Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 20 ஜூன், 2019

Feast of Corpus Christi

பரலோகத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே.  இது உங்கள் பிதாக்கள் மன்னாவைப் புசித்ததுபோல் அல்ல; அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். 



திங்கள், 17 ஜூன், 2019

சேசுவின் திரு இருதய வணக்க மாதம் Tamil Audio Book



சேசுவின் திரு இருதய  வணக்க மாதம்.


You can download Audio books for all 30 days.  The month of June is dedicated to Sacred heart of Jesus.  So here is the 30 days reading of the Book called  சேசுவின் திரு இருதய  வணக்க மாதம்.


Here is the Link : Click Here to Download

வியாழன், 6 ஜூன், 2019

சேசுவின் திரு இருதயமே,

சேசுவின் திரு இருதயமே, என்னுடைய நம்பிக்கை எல்லாம் உமது பேரில் வைக்கிறேன்.

வெள்ளி, 17 மே, 2019

Guardian Angel

தூதர்கள் தாங்கள் துய்த்து மகிழும் அன்பு, மற்றும்
பேரின்பத்தின் பெருங்கடலில் நாமும் பங்கு பெறச் செய்வதற்கு
எல்லா வழிகளிலும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களது
தாராள குணத்திற்கும், அன்புக்கும் இரக்கத்திற்கும்
எல்லைகளே இல்லை.



St. Bridget on Guardian Angel

""ஒரு தேவதூதரை அவரது முழு
அழகோடும் நாம் காண நேர்ந்தால்,
அக்காட்சி தரும் மகிழ்ச்சியால் நாம்
இறந்தே போவோம்!'’
        அர்ச். பிரிட்ஜித்தம்மாள்


St. Therese Tamil Quotes

 அஞ்சாதீர்கள். நீங்கள் சிறு காரியங்களில்
இயேசுவை மகிழ்விப்பதில் பிரமாணிக்கமாக
இருந்தால், பெரியகாரியங்களில் உங்களுக்கு
உதவ அவர் கடமைப்பட்டவராக இருப்பார்

    அர்ச். குழந்தை தெரசம்மாள்


புதன், 15 மே, 2019

St. John Maria Vianney Tamil Quotes

யார்  ஒருவர் சோதனை வரும்போது, பக்தியோடு சிலுவை அடையாளம் வரைகிறார்களோ, அவர்கள் நரகத்திற்கு பயங்கரத்தையும், மோட்சத்தில் மகிழ்ச்சியையும் அளிக்கிறார்கள்.

அர்ச். ஜான் மரிய வியான்னி


Tamil CAtholic Quotes on St. Joseph

சேசுநாதர் தான் இந்த உலகில் எவ்வாறு அர்ச். சூசையப்பருக்கு கீழ்படிந்திருந்தார் என்று நமக்கு படிப்பித்திருக்கிறார்.  இப்பொழுது அர்ச். சூசையப்பர் மோட்சத்தில் நமக்காக மன்றாடுகிற எல்லா வரங்களையும் சேசுநாதரிடம் இருந்து பெற்று தர வல்லமை மிக்கவர்.

அர்ச். அவிலா தெரசம்மாள்.

செவ்வாய், 14 மே, 2019

TAmil Quotes

""படைப்புயிர்கள் முன் சிறுமைப்படுத்தப்படுதல் என்ற
 வழிமுறையினால் அன்றி சிலுவையில் அறையுண்ட
                           என் ஆண்டவரை நான்  நெருங்குவது சிரமமே''                                                                                      
                                                                                - அர்ச். பாசி மரிய மதலேனாள்


St. Antony Quotes in Tamil

தேவதாயினுடைய நாமம், அவருடைய பக்தர்களுடைய மனதிற்கு ஒரு நீங்காத மகிழ்ச்சி, தேவிட்டாத தேன் அமுது,  அவர்களுடைய காதுகளுக்கு அது ஒரு மெல்லிசை. 

                                                                                                      அர்ச். அந்தோணியார்.



 

St. Antony Quotes 1

"Seek refuge in Mary because she is the city of refuge. We know that Moses set up three cities of refuge for anyone who inadvertently killed his neighbor. Now the Lord has established a refuge of mercy, Mary, even for those who deliberately commit evil. Mary provides shelter and strength for the sinner."

 ~ Anthony of Padua


ஞாயிறு, 12 மே, 2019

St Philomena Quotes

அர்ச். பிலேமினம்மாளுக்கு எதுவும் மறுக்கப்படுவதில்லை


அர்ச். ஜான் மரிய வியான்னி


Tamil Quotes



சனி, 11 மே, 2019

Our Lady Quotes in Tamil

ஓ ஆசீர்வதிக்கப்ட்ட கன்னிகையே! சர்வேசுரன் யார் யாரை இரட்சிக்க விரும்புகிறாரோ, அவர்களுக்கு கொடுக்கும் மீட்பின் படைக்கலமே உம்மீது அவர்கள் கொள்ளும் பக்தி

அர்ச். தாமசின் அருளப்பர்.
மரியாயின் உண்மை பக்தி: எண்: 41



CAtholic Quotes 2

நாம் எவ்வாறு நமது நாளை ஆரம்பிக்க வேண்டும்?

    நாம் காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன், பிதா, சுதன், இஸ்பிரித்து சாந்துவின் நாமத்தினாலே, ஆமென்.       என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.

சிறு மனவல்லய ஜெபங்கள் சொல்லலாம்.

திவ்விய சேசுவே என் இருதயத்தையும் ஆன்மாவையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்
சேசு மரிய சூசையே என் ஆத்துமத்தையும் சரிரத்தையும் உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்

மூன்று அருள் நிறை மந்திரம் சொல்லலாம்.