரேஷ்டர் பிரசங்கம் செய்வதற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த போதிலும் ஏதோ ஓர் காரணத்தை முன்னிட்டு தனக்குப் பதிலாய்ப் பிரசங்கம் செய்யும்படி பிரசங்கி சகோதரரைக் கேட்டுக் கொண்டார். என்ன காரணத்தாலோ அவர்களும் சம்மதிக்காதபோது சிரேஷ்டர் இஸ்பிரீத்து சாந்துவினால் ஏவப்பட்டு அர்ச், அந்தோனியார் அந்தப் பிரசங்கத்தை செய்யும்படிக்குக் கீழ்ப்படிதலின் பேரில் கட்டளையிட்டார். முதலில் அர்ச்சியசிஷ்டவர் அதிசயப்பட்டுக் கலக்கங் கொண்டாலும், கீழ்ப்படிய வேண்டி மேற்றிராணியாரின் ஆசிர்வாதம் பெற்று பிரசங்க மேடை ஏறி "கிறிஸ்துவானவர் நமக்காக மரணமட்டும் கீழ்ப்படிந்தார்" என்னும் அப்போஸ் தலருடைய வாக்கியங்களைச் சொல்லிப் பிரசங்கத்தை ஆரம்பித்தார். தாழ்ச்சி நிறைந்த அந்தோனியார் துவக்கத்தில் அஞ்சினாற் போல சாதாரணமாய்ப் பேசினபோதிலும், வரவர, பேசப்பேச வாய்ச்சாலக மிகுந்த, கேட்டவர்கள் அதிசயிக்க, தாம் கொண்ட கருத்தை பலவிதமாய் விளக்கி வியாக்கியானஞ் செய்ய, அங்கிருந்தவர்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு ஆனந்த வெள்ளத்தில் முழ்கி அது வரையிலும் அப்பேர்ப்பட்ட பிரசங்கங் (கேட்டதேயில்லை எனச் சொல்லும்படி ஆனார்கள். அன்றுமுதல் அர்ச், பிரான்சிஸ்கு சபையார் அந்தோனியாருடைய சாஸ்திரத் திறமையையும், வாய்ச்சால்கத்தையும் அறிந்ததால் அவரை மதித்து பெருமைப்படுத்தினார்கள். இது சங்கதியைச் சிரேஷ்டர் அர்ச். பிரான்சிஸ்குவுக்கு அறிவித்து, அர்ச், அந்தோனியார் பிரசங்கம் செய்வதற்கு தயாரிப்பாகும் படி அவருக்குக் கட்டளையிட்டார். சிரேஷ்டர் இட்ட கட்டளையை அர்ச், பிரான்சீஸ்கு அங்கீகரித்ததோடுகூL. அவர்தாமே' அர்ச். அந்தோனியாருக்கு எழுதினதென்னவெனில், 'என் மிகவும் பிரிய சகோதரர் அந்தோனியாருக்கு, பிரான்சிஸ்கு சகோதரன் நமதாண்டவராகிய சேசுகிறிஸ்து நாதரிடத்தில் வந்தனம்; நம் சகோதரருக்கு வேத சாஸ்திரம் நீர் கற்றுக்கொடுப்பது நலமென்று தான் காண்கிறேன், தியானத்தின்மட்டிலுள்ள பிரியம் உம்மிடத்திலும் மற்றவர் களிடத்திலும் குறையாதபடிக்கு கவனித்துப் பார்த்துக் கொள்ளும். நாம் அனுசரித்து வரும் ஒழுங்குக்குத் தகுந்தாற்போல இந்த விஷயத்தைப்பற்றி எல்லோரும் கவனிக்கும்படி நான் மிகவும் ஆசிக்கிறேன். வந்தனம்' என்று எழுதினார்
பொலோஞா பட்டணத்து மடத்தில் பிரான்சிஸ்கு சபை சந்நியாசிகளுக்கு அந்தோனியார் வேத சாஸ் திரங்களைக் கற்றுக்கொடுத்து வந்தார். கொஞ்ச காலத்துக்குள்ளாக அவருடைய கல்வித் திறமையும் வாய்ச்சாலகமும் எங்கே பார்த்தாலும் பிரபலியமாய்ப் பரவியதால் வெகு தாரத்தினின்றும் மாணாக்கர் திரளாய் வந்து சேர்ந்தார்கள். அதன் பிறகு முறையே துலூஸ் பட்டணத்திலும், பொலோனாவிலும், பதுவா பட்டணத்திலும் வேத சாஸ்திரங் கற்பித்து வந்தார். ஆனால் அவர் இவ்வளவு திறமையோடு வேத சாஸ்திரங்களைக் கற்பித்து வந்தபோதிலும், சர்வேசுரன் அவரைக்கொண்டு, அநேகமாயிரம் பாவிகளை மனந்திருப்பச் சித்தமானதால், அவருடைய வாக்குசாதுரியத்தோடு அற்புதங்களைச் செய்யும் வரத்தையும் தந்தருளினார். ஆனதால் 'புதுமைகளை விதைக்கிறவர்' என்கிற பெயர் அவருக்கு உண்டாகிறதுக்குப் பாத்திரமானார், மேற்சேயில் (Mercal) என்னும் பட்டணத்தில் அர்ச். எவுசேபியாருடைய விஸ்தாரமான கோயிலில் 1124-ம் வருஷம் தபசு காலத்தில் அர்ச். அந்தோனியார் திரளான சனங்களுக்கு முன்பாகப் பிரசங்கித்துவந்தபோது, அழுகைக் கூச்சலும் புலம்பலுங் கேட்கப்பட்டு பிரசங்கத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. அடுத்த கோயிலில் மரித்த ஒரு வாலிபனை அடக்கம் செய்கிறதுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். நாயிம் பட்டணத்து விதவையினுடைய வியாகுலத்தைக் கண்ட சேசுநாதர் மனமிரங்கி மரித்த அவள் குமாரனை உயிர்ப்பித்தது போல, அர்ச். அந்தோனியாரும் மனதிளகி பிரசங்கத்தை நிறுத்தி, சிறிதுநேரம் பக்தி உருக்கத்தோடு வேண்டிக்கொண்டு, உரத்த சத்தமாய் மரித்த வாலிபன் உயிர்த்து நடக்கும்படி கட்டளையிட்டார். பார்த்திருந்தவர்கள் அதிசயிக்க உடனே வாலிபன் எழுந்து நடந்தான். பிறகு அர்ச்சியசிஷ்டவர் பிரசங்கத்தைத் தொடங்கி முடித்தார். அவரிடத்தில் சர்வேசுரன்மட்டில் இருந்த விசுவாசமும் நம்பிக்கையும் நம்மிடத்திலுண்டாக அந்தோணியார் கிருபை செய்ய அவரை மன்றாடக்கடவோம்.
செபம்
* அர்ச். அந்தோனியாரே, உமக்குத் தாழ்ச்சியின் மட்டில் இருந்த ஆசையினாலும், உம்மைத்தானே மறைத்து ரிச வேலைகளை நீர் வெகு பிரியமாயய்ச் செய்து வந்தபோது சர்வேசுரன் உமது அர்ச்சியசிஷ்டத் தனத்தையும் கல்வித் திறமையையும் பிறருக்கு வெளிப்படுத்தி அவரால் உயர்த்தப்படப் பாத்திரமானீரே, அடியோர்களும் அந்த மேலான புண்ணியத்தை அநுசரித்து வரும்படி கிருபை செய்தருளும். ஆமென்.
நற்கிரியை - வேதத்துக்கடுத்த காரியங்களைப் படிக்கிறது.
பனவல்லயச் செபம் - மரித்தவர்களை உயிர்ப்பித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.