Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 5 செப்டம்பர், 2013

விசுவாச ஆண்டா? நம்பிக்கை ஆண்டா?

விசுவாச ஆண்டா? நம்பிக்கை ஆண்டா?


கேள்வி: வணக்கம். தங்களது நவம்பர் – டிசம்பர் 2011 இதழில் உங்கள் தலையங்கத்தை வாசித்தேன். அதில் ‘உண்மையில் விசுவாசம் வேறு, நம்பிக்கை வேறு. இரண்டும் வௌ;வேறு பொருள் கொண்டது” என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இதைத் தயவு செய்து இன்னும் அதிகமாக விளக்க முடியுமா?

பதில்: ஒரு செயல் அதன் பொருளால் தீர்மானிக்கப்படுகிறது. (Habits are determined by its object) எந்த ஒரு வழக்கத்தையும் சார்ந்த பொருள்களின் வகையானது, அந்த பொருளின் ஒழுங்கு சார்ந்த தன்மையைப் பொறுத்ததாக இருக்கிறது. (Cardinal Billot, De Virtutibus Infusis, ed, 1905 Rome, pg.84) பார்க்கப்படும் பொருள்கள் பார்வையைத் தீர்மானிக்கின்றன. பார்ப்பதற்கு எதுவுமில்லை என்றால் பார்வை இல்லை என்று அர்த்தம். மரம் நடுதல் என்ற செயலில் மரக்கன்றுகள் இல்லை என்றால் அங்கே மரம்; நடுதல் என்ற செயல் இருக்க முடியாது. இது மிகச் சாதாரணமான விஷயமாகத் தோன்றலாம். ஆனாலும் மிகச் சாதாரணமான இவ்விஷயங்களில் நாம் தவறுவதால்தான் பெரிய தவறுகளைச் செய்கிறோம். எல்லாத் தப்பறைகளுமே தொடக்கத்தில் சத்தியத்திலிருந்து சிறிதே விலகி இருப்பினும் கடைசியில் அதன் நிலை?
அதே போன்றுதான் புண்ணியங்களும். புண்ணியங்கள் என்பவை நற்பழக்கங்களைக் குறிக்கும். (good habits) ஒவ்வொரு புண்ணியத்திற்கும் தனி ஒரு பொருள் (Object) உண்டு. அப்படி இருப்பதால்தான் அது தனிப் புண்ணியமாக இருக்கிறது. இப்புண்ணியங்கள் இரு வகைப்படும்.
  1. சுபாவத்திற்கு மேலான புண்ணியங்கள்
  2. சுபாவமான புண்ணியங்கள்
மற்ற தலையான புண்ணியங்களுக்கும் தேவ சம்பந்தமான புண்ணியங்களுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. தேவ சம்பந்தமான புண்ணியங்கள் நேரடியாகத் தங்களுடைய நோக்கமாகக் கடவுளை கொண்டிருப்பதால், இவை கடவுள் சம்பந்தமான (Theos-logos) புண்ணியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகளின் எண்ணிக்கை மூன்று ஆகும்.
‘ இப்போது விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் இம்மூன்றும் நிலை கொண்டிருக்கின்றன” என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார். (1கொரி.13:13) இந்த வாக்கியத்தில் அவர் விசுவாசத்தையும், நம்பிக்கையையும், வேறுப்படுத்திக் காட்டுகிறார். ஏன்? ஏனென்றால் இவை ஒவ்வொன்றும் தனித்தனி பொருள்களைக் கொண்டுள்ளன.
நம்பிக்கை என்பது கடவுள் நம்முடைய கதியை அடைய நமக்கு வேண்டியவற்றைத் தந்தருள்வார் என்று நம் சித்தத்தை உறுதிப்படுத்தும் ஒரு தேவ சம்பந்தமான புண்ணியமாகும். இது விசுவாசத்திலிருந்து முற்றிலுமாக மாறுப்பட்டது.
விசுவாசம் என்பது கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை ஏற்றுக்கொள்வது. இதனை மேலும் தெளிவுப்படுத்த வேண்டுமானால், இவற்றை ஒவ்வொன்றாக ஆராய வேண்டும். முதலில் விசுவாசம் என்றால் என்ன?
சர்வேசுரனுடைய தெய்வீக அதிகாரத்தின் காரணமாக, அவரால் வெளிப்படுத்தப்பட்டுள்ள எல்லாவற்றையும் உறுதியாக சம்மதித்து ஏற்றுக் கொள்ளும்படி மனதை ஆயத்தப்படுத்துகிற ஒரு சுபாவத்துக்கு மேலானதும், தேவ சம்பந்தமானதுமாகிய புண்ணியமே விசுவாசம் ஆகும். இது இரு வகைப்படும்.
1. உயிருள்ள விசுவாசம்: தேவ சிநேகத்தினால் நமக்குள்ள விசுவாசம். இவ்விசுவாசம்தான் நமது இரட்சண்யத்திற்கு ஏதுவாய் இருக்கிறது. தேவ இஷ்டப்பிரசாத நிலையில் இருப்பவர்களிடம் இந்த வகை விசுவாசம் இருக்கிறது. நாம் சாவான பாவம் கட்டிக் கொள்ளும்போது இதை இழந்து போகிறோம். அதாவது, தேவ சிநேகம் இழக்கப்படும்போதுää உயிருள்ள விசுவாசமும் இழக்கப்படுகிறது.
2. உயிரற்ற விசுவாசம்: பாவிகளிடம் இருப்பது. தேவ சிநேகம் இல்லாமலும் விசுவாசம் ஒருவனிடம் நிலைத்திருப்பது சாத்தியமே. ‘மலைகளைப் பெயர்க்கத்தக்க எவ்வித விசுவாசத்தையும் உடையவனாயிருந்தாலும், என்னிலே தேவ சிநேகம் இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை” (1கொரி.13:2) தேவ சிநேகம் இல்லாத இந்த விசுவாசம் பயனற்றது.
விசுவாசம் என்பது கடவுள் வெளிப்படுத்தினவைகளை முழுமையாக ஏற்றுக் கொள்வது. இந்தப் புண்ணியத்தைக் கொண்டு விசுவாசப் பிரமாணத்தில் உள்ளவற்றை, திருச்சபை போதிப்பவற்றை (தேவரீர் தாமே திருச்சபைக்கு அறிவித்திருக்கிற படியினால்) நாம் உறுதியாக விசுவசிக்கிறோம்.
இதனை சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இதுவே அவர்களுடைய விசுவாச இழப்புக்குக் காரணமாகவும் இருக்கிறது. உதாரணமாக:
லூத்தர்: விசுவாசம் என்பது தேவ இரக்கத்தில் நம்பிக்கை கொள்வதாகும். (இதை இப்போது கத்தோலிக்கர்களும் ஏற்றுக்கொள்வது வருத்தத்திற்குரியது.)
பகுத்தறிவாளர்கள்: விசுவாசம் என்பது நம் சொந்த முயற்சியால் கடவுளைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளக்கூடிய காரியங்களாகும்.
நவீனர்கள்: விசுவாசம் என்பது கடவுளின் அவசியத்தைப் பற்றிய ஒருவிதமான உள்ளார்ந்த ஏக்கம் ஆகும்.
எனவே விசுவாசம் வேறு, நம்பிக்கை வேறு. சுவிசேஷத்தில் சில சமயங்களில் நமதாண்டவர் கூறும் விசுவாசம் என்பது நாம் விசுவாசத்தோடு செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
ஆகவே, அன்புள்ள வாசகர்களே, நம் விசுவாசப் பிரமாணத்தில் எடுத்துரைக்கப்படும் விதத்திலும், நம் ஞானோபதேசங்களில் விளக்கப்படுகிறபடியும், நாம் நம் விசுவாசத்தைக் கற்றுக்கொள்வோமாக. ஏனெனில், பரிசுத்த வேதாகமம் சொல்வது போல, விசுவாசம் இல்லாமல் கடவுளைப் பிரியப்படுத்த நம்மால் இயலாது. எனவே இந்த விசுவாச ஆண்டில் மெய்யான விசுவாசம் நம்மிலும் மற்றவர்களிடத்திலும் வளர தேவ தாயை மன்றாடுவோமாக.

Benedicamus Domino
சங். திரேஷியன் பாபு
அர்ச். பத்தாம் பத்திநாதர் சபை
Reference: Summa Theologica, IIa, IIae, q, 1-9
Garriogou Lagarrange OP, De Fide, edition Paris, 1948
Tanquerey, Synopsis Theologicae, Volume 1, De Objecto Fidei, cap 1. Pg.14-67 (edition Rome)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக