11-ம் சங்கீதம்
கெட்டவர்கள் உபத்திரவம் பண்ணுகையில் நல்லவன் சுவாமியின் வாக்குத்தத்தத்தின் மட்டில் நம்பிக்கை வைப்பதின் பேரில் பாடியிருக்கின்றது.
1. ஆண்டவரே, என்னை இரட்சியும்; ஏனெனில் இப்போது பக்தியுள்ளவன் இல்லை, உண்மைகளும் மனுப்புத்திரருக்குள்ளே குறைந்துபோயின.
2. அவரவர்கள் தங்கள் புறத்தியானோடு வீணானவைகளைப் பேசினார்கள்; கவுத்துவம் பொருந்திய உதடுகளால் இரண்டகமாய்ப் பேசினார்கள்.
3. கவுத்துவம் பொருந்திய எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் ஆண்டவர் அழித்துப்போடக் கடவார்.
4. எங்கள் நாவுகளால் நாங்கள் பெருமை பாராட்டுவோம்; எங்கள் உதடுகள் எங்களுடையன; யார் எங்களுக்கு எஜமானென்று அவர்கள் சொன்னார்கள்.
5. ஏழைகளின் நிர்ப்பாக்கியத்தின் நிமித்தமும், திக்கற்றவர்களுடைய பெரு மூச்சியினிமித்தமும் இப்போதே நாம் எழுந்தருளுவோமென்று ஆண்டவர் திருவுளம்பற்றினார்; அவனைக் காத்து அவன் நம்பிக்கைக்குப் பழுது வராமல் நடத்துவோம் என்கிறார்.
6. ஆண்டவருடைய சொற்கள் மண்குகையில் ஏழு தரம் உருகிப் புடமிடப் பட்ட வெள்ளிக்கு ஒப்பான சுத்த சொற்களாயிருக்கின்றன. 7. ஆண்டவரே, தேவரீரே எங்களைக் காப்பாற்றி என்றென்றைக்கும் இந்தச் சந்ததியில் நின்று விலக்கிக்கொள்வீர்.
8. சண்டாளர் சுற்றிலுந் திரிகிறார்கள்; தேவரீருடைய பெருந் தன்மைக்குத் தக்கப்பிரகாரம் மனுப் புத்திரர்களைப் பலுகப் பண்ணினீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக