Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

அர்ச் அஞ்சேம்மாள் ( st .Agnes ) வாழ்க்கை வரலாறு

அர்ச்  அஞ்சேம்மாள் ( st .Agnes )  
அர்ச் ஆக்ன்ஸ் 

குறிப்பு 

பிறப்பு         : 28 Jan 292
இறப்பு         : 21 Jan 304
மரணம்       :தலை வெட்டப்பட்டு வேதசாட்சி மரணம்.
கன்னியர்களின் பாதுகாவலி.



செயிண்ட் ஆக்னஸ் ஜனவரி 28, 292 ரோமன் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தார்  ஒரு நல்ல கத்தோலிக்க குடும்பத்தில் வளர்க்கப்பட்டார். அவரது பெயரை கிரேக்கம் மொழியில் "தூய" மற்றும் லத்தீன் மொழியில்  "ஆட்டுக்குட்டி"  என்று பொருள். அவர் வயதில் வளர வளர அவருடைய அழகிளும்  வளர்ந்தார்.பல இளைஞர்கள் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அவர் இயேசுவே வேண்டும் என்று அறிவித்து யாரையும் திருமணம் செய்ய இசைவு அளிக்கவில்லை.
தனது  கற்பை பரலோக துணை கிறிஸ்து நாதருக்கு வைத்திருக்க வேண்டும் என்று அவள் அதற்காக அவள் மரணத்தையும் ஏற்க தயாராக இருந்தாள் . அவள் வாழ்ந்து வந்த நேரம் கிறிஸ்தவர்கள் மிகவும் துன்புறுத்த காலம். பேரரசர் Diocletian அவளை சித்திரவதை மற்றும் மரணதிற்கு பயமுறுத்தினான்.

அவள் திருமணம் செய்ய மாட்டேன் என்று மறுத்தவர்களில்  prefect Sempronius என்பவரின் மகனும் ஒருவன். மீண்டும் ஒருமுறை தன் மகனை மணந்து கொள்ள அவன் அவளிடம் கேட்டான் . அவள் இரண்டாவது முறையும் முடியாது என்று பதில் சொல்ல அவனுக்கு கோபம் வந்தது. அவள் கிறிஸ்தவர் என்பதால் அவளை சித்திரவதை செய்து கொலை செய்ய போவதாக மிரட்டினான். அவர் எதற்கும் பணியவில்லை. தன்  கற்பின் மீது அவள் பற்று கொண்டு இருந்தாள் .ரோமன் சட்டம் கன்னியை கொலை செய்வதற்கு அனுமதி இல்லை.
அமைச்சர்கள், அவளை  ஒரு வேசி இடத்திற்கு அனுப்ப prefect Sempronius அவனுக்கு ஆலோசனை கூறினர். அதன்படி அவர் அங்கு அனுப்பப்பட்டார். அங்கு அவளுடைய கற்பு அற்புதமான முறையில் பாதுகாக்க பட்டது.
அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று  prefect Sempronius மகன் அதிக ஆசை கொண்டான். அதனால் அவன் தன் கண்ணையே குத்தி காயபடுதினான். அர்ச் ஆக்னஸ் அவனை குணப்படுத்தினார். தன் மகனுக்கு நடந்ததை கேள்வியுற்ற prefect Sempronius அதற்கு காரணம் அர்ச் ஆக்னஸ் தான் என்று குற்றம் சாட்டினான். 

முதலில் அவரை நெருப்புக்குள் தள்ளி அவரை கொலை செய்ய முயன்றான். ஆனால் நெருப்பு ஒன்றும் அவரை  செய்யவில்லை.
பின் அவரை வாளினால் தலை வெட்ட பட அவர் தனது 12 வயதில் வேத சாட்சி மரணம் அடைந்தார். 
பிற்காலத்தில் அர்ச் ஆக்னஸ்அவர் ஒரு அனைவருக்கும் பிடித்தமான புனிதையாக மாறினார். Emperor Constantine என்பவருடைய மகள் அர்ச் ஆக்னஸ் கல்லறையில் ஒரு ஆலயம் கட்டினார் .



அர்ச் அந்தோணியாரின் புதுமைகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும் 

அர்ச் சிசிலியா (St.Ceceilia) வாழ்க்கை வரலாறு in Tamil

புதன், 10 ஏப்ரல், 2013

சாத்தானின் சாட்சியம்-Witness of Satan

சாத்தானின் சாட்சியம் என்ற ஒரு புக் இங்கு உள்ளது. அதை நீங்கள் free  download  செய்து கொள்ளவும்.
மிகவும் நல்ல ஒரு புத்தகம். இது சாத்தானுக்கும் சர்வேசுரனுகும் நடைபெற்ற யுத்தத்தை விலக்கி காட்டும்.  இது கத்தோலிக்க மதத்தை வெறுக்கும் அனைவர்க்கும் ஒரு நல்ல பாடமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு தயக்கமும் இல்லை.
கிழே கிளிக் செய்யவும்.

சாத்தானின் சாட்சியம் -Witness of Satan. pdf  

You can download tamil catholic book called Witness of Satan,pdf format. you can download it for free. pls click the above link for follow the following link
https://sites.google.com/site/catholicbooksinpdfformat/home/download-catholic-christain-books-in-tamil

அர்ச் அந்தோணியாரின் புதுமைகள்

                                             அர்ச் அந்தோணியாரின் புதுமைகள் 

அர்ச்  அந்தோணியார் வாழும் போது மட்டும் அல்ல அவர் இறந்த போதும் பல புதுமைகளை செய்தார் . அவருடைய புதுமைகளை பார்த்த திருச்சபை அவரை ஒரே ஆண்டில் அவருக்கு புனிதர் பட்டம் கொடுத்தது.  இனி நாம் அவருடைய புதுமைகளை பார்போம் .

அர்ச்  அந்தோணியாரின் சுருபதையோ அல்லது அவரது படங்களை பார்க்கும் போது இரண்டு ஒற்றுமைகளை பார்க்கலாம்.

1.  அர்ச்  அந்தோணியார் கையில் இருக்கும் குழந்தை சேசு.
            அர்ச் அந்தோணியார் தன் நண்பன் திசே என்பவருடைய வீட்டில் ஜெபித்து கொண்டு இருக்கும்  போது குழந்தை சேசு அவருக்கு தோன்றி அவருடன் விளையாடி கொண்டு இருந்தது. அதை அவர் நண்பர் கதவு  சாவி துவாரத்தின் வழியே பார்த்தார். அதனை அறிந்த அந்தோணியார் தான் சாகும் வரை அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வாங்கி கொண்டார்.
2. அவரது கையில் உள்ள லில்லி மலர்.
             1680 வது வருடம் ஆஸ்திரியா நாட்டில் உள்ள கோவிலில் அவரது திருநாள் அன்று ஒரு நபர் லில்லி மலரை அந்தோணியாரின் சுருபத்தில் வைத்து விட்டு சென்றார். கொஞ்ச நாள் கழித்து அந்த லில்லி வாடாமல் இரண்டு புதிய பூக்கள் பூத்திருந்தன.


சிறுவயதில் 

     அர்ச் அந்தோணியார் சிறு வயதிலே புதுமை செய்யும் வரம் பெற்று இருந்தார் அது என்ன என்றால் ஒரு முறை அவர்க்கு கோவிலுக்கு சென்று திவ்யபலி பூசை காண வேண்டும் என்று ஆசை. ஆனால் அவரது தந்தை அவரை வீட்டு தோட்டத்தில் பறவைகள் தானியங்களை சாப்பிடமல் அதை விரட்ட வேண்டு என்று அவர் தந்தை அவரிடம் சொன்னார். ஒரு பக்கம் பூசை செல்ல வேண்டும் என்று ஆசை ஆனால் மறுபக்கம் பறவைகள். உடனே ஆண்டவரிடம் வேண்டினார் பறவைகளை  எல்லாம்
அரண்மனைக்குள் செல்லுமாறு சொன்னார். அனைத்து பறவைகளும் அரண்மனைக்குள் சென்றது. அவர் சந்தோசத்துடன் பூசை பார்க்க சென்றார். அவரது தந்தை வந்த போது அந்தோணியாரை தோட்டத்தில் காண வில்லை. தந்தைக்கு கோபம். ஆனால்  அந்தோனியார் நடந்ததை சொன்னார். அரண்மனையில் இருந்து பறவைகளை வெளியே விட்டார்.

குருமடத்தில்  

அந்தோணியாரை குருமடத் தலைவர் தன்னுடைய அனுமதி இல்லாமல் புதுமைகளை செய்யகூடாது என்று அவருக்கு உத்தரவு கொடுத்திருந்தார். ஒருநாள் சந்தைக்கு சென்று காய்கறி வாங்க அந்தோணியாரும் சக துறவியும் சென்றனர். அப்போது ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த ஒரு ஆள் கால் தவறி கிழே விழுவதை பார்த்த அந்தோணியார் உடனே அவனை நில் என்று சொன்னார். உடனே அவன் அந்தரத்தில் நின்றான். மடத்துக்கு வந்து தன் குருமட தலைவரிடம் நடந்தை சொன்னார். அவனை கிழே  இறக்கிவிட அனுமதி கேட்டார். அதற்கு தலைவர் நீ என்னை கேட்காமலே ஏற்கனவே புதுமை செய்து விட்டாய் முதலில் சென்று அவனை கிழே  இறக்கி விட்டு வா என்று தலைவர் உத்தரவு பெற்ற பின்பு அங்கு சென்று அவனை அந்தரத்தில் இருந்து கிழே இறக்கினார்.

தப்பறைகளின் சம்மட்டி  

அந்தோணியார் தப்பறைகளுக்கு ஒரு சம்மட்டியாகவே இருந்தார். அதில் முக்கியமான மூன்று நிகழ்வுகளை பார்போம் ..
1.மீன்களுக்கு போதித்தல் ..........
 அந்தோணியார் ஒரு மிக பெரிய போதகராக இருந்தாலும் அவரால் எல்லா நேரமும் மக்களை சர்வேசுரனுடைய வாக்கியத்திற்கு செவி கொடுக்க வைக்க இயலவில்லை. ஒரு நேரம் Rimini நகரிலே போதிக்க சென்றார். அங்கே   ஒரு பதிதர்கள் அவர்கள் சர்வேசுரனுடைய வார்த்தைகளை வெறுத்தனர்.  எனவே ஒருவரும் அந்தோணியாரடைய வார்த்தைகளை கேட்க வரவில்லை. 
அந்த நகரத்து மக்களை பார்த்து சர்வேசுரனுடைய வார்த்தைகளை கேட்டக முடியாதவர்களே உங்களுக்கு போதிப்பதை விட அந்த மீன்களுக்கு போதிப்பேன் என்று சொல்லி அங்கு இருந்த கடல் கரைக்கு சென்றார். அந்தோணியார் என்ன செய்கிறார் என்று பார்க்க அந்த பதிதர்கள் அவரை பின் சென்றனர்.  

அந்தோணியார்  கடல் ஓரத்திலே நின்று மீன்களை பார்த்து ஓ பாக்கியம் பெற்ற மீன்களே கடவுளின் வார்த்தை களை  கேட்க வாருங்கள் என்று சொன்னார். சிறுது நேரத்தில் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை வரிசையாக  நின்று அந்தோணியார் சொல்லுவதை கேட்டு  கொண்டு இருந்தன.பிரசங்கம் முடிந்த பிறகு அவைகளுக்கு அவர் ஆசீர் வழங்கி அவைகளை அனுப்பி விட்டார்.

2.தேவ நற்கருணையை கழுதை வணங்குதல் 

ஒரு முறை பதிதன் ஒருவன் அந்தோணியாரிடம் வந்து திவ்ய நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று வாதித்தான். அவன் அந்தோணியாரிடம் ஒரு போட்டி வைத்தான். தான் ஒரு கழுதையை மூன்று நாள் உணவு எதுவும் கொடுக்காமல் பட்டிணி போடுவேன். மூன்றவது நாள் நான் கழுதையை தெருவில் நிறுத்தி அதற்கு முன் நான் புல்லு மற்றும் தண்ணிர் வைப்பேன். நீர் நற்கருணையை கொண்டுவாரும். கழுதை முதலில் புல்லு திண்றால் நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று அர்த்தம். மாறாக நற்கருணை முன் வணங்கினால் நான் ஒரு கிறிஸ்தவனாக மாறுவேன். என்றான். அதற்கு அந்தோணியார் சம்மதித்தார்.
மூன்று நாட்களுக்கு பிறகு அந்த வீதியில் மக்கள் பலர் கூடினர். அதில் கிறிஸ்தவர்களும் பதிதர்களும் இருந்தனர். கழுதை கொண்டு வரப்பட்டது அதற்கு முன் புல் போடப்பட்டது.  அந்தோணியார் கையில் திவ்ய நற்கருணையுடன் பவணியாக வந்தார். என்ன ஆச்சரியம் மூன்று நாள் பசியாக இருந்த கழுதை தனக்கு  முன் வைக்க பட்டு இருந்த புல்லு கட்டுகளை பாராமல் அந்தோணியார் வரும் திசையை நோக்கி முன்னங்கால்களை மடக்கி திவ்ய நற்கருணையை ஆராதித்தது. அந்த பதிதனும் மனம் திரும்பினான்.

3. விஷம் சாப்பிடுதல் 

அந்தோணியார் செய்கிற அற்புதங்களை பார்த்த Rimini நாட்டு பதிதர்கள் அந்தோணியாரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர். எனவே அவர்கள் அவரை கொலை செய்ய திட்டம் போட்டனர். முடிவில் அவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்ய முடிவு செய்தனர். அந்தோணியார் அந்த வழியாக செல்லும் போது அவர்கள் அவரை நல்லவர்கள் போல் தங்களுடன் உணவு அருந்த அழைத்தனர். அனால் ஆண்டவர் அவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்திருப்பதை அவருக்கு தெரியப்படுத்தினார். அந்தோணியாரும் ஒன்றும் தெரியாதது போல அவர்களுன் உணவு அருந்த சென்றார்.
ஆனால் உணவு அருந்தும் முன் அவர்களிடம் உணவில் விஷம் இருப்பதை அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர்கள் அவரை பார்த்து ஏளனமாக சிரித்தனர்.  அந்தோணியார் அவர்களுக்கு ஆண்டவருடைய வாக்கியத்தை அவர்களுக்கு நினைவு படுத்தினார். "என்னை பின்செல்கிறவர்கள்  யாரவது கொடிய விஷத்தை குடித்தாலும் அவர்களை அது ஒன்றும் செய்யாது"
அப்போம் நீர் இதை குடித்து உமக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் நாங்கள் சேசுவை நம்புவோம் என்று பதில் அளித்தனர். அவர் அவர்கள் முன்பாக அந்த உணவை சிலுவை அடையலாம் அறைந்து பின் சாப்பிட்டார். அந்த விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. அங்கு இருந்தவர்கள் அனைவரும் மனம் திரும்பி நல்ல கிறிஸ்தவர்களாக வாழ ஆரம்பித்தனர்.


அர்ச். அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
ஆங்கிலத்தில் புதுமைகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்  

ஆங்கிலத்தில் புதுமைகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும் -2

திங்கள், 8 ஏப்ரல், 2013

அர்ச். அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு .(தமிழில்)

அர்ச். அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு .


குறிப்பு 
             இயற்பெயர்                  : பெர்தினாந்து      

            பிறப்பு :                              1195
            ஆகுஸ்தினார் சபை :  1210
            பிரான்சிஸ்கன் சபை: 1220
            இறப்பு :                              13.ஜூன் 1231

            புனிதர் பட்டம்              : 1232
           
  பிரான்சிஸ்கன் சபை துறவி, திருச்சபை இன் வேத போதகர்., கோடி அற்புதர், பதுவை புனிதர்....


பிறப்பு 

அர்ச் . அந்தோணியார் போர்த்துகல் நாட்டில் உள்ள லிஸ்பன் என்னும் ஊரில் 1195 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பிறந்தார்.
அந்தோனியாரின் பெற்றோர் அவரை ஒரு கதோலிக்க பள்ளியில் அவரை படிக்க வைத்தனர். அவருடைய ஆசிரியர்கள் அவர் ஒரு வீரனாக வருவார் என்றனர். ஆனால்  அவர் தந்தையோ அதனை மறுத்தார். அவருடைய தந்தைக்கோ அவர் ஒரு நல்ல நீதிமானாக வரவேண்டும் என்ன்பதுதன் ஆசை. 

துறவறம் 

ஆனால்  அந்தோனியார் தன்னுடைய 15 வயதில் ஆகுஸ்தினார் சபையில் சேர   ஆவல் கொண்டார்.1210 ஆம் வருடம் ஆகுஸ்தினார் சபையில் சேர்ந்தார். அவர் சபையில் சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகள் அவருடைய நண்பர்கள் அவரை அடிகடி அவரை சந்தித்தனர். இதை அவர் விரும்பாததால் தன்னை coimbra நகரில் உள்ள  ஹோலி கிராஸ் மடத்துக்கு மாற்ற கேட்டு கொண்டார்.

அங்கே அவர் எட்டு வருடங்கள் இறையியல் படித்தார். பின்பு அவர் 1219இல்  குருப்பட்டம் பெற்றார். ஒரு நாள் சில துறவிகளை அவர் மடத்தில் கண்டார். அவர்களிடம் அவர்கள் யார்? எங்கே இருந்து வருகிறார்கள்? என்று வினவினார். அப்போது நாங்கள் ஒரு பிரான்சிஸ்கன் சபை துறவிகள் என்றும், ஆப்ரிக்காவில் உள்ள மோர்ரகோ என்னும் நாட்டிற்கு செல்வதாகவும் அங்கு சென்று சர்வேசுரனை பற்றி அந்த நாட்டு மக்களுக்கு போதிக்கவும், சில நேரத்தில் வேதசாட்சி மரணம் அடையலாம் என்றும் அந்தோணியாரிடம் சொன்னார்கள். இதை கேட்ட அவர் தானும் ஒரு வேதசாட்சி மரணம் அடைய ஆசை கொண்டார்.

பிரான்சிஸ்கன் சபை

பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தால்  தானும் ஒரு வேதசாட்சி மரணம் அடையலாம் என்று எண்ணி 1220 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.  பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்த பிறகு தான் தன் பேரை அந்தோணியார்  என மாற்றி கொண்டார். சபையில் சேர்ந்த பிறகு அவர் தானும் Morocco தேசம் சென்று வேதம் போதிக்க அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.  அந்தோணியார்  1220 ஆம் ஆண்டு அவர் Morroco  செல்ல கப்பலில் ஏறினார். ஆனால் ஆண்டவருடைய சித்தம் அவர் Morroco சென்று வேத சாற்றி ஆவது அல்ல. எனவே அவர் கப்பல் பயணத்தில் உடல் நிலை சரி  திரும்ப வேண்டியதாயுற்று. கப்பல் கடல் புயலில் சிக்கி போர்துக்கள் நாட்டிலே உள்ள Sicily  அருகே வந்தது.


புதிய அழைப்பு  

அந்தோணியார் Messina  நகரத்தில் இருந்த பிரான்சிஸ்கன் மடத்தில் ஓய்வு எடுத்தார்.மே மாதம் 30,1221 அன்று Assisi  நகரிலே பிரான்சிஸ்கன் சபை துறவிகளின் மாநாடு நடைபெற இருப்பதை அரிந்தார் . ஒரு வாரம் கழித்து ஐரோப்பா தேசத்து பிரான்சிஸ்கன் துறவிகள் அர்ச் பிரான்சிஸ் அசிசி யுடன் சேர்ந்து ஜெபிக்கவும், அவருடைய வார்த்தைகளை கேட்கவும் வந்திருந்தனர்.
அந்த மாநாடுக்கு பிறகு அனைவருக்கும் எங்கு பணி புரிய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அந்தோணியார் Monte  Paolo என்னும் இடத்திருக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு அவர் ஒரு தனிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.  ஒரு முறை Forli  என்னும் இடத்தில் குருப்பட்டம் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது. அன்று பிரசங்கம் செய்யும் துறவிக்கு பிரசங்கம் செய்ய இயலவில்லை.  ஒருவரும் பிரசங்கம் செய்ய முன் வரவில்லை. எனவே அந்த மடத்தின் தலைவர் அந்தோணியாரிடம் சென்று அவருக்கு என்ன தோணுகிறதோ அதை பிரசங்கம் செய்ய சொன்னார். அன்று அவர் செய்த பிரசங்கம் அங்கு இருந்த அனைவரயும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. அவர் செய்த பிரசங்கம் பற்றி அர்ச் , பிரான்சிஸ் அசிசியாருக்கு சொல்லப்பட்டது. அசிசியார் அவரை குரு மாணவர்களுக்கும் மற்றும் இத்தாலி முழுவது சென்று இறையியல் போதிக்கவும் சொன்னார
அர்ச்  அந்தோணியாரின் பேராலயம் , பதுவா .

போதகர் மற்றும் ஆசிரியர்.

அந்தோணியார் இத்தாலி மட்டும் பிரான்ஸ் தேசம் முழுவதும் பயணம் செய்து போதித்து வந்தார். அவர் பலரை தன்னுடைய பிரசங்கத்தால் சர்வேசுரன் பக்கம் இழுத்தார்.  அவர் தப்பறைகளுக்கு ஒரு சம்மடியகவே இருந்தார்.  அந்தோணியார்  பிறருடைய பாவங்களை குறித்து அவர்களிடம் நேரடியாகவே பேசினார்.
ஒருமுறை  Archbishop Simon De Sully என்பவர் அந்தோணியாரை பிரசங்கம் செய்ய அழைத்திருந்தார். Archbishop தன்னை பற்றி பெருமையாக பேசுவார்  என்று எண்ணி இருந்தார். அங்கு பெரும் திரளான மக்கள் கூடி இருந்தனர். அனால் அந்தோணியார் அந்த Archbishop குற்றங்களை அங்கு அந்த மக்கள் முன்னிலையில் சொன்னார். 1223 ஆம்  ஆண்டு பிரான்சிஸ்கன் துறவிகளுக்கு என்று ஒரு  இறையியல் பள்ளி ஒன்றை அவர் நிறுவினார்.

அர்ச். பிரான்சிஸ் அசிசியார் இறந்த பிறகு மடத்தின் தலைவராக அவரை தேர்வு செய்தனர். 1230 ஆம் ஆண்டு அந்த பதவியை துறந்து மீண்டும் போதிக்கும் அலுவலை செய்தார். அதே வருடம் அந்தோணியார் அப்போது போப்பாண்டவராக இருந்த Gregory IX முன்பு பிரசங்கம் செய்யும் அலுவல் அவருக்கு கிடைத்தது. அந்தோணியார் செய்த பிரசங்கத்தை கேட்ட போப் அவரை "வாக்குத்தத்தின் பெட்டகம்" என்று அழைத்தார்.  அந்தோணியார் தவக்காலம் முழுவதும் பதுவா நகரிலே போதித்து வந்தார். அதை கேட்பதற்கு ஆயிரகணக்கான மக்கள் அங்கு கூடினர்.

அந்தோணியாரின்  இறுதி நாட்கள்.

அந்தோணியார்  பதுவா  நகருக்கு  போதித்து வந்த போது உடல் நிலை மிகவும் மோசமானது. எனவே அவர் தனது இறுதி நாட்கள் அருகில் இருப்பதை உணர்ந்தார். தன்னை பதுவா நகருக்கு கொண்டு செல்ல கேட்டு கொண்டார்.
ஆனால் அவர் பதுவா வருவதற்கு முன்பே Arcella  என்னும் ஊரிலே தனது 35 வயதில்  இறந்தார். 
அவர் இறந்த ஒரு வருடத்தில் அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதை அப்போது போப் ஆகா இருந்த Gregory IX  அந்தோணியாருக்கு புனிதர் பட்டம் கொடுத்தார்..

1263 ஆம் ஆண்டு அவரது கல்லறையில் இருந்து அவரது புனித பண்டங்களை எடுப்பதற்காக கல்லறையை திறந்தனர். என்ன ஆச்சரியம் அவரது உடல் எல்லாம் அழிந்து போயிற்று. ஆனால்  அவரது நா மட்டும் அழியாமல் அப்பிடியே இருந்தது. அவர் இறந்தது 1231. இன்றும் சர்வேசுரனை பற்றி மக்களுக்கு போதித்த அவரது நா அழியாமல் பதுவா  நகரிலே அவரது ஆலயத்தில் உள்ளது.


அர்ச்  அந்தோணியாரின் சுருபதையோ அல்லது அவரது படங்களை பார்க்கும் போது இரண்டு ஒற்றுமைகளை பார்க்கலாம்.

1.  அர்ச்  அந்தோணியார் கையில் இருக்கும் குழந்தை சேசு.
            அர்ச் அந்தோணியார் தன் நண்பன் திசே என்பவருடைய வீட்டில் ஜெபித்து கொண்டு இருக்கும்  போது குழந்தை சேசு அவருக்கு தோன்றி அவருடன் விளையாடி கொண்டு இருந்தது. அதை அவர் நண்பர் கதவு  சாவி துவாரத்தின் வழியே பார்த்தார். அதனை அறிந்த அந்தோணியார் தான் சாகும் வரை அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வாங்கி கொண்டார்.
2. அவரது கையில் உள்ள லில்லி மலர்.
             1680 வது வருடம் ஆஸ்திரியா நாட்டில் உள்ள கோவிலில் அவரது திருநாள் அன்று ஒரு நபர் லில்லி மலரை அந்தோணியாரின் சுருபத்தில் வைத்து விட்டு சென்றார். கொஞ்ச நாள் கழித்து அந்த லில்லி வாடாமல் இரண்டு புதிய பூக்கள் பூத்திருந்தன.


----------

நீங்கள் Christian புத்தகங்களை Download செய்ய இங்கே Click  செய்யவும்.

நன்றி...............wwww.singamparayi.blogspot.in



உங்கள் கருத்துகளை எங்களுக்கு தெரிய படுத்த  கிழே  கிளிக் செய்யவும்.

robinlourdhu1@gmail.com


Download free Catholic Books in Pdf format


Now a days there are more number of christian books are coming out. All books are looks like spreading christian to the world by its powerful Authors.  But think these books are really please God.  These books are spreading only their writing skills and their imaginations. Nothing going to please God or Spreading the will of God.
So please choose good books which will please God and which will help your soul to grow with love of God
so pls choose good Books

And you will see the Love of God.....
Now a days Books will only based on their imagination where they will quote many miracles which are not confirmed by the church..
Now a days there are more Protestant or CSI books will be available in all stores even in the Catholic Church also. This is Very sad thing. These books only preach the hieracy. They never quote a simple thing that have done by Our Lady. 

Pls Careful what you are Reading...