மறை ஆயரான வேதசாட்சி மற்றொரு பூசை
வருகைப் பாடல்: தானி. 3:84,87
ஆண்டவரின் குருமார்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். புனிதர்களே, இதயத்தில் தாழ்மையுடையோரே, ஆண்டவரைப் போற்றுங்கள். (தானி. 3:57) ஆண்டவரின் படைப்புக்கள் அனைத்துமே, ஆண்டவரை வாழ்த்துங்கள், அனைத்திற்கும் மேலாக அவரை என்றென்றும் ஏத்திப் போற்றுங்கள். V. பிதாவுக்கும்... ஆண்டவரின் . . .
சபை மன்றாட்டு:
செபிப்போமாக: சர்வேசுரா, உம்முடைய வேதசாட்சியும் மறை ஆயருமான அர்ச் ...... உடைய ஆண்டு விழாவினால் எங்களை மகிழ்விக்கின்றீர். அவரது வானகப் பிறப்பைக் கொண்டாடுகிற நாங்கள், அவரது பாதுகாவலைப் பெற்று மகிழவும் தயவுடன் அருள்புரியும். உம்மோடு... (1)
அப்போஸ்தலரான புனித சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம்
(II கொரி. 1:3-7)
தியானப் பாடல்: சங். 8:6.7.
மகிமையையும் பெருமையையும் அவருக்கு முடியாகச் சூட்டினீர். V. ஆண்டவரே, உம்முடைய கை வேலைகள்மீது அவருக்கு அதிகாரம் அளித்தீர்.
அல்லேலூயா, அல்லேலூயா. V. ஆண்டவர் முடிசூட்டிய குரு இவரே. அல்லேலூயா.
(முன்தவக் காலத் துவக்கத்திலிருந்து அல்லேலூயாவுக்குப் பதிலாக)
நெடும் பாடல்: சங். 111 : 1-3.
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் பேறுபெற்றோன் : அவர் கட்டளைகளைப் பெரிதும் விரும்புவான். V. அவன் சந்ததி நாட்டில் வலிமை பெற்றிருக்கும்: நேர்மனத்தோரின் தலைமுறை ஆசி பெற்றிருக்கும். V. புகழும் செல்வமும் அவன் வீட்டில் நிறைந்திருக்கும்: அவன் நீதி நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.
மத்தேயு எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி
(மத்.16:24-27)
காணிக்கைப் பாடல் : சங். 88: 21-22.
என் ஊழியன் தாவீதைத் தேர்ந்தெடுத்து, என் தூய தைலத்தால் அவனை அபிஷேகம் செய்தேன்: ஏனெனில், அவனுக்கு என் கை உதவி புரியும்: என் தோள் அவனுக்கு வலிமையளிக்கும்.
காணிக்கை மன்றாட்டு:
ஆண்டவரே, உமக்கு அர்ப்பணித்த காணிக்கைகளைப் புனிதமாக்கும். உம்முடைய வேதசாட்சியும் மறை ஆயரு மான அர்ச்..... உடைய வேண்டுதலை முன்னிட்டு, இவற்றினால் மனந் தணிந்து எம்மைக் கண்ணோக்கும். உம்மோடு...(1)
திருவிருந்துப் பாடல்:சங். 20: 4.
ஆண்டவரே, அவரது தலையில் மணிமுடி சூட்டினீர்.
நன்றி மன்றாட்டு:
செபிப்போமாக: ஆண்டவரே, இத்திருவிருந்து உம்முடைய வேதசாட்சியும் மறை ஆயருமாகிய அர்ச்.... ...உடைய வேண்டுதலால், வானக அருமருந்தில் எங்களுக்குப் பங்களித்து, பாவத்திலிருந்து, எங்களைத் தூய்மையாக்குவதாக. உம்மோடு...(1)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக