Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 24 நவம்பர், 2017

St. Silvester., November 26-ம் தேதி




அர்ச்.சில்வெஸ்தர், மடாதிபதி

                                                       (கி.பி.1267) 

                சில்வெஸ்தர் லொரேத்தோ நகருக்கு அருகாமையிலுள்ள ஊரில் உயர்ந்த குலத்தாரான தாய் தந்தையரிடத்தினின்று பிறந்தார்இவர் பெயர்போன கல்விச்சாலைக்குச் சென்று நீதி சாஸ்திரத்தையும் தேவசாஸ்திரத்தையும் முழுமையாக கற்றறிந்து குருப்பட்டம் பெற்று பாவிகளுக்குப் புத்தி சொல்லி பிறருடைய ஆத்தும இரட்சணியத்திற்காக ஊக்கத்துடன் உழைத்து வந்தார்இதனால் சில பாவிகள் இவரை விரோதித்து துன்பப்படுத்தி வந்தார்கள்உலகில் கீர்த்தி பெற்றவனும் தனவந்தனும் அழகனுமான ஒரு துரையின் சாவுச் சடங்குக்கு சில்வெஸ்தர் போயிருந்தபோது, அவனுடைய முகம் மாறி அவலட்சணமாயிருப்பதைக் கண்டு சற்று நேரம் சாவைப் பற்றி தியானித்து, அன்று இரவே தூரமான வனாந்தரத்திற்குச் சென்று கடினமான தபஞ் செய்து வந்தார்இவருடைய புண்ணியங்களையும் அர்ச்சியசிஷ்டதனத்தையும் பற்றிக் கேள்விப்பட்ட அநேகர் அவருக்குச் சீஷர்களானார்கள்சில்வெஸ்தர் தம்மிடம் வந்த திரளான துறவிகளுக்கு ஒரு மடம் கட்டி, அவர்களுக்கு புண்ணிய மார்க்கத்தைப் போதித்து வந்தார்சில காலத்திற்குள் திரளான பேர் அவருக்கு சீஷரானதால், சில்வெஸ்தர் 25 மடங்களைக் கட்டி வைத்தார்இவர்களுடைய புண்ணியங்களையும் தவக்கிருத்தியங்களையும் கண்ட துர்மனப்பசாசு   பலவிதமாய் அவர்களை துன்பப்படுத்தி அவர்களை அவ்விடத்தினின்று அப்புறப்படுத்தும்படி பிரயாசைப்பட்டதுஆனால் அர்ச்சியசிஷ்டவர் ஜெபத்தாலும் ஒருசந்தியாலும் தேவதாயார் மீது வைத்த மிகுந்த பக்தியினாலும் அதை ஜெயித்தார்.  90 வயது மட்டும் சில்வெஸ்தர் தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலிய புண்ணியங்களையும் அநேக புதுமைகளையும் செய்து அர்ச்சியசிஷ்டவராய்க் காலஞ் சென்று மோட்ச சம்பாவனையைச் சுதந்தரித்துக்கொண்டார்



யோசனை

                நமது சத்துருவாகிய சரீரத்தில் ஆசாபாசம் கிளம்பி நம்மைக் கெடுக்கப்பார்க்கும்போது, அழுகி, நாறி, புழுவுக்கு இரையாகும் அதன் இஷ்டத்திற்குச் சம்மதியாமல் அச் சோதனைகளை ஜெபிப்போமாக.  


வெள்ளி, 17 நவம்பர், 2017

St. Catherine., Virgin, Martyr. November 25-ம் தேதி


அர்ச்.கத்தரீனம்மாள்,
கன்னிகை, வேதசாட்சி (கி.பி.311)

                கத்தரீனம்மாள் அலெக்சாந்திரியா நகரில் செல்வந்தரும் உயர்குலத்தாருமான தாய் தகப்பனிடத்தினின்று பிறந்து, மகா திறமையுடன் கல்வி சாஸ்திரங்களைக் கற்று வந்தாள்.  இவளுக்கு அதிசயத்திற்குரிய ஞானமும் புத்தியுமிருந்தமையால் கலைகளையும் தத்துவ சாஸ்திரங்களையும் கற்றறிந்து அந்நகரில் பெயர்பெற்று விளங்கினாள்.  சத்திய வேதத்தின் உண்மையை அறிந்து ஞானஸ்நானம் பெற்று புண்ணிய வழியில் நடந்து வந்தாள்.  அக்காலத்தில் உண்டான வேதகலகத்தில் கத்தரீனம்மாள் பிடிபட்டு, இராயன் முன்னிலையில் நிறுத்தப்பட்டபோது அவளுடைய புத்தி ஞானத்தை இராயனறிந்து அதிசயித்து அவளுடன் வேததர்க்கம் செய்யும்படி சாஸ்திரிகளான 50 பேரை கத்தரீனம்மாளுக்கு முன் நிறுத்தினான்.  அர்ச்சியசிஷ்டவள் கூறிய வேத நியாயங்களை அந்த சாஸ்திரிகள் கேட்டு அதிசயித்து கிறீஸ்துவ வேதமே சத்திய வேதமென்று நன்றாயறிந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.  அப்போது இராயன் அந்த 50 சாஸ்திரிகளையும் கொலை செய்து விட்டு, கத்தரீனம்மாளுக்கு அதிக பட்சத்தைக் காட்டி, அவளைத் தனக்கு வாழ்க்கைப்படும்படி கேட்டான்.  சேசுநாதரான தன் ஞானப் பத்தாவுக்குத் தன் கன்னிமையை ஒப்புக்கொடுத்ததாக அறிவித்து, கலியாணத்திற்கு சம்மதிக்கவில்லை.  இதைக் கேட்ட இராயன் அவளைச் சிறையிலடைக்கக் கட்டளையிட்டான்.  இரவு வேளையில் இராயனுடைய மனைவியும் தளபதியும் சிறைச்சாலைக்குச் சென்று வேதசாட்சியுடன் பேசியபோது, அவள் கூறிய புத்திமதியால் இருவரும் கிறீஸ்துவர்களானார்கள்.  அவ்விருவரையும் வேதத்திற்காக இராயன் கொல்லக் கட்டளையிட்டு கத்தரீனாளை சக்கர இயந்திரத்தில் கட்டி உபாதிக்கும்படிக் கட்டளையிட்டான்.  அவள் அந்த இயந்திரத்தின் அருகில் போய்  ஜெபித்த மாத்திரத்தில் அது துண்டு துண்டாய் உடைந்து போயிற்று.  இராயன் சினங்கொண்டு அவள் தலையை வெட்டும்படி கட்டளையிட்டான்.



