Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

பத்து கற்பனைகள்

சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து


  1. உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே: நம்மை தவிர வேறு சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக 
  2. சர்வேசுரனுடைய நாமத்தை வீணாக சொல்லாதிருப்பாயாக 
  3. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.
  4. பிதாவையும் மாதவையும் சங்கித்திருப்பாயாக 
  5. கொலை செய்யாதிருப்பாயாக 
  6. மோக பாவம் செய்யாதிருப்பாயாக 
  7. களவு செய்யாதிருப்பாயாக 
  8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக 
  9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக 
  10. பிறர் உடைமையை  விரும்பாதிருப்பாயாக 

இந்த பத்து கற்பனைகளும் இரண்டு கற்பனைகளுள் அடங்கும் 
  •           எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது
  • தன்னை தான் நேசிப்பது போல் பிறரையும் நேசிப்பது]]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக