Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 28 டிசம்பர், 2022

வேதசாட்சிகள் பலர் (Intret) 1

 பாஸ்கா காலத்திற்குப் புறம்பே

I வேதசாட்சிகள் பலர் (Intret)

வருகைப் பாடல்: சங், 78 : 11, 12, 10. 

சிறைப்பட்டோரின் பெருமூச்சு உமது திருமுன் வருவதாக. எம் அயலார் செய்த கொடுமைகளை ஏழு மடங்கு அவர்களுக்குத் திருப்பிக்கொடும். உம்முடைய புனிதர்கள் சிந்திய குருதிக்குப் பழி தீர்ப்பீராக. (சங். 78:1.) சர்வேசுரா, புறவினத்தார் உம் உரிமைச் சொத்தில் நுழைந்துள்ளனர். உமது திருக் கோவிலை மாசுபடுத்தினர். எருசலேமைப் பாழ்படுத்தினர். V. பிதாவுக்கும்... சிறைப்பட்டோரின்.

சபை மன்றாட்டு:

செபிப்போமாக: ஆண்டவரே, புனித வேதசாட்சிகளும் மறை ஆயர்களுமான ......ஆகியோரின் கொண்டாடும் பாதுகாத்து, திருவிழாவைக் எங்களை அவர்கள் பாதுகாத்து  தங்களின் புனித மன்றாட்டினால் எங்களுக்காகப் பரிந்து பேசுமாறு உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு...(1) 

(மறை ஆயர் அல்லாதோருக்கு, சபை மன்றாட்டு பின்வரும் பூசையில் உள்ளதுபோல்)

ஞானாகமத்திலிருந்து வாசகம் 

(ஞானா.3:1-8)

நீதிமான்களுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய கரங்களிலிருக்கின்றன. சாவின் பயங்கரம் அவர்களை அண்டாது. புத்தியீனருடைய கண்களுக்கு முன்பாக மரித்தவர்களாகத் தோன்றினார்கள். அவர்கள் பூலோகத்தை விட்டுப் பிரிந்தது ஒரு பெருந் துயரம்போல் எண்ணப்பட்டது. நம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து போனதோ, நிர்மூலமென்று நினைக்கப்படுகிறது. ஆனால் அவர்களோ சமானத்தில் இளைப்பாறுகிறார்கள். மனிதருக்கு முன்பாக வேதனையடைந்திருந்த போதிலும், அவர்கள் நம்பிக்கையோ நித்தியத்தால் நிரம்பியிருக்கின்றது. அற்பக் கஸ்தியடைந்தபின் அவர்கள் அடையும் சம்பாவனையோ பெரிதானதாயிருக்கும்; ஏனென்றால், சர்வேசுரன் அவர்களைப் பரீட்சித்துப் பாத்திரவான்களாகக் கண்டார். பொன் உலையிற் பரிசோதிக்கப்படுவது  போல பரிசோதித்து அவர்களைச் சர்வாங்க பலியின் பொருளாக ஏற்றுக் கொண்டு தகுந்த தருணத்தில் அவர்களைத் தயவோடு நோக்குவார். நாணற் செடிகளுக்குள் நெருப்புப் பொறிகள் எரிந்து பிரகாசித்ததுபோல நீதிமான்கள் பிரகாசிப்பார்கள். மனித சாதிகளுக்கு மனிதர்களை நடுத்தீர்ப்பார்கள். சனங்களுக்குள் அதிகாரஞ் செலுத்துவார்கள். ஆண்டவர் அவர்களை என்றென்றைக்கும் அரசாளுவார்.

தியானப் பாடல்: யாத். 15:11, 

புனிதர் நடுவில் கடவுள் மாட்சிமிக்கவர். மகத்துவத்தில் வியப்புக்குரியவர். அரியவை புரிபவர். V. (யாத். 15:6) ஆண்டவரே, உமது வலக்கரம் வலிமையால் மகிமைபெற்றது. உமது வலக்கரம் எதிரிகளை நொறுக்கியது.

அல்லேலூயா, அல்லேலூயா. V. (சர்வ. 44:14.) உம்முடைய புனிதரின் உடல்கள் அமைதியில் புதைக்கப்பெற்றன. அவர்கள் பெயர் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். அல்லேலூயா.

(முன்தவக் காலத் துவக்கத்திலிருந்து அல்லேலூயாவுக்குப் பதிலாக)

நெடும் பாடல்: சங். 125: 5-6

கண்ணீருடன் விதைப்போர் மகிழ்ச்சியுடன் அறுப்பர். V. விதைக்கச் செல்கையில் அழுதுகொண்டே சென்றனர். V. ஆனால், கதிர்க்கட்டுகளைச் சுமந்து வருகையில், களிப்புடன் வருவர்.

லூக்காஸ் எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி 

(லூக்.21:9-19)

அக்காலத்தில்: யேசு தம் சீடர்களுக்குச் சொன்னதாவது: யுத்தங்களையும் கலகங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.  அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.  இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள். ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும். ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள். உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். பெற்றோராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள். என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது. உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்

Post Septuagesimam in fine sequentis antiphone "அல்லேலூயா" omittitur.

காணிக்கைப் பாடல்: சங். 67 : 36

புனிதர் நடுவில் கடவுள் வியப்புக்குரியவர். இஸ்ராயேலின் சர்வேசுரன் தாமே தம் மக்களுக்குத் திறனையும் வலிமையையும் அருள்வார். சர்வேசுரன் போற்றி. (அல்லேலூயா.)

காணிக்கை மன்றாட்டு:

ஆண்டவரே, உம் புனிதர் நினைவாக நாங்கள் புரியும் வேண்டுதலைக் கேட்டருளும். எங்கள் நேர்மையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. உமக்கு உகந்தோராகிய அவர்களுடைய பேறு பலன்களால் உதவி பெறுவோமாக. உம்மோடு...(1)

திருவிருந்துப் பாடல்: ஞானா.3:4-6

மனிதர் முன்பாக அவர்கள் வதைக்கப்பட்டாலும், சர்வேசுரனே அவர்களைச் சோதித்தார். உலையில் பொன்போல் அவர்களைச் சோதித்தறிந்தார். தகனப் பலிப் பொருள்போல் அவர்களை ஏற்றுக் கொண்டார்.

நன்றி மன்றாட்டு:

செபிப்போமாக: ஆண்டவரே, மீட்பளிக்கும் திரு அனுமானங்களால் நிறைவுபெற்ற நாங்கள் விழாக்கொண்டாடும். புனிதரின் வேண்டுதலால் உதவிபெறுமாறு உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு... (1)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக