Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 4 மே, 2014

யார் இந்த குருக்கள்


      வின்சென்ட் தே பவுல், கிளாவர் இராயப்பர், டொன்போஸ்கோ முதலிய அர்ச்சிஷ்ட குருக்கள் மேல்நாடுகளில் அநேகமாயிரம் பேரை மனந்திருப்பி உத்தம கிறீஸ்தவர்களாக்கியிருக்கிறார்கள்.  நம் நாட்டிலும் அர்ச். சவேரியார், அர்ச். அருளானந்தர் போன்ற அர்ச்சிஷ்ட குருக்கள் தேவ சிநேகத்தினால் ஏவப்பட்டு நமது முன்னோரின் ஆத்தும இரட்சண்யத்தில் ஈடுபட்டு உழைத்தனர்.  கத்தோலிக்க தேசங்களிலும் வேத போதகநாடுகளிலும் ஆயிரக்கணக்கான அர்ச்சிஷ்ட குருக்களை இன்றைக்கும் காணலாம்.  கத்தோலிக்கத் திருச்சபையே சர்வேசுரனால் ஸ்தாபி;க்கப் பட்ட மெய்யான திருச்சபை என்று சுட்டிக் காட்டும் நான்கு பிரதான இலட்சணங்களும் "அறுப்பு மிகுதியாயிருக்கிறது,  வேலையாட்களோ சொற்பம்: ஆகையால் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுப்பின் எஜமானை மன்றாடுங்கள்”.(மத். 9:37) என்று திவ்விய சேசு திருவுளம்பற்றியிருக்கிறார் அல்லவா? சத்தியத்தைக் கைக்கொள்ள ஆவலாயிருப்பவர் அநேகர்.  அவர்களுக்கு வேத சத்தியங்களைப் போதிக்கும் குருக்களின் தொகையோ சொற்பம்.  இன்னும் அநேக குருமார்களைத் தெரிந்து அனுப்பும்படி இவ்வுலகிலுள்ள அமைத்து மக்களுக்கும் ஏக கர்த்தரும் எஜமானருமாகிய பரம பிதாவை நோக்கிப் பிரார்த்திக்கும்பழ திவ்விய இரட்சகர் நம் எல்லோரையும் அன்புடன் அழைக்கிறார்.
அர்ச்சிஷ்டதனம் ஒனறல்லவா? அப்படியானால் கிறிஸ்துராஐ சேவையில் பரிசுத்த குருக்கள் இல்லாதிருக்க முடியுமா?  திருச்சபை உண்டானது முதல் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பரிசுத்த குருக்கள் இருந்திருக்கிறார்கள், எப்போதுமிருப்பார்கள்.  ஆனால் இன்னும் அதிக பரிசுத்த குருக்கள் இருப்பார்களேயானால், அஞ்ஞான மக்கள் சீக்கிரம் மனம் திரும்புவார்கள்.  பாவிகள் தங்கள் துன்மார்க்க சீவியத்தை விட்டொழித்து சன்மார்க்க சீவியத்தை கடைப்பிடித்து வாழ்வார்கள்.  நல்ல கிறிஸ்தவர்கள் புண்ணிய சாங்கோபாங்கத்தில் உயர்ந்தோங்கி வளர்ந்து திருச்சபைக்கு ஆபரணமாகவும் மனுக்குலத்திற்கு முன் மாதிரிகையாகவும் விளங்குவர். உலகிலுள்ள சீர்கேடுகள் பெரும்பாலும் மறைந்தொழியும்: திவ்விய இரட்சகர் தமது இரத்ததை சிந்தி உயிரைக் கொடுத்த பரித்தியாகப் பலியின் பலனையும் மக்கள் அடைந்து இம்மையிலும் மறுமையிலும் பாக்கியமாய் வாழ்வார்கள்.  இத்தகைய உன்னத பாக்கியம் உலகத்திலுள்ள சகலருக்கும் கிடைக்க வேண்டுமானால் சத்திய வேதக் குருக்கள் தொகையிலும் அர்ச்சியசிஷ்டதனத்திலும் அதிகரிப்பது அவசியம்.  இக்கருத்து நிறைவேறுமாறு கத்தோலிக்கராகிய நாம் சேசுவின் திரு இருதயத்தை நோக்கி இரந்து மன்றாட வேண்டும்.


             குருத்துவத்தின் மகத்துவ மேன்மையும் குருக்களினால் நமக்கு வரும் எண்ணிறைந்த உந்நத நன்மை வரங்களும் இன்னவையென்று எவ்வளவுக்கு நாம் நன்கறிந்திருக்கிறோமோ அவ்வளவுக்கு, “இன்னும் அதிக குருக்களை, அதிலும் பரிசுத்த குருக்களை, எங்களுக்கு தந்நருளும்” என்று பரம பிதாவை நோக்கி நாமெல்லோரும் பக்தியுருக்கத்தோடும் ஆவலோடும் நம்பிக்கையோடும் வேண்டிக்கொள்வோம் என்பது திண்ணம்.




            குருத்துவத்தின் மகத்துவ மேன்மையை ஐயம் நீங்கக் கண்டுணர்ந்து மதிக்கவேண்டுமாகில் நாம் கத்தோலிக்க குருவானவர் நிறைவேற்றிவரும் வேலை இன்னதென்று அறிந்திருப்பது அவசியம்.  குருவானவர் சர்வேசுரனுடைய பிரதிநிதி. தமது காரியங்களையெல்லாம் இவ்வுலகில் அவர் கண்காணிக்க சர்வேசுரனால் நியமிக்கப்பட்டவர்.  “சர்வேசுரனைச் சார்ந்த வேலைகள் தெய்வீக வெலைகளாம்.  தெய்வீக வேலைகளைச் செய்யும் குருவானவரின் பதவி தெய்வீகப் பதவி” என்கிறார் அர்ச். அம்புரோஸ். சர்வேசுரனுக்கு பகிரங்க ஆராதனை செலுத்தி அவரை இவ்வுலகில் மகிமைப்படுத்துவதும் அவரிடமிருந்து உன்னத நன்கொடைகளைப் பெற்று இவ்வுலக மக்களுக்கு கொடுப்பதும் சர்வேசுரனைச் சார்ந்த வேலைகளல்லவா? சகல சம்மனசுகளும் அர்ச்சிஷ்டவர்களும் சேர்ந்து தேவ மகத்துவத்திற்கு வருவிக்கும் மேலான ஆராதனை ஸ்துதி தோத்திரங்களைவிட குருவானவர் தாம் நிறைவேற்றும் ஒரேயொரு திவ்விய பூசை பலியினால் மேலான ஆராதனை ஸ்துதி வணக்கம் தேவ மகத்துவத்துக்குச் செலுத்துகிறார்.   மோட்சவாசிகள் சர்வேசுரனுக்கு வருவிக்கக் கூடிய மகிமை வணக்கமெல்லாம் ஒன்றுசேர்ந்தாலும் அவையாவும் மட்டுள்ளவை, அளவு உள்ளவையே குருவானவர் ஒப்புக்கொடுக்கும் திவ்விய பூசை பலியினால் சர்வேசுரனுக்கு உண்டாகும் மகிமை வணக்கமோ அளவு கடந்தது. கரைகாணா சமுத்திரம் போன்றது:  தேவ சமுகத்தில் அளவற்ற மதிப்புள்ளது.  மோட்சவாசிகளுக்கும் இவ்வுலக மக்களுக்கும் சர்வேசுரன் அளித்திருக்கும் எண்ணற்ற நன்கொடைகளுக்கு ஏற்றவாறு நன்றிசெலுத்த அர்ச்சியசிஷ்டவர்களாலும் முடியாது.  ஆனால் குருவானவர் நிறைவேற்றும் பூசைப்பலியோ சர்வேசுரனிடமிருந்து சம்மனசுக்களும் மனுமக்களும் பெற்றிருக்கும் சகல உபகார சகாயங்களுக்கம் யோக்கியமான நன்றி சமர்ப்பிக்கப் போதுமானது.  ஆதலால் பரலோக பதவிகளுக்கொல்லாம் மேலானது குருத்துவப் பதவி என்று வேதசாஸ்திரிகள் கூறுவதில் ஆச்சரியப்பட இடமில்லை.


           இது மாத்திரமின்றி மனதர் செய்யும் பாவங்களை மன்னிக்கவும் மன்னியாதிருக்கவும் பாவங்களுக்குத் தக்க பரிகாரம் செய்யவும் சர்வேசுரன் தமது குருக்களுக்கு வல்லமையும் அதிகாரமும் அளித்திருக்கிறார். “எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவைகள் மன்னிக்கப்படும். எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவர்களுக்கு அவைகள் மன்னியாதிருக்கப்படும்” (அரு. 20:23) பாவங்களை மன்னிப்பதும் மன்னியாதிருப்பதும் தெய்வீக வேலையல்லவா?  இந்த வேலையைச் செய்துவரும் குருவானவரின் பதவியை தெய்வீகப் பதவி என்று அர்ச். அம்புரோசியார் அழைப்பதில் என்ன ஆட்சேபனை?


              மரணத்தருவாயிலிருக்கும் கிறீஸ்தவனுடைய மன்றாட்டுக்கிணங்கி அர்ச். மிக்கேல் அவனிடமிருந்து நரகப் பேயை அடித்துத் துரத்திவிடுவார்;: ஆனால் அவனுடைய ஆத்துமத்தைக் கட்டியிருக்கும் பாவச் சங்கிலியைத் துண்டித்து எறிய அவரால் முடியாது.  சங்கிலியைத் துண்டித்டிதறிந்து பாவியைப் பசாசின் அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்ற வல்லமை பூண்டவர் கத்தோலிக்கக் குரு.  கோவிலில் ஒரு பாவசங்கீர்த்தன தொட்டியில் நமது தேவ இரட்சகர் உட்கார்ந்து கொண்டு தம்மிடம் வரும் பாவியைப் பார்த்து “உன் பாவங்களைப் பொறுக்கிறேன்” என்று சொல்வாராகில் அவனுடைய பாவங்கள் உடனே பொறுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.  அதேபொல் மற்றொரு பாவசங்கீர்த்தனத் தொட்டியில் ஒரு குருவானவர் உட்கார்ந்து கொண்டு தம்மிடம் வரும் பாவியைப் பார்த்து, “உன் பாவங்களை பொறுக்கிறேன்” என்றால் அதே விதமாய் பொறுக்கப்படும்.  இவ்வுலகில் குருவானவர் செய்யும் நியாயத் தீர்ப்பைக் கிறீஸ்து ராஜா பரலோகத்தில் உறுதிப்படுத்துகிறார்.


             அர்ச். சின்னப்பர் சத்தியவேதக் குருக்களை சர்வேசுரனுடைய பரம இரகசியங்களை மனிதருக்குப் பகிர்ந்து கொடுக்கிறவர்கள் என்று கூறுகிறார். திவ்விய பலிபூசையில் குருவானவர் நமது தேவ இரட்சகரின் பரிசுத்த சரீரத்தைத் தமது கரங்களினால் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுப்பதுமன்றி விசுவாசிகளுக்கும் அதைக் கொடுத்து அவர்க்ள ஆத்துமங்களை போஷிக்கிறார்.  மனிதன் பிறந்ததிலிருந்து மரிக்கும் வரையில் அவனுக்கு உனனத உதவி சகாயங்களை புரிந்துவருபவர் இவ்வுலகில் சர்வேசுரனுடைய ஸ்தானதிபதியாயிருந்து அவருடைய தெய்வீக வேலையைச் செய்ய அவரால் நியமிக்கப்பட்டக் கத்தோலிக்க குருவானவர்தான்.  குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுத்து அவனைச் சர்வேசுரனுடைய பிள்ளையாக்குகிறவர் குருவானவர்.  அவனுடைய ஆத்துமத்திற்குத் தெய்வீக மன்னாவாகிய தேவநற்கருணையை அளித்து அதைப் போஷிப்பவர் குருவானவர்.  ஆத்தும நோய்களைப் பாவசங்கீர்த்தனத்தின் வழியாய் குணப்படுத்தி ஆத்துமத்தை ஞான ஜீவியத்தில் ஸ்திரப்படுத்துகிறவர் குருவானவர்.  கடைசியாக மனிதன் மரித்தப் பின் தேவ சந்நிதானத்தில் அச்சமின்றி சென்று தனது சீவியத்தின் கணக்கைக் கொடுக்க அவருடைய மரணப்படுக்கையினருகில் நின்று அவனுக்கு அவஸ்தைக் கொடுத்து ஆறுதல் அளித்து ஆயத்தப்படுத்துபவர்கள் குருவானவர்.  மெய்யாகவே சகல நன்மைகளும் குருவானவர் மூலமாகவே நமக்கு வருகின்றன.  கத்தோலிக்க குரு இவ்வளவு மகத்துவமும் மகிமையும் கௌரவமும் பொருந்தி மேலான பதவியை வகித்து வருபவரென்றால் அதற்கு தகுந்த அர்ச்சியசிஷ்டத்தனம் அவரிடத்தில் விளங்க வேண்டும்.
அர்ச்சியசிஷ்ட குரு சர்வேசுரன் தமது மக்கள் மீது தயைபுரிந்து அளித்தருளும் விலைமதிக்கப்படாத ஒரு நன்கொடை என்பதை விசுவாசிகள் ஞாபகத்தில் வைத்திருப்பது அவசியம்.  நன்கொடை என்றால் அதைப் பக்தி விசுவாசமுள்ள ஜெபத்தினால் சர்வேசுரனிடமிருந்து இரந்து மன்றாடிஅடைந்து கொள்ள வேண்டும்.


        ஏனெனில் விசுவாசிகள் எப்படியோ அப்படியே குருக்களும்.  விசுவாசிகளின் பிள்ளைகள் தானே குருமடத்தில் சேர்ந்து குருப்பட்டம் பெறுகிறார்கள்.  நல்ல மரம் நல்ல கனியை கொடுக்கும்.  கிறீஸ்தவர்கள் பக்தி விசுவாசமுள்ளவர்களாயிருந்தால் அவர்களிடமிருந்து உற்பத்தியாகும் பிள்ளைகளும் உத்தம கிறீஸ்தவர்களாய் வளர்ந்து சேசுவின் திரு இருதயத்திற்கு உகந்த அர்ச்சியசிஷ்ட குருக்களாய் விளங்குவார்கள்.  கத்தோலிக்க தாய் தந்தையர் தங்கள் பிள்ளைகளுள் ஒருவரையாகிலும் தமது குருவானவராக திவ்விய சேசு ஏற்றுக்கொள்ளக் கிருபை புரியுமாறு மன்றாட வேண்டும்.  குருத்துவ அழைத்தலை அபிவிருத்தி செய்ய ஏற்படுத்தப்பட்டிருக்கும் அர்ச். பத்தாம் பத்திநாதர் சபையில் சேர்ந்துள்ள குருத்துவ மாணவர்களுக்கு தங்கலான உதவிகளை செய்யும் கிறீஸ்தவர்கள் நன்கொடைகளைப் பெறுவார்கள்.  மாதத்தின் முதல் சனி குருக்களின் தினமாக திருச்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நாள்.  நமது நாட்டிலும் அர்ச்சியசிஷ்ட குருக்கள் அதிகரிக்க வேண்டுமென்று நாமெல்லோரும் தினந்தோறும் திரு இருதயத்தை நோக்கிப் பிராத்திக்க வேண்டும். விசேஷமாய் மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமைகளில் இந்த மேலான கருத்துக்காக நமது ஜெப தபங்களை ஒப்புக் கொடுப்போமாக.

வெள்ளி, 2 மே, 2014

GENUFLECTION – a token of Faith


No one will deny that the first act of worship which we are suppose to offer to God on entering a Church – the genuflection is sometimes made very carelessly and irreverently, even by people who claim to be devout. Bishops, Priests and even Popes of the old have reminded the faithful again and again of the duty, as well as the manner of genuflecting. Catholics who go to Church for the Holy Sacrifice of the Mass, or for any other religious service, or to make a visit to the Blessed Sacrament, ought to conduct themselves in such a way that anyone can tell at a glance that their devotion is deep and true. A well-made genuflection is one of the best signs of interior recollection and devotion.

Earlier the children were taught that the proper way to make a genuflection is to bend the right knee
to the floor when the Blessed Sacrament is in the Tabernacle. When the Blessed Sacrament is
exposed,one should kneel on both knees, making a reverent inclination of the head and shoulders. The genuflection should be made reverently, thoughtfully and without haste, with eyes fixed on the Tabernacle or Monstrance and not roaming curiously about the Church. It is an act of homage and adoration of both body and soul, offered to the divinity and the Sacred Humanity of Our Lord Jesus Christ, present on the altar. That in the name of Jesus every knee should bow, of those that are in heaven, on earth and under the earth. (Phil. 2:10). Every Catholic man, woman and child unless physically unable to do so should genuflect upon entering and when leaving the Church or passing before the altar on which the Blessed Sacrament is reserved.



To encourage Catholics to make their genuflection, as prescribed, the Sacred Congregation of
Indulgences has granted an indulgence of 300 days to all who, while making a single genuflection, say the invocation: “Jesus, my God, I adore You here present in the Sacrament of Your love” or a similar one, such as “My Lord and my God.” An indulgence of 500 days is granted for the same act of reverence while making a double genuflection before the Most Blessed Sacrament exposed.

I


In Our Lord and Lady,

Fr. Gregory Noronha, FSSPX


Thanks to The Ark  ( Magazine)

WHY MASS IN LATIN??? Why not in the Vernacular?


Traditional Mass goers have been confronted at some time or the other by someone with the above question. Let our refuge be as follows:-
Just as it is fitting to change out of one’s work-clothes for an important ceremony, it is likewise most fitting that the language of sacred liturgy be different from that of everyday life. Thus, the vernacular is not apt for the sacred action. The establishment of a fixed liturgical language while the common language evolves seems to be a constant of mankind. The Schismatic Greeks employ ancient Greek in their liturgy; the Russians use Slavonic. At the time of Christ, the Jews already utilized the ancient Hebrew for their liturgy, which was no longer the common language and neither Jesus nor the Apostles criticized this. The Muslims use Arabic and the Hindus use Sankrit.

But Why a Sacred Language?

Man naturally has a sense of the sacred. He understands instinctively that the divine worship does not depend on him, that he must respect it and transmit it as he has received it, without allowing anything to disrupt it. The use of a fixed, sacred language in religion is in conformity with human psychology as well as the immutable nature of divine realities.

Will not the Vernacular help people to understand?
The Mass works ineffable mysteries that no man can perfectly understand. This mysterious character finds its expression in the use of a mysterious language that is not immediately understood by all. It is for this reason that some parts of the mass are recited in a low voice.

The vernacular language, on the contrary, gives the superficial impression of a comprehension which in reality does not exist. People think they understand the mass because it is celebrated in their mother tongue. In fact, they generally understand nothing of the essence of the holy sacrifice.

Doesn’t Latin leave faithful in ignorance of the Mass?

The Council of Trent imposed upon priests the duty to preach often about the mass and to explain its rites to the faithful. In addition, the faithful have missals in which the Latin prayers are translated so they can have access to the beautiful prayers of the liturgy without the advantages of Latin being lost. The demand it makes on their attention fosters the faithful’s genuine participation in the liturgy; that of the mind and will; whereas the vernacular language, on the contrary, is likely to encourage laziness. (cf. The Catechism of the Crisis in the Church –Fr. Matthias Gaudron)

If one opens the Epistle to the Hebrews V,1 one finds, “Every Priest is ordained for men in the things that pertain to God, that he may offer up gifts and sacrifices for sins.” A Priest therefore has two chief duties: to offer sacrifice to God and to sanctify men by his teaching and instruction. Now, when a Priest if speaking to God in the name of men, he speaks in the language of the Church i.e. in Latin – a language God certainly understands as does the Priest. When on the other hand he speaks to the faithful he speaks in their own language.(cf Radio Replies Vol. I – Fathers Rumble and Carty q. 1392)


It has been said that the use of any language in itself was immaterial but in its consequences, or in view of the commands of the church, it is by no means immaterial. The Church has wisely ordered the Latin tongue only to be used in the mass and in the administration of the sacraments for several reasons:-

Latin was the language used by St. Peter when he first offered Mass in Rome. It was the language in which that Prince of the Apostle drew up the Liturgy which, together with the knowledge of the Gospel, he or his successors the Popes imparted to the different peoples of Italy, France, Belgium, Spain, Portugal, England, Ireland, Scotland, Germany, Hungary and Poland.
From the time of the Apostles down, Latin has invariably been used at the altar though the inhabitants did not understand. The Catholic Church, through an aversion to innovations, carefully continues to celebrate her liturgy in that same tongue.

Unchangeable dogmas require an unchangeable language. The Catholic Church cannot change because it is the Church of God, who is unchangeable. Consequently the language of the Church must also be unchangeable.

Mass is said in Latin because a universal church requires a universal language. The Catholic Church is the same in every clime, in every nation and consequently by its language must be always and everywhere the same to secure uniformity in service.

Variety of languages is a punishment, a consequence of sin; it was inflicted by God that the human race might be dispersed over the face of the earth. The holy Church, the immaculate Spouse of Our Lord Jesus Christ has been established for the express purpose of destroying sin and uniting all mankind. Hence she must everywhere speak the same language. (cf The Holy Sacrifice of the Mass –Fr. Michael Muller C.S.S.R. Ch.37)

An immutable faith requires a proportionate linguistic instrument; namely, a language that is as immutable as possible and which can serve as a reference. Latin, which is no longer a modern language, no longer (or rarely) changes. In a modern language, on the contrary, words can rapidly undergo significant changes of meaning or tone they can acquire a pejorative or derisive connotation which they formerly lacked. The usage of such a language can thus easily lead to errors or ambiguities, while the use of Latin preserves both the dignity and orthodoxy of the liturgy. For e.g.. In the good old days a good teacher was known as the one who gave good aids to his students. But today the word aids has a very bad connotation.

Used in the liturgy for nearly two thousand years, the Latin language has been, as it were, hallowed. It is a comfort to be able to pray with the same words that our ancestors and all the priests and monks have prayed for centuries. We feel concretely the continuity of the Church through time and we unite our prayer with theirs. Time and eternity converge.

Latin not only manifests the Church’s unity in time but also in space. Favouring union with Rome (its usage kept Poland form the Slavic schism) it also unites all Christian nations with one another. Before the Second Vatican Council, the Roman-Rite Mass was celebrated everywhere in the same language. On five continents, the faithful would find the Mass as celebrated in their own parish. Today, this image of unity has been shattered. There is no longer any unity in the liturgy, neither in language nor in rites. This is true to such an extent that someone attending a mass celebrated in an unfamiliar language has a hard time even distinguishing the principle parts of the mass.

Since the twelfth century the use of Latin in the Liturgy has been frequently made the subject of attack. Such attacks originated principally in a heretical, schismatical, proudly national spirit hostile to the Church or in a superficial and false enlightenment, in a shallow and arid rationalism entirely destitute of the perception and understanding of the essence and object of the Catholic liturgy especially of the profoundly mystical sacrifice. In the attempt to suppress the Latin language of the liturgy and to replace it by the vernacular there was a more or less premeditated plot to undermine Catholic unity, to loosen the bond of union with Rome, to weaken the Catholic spirit, to destroy the humility and simplicity of faith. Therefore the Apostolic See has resisted such innovations. The Church, when introducing the Roman liturgy among newly converted nations, for many centuries has permitted only the Latin language. She excommunicates all those who presume to declare the vernacular to be the necessary or the only permissible language for the liturgy. (Trid., Session XII, can. 9) For, as St. Augustine remarks, to question what the universal church practices is insolent, (St. Augustine, Epist., 54, ad Januar.) In all such general usages appertaining to divine worship, the Church is directed and preserved from injurious blunders by the Holy Ghost. In all things relating to divine worship, St. Thomas makes use of the prescription and custom of the church as a conclusive argument to refute various objections. (IIIa, q.83,a3 & 5)

In India, the school children before beginning their classes sing the National Anthem – Jana Gana Mana. It is sung in a language which is not even the national language of India. And to this no one objects!!! It is sung in Bengali (written by Rabindranath Tagore, winner of the Nobel Prize in 1913) for it was written in Bengali originally. This anthem though not understood by many is sung by many for the prime reason of manifesting one’s unity towards the nation. If we can do such for our nation whose capacity ends with death then how much more should we manifest our unity towards our religion which binds us to God for all eternity.

Conclusion


The Church is one, holy, catholic and apostolic. The Latin language in its way contributes to each of these characteristics. By its native genius it’s an imperial language, it’s a dead language and especially, the consecration it received together with Hebrew and Greek on the titulum of the Cross, it perfectly serves the holiness of liturgy, by its universal usage it is no longer the language of any one people, it manifests catholicity; by its living link with the Rome of St. Peter and with so many of the Fathers and Doctors of the Church who were both the echo of the Apostles and the artisans of liturgical Latin. They brought forth not only its prayers, hymns and responses but Christian Latin itself, which is in many aspects, a complete renewal of Classical Latin. It is the guarantee of its apostolicity; by its official usage, lastly which makes it the language of reference for the magisterium, canon law, bulletin, liturgy,etc. It contributes efficaciously to the Church’s triple unity: unity of faith, unity of government and unity of worship.

Finally, The use of the Latin language, customary in a considerable portion of the Church, is a manifest and beautiful sign of unity, as well as an effective antidote for any corruption of doctrinal truth. (Pius XII: Encyclical Mediator Dei, 20-11-1947)

InOur Lord and Lady,
Fr. Gregory Noronha, FSSPX.



To Download Click here---->Thanks to The Ark Magazine..

Statement by Bp. Bernard Fellay, Superior General of the Society of St. Pius X, on the new pastoral approach to marriage according to Cardinal Kasper

by The Voice Of Bombay's Catholic Laity
12-04-2014



Bishop Fellay
What will happen at the Extraordinary General Assembly of the Synod of Bishops that is to be held on October 5 – 19, 2014, dedicated to “the pastoral challenges for the family in the context of evangelization?” This question is aske d with great concern, since during the last Consistory, on February 20, 2014, Cardinal Walter Kasper, at the request of Pope Francis and with his emphatic support, presented the topic of the next Synod by making supposedly pastoral overtures that were doctrinally scandalous.

This presentation, which was initially
supposed to remain secret, was published in the press, and the agitated debates that it sparked among the members of the Consistory ended up being revealed as well. One university professor dared to speak about a veritable “cultural revolution” (Roberto de Mattei), and one journalist described as a “paradigm shift” the fact that Cardinal Kasper proposes that divorced-and-“remarried” Catholics could go to Communion, even without their earlier marriage being annulled: “at present that is not the case, based on Jesus’ very severe and explicit words about divorce.” (Sandro Magister)

Some prelates have spoken up against this change, such as Cardinal Carlo Caffara, Archbishop of Bologna, who asked: “What about the first ratified and consummated marriage? If the Church admits [the divorced-and-“remarried”] to the Eucharist, she must however render a judgment about the legitimacy of the second union. That is only logical. But then -as I asked-what about the first marriage? The second, they say, cannot be a true second marriage, because bigamy goes against the Lord’s words. And what about the first one? Is it dissolved? But the Popes have always taught that the power of the Pope cannot go that far: the Pope has no authority over a ratified and consummated marriage. The solution proposed (by Cardinal Kasper) leads one to think that the first marriage remains, but there is also a second form of cohabitation that the Church legitimizes…. The fundamental question is therefore simple: what about the first marriage? But no one gives an answer.” (Il Foglio, March 15, 2014)

One could add the serious objections formulated by Cardinals Gerhard Ludwig Müller, Walter Brandmüller, Angelo Bagnasco, Robert Sarah, Giovanni Battista Re, Mauro Piacenza, Angelo Scola, Camillo Ruini…. But these objections, too, remain unanswered.

We cannot wait, without speaking up, for the Synod to be held next October in the disastrous spirit that Cardinal Kasper wants to give to it. The attached study, entitled “The New Pastoral Approach to marriage according to Cardinal Kasper’” shows the gross errors contained in his presentation. Not to denounce them would amount to leaving the door open to the dangers pointed out by Cardinal Caffarra: “Therefore there would be such a thing as extramarital human sexuality that the Church considers legitimate. But that negates the central pillar of the Church’s teaching on sexuality. At that point someone might wonder: then why not approve of extramarital cohabitation? Or relations between homosexuals?” (Ibid.)

Whereas in recent months many families have demonstrated courageously against civil laws that, everywhere, are undermining the natural, Christian family, it is simply scandalous to see these same laws surreptitiously supported by churchmen who wish to align Catholic doctrine and morality with the morals of a de-Christianized society, instead of seeking to convert souls. A pastoral approach that scoffs at the explicit teaching of Christ on the indissolubility of marriage is not merciful but insulting to God, who grants His grace sufficiently to everyone; and it is cruel toward the souls who, when placed in difficult situations, receive the grace that they need in order to live a Christian life and even to grow in virtue, to the point of heroism.

Menzingen, April 12, 2014





+Bernard Fellay
Superior General of the Society of St. Pius X






Thanks to the Magazine The Ark
Download The Ark here

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

பரிசுத்த பாப்பரசர் அர்ச். ஐந்தாம் பயஸ் (St. Pius V, Pope)

பரிசுத்த பாப்பரசர் அர்ச். ஐந்தாம் பயஸ் (17 சனவரி 1504 – 1 மே 1572), 1566 முதல் 1572 வரை கத்தோலிக்க திருச்சபையை ஆட்சி செய்த 225வது திருத்தந்தையும் கத்தோலிக்க புனிதரும் ஆவார். இவரது சீரியப் பணியால்,திரெந்து பொதுச்சங்கத்தின் தீர்மானங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு கத்தோலிக்க விசுவாசத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இவரது ஞானஸ்தன பெயர் ஆன்டனியோ கிஸ்லியரி ஆகும்; 1518 முதல் மைக்கேல் கிஸ்லியரி என்று அழைக்கப்பட்டார்.

ஆன்டனியோ கிஸ்லியரி என்ற இயற்பெயர் கொண்ட 5ம் பயஸ், இத்தாலியின் மிலான் நகரில் போஸ்கோ என்ற இடத்தில் 1504 ஜனவரி 17ந்தேதி பிறந்தார். சிறு வயது முதலே கிறிஸ்தவ விசுவாசத்திலும் பக்தியிலும் வளர்ந்தார்.


14 வயதில் டொமினிக்கன் துறவற சபையில் நுழைந்தபோது, மைக்கேல் கிஸ்லியரி என்ற பெயரைப் பெற்றார். 1528ல் ஜெனோவா நகரில் குருப்பட்டம் பெற்றார். அதன்பின், பவியா நகருக்கு சென்று 16 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணி ஆற்றினார். 1550ல் ரோம் திரும்பிய இவர், திருத்தந்தையின் விநியோக அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டார்.


1556 செப்டம்பர் 14ந்தேதி, மைக்கேல் கிஸ்லியரி ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். சிறிது காலத்திலேயே 1557 மார்ச் 15 அன்று, திருத்தந்தை நான்காம் பால் (1555-59) இவரை கர்தினால் நிலைக்கு உயர்த்தினார்.
பரிசுத்த பாப்பரசர்
பரிசுத்த பாப்பரசர் நான்காம் பயஸ் (1559-65) மறைந்ததும் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்ட கர்தினால் மைக்கேல் கிஸ்லியரி, ஐந்தாம் பயஸ் (இத்தாலியன்: Pio V) என்னும் பெயரை ஏற்றுக்கொண்டார். இவர் தனது 62வது வயதில், திருச்சபையின் 225வது பரிசுத்த பாப்பரசராக 1566 ஜனவரி 17ந்தேதி பொறுப்பேற்றார்.


திருத்தந்தையர் வெள்ளை அங்கி அணியும் வழக்கத்தை இவரே தொடங்கி வைத்தார். அதற்கு முன்பு திருத்தந்தையர் சிவப்பு அங்கியை அணிவதே வழக்கமாய் இருந்தது. அதிக நேரம் செபம் செய்வது இவர் வழக்கமாக இருந்தது. அரசியல் குறுக்கீடுகளால் கத்தோலிக்க திருச்சபையில் நுழைந்திருந்த தவறான வழக்கங்களை ஒழிக்க திருத்தந்தை ஐந்தாம் பயஸ் பெரிதும் விரும்பினார்.
செயல்பாடுகள்


திருத்தந்தை 5ம் பயஸ் திருச்சபையின் பதவிகளை உறவு முறைப்படி பெறுவதையும், ஆன்மீகக் காரியங்களை விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தையும் ஒழிக்கப் பாடுபட்டார். திரெந்து நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற பொதுச்சங்கத்தின் தீர்மானங்களை செயல்படுத்தி திருச்சபையில் சீர்திருத்தம் ஏற்பட வழிவகுத்தார்.


திருச்சபையின் உண்மையான விசுவாசத்தை நிலை நிறுத்தவும், பிரிவினையாளர்களின் தவறான போதனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு ஒன்றைத் தயாரித்தார். திருப்பலியை முறைப்படுத்தும் வகையில் 1570ல் ரோமன் திருப்பலி புத்தகத்தை அறிமுகம் செய்து உலகெங்கும் உள்ளகத்தோலிக்க திருச்சபையின் பொது திவ்ய பலிபூசை நூலாக்கினார்.


இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத், இத்தாலி அரசன் 2ஆம் மேக்சிமிலியன் ஆகியோரின் எதிர்ப்புகளை சந்தித்தார். பிரான்ஸ், ஹாலந்து நாடுகளின் கொந்தளிப்பிற்கு இடையே துருக்கியரின் தாக்குதல்களையும் எதிர்கொண்டார்.


துருக்கிய வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கவும், கிறிஸ்தவ இளவரசர்களுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தவும் உழைத்தார். இதன் விளைவாகவும், கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட தொடர் செபமாலைபக்திமுயற்சியின் பலனாகவும், 1571 அக்டோபர் 7 அன்று லெப்பன்ட்டோ கடற்போரில் துருக்கியருக்கு எதிராக கிறிஸ்தவப் படைகள் வெற்றி பெற்றன. அதே நாளில் இவர் அன்னை மரியாவுக்கு, வெற்றியின் அன்னைவிழாவை ஏற்படுத்தினார். இவ்விழா பின்னாளில் செபமாலை அன்னை விழாவாக பெயர்மாற்றப்பட்டு இன்றும் கொண்டாடப்படுகின்றது.
புனிதர் பட்டம்







புனித ஐந்தாம் பயசின் உடல்.


6 ஆண்டுகள், 3 மாதங்கள், 24 நாட்கள் திருச்சபையை வழிநடத்திய பரிசுத்த பாப்பரசர் ஐந்தாம் பயஸ், இறுதியாக 1572 மே 1ந்தேதி தனது 68வது வயதில் மரணம் அடைந்தார். 1696ல் இவருக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. 1698ஆம் ஆண்டு, இவரது அழியாத உடல் மேரி மேஜர் ஆலயத்தில் அமைக்கப்பட்ட கல்லறைப் பேழையில் வைக்கப்பட்டு, இன்றளவும் பாதுகாப்பாக உள்ளது.


1672 மே 1 அன்று பாப்பரசர் 10ம் கிளமென்ட், பாப்பரசர் ஐந்தாம் பயசுக்கு அருளாளர் பட்டம் வழங்கினார். 1712 மே 24ந்தேதி 11ம் கிளமென்ட் இவரை புனிதர் நிலைக்கு உயர்த்தினார். 1713ல் இவரது திருவிழா மே 5ந்தேதி கொண்டாடப்படும் வகையில் ரோமன் நாட்காட்டியில் இணைக்கப்பட்டது. 1969ல் இவரது விழா ஏப்ரல் 30ந்தேதிக்கு மாற்றப்பட்டது.

