Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

அழியா சரிரம் கொண்ட புனிதர்கள்- THE INCORRUPTIBILITY OF SAINTS

அழியா சரிரம் கொண்ட புனிதர்கள்
அழியா சரிரம் என்று சொன்னால் அது உடலில் இருந்து உயிர் பிரிந்து பல நாட்கள் அல்லது வருடங்கள்  ஆகியும் அந்த உடல் அழியாமல் இருப்பது ஆகும். கத்தோலிக்க திருச்சபையில் பல புனிதர்கள் உடல் இன்னும் அழியாமல் எப்படி இறந்தார்களோ அப்படியே இன்னும் உள்ளது..


அர்ச். ஆகத்தா(St. Agatha)

       அர்ச். ஆகத்தா அவர்களின் உடல் பதினோராம் நூற்றாண்டில் அழியாமல் கண்டு பிடிக்க பட்டது. அவர்களுடைய உடல் இன்னும் அழியாமல் சர்வேசுரனால் பாதுகாக்கபடுகிறது. அவள் ரோம் அதிகாரியை திருமணம் செய்ய மறுத்ததாலும் அவள் ஒரு கிறிஸ்தவள்  என்பதாலும் அவளுடைய மார்பகங்கள் அறுக்கப்பட்டு வேதசாட்சி மரணம் அடைந்தார்.  இன்று அவர் மார்பக புற்று நோய் உள்ளவர்களின் பாதுகாவலியாக  உயர்த்த பட்டு  உள்ளார்.


அர்ச். காத்தரின் லபோரே (St. Cahterine  Laboure) (1806-1876)


     அர்ச். கத்தரின் 31 டிசம்பர் 1876 ஆம் ஆண்டு இறந்தார். இவர் ஒரு கன்னியாஸ்திரி ஆவார்.  இவர் இறந்து 56 ஆண்டுகள் கழித்து இவருடைய கல்லறையை திறந்த போது  இவருடைய உடல் அழியாமல் இருப்பதை கண்டு பிடித்தனர். இன்னமும் அவருடைய கண்கள் அவர் இறந்த போது எந்த நிறத்தில் இருந்ததோ அதே நிறத்தில் உள்ளது. இவருடைய உடல் பிரான்ஸ் நாட்டில் உள்ள Ruc du Bac(Paris) என்னும் ஆலயத்தில் வைத்து பாதுகாக்க படுகிறது. அவருடைய உடல் இன்றும் நேற்று இறந்தவர் உடல் போல் காணப் படுகிறது.

அர்ச். பெர்னதேத்தே (St. Bernadette Sobirous)(1844-1879)


     அர்ச் பெர்னதேத்தே 1879 ஆம் ஆண்டு இறந்தார். அவருடைய உடல் அவர் இறந்த 30 ஆண்டுகளுக்கு பின் 1909 செப். மாதம் 2 ஆம் தேதி  திறக்கப்பட்டது.
திறந்த போது அவருடைய முகம் மற்றும் அவருடைய கைகள் அழியாமல் அப்படியே இருந்தது. 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருடைய கல்லறை திறக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு இருந்ததோ அப்படியே அந்த உடல் இருந்தது.அவருடைய உடல் பிரான்ஸ் நாட்டில் உள்ள அவரது கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது.


அர்ச் சிசிலி (St. Ceceilia)

தன்  கணவர் வேதசாட்சி மரணம் அடைந்ததை அறிந்த  அர்ச் சிசிலியா அவர்களது உடலை பக்தியுடன் கல்லறையில் வைத்தார். இதனை அறிந்த  ஆளுநன் Almachius அர்ச் சிசிலியாவையும் கைது செய்தான். அர்ச் சிசிலியாவையும் அவளின்  அந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க சொன்னான். ஆனால் அர்ச் சிசிலியா அதை மறுத்தார். எனவே குளிக்கும் அறையில் சூடான வெந்நீர் உற்றி கொல்ல முயன்றனர். ஆனால் அந்த வெந்நீர் அவளை ஒன்றும் செய்யவில்லை.

பின் அவளை தலை வெட்டுண்டு கொலை செய்ய அனுப்பினான்.   மூன்று முறை வெட்டப்பட்டு ஆனால் முழுவதும் வெட்டபடாமல்  கழுத்து தொங்கி கொண்டு இருந்தது. தலை வெட்டுண்டு முன்று நாட்கள் உயிருடன் இருந்தார்.
அவள் அந்த மூன்று நாளும் வலியுடன் ஆண்டவரை புகழ்ந்து பாடிக்கொண்டு இருந்தார். இறுதியாக அவர் மூன்று நாட்களுக்கு பிறகு அவர் இறந்தார்.

அவருடைய கல்லறை 817 ஆம் ஆண்டு கண்டுபிடிக்க பட்டு ரோமில் உள்ள அவரது ஆலயத்துக்கு மாற்ற பட்டது. 1599 ஆம் ஆண்டு மீண்டும் அவரது கல்லறையை திறந்த போது  அவரது உடல் அழியாமல் இருப்பதை கண்டனர்.
இப்போதும் நாம் ரோம் நகரில் உள்ள அவரது ஆலயம் சென்ட்ரல் அவரது அழியா உடலை காணலாம்.

அர்ச். கிளரா அசிசி (St. Clare of  Assisi)(1194-1253)
       
அர்ச். கிளரா 1253 ஆம் ஆண்டு இறந்தார். இவருடைய கல்லறை 1850 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி திறக்கப்பட்டது.  அவர் அணிந்திருந்த உடை அவருடைய உடம்பு எல்லாம் மண்ணோடு மண்ணாக போய்  இருந்தன. ஆனால்  அவருடைய மண்டை ஓடு மட்டும் அப்பிடியே இருந்தது. 597 ஆண்டுகள் கழித்து  அவருடைய கல்லறையில் அவருடைய மண்டை ஓடு  அழியாமல் இருப்பதை கண்டு 29 செப்.1872 அன்று Santa Chiara  என்ற தேவாலயத்திற்கு அவருடைய எலும்புகளை கொண்டு சென்றனர். இப்போதும் இந்த ஆலயத்திற்கு சென்றால் அவருடைய மண்டை ஓடு காணலாம்.



அர்ச்  சவேரியார் (St. Francis Xavier)

அர்ச்  சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விட்டார்.

அழியா உடல்


சவேரியாரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டி 
சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( பெப்ருவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ஆம் வருடம் மக்காவுவைவந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்த போது அது கெட்டுபோகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் அர்ச்  சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ அர்ச்  சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553இல் அர்ச் சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக வைக்கப்பட்டுள்ளது







அர்ச். அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு .(தமிழில்)



அர்ச் சிசிலியா (St.Ceceilia) வாழ்க்கை வரலாறு in Tamil

அர்ச் சிசிலியா (St.Ceceilia) 
குறிப்பு 
பிறப்பு      : தெரியவில்லை 
இறப்பு      : 177 ஆம்  ஆண்டு Nov .22
மரணம்    : வேத சாட்சி மரணம்.

உடல் அழியாமல் இன்னும் உள்ளது.


அர்ச் சிசிலியா ஒரு ரோமன் புனிதை. அவரது பிறந்த ஆண்டு தெரியவில்லை, ஆனால் அவர் ரோம் நகரில் 177 கி.பி. இறந்தார் என்று  நம்பப்படுகிறது. அவருடைய உடல் அழியா நிலையில் 1599 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அவரது உடல் தான் முதல் முதலில் அழியாமல் இருந்த முதல் புனிதை என அறிய படுகிறது.

வரலாற்று ஆசிரியர்கள்  அர்ச் சிசிலியா ஒரு ரோமன் கிறிஸ்தவரின் மகள் என்று கூறுகின்றனர். பெற்றோருடைய வற்புறத்தலால் Valerian of Trastevere என்ற வாலிபனை திருமணம் செய்தார்.  ஆனால்  அவருடைய விருப்பமோ ஒரு கன்னியாக இருப்பது மட்டுமே. திருமண நாள் அன்று அவர் ஆண்டவரிடம் "ஆண்டவரே நான் எந்த குழப்பமும் இல்லாமல் என் மனது மற்றும் உடல் துய்மையாக வைத்திருக்க உ த வும்,  

திருமணம் முடிந்த பிறகு வீடு சென்ற பின் அர்ச் சிசிலியா தன்  கணவனை பார்த்து சொன்னதாவது தன்னுடைய கற்பை ஒரு காவல் சம்மனசு கோபத்துடன் காத்து வருவதாக சொன்னார். அர்ச் சிசிலியாவிடம் அப்படி என்றல் உன் காவல் சம்மனசை எனக்கு காட்டு என்றான். அர்ச் சிசிலியா அவனிடம் நீ பார்க்க வேண்டுமானால் நீ கத்தோலிக்க திருச்சபையை விசுவசித்து ஞனஸ்தானம் பெற்றால் மட்டுமே நீ அவரை பார்க்க முடியும். என்றார். 

தன் மனைவி சொன்னதை விசுவசித்து அவனும்  ஞனஸ்தானம் பெற்றான். அன்று இரவு தன் மனைவி ஜெபிக்கும் பொது இரு காவல் சம்மனசுக்கள் அவள் அருகே நிற்பதை கண்டான். அவர்கள் அர்ச் சிசிலியா தலையின் மீது ரோஜா மற்றும் லில்லியால் அலங்கரிக்க பட்ட கிரிடத்தை சூட்டினர். அவனுடைய சகோதரனும் ஞனஸ்தானம் பெற்றான். இரு சகோதரர்களும் பணகரர்களாக இருந்ததால் வேதசாட்சி மரணம் அடைந்த கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உதவி செய்தனர். கிறிஸ்தவர்களுடைய சடலங்களை அவர்கள் பக்தியுடன் புதைத்தனர். 

ரோம் நகரிலே கிறிஸ்தவர்களாக இருப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டு ஆளுநன் Almachius என்பவர் முன் கொண்வரப்பட்டனர். அவர்கள் பொய்யன் கடவுளை வழிபட மறுத்தனர். எனவே அவர்களை வாலால் வெட்டி கொன்றான். இதை அறிந்த  அர்ச் சிசிலியா அவர்களது உடலை பக்தியுடன் கல்லறையில் வைத்தார். 
இதனை அறிந்த  ஆளுநன் Almachius அர்ச் சிசிலியாவையும் கைது செய்தான். அர்ச் சிசிலியாவையும் அவளின்  அந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க சொன்னான். ஆனால் அர்ச் சிசிலியா அதை மறுத்தார். எனவே குளிக்கும் அறையில் சூடான வெந்நீர் உற்றி கொல்ல முயன்றனர். ஆனால் அந்த வெந்நீர் அவளை ஒன்றும் செய்யவில்லை.

பின் அவளை தலை வெட்டுண்டு கொலை செய்ய அனுப்பினான்.   மூன்று முறை வெட்டப்பட்டு ஆனால் முழுவதும் வெட்டபடாமல்  கழுத்து தொங்கி கொண்டு இருந்தது. தலை வெட்டுண்டு முன்று நாட்கள் உயிருடன் இருந்தார்.
அவள் அந்த மூன்று நாளும் வலியுடன் ஆண்டவரை புகழ்ந்து பாடிக்கொண்டு இருந்தார். இறுதியாக அவர் மூன்று நாட்களுக்கு பிறகு அவர் இறந்தார்.

அவருடைய கல்லறை 817 ஆம் ஆண்டு கண்டுபிடிக்க பட்டு ரோமில் உள்ள அவரது ஆலயத்துக்கு மாற்ற பட்டது. 1599 ஆம் ஆண்டு மீண்டும் அவரது கல்லறையை திறந்த போது  அவரது உடல் அழியாமல் இருப்பதை கண்டனர்.
இப்போதும் நாம் ரோம் நகரில் உள்ள அவரது ஆலயம் சென்ட்ரல் அவரது அழியா உடலை காணலாம்.

அர்ச் அஞ்சேம்மாள் ( st .Agnes ) வாழ்க்கை வரலாறு

அர்ச். அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு .(தமிழில்)

 

அர்ச் அஞ்சேம்மாள் ( st .Agnes ) வாழ்க்கை வரலாறு

அர்ச்  அஞ்சேம்மாள் ( st .Agnes )  
அர்ச் ஆக்ன்ஸ் 

குறிப்பு 

பிறப்பு         : 28 Jan 292
இறப்பு         : 21 Jan 304
மரணம்       :தலை வெட்டப்பட்டு வேதசாட்சி மரணம்.
கன்னியர்களின் பாதுகாவலி.



செயிண்ட் ஆக்னஸ் ஜனவரி 28, 292 ரோமன் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தார்  ஒரு நல்ல கத்தோலிக்க குடும்பத்தில் வளர்க்கப்பட்டார். அவரது பெயரை கிரேக்கம் மொழியில் "தூய" மற்றும் லத்தீன் மொழியில்  "ஆட்டுக்குட்டி"  என்று பொருள். அவர் வயதில் வளர வளர அவருடைய அழகிளும்  வளர்ந்தார்.பல இளைஞர்கள் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அவர் இயேசுவே வேண்டும் என்று அறிவித்து யாரையும் திருமணம் செய்ய இசைவு அளிக்கவில்லை.
தனது  கற்பை பரலோக துணை கிறிஸ்து நாதருக்கு வைத்திருக்க வேண்டும் என்று அவள் அதற்காக அவள் மரணத்தையும் ஏற்க தயாராக இருந்தாள் . அவள் வாழ்ந்து வந்த நேரம் கிறிஸ்தவர்கள் மிகவும் துன்புறுத்த காலம். பேரரசர் Diocletian அவளை சித்திரவதை மற்றும் மரணதிற்கு பயமுறுத்தினான்.

அவள் திருமணம் செய்ய மாட்டேன் என்று மறுத்தவர்களில்  prefect Sempronius என்பவரின் மகனும் ஒருவன். மீண்டும் ஒருமுறை தன் மகனை மணந்து கொள்ள அவன் அவளிடம் கேட்டான் . அவள் இரண்டாவது முறையும் முடியாது என்று பதில் சொல்ல அவனுக்கு கோபம் வந்தது. அவள் கிறிஸ்தவர் என்பதால் அவளை சித்திரவதை செய்து கொலை செய்ய போவதாக மிரட்டினான். அவர் எதற்கும் பணியவில்லை. தன்  கற்பின் மீது அவள் பற்று கொண்டு இருந்தாள் .ரோமன் சட்டம் கன்னியை கொலை செய்வதற்கு அனுமதி இல்லை.
அமைச்சர்கள், அவளை  ஒரு வேசி இடத்திற்கு அனுப்ப prefect Sempronius அவனுக்கு ஆலோசனை கூறினர். அதன்படி அவர் அங்கு அனுப்பப்பட்டார். அங்கு அவளுடைய கற்பு அற்புதமான முறையில் பாதுகாக்க பட்டது.
அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று  prefect Sempronius மகன் அதிக ஆசை கொண்டான். அதனால் அவன் தன் கண்ணையே குத்தி காயபடுதினான். அர்ச் ஆக்னஸ் அவனை குணப்படுத்தினார். தன் மகனுக்கு நடந்ததை கேள்வியுற்ற prefect Sempronius அதற்கு காரணம் அர்ச் ஆக்னஸ் தான் என்று குற்றம் சாட்டினான். 

முதலில் அவரை நெருப்புக்குள் தள்ளி அவரை கொலை செய்ய முயன்றான். ஆனால் நெருப்பு ஒன்றும் அவரை  செய்யவில்லை.
பின் அவரை வாளினால் தலை வெட்ட பட அவர் தனது 12 வயதில் வேத சாட்சி மரணம் அடைந்தார். 
பிற்காலத்தில் அர்ச் ஆக்னஸ்அவர் ஒரு அனைவருக்கும் பிடித்தமான புனிதையாக மாறினார். Emperor Constantine என்பவருடைய மகள் அர்ச் ஆக்னஸ் கல்லறையில் ஒரு ஆலயம் கட்டினார் .



அர்ச் அந்தோணியாரின் புதுமைகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும் 

அர்ச் சிசிலியா (St.Ceceilia) வாழ்க்கை வரலாறு in Tamil