Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
செவ்வாய், 16 ஏப்ரல், 2019
திங்கள், 15 ஏப்ரல், 2019
வெள்ளி, 5 ஏப்ரல், 2019
அர்ச். அந்தோணியார் வணக்கமாதம் - *ஒன்பதாம் நாள்*
ஒன்பதாம் நாள்
பிரஞ்சுராச்சியத்தில் அர்ச். அந்தோணியார் நடத்தின காரியங்கள்
பக்திச் சுவாலகருக்கொப்பான அர்ச், பிராஸ்சிஸ்கு அசிசியார் தம்முடைய பக்தியுள்ள தாயார் பிக்கா அம்மாள் (Pica) பிரோவான்ஸ்
(Provence) நாட்டிற் பிறந்ததினிமித்தம் பிரஞ்சு தேசத்தின்மட்டில் எப்போதும் விசேஷப்பிரியப் பற்றுதலாயிருந்தார். ஆனதினால் அவர் தம்முடைய சபையில் சேர்ந்த சந்நியாசி குருக்கள் வேதம் போதிக்க ஏற்பட்டபோது அவர்களை மற்றப் பிரதேசங்களுக்கு அனுப்பிவிட்டுத் தாம் பிரஞ்சு தேசத்தைத் தெரிந்து கொண்டு, அவ்விடம் மஸ்ஸேயோ (Masteo}
என்னுஞ் சகோதரரோடு செல்ல எத்தனிக்கையில், சபையை நடத்த அவர் இத்தாலிய தேசத்திலேயேயிருக்கவேண்டியது அவசியமென்று அர்ச். பாப்பானவருடைய ஸ்தானாபதி அவரைக் கேட்டுக்கொண்டதால், தமக்குப் பதிலாய் தமது சபையின் இரத்தினத்தைப் போலிருந்த அர்ச். அந்தோனியாரை அவ்விடம் அனுப்பிவைத்தார், அர்ச். அந்தோணியார் பிரஞ்சு தேசத்தின் தென்பாகம் சென்று மோம்ப்பெல்லியே
(Montpellie) மடத்தில் வாசம் செய்து வந்தார்,
அவ்விடத்திய பிரிவினைக்காரருடைய தப்பறைகளையும், அவர்கள் செய்து வந்த தந்திர உபாயங்களையும் நன்றாய் கண்டுகொண்டு தமது தெளிவான பிரசங்கங்களினால் அவைகளை வெளிப்படுத்திப் பிரிவினைக் காரருக்குப் பயங்கரம் வருவித்ததினால் 'பதிதருடைய சம்மட்டி" என்கிற பெயர் அவருக்கு உண்டாயிற்று. ஆதலால் அவர்களில் திரளான குருப்பிரசாதிகளுக்கு முன்பாகவும், சனங்களுக்கு முன்பாகவும் பிரசங்கம் பண்ணின போது , அதேசமயத்தில் தம்முடைய மடத்துக்கோயிலில் ஒரு
வாசகம் பாடவேண்டியிருந்ததென்று அவருக்கு ஞாபகம் வந்ததால், தம்முடைய தலை முக்காட்டை எடுத்து மூடிக்கொண்டு கொஞ்சநேரம் மௌனமாயிருந்தார், அந்த க்ஷணத்திலேயே தமது மடத்துக் கோயிலில் தோன்றிப் பாடலை முடித்து, பிறகு மேற்றிராசனக் கோயிலில் துவக்கியிருந்த பிரசங்கத்தைத் தொடர்ந்து செய்தார், இது 'ஓருடல், ஈரிடம்' எனும் புதுமையாகும்.
மடத்திலிருந்த சகோதரர் தாங்கள் தியானம் செய்கிறபோதும் செபம் செய்கிறபோதும் பக்கத்துக் குளத்திலிருந்த தவளைகள் சத்தம் செய்தபடியால் சகோதரர் முறைப்படுவதை அறிந்த அந்தோனியார் தவளைகளுக்குக் கட்டளையிடவே அவைகள் மெளனமாயின. வேறு குளங்களிற்கொண்டு போய் விடப்பட்டால், அவைகள் சத்தம் செய்யும். ஆனால் அந்தோனியார் குளம் என்று அதுமுதல் அமைக்கப்பட்ட குளத்தில் விடப்பட்டாலோ, அவை சத்தம் செய்வதில்லை.
லுனேல் (Lunel) என்னும் பட்டணத்தில் விஸ்தாரமான ஒரு மைதானத்தில் திரளான சனங்களுக்கு முன்பாகப் பிரசங்கம் செய்தபோது, சுற்றிலும் உண்டான குளங் குட்டைகளிலிருந்த பிராணிகளெல்லாம் நரக சத்துருவால் தூண்டப்பட்டு காதுகள் அடைத்துப் போகும்படியான சத்தம் செய்ய அர்ச்சியசிஷ்டவர் அவைகளை அதட்டி மெளனமாயிருக்கச் செய்தார்.
எந்த வேலை செய்தபோதிலும், எவ்வளவு அற்புதமான புதுமைகளைச் செய்து வந்தபோதிலும் அர்ச். அந்தோனியார் தமது மடத்தின் ஒழுங்குகளை அதுசரிக்கிறதில் வெகு பிரமாணிக்கராயிருந்தார், கீழ்ப்படிதல் என்னும் புண்ணியம் அவரிடத்தில் விசேஷமான பிரகாரம் விளங்கிற்று. அற்ப காரியங்களானாலும், அவைகளை நுணு நுணுக்கமாய் அநுசரித்து வந்தார். கீழ்ப்படிதலினிமித்தம் ஒழுங்கு தவறாதிருக்கவேண்டி இரண்டு ஸ்தலங்களில் இருக்கும்படி சர்வேசுரன் கிருவை செய்தார், இன்னமும் அர்ச்சியசிஷ்டவர் செய்துவந்த அநேக அற்புதங்களைக்கொண்டு மடத்துச் சந்நியாசிகள் அவருக்கு வெகு வணக்க மரியாதை செலுத்தி வந்தார்கள்.
நாம் செய்து வருங் திருத்தியங்களெல்லாம் பிரமாணிக்கத்தோடும், நல்ல மனதோடும், ஒழுங்காயும் செய்தோமேயானால் அக்கிருத்தியங்கள் வெகு சொற்ப மானாலும் ஆண்டவருக்கு மிகவும் பிரியமானவையும் நமது ஆத்துமங்களுக்குப் பிரயோசனமானவையுமாயிருக்கு மென்பதற்குச் சந்தேகமில்லை.
ஒன்பதாம் பத்திநாதர் என்னும் அர்ச். பாப்பானவர் பிரஞ்சு தேசத்தின் இரணியத்துக்காகச் செபித்த செபம்
ஓ மரியாயே, சென்மப் பாவமில்லாமல் உற்பவித்தவளே, பிரஞ்சு தேசத்தைக் கண்ணோக்கிப் பாரும், பிரஞ்சு தேசத்துக்காக வேண்டிக்கொள்ளும், பிரஞ்சு தேசத்தை இரட்சியும். எவ்வளவுக்கு அதிக குற்றவாளியாயிருக் கின்றதோ, அவ்வளவுக்கு உம்முடைய ஒத்தாசை அதற்குத் (தேவையிருக்கின்றது. உமது கரங்களில் நீர் ஏந்தியிருக்கும் சேசுநாதரிடத்தில் நீர் ஒரு வார்த்தை சொல்லுவிரேயானால், பிரஞ்சு தேசம் இரட்சிக்கப்படும். தேவமாதாவுக்கு எப்போதும் கீழ்ப்படிதலுள்ள சேசுநாதரே, பிரஞ்சு தேசத்தை இரட்சியும் - ஆமென்சேசு.
நற்கிரியை - பிரிவினைக்காரருக்குப் புத்தி சொல்லுகிறது.
மனவல்லயச் செபம் - பிரிவினைக்காரரை மனந் திருப்பின அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். அந்தோணியார் வணக்கமாதம் - *எட்டாம் நாள்*
அர்ச். அந்தோனியாருடைய சிநேகிதர்
அர்ச். அந்தோனியார் வெர்சேயில் பட்டணத்தில் தபசு காலத்தின்போது பிரசங்கம் செய்து வருகையில் அவ்விடம் வேத சாஸ்திரத்தில் தேர்ந்தவரும் புண்ணியத்தில் சிறந்தவருமான மடாதிபதி ஒருவர் இருந்தார். அவர் சாஸ்திரியான தோமாஸ் கால்லோ என்று அனேகர் என்னுகிறார்கள். அர்ச். அந்தோனியார் வேத காரியங்களையும் தேவ சிநேகத்தையும் பற்றி அந்த மடாதிபதியுடன் வெகுநேரம் சம்பாவித்து வருவார். இருவரும் சுவாமியைப் பற்றி ஒருவரொருவரை நேசித்து வந்தார்கள், அந்த மடாதிபதி அர்ச். அந்தோனியாருடைய கல்வித் திறமையையும், அவருடைய புண்ணியங்களையும் மெத்தவும் புகழ்ந்து பேசி அவர் உள்ளத்தில் தேவ சிநேகாக்கினியினால் பற்றி எரிந்து வெளியில் அந்தத் தேவ சிநேகாக்கிளனியின் கதிர்களை வீசினாரென்று எழுதி வைத்திருக்கிறார்.
இருவரும் பரலோகத்திலிருக்கும் ஒன்பது விலாச சபை சம்மனசு களைக் குறித்துப் பேசுவதில் பிரியங்கொள்ளுவார்கள், அந்தோனியார் அச்சமயத்தில் அவர்களைத் தம்முடைய கண்களால் பார்ப்பதுபோல ஒவ்வொரு சபை சம்மனசுகளுடைய அழகையும், திறமையையும்,
மற்றக் குணங்களையும் குறித்துப் பேசினதாக மடாதிபதி
சொல்லியிருக்கிறார்.
அர்ச். அந்தோனியார் பலவிடங்கள் சென்று வேதத்தைப் பிரசங்கித்த பிறகு மரிக்கிறதுக்குக் கொஞ்ச காலத்துக்கு முந்தி திரும்பவும் வெர்சேயில் பட்டணம் வந்து தம்முடைய சிநேகிதரான மடாதிபதியைச் சந்தித்து அவரிடம் ' மறுவுலகத்தில் இருவரும் சந்திப்பதாகச் சொல்லி விடை பெற்றுப்போனார். ஆனால் அர்ச். அந்தோனியார் மரித்த சமயத்தில், தொண்டை நோயால் மிகவும் உபாதைப்பட்டுக் கொண்டிருந்த வெர்சேயில் மடத்து மடாதிபதி அர்ச். அந்தோனியார் மலர்ந்த முகத்தோடு தம்முடைய அறைக்குள்எாக வந்ததைக் கண்டார். மேலும் அந்தோனியார் அவரை நோக்கி: என்னுடைய கழுதையைப் பதுவா பட்டணத்தில் விட்டு விட்டேன். இப்போது என்னுடைய சொந்தத் தேசம் போகிறேன்' என்று சொல்லி, பிறகு நுனிவிரலால் மடாதிபதியினுடைய தொண்டையைத் தொட்டு அவரைச் செளக்கியப்படுத்தி மறைந்து போனார். மடாதிபதி அந்தோனியாரை மற்றவர்கள் யாராவது பார்த்தார்களோவென்று விசாரிக்க, இல்லையென்றறிந்து, அவர் தமக்குக் காட்சிதந்த தேதியும், நேரமுங் குறித்து வைத்து, கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அதே தேதியிலும் நேரத்திலும் அந்தோனியார் பதுவா பட்டணத்தில் மரித்ததாகச் கேள்விப்பட்டார்,
நமது திவ்விய இரட்சகரான சேசுநாதசுவாமிக்குப் பிரிய சீடர் ஒருவர் இருந்தது போல், அர்ச். அந்தோனியாருக்கும் சந்நியாசிகளில் பிரிய சீடர் ஒருவர் இருந்தார், அவர், வேதம் போதிக்க எங்கும் போனபோது அவரோடு எப்போதும் சென்ற லுக் பெல்லூதி (Luc Beliudi) என்னும் சகோதரர்தான், இந்தச் சகோதரர் கடைசி காலம் வரைக்கும் அர்ச். அந்தோனியாரோடு இருந்து அவர் செய்து வந்த தபசு, புண்ணியங்கள், புதுமைகள் இவைகளுக்கெல்லாம் சாட்சி யாயிருந்ததுமல்லாமல் அர்ச். அந்தோனியார் சாகுந் தருவாயிலும் அவருடன் இருந்து அவர் அடக்கம் பண்ணப் பட்ட கல்லறையைக் காத்து வந்தார். அவ்விடத்தில் நடந்த ஆச்சரியமான புதுமைகளைக் கண்டு மகிழ்ந்தார். பதுவா பட்டணம் நிஷ்டூரனான எஸ்லினோ (Ezzelino) துரையினுடைய கையிலகப்பட்டு அக்கொடியன் அந்தப் பட்டணவாசிகளைப் பிடித்து அநேக உபாதைகள் படுத்திக் கொலை செய்து வந்ததைக் கண்ட சகோதரர் 1256-ம் வருஷம் ஒரு நாள் இராத்திரி பதுவா பட்டணத்தின் மட்டில் இரக்கம் வைத்துக் காப்பாற்ற வேண்டுமென்று அர்ச், அந்தோனியாரை மன்றாடினபோது, அவருடன் மடத்துச் சிரேஷ்டரான பார்த்தேலேமி கார்ராதினோ (Barthelemy carradino) என்பவரும் இருக்க, அவர்களிருவருக்கும் தெளிவாய்க் கேட்கப்பட்டதென்னவெனில் "சகோதரனே, துன்பத்துக்கு உன்னைத்தானே கையளிக்காதே, ஏனெனில் என்னுடைய திருநாளின்போது பதுவா பட்டணம் சத்துராதிகளின் கொடுமையினின்று மீட்கப்பட்டு, செழிப்பும் கீர்த்தியும் மகிமையும் அடையும்' என்று கேட்கப்பட்டது. லுக் பெவ்லூதி சகோதரர் மரித்து தனது உத்தம் சிநேகிதருடைய பக்கத்தில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கிறார். சர்வேசுரனைப்பற்றி அவரிடமாய், நாம் புறத்தியாரை நேசிக்கும் போது சர்வேசுரன் நம்முடைய நேசத்தை ஆசீர்வதித்து நமக்கும் நம்மால் நேசிக்கப்பட்டவர் களுக்கும் அநேகவித ஒத்தாசை செய்தருளுகிறார்.
செபம்
மகா நேசத்துக்குரிய அர்ச், அந்தோனியாரே, சர்வேசுரனைப்பற்றிப் புறத்தியாரை நேசித்து அவர்களிருதயத் திலும் உமதிருதயத்தில் பற்றி எரிந்த தேவ. சிநேகம் விளங்கும்படி செய்தருளினீரே, நாங்களும் சர்வேசுரனைப் பற்றி மாத்திரம் எங்கள் புறத்தியாரையும் நேசிக்கும்படி கிருபை செய்தருளும். -ஆமென்.
நற்கிரியை - சர்வேசுரனைப் பற்றிப் பிறரை நேசிக்கிறது.
மளவல்லயச் செபம் - பிறர் சிநேகம் நிறைந்த அர்ச், அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)