அஞ்ஞான ஜபபான் தேசம் முழுவதையும் மெய்யங்கடவுளாம்
சேசு மன்றாடும்படிக்
கேட்டுக்கொண்டனர்.அதனால் தெளிவும்,நம்பிக்கையும் பெற்ற அந்த பிரபு தன் இரு
ஊழியர்களுடன் சவேரியார் இருக்குமிடத்திற்கு வந்து அவரது பாதங்களிலே
விழுந்து அழுது மன்றாடினான்.மகளை இழந்த துயரத்திலேயே தானும் மரித்துப்போய்
விடுவதாகக் கூறினான்.அவனது துயரத்தைக்கண்டு மனமிரங்கிய சவேரியார்
அம்மனிதனைத் தேற்றி,அவன் கண்களில் ஓடிய கண்ணீரைத் துடைத்து ஆறுதல்
கூறினார்.பின்னர் தம்முடைய உதவியாளரான ஜான் பெர்னாண்டஸ் சகோதரரை அழைத்து
இருவரும் சற்றுநேரம் உருக்கமாக ஜெபித்தனர்.பின் அவரை அம்மனிதனிடம் அனுப்பி
உம்முடைய மகள் உயிரோடு இருக்கிறாள் என்று சொல்லச் சொன்னார்.சகோதரர்
கூறியதைக் கேட்ட அந்த மனிதன் அதை நம்பி ஆர்வத்தோடு தன் வீட்டை நோக்கி
ஓடினான்.அவன் வீட்டை நெருங்கவும் அவனது ஊழியர்கள் முகமலர்ச்சியோடு அவனை
எதிர்கொண்டு ஓடிவந்தார்கள்.ஏனெனில் அவனது மரித்த மகள் உயிர்த்தெழுந்தது
மட்டுமல்ல,பூரண சரீர சுகத்தோடும் இருந்தாள்!தன் தந்தையை எதிர்கொண்டாள்.மகளை
உயிரோடு கண்ட அந்த மனிதன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.மகிழ்வோடு மகளை
அரவணைத்து விசாரித்தான்.அவளும்,தான் மரணமடைந்த உடனே இரண்டு பயங்கர
உருவங்கள் அவளைப்பிடித்துச் சென்று அணையாது எரியும் நெருப்புக் கடலில்
தள்ளிவிட இருந்த சமயத்தில்,அவள் முன்பின் பார்த்தறியாத மரியாதைக்குரிய
இருவர் அங்கே தோன்றி தம்மை அந்த உருவங்களின் பிடியிலிருந்து மீட்டு
உயிரளித்து,குணமளித்ததாகக் கூறினாள்.உடனே அவளது தகப்பன்,சாவேரியாருக்கு
நன்றி கூறுவதற்காக தன் மகளையும் அழைத்துக்கொண்டு அவரிடம்
சென்றான்.சவேரியாரையும்,ஜான் சகோதரரையும் கண்ட மாத்திரத்தில் அந்த பெண்
"ஆச்சரியத்தோடு என்னை எரி நெருப்பிலிருந்தும்,சாவிலிருந்தும்
காப்பாற்றியவர்கள் இவர்களே "என்று கூறி அவர்கள் முன் முழங்காலிட்டாள்,பின்
தகப்பனும்,மகளும் தங்களுக்கு ஞானஸ்நானம் தரும்படி கேட்க,அவர்களும்,அவர்களது
உற்றார் உறவினர் அனைவரும் பெருந்திரளாக ஞானோபதேசம் கற்று சவேரியார் கையால்
ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவர்களானர்கள்.நகரின் புகழ்பெற்ற பிரபுவின்
குடும்பம் கிறுஸ்துவர்களான செய்தி காட்டுத்தீயைப்போல எங்கும்
பரவியது.கேட்டவர்கள் வியந்து சவேரியாரின் போதனைகளை ஏற்கத்
தொடங்கினார்கள்.நாளுக்கு நாள் அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை
உயர்ந்தது!அதனைக் கண்டு நரகக் கூளிகள் சகிக்குமா?அவைகளும் சவேரியாருக்கு
எதிராக புத்தப்பிச்சுக்களை ஏவிவிட்டன.
Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
வியாழன், 3 ஏப்ரல், 2014
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக