பிப்ரவரி 05ம் தேதி
முதல் இந்திய வேதசாட்சியான அர்ச்சு கொன்சாலோ கார்சியா திருநாள்
இவர், கிபி 1556ம் வருடம், இந்தியாவில் மகாராஷ்டிராவிலுள்ள போர்த்துக்கீசிய காலனியான வாஸை என்கிற பகுதியின் பாஸ்சினிலுள்ள ஆகாஷி என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு போர்த்துக்கீசிய படை வீரர். தாய், வாஸையைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே தாயை இழந்தார்; இவர், ஆகாஷியிலிருந்த சேசுசபைக் குருக்களின் அனாதை இல்லத்தில் வளர்ந்தார்.
ஆகாஷி என்கிற இந்த கிராமம், கப்பல் கட்டுமானத் தளமாயிருந்தது. ஆனால், போர்த்துக்கீசிய கப்பல்களையும், கடல் பலத்தையும், தகர்க்கத் தேடிய அராபிய கடற் கொள்ளையரிடமிருந்தும், அவர்களுடைய தாக்குதல்களிலிருந்தும், அனாதை இல்லத்தைப் பாதுகாப்பதற்காக, சேசுசபைகுருக்கள், அனாதை இல்லத்தை, ஆகாஷியிலிருந்து வாசையிலுள்ள போர்த்துக்கசிய கோட்டைக்கு, இடம் மாற்றினர்.
அங்கு கோட்டையினுள் சேசு சபையின் தலைமையகம் இருந்தது. அங்கு ஆண்டவரின் மகா பரிசுத்தத் திருநாமத்திற்குத் தோத்திரமாக 1562ம் வருடம் கட்டப்பட்ட தேவாலயம் இருந்தது. இப்போது, இது, அர்ச்சு கொன்சாலோ கார்சியா தேவாலயமாக இருக்கிறது!
இந்த கோட்டைக்குள் கொன்சாலோ வளர்ந்தார். இங்கு சங்க செபாஸ்டின் கொன்சால்வஸ் என்ற சேசுசபை குருவானவர், இவரை 8 வருட காலமாக, 1564ம் வருடம் முதல், 1572ம் வருடம் வரை கவனித்துக் கொண்டார். இவருக்கு 16 வயதானதும், ஜப்பானுக்கு இவரைக் கூட்டிச் சென்றார்; அங்கு சேசுசபைக்கு அதிக வேதபோதக துறவியர் தேவைப்பட்டதால், இவரைக் கூட்டிச்சென்றார்.
ஜப்பானில், கொன்சாலோ, 8 வருடங்கள் உபதேசியாராக இருந்தார்; சேசு சபை குருக்களுடன் சேர்ந்து, ஞான உபதேசத்தை சிறுவர்களுக்குக் கற்பித்து வந்தார். சேசு சபையில் சேர்வதற்கு, இவர் விண்ணப்பித்துக் கொண்டே இருந்தார். ஆனால், ஏதோ காரணத்தினால், இவரை சேசு சபை துறவியர், சேர்த்துக் கொள்ளாமலே இருந்தனர்.
கொன்சாலோ, சேசு சபையை விட்டு வெளியேறி, அல்காவோ என்ற ஐப்பானிய நகரில் ஒரு வர்த்தகனாக தொழில் செய்தார். இவருடைய வர்த்தகத் தொழில் வளமடைந்தது; பெரிய வர்த்தகனாகி, ஜப்பானிய உயர் குடி மக்களுடைய நட்பைப் பெற்றார்; ஐப்பானிய மொழியிலும் தேர்ச்சியடைந்தார்.
வியாபார சம்பந்தமாக, மகாவ், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இவர் செல்ல நேரிட்டது. இங்கு, இவர் ஒரு தாழ்ச்சி நிறைந்த ஒரு பிரான்சிஸ்கன் துறவியை சந்தித்தார்; ஜான் என்ற அந்த பிரான்சிஸ்கன் துறவி இவரிடம் மறுபடியும், துறவற சபையில் உட்படத் தேவையான ஆர்வத்தையும் தேவசிநேகத்தையும் தூண்டினார்.
இறுதியாக, 1592ம் வருடம், மே 26ம் தேதியன்று, இவர், பிலிப்பைன்ஸிலுள்ள பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்தார். அச்சமயம், பிலிப்பைன்ஸிலுள்ள ஸ்பெயின் ஆளுநர், சகோ. கொன்சாலோவை, ஐப்பான் மொழியை அறிந்த மொழிபெயர்ப்பாளராக, ஐப்பானுக்கு அரசாங்க ரீதியாக அனுப்பிய குழுவினருடன் கூட அனுப்பி வைத்தார். அந்த குழுவில், இவருடன், சங்க பீட்டர் பாப்டிஸ்டாவும் சென்றார்.
ஜப்பானில், கத்தோலிக்க வேதபோதக அலுவல் வெற்றிகரமாக, வளர்ச்சியடைந்ததைக் கண்ட புத்த மத குருக்கள் கோபமடைந்தனர். கத்தோலிக்க குருக்கள், ஸ்பெயின் அரசனுடைய தூதுவர்கள் என்றும், அவர்கள், ஐப்பான் நாட்டை கைப்பற்ற, ஸ்பெயின் அரசனுக்கு உதவுகின்றனர் என்றும், ஒரு அந்நிய மதத்தைப் பரப்பி, மக்களை எல்லாம், ஐப்பான் அரசனுக்கு எதிராக புரட்சி செய்யத் தூண்டுகின்றனர் என்றும், ஒரு வதந்தியை, புத்த மதகுருக்கள் பரப்பினர்.
இதன் காரணமாக, ஜப்பான் அரசனுடைய ஆணையின் படி, ஐப்பானிலுள்ள எல்லா கத்தோலிக்க வேதபோதகக் குருக்களும் அவர்களுக்கு ஜப்பானில் உதவி செய்த எல்லோரும், 1596ம் வருடம், டிசம்பர் 8ம் தேதியன்று, கியோட்டோ நகரில் கைது செய்யப்பட்டனர்.
1597ம் வருடம், பிப்ரவரி 5ம் தேதியன்று, நாகசாகியிலுள்ள ஒரு மலையில், இந்த கைதிகள் 26 பேரும், ஹிடியோஷி டோயோ டோமி என்ற ஜப்பான் அரசனின் ஆணைப்படி, சிலுவையில் அறையப்பட்டு வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்.
இந்த 26 வேதசாட்சிகள்:
- 4 ஸ்பானிஷ் பிரான்சிஸ்கன் துறவியர்
- 1 மெக்சிகன் பிரான்சிஸ்கன் துறவி
- 1 இந்திய பிரான்சிஸ்கன் துறவி - சகோ. கொன்சாலோ கார்சியா
- 3 ஐப்பானிய சேசுசபை துறவிகள்
- 17 ஜப்பானிய கிறீஸ்துவர்கள் (இதில் மூன்று சிறுவர்கள்)
இவர்களில் மூன்று சிறுவர்கள் ஆக மொத்தம் 26 பேரும் சிலுவையில் உயர்த்தப்பட்டபோது, அவர்களுக்கு வேத சாட்சிய முடியை அளிப்பதற்கான தேவ வரப்பிரசாதத்தை அளித்ததற்கு, சர்வேசுரனுக்கு நன்றியறிதலாக தே தேயும் பாடலை லத்தீன் மொழியில் சந்தோஷத்துடன் பாடினர். பின்னர், ஐப்பானிய படைவீரர்கள், சிலுவையில் அறையப்பட்ட ஒவ்வொருவரின் இரு விலாப் பக்கங்களிலும் ஈட்டியால் ஊடுருவிக் குத்தினர்.
இந்த 26 வேதசாட்சிகளுக்கு, 1627ம் வருடம், திருச்சிலுவைத் திருநாள் செப்டம்பர் 14ம் தேதியன்று, 8ம் உர்பன் பாப்பரசர் முத்திப்பேறுபட்டத்தையும், 1862ம் வருடம், 9ம் பத்திநாதர் பாப்பரசர் ஜூன் 8ம் தேதியன்று அர்ச்சிஷ்டப்பட்டத்தையும் அளித்தார்கள்.
சீனாவிலுள்ள மகாவ் நகரில் அர்ச்சு சின்னப்பர் தேவாலயத்தில், 26 வேதசாட்சிகளுடைய அருளிக்கங்களான பரிசுத்த எலும்புகள் பீடத்தில் பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த தேவாலயம், இப்போது, அருங்காட்சியகமாக இருக்கிறது.
அர்ச்சு கொன்சாலோ கார்சியாவின் இறுதி வார்த்தைகள்:
"ஆண்டவரே! என்னால் செய்யக்கூடியதை எல்லாம் செய்தேன். என் உயிரை பலியாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்; இந்த என் பரித்தியாகத்தை ஏற்றுக்கொள்ளும். எனக்கு இன்னும் கூடுதலாக ஆயிரம் உயிர்கள் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் தேவரீருக்கு ஒப்புக் கொடுத்திருப்பேன்!"
அர்ச்சு கொன்சாலோ கார்சியாவே! அர்ச்சு 26 வேதசாட்சிகளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
St. Gonzalo Garcia – The First Indian Canonized Martyr (Feast Day: February 5th)
Who Was St. Gonzalo Garcia?
Gonzalo Garcia was born in 1556 in Agashi, a village in Bassein (now Vasai, India). His father was a Portuguese soldier, and his mother was a native of Bassein. After losing his mother at a young age, Gonzalo was placed in the care of the Jesuit orphanage in Agashi. Due to frequent attacks by Arab pirates, the Jesuits relocated the orphanage to Bassein Fort for safety.
He was raised under the guidance of Fr. Sebastian Gonzalves and lived at the Jesuit headquarters, the Church of the Holy Name, which was built in 1562 and is now called St. Gonzalo Garcia Church.
Missionary Journey to Japan
At the age of 16, Gonzalo accompanied Fr. Sebastian to Japan to assist in the Jesuit missions. He worked as a catechist for eight years but was repeatedly denied entry into the Jesuit Order for unknown reasons. Losing hope, he left the Jesuits and became a successful merchant in Alacao, Japan, building relationships with influential Japanese leaders.
During his business travels to Macau and the Philippines, he met Br. John, a Franciscan friar, who rekindled his religious zeal. Eventually, Gonzalo joined the Franciscans in Manila. On May 26, 1592, he was selected as a translator for a diplomatic mission to Japan due to his fluency in the Japanese language.
Persecution and Martyrdom
The success of the Catholic missionaries in Japan led to tensions with Buddhist priests, who accused them of being agents of the Spanish king. As a result, the Japanese ruler, Hideyoshi Toyotomi, ordered the arrest of all Catholic missionaries and their Japanese followers on December 8, 1596.
Gonzalo and 25 others were forced to walk nearly 1,000 miles in harsh winter conditions from Kyoto to Nagasaki. On February 5, 1597, they were crucified on Nishizaka Hill in Nagasaki. As they were raised on crosses, the martyrs sang the Te Deum hymn in thanksgiving. They were then pierced with spears, sealing their martyrdom.
The 26 Martyrs of Japan Included:
- 4 Spanish Franciscans
- 1 Mexican Franciscan
- 1 Indian Franciscan (St. Gonzalo Garcia)
- 3 Japanese Jesuits
- 17 Japanese laymen, including three young boys
Canonization and Legacy
- The 26 martyrs were beatified by Pope Urban VIII on September 14, 1627.
- They were canonized by Pope Pius IX on June 8, 1862.
- Their relics are enshrined in St. Paul’s Cathedral (now a museum) in Macau, China.
Final Words of St. Gonzalo Garcia
"Lord, I have done what I could. Accept the sacrifice of my life. If I had a thousand lives more, I would have offered them all to Thee."
Significance of St. Gonzalo Garcia
St. Gonzalo Garcia holds the honor of being the first canonized Indian saint. His unwavering faith, missionary zeal, and courage in the face of persecution make him a powerful role model for Christians today.
#StGonzaloGarcia
✅ #IndianSaint
✅ #CatholicSaints
✅ #ChristianMartyrs
✅ #FirstIndianSaint
✅ #26MartyrsOfJapan
✅ #FranciscanMartyrs
Secondary Tags:
✅ #February5Saint
✅ #NagasakiMartyrs
✅ #ChristianPersecution
✅ #JesuitMissions
✅ #CatholicFaith
✅ #ChurchHistory
✅ #SaintsOfTheChurch
✅ #MartyrsOfTheChurch