Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 7 செப்டம்பர், 2013

ஜெபமாலை வரலாறு



ஆதிகால திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே அப்போஸ்தலர்களும் , இதர விசுவாசிகளும் கர்த்தர் கற்பித்த செபத்தையும் அருள்நிறைந்த மரியாயே  என்ற வானதூதரின் வாழ்த்துச் செபத்தையும் உருக்கமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால் இன்று செபிக்கும் கன்னிமரியின் செபமாலையை, கி.பி. 1214ல் தான் அர்ச்  தோமினிக் வழியாக அன்னை மரியாள் திருச்சபைக்கு வழங்கினார்கள். அக்காலத்தில் ஆல் பிஜென்சியன்ஸ் என்ற முரண்பாட்டுக் கொள்கையினர் மனம் மாறி திருச்சபைக்குத் திரும்பி வரவேண்டுமென்று அர்ச்  தோமினிக் செபித்து வந்தார். பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு காட்டுக்குள் சென்று பாவிகள் மனந்திரும்ப வேண்டி செபித்தார். மூன்றாம் நாள் செபத்தின் தவத்தின் விளைவால் உணர்வற்ற நிலையில் இருந்தார். அப்பொழுது அன்னை மரியாள் அர்ச்  தோமனிக்குக் காட்சி தந்து எதிரிகளை முரண்பாட்டுக் கொள்கையினர்களை, பாவிகளை முறியடிக்கும் ஒரே கருவி செபமாலை என்று கற்றுக் கொடுத்தார்கள்.

அந்த நாளிலிருந்து தனது வாழ்நாள் முழுவதும் அர்ச் தோமனிக் செபமாலையின் புகழையையும் பெருமையையும் தனது போதனைகளின் வழியாகப் போதித்து அறிக்கையிட்டு வந்தார்.

படிப்பறியாத பாமரமக்கள் தாவீது எழுதிய 150 திருப்பாக்களையும் செபிக்க முடியாத வேளையில், கன்னிமரியாள் கொடுத்த செபமாலை பேருதவியாக இருந்தது.செபமாலையில் நாம் செபிக்கும் 150 அருள் நிறைந்த மரியாயே செபம் 150 திருப்பாக்களை ஒத்ததாக அமைந்திருப்பதை நாம் கருத்தில் கொள்வது நல்லது.


செபமாலையின் மகிமையைப் பற்றி அன்னை மரியாள் பலருக்குத் தோன்றி விளக்கியுள்ளார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அருள் நிறைந்த மரியாயே என்ற செபத்ததை சொல்லும்பொழுது எனக்கு ஒரு ரோசாப்பூவை அன்பளிப்பாக அளிக்கின்றீர்கள். என்கிறார்கள். செபமாலையை முழுமையாக எல்லா மறையுண்மைகளையும் தியானித்து செபிக்கும் பொமுது எனக்கும் இயேசுவுக்கும் ரோசாக்களைக் கோர்த்த கிரீடமாக நீங்கள் கொடுக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளார்கள். ரோசாமலர் பூக்களின் அரசி. ஆகவே செபமாலை என்பது முக்கியமான பக்தி முயற்சிகளின் ரோசாமலர் என்பது தெளிவாகப் புலனாகும்.


Source from:http://www.anbinmadal.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக