Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 4 செப்டம்பர், 2013

பதிதங்களை வென்ற அர்ச். சூசையப்பர்

பதிதங்களை வென்ற அர்ச். சூசையப்பர் 


        அமெரிக்காவில் நியூயார்க் நகரப் பகுதியில் வெஸ்ட்மௌண்ட் என்ற ஊரில் ஒரு விசுவாசமுள்ள கிறிஸ்தவ குடும்பம் இருந்தது. ந்த தம்பதினருக்கு  இரண்டு மகன்கள் இருந்தனர். மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் நாளடைவில் விசுவாச தளர்ச்சி ஏற்பட்டது. மனைவியும் முதல் மகனும் புராட்டஸ்டாண்டு  பதித மார்க்கத்தில் சேர்ந்து விசுவாசத்தை மறுதலித்தனர். குடும்ப தலைவனோ பெந்தேகோஸ் சபையில் சேர்ந்தான். ஆனால் இளைய மகன் மட்டும் தனது விசுவாசத்தில் உறுதியாக இருந்து தனது குடும்பம் மீண்டும் மனம் திரும்பி கத்தோலிக்க விசுவாசத்திற்கு வர வேண்டும் என்று அர்ச் சூசையப்பரை மன்றாடி வந்தான். 

      ஒரு சமயம் குடும்ப தலைவன் வேலசெய்த இரும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிறு காயம் ஏற்பட்டு  அது நாளடைவில் பெரிதாகி நடக்க முடியாத நிலைக்கு வந்து விட்டான் . மனைவியோ தனது கணவன் குணமாக புராட்டஸ்டாண்டு   போதகர்களை வைத்து செபித்து வந்தால். கணவனோ தான் சார்ந்து இருந்த பெந்தேகோஸ் பதித ஆட்களை செபிக்க அழைத்தான். அவர்கள் செபித்து எந்த மாற்றமும் இல்லை. 

ஆனால்  அவனது இளைய மகனோ தன் குடும்பத்தை பதித மார்க்கத்திலிருந்தும் தன் தந்தை குணம் அடைய வேண்டும் என்றும் அர்ச்  சூசையப்பரை மன்றாடினான். ஆயினும் நோய் முற்றி காலை எடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்து விட்டனர்.விசுவாசமுள்ள இளைய மகனோ கடைசியாக ஒரு முறை எல்லோரும் சேர்ந்து அர்ச் சூசையப்பர் வழியாக நமதாண்டவரை மன்றடலாம்  அவர்களிடம் கூறி அவர்களை இணங்க வைத்தான்.

அவர்களும் எதோ ஒரு உந்துதலில் அவனுடன் சேர்ந்து விசுவாச நம்பிக்கையோடு சூசையப்பரிடம் நவநாள் செபம் செய்து வந்தனர். ஒரு சில நாட்களில் அவரது நோயின் வேகம் குறைந்து, அந்த புண் குணமாகி வருவதை கண்டனர். ஒரு மாதத்திற்குள் நன்கு குணமாகி நடமாட முடிகிற அளவுக்கு வந்து விட்டார். 

குடும்பத்தில் எல்லோரும் சத்திய விசுவாசத்தை மறுதலித்தர்காக  மனம் வருந்தி தங்களை பதிததிலிருந்து  காப்பற்றிய தந்தை அர்ச்  சூசையப்பருக்கு நன்றி செலுத்தி உத்தம கத்தோலிக்கர்களாக வாழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக