அக்டோபர் 2
காவலான சம்மனசுக்களின் திருநாள்
பிரவேசம்: சங். 102. 20
ஆண்டவருடைய சம்மனசுக்களே, அவருடைய வார்த்தையைக் கேட்டு அவரு டைய சொற்படி நடக்கும் பலமும் வல்லபமும் உள்ள நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள். என் ஆத்துமமே, ஆண்டவரை வாழ்த்தி துதிப்பாயாக. என்னுள் இருக்கும் சகல தத்துவங்களே, அவருடைய திருநாமத்தை வாழ்த்துங்கள். – பிதாவுக்கும். . .
சபைச் செபம்
செபிப்போமாக: சர்வேசுரா, வாக்குக் கெட்டாத தேவ பராமரிப்பினால் எங்களுக்கு காவலாகத் தேவரீருடைய பரிசுத்த சம்மனசுக்களை அனுப்பி வைக்கத் தயை செய்தருளினீரே. நாங்கள் இம்மையில் அவர்களுடைய ஆதரவினால் என்றும் காப்பாற்றப்பட்டு, மறுமையில் அவர்களுடைய கூட்டத்தில் நித்தியமாய் மகிழும்படி உம்மை இரந்து மன்றாடிக் கேட்போருக்கு கிருபை புரிந்தருளும் . - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .
நிருபம்; (யாத். 23. 20-23)
ஆண்டவர் இவ்விதம் திருவுளம் பற்றுகிறார் : உனக்கு முன் நடந்து உன் வழியில் உன்னைப் பாதுகாக்கிறதற்கும், நாம் உனக்காக முஸ்திப்புச் செய்த ஸ்தானத்திற்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும் இதோ நாம் ஒரு தூதனை அனுப்புவோம். அவரைச் சங்கித்திருக்கவும், அவருடைய வாக்குக்குச் செவிகொடுக்கவும் அவருக்குப் பயந்து நடக்கவுங்கடவாய். ஏனெனில் நீ பாவஞ் செய்தால் அவர் பொறுப்பதில்லை. நமது நாமம் அவரிடத்திலுண்டு. நீ அவரது வாக்குக்குச் செவிகொடுத்து நாம் திருவுளம்பற்றுகிறதெல்லாம் அனுசரிப்பா யாகில் நாம் உன் பகையாளிகட்குப் பகையாளியாகி உன்னை உபாதிப் பவர்களை உபாதிப்போம். நமது தூதன் உனக்கு முன்னே செல்லுவார்.
படிக்கீதம்: (சங். 90. 11-12)
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காக சர்வேசுரன் தம்முடைய சம்மனசுக்களுக்கு கட்டளையிட்டார். – உன் பாதம் கல்லில் இட றாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
அல்லேலுய்யா கீதம்
அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 102. 21) ஆண்டவருடைய சி;த்தத்தின் படியே நடக்கிற அவருடைய சேனைகளும் ஊழியர்களுமான தூதர்களே, நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள். அல்லேலுய்யா
சுவிஷேசம் (மத். 18. 1-10)
அக்காலத்தில் சீஷர்கள் சேசு நாதரிடத்தில் வந்து: பரலோக இராச்சியத்திலே அதிகப் பெரியவன் யாரென்று நினைக்கிறீர்? என்றார்கள். அப்பொழுது சேசு நாதர் ஓர் பாலனை அழைத்து, அவனை அவர்கள் நடுவில் நிறுத்தி: . நீங்கள் மனந்திரும்பி, பாலர்களைப் போல் ஆகாவிட்டால், பரலோக இராச்சியத்திலே பிரவேசிக்கமாட்டீர்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பாலனைப் போல தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக இராச்சியத்தில் அதிகப் பெரியவனாயிருக்கிறான். இப்படிப் பட்ட பாலன் ஒருவனை என் பெயராலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். ஆனால் என்பேரில் விசுவாசமுள்ள இச்சிறியோரில் ஒருவனுக்கு இடறலாயிருப்பவன் எவனோ, அவன் கழுத்திலே கழுதை சுழற்றும் ஏந்திரக் கல்லைக்கட்டி ஆழ்ந்த சமுத்திரத்தில் அவன் அமிழ்த்தப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். இடறலினிமித்தம் உலகத்துக்கு ஐயோ கேடு! ஏனெனில் இடறல்கள் கட்டாயம் வந்துதான் தீரும்: ஆயினும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ கேடு! ஆகையால் உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலாயிருந்தால், அதைத் தறித்து உனக்குத் தூரமாய் எறிந்து போடு. நீ இருகைகளை அல்லது இரு கால்களை உடையவனாய் நித்திய அக்கினியில் தள்ளப்படுவதைவிட, முடவனாய் அல்லது நொண்டியாய்ச் சீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். உன் கண்ணானது உனக்கு இடற லாயிருந்தால், அதைப் பிடுங்கி உனக்குத் தூரமாய் எறிந்துபோடு. இரு கண்ணுள்ளவனாய் அக்கினிச் சூளையில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாய்ச் சீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். இந்தச் சிறுவர்களில் ஒருவனையும் புறக்கணியாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் மோட்சத்திலே அவர்களுடைய சம்மனசுகள் பரமண்டலங்களிலேயிருக்கிற என் பிதாவின் சமுகத்தை இடைவிடாமல் தரிசிக்கிறார்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ஒப்புக்கொடுத்தல் (சங். 102. 20-21)
சகல சம்மனசுக்களே, ஆண்டவருடைய வார்த்தையைக்கேட்டு அவருடைய சொற்படி நடக்கும் அவருடைய ஊழியர்களே, நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள்.
அமைதி மன்றாட்டு
ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத் சம்மனசுக்களுக்கு வணக்கமாக நாங்கள் உமக்குச் சமர்ப்பிக்கும் கொடைகளைக் கையேற்றுக் கொள்ளும். அவர்களுடைய இடைவிடாத ஆதரவினால் நாங்கள் இவ்வுலக இடையூறுகளி னின்று விடுவிக்கப்பட்டு, நித்திய சீவியம் வந்து அடையத் தயவாய்த் திருவருள் புரிந்தருளும்.. – தேவரீரோடு ….
உட்கொள்ளுதல் (தானி. 3. 38)
ஆண்டவருடைய சம்மனசுக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங் கள். அவருக்கு தோத்திரம்பாடி, அவரை சதாகாலமும் எல்லாவற்றிற்கும் மேலா கப் போற்றுங்கள்.
உட்கொண்ட பின்
செபிப்போமாக: ஆண்டவரே, தேவர்Pருடைய பரிசுத்த சம்மனசுக்களின் திருநாளில் ஆனந்தம் கொண்டாடித் தெய்வீக பரம இரகசிய அநுமானங்களை உட்கொண்டோம். அவர்களுடைய பாதுகாப்பால் நாங்கள் விரோதிகளுடைய கண்ணிகளினின்று என்றும் விடுதலையடையவும், சகல பொல்லாப்புகளினின்றும் தற்காக்கப்படவும் தேவரீரை மன்றாடுகிறோம்.. – தேவரீரோடு …