Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 10 ஜூலை, 2023

July 11 - St. Pius I, Pope & Martyr

JULY 11, St. Pius I

Pope & MARTYR

Latin Mass Prayer Tamil Mass Prayer

INTROIT John 21: 15-17

Si díligis me, Simon Petre, pasce agnos meos, pasce oves meas. (Ps. 29:1) Exaltábo te, Dómine, quóniam suscepísti me, nec delectásti inimícos meos super me. Glória Patri et Fílio et Spirítui Sancto, sicut erat in princípio, et nunc, et semper, et in sǽcula sæculórum. Amen. Si díligis Me, Simon Petre, pasce agnos meos, pasce oves meas. .

பிரவேச கீதம்: அரு. 21 : 15-17

சீமோன் இராயப்பா, நீ என்னை அன்பு செயதால், என் ஆட்டுக் குட்டிகளை மேய்ப் பாயாக, என் ஆடுகளை மேய்ப்பாயாக. (T. P. அல்லேலூயா, அல்லேலூயா). (சங். 29:1) ஆண்டவரே, நீர் என்னைக் கை தூக்கி விட்டீர். என் எதிரிகள் என்னை வென்று மகிழாதபடி செய்தீர். எனவே, உம்மைப் புகழ்வேன். V. பிதாவுக்கும்... சீமோன்.

COLLECT

Gregem tuum, Pastor ætérnæ inténde: et per beátum Pium Martyrem atque Summum Pontíficem tuum, perpétua protectióne custódi; quem totíus Ecclésiæ præstitísti esse pastórem. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

சபை மன்றாட்டு:

செபிப்போமாக: நித்திய ஆயரே, உம் மந்தையைத் தயவுடன் கண்ணோக்கி யருளும், திருச்சபை அனைத்திற்கும் ஆயராக நீர் நியமித்த (வேதசாட்சியும் தலைமை ஆயருமான) தலைமை ஆயரான அர்ச்....வழியாக, அதை இடைவிடாது பாதுகாத்தருளும். உம்மோடு....

EPISTLE 1 Peter 5: 1-4, 10-11

Caríssimi: Senióres, qui in vobis sunt, óbsecro consénior et testis Christi passiónum, qui et ejus, quæ in futúro revelánda est, glóriæ communicátor: páscite qui in vobis est gregem Dei, providéntes non coácte, sed spontánee secúndum Deum, neque turpis lucri grátia, sed voluntárie; neque ut dominántes in cleris, sed forma facti gregis ex ánimo. Et, cum apparúerit princeps pastórum, percipiétis immarcescíbilem glóriæ corónam. Deus autem omnis grátiæ, qui vocávit nos in ætérnam suam glóriam in Christo Iesu, módicum passos ipse perfíciet, confirmábit solidabítque. Ipsi glória et impérium in saecula sæculórum. Amen.

அப்போஸ்தலரான அர்ச். இராயப்பர் எழுதிய நிருபத்திலிருந்து வாசகம்

(1 இரா. 5:1-4,10-11)

மிகவும் பிரியமானவர்களே : உங்களிலுள்ள மூப்பர்களுக்கு உடன் மூப்பனும், கிறிஸ்து நாதருடைய பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படப்போகிற மகிமைக்குப் பங்காளியமாகிய நான் மூப்பர்களைக் கேட்டுக் கொள்கிறதாவது: உங்களிடத்தில் ஒப்புவிக் கப்பட்ட சர்வேசுரனுடைய மந்தையை மேய்த்து, கட்டாயமாயல்ல,கடவுளுக்கேற்ற வலிய மனத்தோடும்; இழிவான ஆதா யத்தை நாடியல்ல, மனப் பிரீதியோடும்; (கர்த்தருடைய) சுதந்திரவாளிகளின் மேல் அதிகாரம் செலுத்துகிறவர்கள் போலல்ல, நல்ல மனத்தோடும் மந்தைக்கு மாதிரி களாகக் கண் காணித்து வாருங்கள் இவ்வித மாய், பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெற்றுக் கொள்வீர்கள், கிறிஸ்து யேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராகிய சர்வ கிருபையுள்ள சர்வேசுரன் கொஞ்சக் காலம் துன்பப்படு கிறவர்களை உத்தமராக்கி உறுதிப்படுத்தி ஸ்திரப்படுத்துவார். அவருக்கே அனவரத காலமும் மகிமையும் இராச்சியபாரமும் உண்டாவதாக. ஆமென்.

GRADUAL Psalm 106: 32,31

Exáltent eum in ecclésia plebis: et in cáthedra seniórum laudent eum. Confiteántur Dómino misericórdiae ejus, et mirabília ejus filiis hóminum

LESSER ALLELUIA Matthew 16: 18

Allelúja, allelúja. Tu es Petrus, et super hanc petram ædificábo Ecclésiam meam. Allelúja.

தியானப் பாடல்: 123:7-8

வசங். 106 32,31 மக்களின் சபையில் அவரைப் புகழ்ந்தேந்து வார்களாக: மூப்பரின் மன்றத்தில் அவரைப் போற்றுவார்களாக. V. ஆண்டவரின் இரக்கத் தையும், மக்களுக்கு அவர் புரிந்த வியப்புக்குரிய செயல்களையும் முன்னிட்டு அவருக்கு நன்றி செலுத்துவார்களாக,

அல்லேலூயா, அல்லேலூயா. (மத். 16: 18) உன் பெயர் பாறை, இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன், அல்லேலூயா.

GOSPEL Matthew 16: 13-19

In illo témpore: Venit Jesus in partes Cæsaréæ Philíppi, et interrogábat discípulos suos, dicens: Quem dicunt hómines esse Fílium hóminis? At illi dixérunt: Álii Joánnem Baptístam, álii autem Elíam, álii vero Jeremíam aut unum ex prophétis. Dicit illis Jesus: Vos autem quem me esse dícitis? Respóndens Simon Petrus, dixit: Tu es Christus, Fílius Dei vivi. Respóndens autem Jesus, dixit ei: Beátus es, Simon Bar Jona: quia caro et sanguis non revelávit tibi, sed Pater meus, qui in cælis est. Et ego dico tibi, quia tu es Petrus, et super hanc petram ædificábo Ecclésiam meam, et portæ ínferi non prævalébunt advérsus eam. Et tibi dabo claves regni cælórum. Et quodcúmque ligáveris super terram, erit ligátum et in cælis: et quodcúmque sólveris super terram, erit solútum et in cælis.

அர்ச். மத்தேயு எழுதிய சுவிசேஷத்தின் தொடர்ச்சி மத். 16. 13-19

அக்காலத்தில் சேசுநாதர் பிலிப்புவின் சேசாரேயா என்னுந் திசைகளுக்கு வந்தபோது, தம்முடைய சீஷர்களை நோக்கி: மனுஷர்கள் மனுமகனை யாரென்று சொல்லுகிறார்களென்று கேட்டார். அவர்கள் மாறுத்தாரமாக: சிலர் ஸ்நாபக அருளப்பரென்றும், சிலரோ எலியாஸென்றும், வேறு சிலர் எரேமியாஸ் அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவரென்றுஞ் சொல்லுகிறார்களென்றார்கள். சேசுநாதர் அவர்களைப் பார்த்து: நீங்களோ, என்னை யாரென்கிறீர்கள் என்று கேட்டார். சீமோன் இராயப்பர் மறுமொழியாக நீர் கிறீஸ்துவானவர், சுயஞ்சீவிய சர்வேசுரனுடைய குமாரன் என்றார். அப்போது சேசுநாதர் அவருக்கு மறு மொழியாக, யோனாவின் குமாரனான சீமோனே, நீ பாக்கியவான், ஏனெனில் மாம்சமும் இரத் தமுமல்ல, பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவானவர் தாமே இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன்: நீ இராயாய் இருக்கிறாய்! இந்த இராயின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன், நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. மோட்சத்தின் திறவுகோல்களையும் உனக்குக் கொடுப்பேன்; பூலோகத்தில் நீ எதைக் கட்டுவாயோ, அது பரலோகத்திலுங் கட்டப்பட்டிருக்கும். நீ பூலோகத்தில் எதைக் கட்டவிழ்ப்பாயோ, அது பரலோகத்திலுங் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

OFFERTORY Jeremias 1: 9-10

Ecce, dedi verba mea in ore tuo: ecce, constítui te super gentes et super regna, ut evéllas et déstruas, et ædífices et plantes.

காணிக்கைப் பாடல்:எரேமியாஸ். 19.10

இதோ! என் ஏவுதலின்படி உன்னைப் பேசவைத்தேன். பறிக்கவும் அழிக்கவும் கட்டவும் நடவும் புறவினத்தார் மீதும் அரசுகள் மீதும் இதோ! நான் உன்னைத் தலைவன் ஆக்கினேன். (T P அல்லேலூயா).

SECRET

Oblátis munéribus, quǽsumus, Dómine, Ecclésiam tuam benígnus illúmina: ut, et gregis tui profíciat ubique succéssus, et grati fiant nómini tuo, te gubernánte, pastóres. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

அமைதி மன்றாட்டு:

ஆண்டவரே, உமக்கு அளித்த காணிக்கை களைப் பார்த்து, திருச்சபை மீது இரங்கி ஒளிவீசும். உமது மந்தையின் வெற்றி எங்கும் ஓங்கவும், உமது தலமையின்கீழ் உம் ஆயர்கள் உமது பெயருக்கு உகந்த வர்கள் ஆகவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு...

COMMUNION Matthew 16: 18

Tu es Petrus, et super hanc petram ædificábo Ecclésiam meam.

உட்கொள்ளுதல்: மத்.16:18

உன் பெயர் பாறை, இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். (T.P. அல்லேலூயா)

POSTCOMMUNION

Refectióne sancta enutrítam gubérna, quǽsumus Dómine, tuam placátus Ecclésiam: ut poténti moderatióne dirécta, et increménta libertátis accípiat et in religiónis integritáte persístat. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

நன்றி மன்றாட்டு:

செபிப்போமாக: ஆண்டவரே, உம் திருவுணவால் ஊட்டப்பெற்ற உமது திருச்சபையைத் தயவுடன் ஆண்டருளும். அது திறமைவாய்ந்த ஆட்சியின் கீழ வழி நடத்தப்பட்டு, சுதந்திரத்தில் வளர்ச்சியடையவும், குறையற்ற ஞான வாழ்வில் நிலைத்து நிற்கவும் செய்தருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக