Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 11 மே, 2019

Catholic Quotes

நாம் நினைவில் கொள்ள வேண்டிய கடைசி நான்கு காரியங்கள்

        மரணம்
        கடைசி தீர்வு
        மோட்சம்
        நரகம்






செவ்வாய், 7 மே, 2019

St Anthony Quotes in Tamil 2

தாழ்ச்சி என்பது தேனைவிட இனிமையானது.
யாரெல்லாம் தாழ்ச்சியால் போஷிக்கபடுவார்களோ
அவர்கள் மிகுந்த பலனை தருவர்.

‡ அர்ச். அந்தோணியார்.


St Anthony Quotes in Tamil

தேவதாய், பாவிகளுக்கு அடைக்கலமாகவும்,
பாவங்களை எதிர்ப்பதற்கு போதுமான
பலத்தையும்  தருகிறார்.

‡ அர்ச். அந்தோணியார்.



சனி, 4 மே, 2019

OUr Lady Quotes 3


சகல மோட்சவாசிகளுக்கு முன் உம்மை என் அன்னையாகவும், ஆண்டவளாகவும் தெரிந்து கொள்கிறேன்.  உமது அடிமையாக, என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் என் உள்ளத்தையும் ஐம்புலன்களையும் என் ஜீவிய காலம் முழுவதும் நான் செய்யும் நற்செயல்களையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.  என்னையும் எனக்கு சொந்தமான யாவற்றையும், இப்பொழுதும் எப்பொழுதும் கடவுளின் அதிமிக தோத்திரத்திற்காக, உமது பிரியப்படி, நீரே முழு உரிமையுடன் ஆண்டு நடத்த கையளிக்கிறேன்.
‡ ஆமென்.

மரியாயின் மாசற்ற இருதயமே எங்கள் இரட்சண்யமாயிரும்.

மரியாயின் மதுரமான இருதயமே
எங்கள் இரட்சண்யமாயிரும்

சேசுவின் மகா பரிசுத்த திரு இருதயமே
எங்கள் பேரில் இரக்கமாயிரும்.


Our lady Quotes in Tamil

சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே, இதோ உம்முடைய சரணமாக ஒடிவந்தோம்.  எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக்கொள்வதற்கு நீர் பாராமுகமாயிராதேயும்.  ஆசீர்வதிக்கப்பட்டவருமாய் மோட்சம் உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே சகல ஆபத்துகளிலேயும் நின்று  எங்களை தற்காத்துக் கொள்ளும்.
‡ஆமென். 


 

வெள்ளி, 3 மே, 2019

Sacred Heart Quotes - (Tamil Quotes)

நேசமுள்ள சேசுவே!  எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.  தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாற செய்தருளும்



Sacred Heart Quotes - Tamil Quotes


சேசுவின் திரு இருதயமே, உம்முடைய இராச்சியம் வருக!  

சகல ஜாதி ஜனங்களுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக! 
 உமக்குப் பிரமாணிக்கமாய் இருப்பவர்களுக்கு மாத்திரமல்ல, உம்மை விட்டு விலகிப் போயிருப்பவர்களுக்கும் தேவரீர் உத்தம அரசராயிருப்பீராக!

 

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

திருச்சபை கட்டளைகள் (Commandments of Church) in Tamil

திருச்சபை கட்டளைகள்
திருச்சபையின் பிராதான கட்டளைகள் : ஆறு
  1. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் முழுப் பூசை காண்கிறது.
  2.  வருடத்திற்கு ஒருமுறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது.
  3. பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவ நற்கருணை உட்கொள்கிறது.
  4. வெள்ளிக்கிழமைகளிலும் மற்றுமுள்ள சுத்தபோசன நாட்களில் சுத்த போசனமும், ஒரு சந்தி நாட்களில் ஒரு சந்தியும் அனுசரிக்கிறது. 
  5. விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும், விக்கினமுள்ள உறவு முறையாரோடும் கல்யாணம் செய்யாமலிருக்கிறது.
  6. நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.


வெள்ளி, 5 ஏப்ரல், 2019

அர்ச். அந்தோணியார் வணக்கமாதம் - *ஒன்பதாம் நாள்*


ஒன்பதாம் நாள்
பிரஞ்சுராச்சியத்தில் அர்ச். அந்தோணியார் நடத்தின காரியங்கள் 

     பக்திச் சுவாலகருக்கொப்பான அர்ச், பிராஸ்சிஸ்கு அசிசியார் தம்முடைய பக்தியுள்ள தாயார் பிக்கா அம்மாள் (Pica) பிரோவான்ஸ் (Provence) நாட்டிற் பிறந்ததினிமித்தம் பிரஞ்சு தேசத்தின்மட்டில் எப்போதும் விசேஷப்பிரியப் பற்றுதலாயிருந்தார். ஆனதினால் அவர் தம்முடைய சபையில் சேர்ந்த சந்நியாசி குருக்கள் வேதம் போதிக்க ஏற்பட்டபோது அவர்களை மற்றப் பிரதேசங்களுக்கு அனுப்பிவிட்டுத் தாம் பிரஞ்சு தேசத்தைத் தெரிந்து கொண்டு, அவ்விடம் மஸ்ஸேயோ (Masteo} என்னுஞ் சகோதரரோடு செல்ல எத்தனிக்கையில், சபையை நடத்த அவர் இத்தாலிய தேசத்திலேயேயிருக்கவேண்டியது அவசியமென்று அர்ச். பாப்பானவருடைய ஸ்தானாபதி அவரைக் கேட்டுக்கொண்டதால், தமக்குப் பதிலாய் தமது சபையின் இரத்தினத்தைப் போலிருந்த அர்ச். அந்தோனியாரை அவ்விடம் அனுப்பிவைத்தார், அர்ச். அந்தோணியார் பிரஞ்சு தேசத்தின் தென்பாகம் சென்று மோம்ப்பெல்லியே (Montpellie) மடத்தில் வாசம் செய்து வந்தார்,
     அவ்விடத்திய பிரிவினைக்காரருடைய தப்பறைகளையும், அவர்கள் செய்து வந்த தந்திர உபாயங்களையும் நன்றாய் கண்டுகொண்டு தமது தெளிவான பிரசங்கங்களினால் அவைகளை வெளிப்படுத்திப் பிரிவினைக் காரருக்குப் பயங்கரம் வருவித்ததினால் 'பதிதருடைய சம்மட்டி" என்கிற பெயர் அவருக்கு உண்டாயிற்று. ஆதலால் அவர்களில் திரளான குருப்பிரசாதிகளுக்கு முன்பாகவும், சனங்களுக்கு முன்பாகவும் பிரசங்கம் பண்ணின போது , அதேசமயத்தில் தம்முடைய மடத்துக்கோயிலில் ஒரு வாசகம் பாடவேண்டியிருந்ததென்று அவருக்கு ஞாபகம் வந்ததால், தம்முடைய தலை முக்காட்டை எடுத்து மூடிக்கொண்டு கொஞ்சநேரம் மௌனமாயிருந்தார், அந்த க்ஷணத்திலேயே தமது மடத்துக் கோயிலில் தோன்றிப் பாடலை  முடித்து, பிறகு மேற்றிராசனக் கோயிலில் துவக்கியிருந்த பிரசங்கத்தைத் தொடர்ந்து செய்தார், இது 'ஓருடல், ஈரிடம்' எனும் புதுமையாகும்.

     மடத்திலிருந்த சகோதரர் தாங்கள் தியானம் செய்கிறபோதும் செபம் செய்கிறபோதும் பக்கத்துக் குளத்திலிருந்த தவளைகள் சத்தம் செய்தபடியால் சகோதரர் முறைப்படுவதை அறிந்த அந்தோனியார் தவளைகளுக்குக் கட்டளையிடவே அவைகள் மெளனமாயின. வேறு குளங்களிற்கொண்டு போய் விடப்பட்டால், அவைகள் சத்தம் செய்யும். ஆனால் அந்தோனியார் குளம் என்று அதுமுதல் அமைக்கப்பட்ட குளத்தில் விடப்பட்டாலோ, அவை சத்தம் செய்வதில்லை.
     லுனேல் (Lunel) என்னும் பட்டணத்தில் விஸ்தாரமான ஒரு மைதானத்தில் திரளான சனங்களுக்கு முன்பாகப் பிரசங்கம் செய்தபோது, சுற்றிலும் உண்டான குளங் குட்டைகளிலிருந்த பிராணிகளெல்லாம் நரக சத்துருவால் தூண்டப்பட்டு காதுகள் அடைத்துப் போகும்படியான சத்தம் செய்ய அர்ச்சியசிஷ்டவர் அவைகளை அதட்டி மெளனமாயிருக்கச் செய்தார்.
      எந்த வேலை செய்தபோதிலும், எவ்வளவு அற்புதமான புதுமைகளைச் செய்து வந்தபோதிலும் அர்ச். அந்தோனியார் தமது மடத்தின் ஒழுங்குகளை அதுசரிக்கிறதில் வெகு பிரமாணிக்கராயிருந்தார், கீழ்ப்படிதல் என்னும் புண்ணியம் அவரிடத்தில் விசேஷமான பிரகாரம் விளங்கிற்று. அற்ப காரியங்களானாலும், அவைகளை நுணு நுணுக்கமாய் அநுசரித்து வந்தார். கீழ்ப்படிதலினிமித்தம் ஒழுங்கு தவறாதிருக்கவேண்டி இரண்டு ஸ்தலங்களில் இருக்கும்படி சர்வேசுரன் கிருவை செய்தார், இன்னமும் அர்ச்சியசிஷ்டவர் செய்துவந்த அநேக அற்புதங்களைக்கொண்டு மடத்துச் சந்நியாசிகள் அவருக்கு வெகு வணக்க மரியாதை செலுத்தி வந்தார்கள்.

நாம் செய்து வருங் திருத்தியங்களெல்லாம் பிரமாணிக்கத்தோடும், நல்ல மனதோடும், ஒழுங்காயும் செய்தோமேயானால் அக்கிருத்தியங்கள் வெகு சொற்ப மானாலும் ஆண்டவருக்கு மிகவும் பிரியமானவையும் நமது ஆத்துமங்களுக்குப் பிரயோசனமானவையுமாயிருக்கு மென்பதற்குச் சந்தேகமில்லை.
     ஒன்பதாம் பத்திநாதர் என்னும் அர்ச். பாப்பானவர் பிரஞ்சு தேசத்தின் இரணியத்துக்காகச் செபித்த செபம்
     மரியாயே, சென்மப் பாவமில்லாமல் உற்பவித்தவளே, பிரஞ்சு தேசத்தைக் கண்ணோக்கிப் பாரும், பிரஞ்சு தேசத்துக்காக வேண்டிக்கொள்ளும், பிரஞ்சு தேசத்தை இரட்சியும். எவ்வளவுக்கு அதிக குற்றவாளியாயிருக் கின்றதோ, அவ்வளவுக்கு உம்முடைய ஒத்தாசை அதற்குத் (தேவையிருக்கின்றது. உமது கரங்களில் நீர் ஏந்தியிருக்கும் சேசுநாதரிடத்தில் நீர் ஒரு வார்த்தை சொல்லுவிரேயானால், பிரஞ்சு தேசம் இரட்சிக்கப்படும். தேவமாதாவுக்கு எப்போதும் கீழ்ப்படிதலுள்ள சேசுநாதரே, பிரஞ்சு தேசத்தை இரட்சியும் - ஆமென்சேசு.

நற்கிரியை - பிரிவினைக்காரருக்குப் புத்தி சொல்லுகிறது.

மனவல்லயச் செபம் - பிரிவினைக்காரரை மனந் திருப்பின அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.