யோசனை

                நாம் இதர மதத்தாருடன் வேததர்க்கம் செய்யாத போதிலும் அவர்கள் மனந்திரும்பும்படிக்காவது வேண்டிக்கொள்வோமாக. 


புதன், 15 நவம்பர், 2017

St. John of the Cross., November 24-ம் தேதி

                

அர்ச்.சிலுவை அருளப்பர்

 (கி.பி.1591)

             

   ஜான் என்று அழைக்கப்படும் அருளப்பர் குழந்தையாயிருந்து பால் குடிக்கும் வயதிலேயே, தேவதாயார் மட்டில் பக்தியும் அவரிடத்தில் உண்டாயிற்றுஇவர் கல்விச்சாலையில் படிக்கும்போது மருத்துவமனைக்குப் போய் அவர்களுக்கு வேண்டிய உதவி புரிவார்இவர் சிறுவராயிருக்கும்போது ஐம்புலன்களை அடக்கி ஒறுத்தல் முயற்சி செய்வார்உலகத்தின் மீது வெறுப்புற்று தேவமாதாவின் சபையாகிய கார்மேல் மடத்தில் சேர்ந்து, தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலிய புண்ணியங்களைச் சகலரும் அதிசயிக்க, உத்தமமாய் அனுசரித்து வந்தார்கர்த்தருடைய பாடுகளின் மட்டில் இவருக்குள்ள பக்தியால் சிலுவை அருளப்பர் என்னும் பெயரைப் பூண்டுக்கொண்டார்இவர் குருப்பட்டம் பெற்ற பின், ஒரு மடத்திற்கு சிரேஷ்டராகி அந்த மடத்திலுள்ள குறைகளைச் சீர்ப்படுத்த முயன்றதனால், அநேகர் இவர் மட்டில் பிரியமும் சிலர் வெறுப்புங் கொண்டார்கள்இதனிமித்தம் அவர் மேல் அநியாயமாய்க் குற்றஞ் சாட்டி மடத்தின் சிறையில் வைத்தார்கள்ஆனால் அருளப்பர் சற்றும் குறை கூறாமல் சர்வேசுவரனை ஸ்துதித்தார்சீக்கிரத்தில் அவர் அதினின்று விடுதலையாக்கப்பட்டு புண்ணியங்களையும் தவக்கிருத்தியங்களையும் புரிந்து வந்தார்இவருடைய தபக்கருவிகளையும் காண்போர் பயப்படுவார்கள்கர்த்தர் இவருக்குக் காணப்பட்டு: நீ நம்மைப்பற்றி அனுபவித்த நிந்தை அவமானத்திற்குக் கைம்மாறாக உனக்கு என்ன சம்பாவனை வேண்டுமென்று கேட்டதற்கு, ஆண்டவரே! இன்னும் அதிக நிந்தை அவமானம் வேண்டுமென்றார்சிலுவையைப் பார்க்கும்போது பரவசமாவார்பூசை நேரத்திலும் பாவசங்கீர்த்தன நேரத்திலும் அவர் மேல் அதிசய பிரகாசம் ஜொலிப்பதை ஜனங்கள் கண்டு பிரமிப்பார்கள்இவர் வியாதியாய் விழுந்தபோது மற்றவர்களால் உண்டான கஸ்தி சிலுவைகளைப் பொறுமையுடன் சகித்து, சிலுவையைக் கையிலேந்தி உயிர் துறந்து மோட்ச சம்பாவனையைச் சுகித்தார்.  


யோசனை


                நமது சிலுவையாகிய துன்பதுரிதம், வியாதி, தரித்திரம், இக்கட்டுகளைப் பொறுமையுடன் சகிப்போமாக.