நவம்பர் 26ம் தேதி
ல்வெஸ்டிரின் துறவற சபையின் ஸ்தாபகரும், மடாதிபதியுமான
அர்ச்.சில்வெஸ்டர் கொஸ்ஸோலினி
இவர், இத்தாலியில் லொரேட்டோவிலிருந்து 14 மைல் தூரத்திலுள்ள ஓசிமோ என்ற இடத்தில் 1177ம் வருடம் ஒரு உயர் குடும்பத்தில் பிறந்தார். இவர் சட்டக்கல்வியையும், வேதஇயலையும், முறையே, பொலோஞாவிலும், பதுவாவிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்றார். பின்னர், ஓசிமோ கதீட்ரல் தேவாலய நிர்வாக அதிபர் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் தன் ஜீவிய காலத்தில் மிகவும் வியந்து பாராட்டிப்போற்றி வந்த ஒரு மனிதனுடைய
சிதைந்து போய்கொண்டிருந்த பிரேதத்தைக் கண்டு, மாபெரும் அதிர்ச்சியடைந்தார்; உடனே, ஒரு துறவியாக வேண்டும், என்று தீர்மானித்தார். அந்த மனிதனுடைய மாபெரும் அழகிற்காகவும், அவன் நிறைவேற்றியிருந்த அரிய காரியங்களுக்காகவும், அவனை மிகப்பெரிய மனிதனாகக் கருதி பாராட்டி வந்திருந்தார். விரைவிலேயே, சில்வெஸ்டர், வஞ்சகமான இவ்வுலகத்தின் மாயையான மகிமையைப் பற்றி புரிந்து கொண்டார்; உலக மகிமை, வீணான மகிமையாக, விரைவிலேயே மறைந்து போகக் கூடிய மகிமை! என்பதைப் புரிந்துகொண்டார். எனவே, தனது 40வது வயதில், அந்நகரை விட்டு இரகசியமாக வெளியேறினார்;ஓசிமோ நகரிலிருந்து 30 மைல் தூரத்திலிருந்த
ஒரு பாலைவனத்தில் ஏகாந்தமாகத் தங்கி இளைப்பாறினார்.
1231ம் வருடம், சில்வெஸ்டிரின் துறவற சபையை ஸ்தாபித்தார். அன்கோனா பிரபுவிற்கு சொந்தமான பிரதேசத்திலுள்ள ஃபேப்ரியானோ விலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள ஃபானோ என்ற மலையின் மேல் ஒரு துறவற மடத்தை தன் சபையினருக்காகக் கட்டினார்.
இந்த மடத்தில், அர்ச்.ஆசீர்வாதப்பர் துறவற சபையின் விதிமுறைகளை முழுமையாக அனுசரிக்கும்படி, ஏற்பாடு செய்தார். 1248ம் வருடம், இவர் தனது துறவற சபைக்கான பாப்பரசரின் அங்கீகாரத்துடனான அனுமதியை, அச்சமயம் லியோன்ஸ் நகரில் தங்கியிருந்த 4ம் இன்னசென்ட் பாப்பரசரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இவர், இத்தாலியில், 25 துறவற மடங்களைக் கட்டினார்; தபசு , ஜெபம், என்கிற இவர் அனுசரித்த இரு பக்திமுயற்சிகளுடைய இரட்டை உணர்வினுடைய சந்ததியாக தனது சீடர்களை விட்டுச் சென்றார்; 1267ம் வருடம், இவர் தனது 90வது வயதில், 1267ம் வருடம், நவம்பர் 26ம் தேதியன்று பாக்கியமாய் மரித்தார். இவருடைய கல்லறையில் ஏராளமான புதுமைகள் நிகழ்வதற்கு சர்வேசுரன் திருவுளமானார்; இவர் அனுசரித்து வந்த இடைவிடாத கடின தபசின் காரணமாக, இவருடைய பெயர், உரோமை வேதசாட்சிகளுடைய பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
அர்ச்.சில்வெஸ்டரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக