Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 29 டிசம்பர், 2018

How to say Rosary in Tamil (Glorious Mysterious)

மகிமைத் தேவ இரகசியங்கள்

1-ம் தேவ இரகசியம் 
உஷ்ண காலமும் குளிர் காலமும் நீங்கிப்போக வசந்த காலம் வருகிறபோது பிரசன்னமாயிருக்கிற மோட்சத்தினுடைய இராக்கினியே, உம்முடைய திருக்குமாரனாகிய சேசுநாதர் பாடுபட்டு மரித்த துக்கக் காலத்திற்குப்பின் மூன்றாம் நாள் கல்லறையை விட்டுச் செயசீலராய்ச் சூரியனிலும் அதிகப் பிரகாசமான சுப சௌந்தரிய சுடராய் உயிர்த்தெழுந்து அவரை நீர் கண்டதினாலே உமக்கு அளவற்ற மகிமை பொருந்திய சந்தோஷ காலம் வந்ததே, அந்த மகிமையைப் பார்த்து நாங்கள் பாவமாகிய மரணத்தை விட்டு ஞான விதமாய் உயிர்த்தெழுந் திருக்கத் தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும், - ஒரு பர. பத்து அருள். ஒரு திர்.

2-ம் தேவ இரகசியம்
முழுமையும் பரிசுத்தமுமாயிருக்கிற அர்ச். தேவமாதாவே மட்டில்லாத மகிமையும் மாறாத திருச் செயமுங்கொண்ட உம்முடைய திருக்குமாரனாகிய சேசுநாதர் உத்தானமாயின நாற்பதாம் நாள் வானவர் அணியாகச் சூழ ஆதிபிதாக்களோடே மா-மாகிமையுடன் பரலோகத்திற்கு ஆரோகணமானதைக் கண்டு அத்தியந்த சந்தோஷ மகிமை அடைந்தீரே, அந்த மகிமையைப் பார்த்து இவ்வுலகத்தில் பரதேசிகளாயிருக்கிற நாங்கள் பரலோகத்தையே வருந்தி நாடிப் பரலோக பாக்கியமான மோட்ச ஆனந்தத்தைப் பெறத் தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

3-ஆம் தேவ இரகசியம்
தேவ நன்மைகளால் நிறைந்தவளுமாய் வானோர்களுக்கு அரசியுமாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, உம்முடைய திருக் குமாரனாகிய சேசுநாதருடைய சீடர்களோடு நீர் தியானத்தில் இருக்கிறபோது அக்கினி நாக்கு ரூபமாய் இஸ்பிரீத்துசாந்து இறங்கிவந்து, உமது இருதயத்தையும் சீடர்கள் இருதயத்தையும் அருள் வரங்களினாலே நிரப்பினதினால் அத்தியந்த சந்தோஷ் மகிமை அடைந்தீரே, அந்த மகிமையைப் பார்த்து இஸ்பிரீத்து சாந்துவின் வரப்பிரசாதத்தை நாங்கள் அடைந்து தேவ சித்தத்தின் படி யே நடக்கத்தக்கதாக உம்முடைய திருக்குமார னை வேண்டிக்கொள்ளும். - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

4-ம் தேவ இரகசியம்
பூசிக்கப்படத்தக்க தகுதியுடையவராயும் புண்ணிய வழிக்கு மாதிரிகையுமாயிருக்கிற 
அர்ச். தேவமாதாவே, உமது திரு ஆத்துமம் திருச் சரீரத்தை விட்டுப் பிரிந்து 
உம்முடைய திருக்குமாரன் சேசுநாதருடைய திருக் கரம் சேர்ந்த மூன்றாம் நாள்
 திவ்விய சுகந்த பரிமள வாசமும் அதிப் பிரகாசமும் உடைத்தான உமது திருச் 
சரீரத்தோடுங்கூடக் கல்லறையை விட்டு வானோர்களுடைய பரிவாரஞ் சூழ்ந்து 
மதுரமான கான சங்கீதங்கள் தொனிக்கப் பரலோகத்திற்கு எழுந்தருளி அத்தியந்த
 சந்தோஷ மகிமை அடைந்தீரே, அந்த மகிமையைப் பார்த்துப் பூலோகம் என்கிற 
துக்க சாகரத்திலே மிகுந்த ஆபத்துக்குள் இருக்கிற எங்களை உமது கிருபாகடாட்
சத்தினாலே நோக்கிப் பாவிகளாயிருக்கிற நாங்கள் மோட்சக்கரை ஏறத்தக்கதாக 
உம்முடைய திருக் குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

5-ம் தேவ இரகசியம்
நன்மைக் கடலுமாய் நம்பினவருக்கு ஆதாரமுமாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, சிருஷ்டிக்கப்பட்ட சர்வ பொருட்களுக்கும் மேலான சகல சுகிர்தங்களினாலே நீர் நிறைந்தலங்கரிக்கப் பட்டவளாகையால் பரலோகத்திற்கு எழுந்தரு
ளியவுடனே சகல அர்ச்சியசிஷ்டவர்களையும்விட அதிகமான மோட்ச சம்பாவனைப் பெற்று, அர்ச். தமதிரித்துவத்தினால் வானோர்களுக்கெல்லாம் இராக்கினியாகக் கிரீடம் தரிக்கப்பட்டு, சம்மனசுக்கள் மோட்ச வாசிகள் எல்லோருக்கும் மேலாக உயர்த்தி ஸ்தாபிக்கப்பட்டு, நித்திய பேரின்ப வாழ்வு நிறைந்த மகிமை அடைந்தீரே, அந்த

மகிமையைப் பார்த்து நீர் அனுபவிக்கிற மோட்சானந்த பாக்கியத்தில் ஓர் அற்ப பங்கு பாவிகளாயிருக்கிற அடியோர்களும் பெறத்தக்கதாக உம்முடைய திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும். - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

அ. முடிக்கிற வகையாவது
அதிதூதரான அர்ச். மிக்கேலே, தேவதூதர்களான அர்ச். கபிரியேலே, இரஃபாயலே,
 அப்போஸ்தலர்களான அர்ச். இராயப்பர், சின்னப்பர், அருளப்பரே, நாங்கள்
எத்தனைப் பாவிகளாயிருந் தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த நூற்று
 ஐம்பத்து மூன்று மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப் பாதத்திலே 
உங்கள் தோத்திரங்களோடே கூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக 
வைத்து உங்களைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். - ஆமென்.

How to say Rosary in Tamil (Sorrowful Mysteries)

துக்கத் தேவ இரகசியங்கள் 

முன் ஐம்பத்து மூன்று மணிச் செபத்தில் ஐந்து தேவ இரகசியங்களையும் 
ஒப்புக்கொடுத்ததுபோல அர்ச். மிக்கேல் முதலான மூன்று பிரதான 
சம்மனசுக்களையும், அர்ச் சூசையப் பரையும், அவரவர் பக்திக்குரிய 
மோட்சவாசிகளையும் கொண்டு முறையோடே இந்த ஐம்பத்து மூன்று மணிச்
 செபத்தையும் ஒப்புக்கொடுக்கிறது.
1-ம் தேவ இரகசியம் 
அத்தியந்த தயையுள்ள அர்ச். தேவமாதாவே, உம்முடைய திருக் குமாரனாகிய சேசுநாதர் அடிபட்டுச் சிலுவையிலே அறை யுண்டதுபோலே நீர் அடிபட்டுச் சிலுவையிலே அறையப்படா திருந்தாலும் அவர் தம்முடைய திருச்சரீரத்தில் அனுபவித்த வாதைகளெல்லாம் நீர் உம்முடைய மனதில் அனுபவித்தீரே, அவர் பூங்காவனத்திலே எங்கள் பாவங்களுக்காக மிகவும் துக்கப்பட்ட தினால் அவருடைய திருச் சரீரமெல்லாம் உதிர வேர்வையாக வேர்த்ததை நினைத்து நீர் திரளாய் விட்ட கண்ணீரால் தரையை நனைத்துச் சொல்லப்படாத துக்கச்சாகரத்தில் அமிழ்ந்தினீரே, அந்தத் துக்கத்தைப் பார்த்துப் பாவிகளாயிருக்கிற நாங்கள் செய்த பாவங்களுக்காக மிகவும் அழுது மனஸ்தாபப்பட்டுப் பாவ விமோசனம் அடையத்தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும் - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.


2-ம் தேவ இரகசியம்
மகா இரக்கமுள்ள அர்ச். தேவமாதாவே, தேவ சுபாவத்தைக் கொண்டிருக்கிற 
உம்முடைய திருக்குமாரன் சேசு நாதர் கொடியோரால் துணோடிறுகக் 
கட்டப்பட்டு வலுவாய் அடிபட்ட தினாலே அவர் திருச் சரீர முழுதும் தழும்பும்
 உதிரக் காயமுமாய் நீச சேவகருடைய அசுத்த உமிழ் நீரால் அவர் திருமுகம் 
அழுக்கடைந்ததுமாயிருக்கிறதைக் கண்டு துக்கச் சமுத்திரத்தில் அழுந்தினீரே, 
அந்தத் துக்கத்தைப் பார்த்து எங்கள் பாவங்களுக்காக வருகிற கடினமான 
ஆக்கினைகளை எல்லாம் சர்வேசுரன் நீக்கத்தக்கதாக உம்முடைய திருக்குமாரனை 
வேண்டிக்கொள்ளும் - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

3-ம் தேவ இரகசியம்
பொறுமைப் பிரவாக ஊருணியான அர்ச். தேவதாயாரே, பரலோக இராசாவாகிய உம்முடைய திருக்குமாரன் சேசுநாதரை யூதர்கள் பரிகாச இராசாவாக ஸ்தாபித்து, அவருடைய திருத் தலை யிலே முண் முடி வைத்தடித்த தினாலே முட்கள் ஊடுருவினதைப்பற்றி அவர் திருமுகத்தில் ஓடின இரத்தத்தை நீர் கண்டு அந்த முட்கள் எல்லாம் உமது இருதயத்திலே ஊடுருவினதாக மிகுந்த துக்கப்பட்டீரே, அந்தத் துக்கத்தைப் பார்த்துப் பாவிகளாயிருக்கிற நாங்கள் எங்கள் இருதயத்திலிருக்கும் பாவமாகிய முட்களை உத்தம மனஸ்தாபத்தினாலே பிடுங்கி எறியத்தக்கதாக உம்முடைய திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும். - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

4-ம் தேவ இரகசியம்
பூலோகத்திற்கு ஆண்டவளாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, உம்முடைய திருக்குமாரனாகிய சேசுநாதரை யூதர்கள் கொல்ல வேண்டுமென்று நிச்சயம் செய்து, அவருடைய திருத்தோளின் மேலே பாரமான சிலுவைமரத்தைச் சுமத்திக் கபால மலை மட்டும் அவரைத் தள்ளிக்கொண்டு போகிறபோது நீருங்கூடத் துக்கப்பட்டு, அழுதுகொண்டு போனீ ரே, அந்தத் துக்கத்தைப் பார்த்துப் பாவிகளாயிருக்கிற நாங்களும் எங்களுக்கு வருகிற துன்ப ஆக்கினையான சிலுவையை நல்ல மனதோடு சுமந்துகொண்டு அவர் திருவடியைப் பின்பற்றி நடக்கத் தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

5-ம் தேவ இரகசியம்
 பாவிகளுக்கு அடைக்கலமாயிருக்கிற பரம தாயாரே, உம்முடைய திருக்குமாரன் சேசுநாதரை யூதர்கள் சிலுவை மரத்தோடு சேர்த்துச் சொல்லிலடங்காத கொடுமையாய் அவருடைய திருக் கைகளையும் கால்களையும் பார் இருப்பாணி களால் தரித்து (வைத்து) இரு கள்வருக்கு நடுவே எடுத்து நாட்டின பின்பு, மகா அவமானத்தோடே அவர் தொங்கி இருக்கின்றதைக் கண்டதினாலே, மட்டிலடங்காத துக்க வியாகுலப்பட்டீரே, நீர் உமது மன திலே அனுபவித்த அவருடைய பீடைகளையும் சிலுவையையும் பார்த்துப் பாவிகளாயிருக்கிற அடியோர்கள் அந்தத் திவ்விய மாதிரிகையைக் கைக்கொண்டு, நல்வழி நடந்து பாவப் பொறுத்தல் அடையத்தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும், - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

முடிக்கிற வகையாவது
அதிதூதரான அர்ச். மிக்கேலே, தேவதூதர்களான அர்ச். கபிரியேலே, இரஃபாயேலே, அப்போஸ்தலர்களான அர்ச். இராயப்பர், சின்னப்பரே, அருளப்பரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப்பாதத் திலே உங்கள் தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாத காணிக்கையாக வைத்து உங்களைப் பிராத்தித்துக்கொள்ளுகிறோம்.

புதன், 26 டிசம்பர், 2018

ஜெபமாலை ஜெபிப்பது எப்படி? (How to say Rosary in Tamil)



ஐம்பத்துமூன்று மணிச் செபம்
துவக்குகிற வகையாவது

அளவில்லாத சகல நன்மைச் சுரூபியாயிருக்கிற சர்வேசுரா சுவாமீ! நீச மனுஷருமாய் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடி யோர்கள் மட்டில் லாத மகிமைப் பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய சந்நிதியிலே இருந்து செபஞ் செய்யப் பாத்திரம் ஆகாதவர்களாயிருந்தாலும், தேவரீருடைய அளவில்லாத தயையை நம்பிக்கொண்டு, தேவரீருக்கு ஸ்துதி வணக்கமாகவும், அர்ச். தேவமாதாவுக்குத் தோத்திரமாகவும் ஐம்பத்துமூன்று மணிச் செபம் செய்ய ஆவலாயிருக்கிறோம். இந்தச் செபத்தைப் பக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசையைக் கட்டளை பண்ணியருளும் சுவாமி.

சகலமான புண்ணியங்களுக்கும் விசுவாசம் என்கிற புண்ணியம் அஸ்திவாரமாயிருக்கிறபடியினாலே முதன்முதலாக விசுவாச மந்திரம் சொல்லுகிறது.

பின்பு மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனுஷனும் ஒன்றாயிருக்கிற சேசுநாதசுவாமி படிப்பித்த கர்த்தர் கற்பித்த செபம் சொல்லுகிறது.
பரிசுத்த கன்னியாயிருக்கிற தேவமாதாவினுடைய பிரதான மகிமைகளைக் குறித்து மூன்று பிரதான புண்ணியங்களைக் கேட்கிறது

- பிதாவாகிய சர்வேசுரனுக்குக் குமாரத்தியாயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ விசுவாசம் என்கிற புண்ணியம் உண்டாகிப் பலன் அளிக்கும்படிக்கு உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு அருள்.
சுதனாகிய சர்வேசுரனுக்குத் தாயாராயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ நம்பிக்கை என்கிற புண்ணியம் உண்டாகி வளரும்படிக்கு உம்முடைய திருக் குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு அருள்.
இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள வளாயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ சிநேகம் என்கிற புண்ணியம் உண்டாகி அதிகரிக்கும்படிக்கு உம் முடைய திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும். - ஒரு அருள் திரித்துவ தோத்திரம் சொல்லியபின்,

சந்தோஷ தேவ இரகசியங்கள்

* சந்தோஷ தேவ இரகசியங்கள் ஆகமன காலமுதல் தபசுகால் பரியந்தமும், துக்க தேவ இரகசியங்கள் தபசு காலத்திலும், மகிமை தேவ இரகசியங்கள் தேவன் உயிர்த்த ஞாயிறு துவக்கி ஆகமனகால பரியந்தமும் செபிப்பது தகுதியானாலும் அவைகளை அவரவர் பக்திக்குத் தகுந்தாற்போல் எக்காலத்திலும் செபிக்கலாம்.


1-ம் தேவ இரகசியம்


 கபிரியேல் சம்மனசானவர் தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானிப்போமாக 

அர்ச்சியசிஷ்ட கன்னிகையே, உம்மிடம் சம்மனசு வந்து மங்கள வார்த்தை சொன்ன தினாலே அள விடமுடியாத சந்தோஷத்தை அடைந்து அவர் வந்த காரியத்தை அறிந்து மகா தாழ்ச்சியோடே அங்கீகாரம் செய்து சர்வேசுரனை உம்முடைய திருக் கர்ப்பத்திலே பிள்ளையாகத் தரித்தீரே, சர்வேசுரனுக்கு நீர் மாதாவானீர் என்கிற சந்தோஷத்தைப் பார்த்து எங்களுக்காக மன்றாடிப் பக்தியினாலே அவரை நாங்கள் எங்கள் இருதயத்திலே எப்பொழுதும் வைத்திருக்கத் தக்கதாக உம்முடைய திருக் குமாரனை வேண்டிக்கொள்ளும். பத்து அருள். ஒரு திரி.

சம்மனசுகளுக்கெல்லாம் பிரதான சம்மனசாயிருக்கிற அர்ச். மிக்கேலென்கிற சம்மனசானவரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப்பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாத காணிக்கையாக வைத்து உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.

2-ம் தேவ இரகசியம்

 தேவமாதா எலிசபெத் அம்மாளை மினவினதை தியானிப்போமாக

கன்னிகையாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, உமது நேசத்தால் உமக்குப் பந்துவாயிருக்கிற எலிசபெத்தம்மாளை சந்திக்கப் போனபோது சர்வேசுரன் அவள் வீட்டிலே செய்த தயையைக் கண்டு அத்தியந்த சந்தோஷமானீரே, அச் சந்தோஷத்தைப் பார்த்து, உலகீயல் சந்தோஷத்தை நாங்கள் சட்டை செய்யாமல் ஞான சந்தோஷத்தின் இன்பமான இரசத்தை வருந்தித் தேடி அடையத்தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும். - ஒரு பர, பத்து அருள். ஒரு திரி.
அர்ச். கபிரியேல் என்கிற சம்மனசானவரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப்பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்

3-ம் தேவ இரகசியம்

கர்த்தர் பிறந்ததை தியானிப்போமாக
 
சம்மனசுகளுடைய இராக்கினியே, உமது கன்னி சுத்தத்திற்குப் பழுதில்லாமல் உலக இரட்சகரான சேசுநாதரைப் பெற்றதினாலே நீர் அனுபவித்த சந்தோஷம் எங்கள் வாக்கினாற் சொல்லி முடியாதே; அந்தச் சந்தோஷத்தைப் பார்த்துப் பாவிகளாயிருக்கிற எங்கள் இருதயத்திலே அவர் ஞான விதமாக வந்து பிறக்கத் தக்கதாக உம்முடைய திருக் குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு பர, பத்து அருள். ஒரு திரி.
அர்ச். இரஃபாயேல் என்கிற சம்மனசானவரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப் பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.

4-ம் தேவ இரகசியம்

கர்த்தர் கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானிப்போமாக
 
 பரிசுத்தக் கன்னியாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, கோயிலுக்குக் கர்த்தராயிருக்கிற உம்முடைய திவ்விய பிள்ளையைப் பெற்ற நாற்பதாம் நாள் கோயிலில் கொண்டுபோய் ஆதி பிதாவுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து மீட்டுக் கொண்டீரே, அப்போது அவ்விடத்திலிருந்த மகாத்துமாக்கள் அவருடைய மகிமையை அறிந்து அவரை அநேக விதமாய்த் தோத்திரம் செய்ததைக் கண்டு மகா சந்தோஷப்பட்டீ ரே, அந்தச் சந்தோஷத்தைப் பார்த்துப் பத்தி முதலான புண்ணியங்களினாலே எங்கள் ஆத்துமம் அவருக்கு உகந்த கோயிலாயிருக்கத் தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும். - ஒரு பர, பத்து அருள். ஒரு திரி.

அப்போஸ்தலர்களுக்குள்ளே பிரதான அப்போஸ்தலர் களாயிருக்கிற அர்ச். இராயப்பரே, சின்னப்பரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப் பாதத்திலே உங்களுடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உங்களைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்..

5-ம் தேவ இரகசியம்

12 வயதில் காணாமல் போன கர்த்தரை தேவாலயத்தில் கண்டு களிகூர்த்ததை தியானிப்போமாக

பரலோகத்திற்கு இராக்கினியே, உம்முடைய பிள்ளையாகிய சேசுநாதருக்குப் பன்னிரண்டு வயது நடக்கிறபோது மூன்று நாள் அவரைக் காணாமல் மகா துக்கத்தோடு தேடி மூன்றாம் நாள் சாஸ்திரிகள் சபை நடுவிலே கோயிலுக்குள் அவரைக்கண்டு பரிபூரண சந்தோஷத்தை அடைந்தீரே, அந்தச் சந்தோஷத்தைப் பார்த்து நாங்கள் ஒருபோதும் பாவத்தால் அவரை விட்டுப் பிரியாமல் இருக்கச் செய்தருளும். யாதொரு காலம் அறிவின்மை யால் பாவஞ் செய்து அவரைப் பிரிந்தோமேயாகில் சீக்கிரமாகப் பச்சாத்தாபத்தினாலே அவரை அண்டி அவரிடத்திலே அடியோர்கள் ஸ்திரமாயிருக்க உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு பர, பத்து அருள். ஒரு திரி.

அப்போஸ்தலராயிருக்கிற அர்ச். அருளப்பரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப் பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உம்மைப் பிராத்தித்துக் கொள்ளுகிறோம்

முடிக்கிற வகையாவது

அதிதூதரான அர்ச். மிக்கேலே, தேவதூதர்களான அர்ச். கபிரியேலே, இரஃபாயேலே, அப்போஸ்தலர்களான அர்ச். இராயப்பர், சின்னப்பரே, அருளப்பரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப்பாதத் திலே உங்கள் தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாத காணிக்கையாக வைத்து உங்களைப் பிராத்தித்துக்கொள்ளுகிறோம்.