கத்தோலிக்க கிறிஸ்துவக் குடும்பங்களின் மேன்மை


தாய்மார்கள் குழந்தை வளர்ப்பதற்கான கல்வியை நன்கு பெறவேண்டுமானால், அதன்  ஒருபகுதியாக, அவர்கள் இராணுவ மருத்துவமனையின் மனநல மருத்துவப்பிரிவை  சந்திக்க வேண்டும் என்று ஒருவர் வேடிக்கையாகக் கூறினார். அங்கே தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளை எப்பொழுதும் தங்களுடைய பிடியிலேயே வைத்ததன் விளைவாக உருவான அநேக மனநோயாளிகளைக் காணலாம். அப்பொழுது, உங்களுடைய குழந்தைகள் சுயாதீனமாக வாழக்கூடிய பிள்ளைகளாக வளர்வதற்கு உதவுவதையே, முதன்மையான நோக்கமாக நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதை அங்கு நீங்கள் எளிதில் புரிந்து கொள்வீர்கள்.
குருவானவரும், மனநல மருத்துவரும் பிரச்னைகளை வௌ;வேறு விதங்களில், வித்தியாசமான கோணங்களில் காண்பர். ஆனால், குழந்தைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தாய்மார்களின் நடத்தையைப் பற்றிச் சுட்டிக்காட்டும்போது, இருவரும் ஸ்திரமாக ஏகோபித்த கருத்தை வெளிப்படுத்துவர். குழந்தைகளை வளர்ப்பதில் தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளைப்பற்றிய அவ்விருவருடைய அறிவுரையின் சாராம்சம் பின்வருமாறு:
உங்களுடைய பிள்ளைகளிடம், நீங்கள், எப்பொழுதும் எல்லாவற்றையும் மிக நன்றாக அறிந்திருக்கும் சர்வாதிகாரிகளைப் போல் செயல்படாதீர்கள். உங்களுடைய குழந்தை தனக்கேற்புடைய வழியிலேயே காரியங்களை செயல்படுத்தலாம். அது திறமையற்றவிதமாகவும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும் இருக்கலாம். அப்பொழுது உங்களுடைய குழந்தையிடம் பொறுமையாக இருங்கள். அவன் தன் வழியிலேயே அவற்றை செய்யும்படி விடுங்கள். அப்பொழுது, தான் செய்வதில், எது சரி, எது தவறு என்பதை நடைமுறையில் கண்டறிவதற்கான சந்தர்ப்பத்தை நீங்கள் அவனுக்கு அளிக்க ஏதுவாக இருக்கும்.
உங்களுடைய பிள்ளைகளுக்காக நீங்கள் உயிரையே விட வேண்டாம். ஆனால், உங்களுடைய பிள்ளைகளின் நலன்களுக்காக நீங்கள் பரித்தியாகங்கள் செய்ய தான் வேண்டும். உங்களுக்கு மட்டுமே சொந்தமான சில பொருளை, உங்களுடைய மகன் கேட்கும்போது, அவன் குற்றஉணர்வு கொள்ளும்படியாக அவனுக்கு அதை மறுக்காதீர்கள். தன் பிள்ளைக்காக உயிரைப் பரித்தியாகம் செய்த தாய், தன் மகனுடைய கல்லூரி படிப்பின் கட்டணத்தைக் கட்டுவதற்காக இரவு நேரங்களில் துணிசலவை நிலையத்தில் இரவில் பணிபுரிந்துவந்தாள். அவன் கல்லூரியில் படிப்பை முடித்து பட்டமளிக்கும் விழாவிற்கு தன் தாயை வரவேண்டாம் என்றான். அவளுடைய எளிய உடை தான் அதற்கு காரணமாம். அதாவது எளிய தோற்றத்துடன் அங்கு வந்தால், அவனுக்கு அவமானமாக இருக்குமாம்.
உங்களுடைய பிள்ளை எல்லாவற்றிலும் உத்தமமான பிள்ளை என்று கருதாதீர்கள். சில தாய்மார்கள், தங்களுடைய பிள்ளைகள் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால், தங்களுடைய பிள்ளையினிடத்தில் என்ன குறை உள்ளது என்று அறிந்துகொள்ளாமல், ஆசிரியர்களிடம் என்ன குறை உள்ளது என்று கண்டறிவதற்காக பள்ளிக்கூடத்திற்கு வருவார்கள். கீழ்ப்படியாமைக்காக தன் பிள்ளை தண்டிக்கப்பட்டான் என்று அறியநேரிட்டபோது, அத்தகைய தாய்மார்கள், பள்ளிக்கூட அதிகாரிகளிடம், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்களை நிர்பந்திப்பார்கள். தாய்மார்களின் இத்தகைய செயல்பாடுகளினால், உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களிடம் காட்ட வேண்டிய மரியாதையை, அவர்களுடைய பிள்ளைகளிடம் குறைத்துவிடுவார்கள். இதன் மோசமான பின்விளைவு என்னவென்றால், அவர்களிடமும் அப்பிள்ளைகள் மரியாதையின்றி நடந்துகொள்வர்.
உங்களுடைய பிள்ளைகள் அண்டைவீட்டுப்பிள்ளைகளைப் போல மனித பலவீனங்களுடனும் குறைகளுடனும் இருக்கிறார்கள் என்று நீங்கள் தீர்மானிக்கும்போது, நீங்கள் பாதுகாப்பான மனநிலையில் இருக்கிறீர்கள் என்று உணர்ந்துகொள்ளுங்கள். வியாதியஸ்தரின் படுக்கையை நீங்கள் உங்களுடைய அரியணையாகக் கொள்ளாதீர்கள். சோம்பலில் மந்தமாக இருக்கும் தாய் தன் மேல் தன் பிள்ளைகள் இரக்கப்படுவதற்காகவும், தான் விரும்பும் காரியங்களை, தன்பிள்ளைகளைக்கொண்டு நிறைவேற்றுவதற்காகவும், நோயில் இருப்பதாக நடிப்பாள். இறக்கும் தருவாயில் இருக்கும்   தன் தாயின் விருப்பத்தை யார் தான் நிறைவேற்றாமல் இருப்பார்கள்? இவ்வேடத்திலேயே அவள், தான் விரும்புவதை அடிக்கடி அவள் பெற்றுக்கொள்வாள். ஆனால் இந்நிலைமை அவளுக்கு மிகக் குறைந்த காலம் வரை நீடிக்கும். இந்நிலையிலேயே அவள் தன் பிள்ளைகளிடத்தில் அவள் நடந்துகொள்வாளேயானால், நாளடைவில், அவளுடைய பிள்ளைகளுக்கு, அவள் மேல் இரக்கமும், மரியாதையும் இல்லாமல் போய்விடும்.
எப்பொழுதும் தன்னையே பிறரை கவரும் வகையில் அலங்கரித்துக்  கொண்டிருக்கும் பெண்மணியாக இருக்காதீர்கள். குடும்பத்தின் சாப்பாட்டிற்கு தேவையான சமையலை செய்வது, படுக்கையை சரிப்படுத்துவது, துணிகளை துவைப்பது போன்ற வீட்டுவேலைகளை தன் மதிப்பிற்கு கீழானவை என்று எண்ணும் ஒரு பெண் தாய்மை என்ற அலுவலுக்கு ஏற்புடையவள் அல்ல. அதே சமயம் அனைவரையும் மகிழவைக்கும் தோற்றத்தை, தாய்மார்கள் கொண்டிருக்க முயல வேண்டும். ஆனால், அதே நேரத்தில், தாய்மார்கள் தங்களுடைய உன்னத அந்தஸ்தின் கடமைகளை நிறைவேற்றும்போது, அனைவருடைய கவனத்தையும் அதிகமாக தம் பக்கம் கவர்ந்திழுக்கும் வசீகரத்தைக் கொண்டிருப்பார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். பருவ மங்கையருக்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளவும் அவர்களைப்போல் நடந்துகொள்ளவும் நீங்கள் துணிந்தாலோ, மற்றும் வீட்டு அலுவல்களை மிக இழிவாகக் கருதுவதுபோல உங்களுடைய மனப்பான்மை இருந்தாலோ, அதுவே, உங்களுடைய குழந்தைகளுக்கு தாய்மையும் அதன் பொறுப்புகளும் மதிப்பிற்குரியவை அல்ல என்று நீங்களே கற்பிப்பதுபோலாகிவிடும்.


உங்களுடைய குழந்தைக்கு நீங்கள் தான் மிக முக்கியமான ஆசிரியர் என்பதை அடிக்கடி சொல்லத் தேவையில்லை. வாலிப வயதை அடைந்த உங்களுடைய மகன், நீங்கள் அவனிடம் ஏற்படுத்திய பாதிப்பை, நீங்கள் கற்பனை செய்துபார்க்கக் கூடிய அளவை விட மிக அதிகமாக, அவனுடைய நடத்தையில் பிரதிபலிப்பதைக் காண்பீர்கள். அதாவது, நீங்கள் உங்களுடைய தாய் தந்தையருடைய குணாதிசயத்தைப் பிரதிபலிப்பதைப் போல, உங்களுடைய மகனும் உங்களுடைய குணநலன்களைப் பிரதிபலிப்பான். சர்வேசுரன் உங்களுக்குக் கொடுத்த கடமையின் பிரகாரம் அவனுக்கு வேண்டிய ஞானபயிற்சியை அளிக்க நீங்கள் தவறினாலும், அவனுடைய குணநலன்களில் உங்களுடைய குணநலன்களின் முத்திரையை பதித்துவிடுவீர்கள்.


ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

தபசுகால சிந்தனைக்கு:





நமதாண்டவர் அனைத்து புண்ணியங்களையும் தனது ஆத்துமத்தில் கொண்டிருந்தார். அவைகளை விசேஷவிதமாக தமது பாடுகளின் போது வெளிப்படுத்தினார். தமது பரம பிதாவின் மீது அவருக்கிருந்த நேசம், மனுக்குலத்தின் மட்டில் அவர் கொண்டிருந்த அன்பு, பாவத்தின் மீதான வெறுப்பு, தனக்கு எதிராகச் செய்யப்பட்ட அவமான நிந்தைகளை பொறுமையோடு ஏற்றுக்கொள்ளுதல், அவற்றிற்கு காரணமானவர்களை முழுமனதோடு மன்னித்தல், சாந்த குணம், தைரியம், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை, கீழ்ப்படிதல், இரக்கக்குணம் இவை அனைத்துமே அவரது கொடிய துக்கம் நிறைந்த பாடுகளின் போது பிரகாசமாய் ஒளிர்ந்தது.
கிறீஸ்துவின் பாடுகளைத் தியானிக்கும்போது, நாம் வாழ வேண்டிய வாழக்கையின் மாதிரிகையை அதில் காண்கிறோம். இம்மாதிரிகை வியக்கத்தக்கவைகளாக மட்டும் அல்லாமல், அதை பின்பற்றக்கூடியதாகவும், நமது சக்திக்கு உட்பட்டதாகவும் இருக்கிறது. கிறீஸ்துவின் ஞான சரீரத்தின் உறுப்புகளாய் இருக்கிற நாம், நம்முடைய சிரசாகிய கிறீஸ்துநாதருக்கு ஒத்தவிதமாய் மாற வேண்டும். அதற்கு அவருடைய பாடுகளின் போது வெளிப்படுகின்ற புண்ணியங்களை நாமும் கடைபிடிக்க கடமைப்பட்டிருக்கிறோம். இதனால்தான் நமதாண்டவர்: “…யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால் தன்னைத் தானே பரித்தியாகஞ் செய்து, தன் சிலுவையை அநுதினமும் சுமந்துகொண்டு என்னைப் பின் செல்லக்கடவான்” (லூக்.9:23) என்று அழைக்கின்றார்.
கிறீஸ்துவின் பாடுகளைத் தியானிப்பதால், நாம் கொண்டிருக்கும் விசுவாசத்தின் அளவிற்கு ஏற்ப, அவரின் புண்ணியங்களை நாமும் அனுசரிக்க தேவையான வரப்பிரசாத உதவியை நமக்குத் தருகிறார். இது எங்ஙனம்?
நமதாண்டவர் சேசுநாதர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவரிடமிருந்து வல்லமை புறப்பட்டு போய் மனிதர்களின் சரீர நோய்களைக் குணப்படுத்தியது. அவர்களின் மன அந்தகாரத்தை விரட்டியது. நாம் அவருடன் ஐக்கியப்படும் போது, விசுவாசத்தால் அவரோடு இணையும் போது இதே போன்று திகழ்கிறது. அன்று, அவரை நேசத்தோடு கல்வாரி மலைக்கு பின்சென்றவர்களுக்கு அல்லது சிலுவை உயர்த்தப்பட்டு பலியாக்கப்பட்ட போது, அங்கு இருந்தவர்களுக்கு விசேஷ வரப்பிரசாதங்களை பொழிந்தருளினார் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. அன்று அவரிடமிருந்து வல்லமை வெளியேறியது போல, இன்றும் நடக்கத்தான் செய்கிறது. விசுவாச உணர்வால் தூண்டப்பட்டு, சேசுவின் பாடுகளை நினைத்து துக்கிக்கும் போதும், அவரை நினைவால் பின்பற்றி அரசனின் நீதி மண்டபத்திலிருந்து, கல்வாரி வரை செல்லும் போதும், அவருடைய திருச்சிலுவையின் அருகில் வியாகுல மாதாவுடன் நிற்கையில் அன்று வழங்கிய வரப்பிரசாதத்தை இன்னமும் நமக்குத் தருகிறார்.
பாலைவனத்தில் அன்று இஸ்ராயேல் ஜனங்கள் மோயீசனுக்கு எதிராக முணுமுணுப்பு செய்ததற்குத் தண்டனையாக, சர்வேசுரன் சர்ப்பத்தை அனுப்பி கடிக்கச் செய்து சொல்லொண்ணா அவதிபட வைத்தார். ஆனால் அவர்கள் மனஸ்தாபப்பட்டதினால், மோயீசனுக்கு வெண்கலத்தினால் செய்யப்பட்ட சர்ப்பத்தை உயர்த்தும்படியும், அதைக் காண்பவர்கள் காப்பாற்றப்படுவர்கள் என்றும் கட்டளையிட்டார். நமதாண்டவர் வாக்கின்படி, இவ்வெண்கல சர்ப்பம் கிறீஸ்து சிலுவையில் உயர்த்தப்படுவதன் முன் அடையாளமேயன்றி வேறில்லை! அன்றியும் நான் பூமியினின்று உயர்த்தப்படுவேனாகில், எல்லாவற்றையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்என்றார். (அரு.12:32-33) சேசுநாதர் சிலுவைப்பலியின் வழியாக நமக்கு எல்லா வரப்பிரசாதங்களையும் பேறுபலன்களையும் சம்பாதித்தபடியால், நமக்கு ஒளியின் ஊற்றாகவும், வல்லமையின் கருவூலமாகவும் இருக்கிறார். ஆகையால்தான், தாழ்ச்சியுடனும், சிநேகத்துடனும் அவருடைய மனித சுபாவத்தை நோக்கும் போது, அது மிக்கப் பலன் அளிக்கவல்லதாக, வல்லமைமிக்கதாக இருக்கிறது.
ஆண்டவருடைய பாடுகளை விசுவாசத்துடனும், பக்தியுடனும் தியானித்தால், சர்வேசுரனுடைய அன்பும் நீதியும் நமக்கு வெளிப்படுத்தப்படும். அதோடு நமது தாழ்நிலையையும், பலவீனங்களையும், நமது ஒன்றுமில்லாமையையும் அறிந்து கொள்வோம். அதோடு நமது புத்தியறிவினால் நாம் அறிவதைவிட, மேலான விதத்தில் நமது பாவத்தின் கனாகனத்தையும் அதன் அருவருப்பையும் அறிய வருவோம்.
ஆண்டவருடைய பாடுகளைத் தியானிப்பதால் கிடைக்கின்ற பலன்களை சிறிது விளக்கியப் பிறகு, வாசித்து தியானிப்பதற்கு சில சிந்தனைகளை தருவது நல்ல பலனளிக்கும் என்று நம்புகிறோம்.
சேசுவின் பாடுகளின் தியானம்:
                வேதசாட்சிகளுடைய மரணத்தைப் பார்த்து திருச்சபை மிகவும் அக்களிப்புக் கொள்கிறது. ஏனென்றால் அவர்களுடைய மரணம் திருச்சபையினுடைய மகிமையாக, வெற்றியாகத் திகழ்கின்றது. அவர்களின் இரத்தம் திருச்சபையின் வித்தாக மாறுகின்றது. அதனால் திருச்சபை வளர்கிறது. வேதசாட்சிகளுடைய மரணத்திற்கு நாம் காரணமல்ல, அவர்களுடைய இரத்தம் நம்மை கறைப்படுத்துவதில்லை. ஆனால் திருச்சபை தனது மகா பரிசுத்த பத்தாவான சேசு கிறீஸ்துவின் பாடுகளை, மரணத்தைக் குறித்து மிகவும் துக்கிக்கிறது. விசனப்படுகிறது. எதற்கென்றால் அவருடைய பாடுகளுக்கு, இரத்தம் சிந்துதலுக்கு திருச்சபையின் மக்களாகிய நாமும் காரணமாக இருக்கிறோம். மெய்யாகவே சேசுநாதருடைய உயிரைப் பறித்த கொலையாளிகளாக இருக்கிறோம். ஆம், கடவுள் - மனிதனான சேசு 30 வெள்ளிக் காசுகளுக்கு விற்கப்படுவதற்கு - காட்டிக் கொடுப்பதற்கு, கன்னத்தில் அறையப்படுவதற்கு, பழித்து நிந்திக்கப்படுவதற்கு, இரத்தம் சிந்தி அகோரமாக சிலுவை மரணம் அடைவதற்கு நாம் தான் காரணம்! தனது நேசரின் மரணத்திற்கு தன்னுடைய பிள்ளைகளே காரணமாய் இருப்பதைக் கண்டு திருச்சபை மிகவும் துக்கப்படுகிறது. சேசு கிறீஸ்துநாதர் துன்பம் அனுபவிப்பதைக் கண்டும், அவரைத் துன்பப்படுத்துபவர்களுடைய கொடூரத் தன்மையைக் கண்டும் வேதனைப்படுகிறது திருச்சபை. அதனுடைய துக்கத்தோடு நாமும் துக்கித்து திரளான கண்ணீர் சிந்துவோமாக!
சேசுநாதர் ஜெத்சேமனித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்க்கிறார்.                (அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் எழுதிய சேசு கிறீஸ்துவின் பாடுகளும், மரணமும்என்ற நூலிலிருந்து)
I
இதோ நம்முடைய நேச ஆண்டவர் ஜெத்சேமனி என்னும் தோட்டத்தில், தன்னுடைய கசப்பான பாடுகளை அனுபவிப்பதற்கு மனமுவந்து கையளிக்கிறார். அவர் பயப்படவும், சலிப்படையவும்” (மாற்.16:33) “துயரப்படவும், ஆயாசப்படவும்” (மத்.26:37) தொடங்குகிறார்.
முதலில் தாம் அடையவிருக்கும் மரணத்தைக் குறித்தும்;, படப்போகும் பாடுகளைக் குறித்தும், நினைத்து, யோசித்து பயப்படுகிறார். நம் ஆண்டவர், தானாக முன்வந்து தன்னையே இப்பாடுகளுக்குக் கையளிக்கிறார். அப்படியானால் பின் ஏன் பயப்பட வேண்டும்? “அவர் தானே இஷ்டப்பட்டு நிவேதனமாயினார் (பலிப்பொருளானார்)” (இசை.53:7) அவர் தாமே விரும்பி அல்லவா தன்னையே ஒப்புக்கொடுத்தார் என்கிறார். இப்பாடுகளின் நேரத்திற்கு விரும்பி அல்லவா காத்திருந்தார். சற்று முன்னர்தான், இராப்போஜனத்தின் போது, “நான் பாடுபடுவதற்கு முன்னே இந்தப் பாஸ்காவை உங்களோடு கூட உண்ணும்படி ஆசைமேல் ஆசையாயிருந்தேன்…” (லூக்.22:15) என்று சொன்னார் அன்றோ? இப்படிக் கூறியவர் கொடூர மரண பயத்தால் ஆட்கொள்ளப்பட்டு, தன்னுடைய பிதாவை நோக்கி, “என் பிதாவே! கூடுமாகில் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு அகலக்கடவது. ஆகிலும் என் மனதின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்” (மத்.26:39) என்று எப்படி அபயமிடுகிறார்? வந்.பீட் என்பவர் இந்த ஆச்சரியமான கேள்விக்கு பதில் தருகையில் “…இப்படிச் சொல்லியது, தான் மெய்யாகவே மனிதனாக இருக்கிறார் என்பதைக் காண்பிக்கவேஎன்று கூறுகிறார். நமது நேச இரட்சகர் தன்னுடைய மரணத்தினால், நம் மேல் அவர் கொண்டிருந்த நேசத்தைக் காண்பித்தது மட்டுமின்றி, தான் (சில பதிதர்கள் தேவ தூஷணம் சொல்வது போல்) அசாதாரணமான சரீரத்தில்அல்லது தனது தெய்வீகத்தின் உதவியால் எந்த விதமான துன்ப வருத்தமின்றி இறந்தார்என்று எண்ணாதவாறு செய்வதற்காகவே, இந்த அபயக் குரலை தனது பிதாவை நோக்கி எழுப்பினார். இந்தக் கூக்குரல், தனது ஜெபத்தை பிதா கண்டிப்பாய் கேட்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, இதன் மூலம் அவர் மெய்யாகவே மனிதனாய், மரணப்பயத்தால் பீடிக்கப்பட்டு துன்ப வருத்தங்களை அனுபவித்து மரித்தார் என்பதற்காகவே!

