Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 29 டிசம்பர், 2018

How to say Rosary in Tamil (Sorrowful Mysteries)

துக்கத் தேவ இரகசியங்கள் 

முன் ஐம்பத்து மூன்று மணிச் செபத்தில் ஐந்து தேவ இரகசியங்களையும் 
ஒப்புக்கொடுத்ததுபோல அர்ச். மிக்கேல் முதலான மூன்று பிரதான 
சம்மனசுக்களையும், அர்ச் சூசையப் பரையும், அவரவர் பக்திக்குரிய 
மோட்சவாசிகளையும் கொண்டு முறையோடே இந்த ஐம்பத்து மூன்று மணிச்
 செபத்தையும் ஒப்புக்கொடுக்கிறது.
1-ம் தேவ இரகசியம் 
அத்தியந்த தயையுள்ள அர்ச். தேவமாதாவே, உம்முடைய திருக் குமாரனாகிய சேசுநாதர் அடிபட்டுச் சிலுவையிலே அறை யுண்டதுபோலே நீர் அடிபட்டுச் சிலுவையிலே அறையப்படா திருந்தாலும் அவர் தம்முடைய திருச்சரீரத்தில் அனுபவித்த வாதைகளெல்லாம் நீர் உம்முடைய மனதில் அனுபவித்தீரே, அவர் பூங்காவனத்திலே எங்கள் பாவங்களுக்காக மிகவும் துக்கப்பட்ட தினால் அவருடைய திருச் சரீரமெல்லாம் உதிர வேர்வையாக வேர்த்ததை நினைத்து நீர் திரளாய் விட்ட கண்ணீரால் தரையை நனைத்துச் சொல்லப்படாத துக்கச்சாகரத்தில் அமிழ்ந்தினீரே, அந்தத் துக்கத்தைப் பார்த்துப் பாவிகளாயிருக்கிற நாங்கள் செய்த பாவங்களுக்காக மிகவும் அழுது மனஸ்தாபப்பட்டுப் பாவ விமோசனம் அடையத்தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும் - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.


2-ம் தேவ இரகசியம்
மகா இரக்கமுள்ள அர்ச். தேவமாதாவே, தேவ சுபாவத்தைக் கொண்டிருக்கிற 
உம்முடைய திருக்குமாரன் சேசு நாதர் கொடியோரால் துணோடிறுகக் 
கட்டப்பட்டு வலுவாய் அடிபட்ட தினாலே அவர் திருச் சரீர முழுதும் தழும்பும்
 உதிரக் காயமுமாய் நீச சேவகருடைய அசுத்த உமிழ் நீரால் அவர் திருமுகம் 
அழுக்கடைந்ததுமாயிருக்கிறதைக் கண்டு துக்கச் சமுத்திரத்தில் அழுந்தினீரே, 
அந்தத் துக்கத்தைப் பார்த்து எங்கள் பாவங்களுக்காக வருகிற கடினமான 
ஆக்கினைகளை எல்லாம் சர்வேசுரன் நீக்கத்தக்கதாக உம்முடைய திருக்குமாரனை 
வேண்டிக்கொள்ளும் - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

3-ம் தேவ இரகசியம்
பொறுமைப் பிரவாக ஊருணியான அர்ச். தேவதாயாரே, பரலோக இராசாவாகிய உம்முடைய திருக்குமாரன் சேசுநாதரை யூதர்கள் பரிகாச இராசாவாக ஸ்தாபித்து, அவருடைய திருத் தலை யிலே முண் முடி வைத்தடித்த தினாலே முட்கள் ஊடுருவினதைப்பற்றி அவர் திருமுகத்தில் ஓடின இரத்தத்தை நீர் கண்டு அந்த முட்கள் எல்லாம் உமது இருதயத்திலே ஊடுருவினதாக மிகுந்த துக்கப்பட்டீரே, அந்தத் துக்கத்தைப் பார்த்துப் பாவிகளாயிருக்கிற நாங்கள் எங்கள் இருதயத்திலிருக்கும் பாவமாகிய முட்களை உத்தம மனஸ்தாபத்தினாலே பிடுங்கி எறியத்தக்கதாக உம்முடைய திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும். - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

4-ம் தேவ இரகசியம்
பூலோகத்திற்கு ஆண்டவளாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, உம்முடைய திருக்குமாரனாகிய சேசுநாதரை யூதர்கள் கொல்ல வேண்டுமென்று நிச்சயம் செய்து, அவருடைய திருத்தோளின் மேலே பாரமான சிலுவைமரத்தைச் சுமத்திக் கபால மலை மட்டும் அவரைத் தள்ளிக்கொண்டு போகிறபோது நீருங்கூடத் துக்கப்பட்டு, அழுதுகொண்டு போனீ ரே, அந்தத் துக்கத்தைப் பார்த்துப் பாவிகளாயிருக்கிற நாங்களும் எங்களுக்கு வருகிற துன்ப ஆக்கினையான சிலுவையை நல்ல மனதோடு சுமந்துகொண்டு அவர் திருவடியைப் பின்பற்றி நடக்கத் தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

5-ம் தேவ இரகசியம்
 பாவிகளுக்கு அடைக்கலமாயிருக்கிற பரம தாயாரே, உம்முடைய திருக்குமாரன் சேசுநாதரை யூதர்கள் சிலுவை மரத்தோடு சேர்த்துச் சொல்லிலடங்காத கொடுமையாய் அவருடைய திருக் கைகளையும் கால்களையும் பார் இருப்பாணி களால் தரித்து (வைத்து) இரு கள்வருக்கு நடுவே எடுத்து நாட்டின பின்பு, மகா அவமானத்தோடே அவர் தொங்கி இருக்கின்றதைக் கண்டதினாலே, மட்டிலடங்காத துக்க வியாகுலப்பட்டீரே, நீர் உமது மன திலே அனுபவித்த அவருடைய பீடைகளையும் சிலுவையையும் பார்த்துப் பாவிகளாயிருக்கிற அடியோர்கள் அந்தத் திவ்விய மாதிரிகையைக் கைக்கொண்டு, நல்வழி நடந்து பாவப் பொறுத்தல் அடையத்தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும், - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

முடிக்கிற வகையாவது
அதிதூதரான அர்ச். மிக்கேலே, தேவதூதர்களான அர்ச். கபிரியேலே, இரஃபாயேலே, அப்போஸ்தலர்களான அர்ச். இராயப்பர், சின்னப்பரே, அருளப்பரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப்பாதத் திலே உங்கள் தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாத காணிக்கையாக வைத்து உங்களைப் பிராத்தித்துக்கொள்ளுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக