தவக் கால II ஞாயிறுக்குப் பின்வரும் திங்கள்
வருகைப் பாடல் : சங். 25 : 11-12
ஆண்டவரே, என்னை மீட்டருளும்: என்மேல் இரக்கமாயிரும். ஏனெனில், என் கால்கள் நேர் வழியில் நிலைகொண்டன. சபைகளின் நடுவில் ஆண்டவரைப் புகழ்வேன். (சங். 25:1) ஆண்ட வரே, நான் மாசற்றவனாய் நடந்து கொண்டதால் எனக்கு நீதியான தீர்ப்பிடும். நான் ஆண்டவர்மேல் நம்பிக்கை கொண்டிருப்பதால் தளர்ச்சியடையமாட்டேன். V. பிதாவுக்கும்.... ஆண்டவரே.
சபை மன்றாட்டு:
செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, உணவை மட்டுப்படுத்தி, தங்கள் உடலை ஒறுக்கும் உம்முடைய மக்கள் நீதியைக் கடைப்பிடித்துத் தீமையை விலக்கச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு..(1)
தானியேல் தீர்க்கதரிசி ஆகமத்திலிருந்து வாசகம்
(தானி.9:15-19)
அந்நாட்களில்: தானியேல், ஆண்ட வரிடம் மன்றாடிச் சொன்னதாவது: உமது சனத்தை வலிமையுள்ள கையினால் எகிப்து நாட்டிலிருந்து மீட்டு, (இந்நாள் வரைக்கும் நாங்கள் காண்கிறபடி) உமக்குப் பேரை உண்டாக்கிக்கொண்ட எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, பாவம் செய்தோம், துரோகம் புரிந்தோம். (ஆகிலும்) ஆண்டவரே, உமது நீதி அனைத்தின்படியே, உமது கடுங்கோபம் எருசலேமாகிய உமது நகரத்தையும், உமது திருமலையையும் விட்டு நீங்கும்படி கெஞ்சிக்கேட்கிறேன்; ஏனெனில், எங்கள் பாவங்களின் பொருட்டும், எங்கள் முன்னோர்களின் அக்கிரமங்களைப்பற்றியும்,எருசலேமும், உம்முடைய சனமும் எங்கள் சுற்றுப் புறத்தார் எல்லோருக்கும் நிந்தையாகி விட்டன. இப்போதோ எங்கள் இறைவா, உம் அடியானுடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, அவனுடைய செபங் களுக்குச் செவி சாய்த்தருள்வீர். பாழாய்க் கிடக்கிற உமது திருத்தலத் தின்மேல் உமது நிமித்தமாகவே உமது முகம் ஒளிரச் செய்வீராக. என் இறைவா, உமது செவிசாய்த்துக் கேட்டருளும்; உம் கண்களைத் திறந்து, எங்கள் துயரத்தையும், உமது நாமம் வழங்கும் நகரத்தையும் பார்த்தரு ளும்; நாங்கள் எங்கள் நீதிகளையல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களை நம்பியே எங்கள் விண்ணப்பங்களை உமது திருமுன் செலுத்துகிறோம். ஆண்டவரே, கேளும்; மன்னியும் ஆண் டவரே, கவனித்துக் கேட்டு உதவி செய்யும்: என் இறைவா, உமது நிமித்தமாகத் தாமதியாதேயும். ஏனென்றால் உமது திருப்பெயர் உமது நகரத்தின் மேலும் உம் சனத்தின்மேலும் அழைக்கப்பட்டுள்ளது, எங்கள் கடவுளாகிய ஆண்டவரே.
தியானப் பாடல்:சங்.69:6,3
ஆண்டவரே, நீர் என் துணைவரும் மீட்பருமாயிரும்; காலந்தாழ்த்த வேண்டாம். V. என் உயிரைப் பறிக்கத் தேடும் என் எதிரிகள் கலங்கி வெட்கமடைவார்களாக,
நெடும் பாடல் :
ஆண்டவரே, நாங்கள் செய்த பாவங்களுக்கு ஏற்றவாறு எங்களை நடத்தாதேயும்: எங்கள் அக்கிரமங்களுக்கு ஏற்றவாறு எங்களைத் தண்டியாதேயும்.
V. (சங். 78:8-9.) ஆண்டவரே, எங்கள் பழைய தீச் செயல்களை நினையாதேயும். உமது இரக்கம் எங்கள் மீது விரைந்து வருவதாக. ஏனெனில் நாங்கள் மிகவும் ஏழைகளாகிவிட்டோம்.
V. எங்கள் மீட்பராகிய கடவுளே, எங்களுக்குத் துணைபுரியும். ஆண்டவரே, உமது திருப்பெயரின் மகிமையை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்: உமது திருப்பெயரின் பொருட்டு எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.
அருளப்பர் எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி
(அரு.8:21-29)
அக்காலத்தில்: யேசு யூதர் கூட்டத் திற்குச் சொன்னதாவது: "நான் செல்லுகிறேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால், உங்கள் பாவத்தில் மடிவீர்கள். நான் செல்லுமிடத்திற்கு உங்களால் வரமுடியாது" என்றார். யூதர்களோ, "நான் செல்லுமிடத்திற்கு உங்களால் வரமுடியாது என்று சொல்லுகிறானே, இவன் என்ன, தற்கொலை செய்து கொள்ளப் போகிறானோ" என்றனர். அவரோ, "நீங்கள் மண்ணைச் சார்ந்தவர்கள். நானோ விண்ணைச் சார்ந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள்; நானோ இவ்வுலகைச் சார்ந்தவனல்ல. ஆகையால்தான் உங்கள் பாவங்களிலே மடிவீர்கள் என்று நான் கூறினேன். நானே உள்ளேன் என்று நீங்கள் விசுவசிக்காவிடில் உங்கள் பாவங்களிலே மடிவீர்கள்" என்றார். அவர்களோ, "நீர் யார்” என, யேசு, "நான் யாரென்று உங்களுக்குத் தொடக்கமுதல் சொல்லி வந்தேனோ அவர்தான் நான். உங்களைப்பற்றிப் பேசவும் தீர்ப்பிடவும் பல காரியங்கள் உள்ளன. ஆனால், என்னை அனுப்பியவர் உண்மையானவர். நான் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகிற்கு எடுத்துச் சொல்லுகிறேன்" என்றார். இப்படிச் சொன்னதில் அவர் தம் தந்தையைக் குறிப்பிட்டார் என்று அவர்கள் உணர வில்லை. மேலும் யேசு அவர்களை நோக்கி, மனுமகனை நீங்கள் உயர்த்திய பின்பு நானே உள்ளேன், நானாகவே எதையும் செய்வதில்லை, என் தந்தை எனக்குக் கற்பித்தவையே நான் எடுத்துச்சொல்லு கிறேன் என்று அறிந்து கொள்வீர்கள். என்னை அனுப்பினவர் என்னோடு இருக் கிறார். என்னைத் தனியே விட்டுவிடவில்லை. அவருக்கு உவப்பானவையே எப்பொழுதும் செய்கிறேன்'' என்றார்.
காணிக்கை பாடல்
எனக்கு அறிவாற்றலைத் தந்த ஆண்டவரைப் போற்றுவேன்: ஆண்ட வரை எப்பொழுதும் என் கண்முன் வைத்து நடந்தேன். நான் அசைவுறாத படி அவர் என் வலப்பக்கம் இருக்கின்றார்.
காணிக்கை மன்றாட்டு
ஆண்டவரே, பாவப் பரிகாரத்திற்காகவும், உமது புகழ்ச்சிக்காகவும், நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இந்தப் பலி உமது பாதுகாவலுக்கு எங்களைத் தகுதி உள்ளவர்களாக்குவதாக. உம்மோடு......(1)
திருவிருந்துப் பாடல்: சங். 8 : 2
ஆண்டவரே, எங்கள் கர்த்தரே, உலகமெங்கும் உமது திருப்பெயர் எத்துணை வியப்புக்குரியது!
நன்றி மன்றாட்டு:
செபிப்போமாக: ஆண்டவரே, இந்தத் திருவிருந்து வானக மருந்தில் எங்களுக்குப் பங்கு அளித்து, எங்களைப் பாவங்களிலிருந்து தூய்மை ஆக்குவதாக. உம்மோடு......(1)
செபிப்போமாக: சர்வேசுரன் திருமுன் தலைவணங்குவீர்களாக.
எல்லாம் வல்ல சர்வேசுரா, எங்கள் மன்றாட்டுக்களைத் தயவாய்க் கேட்டருளும். நாங்கள் உமது பரிவிரக்கத்தின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கின்றீர். வழக்கம்போல் உமது இரக்கத்தைக் கனிவுடன் எங்களுக்குக் காட்டியருளும். உம்மோடு.......(1)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக