Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
புதன், 30 செப்டம்பர், 2015
திங்கள், 28 செப்டம்பர், 2015
திருச்சபை கட்டளைகள்
திருச்சபை கட்டளைகள் மொத்தம்
ஆறு
- ஞாயிற்று கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் முழுப் பூசை காண்கிறது.
- வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கிர்த்தனம் செய்கிறது
- பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவ நற்கருணை உட்கொள்கிறது.
- வெள்ளிக் கிழமைகளிலும் மற்றுமுள்ள சுத்த போசன நாட்களில் சுத்த போசனமும் ஒரு சந்தி நாட்களில் ஒரு சந்தியும் அனுசரிக்கிறது
- விலக்கப்பட்ட காலத்திலும் குறைந்த வயதிலும், விக்கினமுள்ள உறவு முறையாரோடு கல்யாணம் செய்யாதிருக்கிறது
- நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியை செய்கிறது
ஞாயிறு, 27 செப்டம்பர், 2015
பத்து கற்பனைகள்
- உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே: நம்மை தவிர வேறு சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக
- சர்வேசுரனுடைய நாமத்தை வீணாக சொல்லாதிருப்பாயாக
- சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.
- பிதாவையும் மாதவையும் சங்கித்திருப்பாயாக
- கொலை செய்யாதிருப்பாயாக
- மோக பாவம் செய்யாதிருப்பாயாக
- களவு செய்யாதிருப்பாயாக
- பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக
- பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக
- பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயாக
- எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது
- தன்னை தான் நேசிப்பது போல் பிறரையும் நேசிப்பது]]
சின்னக் குறிப்பிடம் Tamil Catechism Book
- சர்வேசுரன் தாமாய் இருக்கிறார்.
- தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்.
- சரீரம் இல்லாமலிருகிறார்.
- அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராய் இருக்கிறார்,
- எங்கும் வியாபித்திருக்கிறார்.
- எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாய் இருக்கிறார்.
இரண்டாம் பிரிவு
மூன்றாம் பிரிவு
மனிதனுடைய இரட்சிப்பு
31. எந்த சுபாவத்திலே பாடுபட்டார்?
மனித சுபாவத்திலே பாடுபட்டார்.
32. யாருக்காக பாடுபட்டார்?
நமக்காக பாடுபட்டார்.
33. என்ன பாடுபட்டார்?
போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் மிகுந்த பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை அடைந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
34. அப்போது சுவாமியுடைய திரு ஆத்துமம் எங்கே போனது?
பாதாளங்களிலே இறங்கி அங்கே இருந்த புண்ணிய ஆத்துமாக்களுக்கு மோட்சபாக்கியம் கொடுக்கப் போனது
35. சேசுநாதர் சுவாமி கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளினாரா?
மரித்த மூன்றாம் நாள் கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளினார்.
36. உயிர்த்த பிற்பாடு பூலோகத்திலே எத்தனை நாள் தங்கியிருந்தார்?
40 நாட்கள்.
37. அந்த நாற்பது நாளும் என்ன செய்து கொண்டு வந்தார்?
அநேகம் விசை தம்முடைய சீடர்களுக்கு தரிசினையாக தம்மை காண்பித்து அவர்களை வேத சத்தியங்களில் ஸ்திரப்படுத்திக் கொண்டு வந்தார்.
38. நாற்பதாம் நாள் எங்கே எழுந்தருளிப் போனார்?
பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலதுப் பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
39. இப்போது சேசுநாதர் சுவாமி எங்கே இருக்கிறார்?
சர்வேசுரானாகிய மட்டும் எங்கும் இருக்கிறார். சர்வேசுரனும் மனிதனுமாகிய மட்டும் பரலோகத்திலும் திவ்விய நற்கருணையிலும் இருக்கிறார்.
ஐந்தாம் பிரிவு
மனிதனுடைய முடிவுகள்
Download Traditional Tamil Catholic Songs for free.... Click here....
வியாழன், 2 ஜூலை, 2015
Visitation of Our Lady
July 2: Feast of the Visitation of Our Lady,
Mary’s first thought after the Archangel’s visit was to hasten to the little city of Ain Kharin and congratulate her cousin Elizabeth on the wonderful event about to take place. As Mary hastened along, those who met her little realized that she bore the Son of God – outwardly humble, sweet, and gracious to all.
So the little girl from Nazareth passed unobserved upon her way. But as she raised her voice in loving salutation to Elizabeth, when entering the house, a marvelous thing happened, for the unborn infant in Elizabeth’s womb leaped for joy as he heard the voice of God’s Mother sounding in his ears. Elizabeth, stricken with amazement, cried out:
“Blessed art thou among women, and blessed is the fruit of thy womb. And whence is this to me, that the mother of my Lord should come to me? For behold, as soon as the voice of thy salutation sounded in my ears, the infant in my womb leaped for joy. And blessed art thou that hast believed, because those things shall be accomplished that were spoken to thee by the Lord.”
In that instant Elizabeth knew that she was standing in the presence of God; knew that the little girl standing before her was God’s Mother; knew all that had taken place at Nazareth; knew of Mary’s fiat.
Then Mary lifted up her voice in high thanksgiving and gave forth the marvelous canticle:
“My soul doth magnify the Lord. And my spirit hath rejoiced in God my Savior. Because He hath regarded the humility of His handmaid; for behold from henceforth all generations shall call me blessed. Because He that is mighty, hath done great things to me; and holy is His name. And His mercy is from Generation unto generations, to them that fear Him. He hath shewed might in His arm: He hath scattered the proud in the conceit of their heart. He hath put down the mighty from their seat, and hath exalted the humble. He hath filled the hungry with good things; and the rich He hath sent empty away. He hath received Israel His servant, being mindful of His mercy: As He spoke to our fathers, to Abraham and to his seed forever.”
In this Magnificat of the humble little girl of Nazareth there is an intense personal note; she sees why it is that she is exalted – her humility. She prophesies as well as she sings, and foretells her future glory. Then she tells that God’s mercy follows those that fear Him; she sings of God’s might; she returns to the thought of God’s mercy, and with this mercy in mind, the little virgin ends her triumphant song.
For three months Mary and Elizabeth rejoiced in each other's company and gave thanks to God for all the wonderful mercy He had bestowed on them – one, the mother of the Herald of God, the other, the Mother of God Himself. Yet these months saw nothing outwardly extraordinary; it was just the quiet outwardly ordinary daily round, such as might be seen in any family.
After those three months the Virgin set out on her way home to Nazareth, and her return was as little noted as her going. She came full of joy and she returned full of joy, for no hint of coming sorrow cast a shadow upon her.
This Feast of the Visitation of Our Lady was instituted by Urban IV, in the year 1385, and confirmed by Boniface IX, in the year 1389.
Feast of the Visitation of Our Lady
சனி, 23 மே, 2015
தேவமாதாவின் மகிமை
1. தேவதாயின் மூலமாகத் தான் இயேசு நாதர் இந்த உலகில் வந்தார். அவர் மூலமாகத்தான் இந்த உலகை அவர் ஜெயம் கொள்வார்
2. மாதா இஸ்பிரித்துசாந்து வினால் அழைக்கப்பட்டிருந்தாலும் அவருடைய வாழ்நாள் முழுவதும் ஒரு மறைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய தாழ்ச்சியின் காரணமாக ஒரு மறைந்த வாழ்வு வாழ்ந்தார்
3. அவர் மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார்.
4. ஆண்டவர் அவரை அவர் உற் பவித்தது முதல் அவர் தம் ஆத்தும சரிரத்தோடு பரலோகத்துக்கு ஆரோபணம் ஆகும் வரையில் அவரை மறைத்து வைத்திருந்தார்.
5. அவருடைய பெற்றோருடைய கண்களுக்கும் அவர் மறைவாக இருந்தார்
வானதூதர் களுடைய கண்களுக்கும் அவர் மறைவாக இருந்தார்.
6. பிதாவாகிய சர்வேசுரன் அவருக்கு புதுமைகளை செய்யும் வரம் கொடுத்திருந்தாலும் அவர் அதை இந்த உலகில் வாழும் போது செய்யவில்லை
7. சுதனாகி சர்வேசுரன் தமது அளவு கடந்த ஞானத்தை மாதாவுக்கு கொடுத்தார். ஆனாலும் அவர் பேசியது குறைவே
8. இஸ்பிரித்துசாந்து சுவிஷேகர்களையும் அப்போஸ்தலர்களையும் மாதாவைப் பற்றி கொஞ்சமாக பேசவும் எழுதவும் .தூண்டினார். அப்போது தான் யேசுவைப் பற்றி அதிகமாக உலகுக்கு சொல்ல முடியும் என்பதால் தான்
9. ஆண்டவர் அவரை எவ்வளவு மகிமைப்படுத்தினார என்றால் வானதூதர்கள் அனைவரும் " அருள் நிறைந்த மரியாயே " என்று புகழ்கின்றனர். மரியாயினுடைய ஊழியர்களுக்கு உதவி செய்வதற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
10 . இந்த உலகம் முழுவதும் மரியாயின் மகிமையால் நிறைந்துள்ளது.
11. ஆண்டவருக்கு மாதாவினுடைய பெயரால் பல கத்தோலிக்க தேவாலயங்கள் கட்டப்பட்டு ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளன.
12. முந்தைய காலங்களில் கோவில்களில் தேவதாய்க் கென ஒரு பீடம் உண்டு.
13. தேவதாய் புகழ்ச்சிக்கும் மரியாதைக்கும,அன்பிற்கும், சேவைக்கும் முற்றும் உரியவர்.
14. ஆண்டவர் தமது மிகப் பெரிய காரியங்களை மரியாயின் மூலம் நிறைவேற்ற அவரைப் படைத்தார். ஆண்டவர் அந்த திட்டங்களில் மாறுதலையோ அல்லது மாற்றமோ செய்ய மாட்டார்.
15. பிதாவாகிய சர்வேசுரன் தமது குமாரனை அர்ச். தேவதாயின் மூலம் இந்த உலகுக்கு தர சித்தமானார். பல பிதா பிதாக்களும், தீர்க்கதரிசிகளும், பழைய ஏற்பாட்டில் உள்ள அர்ச்சிஷ்டவர்களும் சுமார் 4000 வருடங்கள் ஆண்டவருடைய வருகைக்காக காத்திருந்தாலும், ஆண்டவர் இந்த உலகிற்கு வந்தது தாய் மரியாள் மூலமாகத் தான்.
அர்ச். அகுஸ்டின் சொல்வது போல் கடவுள் தம்முடைய குமாரனை தேவதாயின் மூலம் உலகுக்கு தர சித்தமானார்.
16. சேசுநாதர் சுவாமி நம்மை இரட்சிப்பதற்காக மரியாயிடத்தில் மனிதவதாரம் எடுத்தார். எனவே நாம் தேவதாய் மூலமாகவே இரட்சிக்கப்படுவோம்.
17. சேசு நாதார் சுவாமி மனித அவதாரம் எடுப்பதற்கு முன் அர்ச். கபிரியேல் சம்மனசு மூலம் அனுமதி கேட்ட பின் தான் மரியாயினிடத்தில் மனித அவதாரம் எடுத்தார்.
18. தேவசு தன் அவருடைய உதரத்திலே ஒரு புது ஆதாமாக உருவெடுத்தார்.
19. தேவதாய் ஆண்டவரை பெறும் போது மட்டுமல்ல, அவருடைய இறப்பிலும் அவரோடு கல்வாரி மலையிலே இருக்க சித்தமானார்
20. பழைய ஏற்பாட்டிலே ஆபிரகாமை கடவுள் கேட்ட போது தமது ஒரே மகனை பலி கொடுக்க சித்தமானார். அதே போல் தேவதாயும் தாம் பாலுட்டி சீராட்டி வளர்த்த மகனையும் கல்வாரி மலையில் நமக்காக ஒப்பு கொடுத்தார்.
21. ஆண்டவருடைய 30 வருட மறைந்த வாழ்வு சுவிஷேஷத்தில் சொல்லப் படவில்லை. அவர் மரியாளுக்கும் சூசைக்கும் கீழ்படிந்திருந்தார்.
22. தேவமாதாவினுடைய வார்த்தையே எலி செபத்தம்மாள் வயிற்றில் இருந்த ஸ்நாபக அருளப்பரை பரிசுத்தமாக்கியது.
23. பிதாவாகிய சர்வேசுரன் உலகில் உள்ள எல்லா ஜலத்தையும் ஒன்றினைத்து அதற்கு கடல் என்று அழைத்தார். அதைப் போல் தமது வரப்பிரசாதங்களையும் ஒன்றினைத்து அதற்கு மரியாள் என்று பெயரிட்டார்.
24. தேவதாய் மூலமாக தான் அனைத்து மோட்ச வரப்பிரசாதங்கள் நமக்கு கிடைக்கின்றன.
25. தேவமாதா இந்த உலகில் கடவுளின் தாயாகவே இருந்தார்.
26. சேசு நாதரும் இந்த உலகில் உள்ள குழந்தைகள் தன் தாயை எவ்வாறு நேசிக்கு மோ அதைவிட மேலாகவே அவர் மாதாவை நேசித்தார்.
27. சேசுநாதருக்கு மாதா தாயாக இருந்தாலும் இந்த உலகத்து தாய்மார்களைப் போல தன் மகனுக்கு கட்டளைகளை கொடுக்கவில்லை.
28. தேவமாதா கர்த்தரிடத்தில் இருந்து எதையும் கேட்கவோ ஆசிக்கவோ இல்லை .
29. சேசுநாதர் முன்னிலையில் மாதாவினுடைய ஜெபங்களும் மன்றாட்டுகளும் அதிக பலம் வாய்ந்தது.
30 . அவருடைய தாழ்ச்சியின் காரணமாக மோட்சத்திலுள்ள தூதர்கள் மற்றும் சகல அர்சிஷ்டவர்கள் மீதும் சகல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
31. ஆண்டவர் மாதாவை வானுலகத்துக்கும் மண்ணுலகத்துக்கும் அரசியாகவும் , அவருடைய படைகளுக்கு தலைவராகவும், ஞான பலன்களுக்கு பாதுகாவலாகவும், அவருடைய வரப்பிரசாதங்களை பகிர்ந்து அளிப்பவராகவும், மனிதர்களுக்கு மனு பேசுகிறவராகவும், அவருடைய பகைவர்களை அழிப்பவராகவும் ஏற்படுத்தினார்.
32. பிதாவாகிய சர்வேசுரன் தேவமாதாவை உலக முடியும் மட்டும் தமது மனு குலத்தின் தாயாக இருக்க விரும்புகிறார்.
33. நமக்கு இயற்கையாகவும் உடல் ரீதியாகவும் தாய் தந்தை இருப்பது போல, நமக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்திலும், ஞான விதத்திலும் தாய் தந்தையாக மரியாளும் பிதாவாகிய சர்வேசுரனும் இருக்கிறார்கள்
34. ஆண்டவர் தேவதாயை பிந்தைய காலங்களில் அதிகமாக வெளிபடுத்த சித்தமானார்.
1. எனெனில் தேவமாதா தன்னையே இந்த உலகில் இருந்து ஒளித்துக் கொண்டார்.
2. மாதா தன்னையே ஒரு புழுதியை விட தாழ்வாக தாழ்த்திக் கொண்டார்.
3. தேவமாதவின் தாழ்மையான வாழ்க்கை
4. தேவதாய் தான் சேசுநாதர் இந்த உலகில் வரக் காரணமாக இருந்தார்
5. சேசு நாதருடைய இரண்டாம் வருகையும் தேவமாதாவின் மூலமாக மட்டுமே இருக்கும்.
6. நாம் சேசுநாதரை அடைவதற்கு உத்தமமான வழி தேவமாதா ஒருவர் மட்டுமே
35. தேவமாதாவை கண்டடைகிறவர்கள் எல்லோரும் வாழ்வை கண்டடைகிறார்கள். அதாவது சேசுநாதரை கண்டடைகிறார்கள்.
36. தேவமாதாவை தேடாத யாரும் அவரை கண்டடைவதில்லை. அவரை அறியாத யாரும் அவரை தேட மாட்டார்கள். எனவே தேவமாதா முந்தைய காலங்களை விட பிந்தைய காலங்களில் அதிகமாக அறியப்பட வேண்டும்.
37.