II            
                சலிப்படையத் தொடங்கினார்”. சேசுநாதர் தமக்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த வேதனைகளை, கொடூரத்தை நினைத்த மாத்திரத்தில் சலிப்படையலானார். சலிப்படைந்திருக்கிற ஒருவருக்கு கரும்புகூட கசப்பானதாகத்தான் இருக்கும். தன்னுடைய மனக் கண்களுக்கு முன் காண்பிக்கப்பட்ட கொடூரமான காரியங்கள், தனது வாழ்வின் இறுதியின் கொஞ்ச காலத்தில் அவருடைய ஆத்துமத்திலும், சரீரத்திலும், அகத்திலும் புறத்திலும், தாம் அனுபவிக்க இருந்த அனைத்து சித்திரவதைகளும், சேசுநாதரை எவ்வளவு மனச்சலிப்படையச் செய்திருக்கும்!
                அவ்வேளையில் அவர் அனுபவிக்கவிருக்கும் வாதைகள், யூதர்களிடமிருந்தும், உரோமை படை வீரர்களிடமிருந்தும் பெறவிருக்கும் நிந்தை அவமானங்கள், ஏளனப் பேச்சுக்கள், நீதிபதிகளின் அநீதங்கள், அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவராய், மனிதர்களாலும் ஏன், சர்வேசுரனாலும் கைவிடப்பட்டவராக மரணமடையும் காட்சி என இவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அவருடைய மனக் கண்களுக்கு முன்பாக வந்தன. இதனால் சலிப்படைகிறார். அதன் காரணமாகத்தான் அவர் தம் பரம பிதாவை நோக்கி ஆறுதலுக்காக ஜெபித்தார். ஒரு தேவதூதன் அவருக்குத் தோன்றி அவரைத் தேற்றினார்” (லூக்.22:43) சம்மனசு வந்து பணிவிடை செய்ததன் விளைவாக தெம்பு வந்தது. ஆனால் இத்தெம்பு அவருடைய பாடுகளைக் குறைப்பதற்குப் பதிலாக அவற்றை அதிகரித்தது என்று வந்.பீட் கூறுகிறார். இந்த தெம்பு அவருடைய துக்கத்தை தணிப்பதற்கு பதிலாக அதிகப்படுத்தியது. ஆம். சம்மனசுசானவர், சேசு மனிதர்கள் மேல் கொண்ட அன்பின் காரணமாகவும், பிதாவின் மகிமைக்காகவும் இன்னும் அதிக துன்பப்படும்படியாகவும் அவரைத் தேற்றினார்.
                ஆ! என் நேச ஆண்டவரே! இந்த முதல் போராட்டம் எப்பேர்ப்பட்ட துன்பத்தை உமக்கு வருவித்தது! உம்முடைய சரீர பாடுகளின் போது, சாட்டைகளால் அடிக்கப்படுதல், முள்முடி சூட்டப்படுதல், ஆணிகளால் அறையப்படுதல் போன்றவைகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக வந்தன. ஆனால், ஜெத்சேமனி தோட்டத்திலோ எல்லா பாடுகளும் ஒரே நேரத்தில் வந்து நசுக்கியதே! இவையனைத்தையும் என் மேல் வைத்த நேசத்திற்காக, எனது நலனுக்காக அல்லவோ ஏற்றுக் கொண்டீர் சுவாமி!
                ஓ என் தேவனே! கடந்த காலத்தில் உம்மை நான் நேசியாமல் போனதற்காகவும், உம்முடைய சித்தத்தை செய்வதற்குப் பதிலாக, எனது சொந்த சபிக்கப்பட்ட சுகங்களையும், இன்பங்களையும் நாடினதற்காக மெய்யாகவே மனஸ்தாபப்படுகிறேன். இவைகளை இப்போது என் முழுமனதோடு வெறுக்கிறேன். என்னை மன்னித்தருளும் சுவாமி.

வியாழன், 3 ஏப்ரல், 2014

ஜப்பானில் மிகப் பெரிய புதுமை:

அஞ்ஞான ஜபபான் தேசம் முழுவதையும் மெய்யங்கடவுளாம் சேசு மன்றாடும்படிக் கேட்டுக்கொண்டனர்.அதனால் தெளிவும்,நம்பிக்கையும் பெற்ற அந்த பிரபு தன் இரு ஊழியர்களுடன் சவேரியார் இருக்குமிடத்திற்கு வந்து அவரது பாதங்களிலே விழுந்து அழுது மன்றாடினான்.மகளை இழந்த துயரத்திலேயே தானும் மரித்துப்போய் விடுவதாகக் கூறினான்.அவனது துயரத்தைக்கண்டு மனமிரங்கிய சவேரியார் அம்மனிதனைத் தேற்றி,அவன் கண்களில் ஓடிய கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூறினார்.பின்னர் தம்முடைய உதவியாளரான ஜான் பெர்னாண்டஸ் சகோதரரை அழைத்து இருவரும் சற்றுநேரம் உருக்கமாக ஜெபித்தனர்.பின் அவரை அம்மனிதனிடம் அனுப்பி உம்முடைய மகள் உயிரோடு இருக்கிறாள் என்று சொல்லச் சொன்னார்.சகோதரர் கூறியதைக் கேட்ட அந்த மனிதன் அதை நம்பி ஆர்வத்தோடு தன் வீட்டை நோக்கி ஓடினான்.அவன் வீட்டை நெருங்கவும் அவனது ஊழியர்கள் முகமலர்ச்சியோடு அவனை எதிர்கொண்டு ஓடிவந்தார்கள்.ஏனெனில் அவனது மரித்த மகள் உயிர்த்தெழுந்தது மட்டுமல்ல,பூரண சரீர சுகத்தோடும் இருந்தாள்!தன் தந்தையை எதிர்கொண்டாள்.மகளை உயிரோடு கண்ட அந்த மனிதன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.மகிழ்வோடு மகளை அரவணைத்து விசாரித்தான்.அவளும்,தான் மரணமடைந்த உடனே இரண்டு பயங்கர உருவங்கள் அவளைப்பிடித்துச் சென்று அணையாது எரியும் நெருப்புக் கடலில் தள்ளிவிட இருந்த சமயத்தில்,அவள் முன்பின் பார்த்தறியாத மரியாதைக்குரிய இருவர் அங்கே தோன்றி தம்மை அந்த உருவங்களின் பிடியிலிருந்து மீட்டு உயிரளித்து,குணமளித்ததாகக் கூறினாள்.உடனே அவளது தகப்பன்,சாவேரியாருக்கு நன்றி கூறுவதற்காக தன் மகளையும் அழைத்துக்கொண்டு அவரிடம் சென்றான்.சவேரியாரையும்,ஜான் சகோதரரையும் கண்ட மாத்திரத்தில் அந்த பெண் "ஆச்சரியத்தோடு என்னை எரி நெருப்பிலிருந்தும்,சாவிலிருந்தும் காப்பாற்றியவர்கள் இவர்களே "என்று கூறி அவர்கள் முன் முழங்காலிட்டாள்,பின் தகப்பனும்,மகளும் தங்களுக்கு ஞானஸ்நானம் தரும்படி கேட்க,அவர்களும்,அவர்களது உற்றார் உறவினர் அனைவரும் பெருந்திரளாக ஞானோபதேசம் கற்று சவேரியார் கையால் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவர்களானர்கள்.நகரின் புகழ்பெற்ற பிரபுவின் குடும்பம் கிறுஸ்துவர்களான செய்தி காட்டுத்தீயைப்போல எங்கும் பரவியது.கேட்டவர்கள் வியந்து சவேரியாரின் போதனைகளை ஏற்கத் தொடங்கினார்கள்.நாளுக்கு நாள் அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது!அதனைக் கண்டு நரகக் கூளிகள் சகிக்குமா?அவைகளும் சவேரியாருக்கு எதிராக புத்தப்பிச்சுக்களை ஏவிவிட்டன.

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மெலானிக்குக் காட்டப்பட்ட உத்தரிக்கிற ஸ்தலக் காட்சி;


 1846-ல் பிரான்ஸ் நாட்டிலுள்ள சலேத் என்னும் மலையில் மாதாவின் காட்சி பெற்றவள் மெலானி.இவள் சிறந்த காட்சித் தியானியும் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரமாயுமிருந்தாள்.அநேக காட்சிகள் அவளுக்கு அருளப்பட்டன.அவற்றுள் ஒன்று உத்தரிக்கிற ஸ்தலத்திலன் காட்சி.அதை அவளுடைய வார்த்தைகளிலேயே இங்கு தருகிறோம்.ஒரு நாள் நான் நேசித்த எல்லாவற்றுக்கும் மேலான நன்மையின் அளவில்லாத இரக்கத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.நான் சாஷ்டாங்கமாக விழுந்து முகத்தைத் தரையில் பதித்தபடி ஜெபிக்கையில்,அது எப்படி நடந்ததென்று தெரியவில்லை,ஒரு வகையான உறக்க மயக்கத்தை உணர்ந்தேன்.அது ஒரு கனவு போலிருந்தது.என் காவல் சம்மனசைக் கண்டேன்.அவர் என்னை நோக்கி சகோதரி என்னுடன் வா.சர்வேசுரனின் சிநேகிதர்களாயிருக்கிற ஆன்மாக்களை உனக்குக் காண்பிப்பேன்.அவரை அவர்கள் நேசிக்கிறார்கள்.ஆனால் அவரை அடைந்துகொள்ளும் மகிழ்ச்சியைப் பெற முடியாமலிருக்கிறார்கள்.ஏனென்றால் பாவத்தால் அழுக்கடைந்திருக்கிறார்கள்.அவர்கள் சுத்திகரிக்கப்பட வேண்டியிருக்கிறது.ஆயினும் நீ அவர்களுக்காக நித்திய பிதாவுக்கு,சேசு கிறுஸ்துவின் திரு இரத்தத்தையும் பாடுகளையும் ஒப்புக்கொடுக்க மனதாயிருந்தால் அவர்களின் பாவங்கள் கழுவப்பட்டு கடவுளுடன் ஐக்கியமாவார்கள் என்று கூறினார்.திடீரென நாங்கள் இருவரும் உயரே பறந்ததுபோலிருந்தது. பின் அப்படியே கீழிறங்கினோம்.பூமி திறந்தது.நாங்கள் பூமிக்குள் ஒரு இருண்ட குகைக்குள் புகுந்தோம்.அங்கே ஒரு பயங்கரக் காட்சி!எல்லா வகையான துண்பங்களும் வாதைகளும் அங்கே காணப்பட்டன.திரவ நெரிப்பு சுவாலைகளுடன் கலந்து காணப்பட்டது.பசியின் பயங்கர கொடுமையும் தாகத்தின் கொடுமையும் திருப்திப் படுத்தப்படாத ஆசைகளின் கொடுமையும் இருந்தன.இந்த ஆன்மாக்கள் பெரும் கூட்டமாய் மிகவும் கடுமையான வேதனைகளுக்குள் அமிழ்ந்தியிருந்தார்கள்.அவர்களில் ஒரே மாதிரியாக வேதனைப்பட்ட இரண்டு ஆன்மாக்களை நான் காண முடியவில்லை,எல்லாத் தண்டனைகளும் வேறு வேறாகவே இருந்தன.கட்டிக்கொள்ளப்பட்ட பாவங்களின் தீய நோக்கத்திற்குத் தக்கபடியும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.அக்காட்சியை என்னால் பார்க்க சகிக்கவில்லை.நான் ஜெபித்தேன்.தங்களின் தண்டனைகளை ஏற்றுக்கொண்ட அந்த எல்லாப் புனித ஆன்மாக்களுக்காகவும் ஜெபித்து வேண்டிக் கொண்டேன்.சேசுகிறுஸ்துவின் பாடுகளாலும்,மரணத்தாலும் அவ்வான்மாக்களுக்கு சற்று ஆறுதலலிக்க வேண்டுமென்று கேட்டேன்.மானிட இரட்சிப்பின் அலுவலில் உடன் பங்காளியாயிருந்த மரியாயின் அன்பினிமித்தம் மன்றாடினேன். அதே சமயத்தில் ஆண்டவரின் தூதன் அங்கு வரக் கண்டேன்.அவர் உலகத்தின் பாவங்களைப் போக்குகிற செம்மறியின் இரத்தம் நிறைந்த பாத்திரத்தைக் கொண்டு வந்தார்.அதில் சில துளிகளை நெருப்பின் சுவாலைகள்மேல் தெளித்தார்.உடனே அவை அவிந்தன.பின்,விசுவாசிகளின் உதவியை எதிர்பார்த்திருந்த ஆன்மாக்களின் மேல் தெளித்தார்.அவர்கள் விடுதலையடைந்து சர்வேசுரனின் அரவனைப்பிற்குள் பறந்து சென்றார்கள்....ஓ! தேவநீதியின் கோர கொடிய அவஸ்தைகளையும் பயங்கரத்திற்குரிய விழுங்கும் சுவாலைகளையும் பாவிகளும் தேவ ஊழியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களும் கண்டுபிடித்தாலல்லோ தாவிளை!மறுக்கப்படாத ஒவ்வொரு ஆசாபாசமும் அதற்குரிய தண்டனையைக் கொண்டிருக்கிறது.தங்கள் வாய்கள் நிரம்பிய திரவ நெருப்பைப் பருகிய பெருந்தொகையான ஆன்மாக்களை நான் கண்டேன்.அவர்கள் சர்வேசுரனுடைய ஆராதனைக்குரிய நாமத்தையும்,நற்கருணை தேவ திரவிய அனுமானத்தையும்,அமலோற்பவ கன்னி மரியாயையும் தூஷணித்தவர்களே.எல்லா ஆன்மாக்களும் நெருப்பால் சுத்திகரிக்கப்படவில்லை.நீடிக்கிற வாதையால் வேதனைப்படுகிற சில ஆத்துமங்களைப் பார்த்தேன்.எல்லா வகையான வேதனைகளும் அங்கே உள்ளன.எல்லா மாதிரியிலும் எல்லாத் தன்மைகளிலும் உள்ளன.நான் இப்படிச் சிந்தித்தேன்.கடவுள் நீதி என்னும் தம் இலட்சணம் மகிமைப்படுத்தப்பட விரும்புகிறார் என்று.நான் கட்டிக் கொண்ட எல்லாப் பாவங்களின் கறைகளையும் பரிகரிப்பதற்கு நான் இந்த இடத்திற்கு வருவேன் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை. அன்பான சகோதர சகோதரிகளே அன்னையின் காட்சியைப் பெற்ற மெலானியே நான் அந்த இடத்திற்கு போவேன் என்னு சொன்னால் நம் நிலமை என்ன சிந்திப்போம் மனமாற்றம் அடைவோம்.பாம்பை கண்டால் விலகி ஓடுவதைப் போல பாவத்தைக் கண்டால் விலகி ஓடுவோம்.