Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 9 ஜூலை, 2023

July 10 - SEVEN HOLY BROTHERS, MARTYRS, & STS. RUFINA & SECUNDA,

JULY 10, SEVEN HOLY BROTHERS, MARTYRS, & STS. RUFINA & SECUNDA,

VIRGINS & MARTYRS

Latin Mass Prayer Tamil Mass Prayer

INTROIT Psalms 112: 1, 9

Laudáte, púeri, Dóminum, laudáte nomen Dómini: qui habitáre facit stérilem in domo, matrem filiórum lætántem. (Ps. 112: 2) Sit nomen Dómini benedíctum: ex hoc nunc, et usque in sæculum. Glória Patri et Fílio et Spirítui Sancto, sicut erat in princípio, et nunc, et semper, et in sǽcula sæculórum. Amen. Laudáte, púeri, Dóminum, laudáte nomen Dómini: qui habitáre facit stérilem in domo, matrem filiórum lætántem.

பிரவேச கீதம்: சங். 112: 1, 9,

சிறுவர்களே, ஆண்டவரைப் புகழ்ந் தேத்துங்கள்: அவர் திருப்பெயரைப் புகழ்ந்தேத்துங்கள்: அவர் மலடி யைப் பிள்ளைகளின் மகிழ்வுடைய தாயாக்கி விட்டிலே குடியிருக்கச் செய்கிறார். V. (சங்.112:2) இன்று முதல் என்றென்றும் ஆண்டவரின் பெயர் போற்றப்படுவதாக. V. பிதாவுக்கும்.. சிறுவர்களே.

COLLECT

Præsta, quæsumus, omnípotens Deus: ut, qui gloriósos Mártyres fortes in sua confessióne cognóvimus, pios apud te in nostra intercessióne sentiámus. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

சபை மன்றாட்டு:

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, புகழ்வாய்ந்த வேதசாட்சி கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கை யிடுவதில் வீரர்களாகத் திகழ்ந்ததை அறிந்திருக்கிறோம்: எங்களுக்காக அவர்கள் உம்மிடம் அன்புடன் பரிந்து பேசுவதை நாங்கள் உணரு மாறு செய்தருள உம்மை மன்றாடு கிறோம். உம்மோடு. . ..
LESSON: Prov 31:10-31 Mulíerem fortem quis invéniet? Proculet de últimis fínibus prétium ejus. Confídit in ea cor viri sui, et spóliis non indigébit. Reddet ei bonum, et non malum, ómnibus diébus vitæ suæ. Quæsívit lanam et linum, et operáta est consílio mánuum suárum. Facta est quasi navis institóris, de longe portans panem suum. Et de nocte surréxit, dedítque prædam domésticis suis, et cibária ancíllis suis. Considerávit agrum, et emit eum: de fructu mánuum suárum plantávit víneam. Accínxit fortitúdine lumbos suos, et roborávit bráchium suum. Gustávit, et vidit, quia bona est negotiátio ejus: non exstinguétur in nocte lucérna ejus. Manum suam misit ad fórtia, et dígiti ejus apprehénderent fusum. Manum suam apéruit ínopi, et palmas suas exténdit ad páuperem. Non timébit dómui suæ a frigóribus nivis: omnes enim doméstici ejus vestíti sunt duplícibus. Stragulátam vestem fecit sibi: byssus et púrpura induméntum ejus. Nóbilis in portis vir ejus, quando séderit cum senatóribus terræ. Síndonem fecit et véndidit, et cíngulum tradidit Chananaeo. Fortitúdo et decor induméntum ejus, et ridébit in die novíssimo. Os suum apéruit sapiéntiæ, et lex cleméntiæ in lingua ejus. Considerávit sémitas domus suæ, et panem otiósa non comédit. Surrexérunt fílii ejus, et beatíssimam prædicavérunt: vir ejus, et laudávit eam. Multæ fíliæ congregavérunt divítias, tu supergréssa es univérsas. Fallax grátia, et vana est pulchritúdo: mulier timens Dóminum, ipsa laudábitur. Date ei de fructu mánuum suárum, et laudent eam in portis ópera ejus.

ஞானாகமத்திலிருந்து வாசகம்

பழ. 31. 10-31

வல்லமையுள்ள ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவனார்? தூரமாய்க் கடைகோடிகளினின்றாம் அவளுடைய விலைமதிப்பு. அவன் கணவனின் இருதயம் அவளில் நம்பிக்கை கொள்ளுகின்றது; கொள்ளைப் பொருள்களும் அவனுக்குக் குறைவுபடாது. அவள் அவனுக்குத் தன் சீவிய நாட்களனைத்தும் தின்மையை அல்ல நன்மையையே மாறாக அளிப்பாள். ஆட்டு ரோமத்தையும் சணல் நூலையுந் தெரிந்தெடுத்துத் தன் கரங்களின் சாமர்த்தியத்தால் வேலை செய்தான். தூரத்தினின்று தன் அப்பத்தைக் கொண்டுவருகின்ற வர்த்தகர்களின் கப்பல்போலானாள். இராவிலேயே எழுந்து தன் ஊழியருக்கு அருமையான பொருளையும் தன் ஊழியக்காரிகளுக்கு ஆகார வர்க்கங்களையுந் தந்தாள். வயல் நிலத்தையும் ஆராய்ந்து பார்த்து அதை வாங்கினாள்; தன் கைகளின் பலனால் முந்திரிகை தோட்டத்தையும் நட்டாள். திடத்தால் தன் இடைகளை வரிந்துகட்டித் தன் புஜத்தையும் பலப்படுத்தினாள். அவள் சுவைபார்த்துத் தன் வியாபாரம் நலமானதென்று கண்டாள். அவளுடைய விளக்கு இரவில் அணைக்கப்படாது. வன்மையான காரியங்களுக்குத் தன் கரங்களை இட்டாள்; அவளுடைய விரல்கள் சிம்புக் கதிரைப் பிடித்தன. வகை இல்லாதவனுக்குத் தன் கரங்களைத் திறந்தாள்; தன் உள்ளங் கைகளை ஏழைக்கு நீட்டினாள். பனியின் குளிர் நிமித்தம் தன் வீட்டாரைப்பற்றிப் பயப்பட மாட்டாள்; ஏனெனில் அவளுடைய ஊழியர் அனைவருமே இரட்டை (ஆடை)யால் உடுத்தப்பட்டிருக்கிறார்கள். கம்பளி ஆடையைத் தனக்குச் செய்திருக்கிறாள்; மெல்லிய சணலும் தூமிர வஸ்திரமும் அவளுடைய போர்வையாம். அவள் கணவன் பூமியின் ஆலோசனைச் சங்கத்தாருடன் உட்கார்ந்திருக்கையில் நியாய வாசலில் மகிமை பெறுவான். மூடுதாரையும் செய்து விற்றாள்; கனானேயனுக்கு அரைக்கச்சையையுங் கொடுத்துவிட்டாள். வல்லமையும் செளந்தரியமும் அவளுக்கு உடை(யாம்;) கடைசி நாளிலும் அவள் நகைப்பாள். ஞானத்துக்குத் தன் வாயைத் திறந்தாள்; அவளுடைய நாவில் சாந்தத்தின் நீதிமுறையாம். தன் இல்லத்தின் வழிகளை உற்றுப்பார்த்தாள்; சோம்பலாய்த் தன் அப்பத்தைப் புசிப்பாள். அவளுடைய புத்திரர் எழுந்து அவளை மகா பாக்கியவதியென்று பிரசங்கித்தார்கள்; அவளுடைய பத்தாவும் அவனைப் புகழ்ந்தான். பல புத்திரிகள் திரவியங்களைச் சேகரித்தார்கள்; நீ(யோ) சகலரையும் மேற்கடந்தாய். அந்தமும் பொய்யும் செளந்தரியமும் வியர்த்தமாம்; ஆண்டவ ருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். அவளுடைய கரங்களின் பலனி னின்று அவளுக்குத் தாருங்கள்; அவளுடைய கிரிகைகளே (நடுவரின்) சங்கங்களில் அவளைப் புகழக்கடவன.

Psalms 123: 7, 8

Anima nostra, sicut passer, erépta est de láqueo venántium. Láqueus contrítus est, et nos liberáti sumus: adjutórium nostrum in nómine Dómini, qui fecit cælum et terram.

தியானப் பாடல்: 123:7-8

வேடரின் கண்ணியிலிருந்து சிட்டுக் குருவிபோல் எங்கள் ஆன்மா விடுவிக்கப்பட்டது. V. கண்ணி அறுந்தது, விடுதலை பெற்றோம்: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவியுண்டு: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.

அல்லேலூயா, அல்லேலூயா.V. உலகின் பாவங்களை வென்ற உண்மையான சகோதர உறவு இதுவே: இது சேசு கிறிஸ்துவைப் பின்பற்றி உன்னத மோட்சத்தை அடைந்தது. அல்லேலூயா.

GOSPEL Matthew 12: 46-50

In illo témpore: Loquénte Jesu ad turbas, ecce mater ejus, et fratres stabant foris, quæréntes loqui ei. Dixit autem ei quidam: Ecce mater tua, et fratres tui foris stant, quæréntes te. At ipse respóndens dicénti sibi, ait: Quæ est mater Mea, et qui sunt fratres Mei? Et exténdens manum in discípulos Suos dixit: Ecce mater Mea et fratres Mei. Quicúmque enim fécerit voluntátem Patris Mei, Qui in Cælis est: ipse Meus frater et soror, et mater est.

அர்ச். மத்தேயு எழுதிய சுவிசேஷத்தின் தொடர்ச்சி மத். 12. 46-50

சேநாதர் சுஜனங்களோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், இதோ, அவருடைய தாயாரும் சகோதரரும் வெளியே நின்று அவரிடத்தில் பேசும் படி வழிபார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆகையால் ஒருவன் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் சகோதரரும் உம்மைத் தேடிக்கொண்டு வெளியில் நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இதைச் சொன்னவனுக்கு அவர் பிரத்தியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார் என்று சொல்லி, தமது சீஷர்கள் பக்கமாய்க் கையை நீட்டி: இதோ என் தாயாரும், என் சகோதரரும்; ஏனெனில் பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாயிருக்கிறான் என்றார்..

OFFERTORY Psalms 123: 7

Anima nostra, sicut passer, erépta est de láqueo venántium. Láqueus contrítus est, et nos liberáti sumus

காணிக்கைப் பாடல்:சங். 123:7-8,

வேடரின் கண்ணியிலிருந்து சிட்டுக் குருவிபோல் எங்கள் ஆன்மா விடுவிக்கப்பட்டது. V.கண்ணி அறுந்தது, விடுதலை பெற்றோம்.

SECRET

Sacrifíciis præséntibus, quæsumus, Dómine inténde placátus: et, intercedéntibus Sanctis tuis, devotióni nostræ profíciant, et salúti. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum..

அமைதி மன்றாட்டு:

ஆண்டவரே, இப்பலிப் பொருட்களை மனம் இரங்கிக் கண்ணோக்கியருளும்: உம்முடைய புனிதர்களின் வேண்டுதலினால், அவை எங்கள் பக்திக்கும் மீட்பிற்கும் பயன்படவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு... (T. P. அல்லேலூயா)..

COMMUNION Matthew 12: 50

Quicúmque fécerit voluntátem Patris Mei, Qui in Cælis est: ipse Meus frater, et soror, et mater est, dicit Dóminus..

உட்கொள்ளுதல்: மத்.12:50..

பரலோகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ, அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்.

POSTCOMMUNION

Deus: ut intercedéntibus Sanctis tuis, illíus salutáris capiámus efféctum: cujus per hæc mystéria pignus accépimus. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

நன்றி மன்றாட்டு:

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, உம்முடைய புனிதர்களின் வேண்டுதலினால், இத்திருப்பலியின் வழியாக மீட்பின் பிணையை நாங்கள் பெற்றுக்கொண்டது போல், மீட்பின் பயனையும் அடைய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு..

To Download in PDf file

July 10 - Latin ENglish

Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக