Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

Download old Catholic Latin songs


In this blog you can download the old catholic latin songs for free.

Once the latin mass was said throughout the world.  After a second Vatican Council it has been changed.  still in many countries there is latin mass is available.

In India more than 10 places the latin mass is there.

For More. Info.. CLICK HERE FOR MASS CENTERS IN INDIA


Songs During the Mass (For download right click and Save link as)

Kyrie 

Gloria in Excelsis

Credo

Sanctus

Agnus Dei


Our Lady Latin Songs

Ave Maria

Ave Maris Stella

Regina Caeli

Salve Regina

Alma Redemptoris Mater


Before Blessed Scrament

Lauda Sion

Alleluia-Caro-Mea.mp3

Oculi-Omnium-Gr..mp3

Cibavit-Eos-Intr..mp3




For More pls Click Here

For Tamil songs pls Click here




சனி, 7 செப்டம்பர், 2013

அர்ச் ஜான் மரியவியான்னி

புனிதர் என்ற புகழ் சிலருக்கத்தான் பொருத்தமாக அமையும். அந்த சிறப்பு புனிதரான ஜான் மரிய வியன்னியின் வாழ்வில் பொருந்தி நிற்கிறது. புனித ஜான் மரிய வயான்னிக்கு உலகம் சார்ந்த அறிவு குறைவு என்று அறியப்பட்டாலும், மற்ற குருக்களால் தனிமைப்படுத்தப்பட்டாலும் கடவுளோடு மட்டும் தனித்திருப்பது புனிதம், இறைவனோடு இணைந்திருப்பது ஞானம் என்று உலகிற்கு உறுதியாய் அவரின் வாழ்வு வெளிப்படுத்தியது.

பிரான்சு நாட்டில் லைனஸ் என்ற நகருக்கு அருகில் உள்ள டார்டில்லி என்ற பண்ணைக் கிராமத்தில் 1786 இல் வியான்னி பிறந்தார். பிரான்சு புரட்சி ஏற்ப்பட்ட நேரத்தில் கிறிஸ்து கொள்ளைகளை வெளிப்படையாக வாழ இயலாத சூழ்நிலை.இந்த சமயத்தில் புனிதரின் பெற்றோர்கள் கிறிஸ்துவத்தை மறைமுகமாக பின்பற்றிவந்தார்கள். அனுபவத்தில் அறிந்த கிறிஸ்துவத்தின் பெருமையை உணர்ந்தவராய் புனித வியான்னி குருவாக வாழ வேண்டும் என புறப்பட்டவருக்கு ஏராளமான தடங்கல்கள்.

குருவாக வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்த அவரது பெற்றோர்கள் வியான்னியை பண்ணை வேலையிலிருந்து விடுவிக்க தயங்கினர். மேலும் பெற்றோர்கள் இதற்கு சம்மதித்து அனுமதித்தவுடன்  இராணுவ சேவை என்ற அரசு சட்டம் தடையாக அமைந்தது. அதனைக் கடந்து குருமடத்தில் சேர்ந்த புனிதருக்கு படிப்பின் வடிவில் அதிகமாக சவால்கள். ஜான் மரிய வியான்னி இறையியல் மறைஉண்மைகளை புரிந்து கொள்வதும், இலத்தீன் மொழியை கற்றுக் கொள்வதும் மிகப் பெரிய போராட்டமாக மாறியது. இதனால் குருவாக வேண்டிய நேரத்திலும் குருப்பட்டம் தள்ளி வைக்கப்பட்டது. சவாலை சாதனையாக தன் பக்தியிலும், நம்பிக்கையிலும் வெளிப்பட்டதால் குருவாக உயர்த்தப்பட்டார்.

இவரது திறமை குறைவாக மதிப்பிடப்பட்டதனால் ஒதுக்குப்புறமான சிறிய பங்காகிய அர்ஸ் கிராமத்திற்கு வியான்னி அனுப்பட்டார். வெறும் அடையாள கிறிஸ்துவ மக்களாக எந்த தெய்வ நம்பிக்கையும் இல்லாத கிறிஸ்துவமக்கள் மத்தியில் பணியாற்ற தொடங்கினார். தனது செபவாழ்வாலும், தவமுயற்சிகளினாலும் மக்களின் மத்தியில் நம்பிக்கையை வென்றெடுத்தார். உணர்வுபூர்வமான தோற்றம், நடுங்கும் வர்த்தைகள் எல்லாம் எல்லாரின் உள்ளத்தைத் தொட்டன. மனமாற்றத்தினால வாழ்வு பெறமுடியும் என்ற நம்பிக்கையை மக்களின் உள்ளங்களில் பதித்தார். இதன் மூலமாக பல்வேறு மக்கள் ஒப்பரவு சாதனத்திற்காக அர்ஸ் நகரை நோக்கிப் படையெடுத்தனர். படிப்படியாக உண்மையான மனமாற்றத்தின் தந்தையாக மக்கள் மத்தியில் உயர்ந்து நின்றார். இதனால் ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம் பாவசங்கீர்த்தனம் ழங்கும் குருவாக வாழ்ந்து காட்டினார்.

 பாவசங்கீர்த்தனம்  மதிக்கப்டாத இக்கால சூழ்நிலையில், இந்த புனிதரின் வாழ்வு உண்மையான மனமாற்றத்தை மக்கள் மத்தியில் அளித்து அருட்சாதனத்தால் விளையும் அருளுக்கு வழிவகுக்கட்டும். புனிதரின் வாழ்வு குருக்களுக்கு சிறந்த ஞானமாகவும் பாடமாகவும் அமையட்டும்.


Source from: http://www.anbinmadal.org/vainney.html

நற்கருணைக்குரிய மரியாதை!

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின் எந்த சாத்தானின் வேலையோ, திவ்ய நற்கருணைக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகச் செலுத்தப்பட்டு வந்த வணக்கமும், மரியாதையும் திடீரென்று குறைந்து விட்டது. சில இடங்களில் போயே விட்டது. திவ்ய நற்கருணை ஒழிந்தால் திருச்சபையும் ஒழியும் என்பதை நன்கு உணர்ந்த சாத்தானின் வேலையே இது என்பதில் ஐயமில்லை.

1. நற்கருணை பேழை இருக்க வேண்டிய இடம் வத்திக்கான் சங்கத்துக்குப் பின் உரோமையிலிருந்து வந்த அதிகாரப்பூர்வமான அறிக்கைகளுள் ஒன்று நற்கருணை பேழை எப்போதும் ஒரு பீடத்தின் மீதுதான் இருக்க வேண்டும் என்பது. அதற்குத் தக்க காரணம் இல்லாமல் இல்லை. பூசையில் பலியான இயேசு, பூசை முடிந்த பின்பும் பலியானவராகவே இருக்கிறார். வேறெப்படி இருக்க முடியும்? பலியானது பலியானதுதான். ஆகவே, கிறிஸ்து நற்கருணைப் பேழையில் இருக்கும் போதும் பலியான நிலையில்தான் இருக்கிறார். அதனால்தான் பூசைக்கு வெளியே நற்கருணை உட்கொண்டாலும் உண்மையான பலியான ஆண்டவரை உட்கொள்கிறோம் என்பதில் ஐயமேயில்லை. ஆகவே, பலியான நிலையில் உள்ளவரை பலி நிகழும் பீடத்தின்மீது வைத்திருப்பதே பொருத்தம் என்று திருச்சபை எப்போதும் போதித்து வந்துள்ளது. ஆனால், வத்திக்கான் சங்கத்திற்குப் பின் சுவருக்குள்ளே (பணப்பெட்டி போல) புதைத்து வைப்பது, தூண்மேல் வைப்பது, கோவிலில் எங்காவது ஒரு மூலையில் வைப்பது இவை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சிலர் சிறியதொரு மேசை மேல் வைத்து ஆண்டவருக்கு மிக அருகே அமர்ந்து ஆராதனை செய்கிறார்களாம். கிறிஸ்துவை விசுவாசத்தால் நெருங்கலாமே தவிர அருகாமையில் அல்ல. திருச்சபை ஒழுங்கை மீறி செய்யப்படும் எதுவும் நிச்சயமாக சர்வேசுரனுக்கு ஏற்காது என்பதில் ஐயமில்லை.

2. நற்கருணை பேழை கூடாரம் போல் காட்சியளிக்க வேண்டும் பேழை என்று தமிழில் வழங்கும் சொல் ஆங்கிலத்தில் TABERNACLE எனப்படுகிறது (இது இலத்தீன் மொழியிலிருந்து பிறந்த சொல்). இச்சொல்லுக்கு கூடாரம் என்று பொருள். பழைய ஏற்பாட்டுக் கூடாரத்தை நினைவுறுத்துவதோடு, புதிய ஏற்பாட்டில் 'வார்த்தை மனு உருவானார். நம்மிடையே குடிகொண்டார்' (அரு. 1:14) என்னும் அருள்வாக்கை நினைவுறுத்துகிறது. குடிகொண்டார் என்ற சொல்லுக்குக் கிரேக்க மூலத்தில் கூடாரம் அடித்தார் என்ற பொருளே உண்டு என்பது மறைநூல் அறிஞர் விளக்கம். அவரும் (மனு உருவானவரும்) மனு உருவில் நம்மிடையே வாசம் செய்வது நித்தியத்துக்கல்ல. உலகம் இருக்கும் வரையில்தான் என்ற பொருளோடு, நாமும் இவ்வுலகில் கூடாரத்தில் வாழ்பவர் போல் ஒழுக வேண்டும். இது நமது நித்தியமான இல்லம் அல்ல (எபி 13:14) என்ற பொருளையும் குறிக்கவேயாம். நற்கருணைப் பேழையை வைக்க வேண்டிய முறையில் வைக்காவிட்டால் மேற்சொன்ன பொருளுக்கு இடமேயில்லையே!

3. நற்கருணையுள்ள பேழைக்கருகில் விளக்கு ஒன்று இரவும் பகலும் தொடர்ந்து எரிய வேண்டும் பழைய ஏற்பாட்டில் ஆசாரக் கூடாரம் எனப்பட்ட கூடாரத்தில் சந்நிதித் திரைக்கு வெளியே, தூய்மையான ஒலிவ எண்ணெய் விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும் என இறைவன் கட்டளையிட்டிருந்தார் (விப 27:20-21). இதன் நினைவில்தான் புதிய ஏற்பாட்டில் நற்கருணைக் கூடாரத்துக்கு முன் விளக்கு ஒன்று எரிய வேண்டும் என்ற ஒழுங்கு திருச்சபையில் ஏற்பட்டிருக்க வேண்டும். ஒலிவ எண்ணெய்யும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனித்தே. நம் நாட்டில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற தாவர வகை எண்ணெய் - VEGETABLE OIL. பயன்படுத்தப்பட்டு வந்தது. வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு எப்படியோ மண்ணெண்ணெய் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. சில இடங்களில் அதுவுமில்லை. மின்சார மின்மினி விளக்குகள் உள்ளன. மின்சாரம் இல்லையென்றால் விளக்கு இல்லை. இதுதான் இன்று பல இடங்களில் நற்கருணை நாதருக்குக் காட்டப்படும் மரியாதை. மற்ற எண்ணெய் விலைகள் அதிகம் என்று சாக்குப்போக்குக் கூறுபவர்கள் இருக்கலாம். வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு எத்தனையோ தேவையில்லாச் செலவுகளுக்குப் பணமிருக்க இந்த ஒன்றுக்கு மட்டும் பணமில்லாமல் போய்விட்டதா? ஆதியில் இறைவன் விளக்கு பற்றி சொன்னபோது தூய்மையான ஒலிவ எண்ணெய்யைக் கொண்டு வருமாறு இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடுவாய் (விப 27:20) என்றார். நம் பங்கு மக்களிடம் கேட்டுக் கொண்டால் கூட தேவைக்கு மேலாகவே கொண்டு வருவார்களே. பங்கு குருக்களுக்கு இந்த ஆர்வம் இருந்தால் தானே. மிகச்சில பங்குகளில் மட்டுமே மக்கள் எண்ணெய் கொண்டுவருவது காண்கிறோம். எண்ணெய் விளக்கு ஒருவிதத்தில் உயிருள்ள விளக்கென்னலாம். நம் முயற்சியில் சம்பாதிப்பதும் ஆகும். நம்மிடம் உயிருள்ள விசுவாசம் இருந்தால், இந்த உயிருள்ள விளக்குகளுக்குப் பஞ்சம் இராது. இந்த விளக்கு பகல் நேரத்திலாவது அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டேயிருக்குமாறு கவனத்துடன் பார்த்துக் கொள்வது நற்கருணைக்குச் செலுத்தப்படும் தனி வணக்கமாகும்.

4. திவ்ய நற்கருணைக்கு முன் மரியாதை பேழைக்குள் - இருந்தால் ஒரு முழங்கால் மண்டியிடுவது. ஸ்தாபகம் செய்திருந்தால் இரு முழங்கால்களும் மண்டி இடுவது என்று பல நூற்றாண்டுகளாகவே ஒழுங்கு இருந்தது. இன்று முழந்தாளிடுவது இந்தியப் பண்பல்ல என்ற கருத்தை சில அறிஞர்கள் பரப்பி வருகிறார்கள். இயேசுவின் பெயருக்கு (அதாவது இயேசுவுக்கு) விண்ணவர், மண்ணவர், கீழுலகோர், அனைவரும் மண்டியிட (பிலிப் 2:10) என்ற திருவசனம் இந்தியாவைப் பொறுத்தமட்டில் செல்லாதோ. முழங்காலிடுவது இந்தியப் பண்பாடல்ல என்கிறார்கள். சாஷ்டாங்கசமாக விழுவது இந்தியப் பண்பாடுதானே. இப்படி சாஷ்டாங்கசமாக விழுவதில் முழந்தாளிடுவது அடங்கியுள்ளதே. முழங்காலிடாமல் சாஷ்டாங்கசமாக விழுந்து பாருங்கள் தெரியும். ஒரு முழந்தாளிடுவது ஒரு விதமாக இருக்கிறதென்றார் ஒருவர். சரி, இரு முழந்தாளிடுங்களேன். மேலும் மரியாதையாயிருக்கும். இன்று நம் நாட்டில் அஞ்சலி HASTHA என்ற ஒரு கருத்து உலவுகிறது. இது நம் நாட்டுக்கு ஏற்றதென்பர். சரி, இதையாவது சரியாகச் செய்யக் கூடாதா? அஞ்சலி HASTHA என்றால் தலைமேல் கரங்குவித்து வணங்குவது அப்படியென்றால் அதை ஒழுங்காகச் செய்யுங்களேன். 'தலைவா, உனை வணங்க தலைமேல் கரம் குவித்தேன்" - என்று பாடுகிறார்கள். கரங்களைக் கட்டிக்கொண்டு. என்ன பொருத்தம். பிள்ளையார் முதலான தெய்வங்கள் சந்நிதியில் வணக்கம் செய்வோர் எப்படி வணங்குகிறார்கள் என்று சற்று கவனியுங்கள். நடுத்தெருவில் கூட தலைமேல் கரம் குவித்து வணங்குகிறார்கள். பிள்ளையாருக்குக் கிடைக்கிற மரியாதை கூட தம்மை வெறுமையாக்கிக் கொண்ட உண்மைக் கடவுள் நம் ஆண்டவருக்கு இப்போது கிடைப்பதில்லை. அந்தோ, கத்தோலிக்கமே, கழுத்துக்கு எங்கே சுளுக்கு வரப்போகிறதோ என்று பயந்து திவ்ய நற்கருணை முன் தலைமிகச் சிறிது வணங்கி பெரிய ஆராதனை செய்து விட்டதாக நினைத்துக் கொள்பவர் ஏராளம். இதற்கு முன் மாதிரி பெரும்பாலும் குருக்களும், துறவியருந்தான். சாதாரண மக்கள் இவர்கள் செய்வதைப் பார்த்து அப்படியே செய்கிறார்கள். மறைந்துள்ள தெய்வ மகத்துவத்துக்கு நாம் செய்யும் மரியாதை இதுதானா? எவ்வளவுக்கெவ்வளவு மறைந்துள்ளாரோ அவ்வளவுக்கவ்வளவு அதிக மரியாதை செலுத்துவதே முறை.

5. திருப்பலிக்குத் திருஉடைகள் திருப்பலி நிறைவேற்றும் நேரத்தில் குறிப்பிட்ட திரு உடைகளை அணிய வேண்டுமென்று திருச்சபை விதிகளைத் தந்துள்ளது. இந்த விசயத்திலும் குருக்கள் பலர் தவறுவது மிகவும் வருந்தத்தக்கது. ஏற்ற அதாவது திருச்சபை குறிப்பிட்டுள்ள உடைகளை முறையாக உடுத்துவது நற்கருணைக்கு நாம் காட்டும் மரியாதைக்கு அடையாளம். அங்கனம் செய்யாவிடில் இவ்வுன்னத அருட்சாதனத்தை அவமதிப்பதற்குச் சமமாகும்.

6. நன்மை வாங்கிய பின் நன்றியறிதல் அப்ப குணங்களில் ஆண்டவர் ஒரு பத்து - பதினைந்து நிமிடமாவது (அதாவது அப்பத்தின் குணங்கள் ஜீரணம் ஆகும் வரையில்) பிரசன்னம் நம் உடலில் உள்ளது. அந்த நேரத்தைச் சரியான முறையில் செலவழிக்காவிடில் நம் உள்ளத்தில் வரத்திருவுளமான இறைமகனுக்கு என்ன மரியாதை. நன்மை வாங்கிப் பயன் என்ன?

7. அப்பத்துண்டு துணுக்குகள் இவை பற்றி இன்று குருக்கள் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தட்டு எதுவும் பயன்படுத்தாமல் நன்மை கொடுப்பது. சாதாரணமாகி விட்டது. தட்டில் துணுக்குகள் காணப்பட்டால் அவற்றை மரியாதையோடு விரலால் சேகரித்து இரசத்தோடு அல்லது தண்ணீரோடு சேர்த்து உட்கொள்ள வேண்டும். குருக்கள் சிலர் இத்துணுக்குகளைச் சேகரிப்பதைப் பார்க்கும்போது அச்சிறு துண்டுகளிலும் ஆண்டவருடைய திருஉடல் உண்டு என்று நம்புகிறார்களா என்று கேட்கத் தோன்றும். அப்பங்களை ஆண்டவர் பருகச் செய்த புதுமையின்போது, மிகுந்திருந்த துண்டுகளைச் சேகரிக்கச் சொன்னது. உணவு வீணாகக் கூடா என்ற காரணத்துக்காக மட்டுமா? தாம் ஏற்படுத்தப் போகும் நற்கருணை அருட்சாதனத்தை முன் குறித்தது இப்புதுமை என்பது பொதுவான கருத்து. அப்படியானால் நற்கருணை - அப்பத்துண்டுகளும் சேகரிக்கப்பட வேண்டும் - மரியாதையோடு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் ஆண்டவருடைய மனதில் இருந்திருக்கக் கூடாதா? அப்படி ஒன்றுமில்லை என்றாலும், ஒவ்வொரு சிறு துண்டிலும் இயேசுவின் உடல் இருக்கிறது என்பதே திருச்சபையின் கருத்து. அப்பத் துண்டுகளைப் பாத்திரத் துணியால் துடைத்துச் சேகரிக்கும் குருக்கள் உளர். அப்படிச் செய்யும்போது துணியில் அப்பத் துண்டுகளை ஒட்டிக் கொள்ளக்கூடாதா? அவற்றின் கதிஎன்ன?

8. கோயிலில் பேசுதல் பூசை முடிந்த பின் ஆண்டவர் கோவிலை விட்டுப் போவதில்லை என்பதையும் உணராமல் அவர் எதிரிலேயே பலவிதமான பேச்சுகள் நடத்துபவர் இல்லாமல் இல்லை. ஒரு கவர்னர், முதலமைச்சர் போன்ற பெரிய மனிதர்கள் சந்நிதியில் செய்யத்துணியாததை மன்னாதி மன்னர் முன்னிலையில் செய்வது மரியாதையா? பூசை நேரத்தில் செபங்களைக் குருக்களும் சரி, மக்களும் சரி, சரியான கவனம் செலுத்தாமல் மடமடவென்று சொல்வதும் மரியாதைக்குறையேயன்றி வேறென்ன? இதுபோன்ற வேறு அவமரியாதைச் செயல்களும் உள்ளன. இவை எல்லாம் நற்கருணையில் உள்ள விசுவாசக் குறைவைத்தான் காட்டுகின்றன. இவையெல்லாம் நற்கருணையின் பெரிய விரோதியாகிய சாத்தான் செயலால் அன்றி வேறு எங்னம் நடக்க முடியும். இவற்றிற்கெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டிய கடமை நற்கருணையில் ஆழ்ந்த விசுவாசம் கொண்டுள்ளவர்கள் கடமை என உணர்வோமா?

Source from:http://www.anbinmadal.org

ஜெபமாலை வரலாறு



ஆதிகால திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே அப்போஸ்தலர்களும் , இதர விசுவாசிகளும் கர்த்தர் கற்பித்த செபத்தையும் அருள்நிறைந்த மரியாயே  என்ற வானதூதரின் வாழ்த்துச் செபத்தையும் உருக்கமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால் இன்று செபிக்கும் கன்னிமரியின் செபமாலையை, கி.பி. 1214ல் தான் அர்ச்  தோமினிக் வழியாக அன்னை மரியாள் திருச்சபைக்கு வழங்கினார்கள். அக்காலத்தில் ஆல் பிஜென்சியன்ஸ் என்ற முரண்பாட்டுக் கொள்கையினர் மனம் மாறி திருச்சபைக்குத் திரும்பி வரவேண்டுமென்று அர்ச்  தோமினிக் செபித்து வந்தார். பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு காட்டுக்குள் சென்று பாவிகள் மனந்திரும்ப வேண்டி செபித்தார். மூன்றாம் நாள் செபத்தின் தவத்தின் விளைவால் உணர்வற்ற நிலையில் இருந்தார். அப்பொழுது அன்னை மரியாள் அர்ச்  தோமனிக்குக் காட்சி தந்து எதிரிகளை முரண்பாட்டுக் கொள்கையினர்களை, பாவிகளை முறியடிக்கும் ஒரே கருவி செபமாலை என்று கற்றுக் கொடுத்தார்கள்.

அந்த நாளிலிருந்து தனது வாழ்நாள் முழுவதும் அர்ச் தோமனிக் செபமாலையின் புகழையையும் பெருமையையும் தனது போதனைகளின் வழியாகப் போதித்து அறிக்கையிட்டு வந்தார்.

படிப்பறியாத பாமரமக்கள் தாவீது எழுதிய 150 திருப்பாக்களையும் செபிக்க முடியாத வேளையில், கன்னிமரியாள் கொடுத்த செபமாலை பேருதவியாக இருந்தது.செபமாலையில் நாம் செபிக்கும் 150 அருள் நிறைந்த மரியாயே செபம் 150 திருப்பாக்களை ஒத்ததாக அமைந்திருப்பதை நாம் கருத்தில் கொள்வது நல்லது.


செபமாலையின் மகிமையைப் பற்றி அன்னை மரியாள் பலருக்குத் தோன்றி விளக்கியுள்ளார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அருள் நிறைந்த மரியாயே என்ற செபத்ததை சொல்லும்பொழுது எனக்கு ஒரு ரோசாப்பூவை அன்பளிப்பாக அளிக்கின்றீர்கள். என்கிறார்கள். செபமாலையை முழுமையாக எல்லா மறையுண்மைகளையும் தியானித்து செபிக்கும் பொமுது எனக்கும் இயேசுவுக்கும் ரோசாக்களைக் கோர்த்த கிரீடமாக நீங்கள் கொடுக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளார்கள். ரோசாமலர் பூக்களின் அரசி. ஆகவே செபமாலை என்பது முக்கியமான பக்தி முயற்சிகளின் ரோசாமலர் என்பது தெளிவாகப் புலனாகும்.


Source from:http://www.anbinmadal.org

அர்ச் அருளானந்தர்

போர்த்துகலில் செல்வந்தரான அரசகுலப் பெற்றோரின் மகனாக மார்ச்1, 1647ல் ஜான் டி பிரிட்டோ பிறந்தார். சிறு வயதிலிருந்தே ஜானின் உடல் சீராக இருக்கவில்லை. 11 வயதில் தீவிர நோய்த்தாக்கத்தில் பிழைப்பதரிது என்ற நிலையில் அவரது தாய், அர்ச் ஃபிரான்சிஸ் சவேரியாரிடம் உருக்கமாக மன்றாடினார். சிறுவன் பிழைத்தெழுந்தான். இயேசு சபையினரின் உடை போன்று ஓராண்டளவும் தம் மகனை உடுத்தச் செய்தார் தாய். அதிலிருந்து அர்ச் சவேரியாரைப் போல தாமும் இயேசுவின் ஒளியை இந்திய மண்ணில் பரவச் செய்ய வேண்டும் என்ற பேராவல் அவரது இதயத்தில் பற்றியெரிய ஆரம்பித்தது. அவர் விரும்பியவாறே 15 வயதில் இயேசு சபையில் அனுமதிக்கப்பட்டார்.

குருபட்டம் பெற்றபோது கற்றலில் சிறந்த அவரது ஆற்றல் கண்டு, ஜானைப் போர்த்துக்கல்லில் இருத்திக் கொள்ள விரும்பினார். ஜானுக்கு இந்தியாவே இலக்காயிருந்தது. பாப்புவின் பிரதிநிதிவரை சென்று தம் மகனின் இந்தியப் பயணத்தைத் தடுக்க முயற்சித்தார் தாய். 'துறவற வாழ்வுக்கு என்னை அழைத்த ஆண்டவர் இப்போது இந்தியாவுக்கு அழைக்கிறார்" எனக் கூறி அன்னையை ஆறுதல்படுத்தினார். கி.பி.1673ல், 16 சககுருக்களுடன் கோவாவில் கால்பதித்தார் ஜான். இறையியல் முதலான மேற்படிப்புக்களை முடித்தார். மதுரை மறைபரப்புத் தளத்தின் தலைமைப் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பணி தொடங்கு முன் 30 நாள் ஞான ஒடுக்கம் செய்தார். தமிழில் பேசக் கற்றார். தமிழில் போதிக்கும் திறம் வளர்த்தார்.

இந்தியத் துறவி போல் காவி உடை அணிந்தார். மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்று அருளானந்த சுவாமியானார். தமக்குப் பழக்கமில்லாத தமிழக வெப்பத்தைப் பொருட்படுத்தாது, சென்னை, வேலூர், தஞ்சை, முகவை எனப் பல மாவட்டங்களிலும் நடந்தே சென்று போதித்தார். இவரது தவமிகு வாழ்வு, மிகுதியான ஆர்வம், மறைப்பணியில் தீவிரம் இவற்றின் விளைவாய் ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவ மதத்தை  தழுவினர். தஞ்சைத் தளத்தில் அறுவடை மிகுதியானது. மறவர் நாட்டில் இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது. புதிய வேதத்தின் போதனையைத் தடுக்கப் புனிதரைக் கைது செய்தான் முகவை முதன் மந்திரி. விசாரணை இன்றியே துன்புறுத்திக் கொள்ள முயன்ற போது, முகவை மன்னன் தலையிட்டுப் புனிதரை விடுவித்து நாடு கடத்தினான்.

தந்தை ஜானைப் போர்த்துகல் வரவேற்றது. இயேசு சபை மாநிலத் தலைவர் பதவி அளிக்க முன் வந்தது. ஆயர் பதவி காத்திருந்தது. வறண்ட மறவர் நாட்டின் மீது தணியாகத் தாகம் கொண்டிருந்த அருளானந்தர் எதையும் ஏற்க மறுத்துத் தமிழகம் திரும்பினார். இராமநாதபுரத்தில் அரச குடும்பத்தைச் சார்ந்த சிலர் திருமுழுக்குப் பெற்றனர். குணமளிக்கும் வரம் பெற்றிருந்தார் புனிதர். அவரது மன்றாட்டால் மக்கள் உடல் நலம் பெற்றதைக் கண்டு அந்தணர்கள் அழுக்காறுற்றனர். இது பேய் வேலை என்றனர். நோயால் துன்புற்று மரணத்தை எதிர் நோக்கியிருந்த மறவ இளவரச தடியத் தேவர் புனிதர் தம்மிடம் வரப்பிரார்த்தித்தார். ஜான் தாம் செல்லாது தம்வேதியருள் சிறந்த ஒருவரை அனுப்பி இறைவேண்டல் செய்ய, தடியத் தேவர் நலம் பெற்றார். மறையறிவு பெற்று கிறித்தவரானார். அவருக்கு 5 மனைவியர். கிறித்தவரானதும், தம் முதல் மனைவியைத் தவிர மற்றவர்களை அனுப்பிவிட்டார்.
புனித அருளானந்தர்- ஜான்- டி- பிரிட்டோ- St.John De Britoஅவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் ஒருவர் கடலாயி முகவைச் சேதுபதியின் நெருங்கிய உறவினர். மன்னனிடம் முறையிட்டாள். ஓரியூரிலிருந்த தன் தம்பி உடையத்தேவர் மூலம் அருளானந்தரைக் கொல்ல வழிதேடினாள். திருமுழுக்கு யோவானைப் போலவே ஒரு பெண்ணின் சினத்துக்குப் பலியானார் புனிதர். முகவையிலிருந்து ஓரிய10ருக்கு நடத்திச் செல்லப்பட்டார். 'மரணத்தை எதிர்நோக்கியுள்ளேன். இதுவே என் வேண்டுதலின் இலக்காக இருந்தது. எனது உழைப்பிற்கும் வேதனைகளுக்கும் விலை மதிப்பற்ற பரிசாக இந்த நாள் அமைகிறது" என மரணத்திற்குமுன் தம் தலைமைக் குருவுக்கு எழுதினார். தம் இறுதித் தண்டனைக்குக் குறிக்கப்பட்ட இடமான மணல்மேட்டிற்கு விரைந்து சென்றனர். வெட்டப்பட ஏதுவாய் தலைதாழ்த்தினார். தலையைக் கொய்த முரடர்கள் புனிதரது கைகளையும், பாதங்களையும் வெட்டினர். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவாகட்டும் என்ற எண்ணத்துடன் இரு கம்பங்களை நட்டு, உடல் சிதைவுகளைத் தொங்கவிட்டனர். அது மழைக் காலமில்லையெனினும் 8 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. மழைக்குப் பின்னர் புனிதரின் சில எலும்புத் துண்டுகளே மீந்துகிடந்தன.

மறைசாட்சியின் இரத்தத்தால் மணல்மேடு சிவந்தது. சிவந்த மணலை இன்றும் காணலாம். மக்கள் திரளாக திருயாத்திரையாக ஓரியூருக்கு வர ஆரம்பித்தார்கள். 1947ல் அருளானந்தருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. மறவநாட்டுத் திருத்தூதர், மதுரை மறைத்தளத்தின் பாதுகாவலர் 
அர்ச் அருளானந்தரின் நினைவைத் திருச்சபை பெப்ரவரி 4ல் போற்றுகிறது.

கார்மேல் - உத்தரியமாதா

பரிசுத்த பூமியாம் பாலஸ்தீன நாட்டின் மேற்கு திசையில் மத்தியதரைக்கடலுக்கு அருகாமையில் ஒரு உயர்ந்த மலை இருக்கிறது. இதற்கு கார்மேல் மலை என்றுப் பெயர். கடற்கரையோரத்தில் இருக்கும் இம்மலையைப் பற்றி விவிலியத்தில் அருமையான வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

அதன் அழகிய சிகரம் எபிரேய மொழியில் " தோட்டம் " அல்லது " நடப்பட்ட திராட்சை தோட்டம் " உள்ற சிறப்பு பெயர் பெற்றிருக்கின்றது.இந்த மலையில் எலியாஸ் இறைவாக்கினரும் அவருக்குபின் எலிசேயுஸ் என்பவரும் தங்கி செப,தபங்களால் பல அரிய வல்ல செயல்கள் செய்து வந்தனர். இவர்கள் கார்மேல் மலை சன்னியாசி என்ற அழைக்கப்பட்டனர்.
இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் என்னும் கார்மேல் மாதா சபையைச் சார்ந்த ஒரு மடம் இருந்தது. இச்சபையின் தலைவர் அர்ச்  சைமன்ஸ்டாக் என்பவர் 1251ஆம் ஆண்டு ஜீலை மாதம் 16 ஆம் நாள் தேவஅன்னையின் அடைக்கலத்தை நாடி பக்தியாக செபித்துக் கொணடிருந்தார். அச்சமயத்தில் அன்னை மரியா தமது கரத்தில் ஒரு உத்தரியத்தை ஏந்திவளாய் அவர்க்கு காட்சி தந்தார்.

அவரைப் பார்த்து 'என் பிரிய மகனே, இதோ இந்த உத்தரியத்தை என் விருதாக (வெற்றிச்சின்னமாக) ஏற்றுக் கொள். இதை அணிந்துக் கொண்டு மரிக்கின்றவன் நித்திய நரக ஆக்கினையின்று தப்பித்துக் கொள்வான். இது காக்கிறவரின் அட்டையாளமாகவும், ஆபத்த சமயத்தில் கேடயமாகவும், என்னுடைய உதவியின் ஆரம்பமாகவும் இருக்கிறது. " என்று சொன்னார்கள்.

1301 ஆண்டு உத்தரியமாதா 22ஆம் அருளப்பர் என்ற திருதந்தைக்கு தரிசனமாகி உத்தரியசபைமார் மரித்து உத்தரிக்கிறஸ்தலத்திற்குப் போயிருந்தால் கூடிய விரைவில் நான் அவர்களை மீட்டுக் கொள்வோன். என்றார். மேலும் மரணத்திற்கு பிறகு வரும் முதல் சனிக்கிழமைகளில் அவர்கள் அவ்விடத்திலிருந்து விடுதலை ஆவார்கள்என மொழிந்தர்ர்கள்.

கார்மேல் மாதாவுடைய பேருதவியை கார்மேல் சபையினர்க்கு மட்டுமல்ல, அவரது உத்தரியத்தை அணியும் அனைவரும் பலன் அடைவார்கள். உத்தரியத்திற்கு பதிலாக உத்தரிய சுருபத்தை அணியலாம். இந்த பக்தியானது மோட்ச இராக்கினியின் ஞானபிள்ளைகளாக வாழ்வதற்கு உதவிபுரியும்.

அர்ச்  கன்னிமரியாளைப் பின்பற்றி அவரைப் போல் பரிசுத்தமாய் வாழ்ந்து அவர்களுக்கு சொந்தமானவர் என்று வெளிப்படையாக வாழ்ந்து காட்டுவது பெரும் பாக்கியமாகும்.

பரிசுத்த உத்தரியத்தை நாமும் அணிந்து தீயோனிடமிருந்து நம்மை காப்போம். எல்லா நேரங்களிலும் உத்தரியமாதா நம்மை காத்திடுவாள் என்பது திண்ணம்.

உத்தரியமாதாவே! எங்களுக்காக உமது திருகுமாரனிடம்  பரிந்து பேசுவீராக!

வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை


1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் கன்னியாக்குமரி மாவட்டத்தில்
நட்டாலம் என்ற ஊரில் தேவசகாயம் பிறந்தார். உயர்சாதி வைதீக இந்து நாயர் குடும்பத்தில் பிறந்த இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நீலகண்டபிள்ளை. இவரது தந்தை கேரளாவில் உள்ள காயங்குளம் கிராமத்தையும், தாய் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியையும் சேர்ந்தவர்கள். இந்து சாஸ்திரங்களின்படி துறைப்படி மத நம்பிக்கைகளையும், பாரம்பரியங்களையும் உறுதியாகப் பினபற்றும்படி கற்பிக்கப்பட்டார்.
இளம்வயதில் அரசுப் பணியில் சேர்ந்த தேவநகாயம் பிள்ளை 28ஆம் வயதில் திருவாங்கூர் அரசில் பத்மநாபபுரம் அரண்மனையில் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். புத்மநாபபுரத்திற்கு அருகிலுள்ள உதயகிரி கோட்டையிலிருந்த மன்னரின் இராணுவ அதிகாரி பெநேடிச்டுஸ் தே டிலனாய் என்ற ஐரோப்பியர் மூலமாக இயேசுவின் அன்பை தேவசகாயம் பிள்ளை கேள்விப்பட்டார். யாருடைய கட்டாயமும் இல்லாமல் தன் சொந்த விருப்பத்தின்படி தேவசகாயம் பிள்ளை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். திருமுழுக்கின் போது இவர் “லாசரு” என்று அழைக்கப்பட்டார். அப்பெயர்க்கு தமிழிலும், மலையாளத்திலும் “தேவசகாயம்” என்று அர்த்தம்.
இன்றைய நெல்லை மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் கிராமத்திலுள்ள ஆலயத்தில் திருமுழுக்குப் பெற்ற தேவசகாயம் பிள்ளை அக்கிராமத்தைச் சேர்ந்த ஞானப்ப அம்மாள் என்ற பெண்ணை மணம் புரிந்தார். இவருடைய மனைவியும் குடும்பத்தில் சிலரும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். ஆனால் சிலமதவாதசக்திகளும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அவருடைய இனமக்களும் தேவசகாயம் பிள்ளை மீது பொய்க்குற்றங்களைச் சாட்டி பதவியைப் பறித்ததோடு, அன்றைய மாகாண எல்லையான ஆரல்வாய் மொழிக்கு அவரை அனுப்பிவிட்டனர்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு மதம் மாறியதற்காகக் கைது செய்யப்பட்ட இவர் கிறிஸ்துவை மறுதலிக்கும்படி பலமுறை எச்சரிக்கப்பட்டும் இவர் கிறிஸ்துவின் அன்பைவிட்டு விலகுவதில்லை என்று உறுதியுடன் இருந்தார் . இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவரை மரண தண்டனைக்காக சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும் புள்ளியும், செம் புள்ளி குத்தப்பட்டது. கைகள் பின்புறமாககட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கபட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரை கேவலப்படுத்தும் படியாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும் அவரை ஊர்ஊராக அழைத்து சென்றார்கள்.
புலியூர்குறிச்சி என்ற இடத்தலி தங்கியிருந்த இவர் முழங்கால்படியிட்டு செபித்த பாறையில் இன்றும் காணப்படும் ஒரு சிறுதுவாரத்தின் மூலமாகத் தண்ணீர் பீறிட்டு வரச் செய்து கர்த்தர் அவர் தாகத்தைத் தணித்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். பெருவிளை என்ற கிராமத்தில் அவர் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு வேப்பமரத்தின் இலைகள் சுகவீனத்திலிருந்து மக்களை விடுவித்தாகவும் நம்பப்படுகிறது. கடும் சித்திரவதைகள், சிறைவாசம், கொடுமைகள் எதுவும் தேவசகாயம் பிள்ளையின் விசுவாசத்தை அசைக்க முடியவில்லை. ஆரல்வாய்மொழி காடுகளுக்குள் கடத்தப்பட்ட இவர் ஆழ்ந்ததியானத்தில் ஈடுபட்டார். இந்த பரிசுத்தவானைக் காண அருகிலிருந்த கிராம மக்கள் வந்தனர்.
அன்றைய சமுதாயத்தின் ஒரு பிரிவினர் இவருக்கு விரோதமாகத் திட்டம் வகுத்தனர். போர்வீரர்கள் காடுகள் நிறைந்த மலைப்பகுதிக்குள் சென்று தேவசகாயம் பிள்ளையைத் துப்பாக்கியால் சுடடுக் கொல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்தத் துப்பாக்கிகள் வெடிக்காததால் அவரைக் கொல்ல முடியவில்லை. ஆனால் தேவசகாயம் பிள்ளை அத்துப்பாக்கிகளை தன் கையில் எடுத்து ஆசீர்வதித்து போர்வீரகளிடம் திருப்பி கொடுத்து “ நீங்கள் விரும்பினால் என்னை சுட்டுக் கொல்லுங்கள்” என்றாராம். போர்வீரர்கள் துப்பாக்கியை எடுத்து ஐந்து முறை அவரை நோக்கி சுட்டனர். இவ்வாறாக 1752ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியன்று போர் வீரர்களால் தேவசகாயம் பிள்ளை சுடடுக் கொல்லப்பட்டார். தான் இறப்பதற்கு முன்பாக தன்னை சந்தித்த குருவிடமிருந்து நற்கருணை பெற்றுகொண்டார். தேவசகாயம் பிள்ளையின் உடல் நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துவின் மேல் கொண்ட விசுவாவத்திற்காக ஒரு சிறந்த கிறித்தவர் வேதசாட்சியாக மரித்தார் என்று சரித்திரத்தின் பக்கங்கள் கூறுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டறு தூய சவேரியார் பேராலயத்தின் வலது பக்கம் இவரது புனிதர் பட்டத்திற்காக மன்றாடும் வகையில் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு புனிதர் பட்டம் கிடைக்க நாமும் ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

Source from:http://www.anbinmadal.org

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நாம் கோவிலுக்கு போகையில்


  • கல்வாரி பலியில் பங்கெடுக்க போகிறோம் என்கிற  கருத்து உங்களிடம் இருகிறதா?
  • அப்படி இருந்தால் இப்படி கட்டுபாடற்ற முறையில் போவிர்களா?
  • இப்படிப்பட்ட உடையோடு போவிர்களா?
  • எதற்காக ஒரு கேளிக்கை இடத்திருக்கு போவதை போல் உடை அணிகிறிர்கள்?
  • அலங்காரம் செய்கிறிர்கள்?
  • யாருக்காக இதை செய்கிறிர்கள்?
  • நீங்கள் கடவுளை வழிபடவும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிகவும்  கோவிலுக்கு வர வேண்டும்.
  • அடக்கவொடுக்கம் இச்சை அடக்கத்தோடு அல்லவா சர்வேசுரன் முன் இருக்க வேண்டும். 

S.A.G. St Anthony Guide -Miraculous letter deliveries




Miraculous mail deliveries in the lives of the Saints

S.A.G. (St. Anthony Guide) -The miracle letter deliveries of St Anthony of Padua 

It has become a popular practice for people to write "S.A.G." on their envelopes prior to posting them in the mail. The letters stand for "St Anthony Guide" because of the miraculous story below.

During his lifetime, God was pleased to work countless miracles in the life of the Franciscan Priest St. Anthony of Padua (1195-1231) and his reputation for sanctity was universally acclaimed. So in a sense it is not surprising then that immediately after the death of St. Anthony the miracles worked at his tomb were so prodigious that the Bishop of Padua petitioned the Vatican for his canonization. A judicial inquiry was instituted without delay, and by an exception regarded as unparalleled in history, on May 30, 1232 Pope Gregory IX, solemnly pronounced the decree of canonization, only eleven months after Anthony's death. His mother and two sisters who survived him had the extraordinary and extremely rare privilege of witnessing the canonization ceremony and joining in the festivities that followed the announcement. Those familiar with the canonisation process know that such a speedy canonization is unheard of in the Catholic Church, as the normal process requires much study into the life of the proposed Saint, and as such they are normally canonised decades and quite often centuries after their deaths. Such was the remarkable holiness of St Anthony.

The origin of the initials "S.A.G." and why they are often marked on envelopes is this:

A Spanish merchant named Antonio Dante left Spain for South America in 1729 to establish a business in Lima, Peru. His wife, who remained in Spain, wrote a number of letters to him without receiving a reply. After many months full of worry and with the utmost faith and simplicity, she brought a letter with her to the Church of St. Francis at Oviedo. [St Francis and St Anthony were close friends and companions during their lifetime.]

In the church there was a large statue of St. Anthony, and she placed a letter to her husband into his outstretched hand and prayed the following prayer with confidence, asking for his heavenly intercession:
"St. Anthony, I pray to thee; let this letter reach him and obtain for me a speedy reply."

The next day she returned to the church and saw that her letter was still there. Weeping in frustration that her letter had not been delivered, she attracted the attention of the Brother sacristan who listened to her story. Afterward, he told her that he had tried to remove the letter but could not, and he asked the lady if she would try to remove it. She tried, and she did so with ease.

The letter she retieved from the hand of the statue of St Anthony was not the one that she placed there the day before; it was a letter from her husband. As she removed the letter from his hand, three hundred golden coins fell from the sleeve of the statue.

Astonished, a number of the friars were called and ran to the scene and waited while the miraculous letter was opened. The letter was dated July 23, 1729 and read:

"My dearest wife. For some time I have been expecting a letter from you, and I have been greatly troubled and concerned at not hearing from you. But at last your letter has come, and given me joy. It was a Father of the Order of St. Francis who brought it to me. You complain that I have left your letters unanswered. I assure you that when I did not receive any from you I believed you must be dead, and so you may imagine my happiness at the arrival of your letter. I answer you now by the same religious Father, and send you three hundred golden crowns [coins], which should suffice for your support until my approaching return.

In the hope of soon being with you, I pray God for you, and I commend myself to my dear patron St. Anthony, and ardently desire that you may continue to send me tidings of yourself.
Your most affectionate,
Antonio Dante" 


The original letter, written in Spanish, is affectionately kept and preserved at the Franciscan Monastery in Oviedo. In memory of this event, the practice of writing S.A.G. (St. Anthony Guide) on letters has became popular, thereby placing the letters under the protection of St Anthony whom they trust will get the letter safely to its proper destination.

செபமலை முக்கியத்துவம்

செபமலை முக்கியத்துவம் 


     செபமாலை ஒரு பெரிய இரகசியமாய் இருக்கிறது. அதை தினமும் சொல்லுகிற அநேகர் கூட அந்த இரகசியத்தை அறியாதிருகிறார்கள்.  அர்ச் லூயிஸ் மரிய மோன்போர்ட்  "செபமாலையின் இரகசியம்" என்ற ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார். அர்ச். சாமி நாதர் காலம் தொட்டே மாதா, ஜெபமலையின் அறிய தன்மையை எடுத்து கூறிவந்திருக்கிறார்.
பாத்திமா மத, லூர்து மாதா, பொம்பெய்  மாதா ஆகிய காட்சிகளில் எல்லாம் மாதா ஜெபமலையுடன் காணப்படுகிறார். தன் பெயரையே ஜெபமாலை மாதா என்று அறிவித்து இருக்கிறார். முன்பு இல்லாத வலிமையை இப்போது ஜெபமாலைக்கு அளிப்பதாக லூசியா வழியாக கூறியிருக்கிறார். 
"ஜெபமாலையால் தீர்க்கப்படாத உலக பிரச்சனைகள் எதுவும் இல்லை.  என்று சகோதரி லூசியா கூறுகிறாள். நமக்கு மோட்சத்தை வாக்களிக்கிற முதல் சனி பரிகார பக்தி ஒரு முக்கிய அம்சமாக மாதா ஜெபமாலையை வைத்து இருக்கிறர்கள்.

வியாழன், 5 செப்டம்பர், 2013

விசுவாச ஆண்டா? நம்பிக்கை ஆண்டா?

விசுவாச ஆண்டா? நம்பிக்கை ஆண்டா?


கேள்வி: வணக்கம். தங்களது நவம்பர் – டிசம்பர் 2011 இதழில் உங்கள் தலையங்கத்தை வாசித்தேன். அதில் ‘உண்மையில் விசுவாசம் வேறு, நம்பிக்கை வேறு. இரண்டும் வௌ;வேறு பொருள் கொண்டது” என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இதைத் தயவு செய்து இன்னும் அதிகமாக விளக்க முடியுமா?

பதில்: ஒரு செயல் அதன் பொருளால் தீர்மானிக்கப்படுகிறது. (Habits are determined by its object) எந்த ஒரு வழக்கத்தையும் சார்ந்த பொருள்களின் வகையானது, அந்த பொருளின் ஒழுங்கு சார்ந்த தன்மையைப் பொறுத்ததாக இருக்கிறது. (Cardinal Billot, De Virtutibus Infusis, ed, 1905 Rome, pg.84) பார்க்கப்படும் பொருள்கள் பார்வையைத் தீர்மானிக்கின்றன. பார்ப்பதற்கு எதுவுமில்லை என்றால் பார்வை இல்லை என்று அர்த்தம். மரம் நடுதல் என்ற செயலில் மரக்கன்றுகள் இல்லை என்றால் அங்கே மரம்; நடுதல் என்ற செயல் இருக்க முடியாது. இது மிகச் சாதாரணமான விஷயமாகத் தோன்றலாம். ஆனாலும் மிகச் சாதாரணமான இவ்விஷயங்களில் நாம் தவறுவதால்தான் பெரிய தவறுகளைச் செய்கிறோம். எல்லாத் தப்பறைகளுமே தொடக்கத்தில் சத்தியத்திலிருந்து சிறிதே விலகி இருப்பினும் கடைசியில் அதன் நிலை?
அதே போன்றுதான் புண்ணியங்களும். புண்ணியங்கள் என்பவை நற்பழக்கங்களைக் குறிக்கும். (good habits) ஒவ்வொரு புண்ணியத்திற்கும் தனி ஒரு பொருள் (Object) உண்டு. அப்படி இருப்பதால்தான் அது தனிப் புண்ணியமாக இருக்கிறது. இப்புண்ணியங்கள் இரு வகைப்படும்.
  1. சுபாவத்திற்கு மேலான புண்ணியங்கள்
  2. சுபாவமான புண்ணியங்கள்
மற்ற தலையான புண்ணியங்களுக்கும் தேவ சம்பந்தமான புண்ணியங்களுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. தேவ சம்பந்தமான புண்ணியங்கள் நேரடியாகத் தங்களுடைய நோக்கமாகக் கடவுளை கொண்டிருப்பதால், இவை கடவுள் சம்பந்தமான (Theos-logos) புண்ணியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகளின் எண்ணிக்கை மூன்று ஆகும்.
‘ இப்போது விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் இம்மூன்றும் நிலை கொண்டிருக்கின்றன” என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார். (1கொரி.13:13) இந்த வாக்கியத்தில் அவர் விசுவாசத்தையும், நம்பிக்கையையும், வேறுப்படுத்திக் காட்டுகிறார். ஏன்? ஏனென்றால் இவை ஒவ்வொன்றும் தனித்தனி பொருள்களைக் கொண்டுள்ளன.
நம்பிக்கை என்பது கடவுள் நம்முடைய கதியை அடைய நமக்கு வேண்டியவற்றைத் தந்தருள்வார் என்று நம் சித்தத்தை உறுதிப்படுத்தும் ஒரு தேவ சம்பந்தமான புண்ணியமாகும். இது விசுவாசத்திலிருந்து முற்றிலுமாக மாறுப்பட்டது.
விசுவாசம் என்பது கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை ஏற்றுக்கொள்வது. இதனை மேலும் தெளிவுப்படுத்த வேண்டுமானால், இவற்றை ஒவ்வொன்றாக ஆராய வேண்டும். முதலில் விசுவாசம் என்றால் என்ன?
சர்வேசுரனுடைய தெய்வீக அதிகாரத்தின் காரணமாக, அவரால் வெளிப்படுத்தப்பட்டுள்ள எல்லாவற்றையும் உறுதியாக சம்மதித்து ஏற்றுக் கொள்ளும்படி மனதை ஆயத்தப்படுத்துகிற ஒரு சுபாவத்துக்கு மேலானதும், தேவ சம்பந்தமானதுமாகிய புண்ணியமே விசுவாசம் ஆகும். இது இரு வகைப்படும்.
1. உயிருள்ள விசுவாசம்: தேவ சிநேகத்தினால் நமக்குள்ள விசுவாசம். இவ்விசுவாசம்தான் நமது இரட்சண்யத்திற்கு ஏதுவாய் இருக்கிறது. தேவ இஷ்டப்பிரசாத நிலையில் இருப்பவர்களிடம் இந்த வகை விசுவாசம் இருக்கிறது. நாம் சாவான பாவம் கட்டிக் கொள்ளும்போது இதை இழந்து போகிறோம். அதாவது, தேவ சிநேகம் இழக்கப்படும்போதுää உயிருள்ள விசுவாசமும் இழக்கப்படுகிறது.
2. உயிரற்ற விசுவாசம்: பாவிகளிடம் இருப்பது. தேவ சிநேகம் இல்லாமலும் விசுவாசம் ஒருவனிடம் நிலைத்திருப்பது சாத்தியமே. ‘மலைகளைப் பெயர்க்கத்தக்க எவ்வித விசுவாசத்தையும் உடையவனாயிருந்தாலும், என்னிலே தேவ சிநேகம் இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை” (1கொரி.13:2) தேவ சிநேகம் இல்லாத இந்த விசுவாசம் பயனற்றது.
விசுவாசம் என்பது கடவுள் வெளிப்படுத்தினவைகளை முழுமையாக ஏற்றுக் கொள்வது. இந்தப் புண்ணியத்தைக் கொண்டு விசுவாசப் பிரமாணத்தில் உள்ளவற்றை, திருச்சபை போதிப்பவற்றை (தேவரீர் தாமே திருச்சபைக்கு அறிவித்திருக்கிற படியினால்) நாம் உறுதியாக விசுவசிக்கிறோம்.
இதனை சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இதுவே அவர்களுடைய விசுவாச இழப்புக்குக் காரணமாகவும் இருக்கிறது. உதாரணமாக:
லூத்தர்: விசுவாசம் என்பது தேவ இரக்கத்தில் நம்பிக்கை கொள்வதாகும். (இதை இப்போது கத்தோலிக்கர்களும் ஏற்றுக்கொள்வது வருத்தத்திற்குரியது.)
பகுத்தறிவாளர்கள்: விசுவாசம் என்பது நம் சொந்த முயற்சியால் கடவுளைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளக்கூடிய காரியங்களாகும்.
நவீனர்கள்: விசுவாசம் என்பது கடவுளின் அவசியத்தைப் பற்றிய ஒருவிதமான உள்ளார்ந்த ஏக்கம் ஆகும்.
எனவே விசுவாசம் வேறு, நம்பிக்கை வேறு. சுவிசேஷத்தில் சில சமயங்களில் நமதாண்டவர் கூறும் விசுவாசம் என்பது நாம் விசுவாசத்தோடு செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
ஆகவே, அன்புள்ள வாசகர்களே, நம் விசுவாசப் பிரமாணத்தில் எடுத்துரைக்கப்படும் விதத்திலும், நம் ஞானோபதேசங்களில் விளக்கப்படுகிறபடியும், நாம் நம் விசுவாசத்தைக் கற்றுக்கொள்வோமாக. ஏனெனில், பரிசுத்த வேதாகமம் சொல்வது போல, விசுவாசம் இல்லாமல் கடவுளைப் பிரியப்படுத்த நம்மால் இயலாது. எனவே இந்த விசுவாச ஆண்டில் மெய்யான விசுவாசம் நம்மிலும் மற்றவர்களிடத்திலும் வளர தேவ தாயை மன்றாடுவோமாக.

Benedicamus Domino
சங். திரேஷியன் பாபு
அர்ச். பத்தாம் பத்திநாதர் சபை
Reference: Summa Theologica, IIa, IIae, q, 1-9
Garriogou Lagarrange OP, De Fide, edition Paris, 1948
Tanquerey, Synopsis Theologicae, Volume 1, De Objecto Fidei, cap 1. Pg.14-67 (edition Rome)

புதன், 4 செப்டம்பர், 2013

இருவகையான வியாக்கியானங்கள்

இருவகையான வியாக்கியானங்கள்

(சங். திரேஷியன் பாபு – அர்ச். பத்தாம் பத்திநாதர் சபை)

வருகிற அக்டோபர் 11-ம் தேதி இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஆரம்பித்த 50- ஆண்டு விழாவை பகிரங்கமாக கொண்டாட வத்திக்கானில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பொன் விழா நிகழ்ச்சியை நினைவூட்டும் வகையில் இந்த ஆண்டை “விசுவாச ஆண்டாக” பாப்பரசர் அறிவித்துள்ளார். ஆனால் இச்சங்கம் குறித்தான விவாதங்கள் இன்னும் முடிந்தபாடில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை! விவாதங்கள் என்றவுடனே பாரம்பரியத்திற்கும், நவீனத்திற்கும் இடையிலான கருத்து பரிமாற்றம் என்று நினைக்கத் தோன்றும் அல்லது பாரம்பரியத்தை பற்றி நிற்பவர்கள் நவீனர்களின் நவீனத்தை எதிர்த்து நிற்பது என்றும் எண்ணத் தோன்றும். ஆனால் இங்கே குறிப்பிடப்படுகின்ற விவாதங்கள் நவீன திருச்சபைக்குள்ளே இரண்டு விதமான கருத்துக்களின் ஒன்றோடொன்றான மோதல்களின் வெளிப்பாடுகள் ஆகும். ஆம்! நவீன திருச்சபைக்குள்ளே இரண்டு குழுக்களாகப் பிரிந்து தங்களுடைய வழிமுறையே சரி என்று வாதாடும் வேடிக்கைகள் தான் இங்கே குறிப்பிடப்படுகின்றன. இந்த ‘வார்த்தை வாக்குவாதங்கள் புத்தகமாய், கட்டுரைகளாய், பேட்டிகளாய், இணைய தளங்களாய் வெளிவந்து கொண்டே இருக்கின்றன! தனக்குள் பிரிந்து போன அரசு நிலைத்திருக்க முடியுமா? அது போலத்தான் திருச்சபையின் நவீனமும்!
2-ம் வத்திக்கான் சங்கத்தின் சிறப்பே அதன் முரண்பாடுதான்!! நவீன மனிதனுக்குப் புரியும் மொழியில் பேச போவதாய் இயற்றப்பட்ட ஏடுகள் அவனுக்கு தௌவாய் விளங்கவில்லை. வெளியிடப்பட்ட சங்க ஏடுகளோ குழப்பங்களின் மூட்டை! அவற்றை எப்படி விளக்க வேண்டும் என்பதே இன்றைக்கும் பல ஆய்வுகளின் பொருளாயிருந்து வருகிறது. வத்திக்கானிலிருந்து வரும் செய்திகளில “இரு வகை வியாக்கியான முறை” பற்றிய தலைப்பு அடிக்கடி இடம் பெறுகிறது. அவை என்ன? அவற்றின் சாரம் என்ன? என்பது பற்றி சுருக்கமாகக் காண்போம்.
I. முறிவு வியாக்கியான முறை (Hermenteutic of Rupture)
II. தொடர்ச்சி வியாக்கியான முறை (Hermenteutic of Continuity)


I. முறிவு வியாக்கியான முறை
இது சங்க ஏடுகளை எப்படி விளக்க வேண்டும் என்பதில் கையாளப்படும் முதல் முறை (இம்முறையே பல இடங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.)
இத்தாலியில், போலோஞா நகரில் வாழ்ந்த டான் ஜோசப் டோசெட்டி (Don Giussepe Dosseti) என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் அவருடைய சீடரான Alberigo Gisussepe என்பவரால் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வியாக்கியான முறை கொண்டு அவர் எழுதிய இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வரலாறு என்ற 5 பாகங்களைக் கொண்ட மிகப் பெரிய படைப்பு, நவீனர்களின் வெற்றிக்கு மிகவும் உதவியாய் இருந்து வருகிறது. இது தன்னிலே புரட்சிகரமான எண்ணங்களைக் கொண்டது.
2-ம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின் இருக்கும் சங்க சபைக்கும், அதற்கு முன்பாக இருந்து வந்த திருச்சபைக்கும் (?)உள்ள உறவு முறிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் தான் சங்கத்தை மொழிபெயர்க்க வேண்டும் அல்லது வியாக்கியானம் செய்ய வேண்டும் என்ற முற்போக்கு எண்ணம் கொண்டது.
இவர்களது சித்தாந்தத்தின்படி 2-ம் வத்திக்கான் சங்கம் திருச்சபையில் நடந்த “ஒரு புதிய பெந்தேகோஸ்து” ஆகும். (பாப்பு 6-ம் சின்னப்பரின் கூற்று). எனவே திருச்சபை இச்சங்கத்திற்கு முற்றிலும் இசைந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பழையனவைகளைத் தள்ளி, புதியனவைகளை எழுப்பும் நவீன திறன் இது!
இத்தகையோர்களின் (நவீனர்கள்) செய்கைளால் திருச்சபையில் நடந்தேறி முடிந்த விளைவுகளில் சில :
- பாரம்பரியத் திருச்சபையின்படி குருக்கள் வேறு, விசுவாசிகள் வேறு. அவர்களின் அந்தஸ்தும் கடமைகளும் வௌ;வேறானவை. ஆனால், புதிய திருச்சபையிலோ விசுவாசிகள் குருக்களின் பணிகளையும், சாதாரண விசுவாசிகளாக தங்களை மாற்றிக் கொண்ட குருக்களாக எல்லாம் கலந்த அந்தஸ்து உருவாக்கப்பட்டு வருகிறது.
- திவ்விய பலிபூசை நமதாண்டவரின் கல்வாரி பலி என்ற பாரம்பரிய விசுவாசம் மாற்றப்பட்டு, இப்போது நவீனத்தில் திருப்பலி வெறும் பகிர்ந்துகொள்ளும் இறைமக்களின் கூட்டமாய் மாறிப்போனது. குருவானவர் இக்கூட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்துபவராகிப் போனார்!
- பாரம்பரிய திருச்சபை, ஆன்ம இரட்சண்யமே மனிதனின் இலக்கு என்கிறது@ நவீனத்தில் இந்நிலை மாறி ஆன்ம இரட்சண்யம் என்ற கருத்து மறைந்து எங்கும் மனிதம், உலகில் நீதியும், அமைதியும்தான் மனித இலக்காகிவிட்டது!
- பாரம்பரிய திருச்சபை நமதாண்டவர் சேசுக்கிறீஸ்துநாதரை மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சர்வேசுரன் என்று போதிக்கிறது. ஆனால் 2-ம் வத்திக்கான் சங்கத்துக்குப்பின் இருக்கும், “சங்கச்சபையோ” நமதாண்டவர் சமுதாய சீர்திருத்தவாதி, புரட்சி வீரர் என்று புது வடிவம் கொடுத்து வருகிறது இவர்களைப் பொறுத்த மட்டில் திருச்சபையில் நிகழ்ந்து வரும் குழப்பங்கள் தங்கள் வெற்றியின் அடையாளம். பழையன களையப்படும் (முறிக்கப்படும்) போது ஏற்படும் வலிதான் நாம் இன்று உணர்கிற நெருக்கடி என்றும், இது முடியும் பட்சத்தில் புதிய திருச்சபை எவ்வித பழையனவைகள் இல்லாமல் காட்சியளிக்கும் (முற்றிலும் புதிய நவீன திருச்சபை!) என்பதே இவர்களுடைய கருத்து (கர்தினால் மர்தினியின் கருத்து – மிலான் முந்தைய அதிமேற்றிராசன அதிமேற்றிராணியார்). மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை, அதை திருச்சபையிலும் காண வேண்டும் என்கின்றனர் இத்தகையோர். ஆனால் மாறாத சத்தியங்களை – திருச்சபையை எப்படி மாற்ற முடியும்?! சீர்திருத்தம் என்ற பெயரில் அவர்கள் மாற்றி அமைத்ததன் விளைவுகளே இன்று நாம் காணும் சீர்கேடுகள்.
II. தொடர்ச்சி வியாக்கியான முறை
2-ம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்பு இருந்த திருச்சபை போதனைகளுக்கும், அதன் பின் வந்த போதனைகளுக்கும், இடையில் எவ்வித பிளவோ – உடன்பாடின்மையோ இல்லை என்பது இக்கோட்பாடு.
2-ம் வத்திக்கான் சங்கம் – இரண்டாயிரம் ஆண்டு கால திருச்சபையின் ஒருமித்த வளர்ச்சி என்றும், சங்கத்திற்கு முன் இருந்த அதே உண்மைகளை மீண்டும் இக்கால மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் நவீனப்படுத்தி, வியாக்கியானம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள் இக்குழுவினர். எனவேதான், சங்கத்தினை கலாச்சார விழிப்புணர்வுடன் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றும், சங்கத்திற்குப் பிறகு வாழும் திருச்சபை புது திருச்சபையல்ல – அது புதுப்பிக்கப்பட்ட ஒன்று என்பது இவர்களது வாதம்.
பாப்பரசர் 2-ம் அருள் சின்னப்பரின் காலத்தில் சிறுபான்மையினராய் இருந்த இக்கோட்பாட்டினர், தற்போதைய பாப்புவின் ஆதரவுடன் மீண்டும் தழைத்தோங்க தொடங்கி உள்ளனர். தான் ஆட்சிப் பீடத்தில் ஏறியவுடன் தன்னுடைய கர்தினால்களுக்கு அளித்த உரையில் தன்னுடைய திட்டங்களை வெளிப்படுத்தினார். (cf Discourse of Pope Benedict XVI, Dec22, 2005, www.vatican.va) இது மிகவும் முக்கியமான உரை. தன்னுடைய எதிர்கால செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று முன்னரே அறிவித்த முன்னுரை இது!! இவ்வுரையில் வத்திக்கான் சங்கத்திற்கு ஒரேயொரு விளக்கமுறைதான் உண்டு என்றும், அது ‘தொடர்ச்சிமுறை’ தான் என்றும், தெளிவாகக் கூறினார். இவ்வியாக்கியான முறையை நடைமுறைப்படுத்துவதுதான் தன்னுடைய முதற்பணியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இது சரிதானா? என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் – உண்மை புரியும். தவறுகள் புலப்படும். இவ்வழியும் ஆபத்தானது என்பது தெரியும். “சரியான வழியில் சிந்திக்காததால் விளையும் விளைவு நம் விசுவாசத்திற்கு எதிரானது” – இவர்கள் கூறுவது போல் தவறுகளை சத்தியத்தின் தொடர்ச்சி என்று எப்படி கொள்ள முடியும்? இதனை ஒரு எடுத்துக்காட்டினால் விளக்குவோம். இதுவரை சமய ஒன்றிப்பு போக்கினை கண்டித்து வந்த (பாரம்பரிய) திருச்சபையின் போதனைகளும், அவற்றை ஆதரிக்கும் இப்போதை (நவீன) போதனைகளும் சத்தியத்தின் தொடர்ச்சியான மலர்ச்சியா? “கத்.கிறீஸ்தவ வேதம் மட்டும்தான் இரட்சண்யப்பாதை” என்ற பாரம்பரிய விசுவாசக் கொள்கையின் தொடர்ச்சியா – எல்லா மதத்திலும் இரட்சண்யம் உண்டு என்ற புதிய படிப்பினை? இல்லை. இருக்கவே முடியாது.
இவ்வாறு கண்முன் நிகழும் முரண்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுப்பது குற்றம் என்ற சொல்லால் என்னவென்று கூறுவது? “புதுப்பிக்கப்பட்ட திருச்சபை” என்ற விளக்கம் அளிக்கும் இவர்கள், இத்திருச்சபையில் நிலவும் குழப்பத்திற்கு பதில் அளிக்க மறுப்பதேன்? கசப்பான உண்மை என்னவென்றால், திருச்சபையில் நிகழும் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் முறையற்ற சுதந்திரவாத நவீன கொள்கையினால் ஊறிப்போயிருக்கும் 2-ம் வத்திக்கான் சங்கமே. சங்கத்திற்குப் பின் நடந்தவைகள் – சங்கத்திற்கு முன் கடைபிடிக்கப்பட்டு வந்தவைகளின் தொடர்ச்சி அல்ல என்பது தான் மறுக்கமுடியாத உண்மை!
முடிவுரை :
நாம் வாழும் இந்நெருக்கடி நிலை, இவ்விரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதின் மூலம் முற்றுப்பெறப்போவதில்லை. மாறாக தவறுகளை – பதிதங்களைக் கண்டித்து உண்மை போதகத்தை மீண்டும் போதிப்பதால் மட்டுமே தான் தீர்வு காண முடியும். தவறாவரம் என்பது ஏதோ சில நிறுவனங்களுக்கோ, குருக்களுக்கோ அளிக்கப்பட்ட கொடையல்ல. ஆனால் கிறீஸ்துநாதரின் பிரதிநிதியான பாப்பரசருக்கு மட்டுமே, தரப்பட்ட தனி வரப்பிரசாதம். அதை அவர் பயன்படுத்தி சத்தியம் என்னும் தீபத்தை பிறர் காணும் வகையில் கலங்கரை விளக்கத்தில் ஏற்றும்போதுதான் தப்பறைகள் என்னும் கடலில் வழி தவறிய ஆன்மாக்கள் மீண்டும் சத்தியமெனும் கரை வந்து சேர முடியும்! அந்நாள் விரைவில் நம் கண்களுக்குப் புலப்படும் என்று விசுவாசம் கொள்வோம்.
இரு வியாக்கியான முறையில் எது சிறந்தது என்ற விவாதமுறையை தள்ளி வைத்து, அழியா கத்தோலிக்க விசுவாசம் எது? அதை மட்டும் விசுவாசிகளுக்கு தரவேண்டும் என்ற முயற்சியில் இவர்கள் இயங்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

மங்கள வார்த்தை

மங்கள வார்த்தை

(சுருக்கமான வியாக்கியானம்)
            சர்வேசுரன் அனைத்தையும் சிறப்புற செய்வார் – என்றும் இவை அனைத்தும் நமது படிப்பினைக்காக தரப்பட்டது என்றும் நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். அதே போன்றுதான் மங்களவார்த்தை நிகழ்ச்சியின்போதும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு வார்த்தைகளும், சிறப்புற கோர்க்கப்பட்டுள்ளது. அதனை அர்ச். லூக்காஸ் எழுதிய சுவிஷேத்தின் 1-ம் அதிகாரத்திலிருந்து காண்போம்.

இங்கே மூன்று காரியங்கள் அடங்கியுள்ளன.

1. மாதாவின் கவனத்தை தன்னிடம் திருப்ப தேவதூதன் கூறியது.
1.1. வித்தியாசமான முறையில் வாழ்த்தியது  பிரியதத்ததினாலே பூரணமானவளே
1.2. அதன் அர்த்தம்  கடவுள் உம்முடனே
1.3. அதன் விளைவு  ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.
2. மனிதாவதார இரகசியத்தை வெளிப்படுத்தியது.

2.1. நடக்கப்போவதை முன்னறிவித்தல்  இதோ, உமது உதிரத்தல் கெற்பந்தரித்து, ஓர் குமாரனைப் பெறுவீர்…(லூக்.1:31)
2.2. அவர் யார்  அவர் பெரியவராயிருப்பார் … அவருடைய அரசாட்சிக்கு முடிவு இராது என்றார். (லூக்.1:32,33)

3. இது கடவுளின் செயல் என்பதை நிரூபித்தல்
3.1. எலிசபெத்தின் உதாரணம்  உமக்குப் பந்துவாகிய எலிசபெத்… மலடி எனப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
3.2. உதாரணம் எடுத்துரைக்கும் உண்மை ..ஏனெனில் சர்வேசுரனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.

பதிதங்களை வென்ற அர்ச். சூசையப்பர்

பதிதங்களை வென்ற அர்ச். சூசையப்பர் 


        அமெரிக்காவில் நியூயார்க் நகரப் பகுதியில் வெஸ்ட்மௌண்ட் என்ற ஊரில் ஒரு விசுவாசமுள்ள கிறிஸ்தவ குடும்பம் இருந்தது. ந்த தம்பதினருக்கு  இரண்டு மகன்கள் இருந்தனர். மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் நாளடைவில் விசுவாச தளர்ச்சி ஏற்பட்டது. மனைவியும் முதல் மகனும் புராட்டஸ்டாண்டு  பதித மார்க்கத்தில் சேர்ந்து விசுவாசத்தை மறுதலித்தனர். குடும்ப தலைவனோ பெந்தேகோஸ் சபையில் சேர்ந்தான். ஆனால் இளைய மகன் மட்டும் தனது விசுவாசத்தில் உறுதியாக இருந்து தனது குடும்பம் மீண்டும் மனம் திரும்பி கத்தோலிக்க விசுவாசத்திற்கு வர வேண்டும் என்று அர்ச் சூசையப்பரை மன்றாடி வந்தான். 

      ஒரு சமயம் குடும்ப தலைவன் வேலசெய்த இரும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிறு காயம் ஏற்பட்டு  அது நாளடைவில் பெரிதாகி நடக்க முடியாத நிலைக்கு வந்து விட்டான் . மனைவியோ தனது கணவன் குணமாக புராட்டஸ்டாண்டு   போதகர்களை வைத்து செபித்து வந்தால். கணவனோ தான் சார்ந்து இருந்த பெந்தேகோஸ் பதித ஆட்களை செபிக்க அழைத்தான். அவர்கள் செபித்து எந்த மாற்றமும் இல்லை. 

ஆனால்  அவனது இளைய மகனோ தன் குடும்பத்தை பதித மார்க்கத்திலிருந்தும் தன் தந்தை குணம் அடைய வேண்டும் என்றும் அர்ச்  சூசையப்பரை மன்றாடினான். ஆயினும் நோய் முற்றி காலை எடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்து விட்டனர்.விசுவாசமுள்ள இளைய மகனோ கடைசியாக ஒரு முறை எல்லோரும் சேர்ந்து அர்ச் சூசையப்பர் வழியாக நமதாண்டவரை மன்றடலாம்  அவர்களிடம் கூறி அவர்களை இணங்க வைத்தான்.

அவர்களும் எதோ ஒரு உந்துதலில் அவனுடன் சேர்ந்து விசுவாச நம்பிக்கையோடு சூசையப்பரிடம் நவநாள் செபம் செய்து வந்தனர். ஒரு சில நாட்களில் அவரது நோயின் வேகம் குறைந்து, அந்த புண் குணமாகி வருவதை கண்டனர். ஒரு மாதத்திற்குள் நன்கு குணமாகி நடமாட முடிகிற அளவுக்கு வந்து விட்டார். 

குடும்பத்தில் எல்லோரும் சத்திய விசுவாசத்தை மறுதலித்தர்காக  மனம் வருந்தி தங்களை பதிததிலிருந்து  காப்பற்றிய தந்தை அர்ச்  சூசையப்பருக்கு நன்றி செலுத்தி உத்தம கத்தோலிக்கர்களாக வாழ்ந்தனர்.