Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 20 டிசம்பர், 2018

கிருபை தயாபத்து மந்திரம் (Hail Holy Queen) (Salve Regina)


கிருபை தயாபத்து மந்திரம்

 
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க, எங்கள் சீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க.
பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம்.
இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.
ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாபமுள்ள திருக் கண்களை எங்கள் பேரிலே திருப்பியருளும்.
இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசங் கடந்தபிற்பாடு, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுநாதருடைய, பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும்,
கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே,
முதல்: அர்ச். கன்னிகையே நான் உம்மை துதிக்கக் கிருபை
செய்தருளும்.
துணை: உம்முடைய சத்துருக்களை வெற்றிகொள்ள எனக்கு
* பலத்தைத் தந்தருளும்.
முதல்: தேவன் தமது அர்ச்சியசிஷ்டவர்களில் ஆசீர்வதிக்கப்பட்டவராயிருக்கிறார்.
துணை: ஆமென்சேசு.
பிரார்த்திக்கக்கடவோம்
            சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாயிருக்கிற சர்வேசுரா, முத்திப்பேறுபெற்ற கன்னித்தாயான மரியாயுடைய ஆத்துமமும் சரீரமும் இஸ்பிரீசாந்துவின் அனுக்கிரகத்தினாலே தேவரீருடைய திருக்குமாரனுக்கு தகுதியுள்ள பீடமாயிருக்க ஏற்கனவே நியமித் தருளினீரே, அந்தத் திவ்விய தாயை நினைத்து மகிழ்கின்ற நாங்கள் அவருடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே இவ்வுலகின் சகல பொல்லாப்புகளிலேயும், நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்குக் கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவரான சேசு நாதருடைய திருமுகத்தை பார்த்து எங்களுக்கு தந்தருளும். ஆமென்.

சேசுநாதருடைய திருநாமத்தின் பிரார்த்தனை (Litany of Holy Name of Jesus in Tamil)


சேசுநாதருடைய திருநாமத்தின் பிரார்த்தனை 
 
சுவாமீ கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
 சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும் பரலோகத்திலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டுரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்க... இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்க..
அர்ச். தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்க..
நித்திய பிதாவின் திருச்சுதனாயிருக்கிற சேசுவே, எங்க...
பிதாவின் பிரகாசமாயிருக்கிற சேசுவே, எங்க...
நித்திய ஒளியின் தூய்மையாகிய சேசுவே, எங்க..
மட்டில்லாத மகிமை உடைய இராசாவாகிய சேசுவே,
எங்க. நீதி ஆதித்தனாகிய சேசுவே, எங்க.
பரிசுத்த கன்னிமரியாயின் குமாரனாகிய சேசுவே, எங்க..
மகா அன்புக்குரிய சேசுவே, எங்க...
ஆச்சரியத்திற்குரிய சேசுவே, எங்க.. மிகுந்த வல்லபக் கடவுளாயிருக்கிற சேசுவே, எங்க...
வரப்போகிறபாக்கியங்களுக்குக் காரணராயிருக்கிற சேசுவே, எங்க... பரம ஆலோசனைகளின் திவ்விய தூதரான சேசுவே, எங்க..
மகா சக்தியுடைத்தான சேசுவே, எங்க...
மகா பொறுமையுள்ள சேசுவே, எங்க..
மகா சிரவணம் பொருந்திய சேசுவே, எங்க...
மனத் தாழ்ச்சியையும் மதுர குணத்தையும் கொண்டிருக்கிற சேசுவே, எங்க..
கற்பை நேசிக்கிற சேசுவே, எங்க..
எங்கள் அன்பராகிய சேசுவே, எங்க..
சமாதான தேவனாகிய சேசுவே, எங்க...

சீவியத்திற்குக் காரணமாயிருக்கிற சேசுவே, எங்க...
சகல புண்ணியங்களுக்கும் மாதிரிகையாயிருக்கிற சேசுவே,
எங்க.. ஆத்துமங்களை இரட்சிக்கிறதிலே அதிக ஆர்வமுள்ள சேசுவே, எங்கள் தேவனாயிருக்கிற சேசுவே, எங்க..
எங்களுக்கு அடைக்கலமாயிருக்கிற சேசுவே, எங்க...
தரித்திரருடைய பிதாவாயிருக்கிற. சேசுவே, எங்க...
விசுவாசிகளுடைய பொக்கிஷமாயிருக்கிற சேசுவே, எங்க...
நல்ல ஆயராயிருக்கிற சேசுவே, எங்க..
உண்மையான பிரகாசமாயிருக்கிற சேசுவே, எங்க...
 நித்திய ஞானமாயிருக்கிற சேசுவே, எங்க...
மட்டில்லாத நன்மைத் தன்மையைக் கொண்டிருக்கிற சேசுவே,
எங்கள் சீவியமும் உண்மையும் வழியுமாயிருக்கிற சேசுவே, எங்க.. சம்மனசுகளுடைய சந்தோஷமாயிருக்கிற சேசுவே, எங்க... பிதாப்பிதாக்களுக்கு இராசாவாகிய சேசுவே, எங்க..
தீர்க்கதரிசிகளுக்கு ஞானம் கொடுக்கிற சேசுவே, எங்க.. அப்போஸ்தலருக்குக் குருவாகிய சேசுவே, எங்க...
சுவிசேஷகருக்குப் போதகரான சேசுவே, எங்க...
வேதசாட்சிகளுக்குப் பலமாயிருக்கிற சேசுவே, எங்க...
ஸ்துதியருடைய பிரகாசமான சேசுவே, எங்க...
விரத்தருடைய துப்புரவான சேசுவே, எங்க... சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கு முடியான சேசுவே, எங்க...
தயாபரராயிருந்து, - எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி. தயாபரராயிருந்து, - எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமீ. சகல பாவங்களிலிருந்து - எங்களை இரட்சித்தருளும் சுவாமி. தேவரீருடைய கோபத்திலிருந்து, எங்க.. ,
பசாசின் தந்திரங்களிலிருந்து, எங்க...
மோக ஆசையிலிருந்து, எங்க...                                                                        
 நித்திய மரணத்திலிருந்து, எங்க...                                                                
தேவரீர் தருகிற தரும் விசாரங்களை அசட்டைபண்ணுகிற துர்க்குணத்திலிருந்து, எங்க..                                                                       தேவரீருடைய மனுஷாவதாரத்தின் பரம இரகசியத்தைப் பார்த்து, எங்க
தேவரீருடைய பிறப்பைப் பார்த்து, எங்க..
தேவரீருடைய குழந்தைப் பருவத்தைப் பார்த்து, எங்க..
தேவரீருடைய விருத்தசேதனத்தைப் பார்த்து, எங்க..
தேவரீருடைய திவ்விய நடத்தையைப் பார்த்து, எங்க...
தேவரீருடைய பிரயாசத்தையும் பிரயாணங்களையும் பார்த்து, எங்க.. தேவரீருடைய கலக்கத்தையும் இரத்த வேர்வையையும் பார்த்து, எங்க . தேவரீருடைய சிலுவையையும் பாடுகளையும் பார்த்து, எங்க... தேவரீருடைய உபத்திரவங்களையும் நிற்பந்தங்களையும் பார்த்து, எங்க...
தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து, எங்க... தேவரீருடைய சந்தோஷத்தையும் மகிமையையும் பார்த்து, எங்க.. தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவின் வருகையைப் பார்த்து, எங்க நடுத்தீர்க்கிற நாளிலே, - எங்களை இரட்சித்துத்தருளும் சுவாமி. உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, - எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமீ.
 உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமீ. )
சேசுவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
சேசுவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
முதல்: இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும்,
துணை: ஆண்டவருடைய திருநாமம் வாழ்த்தப்படக்கடவது.
I
*,
பிரார்த்திக்கக்கடவோம்
எங்கள் திவ்விய இரட்சகருமாய் ஆண்டவருமாயிருக்கிற சேசு கிறிஸ்துவே! எங்கள் ஆத்துமத்தையும் சரீரத்தையும் புத்தி மனது நினைவையும் எங்களுக்குண்டான சகலத்தையும் உமக்குக் காணிக்கையாக வைக்கிறோம். நாங்கள் எங்கள் சிந்தனை வாக்குக்கிரியைகளினாலே முழுதும் உம்மைச் நேசிக்கவும், துதிக்கவும், உமது திவ்விய சிநேகத்தின் அக்கினியினால் எங்கள் இருதயம் பற்றி எரியவும் தயை செய்தருளும் சுவாமி, எங்களுக்கு இதுவே போதும். பிதாவோடேயும் இஸ்பிரீத்துசாந் து வோடேயும் சதாகாலஞ் சீவியருமாய் இராச்சிய பரிபாலகருமாயிருக்கிற ஆண்டவரே. ஆமென்.