வருகைப் பாடல் : சங். 37: 22-23
ஆண்டவரே, என் சர்வேசுரா, என்னைக் கைவிட்டுவிடாதேயும்: என்னை விட்டு அகன்று விடாதேயும். என் மீட்பராகிய ஆண்டவரே, எனக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.(சங்.37: 2) ஆண்டவரே, கோபத்துடன் என்னைக் கடிந்து கொள்ளாதேயும்; உமது கோபவேளையில் என்னைத் தண்டியாதேயும். V. பிதாவுக்கும்.......ஆண்டவரே.
சபை மன்றாட்டு
செபிப்போமாக: ஆண்டவரே, உம் முடைய மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; உமது கட்டளையால் உடலுணவை மட்டுப்படுத்துகின்ற நாங்கள் தீங்கிழைக்கும் தீச் செயல்களை விலக்கவும் அருள் புரியும் உம்மோடு.......(1)
எஸ்தர் ஆகமத்திலிருந்து வாசகம்
(எஸ். 13:8-11,15-17)
தியானப் பாடல்:
சங். 27: 9, 1
ஆண்டவரே, உம்முடைய மக்களை மீட்டருளும்: உமது உரிமைச் சொத்தான அவர்களை ஆசீர்வதித்தருளும். V. ஆண்டவரே, உம்மையே கூவியழைத்தேன்: என் இறைவா, மௌனமாயிராதேயும்: நீர் மௌனமாயிருந்தால் படுகுழியில் இறங்குவோர்க்கு ஒப்பாவேன்.
நெடும் பாடல்:சங்.102:10
ஆண்டவரே, நாங்கள் செய்த பாவங்களுக்கு ஏற்றவாறு எங்களை நடத்தாதேயும் : எங்கள் அக்கிரமங்களுக்கு ஏற்றவாறு எங்களைத் தண்டியாதேயும்.V. (சங். 78:8-9) ஆண்டவரே, எங்கள் பழைய தீச்செயல்களை நினையாதேயும்: உமது இரக்கம் எங்கள் மீது விரைந்து வருவதாக : ஏனெனில் நாங்கள் மிகவும் ஏழைகளாகி விட்டோம். V. எங்கள் மீட்பராகிய இறைவா, எங்களுக்குத் துணை புரியும் : ஆண்டவரே, உமது திருப்பெயரின் மகிமையை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும் : உமது திருப்பெயரின் பொருட்டு எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.
மத்தேயு எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி
(மத்.20:17-28)
காணிக்கைப் பாடல்:சங்: 24:1-3
ஆண்டவரே, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன்: என் இறைவா, உம்மையே நம்பியிருக்கிறேன்; நான் வெட்கமுற விடாதீர்: என் பகைவரும் என்னை ஏளனம் செய்ய விடாதீர்: ஏனெனில், உம்மை எதிர் பார்ப்போர் எவருமே ஏமாற்றம் அடையார்.
காணிக்கை மன்றாட்டு:
ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக் கொடுக்கும் இக்காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்: புனிதமான இந்தப் பரிமாற்றத்தினால் பாவத்தளைகளிலிருந்து எங்களை விடுவித்தருளும். உம்மோடு.(1)
திருவிருந்துப் பாடல் : சங் 10:8
ஆண்டவர் நீதியுள்ளவர்: அவர் நீதியை விரும்புகிறார்: அவர் திருமுகம் நியாயத்தைப் பார்க்கின்றது.
நன்றி மன்றாட்டு :
செபிப்போமாக: ஆண்டவரே, உமது திருவிருந்தை நாங்கள் அருந்தியதால் நித்திய மீட்பின் பலன்கள் எங்களிடம் பெருக வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் . உம்மோடு...(1)
மக்கள்மீது மன்றாட்டு:
செபிப்போமாக: சர்வேசுரன் திருமுன் தலை வணங்குவீர்களாக.
சர்வேசுரா, மாசின்மையை நேசிப்பவரும், அதை எங்களுக்கு மீண்டும் அளிப்பவரும் நீரே: உம்முடைய அடியார்களின் உள்ளங்களை உம்மிடம் திருப்பியருளும்: இவ்வாறு அவர்கள் உமது ஆவியினால் ஆர்வம் பெற்று விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாகவும், நற்செயல்களில் திறன் மிக்கவர்களாகவும் விளங்குமாறு அருள் புரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக