அழியா சரிரம் கொண்ட புனிதர்கள்
அழியா சரிரம் என்று சொன்னால் அது உடலில் இருந்து உயிர் பிரிந்து பல நாட்கள் அல்லது வருடங்கள் ஆகியும் அந்த உடல் அழியாமல் இருப்பது ஆகும். கத்தோலிக்க திருச்சபையில் பல புனிதர்கள் உடல் இன்னும் அழியாமல் எப்படி இறந்தார்களோ அப்படியே இன்னும் உள்ளது..
அர்ச். ஆகத்தா(St. Agatha)
அர்ச். ஆகத்தா அவர்களின் உடல் பதினோராம் நூற்றாண்டில் அழியாமல் கண்டு பிடிக்க பட்டது. அவர்களுடைய உடல் இன்னும் அழியாமல் சர்வேசுரனால் பாதுகாக்கபடுகிறது. அவள் ரோம் அதிகாரியை திருமணம் செய்ய மறுத்ததாலும் அவள் ஒரு கிறிஸ்தவள் என்பதாலும் அவளுடைய மார்பகங்கள் அறுக்கப்பட்டு வேதசாட்சி மரணம் அடைந்தார். இன்று அவர் மார்பக புற்று நோய் உள்ளவர்களின் பாதுகாவலியாக உயர்த்த பட்டு உள்ளார்.
அர்ச். காத்தரின் லபோரே (St. Cahterine Laboure) (1806-1876)
அர்ச். கத்தரின் 31 டிசம்பர் 1876 ஆம் ஆண்டு இறந்தார். இவர் ஒரு கன்னியாஸ்திரி ஆவார். இவர் இறந்து 56 ஆண்டுகள் கழித்து இவருடைய கல்லறையை திறந்த போது இவருடைய உடல் அழியாமல் இருப்பதை கண்டு பிடித்தனர். இன்னமும் அவருடைய கண்கள் அவர் இறந்த போது எந்த நிறத்தில் இருந்ததோ அதே நிறத்தில் உள்ளது. இவருடைய உடல் பிரான்ஸ் நாட்டில் உள்ள Ruc du Bac(Paris) என்னும் ஆலயத்தில் வைத்து பாதுகாக்க படுகிறது. அவருடைய உடல் இன்றும் நேற்று இறந்தவர் உடல் போல் காணப் படுகிறது.
அர்ச். பெர்னதேத்தே (St. Bernadette Sobirous)(1844-1879)
அர்ச் பெர்னதேத்தே 1879 ஆம் ஆண்டு இறந்தார். அவருடைய உடல் அவர் இறந்த 30 ஆண்டுகளுக்கு பின் 1909 செப். மாதம் 2 ஆம் தேதி திறக்கப்பட்டது.
திறந்த போது அவருடைய முகம் மற்றும் அவருடைய கைகள் அழியாமல் அப்படியே இருந்தது. 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருடைய கல்லறை திறக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு இருந்ததோ அப்படியே அந்த உடல் இருந்தது.அவருடைய உடல் பிரான்ஸ் நாட்டில் உள்ள அவரது கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது.

அர்ச் சிசிலி (St. Ceceilia)
தன் கணவர் வேதசாட்சி மரணம் அடைந்ததை அறிந்த அர்ச் சிசிலியா அவர்களது உடலை பக்தியுடன் கல்லறையில் வைத்தார். இதனை அறிந்த ஆளுநன் Almachius அர்ச் சிசிலியாவையும் கைது செய்தான். அர்ச் சிசிலியாவையும் அவளின் அந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க சொன்னான். ஆனால் அர்ச் சிசிலியா அதை மறுத்தார். எனவே குளிக்கும் அறையில் சூடான வெந்நீர் உற்றி கொல்ல முயன்றனர். ஆனால் அந்த வெந்நீர் அவளை ஒன்றும் செய்யவில்லை.
பின் அவளை தலை வெட்டுண்டு கொலை செய்ய அனுப்பினான். மூன்று முறை வெட்டப்பட்டு ஆனால் முழுவதும் வெட்டபடாமல் கழுத்து தொங்கி கொண்டு இருந்தது. தலை வெட்டுண்டு முன்று நாட்கள் உயிருடன் இருந்தார்.
அவள் அந்த மூன்று நாளும் வலியுடன் ஆண்டவரை புகழ்ந்து பாடிக்கொண்டு இருந்தார். இறுதியாக அவர் மூன்று நாட்களுக்கு பிறகு அவர் இறந்தார்.
அவருடைய கல்லறை 817 ஆம் ஆண்டு கண்டுபிடிக்க பட்டு ரோமில் உள்ள அவரது ஆலயத்துக்கு மாற்ற பட்டது. 1599 ஆம் ஆண்டு மீண்டும் அவரது கல்லறையை திறந்த போது அவரது உடல் அழியாமல் இருப்பதை கண்டனர்.
இப்போதும் நாம் ரோம் நகரில் உள்ள அவரது ஆலயம் சென்ட்ரல் அவரது அழியா உடலை காணலாம்.
அர்ச். கிளரா அசிசி (St. Clare of Assisi)(1194-1253)
அர்ச். கிளரா 1253 ஆம் ஆண்டு இறந்தார். இவருடைய கல்லறை 1850 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி திறக்கப்பட்டது. அவர் அணிந்திருந்த உடை அவருடைய உடம்பு எல்லாம் மண்ணோடு மண்ணாக போய் இருந்தன. ஆனால் அவருடைய மண்டை ஓடு மட்டும் அப்பிடியே இருந்தது. 597 ஆண்டுகள் கழித்து அவருடைய கல்லறையில் அவருடைய மண்டை ஓடு அழியாமல் இருப்பதை கண்டு 29 செப்.1872 அன்று Santa Chiara என்ற தேவாலயத்திற்கு அவருடைய எலும்புகளை கொண்டு சென்றனர். இப்போதும் இந்த ஆலயத்திற்கு சென்றால் அவருடைய மண்டை ஓடு காணலாம்.
அர்ச் சவேரியார் (St. Francis Xavier)
அர்ச் சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விட்டார்.

அழியா உடல்
சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( பெப்ருவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ஆம் வருடம் மக்காவுவைவந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்த போது அது கெட்டுபோகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் அர்ச் சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ அர்ச் சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553இல் அர்ச் சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக வைக்கப்பட்டுள்ளது