Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 4 மே, 2018

மே மாதம் 4-ம் தேதி - அர்ச். மோனிக்கம்மாள் (St. Monica, W.) *

*மே மாதம் 4-ம் தேதி*
*St. Monica, W.*             
*அர்ச். மோனிக்கம்மாள்*
*விதவை - (கி.பி. 387).*


அர்ச். அகுஸ்தீன் என்பவருடைய தாயாரான மோனிக்கம்மாள் சிறு வயதில் புண்ணிய வழியில் வாழ்ந்துவந்தாள். இவள் பிற மதத்தைச் சார்ந்த ஒருவனை மணமுடித்துக்கொண்டு, அவன் ஞானஸ்நானம் பெறும்படி ஜெபதபத்தாலும், புத்திமதியாலும் முயற்சித்து வந்தாள். அம்மனிதன் முன்கோபக்காரனானதால், தன் மனைவியை அவன் கோபித்துத் திட்டும்போது, அவள் ஒன்றும் பேசாமல் பொறுமையாயிருந்தாள். கோபம் தீர்ந்தபின் அவனுக்கு நியாயத்தை எடுத்துக் காட்
டினதினால் அவன் பிறகு சாந்த குணமுள்ளவனாகி, ஞானஸ்நானம் பெற்று நல்ல கிறீஸ்தவனாய் மரித்தான். மற்ற ஸ்திரீகள் தங்கள் கணவர்களின் தவறுகளைப்பற்றி மோனிக்கம்மாளிடம் முறையிடும்போது, உங்கள் கணவர் மட்டில் தவறில்லை, உங்கள் அடக்கமற்ற நாவின் மேல்தான் தவறென்று சொல்லி, அவர்களுக்கு நற்புத்தி சொல்வாள். இவளுடைய மூன்று பிள்ளைகளுள் அகுஸ்தீன் என்பவர் மிகவும் துடுக்கானவர். இவர் மனிக்கேயர் பதித மதத்தில் சேர்ந்து பெரும் பாவியாய் நடப்பதைக் கண்ட மோனிக்கம்மாள் இடைவிடாமல் கண்ணீர் சிந்தி, அழுகையுடன் ஜெபம் செய்து அவர் மனந்திரும்பும்படி ஆண்டவரை மன்றாடுவாள். தன் மகனுக்காக வேண்டிக்கொள்ளும்படி ஆயரையும் குருக்களையும் மன்றாடுவாள். மேலும் தன் மகன் போகும் ஊர்களுக்குப் போய் அவன் பாவ வழியை விடும்படி புத்திமதி கூறுவாள். இறுதியில் மோனிக்கம்மாளுடைய ஜெபம் வீணாகவில்லை. தனது 30-வது வயதில் அகுஸ்தீன் மனந்திரும்பினார். சில காலத்திற்குப்பின் மோனிக்கம்மாள் மரண அவஸ்தையாயிருக்கும்போது அகுஸ்தீனுக்கு நல்ல புத்திமதி கூறி, தான் இறந்தபின் தன் ஆத்துமத்திற்கு திவ்விய பலிபூசை நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டாள். அவ்வாறே அவர் திவ்விய பலிபூசை நிறைவேற்றியதுடன், அவர் குருவான பின்னும் அநேக வருடகாலம் தன் தாயாரின் ஆத்துமத்திற்காக திவ்விய பலிபூசை நிறைவேற்றி ஒப்புக்கொடுத்தார்.   

*யோசனை*

ஸ்திரீகளே! மோனிக்கம்மாளைக் கண்டுபாவித்து உங்கள் கணவர்களால் வீட்டில் சண்டை சச்சரவு உண்டாகி, உங்களை அவர்கள் குரூரமாய் நடத்தும்போது, நாவை அடக்கி சற்றுப் பொறுமையாய் இருப்பீர்களேயாகில், சீக்கிரத்தில் சமாதானமுண்டாகும். உங்கள் பிள்ளைகளால் உங்களுக்குத் துன்பமும் பிரச்சினைகளும் உண்டாகும்போது ஜெபத்தாலும் புத்திமதியாலும் அவர்களை நல்வழிக்குத் திருப்புவீர்களாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக