Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 4 ஜூலை, 2024

மேற்றிராணியாரும், வேதசாட்சியுமான அர்ச்.ஆஸ்டியுஸ் - July 4 St. austius

ஜுலை 4ம் தேதி

 மேற்றிராணியாரும், வேதசாட்சியுமான அர்ச்.ஆஸ்டியுஸ் திருநாள்

  அஞ்ஞான உரோமை சக்கரவர்த்தியான டிராஜன் ஆண்ட காலத்தில் , இவர் மசதோனியாவைச் சேர்ந்த டிராகியும் என்ற நகரின் மேற்றிராணியாராக இருந்தார். கி.பி.98ம் வருடம் டிராகியும் நகரின் ஆளுனராயிருந்த அக்ரிகோலாவினால், இவர் கைது செய்யப்பட்டார். ஈயக் கம்பிகளாலும், எருது மாட்டின் வாலில் செய்யப்பட்ட சாட்டையாலும் அடிக்கப்பட்டார்;ஆனால், ஆண்டவர் மட்டிலான சிநேகத்தில், ஆஸ்டியுஸ் உறுதியாயிருந்தார். பின், இவருடைய சரீரத்தை முழுவதும், தேனினால் தடவி விட்டனர். ‘குளவிகளும் தேனீக்களும், ஈக்களும் வந்து, அர்ச்சிஷ்டவருடைய சரீரத்தை முழுவதும் மொய்த்து, கொட்டி, தீராத வலிவேதனையை ஏற்படுத்தின!  அஞ்ஞான விக்கிரகமான டயோனிசியுஸை வழிபட மறுத்ததால், அர்ச்.ஆஸ்டியுஸ் சிலுவையில் அறையப்பட்டு, வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார்.
கிறீஸ்துவர்கள் வேதசாட்சியான பரிசுத்த மேற்றிராணியாரின் சரீரத்தை மிகுந்த மேரை மரியாதையுடன் பூஜிதமாக அடக்கம் செய்தனர்.

மேற்றிராணியாரும் வேதசாட்சியுமான அர்ச்.ஆஸ்டியுஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக