13-ம் சங்கீதம்
உலக இரட்சகர் பிறக்காமுன் மனிதர் இருதயக் கேடுகளைக் குறித்துப் பாடியிருக்கின்றது.
1. தேவனில்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொன்னான்; சகலரும் கெட்டுப்போனார்கள்! அவர்கள் எண்ணங்கள் அக்கிரமம் நிறைந்தவைகள்! (அவர்களில்) நன்மை செய்கிறவனில்லை; ஒருவனாகிலும் இல்லை.
2. மனுபுத்திரர்களில் யார்தான் புத்திசாலியென்றும் நன்மை செய்தவன் என்றும் சோதிக்கும் வண்ணம் ஆண்டவர் பரலோகத்திலிருந்து உற்றுப்பார்க்கவே,
3. எல்லோரும் நல்வழியை விட்டுப் பிசகிப் பிரயோசனமற்றவர்கள் ஆனார்கள் என்றும் நன்மையைச் செய்கிறவன் ஒருவனாகிலும் இல்லையென்றும் அவர்கள் தொண்டை திறந்த பிரேதக்குழியாய் இருக்கின்றதென்றும் அவர்கள் தங்கள் நாக்குகளினால் வஞ்சகம் பண்ணுகிறார்களென்றும் அவர்கள் உதடுகளில் விஷ சர்ப்பத்தின் நஞ்சிருக்கின்றதென்றும் அவர்கள் வாயில் சாபமும் கடுஞ் சொல்லும் நிறைந்திருக்கின்றன வென்றும் அவர்கள் கால்கள் இரத்தஞ் சிந்தத் தீவிரிக்கின்றன என்றும் அவர்கள் வழிகளில் அழிவும் நிர்ப்பாக்கியமும் (இருக்கின்றனவென்றும்) சமாதானத்தின் வழியை அவர்கள் அறிந்ததில்லை என்றும் அவர்கள் கண்களுக்கு முன் தேவ பயமேயில்லை என்றும் உணர்ந்தார்.
4. அப்பத்தைப்போல் என் ஜனங்களைப் பட்சிக்கும் இந்த அக்கிரமாலிகள் யாவரும் (என்னைக்) கண்டுணர மாட்டார்களா?
5. அவர்கள் ஆண்டவரை வேண்டிக்கொள்ளாமலிருப்பதினால் பயப்படு வதற்கு யாதொரு முகாந்தரமில்லாமலிருக்க, அவர்கள் பயந்து ஒடுங்கினார்கள்.
6. ஏனென்றால் ஆண்டவர் நீதியினுடைய சந்ததிக்குச் சனுகாயிருக்கிறார்; நீங்கள் திக்கற்றவனுடைய ஆலோசனையைக் கலங்கடித்தீர்கள்; ஆனால் ஆண்டவர் அவனுடைய நம்பிக்கையாயிருக்கிறார்.
7. சீயோனிலிருந்து இஸ்ராயேலுக்கு இரட்சணியத்தைக் கொடுப்பவர் யார்? ஆண்டவர் தமது பிரஜையின் அடிமைத்தனத்தை நீக்கும்போது யாக்கோபு அகமகிழ்வார், இஸ்ராயேல் பூரிப்படையும்.
To Read More - Please Click Here
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக